தமிழீழ கோப்பைக்கான கால்பந்தாட்ட போட்டி அமேரிக்காவில் தொடங்கப்பட உள்ளது
>> Friday, September 4, 2009
வடஅமெரிக்கா கண்டத்தில் முதன் முறையாக கனடியத் தமிழ் இளையோர் ஒன்றியத்தினால் கனடியத் தமிழர் விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ம் திகதி ரொறன்ரோ மாநகரில் அமைந்துள்ள L'Amoreaux Sports Complex இனில் இச் சுற்றுப் போட்டி நடைபெற ஏற்பாடாகியுள்ளது. பல்வேறு பிரிவினரிற்கும் தனித்தனியே நடைபெறவுள்ள இப்போட்டியில் தமிழீழக் கோப்பையினைத் தமதாக்கிக் கொள்ள பல்வேறு கழகங்கள் ஆர்வத்துடன் பங்கேற்கவுள்ளன. இதில் 8, 10, 12, 14, 16 வயதிற்குட்பட்ட பிரிவுகளிலும் திறந்த போட்டியாக வயதுவித்தியாசம் இன்றி யாரும் கலந்துகொள்ளும் போட்டியாகவும் இப்போட்டிகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளன. வசந்த காலத்தின் இறுதியான நீண்ட வார விடுமுறையில் ஏற்பாடாகியுள்ள இப்போட்டிகள் உதைபந்தாட்ட ஆர்வலர்களை பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழீழத்திற்கு வெளியே வடஅமெரிக்கக் கண்டத்தில் தமிழீழக் கோப்பைக்கான சுற்றுப்போட்டி ஒன்று நடைபெறுவது இதுவே முதற்தடவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போட்டிகள் தொடர்பான மேலதிக விபரங்களை 647-274-9366, 647-408-4906 ஆகிய எண்களை அழைப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளமுடியும் source:athirvu
-- தமிழீழக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி - 2009
www.thamilislam.co.cc