சமீபத்திய பதிவுகள்

புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர்

>> Friday, April 30, 2010



சச்சின் டெண்டுல்கருக்கு கிரிக்கெட் ரசிகர்களும், நிபுணர்களும் எத்தனையோ பட்டங்களை வழங்கி மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் புதிய வகை மாங்கனிக்கு சச்சின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

.
லக்னோவைச் சேர்ந்த கலிபுல்லா கான் என்பவர் புதிய மாங்கனி ரகங்களை உருவாக்குவதில் நிபுணராக கருதப்படுகிறார். இதுவரை 300க்கும் மேற்பட்ட மாங்கனிகளை இவர் உருவாக்கியுள்ளார். தற்போது புதிதாக உருவாக்கியுள்ள மாங்கனிக்கு சச்சின் டெண்டுல்கர் பெயரை இவர் சூட்டியுள்ளார்.


மிகச் சிறந்த 2 இந்திய மாங்கனிகளில் ஒட்டு வீரிய ரகமாக இந்த மாங்கனி உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாங்கனி விற்பனைக்கு அல்ல என அவர் அறிவித்துள்ளார். சச்சின் மற்றும் சச்சசினின் நண்பர்கள் மட்டுமே இந்த மாங்கனியை சுவைத்து மகிழலாம் என அவர் தெரிவித்துள்ளார்.இதேபோல பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் பெயரிலும் ஒரு புதிய மாங்கனியை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளார்



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

காருக்கு கவர்ச்சி எண் பெற ஐந்தரை லட்சம்

காருக்கு கவர்ச்சி எண் பெற ஐந்தரை லட்சம் செலவழித்த எம்.பி.,
 

Car number plate 1234 sells for 46,000 US dollars in Hong KongCar number plate 1234 sells for 46,000 US dollars in Hong Kongவிஜயவாடா : ஆந்திர மாநில எம்.பி., ஒருவர், 34 லட்ச ரூபாய் செலவழித்து வாங்கிய தனது புதிய ஜாகுவார் காருக்கு, பேன்சி நம்பர் வாங்க, ஐந்து லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளார். விஜயவாடா நகர் காங்கிரஸ் எம்.பி., லகடபதி ராஜகோபால், சில தினங்களுக்கு முன் கார் வாங்கினார். இந்த காருக்கு, பேன்சியாக நம்பர் வாங்க வேண்டுமென விரும்பிய அவர், தனக்கு விருப்பமான ஏபி09 பிஓய் 9999 என்ற எண் தேவையென, மாநில போக்குவரத்து ஆர்.டி.ஓ., அதிகாரிக்கு ஆன்லைன் மூலம், பதிவு செய்து கொண்டார். மொத்த கூட்டுத் தொகையும் '9 9999' ஆக வரும் இந்த பேன்சி நம்பர், அதிக பட்சமாக ஐந்தரை லட்ச ரூபாய் வரை ஏலம் போனது. லகடபதி ராஜகோபால் எம்.பி., இந்த தொகையை செலுத்தி, இந்த கவர்ச்சி எண்ணை ஏலம் எடுத்துள்ளார்.



source:dinamalar
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி

மனோகரன் குமுதம் ரிப்போட்டருக்கு வழங்கிய பேட்டி

குமுதம் ரிப்போட்டரில் வெளியான வேலுப்பிள்ளை மனோகரனின் பேட்டி

தமிழீழ தேசியத் தலைவராகப் போற்றப்படும் வேலுப்பிள்ளை பிரபாகரனை நமக்கு நன்றாகவே தெரியும். ஆனால், அவரது அண்ணன் வேலுப்பிள்ளை மனோகரனை? 'பிரபாகரனின் அண்ணனாக வாழ்வது ஒரு யாகம்!' என்ற உறுதிப்பாட்டுடன் இத்தனை காலமும் இருந்த இடம் தெரியாமல் வாழ்ந்து வந்தவர் வேலுப்பிள்ளை மனோகரன். தற்போது டென்மார்க் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வரும் இவர், அந்த நாட்டில் இருந்து செயல்படும் 'அலைகள்' இணையதளத்தின் 10-வது ஆண்டுவிழாவில் முதன்முதலாக மேடையேறியதுடன், அலைகள் இணையதளத்துக்கு நீண்டதொரு பேட்டியும் அளித்திருந்தார்.

வேலுப்பிள்ளை மனோகரனிடம் பேட்டி பெறும் முதல் தமிழக ஊடகமாக 'குமுதம் ரிப்போர்ட்டர்' இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் நாம் பேட்டி காண முயன்றோம். சி.செ.துரை என்பவர் உதவியுடன் அதில் வெற்றியும் கண்டோம். இனி நமது கேள்விகளும், அதற்கு வேலுப்பிள்ளை மனோகரன் அளித்த பதில்களும்….

டென்மார்க் நாட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் குடும்பம், பிள்ளைகள் பற்றிச் சொல்ல முடியுமா?

''நான் ஈழத்தில் வாழ்ந்தபோது சரக்குக் கப்பலில் மாலுமியாக (போசன்) பணி புரிந்தேன். உலகின் பல நாடுகளுக்கும் எமது கப்பல் போகும். இப்போது டென்மார்க்கில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறேன். தமிழகத்தில் சில காலம் வாழ்ந்தபோது கோழி வளர்ப்பில் ஈடுபட்ட அனுபவமும் உண்டு. இப்போது மனைவி மற்றும் இரு மகன்களுடன் டென்மார்க்கில் உள்ள வைலை என்ற அமைதியான நகரில் எளிமையாக வாழ்ந்து வருகிறேன்.''

மருத்துவத்திற்காக மலேசியாவில் இருந்து முறையான விசா பெற்று தமிழகம் வந்த உங்கள் தாயார் பார்வதி அம்மாள், திருப்பி அனுப்பப் பட்டதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

'' 'அலைகள்' பத்தாண்டு விழாவிற்கு நான் தலைமை தாங்கப் போனபோதுதான், தாயார் திருப்பியனுப்பப்பட்ட செய்தி எனக்குக் கிடைத்தது. என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை. விழாவிற்குப் போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். அந்த நேரம் மலேசியா அரசு, தாயாருக்கு ஒரு மாத விசா நீட்டித்து வழங்கிவிட் டது என்ற செய்தி கிடைத்ததும் ஓரளவு ஆறுதலடைந்தேன்.

விசாவை தவறுதலாக வழங்குவதும் திருப்பி அனுப்புவதும் சாதாரண நிலையில் உள்ள ஒருவருக்குப் பொருந்தலாம். ஆனால், எனது தாயாரின் நிலையை எண்ணிப் பாரு ங்கள். தமது எதிரிக்குக்கூட இந்த அவல நிலை வருவதை யாரும் விரும்ப மாட்டார்கள். இதைவிட என்ன சொல்ல..''

தங்கள் தாயார் பார்வதி அம்மாள் பற்றிய தகவல்களை தமிழகத் தலைவர்கள் யாராவது உங்களிடம் பகிர்ந்து கொண்டார்களா?

''இல்லை! நான் எனது தம்பியின் பெயரைப் பயன்படுத்தி வாழ்வில் எதையும் செய்தது கிடையாது. அப்படியான செயல்களை தம்பி விரும்பவும் மாட்டார். இதனால் அரசியல் தலைவர்கள் யாரையும் நான் சந்தித்ததில்லை. ஆனால், தமிழகத்தில் வாழ்ந்த காலம்தொட்டு பழ.நெடுமாறன் எங்கள் குடும்ப நண்பராகவே பழகி வந்தார். அவ ருடன் மட்டுமே எனக்குத் தொடர்புண்டு. எனது தாயார் விடயம் தொடர்பாக அவர் பகிரங்கமாக கருத்துரைத்து வருகிறார். எனது தாயாரைத் தங்கள் தாய்போல பராமரிக்க தமிழக மக்கள் தயங்கமாட்டார்கள். அவர்களுக்கும் எமக்கும் தொப்புள்கொடி உறவு உள்ளது. மற்றபடி என் தாயார் பற்றிய செய்திகளைப் பத்திரிகைகளில் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.''

ஈழத்தில் இறுதிக்கட்ட போர் நடந்தபோது உங்களது தந்தை, தம்பி பிரபாகரன் ஆகியோர் உங்களிடம் ஏதாவது பேசினார்களா? அந்த போர்ச் சூழல் நிலவரம் குறித்து ஏதாவது தெரிவித்தார்களா?

''பிரபாகரன் அவரது வேலைப்பளு காரணமாக தொலைபேசியில் அதிகமாக என்னிடம் தொடர்புகொண்டது கிடையாது. அப்படியே பேசினாலும் குடும்ப விடயங்களைப் பற்றி மட்டுமே பேசுவார். எனது தந்தை தாயகம் சென்ற பின் தந்தையார் மூலமாகத்தான் அனைவரது சுகங்களையும் நான் அறிந்து வந்தேன். ஆனால் சென்ற ஆண்டு போர் உச்சகட்டமடைந்தபோது, எனது தந்தை கடைசியாக என்னுடன் பேசினார். நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். அதற்குப் பிறகு யாரும் தொடர்பு கொள்ளவில்லை.''

