சமீபத்திய பதிவுகள்

நக்மா என்ன சொல்கிறார் என்று நீங்களே கேட்டுப்பாருங்கள்

>> Thursday, July 17, 2008





video:http://www.zionmedia.in/songs/nagma.html


Famous film actress Miss.Nagma has got saved and testifying Jesus. On28th of June she attended the Thirappin Vasal Jebam conducted by Bro.Mohan C. Lazarus in Nalumavadi, a small village in Tamilnadu.Thousands of people gathered in that meeting to listen to the word of God. She led the people in worship and delivered the word of God with authority sharing her personal experience with God. People were blessed with her ministry there and testified.



Nagma


Birth Name : Nandita Morarji

Born : 25 December 1974 Mumbai, India

Other Name : Namratha Sadhana

Father : Sri Arvind Pratapsinh Morarji( the late textile magnate)

Mother : Seema Sadhana

Debut film : Baaghi (1990 ).....co-starring Salman Khan . she was 15 at the time.

Nagma Born of a Muslim mother and a Hindu father on Christmas Day.

Nagma Acted in Hindi, Tamil, Telugu, Kannada, Malayalam, Bengali, Bhojpuri, Punjabi, and now Marathi.

Nagma Fluent in Hindi, Marathi, Tamil, Telugu, and English.

According to Nagma's passport, the name given to her a birth was Nandita, and it is by that name that she was referred to in an obituary printed by the family when her father, Arvind Morarji, died. Nagma thus had a Hindu father and a Muslim mother. After divorcing Morarji "due to some family problems," Nagma's mother later married Chander Sadhana, a film producer, with whom she had two other daughters,

Jyothika and Radhika, as well as a son, Suraj. Through her biological father, who later re-married, Nagma has two more half-brothers, Dhanraj and Yuvraj.
Among the PeopleBro.Mohan C.Lazarus Introducing
Time of WorshipSinging and Praising
Sharing the Joy of SalvationRemembering God's Goodness
Mighty Word of GodSharing the Depth of Spiritual Experience
Blessed PeopleCommitting for God
Tumour DisappearsPersonal Prayer
Love and CompassionThanksgiving
http://www.zionmedia.in/nagma.html

StumbleUpon.com Read more...

இந்தியா கொதித்தெழ வேண்டாமா?(கச்சத்தீவு பிரச்சனை என்ன ?)

 
20.07.08      மற்றவை
 

காலத்தின் கன்னத்தில் நிற்கும் கண்ணீர்த் துளி'' என்று தாஜ்மகாலை வர்ணித்தார் கவிஞர் தாகூர். அதுபோல கச்சத்தீவை ``காலக்கடலில் மிதக்கும் ஒரு ரத்தத் துளி'' என்றுதான் வர்ணிக்க வேண்டும். சும்மா இருந்த கச்சத் தீவை இலங்கைக்கு இந்தியா தாரை வார்க்கப் போய், இன்று தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்த கதையாக, தமிழக மீனவர்களின் எலும்பைப் பிடித்துப் பார்க்க ஆரம்பித்திருக்கிறது இலங்கைக் கடற்படை. கடற்படைக்குப் பலியாகும் தமிழக மீனவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறது.

1983 ஆகஸ்ட் 13-ம்தேதி தொடங்கிய இந்த அனர்த்தம், இன்று வரை நீடிக்கிறது. இலங்கைக் கடற்படையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இதுவரை பலியான தமிழக மீனவர்களின் எண்ணிக்கை 400-ஐத் தாண்டும். ஊனமானவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டும். கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் எண்ணிக்கை நூறுக்கும் மேல்.

இந்த இழிநிலை தீர கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் பதாகை தூக்கி வரும் சூழலில், `கச்சத்தீவு கைவிட்டுப் போனதேன்?' என்று தொடர்ந்து எழுதி, பேசி வரும் அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவரான புலவர் புலமைப்பித்தனை நாம் சந்தித்தோம்.

`கச்சத்தீவு பூர்வீகமாகவும், பூகோளரீதியாகவும் எங்களுக்குத்தான் சொந்தம்' என்று  இலங்கை பேசி வருகிறதே?

``அப்படி ஒரு பிரசாரம்  இப்போது அதிகமாகவே கேட்கத் தொடங்கியிருக்கிறது. 1822-ம் ஆண்டு கிழக்கிந்திய கம்பெனி, கச்சத்தீவை குத்தகைக்குக் கேட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது ராமநாதபுரம் சமஸ்தானத்தோடுதான். இலங்கையோடு அல்ல. பேரரசி விக்டோரியா மகாராணி காலத்தில் இலங்கையின் அமைச்சகச் செயலாளராக இருந்த பி.வி.பியர்ஸ் என்பவர் அவர் தயாரித்த  வரைபடத்தில், `கச்சத்தீவு  ராமநாதபுரம் ராஜாவுக்குச் சொந்தமானது. இலங்கைக்குச் சொந்தமானது அல்ல' என்று விரிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்.

1968-ல் கச்சத்தீவில் சிங்கள ராணுவம் முகாமிட்டுப் போர்ப்பயிற்சி நடத்தியபோது, அதைக் கண்டித்து இந்திய நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆகவே, கச்சத்தீவு இந்தியாவின் பூர்வீகச் சொத்து. தனுஷ்கோடி எப்படி கடற்கோளால் மூழ்கியதோ, அதுபோல ஒரு கடற்கோளால் கச்சத்தீவு நம் மண்ணில் இருந்து பிரிந்திருக்கிறது என்பதுதான் உண்மை.''

என்ன காரணத்துக்காகக் கச்சத்தீவு இலங்கைக்கு தானம் கொடுக்கப்பட்டது?

``காலத்தின் கட்டாயம் அது. இந்தியாவின் பூகோள அமைப்பு இயற்கையாகவே தமிழனுக்கு எதிரியாக அமைந்து விட்டது. 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வங்கதேசம் உருவானது. அதை விரும்பாத `உலக போலீஸ்' அமெரிக்கா, இந்தியாவை அச்சுறுத்த எண்டர்பிரைஸ் என்ற அணுஆயுதம் தாங்கிய கப்பலை அனுப்பியது. கொல்கத்தாவைத் தாக்குவது அவர்களது திட்டம். அப்படித் தாக்கியிருந்தால் இன்னொரு நாகசாகியாக கொல்கத்தா மாறியிருக்கும். அந்தச் சமயத்தில் அமெரிக்காவுக்கு சிம்மசொப்பனமாக இருந்த சோவியத் ரஷ்யா, நமக்கு ஆதரவாகக் களமிறங்கியதால் அமெரிக்கா பின்வாங்கியது.

அதன்பின் ஐ.நா.வில் உலகநாடுகள், `இந்துமாக் கடலில் நின்றுகொண்டோ அல்லது பறந்து கொண்டோ எந்த நாடும் கடலோரப் பகுதி நாடுகளை அச்சுறுத்தக் கூடாது' என தீர்மானம் நிறைவேற்றின. இந்தநிலையில் இந்தியா யோசிக்கத் தொடங்கியது. இந்தியாவின் வடக்கே தரைப்பகுதி. அங்கே பாகிஸ்தானும், சீனாவும். கிழக்கும், மேற்கும் கடல்பகுதிகள். ஆபத்தில்லை. தெற்கில் உள்ள ஒரே தரைப்பகுதி இலங்கைதான். வங்கதேசப் போருக்குப் பின் இலங்கையில் விமானதளம் அமைக்க இடம் கேட்டுக் கொண்டிருந்தது பாகிஸ்தான். அதைத் தடுக்க அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கைப் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயகாவிடம் பேசி தாஜா செய்ய முயன்றார். `கச்சத்தீவை எங்களுக்குத் தந்து விட்டால் தளம் அமைக்க பாகிஸ்தானுக்கு இடம் தர மாட்டோம்' என்று பண்டாரநாயகா கேட்டபோது, இந்திராவால் மறுக்க முடியவில்லை.

எனவே, இந்தியாவைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தமிழனின் நிலத்தை, உணர்வை பலி கொடுத்தாலும் பரவாயில்லை என்று நம்மை பலிகடாவாக்கி, கச்சத்தீவு 1974-ல் இலங்கைக்குத் தாரை வார்த்துத் தரப்பட்டது. பிறகு இரண்டு வருடங்கள் கழித்து 76-ல் மீண்டும் ஓர் ஒப்பந்தம். `தமிழக மீனவர்கள் கச்சத்தீவில் தங்கி ஓய்வெடுக்கலாம். வலைகளை உலர்த்தலாம். ஆண்டுக்கு ஒருமுறை அங்கே நடக்கும் அந்தோணியார் கோயில் திருவிழாவில் பங்கேற்கலாம்' என்பது அந்த ஒப்பந்தத்தின் சாரம். ஆனால் ஏற்கெனவே இருந்த  உரிமைகளும், சலுகைகளும் சுத்தமாகப் பறிபோயின என்பதே நிஜம்!''

இயற்கையின் சாபம், பூகோள அமைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியுமா?

``வேறு வழி? ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். 1983-ல் இலங்கையில் இனக்கலவரம் வெடித்தபோது, கொழும்பு  நகரில் ஆஸ்திரேலிய நாட்டவர்கள் மூன்றுபேர் காணாமல் போனதாகப் பேச்சு. ஆஸ்திரேலிய அரசு கடுமையாக அச்சுறுத்தியதால், அடுத்த ஒரு மணிநேரத்தில் அவர்கள்மூவரையும் கண்டுபிடித்து உச்சகட்ட பாதுகாப்போடு தனிவிமானத்தில் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தது இலங்கை அரசு.

இங்கே கடந்த வாரம் கூட அறுநூறு படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 1500 தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கடத்திச் சென்று அரைநிர்வாணப்படுத்தி, ஏதோ கிரிமினல்களை விசாரிப்பதைப்போல சித்திரவதை செய்து அனுப்பி வைத்திருக்கிறது. அது இந்தியாவுக்கு அவமானமாகப் படவில்லையா? இந்தியா கொதித்தெழ வேண்டாமா? ஏன் அடக்கியே வாசிக்கிறார்கள்?

சுண்டைக்காய் நாடான இலங்கையைப் பகைத்துக் கொண்டால் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் தளம் அமைக்க இலங்கை இடம் கொடுத்துவிடும். எனவே தமிழினம் எப்படிப் போனால் என்ன? `தேசத்தைக் காக்க வேண்டும்' என்ற முடிவில் நிலையாய் இருக்கிறது மைய அரசு.

1965-ல் இந்தியா-பாகிஸ்தான் போர் நடந்தபோது, பாகிஸ்தானுக்கு கட்டுநாயகா விமானதளத்தைத் தர  சிறீமாவோ பண்டாரநாயகா சம்மதித்தார். பதறித் துடித்த லால் பகதூர் சாஸ்திரி, இலங்கையுடன் பேசினார். `பாகிஸ்தானுக்கு விமானதளத்தைத் தராமல் இருப்பதற்கு ஈடாக ஐந்து லட்சம் மலையகத் தமிழர்களை இந்தியாவுக்கு கப்பலேற்றச் சம்மதா?' என இலங்கை கேட்டது. சாஸ்திரி தலையசைத்தார். விளைவு? ஐந்து லட்சம் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து சேர்ந்தார்கள்.

அது மட்டுமா? `திரிகோணமலையில் அமெரிக்கா படைத்தளம் அமைக்க அனுமதி கேட்டபோது, அப்படி நடந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் 1987-ல் இந்திய அமைதிப்படையை ராஜீவ்காந்தி இலங்கைக்கு அனுப்பினார்' என அந்தப் படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற இந்திய ராணுவத் தளபதி ஒருவரே அவரது புத்தகத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார். ஆக, இந்தியாவின் பாதுகாப்புக்காக தெற்கிலுள்ள தமிழினத்தின் உடைமைகள் பறிபோனாலும் பரவாயில்லை என்று இந்திய அரசு கருதுகிறது. நாதியற்றதா தமிழ்ச்சமூகம்?''

இதற்குத் தீர்வுதான் என்ன? காலம் முழுக்க இலங்கைக்கு இந்தியா தலையாட்டிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?

``ஆம். தலையாட்டத்தான் வேண்டும். அண்மையில் இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியாவுக்கு வந்தபோது, அந்த நாட்டுக்கு நூறு கோடி டாலரைக் கொடுத்திருக்கிறது இந்தியா. அதாவது, நாலாயிரத்து இருநூறு கோடி ரூபாய். அந்தப்பணத்தில் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை ஆயுதம் வாங்கப் போகிறது. அதாவது இந்தியா தந்த பணத்தில் பாகிஸ்தானிடம் ஆயுதம்! தமிழக பி.ஜே.பி. தலைவர் இல.கணேசன் கூட இதைக் கண்டித்திருக்கிறார். புலிகள் மீது குண்டுவீசப் போவதாகக் கூறி பாகிஸ்தானிடம் இருந்து ஆயுதம் வாங்கி தமிழர்களை அழிக்கப் போகிறார்கள். இதுபோன்ற பேரவலங்கள்  தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். அதைத் தடுக்க ஒரேவழி கச்சத் தீவை மீட்பதுதான்.''

படம் : ம. செந்தில்நாதன்
ஸீ பா. ஏகலைவன்

http://www.kumudam.com

StumbleUpon.com Read more...

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் ஹாங்காங்!

உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் ஹாங்காங்!  
உலகின் மிகச்சிறந்த விமான நிலையம் என்ற பெருமையை ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் தொடர்ந்து 7வது ஆண்டாக பெற்றுள்ளது.

சர்வதேச அளவில் சிறப்பான விமான நிலையங்கள் குறித்த பட்டியலில் ஆசிய விமான நிலையங்களே இந்த ஆண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன.

பிரிட்டன் நாட்டின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம், சிறந்த விமான நிலையத்திற்கான கருத்துக் கணிப்பை பயணிகளிடம் நடத்தியது.

கடந்த 2007-2008ஆம் ஆண்டின் 10 மாத காலத்தில் 8.2 மில்லியன் விமான பயணிகளிடம் நடத்திய கருத்துக் கணிப்பில், மொத்தம் 190 விமான நிலையங்களில் வழங்கப்படும் பல்வேறு வசதிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.

இதன் அடிப்படையில், ஹாங்காங் சர்வதேச விமான நிலையம் உலகளவில் முதலிடத்தை பிடித்துள்ளது. அங்குள்ள வசதிகள் மற்றும் திறன்மிக்க செயல்பாடு காரணமாக அந்த விமான நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கிற்கு அடுத்தடுத்த இடங்களை சிங்கப்பூர் சாங்கி விமானநிலையம், சியோல் நாட்டில் உள்ள இன்சியோன் விமான நிலையம் ஆகியவை பிடித்துள்ளன.

கோலாலம்பூர், மலேசியா, மற்றும் ஜப்பான் நாட்டு ஆகிய நாடுகளில் உள்ள சர்வதேச விமான நிலையங்களும் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.

ஜெர்மனியின் முனிச் நகரில் உள்ள விமான நிலையம் ஐரோப்பிய அளவில் முதலிடத்தையும், சர்வதேச அளவில் 5வது இடத்தையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0807/16/1080716079_1.htm

StumbleUpon.com Read more...

பாக்.கின் எந்த பகுதியையும் தீவிரவாதிகளால் பிடிக்க முடியும்

பாக்.கின் எந்த பகுதியையும் தீவிரவாதிகளால் பிடிக்க முடியும் '
பாகிஸ்தானின் எந்த ஒரு பகுதியையும் தங்கள் பிடிக்குள் கொண்டு வரக் கூடிய அளவிற்கு இங்குள்ள தீவிரவாத அமைப்புகள் வலுவானதாக உள்ளதாக அந்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றான ஜாமியாத் உலமா - இ - இஸ்லாம் கட்சித் தலைவர் மவுலானா ஃபஷ்லுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

பெஷாவரில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர், பாகிஸ்தானின் பல இடங்களில் அரசு நிர்வாகம் முற்றிலும் காணாமல் போய்விட்டதாக கூறினார்.

எனவே நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை விரட்டியடிக்க தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து அரசியல் சக்திகளும் ஒன்றாக கைகோர்க்க வேண்டும் என்று தாம் கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகளினால் இந்த அளவிற்கு அச்சுறுத்தல் அதிகரித்ததற்கு, இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க தலையீடு அதிகரித்ததுதான் முக்கிய காரணம் என ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இப்போதைய முக்கிய பிரச்சனை, நாட்டின் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் மற்றும் மக்களிடையே அதிகரித்து வரும் குழப்பம் ஆகியவைதானே தவிர, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பணியில் அமர்த்துவதல்ல என்று அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

நானும் அடிப்பேன் அந்தர் பல்டி

"அந்தர் பல்டிலாம் தெரியும்... அரசியல்ல சேரலாம்னு இருக்கேன்..."
http://www.kumudam.com/index.php

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP