சமீபத்திய பதிவுகள்

வவுனியாவின் ராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் தான்

>> Wednesday, June 10, 2009

வவுனியாவின் ராணுவ ஆயுதக்கிடங்கை எரித்தது புலிகள் தான்: வைகோ

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியம் மீது, புலிகள் தான் ஊடறுப்பு தாக்குதல் நடத்தினர் என, வைகோ கூறியுள்ளார்.

தென்காசியில் நெல்லை மாவட்ட ம.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், நாஞ்சில் சம்பத் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,

இலங்கையில் ராணுவம், கர்ப்பிணிகளையும், சிசுக்களையும் கொன்ற சம்பவங்கள், உலகில் வேறு எங்குமே நடந்ததில்லை.

இலங்கைப் பிரச்னையில், தி.மு.க., உறுப்பினர்கள் கோபால ரத்னம், சிவப்பிரகாசம் தற்கொலை செய்து, உயிர் நீர்த்தனர். அவர்களுக்கு கூட
இரங்கல் தெரிவிக்காதவர், கருணாநிதி.

வவுனியாவில் இலங்கை ராணுவ களஞ்சியத்தின் மீது புலிகள் ஊடறுப்பு தாக்குதல் நடத்தி, ஆயுதங்களை
எரியச்செய்துள்ளனர். ஆனால், அந்த நிகழ்வு தற்செயலானது என, ராணுவம் கூறுகிறது. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். உரியநேரத்தில் அவர், குரல் கொடுப்பார் என்றார்.

StumbleUpon.com Read more...

ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?”

 

கடவுள் இருக்கிறாரா?

ஒரு முறை பேரரசர் அக்பர், பீர்பாலிடத்தில் "கடவுள் நேரடியாக பூமிக்கு வருவதாகச் சொல்லப்படுகிறதே. ஏன் கடவுள் நேரடியாக வரவேண்டும். தன்னுடைய வேலைக்காரர்கள் மற்றும் தூதுவர்களை அனுப்பக்கூடாதா?" என்று கேட்டார். இதற்கு பீர்பால் இந்த கேள்விக்கு உடனடியாக விடை கூற முடியாது, சற்று அவகாசம் வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். சில நாட்கள் கழித்து கங்கை நதியில் அக்பர் தன் குடும்பத்தாரோடு படகில் செல்ல பீர்பால் தானும் உடன் வருவதாகக் கூறி ஏறிக் கொண்டாராம். ஆற்றின் ஆழமான பகுதியில் படகு செல்லும் போது அக்பரின் மூன்று வயது பேரனை தூக்கி பீர்பால் கங்கை நதியில் போட்டு விட்டார். அதைக் கண்டு அரச குடும்பமே அலறி துடித்தது. நிலவொளியில் இசையைய் இரசித்துக் கொண்டிருந்த அக்பர் உடனே ஆற்றில் குதித்து தனது மூன்று வயது பேரனைக் காப்பாற்றினார்.

"முட்டாளே! நீ செய்த காரியத்திற்கு உன்னை இப்போதே வெட்டிக் கொல்ல வேண்டும். இருந்தாலும் நீ என் மந்திரி ஆகையால் உன்னை விட்டு வைக்கிறேன். ஏன் இக்காரியத்தைச் செய்தாய்?" என பீர்பாலை நோக்கி அக்பர் கோபமாகக் கேட்டார்.

அதற்கு பீர்பால், பதற்றமேதுமடையாமல், அரசே! உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். குழந்தை தண்ணீரில் விழுந்த பொழுது, படைத்தளபதியை, என்னை மற்றும் வீரர்களை நோக்கி 'குழந்தையைக் காப்பாற்று' என்று ஆணையிடாமல் நீங்கள் குதித்தது ஏன்? என்று கேட்டார். அதற்கு கோபம் குறையாத அக்பர் குழந்தையைக் காப்பாற்றுவது என் கடமையா? அல்லது அரசனாக ஆணையிட்டுக் கொண்டிருப்பது பெருமையா? எனப் பதிலுக்கு கேட்டார். அப்போது பீர்பால், சக்ரவர்த்தி அவர்களே! நீங்கள் அன்றைக்கு என்னிடத்தில் கேட்ட கேள்விக்கு விடை இது தான்.

கடவுள், தானே பக்தர்களைக் காக்க உலகிற்கு வருவது ஏன்? வேலையாட்கள் இல்லையா? என்று கேட்டீர்கள். எத்தனை வேலையாட்கள் இருந்தாலும், நீங்களே நீரில் குதித்துக் குழந்தையைக் காக்க நினைத்தது போல, இறைவன் தானே வந்து மக்களைக் காப்பான்.
 
 

 

source:கல்விச்சேவை  anudhinam   

 

 

 

உங்கள் உண்மையான நண்பரை அறிந்துகொள்ள ஆவலா?

அன்பான‌வ‌ர்க‌ளே நீங்க‌ள் யாராக‌ இருந்தாலும், உங்க‌ள் க‌வ‌லைக‌ள் எவ்வ‌ள‌வு பெரிய‌தாக‌ இருந்தாலும், ஒருவேளை உங்கள் தகப்பனும் உங்கள் தாயும் உங்களை கைவிட்டிருந்தாலும், நீங்கள் பெற்றுக்கொள்ளப் போகும் உண்மையான நண்பர் நீங்கள் நினைப்பதற்கும் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான அன்பை உங்களுக்குக் கொடுப்பார் நீங்கள் எண்ணிப்பார்க்க முடியாத நன்மையை உங்களுக்குச் செய்வார் அவர் யார்? தொடர்ந்து படியுங்களேன்.....
 

StumbleUpon.com Read more...

சிங்கள அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கும் பொட்டு அம்மான்

பொட்டு அம்மானை பற்றிய புதிர் சிங்கள அரசாங்கத்தை ஆட்டிப் படைக்கின்றது

  •  

pottu-annaவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது. புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.

போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன சிங்கள ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.

அதனால் 'கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்' என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!

பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,

"பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு. ராஜீவ் காந்தி கொலையின்போது சின்ன சாந்தன், 'பொட்டு' என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.

அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் 'பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்' என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள். யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.

பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது சிங்கள ராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கை யின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் ராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட ராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை ராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…" என்கிறார்கள்.

புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். "ராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், 'எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!' என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.

அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள். கட்டுநாயகா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் ராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.

எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமேமிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான 'ரா', இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, 'ரா'வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு. கருணா, சிங்கள அரசோடுலேசான தொடர்பில் இருந்தபோதே, அதுகுறித்துப் பிரபாகரனிடம் எச்சரித் திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.

அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை ராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள ராணுவமும் நம்பிவிட்டது. பிரபா கரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, 'ராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட் டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்' என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பி லிருந்தே செய்திகள் கசிகிறது.

புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் ராணுவம் இதுவரை அடை யாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது ராணுவத்துக்கே புரியாத புதிர்தான். ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றி தழைக் கேட்டு இந்திய அரசு, சிங்கள ராணுவத்தை நச்சரித்துவருகிறது. பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.

ஆனாலும், சிங்கள அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை. இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப்போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் ராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது. ராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், 'பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது' என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!" என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.

மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிற ாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்பட விருந்தபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே 'புலிகளின் பெரிய மூளை' என்று குறிப்பிடப்பட்டவர்.

பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை சிங்கள ராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!

- இரா.சரவணன்

StumbleUpon.com Read more...

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி-(போட்டோ இணைப்பு)உலகின் குள்ளமான சிறுமி பட்டியலில் முதலிடம் பிடித்தார்

6 மாத கைக்குழந்தை உருவத்தில் 15 வயது இந்திய சிறுமி
உலகின் குள்ளமான சிறுமி பட்டியலில் முதலிடம் பிடித்தார்

 
 

15 வயதாகும் இந்த இந்திய சிறுமியின் பெயர் தற்போது உலக சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம்

ஒரு அடி 11 1/2 அங்குல உயரம் மட்டுமே கொண்ட ஜோதி ஆம்கே, உலகிலேயே மிகவும், குள்ளமான சிறுமி என்ற பெயரை பெற்று இருக்கிறார். 6 மாத கைக்குழந்தை போல் பெற்றோர், சகோதர-சகோதரிகளின் இடுப்பில் தொற்றிக் கொள்ளும் இந்த சிறுமியின் எடை வெறும் 6 கிலோதான்.

மராட்டிய மாநிலம் நாக்பூர் நகரை சேர்ந்த ஆம்கே கிஷன்-ரஞ்சனா தம்பதிகளின் கடைக்குட்டிதான் இவள்.

இந்த தம்பதியினருக்கு பிறந்த அர்ச்சனா(23), சதீஷ்(22), ரூபாலி(18) மூவருமே சராசரி வளர்ச்சியுடன் பிறந்தவர்கள். ஹார்மோன் சுரப்பு கோளாறு காரணமாக ஜோதியின் உயரமோ, உடலோ வயதுக்கு தகுந்த வளர்ச்சியடையாமல் போய்விட்டது. இதனால் பொம்மை போன்ற தோற்றத்தில்தான் அவர் காணப்படுகிறார்.

3 வயதானபோது, தன் வயதையொட்டிய சிறுமிகள் ஆர்வத்துடன் புத்தக மூட்டையை சுமந்து கொண்டு வண்ணத்துப்பூச்சி போல் பள்ளிக்கூடம் செல்வதை பார்த்த ஜோதிக்கும் அவர்களை போல் தானும், பள்ளிக்கூடத்துக்கு துள்ளிக்குதித்து கொண்டு செல்லும் ஆவல் ஏற்பட்டது.

விசேஷ பெஞ்ச்-நாற்காலி

அவரது பெற்றோரும், பள்ளியில் ஜோதியை சேர்த்து விட்டனர். தற்போது ஜோதி நாக்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு மாணவி.

பெஞ்ச் உயரமே கூட இல்லாத ஜோதிக்காக பள்ளி நிர்வாகம் விசேஷமாக குட்டிïண்டு பெஞ்ச்-நாற்காலியை செய்து போட்டுள்ளது. அதில் உட்கார்ந்து கொண்டுதான் இந்த குள்ளச்சிறுமி பாடம் படிக்கிறார். பாடப்புத்தகங்களும், பேனாவும் கூட கைகளுக்குள் அடங்காமல் பூதக்கண்ணாடி உருவம் போல் அவளுக்கு காட்சியளிக்கிறது.

இதை விட வேடிக்கை என்னவென்றால், ஜோதியால் தனது பள்ளிக்கூட புத்தக மூட்டையை சுமக்க முடியாது. ஏனென்றால் புத்தக மூட்டையே அவளது உயரத்திற்கு இருக்கிறது. தவிர, புத்தக மூட்டையின் எடையோ அவளது எடையைவிட அதிகம்.

இதனால் தனது பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகளின் உதவியுடன் புத்தக மூட்டையை தினமும், பள்ளிக்கு எடுத்துச் செல்கிறார். குறிப்பாக மூத்த சகோதரி அர்ச்சனாதான், ஜோதியின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்கிறார்.

குள்ளமான மகிழ்ச்சி

பொம்மைச் சிறுமி ஜோதியிடம் பேசிய போது....

`எனது 3 வயதிலேயே மற்ற சிறுமிகளை விட நான் வித்தியாசமாக இருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். எல்லோரும் என்னை விட உயரமாக இருக்கிறார்கள். அவர்களை விடவும் நானும் உயரமாக வளரவேண்டும் என்று நினைப்பேன்.

என்றாலும், உலகிலேயே நான் மிகவும் குள்ளமான சிறுமி என்ற பெருமை எனக்கு தற்போது கிடைத்திருப்பதால் அது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதனால் உயரமாக வளர முடியாமல் போனது பற்றிய கவலை எனக்கு துளி கூட கிடையாது.

முதன் முதலில், நான் பள்ளிக்கூடத்திற்கு போனபோது பயந்து விட்டேன். எனக்குள் தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது. ஏனென்றால் அங்கிருந்த எல்லா மாணவிகளுமே என்னை விட உயரமானவர்களாக இருந்தார்கள். இப்போது எனக்கு எந்த கவலையும், வருத்தமும் கிடையாது.

பள்ளிக்கூட வகுப்பறையில் எனக்காக தனி பெஞ்சும், நாற்காலியும் போட்டிருக்கிறார்கள். என்னுடன் படிக்கும் சக மாணவிகளின் முழங்கால் அளவுக்கு நான் குள்ளமாக இருந்தாலும் கூட அவர்கள் என்னை பாரபட்சமாக நடத்துவதில்லை. நல்ல தோழிகளாக இருக்கிறார்கள். எல்லோரையும் போலவே என்னை தங்களில் ஒருவராக நினைக்கிறார்கள். நானும் என்னை சராசரி மாணவியாகவே உணர்கிறேன்.

உயரம்தான் குறைவு என்றாலும், சராசரி மனிதர்களை போலவே எல்லா உணர்வுகளும் எனக்கும் உண்டு. வேறு எந்த வித்தியாசத்தையும் உணரவில்லை. நான் எல்லோரையும் போலவே சாப்பிடுகிறேன். கனவு காண்கிறேன்'

சின்ன சின்ன ஆசை

குட்டிச்சிறுமி ஜோதியின் ஆசை என்னவாம்?...

`எல்லா டீன்-ஏஜ் பெண்களையும் போலவே எனக்கும் விதவிதமாக ஆடைகள் அணிவது பிடிக்கும். இதற்காக ஏராளமான ஆடைகளை சேகரித்து வைத்திருக்கிறேன். அதுவும் போதவில்லை என்றால் ஷாப்பிங் போய் வாங்கிக்கொள்வேன். வீட்டில் பெற்றோரும், சகோதர-சகோதரிகளும் நான் விரும்பியதை வாங்கி தருகிறார்கள்.

நான் மேக்கப் செய்து மாடல் அழகிகளைப்போல் உடை அணிந்து கொள்வேன். வளர்ந்து பெரியவளான பிறகு நடிகையாக ஆகவேண்டும் என்பதுதான் எனது ஆசை. சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற எனது கனவு நிச்சயம் ஒரு நாள் நனவாகும்.'

இப்படி கூறும் ஜோதி, பிரபல இந்திய பாப் பாடகர் மிகா சிங்கின் பாடல் வீடியோ ஆல்பத்தில் தோன்றியும் இருக்கிறார்.

வீடியோ ஆல்பத்தில் தோன்றியதால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு ஜோதிக்கு உருவானது. ஆனால் அவரது போதாத நேரம், ஒரு முறை ஐஸ் கட்டி வழுக்கி கீழே விழுந்து 2 கால்களிலும் முறிவு ஏற்பட்டு விட்டது. அவரது குள்ள உயரம் காரணமாக இந்த முறிவு இதுவரை சரியாகவில்லை. அதனால் சினிமா வாய்ப்பு கைகூடவில்லை.

தெய்வீக குழந்தை

நாக்பூரின் சுற்று வட்டாரப்பகுதிகளில் வசிப்போர் கிஷன்-ரஞ்சனா தம்பதியினர் தினமும் வீட்டிற்கு வந்து ஜோதியை தெய்வீக குழந்தையாக கருதி ஆச்சர்யத்துடன் பார்த்தும் செல்கிறார்கள். இதனால் அவரது வீடு மாலை நேரங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் `ஜே ஜே' என காட்சியளிக்கிறது.

ஜோதி பற்றி கட்டிட தொழிலாளியான அவரது தந்தை கிஷன்(52) கூறும்போது, "எனது குழந்தை என்னை பெருமைக்குரியவளாக்கி இருக்கிறாள். அவளை ஏராளமான சாதுக்களும், ஆன்மிக குருக்களும் வந்து பார்த்து ஆசீர்வாதமும் செய்கிறார்கள். அவள் நீண்ட காலம் வாழவேண்டும் என்று பிரார்த்தனையும் செய்கிறார்கள்'' என்று பூரிப்புடன் கூறுகிறார்.

ஜோதியைப்பற்றி இன்னொரு தகவல். இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சியான சேனல் 4-ல் வரும் `பாடிஷாக்' என்ற தொடரில் அவர் தோன்றுகிறார். இந்த தொடர் இன்று இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

எப்படியோ, சினிமாவில் நடிக்கவேண்டும் என்ற பொம்மைச்சிறுமி ஜோதியின் லட்சிய கனவுக்கு, டெலிவிஷனில் ஒளிபரப்பாகும் அவரைப்பற்றிய சிறப்பு நிகழ்ச்சி, சினிமாவுக்கான அஸ்திவாரமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.


 

StumbleUpon.com Read more...

Breaking News: இலங்கை இராணுவ கிடங்கு வெடித்து சிதறியது

StumbleUpon.com Read more...

சர்வதேச கடற்பரப்பில் வணங்காமண் கப்பல் நேரடி வீடியோ காட்சி

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP