சமீபத்திய பதிவுகள்

கம்ப்யூட்டர் பாதுகாப்பு

>> Wednesday, January 20, 2010

கம்ப்யூட்டர் பாதுகாப்பு
 


கம்ப்யூட்டர் மலரில் வாசகர்களின் வேண்டுகோளுக் கிணங்க, கம்ப்யூட்டர் இயக்கம், ஆப்பரேட்டிங் சிஸ்டம், பைல் நிர்வாகம், சாப்ட்வேர் அப்ளிகேஷன், ஹார்ட்வேர் போன்ற பிரிவுகளில் பயன்படுத்தப்படும் தொழில் நுட்ப சொற்கள் குறித்த சிறிய விளக்கங்களை அடிக்கடி தந்து வருகிறோம். சில வாசகர்கள் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து புழக்கத்தில் இருக்கும் சில சொற்களை எழுதி, அவற்றிற்கான விளக்கத்தைக் கேட்டு வருகின்றனர்; தொலைபேசியிலும் கேட்கின்றனர். அப்படிப்பட்ட சொற்களில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்து கீழே தந்துள்ளோம்.


1. ஆண்ட்டி வைரஸ்  (Anti Virus):அப்ளிகேஷன் சாப்ட்வேர். இன்றைய அளவில் கிடைத்துள்ள வைரஸ் புரோகிராம்களில் காணப்படும் சிக்னேச்சர் என்னும் கோடிங் முறையின் அடிப்படையில், ஹார்ட் டிஸ்க்கினை ஸ்கேன் செய்து, அதில் ஏதேனும் வைரஸ், ட்ரோஜன், வோர்ம் ஆகியன இருந்தால், அந்த புரோகிராம்களைக் கண்டறிந்து அழிக்கும். அல்லது குவாரண்டைன் என்னும் தனி இடத்திற்கு அனுப்பும். நமக்கும் எச்சரிக்கை கொடுக்கும். நீக்க முடியவில்லை என்றால், ஹார்ட் டிஸ்க்கில் இருக்கும் இடத்தைக் காட்டி எச்சரிக்கை செய்திடும்.


2. அட்டாக் (Attack): நம் அனுமதி பெறாத ஒரு நபர் அல்லது ஒரு புரோகிராம், நம் கம்ப்யூட்டரைத் தன் கட்டுப்பாட்டில், பல்வேறு காரண காரியங்களுக்காகக் கொண்டு வரும் செயல்பாடு.


3.பேக் டோர் (Back Door)இதனைச் சில சமயங்களில் ட்ரேட் டோர் (Trap Door)  எனவும் அழைக்கின்றனர். அப்ளிகேஷன் புரோகிராமில், புரோகிராமை வடிவமைத்தவரால் அமைக்கப்படும் வழி. புரோகிராமில் ஏதேனும் பிழை இருந்தால், இந்த வழியாக புரோகிராமின் வரிகளை அடைந்து செப்பனிடுவார். ஆனால் இது போன்ற வழி இருப்பது அடுத்தவருக்குத் தெரிந்தால், புரோகிராம் செயல்படும் தன்மையையே அவர் மாற்றிவிடலாம்.
4. பயர்வால் (Firewall)இது ஒரு சாப்ட்வேர் அல்லது ஹார்ட்வேர். உங்கள் கம்ப்யூட்டரின் நெட்வொர்க்கைக் காப்பாற்றும் வசதி. இன்டர்நெட் அல்லது நெட்வொர்க் மூலமாக அனுமதியின்றி, உங்கள் கம்ப்யூட்டருக்குள் வரும் புரோகிராமினைத் தடுத்து நிறுத்தும். உங்களுக்கும் எச்சரிக்கை தரும். சில வேளைகளில் உங்கள் அனுமதியைப் பெற்று அந்த புரோகிராமினை அப்போதும் அடுத்து வருகையிலும் அனுமதிக்கும்.
5.ஹைஜாக்கிங் (Hijacking) : கம்ப்யூட்டரின் செயல் பாட்டில் குறுக்கீடு செய்து, இயக்கத்தினை முடக்குவது. கம்ப்யூட்டர் பயன்படுத்திக் கொண்டி ருக்கும் நீங்கள், சற்று வெளியே செல்கையில், கம்ப்யூட்டரைக் கைப்பற்றி பயன்படுத்துவதனையும் இந்த வகையில் சேர்க்கலாம். அடுத்த வகை இன்டர்நெட் வழியாக நுழைந்து கம்ப்யூட்டரின் இயக்கத்தைத் தன் கையில் எடுத்துக் கொள்வது.
6. ஹோல் (Hole): உங்கள் சிஸ்டத்தின் பலவீனமான ஓர் இடம். உங்கள் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் சாப்ட்வேரில் இருக்கலாம். இதன் வழியாக உங்கள் அனுமதியின்றி ஒருவர் அனுப்பியுள்ள புரோகிராம், கம்ப்யூட்டர் உள்ளே வரலாம்.
7. எச்.டி.டி.ப்பி.எஸ். (HTTPS Hypertext Transfer Protocol Secure): இணையத்தில் உள்ள புரோட்டோகால் அம்சங்களில் இது எச்.டி.டி.பி.யில் ஒரு வகை. தனித்தன்மை கொண்ட, தனி நபர் அல்லது நிறுவனங்கள் சார்ந்த முக்கிய தகவல்கள் பரிமாறப்படும் தளங்களில் இந்த வகை புரோட்டோகால் வகை அமைக்கப்படும்.
8.கீ (Key) : விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் விண்டோஸில் அமைக்கப்படும் செட்டிங்ஸ் சரியாக அமைந்திட உதவுபவற்றை இப்படிக் குறிப்பிடுவார்கள். புரோகிராம் ஒன்று கம்ப்யூட்டரில் நிறுவப்படும் போதும், நீக்கப்படும்போதும் இந்த கீகள் மாற்றப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் நுழைந்து இந்த கீகளில் உங்கள் அனுமதியின்றி மாற்றங்கள் செய்திட்டால், கம்ப்யூட்டர் இயக்கம் பிரச்சினைக்குள்ளாகும்.
9. கீ லாக்கர்ஸ் (Keyloggers) : அடிப்படையில் இது புரோகிராம் ஒன்றில் கீகளின் அழுத்தம் பயன்பாட்டிற்காகப் பதியப்படுவதனைக் குறிக்கும். ஆனால் இப்போதோ, கெடுதல் விளைவிக்க எண்ணும் நபர்கள், கம்ப்யூட்டர் ஒன்றில் அழுத்தப்படும் கீகளைப் பதிவு செய்திட ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பி, கீகளின் அழுத்தங்களைப் பெற்று, அதன் அடிப்படையில் ரகசியமான தகவல்களைப் (பாஸ்வேர்ட் போன்ற) பெற்று, பின் அவற்றைப் பயன்படுத்தி நாசம் விளைவிக்கும் எண்ணத்தில் இதனைப் பயன்படுத்துகின்றனர்.
10. @mm : வைரஸ் ஒன்றின் இறுதியில் இந்த அடையாளம் காணப்படும். எடுத்துக் காட்டாகW32netsky@mm இந்த அடையாளம் மாஸ் மெயிலர் என்பதைக் குறிக்கிறது. மாஸ் மெயிலர் என்பது வைரஸ் ஒன்றின் பெயர். இதனால் பாதிக்கப்படும் கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க்கின் பல பகுதிகளிலிருந்து, மின்னஞ்சல் முகவரிகளைப் பெற்று, அவை அனைத்துக்கும் தன் செய்தி அஞ்சலை அனுப்பும். பின் அனுப்பப்பட்ட கம்ப்யூட்டரில் பரவும். சிலவற்றில் ஒரு எம் (m)  மட்டும் காணப்படும். அது மெயிலர் என்பதை மட்டும் குறிக்கிறது. இந்த வகை மெயிலர் வைரஸ் தான் பரவுவதற்கு ஒரு இமெயிலின் துணையைக் கொள்ளும்.
11. பே லோட் (PayLoad): இது வைரஸ் ஒன்றின் பகுதியாகும். இது எப்போதும் அழிவைத்தரும் செயல்களில் இறங்காது; ஆனால் தேவையில்லாத ஒன்றாகும்.
12. ரெப்ளிகேஷன் (Replication) ): பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றை ஒரு வைரஸ் பாதித்தவுடன், அது தன்னையே காப்பி செய்து கொள்ளும் பணியில் இறங்கும். பின் அந்தக் கம்ப்யூட்டரின் மற்ற பாகங்களையும் பாதிக்கும்; இமெயில் முகவரிகள் மூலமாக மற்ற கம்ப்யூட்டர்களையும் பாதிக்கும். அடுத்த கம்ப்யூட்டரை அடைந்தவுடன் இதே வேலையை மேற்கொள்ளும். இவ்வாறு சில நிமிடங்களில் நூற்றுக் கணக்கான கம்ப்யூட்டர்களில் பரவி கெடுதல் வேலையை நடத்தும். தன்னைத்தானே காப்பி செய்திடும் வேலையை இந்த சொல் குறிக்கிறது.
13. வேரியன்ட் (Variant): வைரஸ் புரோகிராம் ஒன்றில், ஒரிஜினல் வைரஸ் புரோகிராம் வரிகளைப் போன்று அமைக்கப்படுவை இப்படிக் குறிக்கப்படுகின்றன. இவற்றின் மூலம் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளின் பணியைத் திசை திருப்பும் வேலையை இவை மேற்கொள்கின்றன.
14. வைரஸ் டெபனிஷன்ஸ் பைல் (Virus Definition File): ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களால் பயன்படுத்தப் படும் டேட்டா பைல்களாகும். இவற்றின் மூலம் தான் ஏற்கனவே உலவி வரும் வைரஸ் புரோகிராம்கள் கண்டறியப்படுகின்றன


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

Worlds Lowest Street Legal Car-

Worlds Lowest Street Legal Car


Officially in the Guinness World Record for lowest street legal car, the Flatmobile stands at just 19 inch or 48 cm tall. You can check the build progress of the FlatMoble at the FlatMobile website. The car is rear mounted with a 875cc engine for propulsion. Obviously inspired from Batmobile, Perry Watkins from England is the proud owner of the FlatMobile. Check out 8 more pics of the FlatMobile after the break....--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அல் - காய்தாவின் புதிய தந்திரம்: யு.எஸ். அதிர்ச்சி

இது குறித்து மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ள அமெரிக்கஅரசு நிர்வாகம், இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

ஏமனில் அல் - காய்தா அமைப்பு காலூன்றி உள்ளதாகவும், அங்கிருந்தபடியே அமெரிக்காவுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுவருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில், தாக்குதலுக்கு அமெரிக்கர்களை பயன்படுத்தும் அல் - காய்தாவின் புதிய உத்தியை முறியடிக்க அமெரிக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.


source:tamil.webdunia
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எப்போது தலையை வெட்டிக் கொள்ளப் போகிறீர்கள்?-சந்திரசேகரராவ்?!$

தெலுங்கானாவுக்காக எப்போது தலையை வெட்டிக் கொள்ளப் போகிறீர்கள்?- மாணவர்கள் கேள்வியால் சந்திரசேகரராவ் அதிர்ச்சி

 நகரி, ஜன. 20-

தெலுங்கானா தனி மாநிலம் கோரி முன்னாள் மத்திய மந்திரி சந்திரசேகரராவ் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அரசு சார்பில் தனி மாநிலம் அமைக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார்.
 
அவரது உண்ணாவிரதத்தை காங்கிரஸ் எம்.பி. ராஜகோபால், நாடகம் என்றும், உடலில் வைட்டமின் மருந்துகளை ஊசி மூலம் செலுத்தினால் 30 ஆண்டு வரை உயிருடன் இருக்கலாம் என்றும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு தெலுங்கானா தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சந்திரசேகரராவ் கூறும்போது, தெலுங்கானா தனி மாநிலம் தராவிட்டால் நான் தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார்.
 
இந்நிலையில் நேற்று தெலுங்கானாவுக்காக தீக்குளித்து இறந்து போன மாணவர் வேணுகோபாலுக்கு அஞ்சலி செலுத்த ஐதராபாத் உஸ்மானி பல்கலைக்கழகத்திற்கு சந்திரசேகரராவ் சென்றார்.
 
அஞ்சலி செலுத்திய பிறகு அவர் மாணவர்களிடம், தெலுங்கானா எனது உயிர். அது கிடைக்காவிட்டால் உயிர் துறப்பேன். தெலுங்கானா மக்களுக்காக எந்த தியாகமும் செய்யத்தயார் என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென எழுந்த 2 மாணவர்கள், தெலுங்கானாவுக்காக தலையை வெட்டி தற்கொலை செய்வேன் என்று தொடர்ந்து கூறி வருகிறீர்கள். எப்போது உங்கள் தலையை வெட்டிக் கொள்ளப்போகிறீர்கள்? என்பதை எங்களுக்கு தெளிவுபடுத்துங்கள் என்று கேட்டனர்.
 
இதை கேட்டதும் சந்திரசேகரராவ் கடும் அதிர்ச்சி அடைந்தார். மாணவர்கள் தன்னிடம் இப்படி ஒரு இக்கட்டான கேள்வியை கேட்டு விட்டார்களே என்று நொந்து போனார்.
 
பின்னர் சற்று சுதாரித்த படி, தற்போது எனக்கு தெலுங்கானா போராட்டத்தை தலைமை தாங்கி நடத்த வேண்டிய பொறுப்பு இருக்கிறது. இது தெரிந்தும் மாணவர்கள் குழப்பமான கேள்விகளை கேட்டு போராட்டத்தை திசை திருப்பி விடக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார். 
தொடர்ந்து மாணவர்கள் கேள்வி கேட்க முயன்ற போது, எனக்கு அவசர வேலை இருக்கிறது என்று கூறியபடி வேகமாகச்சென்று காரில் ஏறி பறந்தார். இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

சந்திரசேகரராவ் மகன் தாரக்ராமாராவ் எம்.எல்.ஏ., மருமகன் ஹரீஷ்ராவ் எம்.எல்.ஏ. உள்பட 5 எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆந்திர சபாநாயகர் கிரன்குமார் ரெட்டியை முற்றுகையிட்டனர். பின்னர் அவரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக் கொள்ளும்படி கூறினர். அதன் பிறகு வெளியே வந்த அவர்கள் ரோட்டில் அமர்ந்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒரு சைக்கிளின் விலை ரூ.2 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?

 

நெல்லையில் மஜூரா கேஎஸ்ஆர் என்ற நிறுவனம் வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட பிரபல நிறுவனங்களில் சைக்கிள்களை விற்பனை செய்கிறது. கடந்த 6 மாதங்களாக இந்த நிறுவனத்தில் 35 ஆயிரம் ரூபாய் முதல் 2 லட்ச ரூபாய் வரையிலான விலையில் சைக்கிள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிறுவனத்தில் அமெரிக்கா மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் தயாரிக்கப்படும் சைக்கிள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சைக்கிள்களை ஹெர்குலஸ் பிஎஸ்ஏ நிறுவனம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்கிறது. கேனான்டெல் என்ற அமெரிக்க நிறுவனத்தின் தயாரிப்பான சைக்கிளின் விலை ரூ.35 ஆயிரம். இந்த சைக்கிள் முற்றிலும் அலுமினியத்தால் தயாரிக்கப்பட்டது என்பதால் இந்த சைக்கிள் மிகவும் எடை குறைந்தவை. எளிதாக ஓட்ட முடியும். இந்த சைக்கிள்களில் மொத்தம் 24 கியர்கள் உள்ளன. செல்லும் வேகத்தை பொறுத்து கியர்கலை மாற்றி கொள்ளலாம். இந்த சைக்கிள்கள் 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். வேகமாக செல்லும் இந்த சைக்கிள்களை உடனே நிறுத்தும் வகையில் டிஸ்க் பிரேக் அமைக்கப்பட்டுள்ளது. பிரேக் பிடித்த இடத்தில் இந்த சைக்கிள் நிற்கும். கேனான்டெல் நிறுவனத்தின் மற்றொரு தயாரிப்பான ராஷ்-7 என்ற சைக்கிள் விலை 85 ஆயிரம் ரூபாயாகும். இந்த சைக்கிளை சமீபத்தில் நெல்லையை சேர்ந்த ஒரு டாக்டர் வாங்கி உள்ளார். மேலும் இத்தாலியை சேர்ந்த பாயன்சி என்ற நிறுவனத்தின் 900 எக்ஸ்டி, கார்பன் என்ற சைக்கிளும் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சைக்கிளின் விலை ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இந்த வகை சைக்கிள்களை வாங்க ஆர்டர் கொடுக்க வேண்டும். இந்த வகை சைக்கிள்கள் தற்போது இருப்பு இல்லை. இந்த சைக்கிள்கள் குறித்த தகவல் பெற்று தற்போது அதனை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

SOURCE:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புலிகளின் புதிய கிலி தளம்புலிகளின் ஊடகத் துறை - தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் 'lttepress.com'என்கிற இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. 'இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்' எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது.

இது குறித்து நம்பகமான புலி ஆதரவாளர்கள் சிலர், ''அது புலிகளின் இணைய தளமேதான். இது நாள் வரை தேசிய தலைவர் பிரபாகரன் குறித்து புலிகள் தரப்பு கருத்து சொல்லவே இல்லை. கே.பி-யை வளைத்த உளவு அமைப்புகள்தான் புலிகளின் கருத்தாக ஏதேதோ பரப்பிக் கொண்டிருந்தன. ஆனால், இனி புலிகளின் அனைத்து அறிவிப்புகளும் இந்த இணையதளத்தில்தான் இடம்பெறப் போகின்றன!'' என்று அடித்துச் சொல்கிறார்கள். ''இந்த புதிய இணைய தளத்தின் செய்தித் தொடர்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ச.தமிழ்மாறனைப் பற்றி புலிகளின் தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். ச.தமிழ்மாறன் என்பது அவருடைய இயற்பெயர் அல்ல. சிங்கள அரசின் சதி வலையில் சிக்கி விடாதபடி இருப்பதற்காகவே புலிகளின் தலைமையக உத்தரவுப்படி ச.தமிழ்மாறன் என்ற பெயரில் அவர் இயங்கத் தொடங்கி இருக்கிறார். 45 வயதான அவர் அந்த இணைய தளத்தின் வாயிலாகவே விரைவில் தன் முகத்தைக் காட்டவிருக்கிறார். அப்போது புலிகளின் சர்வதேசத் தொடர்பு கள் அனைத்தும் ஊடகத் துறையின் இணையதளம் ஊடாக இணையும். இதோடு விரைவிலேயே புலிகளின் மாவீரர் பணிமனை, மக்கள் தொடர்பகம் உள்ளிட்டவையும் இயங்கத் தொடங்கும். மாவீரர் பணிமனையில் ஈழப் போரில் உயிர்விட்ட தளபதிகள், தியாகப் போராளிகளின் பெயர்ப் பட்டியல் விரைவிலேயே வெளியிடப்படும். மக்கள் தொடர்பகம் மூலமாக சர்வதேச தமிழ் தொடர்புகள் மேம்படுத்தப்படும். ஏற்கெனவே இயங்கி வந்த தமிழீழ மாணவர் அமைப்பு மறுபடியும் தொடங்கப் படவிருக்கிறது...'' எனச் சொன்னார்கள், புலிகளின் தொடர்பில் இன்றைக்கும் இருக்கும் அந்த நண்பர்கள்.

அவர்களின் துணையுடனேயே நாம் 'ச.தமிழ்மாற'னிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

''புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறீர்கள். ஆனால், சிங்கள ராணுவம் அவர் கொல்லப்பட்டு விட்டதாக இந்தியாவுக்கு சான்றிதழே கொடுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறதே...?''

''தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறார். பல தடவை இப்படியான நாடகத்தை இலங்கை அரசு நடத்தியதும், அதன் பின்னர் அதன் முகத்திரை கிழிவதும் வழக்கமான ஒன்றுதான். இப்போதும் அப்படித்தான் நடந்திருக்கிறது. இறப்புச் சான்றிதழ் என்பதும் ஒரு திட்டமிட்ட நாடகமே!''

''கடைசிக் கட்டப் போரில் இருந்து பிரபாகரன் எப்படித் தப்பினார்?''

''இலங்கை அரசுடனான இறுதிக்கட்டப் போரில் தேசியத் தலைவர் நேரடிச் சமரில் ஈடுபட்டார். இலங்கை அரசின் கடும் சுற்றி வளைப்பில் நாம் போர் யுக்தியினையும் தந்திரோ பாயத்தையும் பயன்படுத்தி தலைவரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றோம். இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட கரும்புலிகள் வீரச் சாவைத் தழுவிக் கொண்டனர். முக்கியத் தளபதிகள் சகிதம் தலைவர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது பயன்படுத்திய தந்திரோபாயத்தையும் போர் யுக்தியையும் இன்றைய சூழலில் சொல்வது சிறப்பாக இருக்காது.''

''அப்படியென்றால் சிங்கள ராணுவம் பிரபாகரனின் உடலாகக் காட்டியது எது?''

''சிதைக்கப்பட்ட தலைவரை ஒத்த அந்த உருவம் பற்றி ராஜபக்ஷே அல்லது சரத் ஃபொன்சேகாவிடம்தான் கேட்க வேண்டும். ஏனென்றால், அந்த அதீத மருத்துவ தொழில் நுட்பம் பற்றி அவர்களுக்குத்தானே தெரியும்.''

''வலுவான ஆதாரங்கள் ஏதும் இல்லாததால்தான் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக சொல்லப்படும் கருத்து சிலரால் விமர்சிக்கப்படுகிறது. உரிய ஆதாரங்களை நீங்கள் சமர்ப்பிக்கலாமே?''

''தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதற்கு எத்தனையோ ஆதாரங்கள் இருக்கின்றன. இருப்பினும் இன்றைய சூழலில் அவற்றை வெளியிடுவது பொருத்தமானதாக இருக்காது. சாலச் சிறந்த ஆதாரமாக வெகு விரைவிலேயே தேசியத் தலைவர் உலகத் தமிழர்கள் முன் தோன்றுவார்!''

''அவருடைய கருத்தாக ஏதும் வெளிவருமா? இல்லை... அவரே நேரடியாக வெளியே வந்து பேசுவாரா?''

''மாவீரர் தினம் மற்றும் சிறப்பு நேர்காணல்களில் தேசியத் தலைவர் எப்படித் தோன்றுவாரோ... அப்படியேதான் தோன்றுவார்!''

''ஈழப் போரில் கடைசிக் கட்ட நிலைமைகள் எப்படி இருந்தன? இறுதியில் ஆயுதங்களை மௌனிக்க வேண்டிய நிலைக்கு புலிகள் எப்படித் தள்ளப்பட்டார்கள்?''

''ஒரே நாளில் 25 ஆயிரம் பொது மக்கள் படுகொலை செய்யப்பட்டதே இலங்கை அரசு போரை எவ்வளவு கொடூரமாக நடத்தியது என்பதற்கு சாட்சி. எமது மக்களை இலங்கை ராணுவம் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டது. அதனால்தான் பதில் தாக்குதலை தவிர்த்து, தலைவரின் உத்தரவின் கீழ் நாம் மௌனமானோம்.''

''புலிகளுக்கு ஆதரவாகக் காட்டிக் கொண்டு இன்றைய நிலையில் பல்வேறு இணைய தளங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள்தான் அதிகாரபூர்வ இணையதளம் என்பதை எப்படி நம்புவது?''

''குழப்புகின்ற இணைய தளங்களும், குழப்புகின்றவர்களும் இருக்கிறார்கள் என்பது எமக்கும் தெரியும். இவற்றை எல்லாம் தாண்டி எமது தலைவரின் வழிகாட்டுதலுடன் இயங்கும் விடுதலைப் புலிகளை எமது மக்கள் சரியாக இனம்கண்டு கொள்வார்கள். எது நிஜம் என்பது அவர்களுக்குத் தெரியும்!''

''புலிகளின் உளவுத் துறை தலைவர் பொட்டு அம்மான் கொல்லப்பட்டதாக சொல்லப்படுவது குறித்து..?''

''தேசியத் தலைவர் பாதுகாப்பாக உள்ளார் என்ற பதிலே இதற்கும் பொருந்தும்!''

''பிரபாகரனின் குடும்பத்தினர் முற்றாக அழிக்கப் பட்டு விட்டதாகச் சொல்லும் சிங்களத் தரப்பு, அதற்கு ஆதாரமாக பாலச்சந்திரன், துவாரகா போன்றோரை ஒத்த படங்களை வெளியிட்டி ருக்கிறதே?''

''தேசியத் தலைவரின் மகன் சார்ல்ஸ் ஆண்டனி களத்தில் வீரச்சாவு அடைந்தது உண்மை. தலைவரின் மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் பாதுகாப் பாகவே உள்ளனர்.''

''புலிகள் அடுத்த கட்டமாக எத்தகைய போராட்டத்தைக் கையிலெடுக்கப் போகிறார்கள்?''

''இது மக்கள் விடு தலைப் போராட்டம். எமது மக்கள் நலன் கருதித்தான் எங்க ளின் ஆயுதங்கள் மௌனமாகின. அமைதி வழியை விரும்பிய எம்மை சிங்கள அரசு தொடர்ந்து ஏமாற்றியே வந்தது. மீண்டும் எமது மக்களுக்கு சரியான தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசு முன்வைக்கா விட்டால், மக்கள் எழுச்சியுடன் எமது ஆயுதப் போராட்டம் தொடரும்!''

''கடைசிகட்டப் போரில் சர்வதேச சமாதானப் புள்ளிகளை நம்பி புலிகள் ஏமாந்து விட்டதாகச் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?''

''சர்வதேச உளவு வலையில் எமது சில முக்கிய உறுப்பினர்கள் வீழ்ந்தது உண்மைதான். அதனால் சில பாதிப்புகள் ஏற்பட்டதும் உண்மைதான். எமது போராட்ட வரலாற்றில் துரோகம் என்பது காலம் காலமாகவே நடந்துவரும் ஒன்றுதான். இவற்றையெல்லாம் தாண்டி எமது தேசியத் தலைவர் எமது போராட்டத்தை தொடர்ந்து வழி நடத்துகிறார்.''

''இலங்கையில் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென புலிகள் விரும்புகிறார்கள்?''

''தேர்தல் குறித்து நாம் கருத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை. சிங்களப் பேரினவாதம் பற்றி எமது மக்கள் தெளிவுடனேயே உள்ளார்கள்.''

''போரில் உண்டான தோல்வி, பிரபாகரனை எந்தளவுக்கு வருத்தி இருக்கிறது?''

''மக்களின் இழப்பும் போராளிகளின் இழப்பும் தேசியத் தலைவரை பெரும் துயரத்தில் ஆழ்த்தி யது. எமது மக்களின் கொடூர மரணங்கள் தலைவரின் உள்ளத்தில் ஆழமாகப் பதிந்துள்ளது. இவற்றையெல்லாம் தாண்டி எமது மக்கள் சுதந்திர தமிழீழத்தில் வாழ வேண்டும் என்பதில் தலைவர் உறுதியாகவே இருக்கிறார்.''

''தந்தை வேலுப்பிள்ளையின் மறைவின்போது பிரபாகரனின் மனநிலை எப்படி இருந்தது?''

''உறவுகளுக்கு அப்பாற்பட்டு எமது மக்களை நேசிப்பவர், எமது தேசியத் தலைவர் பிரபாகரன். இதுவே உங்களின் கேள்விக்கான பதில்!''


source:vikatan


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார டவுண்லோட்

 
 

 இந்த வாரம் உங்களுக்குத் தரப்படும் டவுண்லோட் புரோகிராம் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு குறித்ததாகும். இப்போது அறிமுகமாகிப் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசர்கள் அனைத்திலும் டேப் பயன்பாடு தான் அடிப்படையாக உள்ளது. டேப் ஒவ்வொன்றிலும் ஒரு தளம் காணப்படுவதும், அதனைத் தேவைப்படுகையில் கிளிக் செய்து பயன்படுத்துவதும் நம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது. தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது. காத்திருப்பில் போட்டு வைக்க வேண்டிய டேப்பினை இழுத்து வந்து இந்த டூல்பாரில் விட்டுவிடலாம். அல்லது அப்போது திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேப்பில் இடது பக்கம் உள்ள மேல் நோக்கி உள்ள ஸ்டைலான அம்புக் குறியில் கிளிக் செய்திடலாம். அப்படி கிளிக் செய்தால் அந்த டேப் இந்த டூல்பாருக்கு இழுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும். இவ்வாறு இழுக்கப்பட்டு இந்த டூல்பாரில் வைக்கும் டேப் சும்மா இருக்கும். ராம் மெமரியில் இடம் பிடிக்காது. அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கான முகவரி ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கப்படும். இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும்.  இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி:  https://addons.mozilla. org/enUS/firefox/addon/9429


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP