வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.
>> Thursday, January 10, 2008
வாழும் கலை ரவிசங்கர் ஜீ உடன் விவாதம் செய்தவர் நாளை சென்னைக்கு வருகிறார்.
Dr.ஜாகிர் நாயகின் முகமூடிகள் சமீப காலமாக கிழிந்து வருகிறது.இருந்தாலும் அவர் பொய்,பித்தலாட்டங்களை அறிவுப்பூர்வமாக அரங்கேற்றி வருகிறார்.
அவரின் வருகை குறித்து உமர் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு கொடுத்த எச்சரிக்கை
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=8400#8400
வருகின்ற 11 (நாளை) முதல் 20 தேதி வரை Dr.ஜாகிர் நாயகின் பீஸ் முகாம் சென்னையில் நடக்க உள்ளது.
எதற்காக ஜெபிக்கவேண்டும் என்ற விவரங்களுக்கு இந்த குறிப்புக்கள் உதவியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.
1. இஸ்லாமியர்கள் "அமைதி(Peace) கூட்டம்" என்ற போர்வையில் பல கூட்டங்களை நடத்தி மக்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்ளுங்கள்.
2. இப்படிப்பட்ட கூட்டங்களில் கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்டு, பைபிள் பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் தவறான கருத்துக்களைச் சொல்லி, கிறிஸ்தவர்களை குழப்பாமல் இருக்க ஜெபித்துக்கொள்வோம்.
3. இதில் பேசப்போகும் ஜாகிர் நாயக் மட்டுமல்ல, மற்ற எல்லா அறிஞர்களும், ஜிஹாத், மற்றும் இஸ்லாமிலிருந்து வெளிவருபவனை கொலை செய்யவேண்டும் என்ற ஷரியா சட்டம் சரியானது தான் என்று வாதாடுபவர்கள், மற்றும் அதை பிரச்சாரம் செய்பவர்கள். இவர்கள் "அமைதி" என்று பேசினால், அது எப்படி உண்மையாக இருக்கமுடியும். இதை எல்லா மக்களும் அறிந்துக்கொள்ள ஜெபிக்கவேண்டும்.
4. அமைதி கூட்டம் என்று சொல்லி, இங்கு மிகவும் ஆர்வமாக பேசும் இஸ்லாமிய அறிஞர்கள், முதலாவது இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு நடக்கும் கொடுமைகளை தட்டிக்கேட்கச் சொல்லுங்கள். இஸ்லாமியர்களின் வார்த்தைகளில் மக்கள் மயங்கி உண்மையை விட்டு விலகாமல் இருக்க ஜெபிப்போம்.
சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷம் போடுவான் என்று வேதம் சொல்வதை எல்லா கிறிஸ்தவர்களும் உணரவேண்டும் என்று நாம் ஜெபிக்கவேண்டும்.
யாராவது இக்கூட்டங்களில் கலந்துக்கொள்ள விரும்பினால், முதலாவது நம் தளங்களில் எழுதப்பட்டுவரும் கட்டுரைகளை, குறைந்தது நாம் இஸ்லாம் அறிஞர்களுக்கு அளித்துக்கொண்டு வரும் பதில் கட்டுரைகளையாவது படித்துவிட்டு செல்லும் படி கேட்டுக்கொள்கிறேன்.
இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை உண்மை என்று நம்பாதீர்கள். அவர்கள் உண்மையுள்ளவர்களாக இருந்தால், கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 50 கட்டுரைகளையும், பதில்களையும் நாம் சேர்ந்து அவர்களுக்கு கொடுத்துள்ளோம். ஆனால், இந்த இஸ்லாமிய அறிஞர்கள் மட்டும் அமைதியாக இருந்துவிடுகிறார்கள். பதில் சொல்லமாட்டார்கள், ஆனால், பைபிள் பற்றி, கிறிஸ்து பற்றி பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.
எனவே, மற்றவர்களுக்காக ஜெபிப்பது மட்டுமல்ல, எச்சரிக்கை செய்வதும் ஒவ்வொரு கிறிஸ்தவனுடைய கடமை என்று சொல்லிக்கொள்கிறேன்.
இக்கூட்டங்களில் பங்கு பெருபவர்கள், கிறிஸ்தவத்தைப் பற்றிய ஏதாவது புத்தகங்கள் கிடைக்குமானால் கொண்டு வாருங்கள். அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டை இங்கு பதிவு செய்யுங்கள். யூத இராஜ சிங்கமாம் இயேசுவின் நாமத்திற்கு மகிமை உண்டாகும் படி அதற்கு பதில் தர முயற்சி செய்வோம்.
கிறிஸ்தவர்கள் பதில் சொல்லாமல் பயந்துப்போய் மௌனமாய் இருக்கமாட்டார்கள் என்பதை "இவ்வுலகத்தின் அதிபதி" அறியட்டும்.