சமீபத்திய பதிவுகள்

தினத்தந்தி:விடுதலைப்புலி தளபதி வவுனியா முகாமில் கைது?

>> Friday, May 29, 2009


பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினி வவுனியா முகாமில் கைது
குடும்பத்தினருடன் தங்கி இருந்தபோது ராணுவத்திடம் பிடிபட்டார்


கொழும்பு, மே.30-

வவுனியா முகாமில் குடும்பத்தினருடன் தங்கி இருந்த பெண் விடுதலைப்புலி தளபதி தமிழினியை இலங்கை ராணுவத்தினர் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

தமிழினி கைது

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்து வந்தவர் தமிழினி. வவுனியாவில் உள்ள அகதிகள் முகாமில் இவர் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் தங்கி இருந்தார். அப்போது, தமிழினியை ராணுவத்தினர் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்தனர்.

தமிழினி கைதானது பற்றியும், அவர் எப்படி அகதிகள் முகாமுக்கு வந்தார்? என்பது பற்றிய விவரங்களும் ஆசியன் டிரிபிïன் பத்திரிகையின் இணையதளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.

அந்த தகவல்கள் வருமாறு:-

தாயாருடன் வந்தார்

முல்லைத்தீவு மாவட்டத்தில், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர் இறுதிக்கட்டத்தை எட்டியதும், பாதுகாக்கப்பட்ட புதுமாத்தளன் பகுதியில் இருந்து ஏராளமான தமிழர்கள் உயிர் தப்புவதற்காக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு அகதிகளாக வந்தனர். அப்போது புதுமாத்தளன் பகுதியில் இருந்து தமிழினியும் தனது தாயார் சுப்பிரமணியம் கவுரி விஜயராஜா, சகோதரி மகேஸ்வரி ஆகியோருடன் ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்தார்.

தான் யார் என்பது அடையாளம் தெரிந்து விடாமல் இருப்பதற்காக தன்னிடம் இருந்த சயனைடு விஷ குப்பி, கைத்துப்பாக்கி ஆகியவற்றை தூக்கி எறிந்து விட்டு மக்களோடு மக்களாக கலந்து ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்கு வந்து விட்டார். அப்போது, உடன் வந்த அகதிகளுக்கு தமிழினி யார் என்று அடையாளம் தெரியவில்லை.

அகதி முகாமில் கைது

இதனால் தமிழினி மற்ற அகதிகளுடன் முகாமுக்கு சென்று தனது தயார் மற்றும் சகோதரியுடன் தங்கி இருந்தார். என்றாலும் அதன்பிறகு ராணுவத்தினர் முகாமுக்கு சென்று விசாரணை நடத்திய போது, தமிழினி பெண் விடுதலைப்புலி இயக்க தளபதி என தெரிந்து விட்டது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர்.

பின்னர் தமிழினியிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தன.

கல்லூரியில் படித்தவர்

தமிழினியின் உண்மையான பெயர் சிவத்தாய். பரந்தன் இந்து கல்லூரியிலும், கிளிநொச்சியில் உள்ள சென்டிரல் கல்லூரியிலும் படித்தவர். 1991-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்தார். இதைத்தொடர்ந்து அவருக்கு தமிழினி என்ற பெயர் சூட்டப்பட்டது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் அவரது பதிவு எண் 1736.

நீர்வேலி என்ற இடத்தில் உள்ள விடுதலைப்புலிகளின் முகாமில் போர் பயிற்சி பெற்ற தமிழினிக்கு, முதலில் ஒரு கயிறு தொழிற்சாலையை கவனிக்கும் பொறுப்பும், அதன்பிறகு கிலாலியில் உள்ள பண்ணையை கவனிக்கும் பொறுப்பும் வழங்கப்பட்டது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வனின் அலுவலகத்திலும் பணியாற்றி உள்ளார்.

மற்றொரு சகோதரி பலி

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் பெண்கள் பிரிவு தளபதியாக இருந்த நெஸ்மியா என்பவர் முகமலை என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த சண்டையில் பலியானதை தொடர்ந்து, அந்த பதவிக்கு தமிழினி நியமிக்கப்பட்டார்.

தமிழினியின் மற்றொரு சகோதரியான சாந்திலன் கடந்த 1998-ம் ஆண்டு பரந்தன் என்ற இடத்தில் ராணுவத்துடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டார்.

இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது.

 


 

StumbleUpon.com Read more...

'குமுதம் இதழ்' சாடல்:ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் ' நடுநிலைமை':

ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்திய ஊடகங்களின் 'நாடக நடுநிலைமை': 'குமுதம்' சாடல்
ஈழத் தமிழர் விவகாரத்தில் வட இந்தியாவில் இருந்து வெளிவரும் ஊடகங்கள் 'நாடக நடுநிலைமை'யை கடைப்பிடித்து வருவதாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' வார இதழ் சாடியுள்ளது.

இது தொடர்பாக 'குமுதம்' வார இதழில் வெளிவந்த அரசு கேள்வி - பதில் வருமாறு:

சமீபத்தில் அரசு எரிச்சல்பட்டது எதற்கு?

ஈழப் பிரச்சினையில் ஆங்கில செய்திச் சானல்கள் காட்டிய அரைவேக்காட்டுத்தனத்தைப் பார்த்து. ராஜபக்சவின் கொள்கை பரப்புச் செயலாளர்கள் போல் செயற்பட்ட விதத்தில் அவர்களின் 'நாடக நடுநிலைமை' வெளிப்பட்டது. ஐம்பது ஆண்டு கால ஈழத் தமிழர்களின் கண்ணீர் கஷ்டங்களுக்கு, ஐம்பது நொடியில் தீர்வைச் சொல்லுங்கள் என்று வந்திருப்பவர்களிடம் கேட்கிறார் ஒரு அதிமேதாவிச் செய்தியாளர்.

சென்னையில் இருக்கும் பெண் நிருபரிடம் 'பிரபாகரன் கொல்லப்பட்டது பற்றி தமிழ்மக்கள் என்ன நினைக்கிறார்கள்?' என்று டெல்லியிலிருந்து கேட்க, அந்த சென்னை நிருபி, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் இரண்டு இளைஞர்களிடம் அந்தக் கேள்வியைக் கேட்கிறார். இருவருமே 'நல்லது' என்கிறார்கள். உடனே காமிரா பக்கம் திரும்பி, பிரபாகரன் கொல்லப்பட்டதை தமிழ் மக்கள் வரவேற்கிறார்கள் என்கிறார். அந்த இரண்டு இளைஞர்கள்தாம் தமிழ் மக்களாம். அபத்தம். பொதுவாகவே வடக்கத்திய சானல்களுக்கு தமிழ் மக்கள் என்றால் இளக்காரம்தான்.

இந்த முறை அது அதி ஆவேசமாக வெளிப்பட்டது. அதட்டும் அர்னாப், எட்டு ஊருக்கு கேட்கும் குரலில் பேசும் ராஜ்தீப், மற்றவர்களை பேசவே விடாத பர்க்கா, ஆங்கிலத்தைத் தவிர்த்து பொது அறிவை விருத்தி செய்து கொள்ளாத நொடிக்கு நூறு வார்த்தை பேசும் நிருபிகள்... இவர்கள் ராஜபக்ச நாட்டில் தமிழர்களாகப் பிறக்கட்டும்.

StumbleUpon.com Read more...

திடீர் அறிவிப்பு:எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் ;திடீர் அறிவிப்பு

எங்களால்தான் இலங்கை ராணுவத்தினர் விடுதலைப்புலிகளை வென்றார்கள் : பாகிஸ்தான் ராணுவம் அதிரடி
 
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளுடன் போர் நடத்திவந்தது.  சமீபத்தில் போரில் விடுதலைப்புலிகளை  முற்றிலுமாக அழித்துவிட்டதாக இலங்கை ராணுவத்தினர் அறிவித்தனர்.


விடுதலைப்புலிகளூடனான போரில் இலங்கை தீவிர தாக்குதலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நாடுகள் ஆயுத மற்றும் ஆட்கள் உதவி செய்துவந்ததாக பேசப்பட்டது.

இந்நிலையில் ''நாங்கள் உதவியதால்தான் இலங்கை ராணுவத்தால் விடுதலைப்புலிகளை வெல்ல முடிந்தது என்று பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் கூறியதாக பாகிஸ்தான் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
 
மேலும்,  2008-ம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா பாகிஸ்தான் சென்று அந்த நாட்டு தளபதி பர்வீஸ் கயானியை சந்தித்து பேசினார். அப்போது இலங்கை போருக்கு பல்வேறு உதவிகளை அவர் கேட்டார்.


அதன்படி ஏராளமான உதவிகளை பாகிஸ்தான் ராணுவம் செய்தது. பல்வேறு தொழில் நுட்ப கருவிகளை வழங்கியதுடன் அவற்றை இயக்குவதற்கு அதிகாரிகளையும் பாகிஸ்தானே அனுப்பி வைத்தது.

இந்த உதவிக்கு பிறகு தான் இலங்கை ராணுவம் வெற்றிகளை குவிக்க ஆரம்பித்ததாகவும் அந்த ராணுவ அதிகாரி கூறியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

பிரபாகரன்-சார்லஸ் டிஎன்ஏ பொருந்தியது?-இலங்கை இராணுவம் மீண்டும் புருடா

கொழும்பு: பிரபாகரன் மற்றும் அவரது மகன் சார்லஸ் அந்தோணியுடைய டிஎன்ஏக்கள் பொருத்தமாக இருப்பதாகவும், இதன் மூலம் பிரபாகரன் மரணமடைந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

மே 18ம் தேதி பிரபாகரனுடைய உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டியதாகவும், பிரபாகரன் மரணமடைந்திருப்பதை டிஎன்ஏ சோதனை உறுதி செய்துள்ளதாகவும் கூறியது ராணுவம். பின்னர் அடுத்த ஓரிரு நாட்களில் பிரபாகரனுடைய உடலை எரித்து சாம்பலை கடலில் வீசி விட்டதாகவும் அது கூறியது.

இருப்பினும் பிரபாகரன் மரணம் குறித்தும், அவருடைய உடல் என்று ராணுவம் காட்டிய உடலுக்கும் இடையே ஏகப்பட்ட முரண்பாடுகள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், சார்லஸ் அந்தோணி மற்றும் பிரபாகரனுடைய டிஎன்ஏக்கள் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டதாகவும், இரண்டும் ஒத்துப் போவதாகவும், இதன் மூலம் பிரபாகரனுடைய மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா தெரிவித்துள்ளார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP