|
சமீபத்திய பதிவுகள்
கோவணம் கட்டி வந்தால் வரவேற்பாரா...? குஷ்புவுக்கு இந்து மக்கள் கட்சி கேள்வி?
பொது விழாக்களில் நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் அவரது வீட்டுக்கு கோவணம் கட்டி 200பேர் வந்தால் அவர்களை வரவேற்பாரா என்று இந்து மக்கள் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. சினிமாவில் தான் நடிகைகள் படுகவர்ச்சியாக வருகிறார்கள் என்றால், பொது நிகழ்ச்சிககளிலும் படுகவர்ச்சியான உடையணிந்தும், குட்டை பாவாடை அணிந்து வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நடிகை நமீதா அணிந்து வரும் கவர்ச்சியான உடைகள் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதுகுறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த இருந்த நடிகை குஷ்பு, நமீதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவர் குட்டை பாவாடை அணிகிறார், கவர்ச்சியான உடையணிந்து வருகிறார் என்று பலரும் கண்டனம் தெரிவிக்கின்றனர். அது அவருடைய தனிப்பட்ட விஷயம். சினிமாவில் உள்ளவர்கள் கூட இதை எதிர்க்கவில்லை. ஆனால் சில சுயநல சக்திகள் வெறும் புகழுக்காக இதை எதிர்க்கின்றனர் என்று கூறியிருந்தார். இதற்கு இந்து மக்கள் கட்சி கடும் கண்டன் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் செயலாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலாச்சாரம், பண்பாட்டுக்கு முன்னோடியான மாநிலமே தமிழகம் தான். அதனால் தான் கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வைத்துள்ளோம். குஷ்பு சொல்வது போல், 2 நிமிட புகழுக்காக குட்டை பாவாடை அணியும் நடிகைகளை நாங்கள் எதிர்க்கவில்லை. சினிமாவில் நடிகைகள் அதுபோல் அணியட்டும், பொது விழாக்களில் அப்படி அணிய வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.
நடிகைகள் குட்டைப்பாவாடை அணிந்து வருவதை வரவேற்கும் நடிகை குஷ்பு, அதேசமயம் 200பேர் கோவணம் கட்டி அவர் வீட்டு வாசல் முன் வந்து நின்றால், அவர்களை சந்திப்பாரா...? அல்லது பேசத்தான் செய்வாரா...? ஆகவே, இதுபோன்ற நடிகைகளுக்கு வக்காலத்து வாங்குவதை குஷ்பு நிறுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரித்துள்ளார்
source:dinamalar
Read more...
Subscribe to:
Posts (Atom)