சமீபத்திய பதிவுகள்

ஒட்டக அழகு போட்டி: முதல் பரிசு ரூ.40 கோடி

>> Thursday, April 3, 2008

 

அபுதாபி ஏப். 3-

ஐக்கிய அரபு நாட்டில் உள்ள அபுதாபியில் ஒட்டக அழகு போட்டி தொடங்கி உள்ளது. உலகம் முழுவதும் இருந்து 15 ஆயிரம் ஒட்டகங்கள் இதல் பங்கேற்று உள்ளன.

காது, மூக்கு அழகு, ஒட்டகத்தின் உயரம் ஆகியவற்றை வைத்து அழகான ஒட்டகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன இதில் முதல் பரிசாக ரூ.40 கோடி வழங்கப்படுகிறது. 100 கார்களும் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒரு வார காலத்துக்கு போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.
 

StumbleUpon.com Read more...

காலச்சுவடுகள்

C‹‡V 'WRUŸL·

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

குண்டாகாமல் இருக்க 8 மணி நேரம் தூங்கணும்






லண்டன், ஏப். 3-
இரவில் தினமும் எட்டு மணி நேரம் தூங்கினால் உடல் எடை அதிகரிக்காது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கனடா நாட்டில் உள்ள லாவல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஜீன் பிலிப்பி சாபுத் என்ற நிபுணர் தலைமையிலான குழு, இரவில் தூங்குவதால் ஏற்படும் உடல் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தது. இதில், தினமும் தவறாமல் ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குபவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பதில்லை என்பது தெரிந்தது.
அதே நேரம், 6 மணி நேரத்துக்கு குறைவாகவோ அல்லது 9 மணி நேரத்துக்கு மேலாகவோ தூங்குபவர்களுக்கு எடை அதிகரிப்பதாக தெரிந்தது. ஏழு அல்லது 8 மணி நேரத்துக்கு குறைவாக தூங்குபவர்களுக்கு 2 கிலோ வரை எடை அதிகரிக்கிறது. தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக குறைவான நேரமே தூங்கிக் கொண்டிருந்தால் 35 சதவீதம் பேருக்கு சுமார் 5 கிலோ வரை உடல் எடை அதிகரிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தூக்கத்தின்போது ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் இந்த பின்விளைவுகள் ஏற்படுவதாக பிலிப்பி கூறியுள்ளார்.
 
 
 

StumbleUpon.com Read more...

எறையூர் தேவாலயம் விரைவில் திறப்பு சமாதான கூட்டத்தில் முடிவு

 


உளுந்தூர்பேட்டை, ஏப். 3-
விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தில் புனித ஜெபமாலை அன்னை ஆலயம் உள்ளது. இங்கு வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கு இடையே கடந்த 9-ம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 வன்னிய கிறிஸ்தவர்கள் பலியாயினர். இதையடுத்து அங்கு பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு தனி பங்கு உருவாக்க வேண்டும், இல்லாவிட்டால் அனைவரும் இந்து மதத்துக்கு மாறுவோம் என வன்னிய கிறிஸ்தவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், உளுந்தூர்பேட்டை தாசில்தார் அலுவலகத்தில் கோட்டாட்சியர் லீலா தலைமையில் நேற்று சமாதான கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து இரு தரப்பு மக்களும் பேராயரை சந்தித்து பேசி மூடப்பட்டுள்ள தேவாலயத்தை திறக்க ஆவன செய்வது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே எறையூரில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

முட்டை வடிவ கட்டிடம்




பெய்ஜிங்: வளர்ந்து வரும் கலைஞர்களுக்காக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கண்ணாடி மற்றும் டைட்டானியத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ள தேசிய மையகட்டிடம்தான் இது. முட்டை வடிவில் ரம்மியமாக காட்சியளிக்கிறது இந்தக் கட்டிடத்தைச் சுற்றி தண்ணீர் சூழுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை வடிவமைத்தவர் பிரெஞ்சு கட்டிடக் கலை வல்லுநர் பால் ஆண்ட்ரூ. இதில் 6,500 பேர் அமரும் வகையில் 3 அரங்குகள் இடம் பெற்றுள்ளன. இதன் முன்பு உள்ள நீரைத்தான் சுத்தம் செய்கிறார்கள் இவர்கள்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP