சமீபத்திய பதிவுகள்

டெஸ்க்டாப்பில் ஐகான்கள் அதிகமா?

>> Tuesday, January 4, 2011


 
 

மனம் போன போக்கில் டெஸ்க்டாப்பில் போல்டர்கள் மற்றும் பைல்களை சேவ் செய்து வைப்பது நம்மில் பலரிடையே இருக்கும் மோசமான பழக்கமாகும். இதனால், டெஸ்க்டாப்பில் தேவையற்ற ஐகான்கள் சிதறிக் கிடக்கும். ஒரு சிலர் தங்களுக்குப் பிடித்தவரின் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய போட்டோக்களை, பூஜிக்கும் தெய்வத்தின் படங்களைத் திரையில் டெஸ்க் டாப்பில் வைத்திருப்பார்கள். இந்த தேவையற்ற ஐகான்கள், அந்தப் படங்களில் உள்ளவரின், முகத்தில், கண்களை அல்லது வேறு பகுதிகளின் மேலாக அமர்ந்து, படத்தையே அசிங்கப்ப்டுத்தும் வகையில் இருக்கும்.
இதில் பெரும்பாலான ஐகான்கள், பயன்படுத்தப்படாமலேயே (வெகுநாட்கள் அல்லது மாதங்கள்) இருக்கும். சிலர் டவுண்லோட் செய்கையில், எங்கு டவுண்லோட் செய்தோம் என்று தெரிய, டெஸ்க்டாப்பிலேயே அவற்றை சேவ் செய்து வைப்பார்கள். பின்னர், அவற்றை வேறு சார்ந்த டைரக்டரிக்குக் கொண்டு சென்றாலும், டெஸ்க்டாப்பில் இருக்கும் ஐகானை அழிக்க மறந்துவிடுவார்கள். இதுவும் டெஸ்க்டாப்பில் குவியும் ஐகான்களின் எண்ணிக்கைக்கு ஒரு காரணமாகும்.
இணையத்தில் உலாவுகையில், குறிப்பாக வேலை வாய்ப்பு தளங்களில் செல்கையில், சில தளங்கள் நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கேட்கும். இவற்றிற்கு உடனடியாகத் தகவல்களை அனுப்ப, கையாளப்படும் பைல்களை, டெஸ்க்டாப்பில் போட்டு வைப்பார்கள். பேங்க் எண் போன்ற பெர்சனல் தகவல்கள் அடங்கிய பைல், வேலை வாய்ப்பு தேடுவதற்கான ரெஸ்யூமே எனப்படும் தகவல் குறிப்புகள் கொண்ட பைல்களை டெஸ்க் டாப்பிலும் பலர் சேவ் செய்து வைக்கின்றனர். இதனாலும் டெக்ஸ்டாப், சிதறிய குப்பை கொண்ட தட்டு போல காட்சி அளிக்கும்.
இதனை எப்படி சீர் செய்திடலாம். டெஸ்க்டாப்பிலேயே சில போல்டர்களை உருவாக்கலாம். இதில் பயன்படுத்தாத ஐகான்களை Unused Icons என்ற போல்டரை உருவாக்கி போட்டு வைக்கலாம். பெர்சனல் தகவல்கள் உள்ள பைல்களை மற்றும் இன்டர்நெட் சார்ந்து இயக்கப்படும் பைல்களை, இன்டர்நெட் என்று பெயரிட்டு ஒரு போல்டரில் வைக்கலாம். அடிக்கடி, அன்றாடம் பயன்படுத்தும் பைல்களை, அப்டேட் என்ற பெயரில் ஒரு போல்டரில் வைக்கலாம். இதன் மூலம் ஐகான்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். டெஸ்க்டாப் சுத்தமாக, அழகாகக் காட்சி தருவதுடன், இந்த ஐகான்களுக்கான பைல்களைத் தேடி எடுப்பதும் விரைவாக நடைபெறும்.
ஜகான்கள் டெஸ்க்டாப்பில் குவியும் போது விண்டோஸ் இதற்கென ஒரு நினைவூட்டும் செய்தியைத் தரும். அதற்கென ஒரு மெசேஜைக் காட்டி இவற்றை எல்லாம் எடுத்துவிடவா என்று கேட்கும். நம்மில் பலர், அந்த மெசேஜை அலட்சியப் படுத்திவிடுவோம். ஏனென்றால், இந்த வேலை மிகவும் முக்கியமாக்கும் என்ற எண்ணம் தான் நம் நினைவில் ஓடும். பயன்படுத்துகிறோமோ இல்லையோ இந்த ஐகான்கள் அப்படியே இருக்கட்டுமே என விட்டுவிடுவோம். விண்டோஸ் கொடுக்கும் மெசேஜைப் பின்பற்றினால், அதுவாகவே வெகுநாட்கள் பயன்படுத்தாமல் இருக்கும் ஐகான்களை ஒவ்வொன்றாகக் காட்டி வேண்டுமா, நீக்கவா என்று கேட்டு சரி செய்திடும். மேலே சொன்ன வழிகளில் ஒன்றைப் பின்பற்றி, நம் டெஸ்க்டாப்பினைச் சுத்தமாக வைத்திருப்பது என்றும் நல்லது.


source:dinamalr


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

விண்டோஸ் - வினாக்களும் விளக்கங்கங்களும்


விண்டோஸ் இயக்கத்தில் பணியாற்றுபவர்களுக்கு, எப்போதும் ஏதாவது சந்தேகங்களும், இப்படிச் செய்தால் சரியாக வருமா என்ற வினாக்களும், ஏன் இப்படிச் செய்து பார்த்தால் என்ன என்று எதிர்பார்ப்புகளும் இருந்து கொண்டே இருக்கும்.  பல கடிதங்கள் இந்த சந்தேகங்களையும் எதிர்பார்ப்புகளையும் தாங்கி நம் அலுவலகத்திற்கு வந்துள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
1. கமாண்ட் ப்ராம்ப்ட் வண்ணத்தை மாற்றலாமா? வண்ணமயமான விண்டோஸ் சிஸ்டத்தில் டாஸ் கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைக்கும் போது, அது பழைய டாஸ் சிஸ்டம் தரும் வகையில் கருப்பு பின்னணியில், வெள்ளை எழுத்துக் களுடன் காட்சி அளிக்கும். ஏன் இப்படி? விண்டோஸ் தான் உள்ளதே, வண்ணத்தில் இது இருந்தால் என்ன என்ற வினா நம் மனதில் எழலாம். வண்ணத்தைத் தானே, தாரளமாக மாற்றலாம். 
கமாண்ட் ப்ராம்ப்ட் என்னும் கட்டளைக்குக் காத்திருக்கும் அந்த துடிக்கும் புள்ளி கிடைத்தவுடன், color  என்று கட்டளையை டைப் செய்து, ஏதேனும் இரண்டு இலக்க எண்ணைத் தரவும். எடுத்துக் காட்டாக, color 97  என்று தரவும். இப்போது வெள்ளை எழுத்துக்கள், ஊதா வண்ண பின்னணியில் இருக்கும். இந்த எண்ணை மாற்றி வேறு எண்களைக் கொடுக்க கொடுக்க, வண்ணங்கள் மாறி மாறி வருவதனைப் பார்க்கலாம். இவ்வறாக 14 வண்ணங்கள் கிடைக்கும். உங்கள் கண்களுக்கு எது பிரியமோ, அதனை வைத்துக் கொள்ளலாம். சரி, வண்ணம் வேண்டாம் என்று எண்ணினால், கட்டளைப் புள்ளியில், color  என்று டைப் செய்து என்டர் அழுத்தவும். எந்த வண்ணத்திற்கு எந்த கோட் எண் என்று அறிய color/? என டைப் செய்து என்டர் அழுத்தவும். 
கமாண்ட் ப்ராம்ப்ட் கிடைத்து, பின் இந்தக் கட்டளையைத் தர வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு கமாண்ட் ப்ராம்ப்ட் விண்டோ கிடைக்கும் போதே வண்ணத்தில் கிடைக்க, விண்டோஸ் ரன் கட்டத்தில் cmd /t:97  என டைப் செய்து என்டர் அழுத்தவும்.
2. விண்டோஸ் 7–ல் பழைய புரோகிராம்கள்: விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பலரின் சிக்கல் இது. சில பழைய புரோகிராம்கள் இதில் இயங்குவது இல்லை. குறிப்பாக வாசகர் ஒருவர் தன் பெயிண்ட் ஷாப் புரோ 6 இயங்க மறுப்பதாக எழுதி இருந்தார். இயக்க முயற்சிக்கையில் Failed to update the system Registry'  என்று  எர்ரர் மெசேஜ் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு  ரிஜிஸ்ட்ரியைத் திருத்துவது எல்லாருக்கும் உகந்த செயலாக இருக்காது. கீழே குறித்துள்ளபடி செயல்படுத்தலாம். முதலில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் மூலம் பெயிண்ட்ஷாப் புரோ 6 அல்லது திறக்க மறுக்கும் புரோகிராமின் எக்ஸிகியூடபிள் புரோகிராமினைக் கண்டறியவும். இது அநேகமாக C:\Program Files\Jasc Software Inc\Paint Shop Pro 6\   என்ற வகையில் இருக்கலாம். இதில் ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இந்த விண்டோவில் General  என்னும் டேப்பினைக் கிளிக் செய்திடவும். பின்னர் 'Run this program in compatibility mode for:'  என்று இருக்கும் இடத்தில் ஒரு டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். அடுத்து குறிப்பிட்ட புரோகிராம் எந்தவிதப் பிரச்னையும் இன்றி இயங்கும். 
3.விண்டோஸ் 7 இயக்கத் திலிருந்து எக்ஸ்பிக்கு மீண்டும் மாறலாமா?
தங்களின் எதிர்பார்ப்புக் கேற்ப விண்டோஸ் 7 இயங்கவில்லை என்ற அவசர முடிவிற்கு வந்த சிலர், மீண்டும் அதிலிருந்து எக்ஸ்பிக்கு மாறத் துடிக்கின்றனர். அதுவே நமக்குப் போதும் என்ற முடிவிற்கு வந்தவர்கள், தாராளமாக மாறிக் கொள்ளலாம்.  வழக்கமாக இந்த முடிவிற்கு வருபவர்கள், பழைய எக்ஸ்பி சிஸ்டம் சிடி மூலம் இன்ஸ்டால் செய்திட முயற்சிப்பார்கள். அப்போது  The Windows version you are trying to install is older. Setup cannot continue'   என்ற எர்ரர் செய்தி நிச்சயம் கிடைக்கும்.  எக்ஸ்பி சிடியினை ட்ரைவில் செருகிவிட்டு, கம்ப்யூட்டரைத் தொடங்குங்கள். பயாஸ் செட்டிங்ஸ் பெற்று, அதில் சிடி மூலம் கப்ம்யூட்டரை இயக்கும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுங்கள். பின்னர் தானாக, எக்ஸ்பி சிடியிலிருந்து பூட்டிங் தொடங்கும். இனி விண்டோஸ் எக்ஸ்பி எந்த பார்ட்டிஷனில் பதிந்து தொடங்க என்ற  ஆப்ஷன் கேட்கப்படும். எக்ஸ்பிக்கு சி ட்ரைவ் மற்றும் விண்டோஸ் 7க்கு டி ட்ரைவ் எனக் காட்டப்படும். இரண்டு ட்ரைவில் இருக்கும் பைல்கள் அனைத்தையும் நீக்கி, பார்ட்டிஷனையும் நீக்கிவிட்டு, புதிய பார்ட்டிஷன்களை உருவாக்கி, சி ட்ரைவில் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பதியவும். இதற்கு முன்னர், அனைத்து முக்கிய பைல்களையும் பேக் அப் செய்திருக்க வேண்டும்.
4. யு.எஸ்.பி. ட்ரைவில் அழித்த புரோகிராம்கள்: போர்ட்டபிள் பயர்பாக்ஸ் இயக்க பைல்களை, யு.எஸ்.பி. ட்ரைவில் வைத்து இயக்கிப் பார்த்த பின், அதனை நீக்கும் முயற்சியில் மற்ற பைல்களையும் அழித்து விட்டார் ஒரு வாசகர். அவற்றைத் திரும்பப் பெற முடியுமா என்று கேட்கிறார். எக்ஸ்டர்னல் ட்ரைவில் அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது. எனவே ஹார்ட் டிஸ்க்கிலிருந்து நீக்கிய பைல்களைத் திரும்பப் பெறும் வழிகளில் இந்த பைல்களை மீண்டும் பெற முடியாது.
5.படங்கள் இருக்கும் போல்டர்களை அழிக்கத் தடையா? டிஜிட்டல் கேமராக்களில் எடுக்கும் படங்களை, கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்து வைக்கிறோம். படங்களை சிடியில் காப்பி செய்த பின்னர், போல்டர்களை நீக்க முற்படுவோம்.   பைல்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும், போல்டரை அழிக்க முடியாது என்றும் செய்தி கிடைக்கும். ஆனால் போல்டரே காலியாகத்தான் இருக்கும். ஏன் இந்த தவறு ஏற்படுகிறது?
இது தவறே இல்லை. இது ஒரு எரிச்சல் தரும் சிக்கல்தான்.  ஆனால் இதனை எளிதாகச் சரி செய்துவிடலாம். போட்டோக் கள் இருக்கும் ஒரு போல்டரைத் திறக்கையில், விண்டோஸ் அவற்றை தம்ப்நெயில் என்று சொல்லப்படும் சிறிய அளவில், அவற்றைக் காட்ட முயற்சிக்கும். இவை தானாகவே உருவாக்கப்பட்டு, Thumbs.db  என்ற பெயரில் உள்ள பைலில் வைக்கப்படும். இந்த பைல் மறைக்கப் பட்டதாக போல்டரில் இருக்கும். சாதாரணமாகக் காட்டப்பட மாட்டாது. இந்த பைல் இருப்பதால் தான், போட்டோ பைல்கள் இருந்த போல்டர் காலியாக இருப்பதாக எண்ணி, நீக்க நினைத்தால், பைல் உள்ளது நீக்க முடியாது என்ற செய்தி கிடைக்கிறது. இந்த பைல் தானாகவே உருவாக்கப்பட முடியாத நிலையை ஏற்படுத் தினால், இந்த சிக்கல் தீரும்.    Tools  கிளிக் செய்து  Folder Options  செல்லவும். கிடைக்கும் விண்டோவில் View  டேப் தேர்ந்தெடுக்கவும்.  இங்கு 'Do not cache thumbnails'  என்ற வரி இருக்கும் இடத்தைத் தேர்ந் தெடுத்து, அதன் முன் உள்ள பாக்ஸில் சிறிய டிக் அடை யாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் Apply என்பதில் கிளிக் செய்து, அடுத்து  OK  கிளிக் செய்திடவும்.

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP