ஈராக் மிஷன் முடிந்தது : அதிபர் ஒபாமா அதிகராப்பூர்வ அறிவிப்பு
>> Tuesday, August 31, 2010
பாக்தாத் : ஈராக்கில் இருந்த அமெரிக்க தாக்குதல் படை செயல்பாடுகள் அனைத்தும் முற்றிலுமாக முடிவுக்கு வந்து விட்டதாக அமெரிக்க அதிபர் ஒபாமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஈராக்கில், சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டபின், அமெரிக்க படைகள் அங்கு குவிக்கப்பட்டன. அமெரிக்க ராணுவம் ஈராக்கிலிருந்து வெளியேற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் இருந்து நெருக்கடி எழுந்தது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்றபின், ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் அனைத்தும், 2010 ஆகஸ்ட் 31க்குள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என, அறிவித்தார். இதன்படி, ஈராக்கிலிருந்த அமெரிக்க படைகள் படிப்படியாக வெளியேறின. ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ராணுவம், ஈராக்கில் முகாமிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஒபாமா பெருமதிம் : ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப்பெறும் முடிவு ஈராக்கின் நலன் கருதி மட்டும் எடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் நலன் கருதியும் எடுக்கப்பட்டது. ஈராக்கின் எதிர்காலத்தை வலுப்படுத்தி ஒரு ஸ்திரமான அரசாக அதை அதன் மக்கள் கைகளில் ஒப்படைக்க அமெரிக்க விலைமதிக்கமுடியாத தியாகத்தை செய்துள்ளது. அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி நிலவிய காலத்திலும் ஈராக்கில் அமைதியை நிலைநாட்ட பெரிய அளவில் செலவழிக்கப்பட்டது. அமெரிக்காவின் இளைஙர்களும், இளம் பெண்களும், ஈராக்கில் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தனர்.போரினால் பாதிக்கப்பட்ட ஈராக்கில் , ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்ற நம்பிக்கையில் தான் அமெரிக்கா ஈராக்குக்கு இவ்வளவு காலம் துணை நின்றது. இவ்வாறு அவர் தெரிவித்தார். source:dinamalar
--
http://thamilislam.tk