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின்போது சார்லஸ் இறந்தார் என்ற செய்தியை பிரபாகரன் மற்ற தளபதிகளிடம் 'என் மகனையும், மகளையும் நாட்டுக்காக விதைத்து விட்டேன்' என்று கூறியதாக சிலர் எழுதினார்கள். அது பற்றி பிரபாகரன் உங்களிடம் ஏதாவது கூறினாரா? அல்லது மற்ற தளபதிகள் மூலமாகவாவது தெரிவித்தாரா?

''இப்படியொரு தகவலைக் கூறியவர்கள் எல்லோருமே இடையில் இருந்தவர்கள்தான். இது, இவர்கள் மூலம் பிரபாகரனால் சொல்லப்படக்கூடிய செய்தியா என்று நீங்கள்தான் யோசித்துப் பார்க்க வேண்டும். தனது பிள்ளைகள் தேர்வில் சித்தியடைந்த (வெற்றியடைந்த) தகவலை இதற்குமுன் ஒருமுறை என்னிடம் தெரிவித்த பிரபாகரன், அந்தத் தகவலைக் கூட இவர்களை வைத்தே சொல்லியிருப்பாரே..? சரி! பிரபாகரன் இதுபற்றிக் கூறாவிட்டாலும் என் தந்தையாவது அதை ஏதோ ஒரு வழியில் தெரிவித்திருப்பார். எனது குடும்பத்தினர் ஒருவருடைய குரலில் இருந்தும் சார்லஸ் இறந்ததாகக் கூறப்படும் இந்தத் தகவல் எனக்கு வரவில்லை. அதனால்தான் மர்மம் இருக்கிறது என்றேன்.''

முள்ளிவாய்க்கால் யுத்த முடிவுக்குப் பிறகு பிரபாகரனின் உடலென்று ஓர் உடலைக் காட்டியபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது? ஒரு மூத்தவர், அண்ணன் என்கிற முறையில் ஏன் அவரது உடலை முறைப்படி நீங்கள் கௌரவத்துடன் பெற்று மரியாதை செய்ய முன்வரவில்லை? இந்தக் கேள்வி அனைவருக்கும் இருக்கிறதே?

''இதற்குப் பதில் தர சிறிது முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்திய அமைதிப்படை ஈழத்தில் தங்கியிருந்த காலத்திலேயே தனது உயிர் மட்டுமல்ல, உடலும் கிடைக்கக் கூடாது என்ற உறுதியுடன் வாழ்ந்தவர் பிரபாகரன். அப்படிப்பட்டவருடைய உடல் என்று ஒன்று காண்பிக்கப்பட்டபோது நான் பலமாக யோசித்தேன். அது என்னுடைய தம்பியின் உடல்தான் என்பதை உறுதி செய்யக்கூடியவர் எனது தந்தைதான். அவர்தான் தம்பியுடன் கடைசி நேரம் வரை அங்கே இருந்தவர். அவரை அழைத்து வந்து அதைக் காண்பித்து உறுதி செய்ய வேண்டியதுதானே மரபு? அப்படி ஏன் செய்யவில்லை என்று எமக்குச் சந்தேகம் ஏற்பட்டது.

மேலும் சிங்கப்பூர் மற்றும் கனடாவில் இருந்து பேசுவதாகக் கூறி என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட இருவர், அந்த உடலுக்கு உரிமை கோரும்படி என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அப்போது கே.பி. என்பவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறியிருந்தார். எனவே, 'கே.பி கூறுவதை நம்புவதா? அல்லது நீங்கள் கூறுவதை நம்புவதா?' என்று நான் அவர்களைக் கேட்டேன். மேலும், அன்றைய நிலையில் சிறீலங்கா செல்வது பாதுகாப்பு சிக்கல் கொண்ட விடயமாக இருந்தது. நாம் அங்குபோன பின் தவறான ஓர் உடலத்தைக் காண்பித்து உறுதி செய்யும்படி வற்புறுத்தினால் நாம் மறுத்து விட்டுத் திரும்ப வழியிருக்குமா? என்பதையும் சிந்தித்தேன். இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தால் நமது நிலைப் பாட்டின் நியாயத்தன்மை உங்களுக்குப் புரியும்.''

உங்கள் தம்பி பிரபாகரனை நீங்கள் கடைசியாக எப்போது, எந்தச் சந்தர்ப்பத்தில் சந்தித்தீர்கள்? மீண்டும் சந்திப்போம் என்று அப்போது ஏதும் நினைத்தீர்களா? நினைக்கின்றீர்களா?

''இந்தக் கேள்விக்கு ஜோதிடம்தான் பதிலாக வருகிறது. 'பிரபாகரனுடைய பிற்கால வாழ்வு நேதாஜியின் வாழ்வு போல மர்மமாக இருக்கும்' என்று கூறியிருந்த ஜோதிடர் ஒருவர், 'எனது ராசிக்கும் பிரபாகரனின் ராசிக்குமிடையே உள்ள நிலை காரணமாக இருவரும் சந்திப்பது சாத்தியமில்லை' என்றும் கூறியிருந்தார். பிரபாகரனை ஈழத்தில் உள்ள ஒரு வீட்டில் கடைசியாக 1979-ம் ஆண்டு தற்செயலாக அங்கு சென்றபோது சந்தித்தேன். அவர் என்னைப் பார்த்துச் சிரித்தார். பேசவில் லை. அவர் வந்ததும் நான் அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டேன். பின்னர் சென்னைக்கு நானும் எனது தந்தையும் ஒருமுறை சென்றபோது, தம்பி அங்கு நிற்பதாகவும் (இருப்பதாகவும்) பார்க்கப் போகும்படியும் எனது தந்தை கூறினார். சேலத்தில் இருக்கும் எனது மனைவி இரண்டொரு நாளில் வந்தபின் அவருடன் சேர்ந்து சென்று தம்பி யைப் பார்ப்பதாகக் கூறினேன். பின்னர் ஒருமுறை (1987-ல்) தம்பியை இருவரும் பார்க்கச் சென்றோம். ஆனால், அவர் யாழ்ப்பாணம் சுதுமலைப் பகுதிக்குப் புறப்பட்டுப் போய் விட்டார்.''

பிரபாகரனின் இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறதே. அடுத்த தலைவர் இவர்தான் என்று வேறு யாரையும் அவர் அடையாளம் காட்டாமல் விட்டிருப்பது பெரும் குழப்பமாக அல்லவா இருக்கிறது?

''இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கென ஒரு நியதி இருக்கிறது. இவருக்குப் பின் இவர்தான் என்று யாரையும் அதில் நியமிப்பதில்லை. ஒரு போராளியின் இடம் வெற்றிடமானால், அவரது இடத்துக்கு இன்னொரு போராளி வருவார். எல்லா போராளிகளுடைய வெற்றிடங்களையும் காலமும், செயற்பாடும் நிரப்பிச் சென்றுள்ளன. ஒவ் வொரு வெற்றிடமும் காலத்தால் சரியாகவே நிரப்பப்பட்டுள்ளன. இதில் குழப்பமடைய வேண்டிய தேவையில்லை. மேலும் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை புலம்பெயர் தமிழ்மக்களின் கையில் கொடுப்பதாக தம்பி தெரிவித்துள்ளார். அங்கும் அவர் மக்களையே அடையாளம் காட்டியிருக்கிறார் என்பதைக் கவனிக்க வேண்டும்.''

'தலைவர் இறக்கவில்லை, பாதுகாப்பாக இருக்கின்றார்' என்று முதலில் கூறிய கே.பி., பிறகு, 'அவர் வீர மரணம் அடைந்து விட்டார்' என்று கூறினார். 'இப்படியொரு இரண்டுங் கெட்டான் பதிலை பிரபாகரன் தன் வாழ்வில் என்றுமே கூறியது கிடையாது' என்று நீங்கள் இணையத்திற்குத் தெரிவித்திருந்தீர்கள். அப்படியென்றால்…?

''உறைந்த மௌனத்தால் தம்பி ஏதோ ஒரு செய்தியை உலகிற்குச் சொல்லியுள்ளார் என்பதுதான் பதில். மௌனத்தைப் போல சிறந்த, சரியான பதில், வார்த்தைகளில் இருப்பதில்லை. ஏனென்றால், பிரபாகரன் எந்தவொரு கேள்விக்கும் இரண்டு பதில்களை என்றுமே கொடுத்தது கிடையாது. இப்போது அவர் மௌனமாக ஒரு பதிலைக் கொடுத்துள்ளார்.''

தந்தையார் வேலுப்பிள்ளை அவர்கள் மரணமடைந்ததில் 'இயற்கையானது' என சிங்கள அரசு சொன்னது. ஆனால் நீங்கள் 'மர்மம் இருப்பதாக' கூறியுள்ளீர்கள். அதற்கான காரணங்கள்….?

''தந்தையார் இறந்த செய்தியை எமக்கு அறிவிக்காமலே அவரது உடலை அடக்கம் செய்திருந்தால் இப்போது அவரையும் நாம் தேடிக் கொண்டுதானிருப்போம். அவர் எங்கே இருக்கிறார் என்பதை அறிய நாங்கள் எடுத்த முயற்சிகள் எதுவுமே பயனளிக்கவில்லை. என் தந்தை இறப்பதற்கு முன் அவரை சந்தித்தவரென யாருமில்லை. அவரை எங்கு வைத்திருந்தார்கள் என்பது பல மாதங்களாகத் தெரியவில்லை. ஆனால், அவர் இறந்தது மட்டும் தெரிந்தது என்றால், இடைப்பட்ட காலத்தில் என்ன நடந் தது என்ற கேள்வி இயல்பாகவே வரும்.

எனது தந்தை கொண்டு செல்லப்பட்ட பின் அவருடைய குரலில் இருந்து ஒரு வார்த்தைகூட எமக்குக் கிடைக்காத நிலையில், அந்த மரணத்தை மர்மமற்ற இயற்கை மரணமென வர்ணிப்பதை ஏற்க முடியுமா? நீங்களே சொல்லுங்கள்.''

தலைவர் பிரபாகரன், அவரது மனைவி, மக்கள் என அனைவரும் கொல்லப்பட்டுவிட்டதாக சொல்லியாயிற்று. தந்தையின் மரணம்.. அலைக்கழிப்போடு தாய் ஓரிடம்…. இப்படி எல்லாமும் உங்கள் மனதை எப்படி வதைத்திருக்கிறது? என்ன மனநிலையில் இருக்கின்றீர்கள்?

''வாழ்வில் இதைவிட சுமப்பதற்கு பெரிய சுமை என்ன இருக்கப் போகிறது? அதைத்தான் சுமந்து கொண்டு வாழ்கிறேன். அந்தச் சோகத்தை தமிழ்ப்படுத்திக் கூற என்னால் முடியவில்லை.''

பிரபாகரன் பெரிய தேசியத் தலைவராக அதிகாரத்தில் இருந்தபோதுகூட, அந்த அதிகாரங்களைக் கொஞ்சமேனும் பகிர்ந்துகொள்ளாமல் இப்படி ஒதுங்கி எளிமையாக வாழ்ந்து வருகிறீர்கள். அதுபற்றி தலைவர் எப்போதாவது உங்களிடம் கேட்டதுண்டா? ஏன் இப்படி என்று வருத்தப்பட்டதுண்டா?

''என்றுமே கேட்டதில்லை. மேலும் போராட்டத்தில் ஈடுபடுவது, தம்பியுடன் தொடர்புகொள்வதெல்லாம் நமது சொந்த முடிவுகளே..''

'என் தம்பி நேதாஜியை நேசித்தார். அவரைப் போலவே தூய்மையாக வாழ்ந்தார். நேதாஜியின் பிற்பகுதி வாழ்க்கைத் தோற்றத்தைப் போலவே கடந்த ஓராண்டு காலத்தை வைத்திருக்கிறார்… அதிலும் ஒரு போராட்டம் இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறீர்கள். அதன் அர்த்தம்…?

''நேதாஜியின் போராட்டம் முடிந்ததாக இன்று வரை யாருமே கூறியதில்லை. காந்தி சுதந்திரம் பெற்றுத் தந்தாலும், அந்தப் போராட்டத்தை அருவமாக நின்று நகர்த்தியது நேதாஜியின் போராட்ட சக்திதான் என்பதை யாரும் மறுக்க முடியாது. அதுபோல பிரபாகரன் 30 ஆண்டுகளாக நடாத்திய போராட்டமும் வெறும் பயங்கரவாத முத் திரையால் முடிவு கட்டப்பட முடியாத போராட்டமாகும். தமிழினத்தின் விடிவை முப்பதாண்டு காலமாக மின்னல் வேகத்தில் நகர்த்தியவர் அவர்தான். இனி எது நடந்தாலும் அது தம்பியின் தாக்கமில்லாமல் நடக்க முடியாதளவிற்கு முத்திரை பதித்துள்ளார். தமிழினத்திற்கு சுதந்திரம் வேண்டும் என்ற பந்தை அவர் சுவர் மீது அடித்தார். இப்போது அந்தப் பந்து புது விசையுடன் திரும்ப ஆரம்பித்திருக்கிறது. பிரபாகரன் சுதந் திரத்தின் வடிவம், பிரபாகரன் மீதான தேடல் சுதந்திரத்தின் மீதான தேடலே என்பதுதான் அதன் அர்த்தம். நேதாஜியைத் தேடியவர்கள் இறுதியில் கண்டது சுதந்திரம் எ ன்பதுபோல இந்தத் தேடலும் விடிவினைத் தரும். அப்போது நேதாஜி போல பிரபாகரனும் சுதந்திர சூரியனாக அரசியல் வானில் பிரகாசிப்பார். இந்தியா சுதந்திரம் பெற்றது போல தமிழினமும் ஒருநாள் சுதந்திரம் பெறும்.''

'பிரபாகரனது பிற்பகுதி வாழ்க்கை மர்மம் நிறைந்ததாக இருக்கும். யாரும் அவரைக் காண இயலாது. அவர் எங்கே இருக்கின்றார் என்ற கேள்வி பெரும் மர்மமாகவே இருக்கும் என்று தமிழக ஜோதிடர் ஒருவர் ஆரம்பகாலத்தில் கூறினார். அப்போது அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அதையும் இப்போது எண்ணிப் பார்க்கிறேன்' என அலைகளுக்குத் தெரிவித்துள்ளீர்கள். அதுபற்றி விளக்கமாக பதில் தர இயலுமா?

'''நானும் தம்பியும் ஒருவரையொருவர் சந்திக்க முடியாது' என்று கூறிய ஜோதிடர்தான் 'பிரபாகரனை பிற்காலத்தில் யாருமே காண முடியாது' என்றும் தெரிவித்திருந்தார். 'அவரை எல்லோரும் தேடுவார்கள் ஆனால் காண முடியாது' என்றும் தெரிவித்திருந்தார். இது எப்போதோ பார்த்த ஜோதிடம், இப்போது நினைத்தால் பொருந்தி வருகிறது. ஜோதிடம் என்பது அவரவர் நம்பிக்கை சார்ந்தது.''

தமிழகத்தில் உள்ள ஈழ விடுதலை ஆதரவு இயக்கத் தலைவர்கள் பற்றி உங்களுடைய கருத்து? அவர்களில் யார் யார் உங்களுடன் பேசுவார்கள்? தமிழகத்தில் உள்ள இன்றைய இளைஞர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது….?

''நான் ஆரம்பத்திலேயே சொல்லியது போல அரசியல் தலைவர்களுடன் நான் தொடர்பு கொள்வதில்லை. பழ. நெடுமாறன் ஒருவருடன் மட்டுமே எனக்குத் தொடர்பி ருக்கிறது. ஆகவே, என்னிடம் தலைவர்கள் பற்றிய யாதொரு கருத்தும் கிடையாது. தமிழகத்தில் உள்ள இளைஞர்களை பிரபாகரன் நேசித்ததும், தமிழக இளைஞர்கள் தங்கள் உடன்பிறந்த சகோதரனாக பிரபாகரனை நேசித்ததும் வரலாற்றில் மறக்கக்கூடிய நிகழ்வுகளா? தமிழக இளைஞர்களுக்கு எங்கள் அன்பையும், நன்றியையும் குமுதம் ரிப்போர்ட் டர் மூலமாகச் சொல்வதில் மகிழ்ச்சியடை கிறேன்.''

பா. ஏகலைவன்.


source:குமுதம் ரிப்போர்ட் டர்



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஸ்கிரீன் ஷாட்டில் எடிட்டிங்

 
 


வாசகர்களின் கடிதங்கள் பலவற்றில் ஸ்கிரீன் ஷாட் குறித்த கேள்விகள் பலவற்றை அடிக்கடி பார்க்கிறேன். ஸ்கிரீன் ஷாட்களை எடுப்பதற்கான கீகள், திரைக் காட்சிகளை எப்படி பில்டர் செய்து எடுப்பது, இவற்றை எந்த புரோகிராமில் பேஸ்ட் செய்து பைலாக மாற்றலாம், பைலாக மாற்றாமல் புரோகிராம்களில் பேஸ்ட் செய்திட முடியுமா என்ற வகையில் பல கேள்விகள் வந்துள்ளன. இவற்றுக்கான விடைகளை இங்கு காணலாம்.
அடிப்படையில் ஸ்கிரீன் ஷாட் என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும். ஷாட் எடுக்கும் அந்த தருணத்தில் உங்கள் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் எந்த காட்சியுடன் இருந்ததோ, அதன் படம் தான் நமக்கு ஸ்கிரீன் ஷாட். சரி, இதனை வேர்ட் டாகுமெண்ட்டில் எப்படிக் கொண்டு வருவது? வேர்ட் டாகுமெண்ட் மட்டுமல்ல, எக்ஸெல், பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஆகியவற்றிலும் ஒரு ஸ்கிரீன் ஷாட்டைக் கொண்டு வரலாம். ஓர் ஆசிரியர் என்ற முறையில் நான் பலமுறை இந்த ஸ்கிரீன் ஷாட்களை மாணவர்களுக்காக, பிரசன்டேஷன் பைல்களில் இணைத்துக் காட்டியிருக்கிறேன்.
ஸ்கிரீன் ஷாட்கள் நாம் விளக்க வேண்டிய காட்சிகளை மிக அழுத்தமாக பார்ப்பவர்கள் மனதில் பதியவைக்கும். மேலும் நம்பிக்கையும் ஊட்டும். முதலில் இவற்றை எப்படி எடுப்பது என்று பார்ப்போம். உங்கள் மானிட்டரில் தெரியும் முழுக் காட்சியையும் அப்படியே எடுக்க வேண்டுமாயின், கீ போர்டில் உள்ள பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தவும். இது அம்புக் குறிகள் உள்ள கீகளுக்கு மேலாக உள்ள கீகளில் இடது மேலாக இருக்கும். சில கீ போர்டுகளில் எப்12 கீக்கு அடுத்து வலதுபுறமாக இருக்கும். அதன் மீது PrtScn/ Print Screen என்ற சொற்களைப் பார்க்கலாம். இதனை அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக் காட்சியை இணைக்க வேண்டுமோ அங்கு சென்று பேஸ்ட் செய்தால் போதும். நீங்கள் மானிட்டரில் பார்த்த காட்சி, வேறு ஒரு புரோகிராமின் பைலில் ஒட்டப்பட்டுவிட்டதனைப் பார்க்கலாம். 
திரையில் பல புரோகிராம்கள் இயங்கிக் கொண்டிருந்து, அவற்றில் ஒரு புரோகிராமினை மட்டும் நீங்கள் ஸ்கிரீன் ஷாட்டாக அமைக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமில் கிளிக் செய்து ஆல்ட் + பிரிண்ட் ஸ்கிரீன் கீயை அழுத்தலாம். பின் மீண்டும் தேவைப்படும் புரோகிராம் பைலில் பேஸ்ட் செய்திடலாம்.இந்த வகையில் டாஸ்க் பார் மற்றும் தேவையற்ற பார்டர் சங்கதிகள் நீக்கப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் ஸ்கிரீன் ஷாட் ஆக எடுக்கப்படும். 
வேர்ட், பிரசன்டேஷன் அல்லது எக்ஸெல் தொகுப்பு பைல்களில் ஸ்கிரீன் ஷாட்டினை பேஸ்ட் செய்கையில், அது வழக்கமாக ஒட்டப்படும் படங்கள் போலவே தான் செயல்படும். இவற்றை வேறு அளவில் மாற்றி அமைக்கலாம்; அதன் பிரைட்னெஸ் மற்றும் காண்ட்ராஸ்ட் அளவினையும் மாற்றலாம். கிளிப் ஆர்ட் மற்றும் கிராபிக்ஸ் படங்களில் நாம் ஏற்படுத்தும் அனைத்து எடிட்டிங் வசதிகளையும் இவற்றிலும் மேற்கொள்ளலாம்.
மேலே சொன்ன வழிகள் விண்டோஸ் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் ஸ்கிரீன் ஷாட் எடுக்கும் வசதியாகும். இந்த செயலை மேற்கொள்ள சில தர்ட் பார்ட்டி புரோகிராம்களும் இணையத்தில் உள்ளன. பிரிண்ட் ஸ்கிரீன் கீ அழுத்தி, பின் படங்களை எடிட் செய்திடும் பெயிண்ட் போன்ற புரோகிராம் களில் பேஸ்ட் செய்து, பின் எடிட் செய்து, பைலாக மாற்றிப் பின் அவற்றைக் கையாளும் சுற்று வழிகளை, இந்த தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறைக்கின்றன. இத்தகைய புரோகிராம்களில் ஒன்று Screenshot Captor. இந்த புரோகிராமினை http://www.versiontracker.com /dyn/moreinfo/win/49858  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இலவசமாகப் பயன்படுத்தலாம் என்றாலும், இதற்கு இலவச லைசன்ஸ் ஒன்றை இந்த தளத்திலிருந்து பெற்று பயன்படுத்துங்கள். 
இந்த புரோகிராம் நாம் ஷாட் எடுக்க விரும்பும் காட்சிகளுக்கு சில ஸ்பெஷல் எபக்ட்களை இணைக்க, தலைப்பு கொடுக்க எனப் பல கூடுதல் வசதிகளைத் தருகிறது.
இன்னொரு ஸ்கிரீன் ஷாட் புரோகிராம் ஒன்றையும் இணையத்தில் காண நேர்ந்தது. இதன் பெயர் ஒடிணஞ். இந்த புரோகிராமினை http://www.jingproject.com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இதனை டவுண்லோட் செய்து நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். அதன்பின் உங்களுக்கென ஓர் அக்கவுண்ட் திறக்க வேண்டும். இது இலவசமே. அக்கவுண்ட் திறந்த பின்னரே, இதன் முழு வசதிகளை நீங்கள் பயன்படுத்த முடியும். இன்ஸ்டால் செய்து, அக்கவுண்ட் திறந்த பின்னர், உங்கள் மானிட்டர் திரையில் மேலாக சிறிய மஞ்சள் வண்ணத்தில் வட்டம் ஒன்று கிடைக்கும். உங்கள் மவுஸ் கர்சரை, அதன் மீது கொண்டு சென்றால் அது மாறும். பின் மவுஸின் இடது புறத்தைக் கிளிக் செய்தால், நீங்கள் திரையில் எந்த இடத்தினை ஸ்கிரீன் ஷாட்டாகப் பெற முயற்சிக்கிறீர்களோ, அந்த இடத்திற்குக் கொண்டு செல்லலாம்.அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு அதனைப் படமாகவோ அல்லது வீடியோவாகவோ எடுக்கலாம். ஆம், வீடியோவாகவும் எடுக்கலாம். பின் நீங்கள் எடுத்த படத்தையோ அல்லது வீடியோவினையோ பைலாக மாற்றி, உங்கள் கம்ப்யூட்டர் அல்லது இணையத்தில் சேவ் செய்திடலாம். இதனை முடிவு செய்துவிட்டால், ஜிங் வேலை முடிந்தது என்பதனை அறிவித்துவிட்டு, அந்த படம் அல்லது வீடியோவிற்கான லிங்க் ஒன்றைக் கொடுக்கும். இந்த லிங்க்கை நீங்கள் வேறு புரோகிராம் பைல்களில் இணைக்கலாம்.
சாதரண ஸ்கிரீன் ஷாட்டினை எப்படி எல்லாம் அமைக்கலாம் என்று தெரிந்து கொண்டீர்களா! தேவைப்படும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பாருங்கள்.



source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உலகின் செல்வாக்கு மிக்கவர் பட்டியலில் சச்சின்

 

"டைம்' பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் செல்வாக்கு மிக்க 100 பிரமுகர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

.
டைம் பத்திரிகை ஆண்டுதோறும் செல்வாக்கு மிக்கவர் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 9 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர்.


இந்திய பிரதமர் மன்மோகன்சிங், கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர், பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், தொழிலதிபர் கிரண் மஜூம்தார் ஷா மற்றும் மருத்துவர் ராகுல் சிங் ஆகியோர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.


இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஒபாமா 4வது இடத்தில் உள்ளார். மன்மோகன்சிங் 19வது இடத்தில் உள்ளார். இந்தியாவை உலக அளவில் சக்திவாய்ந்த நாடாக மன்மோகன்சிங் உயர்த்தி வருவதாக டைம் குறிப்பிட்டுள்ளது.


சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டி இரட்டை சதம் சாதனையை இந்தியாவே கொண்டாடி மகிழ்ந்ததாக டைம் பத்திரிகை பாராட்டியுள்ளது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் கொள்கைகள் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக வங்கியின் திட்டங்களுக்கு மையமாக திகழ்வதாக டைம் பத்திரிகை தெரிவிக்கிறது.


source:nakkheeran



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP