சமீபத்திய பதிவுகள்

சுவிஸ் வங்கியில் ரகசிய சேமிப்பு: தகவல் தர நிபந்தனை

>> Tuesday, February 23, 2010


   Front page news and headlines today 

புதுடில்லி :"சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்திருப்போர் பற்றி எந்த நாடு விவரம் கேட்டாலும், அந்த நபர்களின் பெயர் மற்றும் அவர்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர் என்ற விவரங்களை தர வேண்டும்' என, சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில், இந்தியா உட்பட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள், தாங்கள் சட்ட விரோதமாக சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களை டிபாசிட் செய்துள்ளனர். இப்படி டிபாசிட் செய்துள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படுகின்றன.ஆனால், அமெரிக்கா மற்றும் ஜெர்மன் உட்பட பல நாடுகள், சுவிஸ் வங்கிகளுக்கு எதிராக தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளன. ரகசிய கணக்கு வைத்துள்ள தங்கள் நாட்டவர்களின் பெயர், விவரங்களை வெளியிட வேண்டுமென, வலியுறுத்தி வருகின்றன. தங்கள் நாட்டில் வரி ஏய்ப்பு செய்த பலர், சுவிஸ் வங்கிகளில் பணத்தைக் குவித்துள்ளதாகவும் கூறி வருகின்றன. சுவிஸ் வங்கியிடம் சேமித்தவர்களின் பட்டியலைப் பெற வேண்டும் என்று பல நாடுகள் விரும்புகின்றன.வரி மோசடி மற்றும் வரி ஏய்ப்பு என்ற இரண்டையும் தனித்தனியாக சுவிஸ் வங்கி அணுகுகிறது. வரி ஏய்ப்பு செய்தவர்கள் பற்றிய தகவல் தேவை என்று கூறி, அமெரிக்கா ஒரு பட்டியலைப் பெற்று விட்டது. இந்தியாவைப் பொறுத்தளவில் இம்மாதிரி தகவலைப் பெற, இரு நாடுகளுக்கும் இடையே உரிய சட்ட நடைமுறைகள் இல்லை என்பதையும் சுவிஸ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அதனால், யாரைப் பற்றிய தகவல் என்பதற்கான விளக்கம் தந்தால் உதவ முடியும் என்று புது நிபந்தனையை வைத்திருக்கிறது.இந்நிலையில், சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் கூறியுள்ளதாவது:சுவிஸ் வங்கியில் பணத்தை டிபாசிட் செய்துள்ள தங்கள் நாட்டவர்களைப் பற்றி, எந்த ஒரு நாடு அறிய விரும்பினாலும், அந்த நபர்களின் பெயர் மற்றும் சுவிஸ் நாட்டில் எந்த வங்கியில் அவர்கள் கணக்கு வைத்துள்ளனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.எங்கள் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள அப்பாவிகளைக் காப்பாற்றவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுவே சரியான நடவடிக்கை என்றும் கருதுகிறோம். வரி ஏய்ப்பு உட்பட வரி தொடர்பான அனைத்து வழக்குகளிலும் மற்ற நாடுகளுக்கு உதவவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுவிட்சர் லாந்து நாட்டில் வரி ஏய்ப்பு என்பது கிரிமினல் குற்றமல்ல. இந்த குற்றத்திற்காக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக் கப்படாது. மாறாக கடும் அபராதம் மட்டுமே விதிக்கப்படும்.இவ்வாறு சுவிஸ் வங்கியாளர்கள் சங்கம் கூறியுள்ளது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஆபரேஷன் எல்லாளன்!

 

லங்கையில் கருணையற்ற யுத்தம் நடந்துகொண்டு இருந்தபோது அதை ஒரு சினிமாபோல உலகம் பார்த்தது. அந்தக் கொடூரம் 'ஆபரேஷன் எல்லா ளன்' என்ற திரைப்படமாக உருவாகியிருக்கிறது!

உலகில் எத்தனையோ விடுதலை இயக்கங்கள் உண்டு. அவற்றின் போர்முறை என்பது கெரில்லா யுத்தம்தான். ஆனால், தரைப் படை, கடற் படை, வான் படை என முப்படைகளைக்கொண்டு மரபுரீதியிலான ராணுவமாகத் திகழ்ந்தது விடுதலைப் புலிகள் மட்டுமே. வான் புலிகளின் தாக்குதலில் முக்கியத்துவம் வாய்ந்தது அனுராதபுரம் விமானதளத் தாக் குதல். 21 கரும்புலிகள் நடத்திய தாக்குதலில், இலங்கை அரசின் அனுராதபுரம் விமானதளம் சீர்குலைந்தது. தாக்குதலுக்குப் புலிகள் இட்டிருந்த பெயர் 'ஆபரேஷன் எல்லாளன்'! 
ஈழ யுத்தம் இறுதியில் இருந்த சமயத்தில் ஷெல் அடிகளுக்கும், ஆர்ட்டிலெறி குண்டு வீச்சுக்களுக்கும் மத்தியில் எடுக்கப்பட்ட இந்த சினிமாவில் நடித்துஇருப்பதும் புலிகள்தான். ஜெர்மனி, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாகி இருக்கும் 'ஆபரேஷன் எல்லாளன்' திரைப்படத்தில் நடித்தவர்களில் பெரும்பாலானோர் இன்று உயிரோடு இல்லை. யுத்தம் அவர்களைப் பொசுக்கித் தின்று விட்டது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவா ளர் தமிழகத்தைச் சேர்ந்த சந்தோஷ். ''2007 அக்டோபரில் அனுராதபுரம் தாக்குதல் நடந்தது. சில மாதங்கள் கழித்து அனுராதபுரம் தாக்குதலை அப்படியே சினிமாவாக்க வேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. 2008 பிப்ரவரியில் நான் ஈழத்துக்குச் சென்றேன். அப்போது அங்கு நிகழ்ந்துகொண்டு இருந்த கடும் யுத்தம் உலகின் கண்களுக்கு அவ்வள வாகத் தெரியவில்லை. எத்திக்கும் எந்த நேரமும் முழங்கும் குண்டு சத்தங்களுக்கு நடுவே படப்பிடிப்பைத் துவக்கினோம். அனுராதபுரம் தாக்குதலில் பங்குபெற்ற புலிகளின் டைரிகளை முழுமையாகப் படித்து, அவர்களின் உறவினர்களிடம் பேசி, முழுக்க முழுக்க உண்மைக்கு மிக நெருக்கமான திரைக்கதை எங்கள் கைகளில் இருந்தது. 21 புலிகளை நடிப்பதற்காகத் தேர்வு செய்தோம். தாக்குதல் சமயத்தில் புலிகள் வாக்கி டாக்கியில் தலைமையுடன் மேற்கொண்ட உரையாடல்களின் குரல் பதிவுகள் எங்களிடம் இருந்தன. அடுத்த நொடி உயிர் போய்விடும் என்று உறுதியாகத் தெரிந்த நிலையிலும், தாய் மண்ணின் நலனுக்காக அவர்களின் மரணத்தறுவாய் முயற்சிகள் எங்களைச் சிலிர்க்கச்செய்தன. ஆனையிறவில் படப்பிடிப்பு நடக்கும்போது ராணுவம் குண்டு வீசியதில் மேஜர் புகழ்மாறன், தவா, அகிலன், ரவி ஆகிய நால்வர் படப்பிடிப்புத் தளத்திலேயே இறந்துபோனார்கள். நாட்கள் போகப் போக, நடித்தவர்களும் பணிபுரிந்தவர்களும் ஒவ்வொருவராக எங்களைவிட்டுப் பிரிந்துபோயினர். ஆனாலும், முழுமையாகத் திட்டமிட்டபடி படப் பிடிப்பை நடத்தி முடித்தோம்.

முல்லைத் தீவின் காட்டுப் பகுதிக்குள் பல ஏக்கர் பரப்பளவில் அப்படியே அனுராதபுரம் விமானதளம் போல செட் போடப்பட்டு இருந்தது. விமானங்கள், ஓடுதளங்கள் எல்லாமே அச்சு அசல். அவற்றை சேட்டிலைட் மூலம் பார்த்த இலங்கை அரசு, தங்களால் யூகிக்க முடியாத அளவுக்குப் புலிகளிடம் விமான பலம் இருப்பதாக அஞ்சியது. உண்மையான விமானதளம் என்று நினைத்து, அதன் மீதும் குண்டு வீசினார்கள்.

இலங்கைத் தீவில் கால் நூற்றாண்டுக்கும் மேல் நடந்த யுத்தத்தின் இறுதியில் புலிகள் வீழ்த்தப்பட்டு இருந்தபோதிலும் புலிகளின் வீரத்துக்கு இந்தத் திரைப்படம் ஒரு சாட்சி. உலகிலேயே ஒரு யுத் தத்தை நடத்தியவர்கள், அந்த யுத்த களத்திலேயே நடித்தும், பணிபுரிந்தும் உருவாக்கிய திரைப்படம் இது ஒன்றாகத்தான் இருக்கும்!'' என்கிறார் சந்தோஷ்!


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP