சமீபத்திய பதிவுகள்

ஆர்குட் மூலம் ஏமாறும் குடும்பப் பெண்கள்

>> Monday, December 14, 2009

ஆர்குட் மூலம் ஏமாறும் குடும்பப் பெண்கள் : சைபர் கிரைம் ஐ.ஜி., பேச்சு
 

கோவை : இன்டர்நெட் உலகில்,"ஆர்குட்' (சுய கருத்து பரிமாற்ற இணையதளம்) மூலம் குடும்பப் பெண்கள் எளிதாக ஏமாற்றப்படுவதாக, சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் ஐ.ஜி., பிரதாப்ரெட்டி தெரிவித்துள்ளார். மேற்கு மண்டல போலீஸ் அதிகாரிகள் பங்கேற்ற, "சைபர் சேப் தமிழ்நாடு -09' விழிப்புணர்வு கருத்தரங்கம், நேற்று, கோவையில் நடந்தது. மண்டலத்தில் பணியாற்றும் அனைத்து பிரிவு டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.


சி.பி.சி.ஐ.டி.,சைபர் கிரைம் ஐ.ஜி.,பிரதாப்ரெட்டி பேசியதாவது: கம்ப்யூட்டர், இன்டர்நெட் உலகில், எஸ்.எம்.எஸ்.,மூலம் 95 சதவீதம் பேர் ஏமாற்றப்படுகின்றனர். பெரும்பாலும் பல்வகை திறமை இருப்பவர்கள் தான், மற்றவர்களை ஏமாற்றுகின்றனர். கல்லூரி மாணவர்கள், குடும்பப் பெண்கள் தான், "ஆர்குட்' மூலம் ஏமாறுகின்றனர்; தேவையில்லாமல் போட்டோக்களை இணைத்து ஏமாந்து விடுகின்றனர்.


ஆன்லைன் மூலம் கம்பெனிகளின் டேட்டாக்களை திருடி பயன்படுத்துவதும், அதை மற்றவர்களுக்கு விற்பனை செய்வதும் அதிகரித்துள்ளன. ஆன்லைன் வியாபாரத்தில், வியாபாரிகள் கூட ஏமாற்றப்படுகின்றனர். ஆன் லைன் லாட்டரிகளில், லட்சங்களை இழப்பவர்கள் அதிகம். இமெயில் மற்றும் கிரெடிட் கார்டு மோசடிகள், இன்று ஏராளமாக நடக்கின்றன. சைபர் கிரைம் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வழக்குகளை கையாளுதல், விசாரித்தல், குற்றவாளிகளை கண்டுபிடித்தல் பணிகளில் போலீஸ் அதிகாரிகள், சீரிய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதாப் ரெட்டி கூறினார்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன்: டிப்ஸ்

 
 

நம் கருத்துக்களை, திட்டத்தினை விளக்க பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் அருமையான ஒரு வழியாகப் பலராலும் கடைப்பிடிக்கப் படுகிறது. குறிப்பாக மாணவர்கள் இதனை அடிக்கடி தங்கள் வகுப்புகளில் கையாளத் தொடங்கி விட்டனர். அவர்களுக்கான சில எளிமையான டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன.1. எப்போதும் ஒரே பேக் கிரவுண்டினை ஸ்லைட்களுக்குப் பயன்படுத்தவும். பிரசன்டேஷன் புரோகிராமுடன் ரெடியாகப் பல டிசைன் டெம்ப்ளேட்கள் கிடைக்கின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பிரசன்டேஷன் முழுவதும் அதனையே பயன்படுத்தவும்.
2. கலர்களைப் பயன்படுத்துகையில் ஒன்றுக்கொன்று எடுத்துக் காட்டும் வகையில் உள்ளதாக இருக்க வேண்டும். லைட் கலரில் எழுத்துகள் இருந்தால் பின்னணி சற்று டார்க்காக இருக்க வேண்டும். இதனை எப்படி அமைக்க முடியும் என்ற திண்டாட்டத்தில் இருந்தால், டிசைன் டெம்ப்ளேட்டுகளைப் பார்த்துப் புரிந்து கொண்டு செயல்படவும். 
3. பவர்பாய்ண்ட் என்பது காட்சியை அடிப்படையாகக் கொண்டு தகவல்களைத் தரும் ஒரு மீடியமாகும். எனவே படங்களை இணைத்து ஸ்லைடுகளை அமைப்பது பிரசன்டேஷனை நன்றாக எடுத்துக் காட்டும். ஒரு ஸ்லைடில் ஒரு நல்ல படம் அல்லது கிராபிக் பயன்படுத்தவும். ஒன்றுக்கு மேற்பட்ட படங்கள் நாம் சொல்ல வந்ததைத் திசை திருப்பும். மேலும் பயன்படுத்தப்படும் படங்கள், எடுத்துச் சொல்லப்படும் கருத்துகள் சார்ந்ததாக இருக்க வேண்டும். மேலும் படங்கள் இதனைப் பார்ப்பவர்கள் நன்றாகப் பார்த்துப் புரிந்து கொள்ளும் வகையில் போதுமான அளவில் இருக்க வேண்டும். மிகச் சிறியதாகவோ அல்லது மிகப் பெரியதாகவோ இருக்கக் கூடாது.
4. நாம் நம் கருத்துகளைக் கூற ஸ்லைட் �ஷா தயாரித்து வழங்குகிறோம். இது பார்ப்பவர்களுக்கான கண் பார்வை சோதனையாக இருக்கக் கூடாது. ஸ்லைடில் பயன்படுத்தப்படும் எழுத்துக்களின் அளவு குறைந்தது 36 பாய்ண்ட் என்ற அளவில் இருக்க வேண்டும். பின் ஸ்லைட் அளவைப் பொறுத்து இதனை அதிகரிக்கலாம்.
5. ஸ்லைட் ஒன்றில் டெக்ஸ்ட் ஐந்து வரிகளே அதிகம் இருக்க வேண்டும். சிறிய சொல் தொடர்களையும், புல்லட் லிஸ்ட்களயும் பயன்படுத்தவும். 
6. ஸ்லைடுகளில் உள்ள சொற்களை, வாக்கியங்களை மற்றவர்களுக்குப் படித்துக் காட்ட வேண்டாம். ஸ்லைடுகளில் உள்ளதைக் காட்டிலும் அதிக விபரங்களை நீங்கள் தருவீர்கள் என்று, காட்சியைக் காண்பவர்கள் எதிர்பார்க்க வேண்டும். 
7. டெக்ஸ்ட் வரிகளில் எந்த தவறும் இருக்கக் கூடாது. ஸ்பெல்லிங் மற்றும் இலக்கணப் பிழைகளை முன்கூட்டியே பார்த்து நீக்கிவிடவும். இதில் பிழைகள் இருந்தால் பார்ப்பவர்களின் கவனம், சொல்லவந்ததிலிருந்து சிதறும்.
8. உங்கள் பேச்சைக் கேட்பவர்களுடன் நேரடியாகப் பார்த்துப் பேசவும். ஸ்லைடுகளைப் பார்த்து திரும்பி நின்று பேசவே கூடாது. உங்கள் குரல் உரக்க இருக்க வேண்டும். குரல் ஒலி குறைவாக இருந்தால், கேட்பவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு. ஸ்லைடுகளை முதலில் தனியாக ஒரு முறை போட்டு பார்த்துக் கொள்ளவும். என்ன பேச வேண்டும் என்பதனையும் முதலில் ஒத்திகை பார்த்துக் கொள்ளவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனாவை விஞ்சும் இந்தியா

நுகர்பொருள் உற்பத்தியில் சீனாவை விஞ்சும் இந்தியாFront page news and headlines todayபுதுடில்லி : "டிவி' மொபைல்போன் போன்றவற்றை தயாரிப்பதில் தற்போது முதலிடத்தில் இருக்கும் சீனாவை, விரைவில் இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என்று, ஆய்வுகள் தெரிவிக்கின்றன.தற்போது சீனாவில் உற்பத்தியாகும் பொருட்களில் 54 சதவீதம் ஏற்றுமதியாகிறது.உலகத் தரம் வாய்ந்த "ஏசி' தயாரிப்பில் 72 சதவீதம்; குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிப்பில் 47 சதவீதம்; "டிவி'க்கள் தயாரிப்பில் 45 சதவீதம்; வாஷிங்மெஷின் தயாரிப்பில் 35 சதவீதம்; மொபைல்போன் தயாரிப்பில் 52 சதவீதம் என்று சீனா இப்போது வெளுத்து வாங்குகிறது.இதற்கு அந்நாட்டு அரசு கடைபிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகள் தான் காரணம் என்கின்றனர். நேரடி வெளிநாட்டு முதலீட்டை(எப்.டி.ஐ.,) அவர்கள் பெருமளவில் வரவேற்கின்றனர். இதனால் தொழில்நுட்பம் எளிதில் கிடைக்கிறது.தேசிய உற்பத்திப் போட்டி கவுன்சில் மற்றும் பிரைஸ்வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் இரண்டும் இணைந்து நடத்திய ஆய்வில், "இந்நிலைமை வெகு சீக்கிரத்தில் மாறும்' என்று, தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில்,"சீனாவுக்கு இணையாக இந்தியாவிலும் நுகர்பொருள் சந்தை இருக்கிறது. தொழில்நுட்ப மேம்பாட்டை ஊக்கமளித்தல், நுகர்பொருள் தேவை அதிகரிப்பதை சரியான முறையில் கணித்தல், வரிக் கொள்கைகளில் சற்றே விட்டுக் கொடுத்தல், மூலப்பொருட்கள் வினியோகத்தை மேம்படுத்தல் இவற்றைச் சரியாக செய்தால் இன்னும் சில ஆண்டுகளில் சீனாவின் இடத்தை இந்தியா பிடித்துவிடலாம்' என்று கூறப்பட்டுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஐ-போனுக்கு ( i -Phone) மைக்ரோசாப்ட் அப்ளிகேஷன்

 
lankasri.com
தலைப்பு தவறு என்று எண்ணுகிறீர்களா! ஆமாம், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐ போனுக்கு அப்ளிகேஷன் புரோகிராமினைத் தருமா என்ன? என்று நீங்கள் வியப்பது தெரிகிறது. ஆனால் உண்மை அதுதான். மைக்ரோசாப்ட் லைவ் லேப்ஸ் அத்தகைய ஒரு புரோகிராம் ஒன்றைத் தருகிறது.

ஸீ ட்ரேகன் என இதற்குப் பெயர் இட்டுள்ளது. இதன் மூலம் ஐ போன் பயன்படுத்துபவர்கள் 3ஜி அல்லது வை–பி வழியாக பெரிய அளவிலான போட்டோ லைப்ரேரிகளை எளிதாகப் பெற்று காண முடியும். இந்த சாப்ட்வேர் தொகுப்புடன் 50 படங்கள் இணைத்துத் தரப்படுகின்றன. சில படங்கள் 10 கிகா பிக்ஸெல்கள் அளவில் மிகப் பெரியதாக உள்ளன. இதில் சில சாட்டலைட் மூலம் எடுத்த படங்கள், சில ஸ்பேஸ் போட்டோக்கள், சில அதிக ரெசல்யூசனில் உள்ள கலைப் படங்களாகும்.

இந்த சாப்ட்வேர் தொகுப்பின் மிக முக்கிய அம்சம் என்னவென்றால் இது முற்றிலும் இலவசம். ஒரு சின்ன மாற்றம் இருந்தாலும் அடுத்த மேம்படுத்தப்பட்ட சாதனத்திற்கு மாறிக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் வழங்கும் . மைக்ரோசாப்ட் இவ்வாறு இலவச தொகுப்பினை எப்போதும் பயன்படுத்தும் வகையில் வழங்குவது புதுமைதான்.

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விஜய் டி.வி.யில் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் கேரல் பாட்டு போட்டி “ஆச்சி” மசாலா நிறுவனம் ஏற்பாடு

 
 சென்னை, டிச.13-
 
கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசு கிறிஸ்துவின் வருகை குறித்து பாடகர் குழுவினர் "கேரல்" பாடும் முறையை, ஆச்சி நிறுவனத்தினர் ஒரு பாட்டு போட்டியாக தேவாலயம், கல்லூரி மற்றும் பள்ளிக் கூடங்களில் இருந்து வரும் பாடகர், குழு வினரை வைத்து தொலை காட்சியில் பாட ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்த தகவலை ஆச்சி மசாலா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பத்மசிங் ஐசக் தெரிவித்தார்.

இந்த முயற்சி, பத்மசிங் ஐசக்கின் மனைவி தெல்மா ஐசக் மற்றும் மகன்கள் அஸ்வின் பாண்டியன், அபிஷேக் ஆபிரகாம் ஆகியோருடைய 2 ஆண்டு கால முயற்சியில் உருவாக்கப்பட்டதாகும். இந்த நிகழ்ச்சி ஸ்டார் விஜய் தொலைக்காட்சி மூலமாக முதல் முறையாக வரும் 24 மற்றும் 25-ந்தேதி ஒளிபரப்பு ஆகியது. இந்த நிகழ்ச்சியை இலங்கை, அமெரிக்கா, கனடா நாடுகளிலும் பார்க்க முடியும்.
 
இந்த போட்டியில் வெற்றி யாளர்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சி 12-ந் தேதி நேற்று மாலை 5 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு டாக்டர் சாமுவேல் ஜோசப், சிட்டி பிரகாஷ் தைரியம், சுசீலாசாரதி, சாந்தி சால மன், கிரேஸ் கருணாஸ் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
 
முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் ஒவ்வொரு பிரிவு குழுவுக்கும், ரூ.20 ஆயிரம் 2-ம் பரிசாக ஒவ்வொரு பிரிவு குழுவுக்கும் கொடுக்கப்படும். நிகழ்ச்சிக்கும் பேராயர் தேவசகாயம், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தலைமை தாங்கினார்கள்.

source:dinamalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி?முதல்-மந்திரி ரோசய்யா பதவிக்கு ஆபத்துதெலுங்கானா விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பம் ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி? முதல்-மந்திரி ரோசய்யா பதவிக்கு ஆபத்து ஐதராபாத், டிச.14- தெலுங்கானா தனி மாநில விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. முதல்-மந்திரி ரோசய்யாவை பதவி விலக வைத்து, சட்டசபையை முடக்கி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த காங்கிரஸ் மேலிடம் பரிசீலித்து வருகிறது. 22 மந்திரிகள் ராஜினாமா ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி, தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் கே.சந்திரசேகரராவ் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இதனால் தனி மாநிலக் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து, தெலுங்கானா தவிர, ஆந்திராவின் மற்ற பகுதிகளான கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் அரசியல் கட்சியினரும், மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். தெலுங்கானாவை எதிர்த்து, காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 138 எம்.எல்.ஏ.க்களும், 5 எம்.பி.க்களும் ராஜினாமா செய்தனர். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், 22 மந்திரிகள் ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தனர். அவர்களை முதல்-மந்திரி ரோசய்யா சமாதானப்படுத்தினார். ராஜினாமா முடிவு குறித்து நேற்று அந்த மந்திரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. ஜனாதிபதி ஆட்சி மந்திரிகள் ராஜினாமா செய்தால், தானும் ராஜினாமா செய்யப் போவதாக முதல்-மந்திரி ரோசய்யா கூறியதாக தெரிகிறது. மேலும், தெலுங்கானாவுக்கு எதிராக ஆந்திராவில் நிலவும் கொந்தளிப்பான சூழ்நிலை குறித்து காங்கிரஸ் மேலிடத்துக்கு ரோசய்யா தகவல் தெரிவித்துள்ளார். மேலிடத்தின் உத்தரவுக்காக அவர் காத்திருக்கிறார். இந்தப் பிரச்சினை குறித்து காங்கிரஸ் மேலிடம் ஓரிரு நாளில் முக்கிய முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிலைமையை சமாளிக்க, முதல்-மந்திரி ரோசய்யா பதவி விலக மேலிடம் உத்தரவிடும் என்று தெரிகிறது. பிறகு, மாநில சட்டசபையை முடக்கி (சஸ்பெண்டு) வைத்து, ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முடிவுகளை எடுக்க ஓரிரு நாட்கள் ஆகும் நிலையில், இன்று சட்டசபை மீண்டும் கூடுகிறது. சட்டசபையில் அமளி நடப்பதை விரும்பாததால், சட்டசபை கூட்டத்தொடரை முன்கூட்டியே இன்றே முடித்துக்கொள்ள காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், இன்று சட்டசபை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது. ஜனாதிபதி ஆட்சி முடிவு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:- இது பிராந்திய உணர்வுள்ள பிரச்சினை என்பதால், ரோசய்யாவை நீக்கி விட்டு மற்றொருவரை முதல்-மந்திரியாக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. சட்டசபையை கலைத்து விட்டால், புதிதாக தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்கும். அதற்கும் மேலிடம் தயாராக இல்லை. ஆகவே, சட்டசபையை முடக்கி வைத்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தினால், நிலைமை சரி ஆகும்போது, மீண்டும் சட்டசபைக்கு உயிரூட்டி, மீண்டும் அரசை அமைத்துக் கொள்ளலாம் என்று மேலிடம் கணக்குப்போடுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தெலுங்கு தேசம் உண்ணாவிரதம் இதற்கிடையே, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. தெலுங்கானா அமைப்பதை எதிர்த்து, தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தேவினேனி உமாமகேஸ்வரராவ், சின்னம் ராமகோட்டையா, அக்கட்சியைச் சேர்ந்த விஜயவாடா நகர முன்னாள் மேயர் பஞ்சுமர்த்தி அனுராதா, அக்கட்சியின் மூத்த தலைவர் பி.உமாமகேஸ்வரராவ் ஆகியோர் நேற்று விஜயவாடாவில், சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:- தனி மாநிலம் அமைக்கும் முடிவை சோனியா காந்தி திரும்பப் பெறுவதற்காக, இந்த உண்ணாவிரதத்தை தொடங்கி இருக்கிறோம். ஆந்திர மக்கள் ஒன்றாக இருக்கவே விரும்புகிறார்கள். ஆனால், ஆந்திராவை மூன்றாக பிரித்து, மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் முதல்-மந்திரிகளை பதவியில் அமர்த்த பிரதமர் திட்டமிடுகிறார். தமிழ்நாடு, கர்நாடகாவைச் சேர்ந்த ப.சிதம்பரமும், வீரப்ப மொய்லியும், சோனியா காந்திக்கு பிறந்தநாள் பரிசாக, ஆந்திரா பிரிவினையை அறிவித்துள்ளனர். அவர்கள், ஆறுகளில் ஆந்திராவுக்குரிய பங்கை தர மறுப்பதுடன், இந்த பிரிவினையின் மூலம் ஆந்திராவைப் பலவீனப்படுத்த சதி செய்கிறார்கள். ஆனால், என்ன விலை கொடுத்தாவது, பிரிவினையை தடுப்போம். இதற்காக உயிரையும் தியாகம் செய்வோம். பிரிவினையைத் தடுக்க, கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவைச் சேர்ந்த மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். மேலும், தெலுங்கானா விவகாரத்தில் தெலுங்குதேசம் கட்சியின் இரட்டை வேடத்தைக் கண்டித்து, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த அக்கட்சி எம்.எல்.ஏ. ரமேஷ், எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலகியதுடன், கட்சியில் இருந்தும் விலகினார். காங்கிரஸ் எம்.பி. உண்ணாவிரத மிரட்டல் இதற்கிடையே, விஜயவாடா தொகுதி காங்கிரஸ் எம்.பி. எல்.ராஜகோபாலும் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:- தெலுங்கானா மாநிலம் அமைப்பதை ஆந்திர மக்கள் யாரும் விரும்பவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட விரும்பவில்லை. தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, அத்தீர்மானத்தை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு எதிராக, 225-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போட்டு அத்தீர்மானத்தை தோற்கடிப்பார்கள். அதன்பிறகு, ஆந்திர மக்களின் மனநிலையை அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். இதுபற்றி முதல்-மந்திரி ரோசய்யாவை சந்தித்து வற்புறுத்துவேன். ஒருவேளை, தீர்மானத்தை கொண்டுவராவிட்டால், அதைக் கண்டித்து, நான் உண்ணாவிரதம் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார். பஸ் போக்குவரத்து பாதிப்பு இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, ஆந்திராவின் இதர பகுதிகளில் நடத்தப்பட்ட 48 மணி நேர பந்த், நேற்று முன்தினம் இரவு 12 மணியுடன் முடிவடைந்தது. இருப்பினும், நேற்றும் வன்முறை நீடித்தது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் ஆந்திர அரசு பஸ்கள் தாக்கப்படுவதால், அப்பகுதிகளுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 1,420 பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் அரசுக்கு ரூ.2 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. பஸ்கள் சேதப்படுத்தப்பட்டதால், ரூ.14 லட்சம் இழப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுவதால், தமிழகத்தில் இருந்து அங்கு நேற்று 3-வது நாளாக பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து திருப்பதி, சித்தூர் செல்லும் பஸ்கள், வேலூருடன் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் மேற்கொண்டு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். வெங்காயம், தக்காளி ஏற்றிய லாரிகளும் செல்ல முடியவில்லை. அதுபோல், ஆந்திராவில் இருந்து தமிழகம் வர நினைக்கும் மக்களும் வர முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மொட்டை அடித்தனர் ஆந்திராவை பிரிப்பதை எதிர்த்து, திருப்பதி வெங்கடேஸ்வரா பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நேற்று திருப்பதியில் தலையை மொட்டை அடித்துக்கொண்டனர். திருமலை பாலாஜி கார்டனில் தர்ணா செய்ய முயன்ற காங்கிரசார் கைது செய்யப்பட்டனர். ஐதராபாத்தில் பிரபல டாக்டர்கள் ஒரு நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். பிரஜா ராஜ்யம் கட்சியினர் ஐதராபாத்தில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தினர். திருப்பதியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகரராவின் உருவ பொம்மையை காங்கிரசார் எரித்தனர். திருப்பதி நகராட்சி அலுவலகம் முன்பு, அனைத்து கட்சியினரும் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல இடங்களில் சாலை மறியல் மற்றும் பேரணிகளும் நடத்தப்பட்டன. source:dailythanthi


-- 
www.thamilislam.co.cc
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகளின் துப்பாக்கிகள் மௌனிக்க பிளவுபடும் சிங்களம்


 

விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர்களை சுட்டுக் கொல்லும்படி கோத்தபாய உத்தரவிட்டதாக 'த சண்டே லீடர்' என்ற ஆங்கில பத்திரிகைக்கு சரத் பொன்சேகா அதிரடிப் பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார். நகமும் சதையும் போல ஒட்டி உறவாடி இலங்கை இராணுவத்தில் பல வருடங்களாக இளமைக்காலம் முதல் நண்பர்களாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது பதவி ஆசைக்காக எதிரும் புதிருமாக மாறியிருப்பது பல உண்மைச் சம்பவங்களை வெளிக்கொண்டுவர ஏதுவாக உள்ளது.

புலிகளை யுத்தத்தில் வெற்றிகொண்ட பின்னர், சரத் பொன்சேகாவுக்கு சிங்கள மக்களிடையே பெரும் செல்வாக்கு காணப்பட்டது, அதனை தம்க்குச் சாதகமாகப் பயன்படுத்தி அவரை தம்முடன் வைத்திருந்து காரியத்தை சாதிக்க கோத்தபாய தவறிவிட்டார். எதற்கெடுத்தாலும் கோபமும் ஆத்திரமும் அடையும் கோத்தபாய, சரத்தை புறந்தள்ளி தனது அரசியல் நடவடிக்கைகளை தொடர ஆரம்பித்தது, கிணறு கிண்ட பூதம் புறப்பட்ட கதையாக தற்போது மாறியுள்ளது.

அதிருப்தி அடைந்த சரத்தை பல எதிர்கட்சிகள் அணுக அவருக்கு ஜனாதிபதியாகும் ஆசை மேலோங்கியுள்ளது. சரத் ஒரு கொளுக்கட்டை என்றால் மகிந்த ஒரு மோதகம் என்ற கருத்தை அதிர்வு இணையம் ஏற்கனவே முன்வைத்திருந்தது. இரண்டும் உருவத்தில் வேறு ஆனால் உள்ளுக்குள் ஒன்று தான். தற்போது இவர்கள் சேர்ந்து செய்த கொலைகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்பன இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்டு இருக்கும் பகை காரணமாக சற்று வெளியே வருகின்றன. 

ஏதோ சரணடையும் புலிகளின் தலைவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாய கூறினார் என்று கூறினால் தமிழர்கள் மனம் மாறி தமக்கு ஓட்டுப் போடுவார்கள் என கனவு கான்கிறார் சரத் பொன்சேகா. யுத்தம் நடைபெற்ற வேளைகளில் இவர் தலைமையில் நடைபெற்ற தாக்குதல்கள், கொத்துக் கொத்தாக எமது தமிழர்கள் கொல்லப்பட்டதும், கர்ப்பிணிப் பெண் சிதறி கருவில் இருந்த குழந்தை வெளியெ வந்து இறந்ததையும் எம் மக்கள் என்ன அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடுவார்களா?

இருவர் சேர்ந்து ஒரு கொலை செய்துவிட்டு ஒருவர் மீது பழியைப் போட்டு தப்பித்து மற்றவர் பரிசுத்தமாகப் பார்க்கிறார்களா? புலிகள் தமது ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்றார்கள், அப்போது கூட போரைத் தொடர்ந்து நடாத்தி, கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்கி, காயப்பட்ட போராளிகளை கொன்று, யுத்தத்தை நடத்தி முடித்த இலங்கை அரசு என்ன சொல்ல வருகிறது. இல்லை கடைசி 3 நாட்களாக தான் இலங்கையில் இல்லை அந்த நேரத்தில் தான் பல கொலைகள் நடந்தது என்று கூறும் சரத் மட்டும் அந்த வேளை நின்றிருந்தால் இதனைத் தடுத்திருப்பாரா? என்ன? யார்காதில் சுற்ற நினைக்கிறார் பூவை?

புலிகள் ஏன் போரில் பின்னடைவைச் சந்தித்தார்கள், ஏன் தமது நிலத்தை இழந்தார்கள், ஏன் தமது ஆயுதங்கள மௌனித்தார்கள் என்று பல தமிழர்கள் குழம்பிப் போய் உள்ளார்கள் . தற்போது அதற்கான விடைகள் கொஞ்சம் கொஞ்சமாக கிடைக்கப் பெறுகின்றன. அவர்கள் அவ்வாறு செய்ததின் அர்தம் தற்போது புரிகிறது. தற்போது உள்ள அரசியல் சூழலை நாம் எண்ணிப் பார்க்கவேண்டும். தமிழர்களைப் பொறுத்தவரை யார்வந்தாலும் சாதகமே . ஏன் தெரியுமா? தமிழர்களே எண்ணிப் பாருங்கள். 

ஒருவேளை சரத் பொன்சேகா ஆட்சிக்கு வந்தால், மகிந்த எதிர்கட்சித் தலைவர், அப்படியாயின் கோத்தபாய, உட்பட பசில் ராஜபக்ஷ எல்லோரும் யார்? இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது, இவர்கள் அனைவரின் பாதுகாப்பும் கணிசமாகக் குறைக்கப்படும் அப்போது, இவர்களை எளிதில் எதிரியால் தாக்க முடியும் , மிஞ்சிப் போனால் நாட்டை விட்டு அவர்கள் ஓடிப் போவார்கள். அப்படிப் போனாலும் புலம் பெயர் தமிழர்கள் இவர்கள் மீது வழக்கு தொடுக்க முனைப்புடன் செயல்படுவார்கள்.

ஒருவேளை மகிந்த திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் சரத் பொன்சேகா உட்பட சில இராணுவத் தளபதிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும், அப்படி அவர்கள் சென்றால், தமது வாக்கு மூலத்தைப் பதிவுசெய்து கோத்தபாய மற்றும் மகிந்தவுக்கு எதிராகச் சாட்சி சொல்ல நேரிடலாம்(வெளிநாட்டில்) அப்படி ஒரு அபாயம் நேர்ந்தால் வாழ் நாள் முழுவதும் அவர்கள் இலங்கைத் தீவில் தங்கவேண்டி ஏற்படும். அதனால் இரண்டில் எது நடந்தாலும் தமிழர்கள் அதனைச் சாதகமாக பயன்படுத்துவதே நல்லது.

இதில் தமிழ்தேசியக் கூட்டமைப்போ அல்லது மனோகணேசனோ, இல்லை மலையகத் தமிழர்களோ யாரை ஆதரிக்கப் போகிறார்கள் என புலம்பெயர் தமிழர்கள் தற்போது விவாதிக்கத் தேவையில்லை. யூலியன் வாலா படுகொலையின்போது தப்பிய யுதாம் சிங் எத்தனை ஆண்டுகள் பொறுத்திருந்து தனது பகையைத் தீர்த்தான் என நாம் அறிவோம், அதனை விட 100 மடங்கு மேலாக முள்ளிவாய்க்காலில் பகொலை நடந்துள்ளது. நம்மில் எத்தனை யுதாம் சிங் தோன்றியிருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்? நீறு பூத்த நெருப்பாக எமக்குள் எத்தனை தமிழர்கள் உள்ளார்கள் என யாருக்குத் தெரியும். 

உலகில் கடைசித் தமிழன் இருக்கும் வரை எவனும் இந்தப் படுகொலைகளை மறக்கமாட்டான். எங்குவேண்டும் என்றாலும் எப்போது எதுவும் நடக்கலாம். ஆயிரம் உதாம் சிங் தமிழர்களில் தோன்றலாம், எமது போராட்டம் அடுத்த பரிணாமத்தை எட்டும் .. மாவீரர்களின் ஆன்மா ஒரு சக்தியாக உருவெடுக்கும் தடைகளை உடைத்து தமிழீழம் காணும்.source:athirvu
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP