சமீபத்திய பதிவுகள்

இரட்டை கோபுர வீழ்ச்சி திகில் படங்கள்

>> Thursday, February 11, 2010


இரட்டை கோபுர வீழ்ச்சி திகில் படங்கள் வெளியீடு


லண்டன்:அமெரிக்காவின் புகழ் பெற்ற இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட போது, ஹெலிகாப்டரிலிருந்து அந்நாட்டு போலீசார் எடுத்த அதிர்ச்சியூட்டும் படங்கள், சம்பவம் நடந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பின் வெளியிடப்பட்டுள்ளன.அமெரிக்காவில், உலக வர்த்தக மையம் என்று அறியப்பட்ட இரட்டைக் கோபுரங்கள் 2001, செப்., 11 அன்று, பயங்கரவாதிகளால் விமான மோதல் மூலம் இடித்துத் தகர்க்கப்பட்டன. இக்கொடூர சம்பவத்தில், இரண்டாயிரத்து 752 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர்.இச்சம்பவம் நிகழந்த போது, அமெரிக்க போலீசார் ஹெலிகாப்டரிலிருந்து பல படங்கள் எடுத்தனர்.அப்படி எடுக்கப்பட்ட இரண்டாயிரத்து 779 படங்களுள் குறிப்பிட்ட படங்களை, அமெரிக்க செய்தி அமைப்புக்கு, அந்நாட்டு தேசிய தர மற்றும் தொழில்நுட்ப அமைப்பு வழங்கி யுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு படம் எடுத்த வெளிப்புற செய்தியாளர் களிடமிருந்து இந்தப் படங்களை தொழில்நுட்ப அமைப்பு வாங்கியிருந்தது.ஒரு படத்தில் கட்டடம் இடிந்ததால் ஏற்பட்ட புழுதி அலையலையாக மிதந்து வருவது காட்டப் பட்டிருக்கிறது கட்டடம் படிப்படியாக இடிந்து அருகிலுள்ள பகுதிகளிலும், கிழக்கு நதியிலும் விழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. அக்கட்டடத்துக்குள் சிக்கியவர்களின் பரிதாபகரமாக வேதனையுடன் இருக்கும் முகங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.


source:dinamaal

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பர்தாவால் ஏமாற்றப்பட்ட அரபு நாட்டு தூதர்

மனைவிக்கு மீசை-மாறுகண் திருமணத்தை ரத்து செய்த அரபு நாட்டு தூதர்மனைவிக்கு மீசை-மாறுகண்   திருமணத்தை ரத்து செய்த  அரபு நாட்டு தூதர்அபுதாபி, பிப். 11-
 
ஐக்கிய அரபு நாட்டை சேர்ந்த வெளிநாட்டு தூதர் ஒருவருக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து நிச்சயம் செய்தனர்.பெண்ணின் போட்டோவை தூதரின் தாயாரிடம் காண்பித்தனர். அதில் இருந்த பெண் அழகாக இருந்தார். எனவே நிச்சயதார்த்தம் நடந்தது. அதன் பிறகு பல தடவை அவர் அந்த பெண்ணை சந்தித்தார். அப்போதெல்லாம் அவர் பர்தா அணிந்து வந்திருந்தார். இதனால் தூதர் அவருடைய முகத்தை பார்க்கவே இல்லை.
 
பின்னர் திருமணம் நடந்தது. அதற்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்திட்டனர்.
 
திருமணம் முடிந்த அன்று இரவு மனைவியை தூதர் சந்தித்தார். அப்போது தான் அவர் பர்தா அணியாமல் வந்து இருந்தார்.
 
அவரது முகத்தில் மீசை முளைத்து இருந்தது, கண்களும் மாறு கண்ணாக இருந்தது. அப்போது தான் போட்டோவில் இந்த பெண்ணுக்கு பதிலாக அவருடைய சகோதரி போட்டோவை காட்டி ஏமாற்றியது தெரிய வந்தது.
 
இதையடுத்து தூதர் திருமணத்தை ரத்து செய்வதாக ஷரியத் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதை கோர்ட்டு ஏற்றுக்கொண்டது. மணமகள் வீட்டினர் தனக்கு நஷ்டஈடு வேண்டும் என்று கேட்டு இருந்தார். அதை கோர்ட்டு ஏற்கவில்லை

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

“மேக்-அப்”புக்கு அதிக நேரம் செலவழிக்கும் ஆண்கள்;


பெண்களை விட "மேக்-அப்"புக்கு அதிக நேரம் செலவழிக்கும் ஆண்கள்; ஆய்வில் புதிய தகவல்
 பெண்களை விட லண்டன், பிப். 11-
 
பெண்களை விட ஆண்களே மேக்-அப்புக்கு அதிக நேரம் செலவு செய்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. வீட்டில் இருந்து வெளியே புறப்படும் பெண்கள் "மேக்-அப்"புக்கு அதிக நேரம் செலவு செய்வதாக எல்லோரும் சொல்கிறோம். ஆனால் பெண்களை விட ஆண்கள் தான் அதிக நேரம் மேக்-அப் செய்து கொள்கிறார்கள் என்று இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு சொல்கிறது.
 
ஆய்வு நிறுவனம் ஒன்று இங்கிலாந்தில் 3 ஆயிரம் ஆண்கள் மற்றும் பெண்களை தேர்வு செய்ய அவர்களிடம் இந்த ஆய்வை மேற்கொண்டது.
 
இதில் ஆண்கள் "மேக்-அப்" செய்ய சராசரியாக 83 நிமிடம் எடுத்துக் கொண்டனர். பெண்கள் 79 நிமிடம் மட்டுமே எடுத்துக்கொண்டனர். அதாவது பெண்களை விட ஆண்கள் 4 நிமிடம் அதிகம் எடுத்துக் கொண்டனர்.
 
முகச் சவரம், முடி அலங்காரம், முகத்தை அழகு படுத்துதல், ஆடைகளை தேர்வு செய்தல் என ஒரு நாளைக்கு 83 நிமிடத்தை செலவழித்தனர்.
 
ஆனால் மேக்-அப்புக்காக செலவு செய்வதில் பெண்களே முன்னணியில் இருந்தனர்

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாம்பு புகுந்ததால் பரபரப்பு: மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்

சென்னையில் பெண்கள் கல்லூரி விழாவில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு: மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்
 சென்னையில்  பெண்கள் கல்லூரி விழாவில்  பாம்பு புகுந்ததால் பரபரப்பு:   மாணவிகள், ஆசிரியைகள் ஓட்டம்சென்னை, பிப். 11-
 
சென்னை காயிதே மில்லத் கல்லூரியில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு படிக்கும்போதே தொழிற்கல்வி படிக்கும் புதிய திட்ட தொடக்க விழா நடந்தது. மாணவிகள், பேராசிரியைகள் ஏராளமானோர் விழா நடைபெறும் இடத்தில் கூடியிருந்தனர்.
 
அப்போது பாம்பு ஒன்று சீறிப்பாய்ந்து வந்தது. இதைப் பார்த்து சில மாணவிகள் பாம்பு... பாம்பு... என்று அலற மற்ற மாணவிகளும் பேராசிரியைகளும் பயந்து போய் ஓடிச்சென்று பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டனர்.
 
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயந்து போய் யாரும் பாம்பை அடிக்காததால், யாரிடமும் பிடிபடாமல் தப்பிச்சென்றது. அது சிறிய பாம்பு என்றாலும் 30 நிமிட நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
 
இதற்கிடையே விழா 11 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. அமைச்சர் பொன்முடி வருகை தாமதத்தால் நண்பகலில் விழா தொடங்கியது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சர்வதேசச் சட்டத்தின் பார்வைக்குள் அகப்பட்டிருக்கும் இலங்கை அரசு

 

அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக, முக்கியமாக 2009-ல் முதல் 5 மாதங்களில் வட மாகாணத்தில், இலங்கை அரசு புரிந்த பரவலான ஒருங்கமைக்கப்பட்ட குற்றங்கள் சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மீறலுக்குள் அமைகின்றன எனச் சட்ட நிபுனர்கள் கூறுகின்றனர். இந்தக் காலவரையறையில், ஐ.நா உட்பட சர்வதேசச் சமூகத்தினால் காட்டப்பட்ட அலட்சியப் போக்கினால், 30,000 க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் உயிரிழக்க நேரிட்டது. தற்போதைய நிலையில், 


(அ) இலங்கை அரசு, நடைபெற்ற பேரழிவுகளைச் சரித்திரப் பதிவுகளிலிருந்து அழித்தலைத் தடுத்தல்

(ஆ) சர்வதேசம் தமிழ் மக்களை, நடைபெற்ற குற்றங்களுக்குப் பதில் சொல்லுவதைத் தவிர்த்தும் நீதியைக் கோராது சமாதானமாகப் போகவேண்டும் எனவும் பரிந்துரை செய்யும் முயற்சிகளை எதிர்த்தல்.

(இ) இலங்கை அரசு புரிந்த தமிழர்களுக்கு எதிரான போர்க் குற்றங்களையும், இனஅழிப்பு நடவடிக்கைகளையும், உலக நீதி மன்னறங்களில் கொண்டு செல்வதன் மூலம், பல்லாயிரக்கணக்கான பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கோருதல் - 


ஆகியவற்றை மேற்கொள்ளும் பொறுப்பு புலம் பெயர்ந்த தமிழ் மக்களின் தோள்களில் தங்கியுள்ளது. 


இலங்கை அரசு, இனச்சுத்திகரிப்பு, மனித இனத்திற்கெதிரான குற்றங்கள், போர்க் குற்றங்கள், இனஅழிப்பு

நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொண்டதாகச் செய்யப்பட்ட பிரச்சாரத்தை, அலட்சியம் செய்து திசை

திருப்பிவிட்டு, பயங்கரவாதத்திற்கெதிரான போர் என சர்வதேசம், இலங்கையில் 'ஜனநாயக' (சமாதானப் 

பேச்சு) முயற்சிகளிலும், விடுதலைப் புலிகளை ஒடுக்கும் முயற்சிகளிலும் இறங்கியது. 


தமிழ் மக்கள் பெருந்தொகையாகக் கொல்லப்பட்டதைத் தடுக்கவும், பேரழிவின் பின் மாணிக் பண்ணையில் அடைக்கப்பட்டதையும், தடுக்கும் பொறுப்பிலிருந்து சர்வதேசச் சமூகம் தவறியதால், தமிழரின் நீதியை நிலைநாட்ட முன்வரும் எல்லோரும் புதிய, தேசிய சர்வதேச வழக்காடும் தந்திரங்களை ஆராய்ந்து, ஆயிரக்கணக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்குப் பரிகாரம் தேட வேண்டும். 


இலங்கை அரசும், ஐக்கிய நாடுகளைப் போன்ற சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் இணைந்து தமது செயல்களால் வன்னியில் நடத்திய பேரழிவையும், அதன்பின் மக்கள் முட்கம்பி வேலிக்குள் அடைபட்டதை நியாயப்படுத்தியதையும், இலங்கை அரசு நடத்திய பேரழிவை, சர்வதேசச் சரித்திரத்தில் இருந்து சிறிது சிறிதாக அழிப்பதையும் எதிர்த்துப் பூகோள ரீதியில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஒரு முக்கிய பங்கு எடுக்க வேண்டும். 


விடுதலைப் போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற இலங்கை அரசின் சர்வதேச மனிதாபிமான சட்டங்களினை அத்துமீறியமை குறித்து, நடுநிலைமையான விசாரணைகளை மேற்கொள்வதற்குச் சர்வதேச நாடக மேடையில், நின்று ஆடும் வலுவுள்ள அரசியல் நடிகர்களின் உறுதியின்மையை உலகம் முழுவதும் கண்டுள்ளது. இவ்விடயத்தில், இலங்கை அரசின் சுயகுணத்தை வெளிக்கொணரும் போர்க் குற்றத்திற்கான சட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதை ஊக்குவிக்கும் திறமை தனியே புலம் பெயர் வாழ் மக்களிலேயே உள்ளது. 


1958, 1977, 1983 கறுப்பு ஜீலையில் நடைபெற்ற தமிழின எதிர்ப்பு இனக்கலவர நாட்களைப் போலல்லாது, தற்போது ஈழத் தமிழர்கள், உலகம் பூராவும் பரந்து பலமான நிலையில் உள்ளதோடு, அவர்களையோ, அவர்களின் குடும்பத்தினரையோ மிரட்ட முயலும் சில நாடுகளின் யுக்திகளுக்கு அப்பாற்பட்டு உள்ளனர். 


மேற்குலக நாடுகளில் ஏறத்தாழ எல்லாமே சர்வதேச மனித உரிமை சாசனங்களில் கையொப்பம் இட்டமையால், இலங்கை அரசின் பரப்புரையாலோ அல்லது தமது சொந்தங்களின் மரணம், படுகாயம் ஆகிய நிகழ்வுகளாலோ பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் (தம்முடைய தாய்நாட்டிற்கு ஆற்ற வேண்டிய கடமையின் அடிப்படையில்) அடிப்படை உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உரிமை உள்ளவர்களாகின்றனர். 


சரித்திர ரீதியாக, சிங்களப் பௌத்த மேலாண்மையில் ஊறிய இலங்கை அரசின் நிறைவேற்று அதிகாரத் தலையீட்டால், இலங்கையில் உள்ள நீதிபரிபாலன அமைப்புகள் தமிழரின் நீதி விடயத்தில் பாரதூரமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதியை எடுத்துரைத்து தீhவு காண்பதற்குப் புலம் பெயர் தமிழர் இலங்கைக்குள் செய்யப்பட்ட குற்றங்களுக்கு, இலங்கைக்கு வெளியில் சட்ட நடவடிக்கைகளைத் தொடரமுடியும். 


இலங்கைக்கு வெளியில் உள்ள நாடுகளை உள்வாங்கிப் புலம் பெயர் தமிழர்கள் பலவழிகளில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இம்முயற்சிகளை அவர்கள் இலங்கைக்கு வெளியில் அமுலாக்கப்படும் சர்வதேசச் சட்டங்களின் உதவியுடன் நிறைவேற்ற முடியும். இதன் மூலம் எதிர்வரும் நாட்களில் சர்வதேசச் சமூகம் எடுக்கும் ஆதரவான முயற்சிகளை ஊக்கப்படுத்தியும், அதற்கு மாறாக இராஜபக்சேவின் அதிகாரத்திற்கு மன்னிப்பு வழங்க முயற்சிக்குமிடத்து அதற்கு எதிராகவும் தேசிய, சர்வதேச மட்டங்களில் சட்டநடவடிக்கைகள் மேற்கொண்டு பணியாற்றலாம். 


(ஓ) புலம் பெயர் தமிழ் மக்கள் சட்ட நடவடிக்கைகளை மூன்று வழிகளில், அதாவது சர்வதேச, பிராந்திய அல்லது தேசிய நீதி அமைப்புகள் ஊடாக நடத்தலாம். 


அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்ற முக்கியமான இடம் சர்வதேச நீதிமன்றம் ஆகும். அங்கே, ஒரு அங்கத்தினராக இருக்கும் நாடு இன்னொரு அங்கத்துவம் பெற்ற நாட்டுக்கெதிராக வழக்குத் தொடர முடியும். இதன் பொருட்டு புலம் பெயர் தமிழர்கள் இதற்கு இணக்கப்பாடு தெரிவிக்கும் ஒரு நாட்டை அணுகி இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். 


புலம் பெயர்ந்து தமிழர் வாழும் நாடுகளில் உள்ள தேசிய நீதி மன்றங்கள், வெளிநாட்டு விடயங்களைத் தீர்ப்பதற்கு ஆதரவு கொடுப்பதாகவும், தங்கள் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும்; தேசத்தின் பாதுகாப்பு பாதிக்கப்படாத இடத்து, அவர்கள் போர்க்குற்ற நடவடிக்கை மேற்கொள்ள உரிய இடங்களாகலாம். இதற்கு, நார்வே, ஸ்பெயின் போன்ற நாடுகள் முதலிடம் பெறலாம். தனிப்பட்ட ஒருவருக்கெதிராகவோ, ஒரு குழுவினர்க்கு எதிராகவோ குற்றவியல் அடிப்படையில் இராஜபக்சே நிர்வாகத்தில் உள்ளவர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்வதானால் புலம் பெயர் மக்களுக்குப் பல இடங்கள் உண்டு. 


சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம், ரோமாபுரி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்ட நாடுகளை விசாரிக்க உரிமையுண்டு. இலங்கை, அப்படிக் கையொப்பமிடாத நாடாகியதால், அதற்குச் சில வழிகளில் பாதுகாப்பு இருக்கலாம். எனினும், ஐ.நா பாதுகாப்புச் சபை இதைப் பற்றி ஆராய வேண்டும். 


சட்டம் சம்பந்தமான குழுக்களை இனம் கண்டு ஒரு முயற்சி எடுக்கும் புலம்பெயர் மக்களின் கட்டுமானம், சட்ட முறைகளை அமுல்படுத்த நிறுவப்பட்டபின், வௌ;வேறு நாடுகளில் நடவடிக்கை எடுப்பதற்குத் தேவையான நடைமுறை விடயங்களை ஆராய்ந்து, துரிதமான செயல் நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். 


சட்ட நடவடிக்கையில் சாட்சிகளைச் சேர்க்கும் இயந்திரமும், அவற்றுள் இலங்கை அரசுக்கு எதிரானவற்றை ஒன்று சேர்த்து, பலதரப்பட்ட தலைப்புகளில் - போர்க்குற்றங்கள், மனித சமூக மீறல்கள், சித்திரவதை மற்றும் இனஅழிப்பு என வரையறுக்கப்பட வேண்டும். 
மேற்படி கிடைக்கப்பட்ட சாட்சியங்களை, இலங்கை அல்லாத மற்றைய நாடுகளில் (உதாரணமாக நார்வே, பிரான்ஸ், கனடா, ஐ.இரா) இருக்கும் தேசிய சட்டங்களின் அடிப்படையில் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு ஏற்ற வகையில் ஒழுங்குபடுத்த வேண்டும். 
மேற்கூறியபடி ஒழுங்குபடுத்தப்பட்டபின், அவற்றைக் குற்றவியல் அல்லது குடியியல் முறைப்பாடுகளாக மாற்றி, சில தேசியச் சட்ட நிர்வாகங்களில் பதிவு செய்து, அப்படி இயலாத இடத்து, மற்றவைகளில் அவற்றின் அடிப்படையில் அங்குள்ள சட்ட அமைப்புகளில் சேர்த்தபின், தமிழ் மக்கள் அங்கிருக்கும் அரசுகள் ஊடாக குற்றவியல் நடவடிக்கைகளைத் தொடர அழுத்தம் கொடுக்க வேண்டும். இவற்றைச் சர்வதேச வழிமுறைகளிலும், பிரதேச வழிமுறைகளிலும் கொண்டு வரவும் முடியும். 


பூகோள ரீதியில், தமிழ் மக்கள் பரவியிருப்பதால், இந்நடவடிக்கைகளை ஒரே நேரத்தில் சமாந்திரமாகப் பல நாடுகளில் நடத்துவதன் மூலம், பல இடங்களில் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதால், இலங்கை அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய நிர்பந்தத்திற்கு உள்ளாக்கலாம். அதே நேரம் வன்னியில் நடைபெற்ற இனஅழிப்பை மறைமுகமாக இலங்கை அரசு மூடிமறைக்காத முறையில், சர்வதேசத்திற்கு வெளிக்கொணரவும் இம்முயற்சி உதவும். 


தமிழ் மக்கள் நீதி கோருவதற்குப் பல பாதைகள் இருக்கின்ற போதும், அதே நேரத்தில் புலம் பெயர் தமிழ் மக்களை எதிர்நோக்கிப் பல சவால்களும் காத்திருக்கத்தான் செய்யும். இந்நடவடிக்கையால் வெற்றி பெறும் சட்டமுடிவுகளை அடைவதற்கு ஒரு தெளிவான விளக்கத்துடன் கீழ்த்தரப்பட்ட விடயங்களை நோக்க வேண்டும். 


போர்க்குற்ற சட்ட நடவடிக்கைகள் எடுக்க நீண்ட அல்லது, பல வருடங்களுக்குத் தொடர்ந்தும் செல்ல வாய்ப்பிருப்பதால், ஒரு நாளில் அவை முடிவு பெறமாட்டா. 
சில குற்றங்களைச் சில நாடுகளின் தேசிய நீதிமன்றங்களில் அல்லது வெளிநாட்டுச் சர்வதேச நீதி மன்றங்களில் விசாரிக்க முற்படும்போது, சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம். 
இப்படிப்பட்ட தடைகளை மீறினபோதும் 'ஏன் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை?' போன்ற பிரதிவாதம் எழுப்பப்படலாம். இதற்கேற்ப, நீதிமன்றத்தை எமது பக்கம் ஈர்ப்பதற்குரிய வாதத்தை உறுதி செய்து, வழக்குகளை மேலெடுக்க வேண்டும். 
வன்னிப் பேரழிவைக் கொண்டுவரும் போது நாட்டின் இறையாண்மை பாதுகாப்பு போன்ற வாதங்கள், தனிப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பொறுப்பு இருக்குபோது கொண்டுவரப்படலாம். ஆனால் சரத் பொன்சேகா போன்று அவர்கள் பதவி விலகிய பின் இந்த வாதத்தைப் பாவிக்க முடியாது. மகிந்த இராஜபக்சே, கோத்தபாயா இராஜபக்சே போன்ற மற்றவர்க்கும் வழமையான சர்வதேசச் சட்டங்களின்கீழ் வரும் இறையாண்மை சம்பந்தப்பட்ட பாதுகாப்பு நிச்சயமாக கிடைக்குமெனக் கூற முடியாது. வன்னியில் ஜனவரி – மே, 2009-ல் நடத்தப்பட்ட நிகழ்வுகளுக்கு மகிந்த இராஜபக்சே மீது வழக்குத் தாக்கல் செய்வதற்கு உள்ள சட்ட வலு, முன்கூட்டியே அரசுத் தலைவர்களுக்கு எதிராகத் தீர்க்கப்பட்ட வழக்குகளின் முடிவகளை ஒட்டியும், அவற்றோடு இணைந்த அமெரிக்க ஐரோப்பிய குற்றவியல் குடியியல் வழக்குகளில் சிலி நாட்டின் முன்னாள் அதிபர் பினோச்சே, செர்பியா நாட்டின் முன்னாள் அதிபர் மிலோசோவிச், லைபீரியா நாட்டின் சார்ல்ஸ் டைலர் ஆகியோருக்கு எதிரான தீர்ப்புகளும் பின்பற்றப்படலாம். 
சர்வதேசச் சமூகத்தின் பலவீனமானப் போக்கினால், இலங்கை அரசாங்கம் அதைப் பாவித்து தனது பாரிய கொலைகளை வெளிக்கொணரும் சாட்சிகளை அழித்தொழித்துள்ளது. இவ்விடயம்பற்றி நீதி மன்றங்கள் அனுதாபத்துடன் நோக்கினாலும், சாட்சிகளைப் புதிய வழிகளில் பிரித்தானியா சேனல்-4 போன்ற செய்மதிக் கோள்களின் பதிவுகளைப் பாவித்துப் பெற வேண்டும். 


சட்ட நடவடிக்கைகள் கடினமானவையாகவும் சிக்கலானதாகவும் இருக்கலாம். ஆனால் இத்தகைய சிக்கல்கள் தாண்டப்பட முடியாதவை அல்ல. புலம் பெயர் வாழ் தமிழர்கள் இலங்கையை இந்தச் சட்ட வலைக்குள் மாட்டுவதற்குத் தேவையான அறிவைப் பெற்றிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. (ஓ) சட்டநடவடிக்கைக்கு ஏற்ற இடங்களின் ஒழுங்கமைப்பு 


1).சர்வதேசம்

அ). சர்வதேசக் குற்றவியல் நீதி மன்றம்.

தனிமனிதரின் குற்றப் பொறுப்பு

ஆ). சர்வதேசச் சட்ட வல்லுனர் நீதி மன்றம்.

அரசாங்கக் குற்றப் பொறுப்பு 


2). பிரதேசம்

அ) (i) ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றம்

உள் அமெரிக்க மனித உரிமை நீதி மன்றம்.

(ii) பிரதேச வாரியாகத் தெரிவு செய்யப்பட்ட அரசியல் அமைப்புகளின் சட்ட வலு

ஆ). (i) மலேசியப் போர்க்குற்ற நீதி மன்றம் மற்றும் வட அயர்லாந்து டபிளினில் நடந்த மக்கள்

நிரந்தர நீதிமன்றத்தின் இலங்கைப் போர்க்குற்ற விசாரணைக்குழு

(ii) சர்வதேச அளவில் சட்ட முறையில் நடைமுறைப் படுத்தப்படாத தார்மீகத் தீர்வு 


3). தேசியம்

இலங்கையின் ஊழியர்களைப் போர்க்குற்றத்திற்கு விசாரிக்கக் கூடிய நாடுகள்:

நார்வே, பிரான்ஸ், சுவிஸ், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா, ஸ்பெயின், நெதர்லேண்டு, லக்ஸ்ம்பர்க், சுவீடன், டென்மார்க் ஆகியவை. மேற்கூறிய நாடுகள் வௌ;வேறு வடிவங்களில் உலகளாவிய நீதிகூறும் வலுவைத் தங்கள் நீதி மன்றங்களுக்கு அளிக்கும் சட்டங்களை வகுத்துள்ளன. (இவை குற்றஞ்சாட்டவும், விசாரிக்கவும் தகுதி பெற்றவை) 


சட்ட மையம் 
1 hபதததறநநறற 


மேற்கண்ட அட்டவனைக் கட்டங்களின் உள்ளே உள்ள எண்களின் விளக்கம் (சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வழிமுறை விளக்கம்) : 


சட்ட மையம் (இலங்கை அதிகாரிகளின் மேல் வழக்குப் பதிவுக்கு) 
போர்க்குற்றம் புரிந்தமை, மனித உரிமை மீறல் குற்றங்கள், இனஅழிப்பு உட்பட வேறு குற்றங்கள்

சர்வதேசப் பிராந்தியச் சட்டப் பதிவுகள் 
சட்ட ஆலோசகர்கள்: Prof. Boyle, Prof. Fein, Prof. Feterstein, Prof. Sornaraja சர்வதேசப் பிராந்தியச் சட்ட வேலைகளுக்கு அமர்த்தப்பட்ட ஒன்று சேர்ந்த சட்ட அமைப்புகள். 
சர்வதேசச் சட்டமுறைகளைப் பற்றிய ஆராய்ச்சி. 
சர்வதேசக் குற்ற நீதி மன்றம் 
சர்வதேச வழக்கறிஞர் நீதி மன்றம் 
அமெரிக்காவின் மனித உரிமை நீதி மன்றம். 
விசாரணைக் குழுக்கள் 
சட்டவகைத் தீர்மானம் எடுப்பதற்கான வழிவகைகளை நிலைநாட்டுதல். 
ஐ.நா. பாதுகாப்புச் சபை முன்னெடுக்கும் வழக்குகள், அங்கத்துவ நாடுகள் கொண்டு வரும் வழக்குகள், ஐ.நா.வின் வழக்கறிஞர்கள் பதினாறாம் சரத்துப்படி தொடங்கும் வழக்குகள். 
இலங்கைக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைக் கொண்டுவர ஒத்துழைக்கும் நாடுகளை இனம் காணல். 
ஐரோப்பிய மனித உரிமை நீதி மன்றத்தில் குற்றவியல், குடியியல் வழக்குத் தாக்கல்: ஐரோப்பாவில் இருக்கும் மக்களைப் பாதிக்கக்கூடிய இலங்கையில் நடத்தப்பட்ட போர்க் குற்றங்களைவ வழக்காகக் கொணரல் அல்லது வட அமெரிக்கத் தமிழர்கள் உள்நாட்டு அமெரிக்க மனித உரிமை நீதி மன்றத்தில் போர்க்குற்ற வழக்கு கொணரலாம். 
மலேசிய விசாரணைக் குழுக்கள் அல்லது ஆப்பிரிக்காவில் உள்ள மனித உரிமை நீதி மன்றங்களும் இலங்கைக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க ஒத்துழைக்கலாம். 
தேசிய சட்டமன்றத்தில் சட்டப் பதிவுகள். 
தேவைக்கேற்றப்படி சட்ட உதவி அல்லது தனிப்பட்ட முறையில் உதவி. 
நாடு-1-ன் குழு – உள்நாட்டுச் சட்ட ஆராய்ச்சியின் மூலம் சாட்சிகளைச் சேகரித்தல். 
நாடு -2-ன் குழு. 
நாடு -N-ன் குழு. 
குற்றம் பற்றிய முறைப்பாடு. 
குடியியல் முறைப்பாடு. 
சாட்சியம் சேகரித்தல். 
ஒன்றோடொன்று இணையும் மூலப்பொருள்களையும் சூழ்நிலையிலிருந்து அனுமானிக்கக்கூடிய சாட்சியங்களையும் தயாரித்தல். 
சாட்சி சொல்பவர்களை இனங்காணல். 
முதல்முறை விஜயம் ஃ அடிப்படைத் தரவுகளின் அடித்தளத்தை உண்டாக்கல். 
தரவுகளின் அடித்தளத்தைத் தயாரித்தல் (பெயர்களைப் பாதுகாத்து தனிமைப்படுத்தல்), பூகோளப்பரப்பு, குற்றங்களைப் பிரித்து சாட்சியம் அளித்தல், நேர அட்டவணைகளை ஒருங்கிணைத்தல், மக்கள் முன்னிலைக்கு வரச் சம்மதித்தல் ஆகியன. 
ஃ 
சத்தியப்பிரமாணத்துடன் அல்லது சாட்சியத்துடன் முறைப்பாடுகளைப் பதிவு செய்தல். 
நடுநிலைமைப் பகிர்வதற்கு அத்திவாரம் இடுதல். 
ஒலி, ஒளிப்பதிவுகளுக்குக் கேள்வி அமைத்தல். 
நாட்டில் வாழும் மக்களின் சத்தியப்பிரமாணத்தையும், செய்மதியின் மூலமாகவும் வேறு வகைகளாலும் ஏற்கக்கூடிய சாட்சிகளை வைத்து குடியியல் வழக்கைப் பதிவுச் செய்தல். 
உதாரணப்படுத்தும் குற்றச்சாட்டின் அமைப்பை அமைத்தல் (தனியே ஒரு நாடு வழக்கை நடத்துவதானால்) அல்லது குற்றயியல் முறைப்பாட்டைப் பதிவு செய்தல் (விசாரணை செய்யும் அமைப்பில்) அதற்கேற்ற சத்தியப்பிரமாணங்கள், செய்மதி ஆராய்ச்சிகள், வேறு ஒத்துப்போகும் சாட்சிகள் (சாட்சி சேகரிக்கும் குழுவினால் பதியப்பட்ட முறைப்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும்). 
சட்ட அதிகாரிகளின் முன் சத்தியப்பிரமாணம். 
சட்ட அதிகாரிகளின் முன் சத்தியப்பிரமாணம், ஒலி,ஒளிப்பதிவான சாட்சிகளை 2-N நாட்டிலிருந்து பெறுதல். 
எல்லா நாடுகளிலிருந்தும் சட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்தல். 
சட்ட நடவடிக்கையை முன்னெடுக்கும் அத்திவாரம். 


(tamilnet இணையதளத்தில் 7-02-10 அன்று வெளியான "Sri Lanka, Acid Test for International Law"கட்டுரையின் தமிழாக்கம்)source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP