சமீபத்திய பதிவுகள்

வதந்திகள்:எமது தமிழீழ உறவுகளுக்கு ஒரு அவசர வேண்டுகோள்

>> Sunday, May 24, 2009

பெரிதாக பார்க அழுத்தவும்




அதிர்வு இணையம் செல்ல

StumbleUpon.com Read more...

இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது": 'ஆனந்த விகடன்' வலியுறுத்தல்

"ஈழத் தமிழர் விவகாரத்தில் இறையாண்மையின் பேரால் இரக்கமற்ற நாடகம் இனியும் இந்தியா ஆடக்கூடாது" என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பிரபல வார இதழான 'ஆனந்த விகடன்' வலியுறுத்தியிருக்கின்றது.

இது தொடர்பாக 'இறக்கமற்ற இறையாண்மை!' எனும் தலைப்பில் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

"இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் முடிந்து, வாக்குகளை எண்ணிக்கொண்டு இருந்த அதே நேரம், இலங்கை மண்ணில் செத்து விழுந்த தமிழர்களின் சடலங்களைக் கணக்குப் பார்த்துக்கொண்டே முன்னேறியது சிங்கள இராணுவம்.

'முந்தைய தேர்தலைவிட வலுவாக வென்றுவிட்டோம்' என்று ஆளும் கூட்டணியினர் இங்கே வெடி போட்டுக் கொண்டாடிய அதேவேளை... 'இறுதி வெற்றியை நெருங்கிவிட்டோம்' என்று வெறியோடு சிங்கள பீரங்கிகள் வெடித்து, கரும் புகையால் விண்ணை நிரப்பின.

'விரும்பிய இலாகாவைக் கேட்டுப் பெறுவோம்' என்ற மகிழ்ச்சியில் இங்கே இனிப்புப் பரிமாற்றம் தொடங்கிய அதே சமயம், 'பிரபாகரனைக் கொன்றுவிட்டோம்' என்று இனிப்பு ஊட்டிக்கொண்டார்கள் சிங்கள மக்கள்!
 
'விடுதலைப் புலிகள்தான் தமிழ் மக்களைப் பிணைக் கைதிகளாக முன்னிறுத்தி யுத்த களத்தில் பலி கொடுக்கிறார்கள்' என்று இனிமேலும் இலங்கை அரசு சொல்ல முடியாது.

இனி ஒரே ஒரு தமிழன் அங்கே துப்பாக்கியாலோ, பசியாலோ உயிர் நீத்தாலும், அதற்கான முழுப் பொறுப்பும் ராஜபக்சவைத்தான் சாரும் என்று உறுதியான குரலில் இந்தியா உடனே எச்சரிக்க வேண்டும். 'அது அடுத்த நாட்டு விவகாரம்' என்று சொல்லி, இனியும் நம் நாடு பதுங்கு குழிக்குள் முடங்கியிருக்கக் கூடாது!

குண்டு மழையால் விளைந்த காயங்களாலும், குடலைச் சுருட்டும் பசியாலும், வாட்டி வதைக்கும் நோயாலும் உயிரோடு செத்துக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதித் தமிழர்களுக்கான புனரமைப்பில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும்.

விரைவில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமை பெற்றுத் தன்மானத்தோடு தலைநிமிர்ந்து வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும்.

உலக நாட்டுப் பிரதிநிதிகளும், பத்திரிகையாளர்களும், தொண்டு நிறுவனங்களும் அங்குள்ள தமிழர்களை நேரில் சந்திப்பதற்கு இதுவரை இருந்து வந்த தடைகளை அகற்றுவதும்கூட இந்திய அரசின் பொறுப்புதான்!

இதற்கெல்லாம் இலங்கை அரசை உடன்பட வைக்க முடியாது என்றால், இலங்கையோடு சேர்ந்துகொண்டு இத்தனை நாளும் 'இறையாண்மை' என்கிற பெயரால் இந்திய அரசு இரக்கமற்ற நாடகம்தான் ஆடிக்கொண்டு இருந்தது என்கிற பழிச்சொல் உறுதிப்பட்டுவிடும்!" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

Prabhakaran is alive - Nedumaran

StumbleUpon.com Read more...

இருக்கிறார் பிரபாகரன்:அடித்துச்சொல்கிறார் வைகோ

 

விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் நடந்த கடும் மோதலில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று ராணுவத்தினர் அறிவித்தனர்.

பிரபாகரன் உடல் கண்டெடுக்கப்பட்டது என்று உறுதிப்படுத்தினர்.  ஆனால்,  ராணுவம் காட்டிய உடல் மீது பல கேள்விகள் எழுந்தன.   அது பிரபாகரன் உடல்தானா என்று சந்தேகங்கள் எழந்தன.

இதற்கிடையில் பிரபாகரன் போரில் தப்பிச்சென்று பாதுகாப்பாக நலமுடன் இருப்பதாக புலிகள் தரப்பு அறிவித்தது.

விடுதலைப் புலிகளின் வெளிவிவகார புலனாய்வுத்துறையின் தலைவர் அறிவழகன் 'தமிழ்நெட்' இணையத்தளத்துக்கு அளித்த பேட்டியில்,   ''தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் கொலை செய்யப்பட்டார் என்று இலங்கை அரசாங்கமும் அதன்  ராணுவமும் மேற்கொண்டு வருகின்ற பொய்ப்பிரச்சாரத்தினை நம்பவேண்டாம்.  தமிழீழ தேசியத் தலைவர் உயிருடனும் நலமுடனும் உள்ளார்'' என்று உறுதிப்படுத்தினார்.

அவர் மேலும்,  ''எமது பாசத்துக்குரிய தேசியத் தலைவர் தமிழ் மக்களை எதிர்காலத்தில் சரியான தருணத்தில் தொடர்பு கொள்வார்'' என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று,  விடுதலைப்புலிகள் அமைப்பின் சர்வதேச ஒருங்கிணைப்பாளர் செல்வராசா பதமநாதன்,   ''தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கடந்த 17 ஆம் தேதி இராணுவத்துடன் நடைபெற்ற நேரடி மோதலின் போது அமரராகிவிட்டார்.

அவருக்கு தமிழர்கள் யாவரும் ஒரு வாரம் துக்கம் அனுசரிப்போம்'' என்று அறிவித்துள்ளார்.

அவர் மேலும்,  ''தொடர்ந்து ஜனநாயக வழியில் நாங்கள் போராடுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

செல்வராசா பத்மநாதனின் இந்த அறிவிப்பை, மதிமுக பொதுச்செயலாளரும், இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியஸ்தருமான வைகோ ஆணித்தரமாக மறுத்துள்ளார்.

''பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும்.  பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்'' என்று அறிவித்துள்ளார்.


வைகோவின் அறிக்கை முழு விபரம்:

பத்மநாபனின் அறிவிப்பு துரோகச்செயல் ஆகும்; பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்!


தமிழ் தேசியத்தலைவரும் உலகத்தமிழர்களின் இதயநாயகனுமான பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கிறார்.  அதில் எள் அளவும் எனக்குச் சந்தேகம் இல்லை.

உரிய காலத்தில் தமிழ் ஈழத்தை வென்றெடுக்க வருவார்.

யுத்த களத்தில் இருந்து வேனில் அவர் தப்பி ஓடும் போது சுட்டுக்கொல்லப்பட்டார் என்று ஒரு பொய்ச்செய்தியை சிங்கள அரசு முதலில் வெளியிட்டது.  இரண்டு நாட்கள் கழித்து, நந்திக்கடல் பகுதியில் அவர் உடல் கண்டு எடுக்கப்பட்டதாக இன்னொரு பொய்யைச்சொன்னது.

மே 19 ம்நாள் அன்று 'இதுதான் பிரபாகரனின் உயிர் அற்ற சடலம் என்று முதலில் காட்டப்பட்ட அந்த உடலில் முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்கள் பளிச்சிட்டன.


முகம், நன்கு மழிக்கப்பட்டு இருந்தது. அவருடைய உடல் பருமனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத உடல் அமைப்பு என்பதால் இது அக்கிரமமான பொய் என்பதை அறிந்து கொண்டோம்.

சில மணி நேரங்களில் வேறு ஒரு சடலத்தை சிங்கள ராணுவம் காட்டியது.  இதில் வலது கண் மூடியும், இடது கண் இலேசாக திறந்தும் இருந்தது.  முன் நெற்றியில் இருந்த காயத்தை துணி போட்டு மறைத்து இருந்தனர்.

பகைவர்கள் சுட்டு இருந்தால் உடலில் ஏராளமான குண்டுகள் பாய்ந்து இருக்க வேண்டும்.  அவரே ஒருவேளை தன்னைச் சுட்டுக்கொண்டாரா என்பதையும் ஏற்பதற்கு இல்லை.

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ள முடிவு எடுத்தால் வலது காதை ஒட்டினாற்போல் கன்னப்பொருத்தில் தான் ரவையைச் செலுத்த வேண்டும் என்று அவரே போராளிகளுக்கு பயிற்சி அளித்தவர் ஆவார்.

மேலும்,  இரண்டாவதாக காட்டப்பட்ட உடலும் முகத்தோற்றம் இது சிங்கள ராணுவத்தின் செப்பிடுவித்தை ஏமாற்று வேலை என்பதை எடுத்துக்காட்டியது.

அவரது சடலம் கிடைத்தது என்றால் அவரது குடும்பத்தினர், மெய்க்காப்பாளர்கள் சடலங்கள் எங்கே? என்ற கேள்விக்கு சிங்கள் ராணுவத்தின் பதில் ஏற்கத்தக்கதாக இல்லை.


பிரபாகரனின் சடலம்தான் என்பதை மரபு அணு சோதனையால் மெய்ப்பிக்க வேண்டியது சிங்கள அரசின் கடைமை ஆகும்.  பிரபாகரனின் தந்தையார் உயிருடன் இருக்கிறார்.  எனவே, அவருடைய உடம்பில்  இருந்து சோதனைக்குத் தேவையனவற்றை எடுத்து டி.என்.ஏ. சோதனை நடத்தி, சந்தேகத்திற்கு இடம் இன்றி இறந்தது பிரபாகரன் தான் என்று உலக நாடுகளுக்கு சிஙகள் அரசு ஏன் அறிவிக்கவில்லை?

StumbleUpon.com Read more...

தலைமை உத்தரவுக்கு காத்திருக்கிறோம்: மீண்டும் போரிட தயார்; விடுதலைப்புலிகள் அறிவிப்பு

 
கொழும்பு, மே. 24-
 
மீண்டும் போரிட தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்து உள்ளனர். யாழ்குடா பகுதியில் உள்ள விடுதலைப்புலிகள் 48 மணி நேரத்துக்குள் சரணடைய வேண்டும் என்று யாழ் மாவட்ட ராணுவ தளபதி கெடு விதித்து உள்ளார். இதற்கு பதில் அளித்த யாழ்ப்பாணம் பகுதி விடு தலைப்புலிகள் தளபதி வெற்றிக்குமரன் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
 

StumbleUpon.com Read more...

எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல: புலி தளபதி வெற்றிக்குமரன்

யாழ்.குடாநாட்டில் மறைவாக உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களை 48மணி நேரத்துள் படையினரிடம் சரணடைய வேண்டுமென யாழ் மாவட்ட இராணுவத் தளபதி கேட்டுள்ளார் என்ற செய்தியை அடுத்து புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன்.....

வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம் துப்பாக்கிகள் தற்காலிகமாக மௌனமாகி இருப்பது சரணடைவதற்காக அல்ல, உரிய நேரத்தில் தலைமையின் உத்தரவிற்காக காத்திருக்கின்றோம்" என்று யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவித்தார்.

எம் போராளிகள் என்றும் இல்லாத அளவு மிக உறுதியுடன் போராடத் தயாராக இருப்பதாகவும், சிங்கள இராணுவ பசப்பு வார்த்தைகளுக்கு மயங்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கள இராணுவம் இன்று பாரிய உளவியல் மற்றும் மறைமுக புலனாய்வு யுத்தத்தை தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது என்றும், மக்களை மிகவும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும்  புலிகளின் யாழ் செல்லும் படையணி தளபதி வெற்றிக்குமரன் கேட்டுள்ளார்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP