சமீபத்திய பதிவுகள்

மட்டக்களப்பில் காவலரண் மீது தாக்குதல் – படையினர் இருவர் படுகாயம்

>> Tuesday, March 10, 2009

 


மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் சீறீலங்காப் படையினனர் அதிரடிப் படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவினர் பதிவு இணையத்திடம் தெரிவிக்கையில்:

மட்டக்களப்பு மாவட்டம் கோப்பாவெளிக்கும் உறுகாமத்திற்கும் இடையில் அமைந்துள்ள சிறிலங்கா படையினரின் காவலரண் மீது நேற்று (திங்கட்கிழமை) இரவு 08.45 மணியளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 

இந்தத் தாக்குதலில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இருவர் படுகாயமடைந்துள்ளதாக தமிழீழ விடுதலை புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

http://www.pathivu.com/news/754/54//d,view.aspx

StumbleUpon.com Read more...

தேவிபுர ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் பலி! 1000-க்கு அதிகமான படையினர் காயம்!

 


விடுதலைப் புலிகளின் ஊடறுப்புத் தாக்குதல் ஒன்றில் 500-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை சாலைக்கு தெற்கே அமைந்துள்ள தேவிபுரத்தினுள் ஊடறுப்புத் தாக்குதலை தொடுத்த தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள் சிறீலங்காப் படையினருக்கு பலத்த ஆழணி உயிரிழப்புகளை ஏற்பட்டுத்தியுள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் 58வது படைப்பிரிவின் 3 கொம்பனிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன. கடந்த இரு நாள் நடந்த ஊடறுப்புத் தாக்குதல்களில் 500-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 1000-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர்.

ஊடறுப்புப் தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகளினால் சிறீலங்காப் படையினரின் படைக் கருவிகள் பலவும் கைப்பற்றப்பட்டுள்ளன. சிறீலங்காப் படையினரின் படைக்கருவிகளை பயன்படுத்தி கடந்த இரு நாட்களும் படையினருக்கு எதிரான தாக்குதல்களை நடத்தி, பல சதுரகிலோ மீற்றர் நிலப்பரப்புகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்ந தமிழீழ விடுதலைப் புலிகளின் அணிகள் கடந்த திங்கட்கிழமை இரவு தளம் திரும்பியுள்ளன.
 

StumbleUpon.com Read more...

மூங்கிலாறு ஆட்டிலறி ஏவுகணைத் தளம் புலிகள் வசம்! 6 ஆட்டிலறிகள் புலிகளால் அழிப்பு!

 

சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட மூங்கிலாற்றுப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணியினால் ஆட்டிலறித் தளம் ஒன்று அழிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை இரவு இப்பகுதிக்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் சிறப்பு அணி ஒன்று மூங்கிலாற்றில் அமைந்துள்ள மாவீரர் மண்டபத்திற்கு அருகில் உள்ள காணி ஒன்றினுள் அமைக்கப்பட்ட ஆட்டிலறி ஏவுகணைத் தளத்தில் இருந்த  6 ஆட்டிலறிகளைக் (122 மில்லி மீற்றர் - பற்றி ) கைப்பற்றியுள்ளனர்.

ஆட்டிலறியைக் கைப்பற்றும் நோக்கில் இடம்பெற்ற கடுமையான மோதல்களில் 25-க்கும் அதிகமான சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். ஏனையோர் காயமடைந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

ஆட்டிலறித் தளத்தில் எந்த நேரம் தாக்குதலை நடத்தத் தயாராக இருந்த 6 ஆட்டிலறிகளைக் கைப்பற்றிய தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகள், ஆட்டிலறித் தளத்தில் களஞ்சியப் படுத்திய 1000 அதிகமான எறிகணைகளை சிறீலங்காப் படையினர் இலக்குகள் நோக்கி ஏவியுள்ளனர்.

நேற்று நண்பகல் வரை இப்பகுதியில் நிலைகொண்ட விடுதலைப் புலிகள், எறிகணைகள் தீரும் வரை எறிகணைத் தாக்குதல்களை நடத்திவிட்டு, 6 ஆட்டிலறிகளையும் தகர்த்துவிட்டு, எந்தவொரு உயிரிழப்புகள் இன்றி மீண்டும் தளம் திரும்பியுள்ளனர்.

இவர்கள் ஏவிய எறிகணைகளே சிறீலங்காப் படையினரின் இலங்குகளிலும் தென்மராட்சிப் பகுதியிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. இவ் எறிகணைத் தாக்குதல்களில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளை அடுத்தே சிறீலங்காப் படையினர் இடம்பெயர்ந்த மக்கள் மீது கடுமையாக எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதில் 129 க்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 200 மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

வன்னி நிலப்பரப்பில் கடந்த சனவரி மாதம் முதல் நேற்று வரை தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு அணிகளால் கருப்பட்டமுறிப்பு, இரணைமடு, ஒட்டிசுட்டான், குமிழமுனை, மற்றும் மூங்கிலாறு பகுதிகளிலேயே 20 ஆட்டிலறிகள் தகர்கப்பட்டுள்ளன. 3 ஆட்டிலறிகள் கடுமையாகத் தேசமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் படையினருக்கான விநியோக வாகனங்களும் பலவும்தாக்கி அழிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
 

StumbleUpon.com Read more...

விடுவமடுவில் ஆட்லெறி பீரங்கித் தளம் விடுதலைப் புலிகளால் அழிப்பு

 
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள விசுவமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் ஆட்லெறி பீரங்கி தளத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
இது தொடர்பாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிப்பதாவது:
விசுவமடு பகுதியில் உள்ள தேராவில் பகுதியில் சிறிலங்கா படையினர் அண்மையில் அமைத்திருந்த ஆட்லெறி பீரங்கித் தளத்தை நேற்று முன்நாள் திங்கட்கிழமை இரவு தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணியினரும் இணைந்து தாக்கியழித்துள்ளனர்.
ஆறு ஆட்லெறி பீரங்கிகளை கைப்பற்றிய விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் அணியினரும் கேணல் கிட்டு பீரங்கி படையணியினரும் அவற்றினை அங்கிருந்து இயக்கி சிறிலங்கா படையினர் மீது செறிவான பீரங்கித் தாக்குதல்களை மறுநாள் அதிகாலை வரை நடத்திய பின்னர் அத்தளத்தினை அழித்துவிட்டு தளம் திரும்பினர்.
இதில் அப்பகுதியில் இருந்த ஆயிரக்கணக்கான எறிகணைகளும் வெடிமருந்துகளும் முற்றாக அழிக்கப்பட்டுள்ளன.
இத்தாக்குதலில் சிறிலங்கா படையினர் தரப்பில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர் என வன்னி தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 

StumbleUpon.com Read more...

தமிழர்களின் எதிர்பார்ப்பும் புலிகளின் காத்திருப்பும்: ஆய்வு

 
 
இன்று உலகத் தமிழர்கள் அனைவரினதும் ஒரே அங்கலாய்ப்பாய் இருப்பது விடுதலைப்புலிகளின் பதில்தாக்குதல் எப்போது? என்பதுதான். எம் உறவுகளை நாளாந்தம் கொன்று குவிக்கும் சிங்களத்துக்கு பதிலடி கொடுக்க துடியாய் துடிக்கிறார்கள். தினந்தினம் தமிழ் உறவுகளின் கதறல்கள், மரண ஓலங்கள்,அவலங்கள், சாவுகள்,பிணங்களைப் பார்த்துப் பார்த்து உணர்வற்று இருந்தவர்கள் கூட போராட்டங்கள், பேரணிகள் என்று எழுச்சி கொள்ளத் தொடங்கி விட்டார்கள்.

இந்த எழுச்சியுணர்வையுந்தாண்டி அவர்களுக்குள் ஒரு வெறி உருவாகி வருவதை யாருமே உணரவில்லை. ஏன் அவர்கள் கூட அதை உணர்ந்திருப்பார்களா? என்பது சந்தேகமே!

ஏனெனில், இதுவரைகாலமும் இருந்ததைவிட இப்பொழுது இலங்கையில் கொலை வெறிபிடித்த மகிந்த ராஜபக்ஸ அரசாங்கம் வெளிப்படையாகவும் பல இடங்களில் மறைமுகமாகவும் ஒரு இனப்படுகொலையையே நடாத்திக் கொண்டிருக்கின்றது. இதை கட்டுப்படுத்துவதற்கோ அல்லது சற்று மட்டுப்படுத்துவதற்கோ எந்தவொரு சர்வதேச நாடும் முன்வரவில்லை. எதிர்மாறாக, பலநாடுகள் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்று சொல்லிக்கொண்டு மகிந்த அரசு நடத்தும் கொலைவெறிப் போருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றதோடு தோளோடு தோள் கொடுப்பதாய் ஆயுத,பண,படைபல உதவிகளை தாராளமாய் வழங்கிக் கொண்டிருக்கின்றன. தட்டிக் கேட்க வேண்டிய நாடுகள்கூட தமிழரை தனியாய் தவிக்கவிட்டுவிட்டன. ஒரு இனமே அழிவின் விளிம்பில் நிற்கின்றது. துக்கம் விசாரிக்கக்கூட ஒரு துணையில்லை.

இவற்றிற்கிடையில் ஒரேயொரு ஆறுதல் தமிழக மக்கள் உள்ளிட்ட உலகத்தமிழர்களின் பேரெழுச்சிமிக்க ஆதரவுதான் தமிழகத்தில் முத்துக்குமாரின் தியாகத்துடன் அது இன்னும் அதிகமாகி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏன் சாதரண மக்கள்கூட பேரெழுச்சியுடன் ஈழத்தமிழர்களுக்காக தங்களின் ஆதரவுக்குரலை மிக வீரியத்துடன் எழுப்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனாலும் இந்த எழுச்சிகளுக்கெல்லாம் தான்தோன்றித்தனமாக நடந்துவரும் இலங்கையரசு அடிபணியாது என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆயினும் ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுக்க ஏழுகோடி தமிழகத் தமிழர்களும், உலகத் தமிழர்களும் இருக்கிறார்கள் என உணர்த்துவதற்கு வேண்டுமானால் அவை உதவலாம். மொத்தத்தில், புலம் பெயர் தமிழர்கள், தமிழகத் தமிழர்கள் என அனைவரும் எழுச்சி பெற்று ஒரே குரலில், வன்னியில் அவலப்படும் மக்களுக்காகவும், தமிழகத் தீர்வுக்காகவும் குரல்வளை வலிக்க குரலெழுப்பியும் அது யார் செவியிலும் விழவில்லை. அது அனைத்துத் தமிழர்க்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தினைக் கொடுத்திருந்தது.

எழுச்சிக் கோரிக்கைளை எழுப்பி எழுப்பி களைத்துப்போய் அந்த எழுச்சிக் குரல்களின் இயலாமை இன்று தமிழர் மனதில் ஒரு வெறியாகத் தோற்றம் பெற்று நிற்கின்றது. சிங்கள அரசின் வெற்றிப் பரப்புரைகளினால் தமிழர் படை தோற்றுப் போய்விடும் என்றொரு மாயத் தோற்றப்பாடு உருவாக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தமிழன் தோற்றுப் போகக்கூடாது; தமிழன் தோற்றுப் போனால் தமிழனின் எதிர்கால வரலாறு "அடிமை வரலாறு" ஆகவே எழுதப்படும்;

எனவே இது நடக்காமல் தடுக்க தமிழர்களின் காவலர்களான புலி மறவர்களின் பின்னால் அணி திரள்வது: தமிழர்களுக்காக போராடும் புலிகளை சர்வதேச ரீதியிலும் பலப்படுத்துவது மற்றும் சகலவழிகளிலும் அவர்களுக்கு உதவுவது, என்னவானாலும் பரவாயில்லை... இதுவொன்றுதான் தமிழன் வெற்றிபெற ஒரேவழி. இதற்காக தன்மானமிக்க தமிழனாய் இயன்றவரை போராடவேண்டும். அவ்வாறு செய்தால் நானும் ஒரு விடுதலைப் போராளிதான் என்ற எண்ணமும் என் தேசத்திற்காக அதன் விடுதலைக்காக எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறியும் ஒவ்வொரு உண்மைத் தமிழனின் மனதினுள்ளும் உருவாகிவிட்டது.

இப்பொழுது அனைத்துத் தமிழரினதும் நிலைப்பாடும் எதிர்பார்ப்பும் அவர்கள் மத்தியில் எழும் சந்தேகங்களும் பலவழிகளில் அறியப்படும் போர்ச் செய்திகளும் அனைவரையும் ரொம்பவே குழப்பிவிட்டிருக்கிறது. ஆனால் யதார்த்தம் என்ன? இப்போது நடந்து கொண்டிருப்பது இறுதிப்போர். இறுதிப்போரில் தமிழன் தனியாய் நின்று போராடிக் கொண்டிருக்கின்றான். இந்த யுத்தத்தில் வெற்றியடைந்தால்தான் தமிழனுக்கு வாழ்வும் வரலாறும். இல்லையேல்... "அகதி" என்ற பெயரோடு "அடிமை" என்ற பெயரையும் தமிழன் தனதாக்க நேரிடும்.

உலகமே சிங்கள அரசின் பக்கமாக அணிதிரண்டு நிற்க, தமிழர்படை தனித்து தன்மானத்தோடு, உறுதியோடும். தீரத்தோடும் எதிர்த்து நிற்கின்றது. வாழ்வா? அல்லது சாவா? என்ற நிலைப்பாட்டுடனான இ;ந்த இறுதியுத்தத்தின் யாதார்த்த நிலைமைகள் என்ன? அதன் பரிமாணங்கள் என்ன? என சற்று ஆராயலாம்.

'இப்போரானது வன்னி நிலப்பரப்புக்குள் மட்டுமே நடக்கிறது" என யார் கூறினாலும், அது அவர்களின் அறியாமையே! இப்போரானது இன்று பல பரிமாணங்களில் உலகமெங்கும் வியாபித்து நிற்கின்றது. "தமிழீழப் போராளிகள்" இப்போது புலிகள் மட்டுமல்ல. ஒவ்வொரு தமிழனும், புலம் பெயர்தேசங்களிலுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழனும் தமிழீழப் போராளியாக உருவாகி நிற்கின்றான். சர்வதேசத்தின் காதுகிழியக் கத்திக் கொண்டிருந்தவன், இன்று அதன் கழுத்தைப் பிடித்துக் கேட்கும் தூரத்திற்கு வந்துவிட்டான்.

சர்வதேசம் நமக்கு நீதித்தீர்வினை தந்தாகவேண்டும்! என்ற நிலைமையை உருவாக்க முனைந்துகொண்டிருக்கிறான். உருவாக்கியே ஆகவேண்டும். இதுதான் இன்றைய நிலைமையில்,போராளியாக உருமாறி நிற்கின்ற ஒவ்வொரு தமிழனினதும் கடமை. இது இவர்களின் கடமையென்றால், ஈழத்தில் புலிகள் தற்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? என்ற கேள்வி அனைவர் மனத்திலும் எழுகிறது.

"தமிழீழ விடுதலைப் புலிகள்" என்ற அமைப்பின் கடந்தகால வரலாறுகள்... அவர்களின் திறமையையும், விவேகத்துடன் கூடிய வீரத்தினையும், மன உறுதியையும் கொள்கை தவறாத உளவுரத்தையும் நன்கே பறைசாற்றும். புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து முழு உலகமுமே அதிர்ச்சியில் உறைந்துபோய் வியந்துநிற்கின்றது. அந்த வழியில் இறுதியாக கொடுத்த அதிர்ச்சி மருந்துதான், அண்மையில் கொழும்பில் நடாத்திக் காட்டப்பட்ட வான் கரும்புலித்தாக்குதல், வான்கரும்புலிகள் விடுதலைப்புலிகளின் பலத்தினை ஒருபடியல்ல பலபடிகள் மேலே உயர்த்தியிருக்கிறார்கள்.

இன்னும்பல அதிர்ச்சிகள் காத்துக்கிடக்கின்றன. இவற்றையும் மீறி புலிகள் பலமிழந்து விட்டார்களா? என கேள்வி எழுப்புவர்களும் இருக்கிறார்கள.; அவர்கள் நினைப்பதுபோல உண்மையிலேயே புலிகள் பலமிழந்து விட்டார்களா? (!) என பார்ப்பின்… இன்று புதுக்குடியிருப்பு வாசல்வரை வந்து நிற்கின்றது சிங்கள இராணுவம். இராணுவ நடவடிக்கை கிழக்கில் ஆரம்பித்ததிலிருந்து இப்பொழுது புதுக்குடியிருப்புவரை புலிகள் நிலத்தினை மட்டும்தான் இழந்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய போராளிகளையும் ஆயுததளபாடங்களையும் அதிக இழப்புக்களின்றி நாம் திட்டமிட்டபடி பாதுகாப்பாக நகர்த்தியிருக்கின்றார்கள். புலிகளின்

பலம் அப்படியே பேணப்பட்டது மட்டுமன்றி ஓரிடத்தில் மையப்படுத்தப்பட்டு தற்பொழுது மிகவும் செறிவாக்கப்பட்டிருக்கிறது. இவ்வளவு காலமும் பரந்து விரிந்து கிடந்த புலிகளின் பலங்கள் இப்போது இறுதிப்போர் நடக்கப்போகும் இடத்தில் செறிவாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதுவே உண்மை.
இந்நிலையில் புலிகளின் பின்வாங்கல் கிளிநொச்சியுடன் நின்றுவிடும் என்றுதான் அநேகர் நினைத்திருந்தனர். ஆனாலும் அதற்கு எதிர்மாறாக புலிகள் தங்களின் கோட்டையான முல்லைத்தீவு வரையும் இராணுவத்தினை முன்னேற அனுமதித்தது... அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பல இராணுவ ஆய்வாளர்கள் கூட தங்கள் தலைகளை பிய்க்கத் தொடங்கிவிட்டனர். 'ஏன் புலிகள் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள்?;" என்பது அனைவரிற்கும் புரியாத புதிராகவே இற்றைவரை உள்ளது.

விடுதலைப்புலிகள் முற்றிலும் வித்தியாசமானவர்கள்... அவர்களின் திட்டமிடல் மற்றும் போர்த்தந்திரங்கள் வித்தியாசமானதாக இருக்கும்... யாரும் இலகுவாய் ஊகிக்கக்கூடிய விடயங்களை அவர்கள் செய்யமாட்டார்கள்... எதிர்பார்க்காத ஒன்றினை எதிர்பாராத தருணத்தில் செய்வார்கள்... அது அவர்களின் தனிப்பாணி. இது புலிகளை பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம்.

புலிகள் ஏன் காத்திருக்கிறார்கள்? அவர்கள் எதை எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்த்திருக்கும் தருணம் எது? எப்பொழுது அவர்களின் முழு அளவிலான பதில்த்தாக்குதல் ஆரம்பமாகும்? அவற்றின் விளைவுகள் என்னவாக இருக்கும்? இன்று இக்கேள்விகளுக்கான விடைகளைத்தான் அனைத்துத் தமிழர்களும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இதைப்பற்றி கொஞ்சம் பார்க்கலாம்...

இன்று உலக நாடுகளில் பெரும்பாலானவை, இலங்கை அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கிக் கொண்டு நிற்கின்றன. புலிகள் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என புராணம் பாடிக்கொண்டு நிற்கின்றன. ஐ.நா சபை கூட இதற்கு விதிவிலக்கல்ல இன்னும் சில நாடுகளுக்கு புலிகளின் அபரிதமான வளர்ச்சியினைப் பார்த்து வியந்துபோய், இது தொடர்ந்தால் என்னவாகும் என்ற பயம் உருவாகிவிட்டது. எதிர்காலத் தமிழீழ தனியரசு பற்றி நினைப்பே, அவர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறது போலும்! அதனைத் தடுப்பதற்காக இச்சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தி புலிகளை முற்று முழுதாக ஒழித்துக் கட்டலாம,; அதன்மூலம் தமிழீழம் என்கிற தனிநாடு உருவாவதை தவிர்க்கலாம் என்ற கனவில் இலங்கை அரசிற்கு சகல வழிகளிலும் முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

ஆனால் புலிகள் தனித்தே நிற்கின்றார்கள். அவர்களுக்கான ஒரேயொரு ஆதரவு உலகம் பூராவும் பரவிவாழும் தமிழ் மக்கள்தான் மட்டும்தான். ஆதலால்தான் புலிகள் தங்களது முதற்கட்ட காய்நகர்த்தல் நடவடிக்கையாக 'உலகத்தமிழ் மக்களைக்கொண்டு சர்வதேசம் நோக்கிய வேண்டுகோள்" என்ற ரீதியான காய்நகர்த்தலை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இதற்காக வன்னிமக்கள் படும் பேரவலங்களை உலகறிய வெளிக்கொணர்ந்தார்கள.; அவற்றைக்கண்டு பொங்கியெழுந்த தமிழினம் சர்வதேசத்தினை தட்டிக் கேட்கத் தொடங்கியது. இதன் ஆரம்பத்தில் சர்வதேசத்தால் அவை கண்டும் காணாமல், கேட்டும் கேளாமல் விடப்பட்டன.

ஐ.நா.சபை உள்ளிட்ட அனைத்து நாடுகளும் மௌனம் சாதித்தன. ஆனாலும் கொதித்தெழுந்த தமிழ்மக்கள் இடைவிடாமல் போராடத் தொடங்கினார்கள். தீக்குளிக்கும் அளவுக்கு தியாக உணர்வும் துணிவும் கொண்டார்கள். இதை பார்த்து சர்வதேசம் சம்பிரதாயத்திற்கு ஓரிரெண்டு கோரிக்கைகளை 'யுத்த நிறுத்தம் செய்யலாமே!" என்ற மாதிரிக்கு இலங்கை அரசை நோக்கித் தெரிவித்தது. ஆனால் இலங்கையின் மகிந்தராஜபக்ஸ தலைமையிலான தான்தோன்றித்தனமான அரசு தனது காட்டமான எதிர்ப்பு மற்றும் அவர்களின் கோரிக்கை நிராகரிப்பு அறிக்கைகளை கூறி அந்தந்த நாடுகளையும், ஐ.நாவையும் முகங்கோண வைத்திருக்கின்றது.

இதன் எதிர்விளைவுகள் நமக்கு சாதகமாக அமைந்தால் அது புலிகளின் முதற்காய்நகர்ந்தலுக்கான வெற்றி என்றுதான் பொருள்படும.; மறுவளமாக அதன் பாதிப்புகளை சிங்கள அரசு அனுபவிக்கவும் நிர்ப்பந்திக்கப்படும். அத்தோடு முக்கியமாக, பலர் சொல்வதனைப்போல அமெரிக்காவின் ஓபாமா அரசின் பரிவான பார்வைக்காகவும். இந்தியாவில் மே மாதத்தில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலினால் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிச்சயமில்லாத ஆட்சிமாற்றத்திற்காகவும் புலிகள் காத்திருக்க மாட்டார்கள் என்பது திண்ணம். புலிகள் தங்களது திட்டப்படி தங்களது தந்திரபாயமான கால்நகர்த்தலினாலும் உலகத்தமிழர்களினது உணர்வெழுச்சியினாலும் சர்வதேச நாடுகளை தம்பால் திசை திருப்பவே முயலுவார்கள்.

உலகம் பூராவும் மக்களின் பேரெழுச்சி தொடர்வதையே அவர்கள் விரும்புகிறார்கள். ஏனெனில் களத்தில் ஈட்டப்படும் வெற்றிகளைவிட புலத்தில் ஏற்படும் பேரெழுச்சிகளால் மிகவும் சாதகமான விளைவுகளைப் பெறலாம் என்பதை புலிகள் நன்கு உணர்ந்து வைத்திருக்கிறார்கள். இச்சாதகமான விளைவுகளை பெற்றேயாக வேண்டும் என்ற காரணத்தினால்தான் புலிகள் தாங்கள் அண்மையில் பெற்ற இருபெரு வெற்றிகளைப்பற்றி எந்தத் தகவல்களையும் வெளியிடவில்லை. அவற்றில் ஒன்று கல்மடுக்குளம் உடைப்புத் தாக்குதல், மற்றையது புதுக்குடியிருப்புத் தாக்குதல் இவ்விரண்டு சண்டைகளிலுமே சிங்கள இராணுவம் மிகபபெரும் இழப்புகளை சந்தித்ததோடு ஆயுத தளவாடங்களையும் பெருமளவில் இழந்திருந்தது.

இவ்வெற்றிச் செய்திகளினை வெளியிடுவதினால் உலகத் தமிழரின் பேரெழுச்சி மற்றும் வன்னி மக்களுக்கான குரல்கள் அடங்கிவிடக்கூடாது என்பதானலேயே மிகவும் புத்திசாலித்தனமாக அச்செய்திகளை வெளியிடுவதனை தவிர்த்திருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில், புலிகள் அதற்கான நற்பலன்களை அனுபவிக்க தொடங்கிவிட்டார்கள் என்றே கருத வேண்டும். உலகத்தின் பார்வை ஈழத்தின்மேல் நோக்கத் தொடங்கியிருக்கின்றது. இதன்வழியில் இலங்கையரசின் வெற்றிப்பரப்புரைகளைத் தாண்டி சில நாடுகள் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை கொடுக்கத் தொடங்கியுள்ளன. இது உலகத் தமிழருக்கும் புலிகளுக்கும் கிடைக்கத் தொடங்கயுள்ள வெற்றி என்றே சொல்லலாம். இவ்வெற்றிகள் இன்னும் தொடரும் என்பது உலகத் தமிழரின் கைகளிலேயே தங்கியுள்ளது.

இனி... புலிகள் நிறைவுறச்செய்யும் தறுவாயில் கொண்டு வந்திருக்கும் மற்றொரு காய்நகர்த்தல் என்ன என்பதைப்பற்றியும் அதன் பலாபலன்கள் எப்படியிருக்கும் என்பதைப்பற்றியும் பார்க்கலாம்...

முன்னேறிவரும் இராணுவத்தினை அதன் கட்டமைப்புரீதியாகவும் படையினரின் உளவுரண்ரீதியாகவும் இயன்றவரை பலவீனப்படுத்துவதென்பதே அக்காய்நகர்த்தலின் தந்திரோபாயதத்தின் முதன்மை நோக்கமாக இருந்தது. அதாவது தம்மை நோக்கி முன்னேறி வரும் எதிரியை வரும்வழியிலேயே முடிந்தவரைக்கும் இழப்புகளை ஏற்படுத்தி பலவீனப்படுத்தி தம் வாசல்வரை வரவைப்பது. தாம் திருப்பித் தாக்கத் தொடங்கும்போது அவனால் திருப்பி ஓடக்கூட முடியாமல் திணறும்போது எதிரியை ஒட்டு மொத்தமாக அழிப்பது என்பதுவே அதன் திட்டம். இப்பொழுது அத்திட்டம் ஈடேறிவரும் நிலையில்...
இந்த மிகமுக்கியமான தருணத்திற்காகத்தான் புலிகள் எதிரியை தங்கள் வாசல்வரை வரும்வரைக்கும் அனுமதித்து இதுவரை பின் வாங்கியிருக்கின்றார்கள்.

இலங்கை அரசும், இராணுவமும் சொல்வதனைப் போலல்லாது, உண்மையிலேயே சிங்கள இராணுவம் மிகவும் பலமிழந்து, ஆளணியிழந்து, களைப்படைந்து உளவுறுதியில்லாமல் மிகவும் சோர்வடைந்து வந்து நிற்கிறது. வாசல்வரை வந்துவிட்டோம்... கொஞ்சம் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற நப்பாசையில்தான் இராணுவம் இருக்கின்றது. ஆனால் புலிகளோ...! பாதுகாப்பாக பதுங்கி வந்தவர்கள் இப்பொழுது எதிரிமீது பாய்வதற்குத் தயாராகிவிட்டார்கள். புலிகள் பாயவேண்டிய தருணம் மிகமிக நெருங்கிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆயினும் அவர்கள் பாய்வது உலகத் தமிழரினது எழுச்சியில்தான் தங்கியுள்ளது என்பதனை உலகத் தமிழர்களாகிய நாம் கருத்தில் கொள்ளவேண்டியது மிக மிக அவசியம். ஏனெனில்....

புலிகள் களத்தில் தமது பலத்தினை நிரூபிக்கும்பொழுது அதற்கு உலகநாடுகளை தலைவணங்கவைத்து எமது இறுதி மீட்புப்போரின் வெற்றியால், 'தமிழீழம்" எனும் தனிநாடு உருவாவதனை உறுதிசெய்யவேண்டிய பொறுப்பு புலத்தில் வாழும் உலகத்தமிழர்களான எங்களின் தலையாய கடமை. இது சர்வதேசத்தினை நோக்கியதான எங்களனைவரினதும் ஒன்றுதிரண்ட பேரெழுச்சியிலேயே தங்கியுள்ளது. புலிகள் உண்மையிலேயே காத்திருப்பது உலகத்தமிழர் அனைவரினதும் ஒன்று திரண்ட பெரெழுச்சிக்காகத்தான். எங்களது எழுச்சிகளும் போராட்டங்களும்தான் பெருமாற்றங்களை கொண்டு வரப்போகிறது. ஆதலினால்... எமது எழுச்சிகளையும் போராட்டங்களையும் ஓயாத அலைகாளாய் ஓய விடாமல் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும்...! எம் தேசத்தின் விடிவுவரை.......!
புலிகள் தமது பதில்தாக்குததலை ஆரம்பிக்கும்பட்சத்தில் அதன் தீவிரம் எந்தளவுக்கு இருக்கும் என பார்ப்போமானால்,

ஏற்கனவே பல இடங்களில் அடிவாங்கி சோர்ந்துபோன நிலையில் புலிகளின்வாயிலில் வந்து நிற்கின்றது இராணுவம். அது இப்போது புலியின் வாயில் வந்து நிற்கின்றது என்று சொன்னால் சாலப்பொருந்தும். புலிகளிடமுள்ள ஆளணி எண்ணிக்கையை யாருமே அறியமாட்டார்கள். ஆனாலும் கடந்தகால தரவுகளின்படி ஆகக்குறைந்தது இருபத்திஜயாயிரம் போராளிகளாவது இருப்பார்கள் என ஊகத்தின் அடிப்படையில் கணிக்கலாம். அத்துடன் வன்னியில் இப்பொழுதிருக்கும் ஏற்கனவே ஆயுதப்பயிற்சிபெற்ற 'மக்களணிகள்" அங்கு நடந்தேறும் கொடூரமான அவலங்களைக் கண்ணுற்று உணர்வெழுச்சிகொண்டு தற்பொழுது புலிகளாகவே மாறியிருக்கிறார்கள். புலிகளுடன் சேர்ந்த அம்மக்களனைவரும் சேர்ந்து தீரமுடன் பொங்கியெழுந்து... புலிகளிடமுள்ள அத்தனை ஆயுதங்களும் குண்டுகளை கக்கும்போது... முன்னரங்கில் குவிக்கப்பட்டிருக்கும் இராணுவத்தின் நிலை என்னவாகும் என்பதை சொல்லத்தேவையில்லை. ஓர்மமும் தியாக உணர்வுங்கொண்ட தீரமிக்க போராளிகளின் தாக்குதல்களுக்குமுன்னால் சம்பளத்திற்காகச்சேர்ந்த கூலிப்படைகளான சிங்களப்படைகள் எந்தளவுக்கு தாக்குப்பிடிக்கும் என்பதையும் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டியதில்லை.

இராணுவத்தின் ஆளணிப்பற்றாக்குறை காரணமாக, அதனால் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட பிரதேசங்கள்யாவும் மிகமிகக் குறைந்தளவிலான ஆளணிகளினாலேயே பாதுகாக்கப்பட்டுவருகிறது. அவர்களும் ஓடத்தொடங்கி தாங்கள் போரைத்தொடக்கிய இடத்தினை தொடுவதற்குள், முன்னரங்கை உடைத்து உள்நுழையும் புலிகள் அணியினாலும், ஏற்கனவே ஊடுருவியுள்ள புலிகளணியினராலும் அழிக்கப்படப்போவதனை யாராலும் தடுக்கமுடியாததாகிவிடும்.மீளமுடியாத இழப்புக்குள் அடங்கிப்போகும் இராணுவத்தினால் மீள எதுவுமே செய்யமுடியாது செயலிழந்து போகும். அதன் கட்டமைப்பு முற்றுமுழுதாக சிதைக்கப்படும். அதற்கு அப்புறம் இலங்கையரசினால் இன்னுமொரு இராணுவ நடவடிக்கையினை மனதளவினில்கூட நினைத்துப்பார்க்க முடியாததாகிவிடும். இதனை செய்வதற்காகத்தான் புலிகள் மிகவும் பொறுமையுடன் தருணம்பார்த்து காத்திருக்கிறார்கள். அனைத்துத் தமிழ்மக்களும் அந்த இறுதிமீட்புப்போர் எப்பொழுதென்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

உலகத்தமிழ்மக்களே! உச்சக்கட்டத்திற்கு செல்லும் உங்களது ஓயாத பேரெழுச்சிதான் அந்த மீட்புப்போரை ஆரம்பித்துவைக்கும். அதை வெற்றப்பாதைக்கும் இட்டுச்செல்லும். புலிகள் காத்திருந்த காலம்போய்... இப்பொழுது எதிர்பார்த்திருக்கிறார்கள் பாய்வதற்கு. தொடக்கிவைப்பதும் வெற்றிகரமாக முடித்துவைப்பதும் உங்கள் கைகளில்தான். எனவே... ஓயவிடாதீர்கள் உங்கள் பேரெழுச்சியை. தமிழ்படையாம் நம் புலிப்படையின் தீரமிகு பாய்ச்சலினாலும் உலகத்தமிழர் நம்மனைவரினதும் வீறுகொண்ட பேரெழுச்சியினாலும் சிங்களத்தின் வெற்றிக்கனவை தகர்த்தெறிந்து வெற்றியை எமதாக்கி இழந்த நம் நிலங்களை மீட்டெடுத்து தமிழீழ தேசத்தினை உருவாக்குவோம். எம் மாவீரர்களின் கனவை நனவாக்குவோம். இது உறுதி!

பருத்தியன்

http://www.tamilwin.com/view.php?2a26QVZ4b33Z9Eg04dcuWnZdb0eD7GG24d2YYpD3e0dLZLuwce03g2hF2cc4Vj06ae

StumbleUpon.com Read more...

தாயகச்செய்திLஇரவு செய்தி காணொளியில் 10/3/09

StumbleUpon.com Read more...

கிளிநொச்சியில் விடுதலைப் புலிகள் பீரங்கி தளத்தை கைப்பற்றி தாக்குதல் நடத்தியுள்ளனர்: கொழும்பு இணையத்தளம்

 
 
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றி அதனைக்கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர்.
விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவது டிவிசன் படையணி உள்ளது.
படையினரின் பிரதேசத்திற்குள் 12 கிலோ மீற்றர் தூரம் வரை ஊடுருவிய விடுதலைப் புலிகளின் அணிகள் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த பீரங்கி தளத்தை கைப்பற்றியுள்ளனர். அங்கிருந்த 130 மி.மீ பீரங்கிகள் மூன்றை கைப்பற்றி அதனைக்கொண்டும் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை மட்டும் நடைபெற்ற மோதல்களில் 200 படையினர் களமுனைகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

பளை, கிளாலி இராணுவ நிலைகள் நோக்கி புலிகள் ஆடடிலெறி தாக்குதல் - படைதரப்பு அதிர்ச்சியில்

 
 
யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 
ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.

 
விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.

 
ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாக  கூறப்படுகின்றது.

 
விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

 
முன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.

 
ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவசத்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.

 
இந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்றும் விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து நீண்ட தூரம் ஆட்டிலெறித் தாக்கதலை நடத்துவது எவ்வாறு என்று குழப்பத்திலும்  சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
 

StumbleUpon.com Read more...

புலிகளின் வீரமும்,வன்னி சண்டையும் காணொளி

StumbleUpon.com Read more...

DEEPAM செய்திகள். காணொளியில்(10.3.09)

StumbleUpon.com Read more...

கடந்த இரு மாதங்களில் 2867 பேர் வன்னியில் கொல்லப்படிருப்பதாக புலிகள் அறிவித்துள்ளனர்

 
2009ம் ஆண்டின் தொடக்கம் முதல் இன்று 10.03.2009 வரை சுமார் 2867 பேர் இறந்துள்ளதாகவும்,நேற்றைய தினம் மட்டும் 18 சிறுவர்கள் இறந்திருப்பதாகவும் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.

இத் தாக்குதலில் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் புதுமத்தளான் பகுதிமீது இலங்கை இராணுவம் ஏவிய எறிகணை ஒன்று வெடிக்காத நிலையில் வந்து வீழ்ந்ததில் மூவர் மரணித்ததாகவும் அதில் ஒருவர் மீது எறிகணை வீழ்ந்ததில் அவர் உடல் இரு கூறாக பிளவடைந்து பரிதாபமாக இறந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இராணுவத்தால் ஏவப்படும் ஆட்டிலறி வகை ஏறிகணைகள் பல வெடிக்காத நிலையிலும் கூட அவை உயிராபத்தை தோற்றுவிப்பதாக கூறப்படுகிறது. இன்றைய தினம்(10.03.2009) அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை இராணுவம் மீண்டும் கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்துள்ள நிலையில், பல மாதக்கணக்காக மக்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்க்கை நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தற்போது ஏற்பட்டிருக்கும் பருவமழை காரணமாக பதுங்கு குழிகளிலும் நீர் உட்புகுந்துள்ள போதும், மக்கள் கை கால்கள் நீரினால் விறைப்படைந்த நிலையிலும் பதுங்கு குழிகளுக்குள் இருப்பதாக விடுதலைப் புலிகளின் நிர்வாக சேவைப்பிரிவு தெரிவித்துள்ளது.
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

யேர்மனியில் சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு

 
 
ஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது.
யேர்மனி றைனெ வெற்றிங்கன் நகரில் வாழும் சைவ - கத்தோலிக்க தமிழ் மக்கள் இணைந்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (08.03.2009) காலை 10:00 மணியளவில் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர்.
முதலில் இறைனீச்சுரம் சிவன் கோவிலில் சைவ சமய வழிபாட்டு முறைகளுடன் தமிழ்மொழி மூலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை பூசகர் சபாநாத சர்மா சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினார்.
இந்த இறைனீச்சுரம் சிவன் கோவில் தாயகத்தில் வயல் வெளிகளின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள சைவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக இருந்தது.
இக்கோயிலில் தமிழ்மொழி மூலம் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வழிபாடுகள் நடைபெறுவதுடன் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, அதே கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்திரு இமானுவேல் அடிகளாருடன், தமிழகத்தைச் சேர்ந்த தற்போது பெல்ஜியத்தில் பணிபுரியும் அருட்திரு ஜீவா லூர்துவும் இணைந்து இலங்கைத் தீவில் சமாதானம் வேண்டியும், தீயில் சங்கமித்தோருக்கான ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் பிரார்த்தனை செய்தனர்.
ஏறத்தாழ 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் உரையாற்றிய இமானுவேல் அடிகளார் இறை வழிபாட்டுடன் நின்று விடாமல் விடுதலைப் பயணத்தின் நீண்ட பாதையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர்
கேட்டுக்கொண்டார்.
"போதும் சகோதரரே உங்கள் தற்கொடை. திருப்பித்தர எம்மிடம் ஒன்றுமில்லை எம் பிரார்த்தனையைத்தவிர" என்பதாக அமைந்திருந்தது இந்நிகழ்வு.

 

http://www.puthinam.com/full.php?2a27WRA4b331aIe04dcpOs3db0eI7CI34d3KVqH3e0dLYOrzce03f6d12cc4Uk06be

StumbleUpon.com Read more...

படையினரின் பகுதிகளுக்குள் இன்று அதிகாலையும் புலிகள் ஊடுருவித் தாக்குதல்

 
 
99caudiw8ocatprt9acaamnu9icaa4eu7ccaym61mnca61hmsdcae8l9pjca7szg27ca0435rmca1pa6wyca01bp35camcv0vhcaggsig4cayz2ut7cawa7j7icah77tfvcan9om4b1விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் எனக் கூறப்பட்ட புதுக்குடியிருப்புப் பகுதிகளில் அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட பகுதிகள் மீது இன்று அதிகாலை முதல் விடுதலைப் புலிகள் ஊடுருவித் தாக்குதல் ஒன்றை நடத்தியதாகத் தெரியவருகிறது. இத்தாக்குதல் நடவடிக்கையில் விடுதலைப் புலிகளின் விசேட படையணிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக படைத் தரப்புடன் தொடர்புடைய வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.
இந்த ஊடுருவித் தாக்குதல்களை நடத்திய புலிகளின் படைப்பிரிவுகள் மீண்டும் திரும்பியிருக்கவில்லை எனவும் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதிகளுக்கு நீண்டதூரம் ஊடுருவிச் சென்றிருக்கலாம் எனவும் படைத்தரப்பு அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
 
இந்த மோதல்களின் போது விடுதலைப் புலிகள் ஒரு தொகுதியினரின் சடலங்களை தாம் கைப்பற்றியிருப்பதாகவும் படையதிகாரிகள் தரப்பில் இருந்து தெரிவிக்கப்படுகிறது. இந்த சடலங்களின் எண்ணிக்கை 80 வரையில் இருக்கலாம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
 
பதிலுக்கு படைத்தரப்பும் கணிசமான அளவில் இழப்புக்களைச் சந்தித்திருப்பதாக தெரியவருகிறது. அண்மையில் புதுக்குடியிருப்புச் சந்திவரையிலான பகுதிகளை பெரும் முயற்சியின் பின் படையினர் கைப்பற்றி இருந்தனர். விசுவமடுவில் இருந்து புதுக்குடியிருப்பு வரையில் படையினர் கைப்பற்றி இருந்த பகுதிகளுடாகவே ஊடுருவித் தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
 
ஏற்கனவே விஸ்வமடுப் பகுதியில் மோதல்கள் இடம்பெற்றனை படைத்தரப்பு உறுதிப்படுத்தி இருந்தது.
 
எனினும் இந்த மோதல்களில் 150 வரையிலான சடலங்களை தாம் மீட்டதாக படைத்தரப்பினர் தெரிவித்திருப்பதோடு பாதுகாப்பு அமைச்சின் இணையத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் சிலவற்றின் படங்களை பிரசுரித்தும் உள்ளனர்.
 
இந்த நிலையில் முன்னோக்கிச் செல்லும் படையினரை ஊடறுத்து தாக்கும் புலிகளின் அணிகளில் கொல்லப்படுபவர்கள் தவர்ந்த ஏனையோர் படையினர் கைப்பற்றி தமது நிலைகளை உறுதிப்படுத்திய பகுதிகளுக்குள் ஆழ ஊடுருவிச் செல்வதாக படைத்தரப்பில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
 
அதனால் தற்போது படையினரின் முன்னேறித் தாக்குதல் தந்திரோபாயத்தில் மாற்றங்களை ஏற்படுத்த நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளதுடன் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் புலிகளை எதிர் கொள்ள சில அடுக்கு படையணிகளை பின்நோக்கி நகர்த்தும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளதாகவும் படைத்தரப்பில் இருந்து தெரியவருகிறது.

http://www.nerudal.com/nerudal.1585.html

StumbleUpon.com Read more...

தினமலர்;இலங்கையில் வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது விடுதலை புலிகளா?


இலங்கையில் இன்று காலை மசூதி அருகே குண்டு வெடித்ததில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். மூன்று அமைச்சர்கள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.இந்த செய்தி இன்று அநேக இணையதளங்களில் இடம்பெற்றுள்ளது.
 
ஆனால் தினமலர் பத்திரிக்கை மட்டும் இது விடுதலைப்புலிகள் நடத்தியது என்று செய்திவெளியிட்டு உள்ளது.இன்னும் புலிகள் இதை பற்றி தகவல் எதுவும் வெளியிடாத நிலையில் இதுவும் இலங்கை அரசே செய்து புலிகளின் மீது பழி போடுவதாகவே பொய் பரப்புரை நடத்துவதாகவும் இருக்க முடியும்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP