சமீபத்திய பதிவுகள்

அபுமுஹை வாதம் தவறு-பி.ஜெய்னூல் ஆபிதீன்

>> Wednesday, June 25, 2008

அபுமுஹை வாதம் தவறு-பி.ஜெய்னூல் ஆபிதீன்

அபுமுஹை அவர்கள் எழுதிய நான்கு கட்டுரைகளுன் வாதத்தை பிரபல இஸ்லாமிய அறிஞர்  பி.ஜெய்னூல் ஆபிதீன் அவர்கள் மறுக்கிறார்.
 
அபுமுஹை வாதம்
 
 
 
 
 
 
இந்த இரண்டு பேர்களின் கட்டுரைகளை படித்து இஸ்லாமை புரிந்து கொண்டவர்கள்.
 
 

StumbleUpon.com Read more...

பாகிஸ்தானில் பழங்குடியின தலைவர்கள் 28 பேர் சுட்டுக்கொலை


பாகிஸ்தானில்
பழங்குடியின தலைவர்கள் 28 பேர் சுட்டுக்கொலை


இஸ்லாமாபாத், ஜுன். 26-

பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் அரசுக்கு ஆதரவான அமைதி குழு உறுப்பினர்களான பழங்குடியின தலைவர்கள் 30 பேரை பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் 2 நாட்களுக்கு முன்பு கடத்திச்சென்றனர்.

கடத்தப்பட்டவர்களில் 28 பேரை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர். குண்டு துளைக்கப்பட்ட உடல்கள் கரிவார்ம் கிராமத்தில் உள்ள ஒரு மார்க்கெட்டில் கிடந்தன. இதனால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது. அதோடு நேற்று நடப்பதாக இருந்த பழங்குடியின தலைவர்கள் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=421485&disdate=6/26/2008

StumbleUpon.com Read more...

நாய்கள் எஸ்கேப்

 

 

  செங்டு: காயம் அடைந்த நாய்களை கட்டி இழுத்து வருகிறார் ஒரு தன்னார்வ தொண்டர். இவை சீனாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவை. அவற்றை தன்னார்வ தொண்டர்கள் காப்பாற்றி, செங்டு நகரில் உள்ள விலங்குகள் நல மையத்துக்கு கொண்டு வந்தனர்.

அங்கு மருத்துவ சிகிச்சைக்கு பிறகு இந்த நாய்கள் மெல¢ல மெல்ல குணமாகி வருகின்றன. விசேஷமாக அமைக்கப்பட்ட சக்கரங்கள் இந்த நாய்களுடன் சேர்த்து கட்டப்பட்டுள்ளதால், இவை சுலபமாக நடக்கிறது.
http://www.dinakaran.com/daily/2008/june/26/jannal.asp

StumbleUpon.com Read more...

பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிய 700 பேரை மீட்பதில் சிக்கல்

பிலிப்பைன்ஸ் கடலில் மூழ்கிய 700 பேரை மீட்பதில் சிக்கல்

மணிலா: பிலிப்பைன்ஸ் அருகே கடலில் மூழ்கிய கப்பலில் சிக்கிய 700 பயணிகள் உயிரிழந்திருக்கக் கூடும் என்பதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு கடும் புயல் தாக்கியதில், 200க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். ஏராளமானோர் தங்களது வீடுகளை இழந்தனர். இந்நிலையில், மணிலாவில் இருந்து சிபுயான் தீவுக்கு பிரின்சஸ் ஆப் ஸ்டார்ஸ் என்ற கப்பல் 700 பயணிகளுடன் சென்றது. இந்தக் கப்பல் புயலில் சிக்கியதால், 50 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்து தண்ணீரில் குதித்து மிதந்தனர். அதற்குள், கப்பல் கவிழ்ந்து தண்ணீருக்குள் மூழ்கியது. இதனால், அதில் பயணித்த 700 பயணிகள் உயிருக்கு போராடினர். கப்பலின் அடிப்பகுதியில் போராடும் பயணிகளை மீட்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. ஆனால், கடல் சீற்றம் அதிகமானதைத் தொடர்ந்து, மீட்பு குழுவினரின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால், 700 பேரும் உயிரிழந்திருக்ககூடும் என்று அஞ்சப்படுகிறது. இதனிடையே, அமெரிக்க கப்பலும், ஹெலிகாப்டரும், மீட்பு பணியில் ஈடுபட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

http://www.kumudam.com/latest_news.php?type=latestnews

StumbleUpon.com Read more...

காந்திக்கு 'கால் லெட்டர்' அனுப்பிய ஸ்டேட் பாங்க்!

காந்திக்கு 'கால் லெட்டர்' அனுப்பிய ஸ்டேட் பாங்க்!
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

அகமதபாத்: தாழ்த்தப்பட்ட, பழங்குடி பிரிவினருக்கான பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு கூறி தேசப் பிதா மகாத்மா காந்திக்கு கடிதம் அனுப்பியுள்ளது பாரத ஸ்டேட் வங்கி.

இந்த வேடிக்கை, விநோத கடிதத்தை சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் பெற்றுள்ளனர். மும்பையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கான துறை தான் இதை அனுப்பி வைத்துள்ளது.

கடிதத்தில், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என மகாத்மாவின் ஒரிஜினல் பெயர் இடம் பெற்றுள்ளது. முகவரியாக குஜராத்தில் உள்ள சபர்மதி ஆசிரத்தின் முகவரி இடம் பெற்றுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஏஜி டீச்சர்ஸ் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிளர்க்குகளுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு இந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஸ்டேட் வங்கி சார்பில் நடத்தப்படும் வங்கித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி வகுப்பினருக்கான பயிற்சி வகுப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில், இது சில விஷமிகள் செய்த செயலாகத் தெரிகிறது. வேண்டுமென்றே காந்தியின் பெயரை யாரோ இந்த பயிற்சி வகுப்புக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இயேசு கிறிஸ்து என்றோ கிருஷ்ணர் என்று பெயரிட்டு அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால், அந்த முகவரிக்கு கடிதம் செல்லும். காரணம், கம்ப்யூட்டருக்கு வேறு எதுவும் தெரியாது. அதேபோலத்தான் காந்தி பெயருக்கு இப்படி ஒரு கடிதம் போயிருக்கக் கூடும் என்றனர்.

இப்படியும் ஒரு விஷம விளையாட்டா!!
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP