சமீபத்திய பதிவுகள்

சபல ஆண்களே............. உடம்பு பத்திரம்

>> Tuesday, August 10, 2010

    கேரளாவில் "திருப்பி அடிப்போம்' என்ற டைட்டிலோடு நூற்றுக்கணக்கான பெண்களை உறுப்பினராகக் கொண்டு கலக்கிவரும் ஷெரினாவும் பள்ளி மாணவி அபிராமியும் தலைமையேற்றுள்ள அந்த இயக்கத்தைக் கண்டாலே ஆண்கள் ஓட்டம் பிடிக்கி றார்கள்.

அங்கு சமீபத்தில் தெருக்கோடி முதல் கோட்டை வரை பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் அந்த இயக்கத்தைக் கேள்விப்பட்டு வியந்துபோன நாம் ஷெரினாவையும், அபிராமியையும் சந்திக்க கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகேயுள்ள கொடுங்க லூர் சென்றோம்.

முதலில் ஷெரினாவை சந்தித்தோம். நாம் கேள்விப்பட்ட இயக்கத்துக்கும் அந்த பொண்ணுக்கும் கடுகளவுகூட பொருத்தம் இருக்காதோ... என நமக்குள்ளே எழும்பிய கேள்வி யை அடக்கிவிட்டுப் பேசினோம்.

""பிறப்பு விகிதத்தில் ஒரு ஆணுக்கு மூணு பெண்கள் என்ற  விகிதத்தில் உயர்ந்துகொண்டே போகும் இந்த கேரளத்தில் பெண் களின் பாதுகாப்புக்காக அரசு என்னதான் வேலி போட்டாலும் அதையும் தாண்டி முக்கால்வாசி ஆண்கள் தங்களின் வக்கிர புத்தியை எங்களிடம் காட்டத்தான் செய்கிறார்கள்.

அந்த வகையில் பலமுறை நான் பாதிக்கப் பட்டிருக்கிறேன். என் கண் முன்னே  பல பெண்கள் மானத்தை இழந்திருக்கிறார்கள். கடைசியாக எனக்கு நடந்த சம்பவம்தான் பல பெண்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளது.ஒரு துணிக்கடையில் வேலை பார்க்கும் நான் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் எர்ணாகுளம் ஐகோர்ட் ஜங்ஷனில் நடந்து சென்றுகொண்டிருந்த போது... ஒருத்தன் என்னுடைய பின்பக்கத்தைத் தட்டி னான். அவனை மோசமாகத் திட்டிய நான், கொஞ்சதூரம் வந்ததும் ஓடிவந்து என் தொடையைப் பிடித்து நசுக்கினான். வலியால் துடித்த நான், ஆவேசத்தில் அவனின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்தேன். இதை அந்தப் பகுதியில் நின்ற எல்லா ஆண்களும் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள்.


அவனை அடித்ததும் எனக்குள் ஒரு தைரியம் வந்தது. அவனை பிடிச்ச பிடியில் இருந்து நழுவ  விடாமல் போலீசில் ஒப்ப டைக்க, வேடிக்கைப் பார்த்த ஆண்களை உதவிக்குக் கூப்பிட்டேன். ஒருத்தர்கூட வரவில் லை. இதைப் பார்த்த கல்லூரி மாணவிகள் 7 பேர் ஓடிவந்து என்னிடம் "நீங்கள் போய் போலீசை கூப்பிட்டு வாருங்கள். நாங்கள் இவனை தப்பவிடாமல் பார்த்துக்குறோம்' என வளைத்து நின்றார்கள். அதன்பிறகு நான் ஓடிப்போய் போலீசை கூப்பிட்டு வந்து அவனை ஒப்படைத்தேன்.

அவனைத் தாக்கும்போது வேடிக்கை பார்த்த ஆண்கள் ஏன் வர வில்லையென்றால்... அவன் அந்தப் பகுதியில் உள்ள ரவுடியாம். இப்படி ஆண் களைக் கண்டு பயந்து ஓடுவதால்தான் கடை களிலும் தனியார் மற் றும் அரசு நிறுவனங் களில் வேலை பார்க் கும் பெண்களும், சாலைகளில் நடந்து போகும் பெண்களும் தினம், தினம் உடல் ரீதியாக பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள்.

இதைத் தடுக்க வேண்டுமென்றால் பெண்களுக்குள் தைரியத்தை ஏற்படுத்த வேண் டும். அதற்கு ஒரு வகுப்பு நடத்தத்  தேவை யில்லை. தொந்தரவு செய்யும் ஆண்களை ஒருமுறை திருப்பி அடித்தால் போதும், அதன்பிறகு தைரியம் வந்துவிடும். அதற்காக கொடியின்றி, தோரணமின்றி எங்களுக்குள் ஒரு இயக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம்.

தற்போது "தொடரது ஞங்ஙள் திரிச்ச டிக்கும்' (தொட்டால் நாங்கள் திருப்பி அடிப்போம்) என ஏராளமான  பெண்களும், மாணவிகளும் எங்கள் இயக்கத்தை ஆதரித்து, அவர்களும் களத்தில் தைரியத்தைக் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இப்படி ஊருக்கு ஒரு பெண் வெகுண்டெழுந்தால் போதும், எந்த ஆணும்   ஒரு பெண்ணை தவறான கண் ணோட்டத்துடன் பார்க்கமாட்டார்கள். கிட்ட நெருங்கவும்மாட்டார்கள்'' என்ற ஷெரினாவிடம், ""பொது இடங்களில் இது ஓ.கே. வீட்டுக்குள்ளே தாலி கட்டிய கணவ னுக்கு விதிவிலக்கு உண்டா'' என்றோம். "தவறு செய்தால் கணவனையும் திருப்பி அடிப்போம்' என்றார் அருகிலிருந்த கணவர் சலிலும்மை பார்த்துச் சிரித்தபடியே.

மாணவி அபிராமியை சந்தித்துப் பேசியபோது... ""குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணா விலாசம் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் நான் பள்ளிக்குப் போகும்போதே திருடன் ஒருத்தன் என் கழுத்தில் கிடந்த செயினை அறுத்துக்கொண்டு ஓடினான். நான் சைக்கிளில் துரத்திச் சென்று நடுரோட் டில் அவனைப் பிடித்து கீழே  தள்ளி அடிக் கொடுத்து செயினைப் பறித்தேன். 

இதை நான் புலியுடன் சண்டை போடுவது போல் பலர் வேடிக்கை பார்த்திட்டுதான் நின்றார்கள். எனக்கு யாரும் உதவி செய்ய வரலை. பின்னர் என் கூடப் படிக்கும் தோழிகள் உதவியுடன் அந்தத் திருடனை போலீஸில் ஒப்படைத்தேன். எனக்குள் ஏற்பட்ட வெறித்தனமான தைரியத்தை சக மாணவிகளுக்கும் ஊட்டினேன்.

தற்போது பள்ளிக்குப் போகும் மாணவி களுக்கு ஆண்களால் எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அந்த இடத்தில் ஒவ்வொரு மாணவியும் அந்நியனாக மாறிவிடுகிறாள். இந்த மாற்றத்தை ஏற்படுத் தியது ஷெரினா அக்கா தான். இதை நாங்கள் ஒரு இயக்கமாக நடத்து றோம். தற்போது எந்த மாணவிகளும் தொந்தரவு இல்லாமல் போக முடிகிறது'' என்றாள். அழகுக்கு அச்சாரமாக வலம் வரும் கேரளா பெண்களைக் கண்டாலே ஆண்கள் தலையைத் தொங்கவிடும் நிலையில்... எந்த பெண் எப்போது அடிப்பாள் என்ற பயத்தில் நடமாடுகிறார்கள்.

அடிக்கடி பெண்களுக்கு பாலியல் தொந்தரவு, ஈவ்-டீசிங் என மலையாள பத்திரிகைகளில் அதிக மாகப் பார்த்த நாம்... சமீபகாலமாக பெண்ணை சில்மிஷம் செய்த ஆணை அடித்த பெண்ணைப் பற்றிய செய்திதான் அதிகம் காண முடிகிறது.

கேரளாவில் மட்டுமல்ல... நம்மூர் பெண்கள் மத்தியிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி மாதர் சங்க தக்கலை ஒன்றியத் தலைவி சந்திரகலா கூறும்போது... ""இந்த தைரியம் கேரளப் பெண்களுக்கு மட்டுமல்ல... தமிழ்நாட்டுப் பெண்களுக்கும்  வரவேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரும் எல்லா பெண்களுக்கும் இது மாதிரி தைரியத்தை உருவாக்கிட வேண்டும். இனிவரும் காலங்களில் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை யும் காட்டுபவர்களாக பெண்கள் இருக்கக்கூடாது'' என்றார்.

சபல ஆண்களே! உடம்பு பத்திரம்!

source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP