சமீபத்திய பதிவுகள்

இரண்டு புலிகள் கைது

>> Wednesday, August 6, 2008

இரண்டு புலிகள் கைது
.
.
 சென்னை, ஆக. 6: சென்னையில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரிக்க தங்கியிருந்த அந்த இயக்கத்தைச் சேர்ந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருமங்கலம் திருவல்லீஸ்வரர் நகர் இளங்கோ தெருவில் சந்தேகத்திற்கிடமான முறையில் 3 பேர் ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சென்னை போலீஸ் கமிஷனர்  ஆர்.சேகர் உத்தரவின் பேரில், மத்திய சென்னை இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், அண்ணாநகர் மாவட்ட துணை கமிஷனர் பாண்டியன், உதவி கமிஷனர் அசோக் ஆகியோர் மேற்பார்வையில் போலீசார் அந்த வீட்டை முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.

போலீசார் வருவதை கண்ட 3 பேரில் ஒருவன் அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. போலீசிடமிருந்து தப்ப முயன்ற மேலும்2 பேரை போலீசார் விரட்டிச் சென்று பிடித்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, வெடிகுண்டு   தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒன்னரை கிலோ  பொட்டாசியம் நைட்ரேட்என்ற வெடிமருந்து, சோலார் லைட்டுகள், ஸ்பார்க் பிளக்குகள், 60 பேட்டரிகள், ஒயர்கள், மோட்டாருக்கான உதிரிபாகங்கள் என 2 மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட இரண்டு பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தி போது, அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களது பெயர் உமாரமணன் (வயது 23), கமலன் (வயது 27) என்பதும் தெரிய வந்தது.

மேற்படி இரண்டு பேரும் விடுதலைப்புலிகளின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற விவரமும் விசாரணையில் வெளிவந்தது.  கைதான உமாரமணன் என்பவன் விடுதலைப்புலிகளின் ஆயுதப்படையின் முக்கிய தளபதி என்று கூறப்படுகிறது.

அவன் இண்டு வாரத்திற்கு முன்பு போலி பாஸ்போர்ட் மூலம் விமானத்தில் சென்னை வந்ததாகவும், மற்றொருவன் அகதி போல ராமேஸ்வரம் வழியாக சென்னைக்கு வந்ததாகவும் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிகிறது.

மேலும், இலங்கையில் சண்டை நடைபெற்று வருவதால் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்றும், ஆயுதங்களை ரகசியமாக வாங்கி கடத்துவதற்காகவே தாங்கள் சென்னை வந்ததாகவும் அவர்கள் போலீசில் தெரிவித்தாக கூறப்படுகிறது.

வெடிப்பொருட்களை மூட்டைகளாக சேகரித்து ராமேஸ்வரம், நாகப்பட்டினம், வேதாரண்யம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் காய்கறி லாரிகள் மூலம் கொண்டு சென்று அங்கிருந்து படகுகள் மூலம் இலங்கைக்கு கடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆயுதங்களையும், பிற பொருட்களையும் சேகரிப்பதற்காகவே 20க்கும் மேற்பட்ட விடுதலைப்புலிகள் சென்னையில் தங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவலையும் பிடிபட்ட விடுதலைப்புலிகள் போலீசில் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

பிடிபட்ட இரண்டு விடுதலைப்புலிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, அண்மையில் ஆயுதங்கள் வாங்குவதற்காக வந்து கைது செய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான தம்பி அண்ணாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் இருந்த எண்களை சோதித்து பார்த்ததையடுத்து, கேளம்பாக்கத்தில் உள்ள ஏஜெண்டான செல்வம் என்கிற செல்வகுமாரும் கைது செய்யப்பட்டார்.

அவரிடமிருந்து மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப் பட்டன.  போலீஸ் சோதனையின் போது தப்பியோடிய விடுதலைப் புலியையும், மேலும் சென்னையில் பல பகுதிகளில் தங்கியிருப்பதாக கூறப்படும் புலிகளையும் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக போலீசில் தரப்பில் கூறப்படுகிறது.

 

 

StumbleUpon.com Read more...

ஒலிம்பிக்: ஊக்கமருந்து சோதனையில் மோனிகா தேவி தோல்வி

ஒலிம்பிக்: ஊக்கமருந்து சோதனையில் மோனிகா தேவி தோல்வி
ஊக்க மருந்து சோதனையில் தோல்வியுற்றதால், ஒலிம்பிக் செல்லும் இந்திய அணியில் இருந்து பளுதூக்கும் வீராங்கனை மோனிகா தேவி நீக்கப்பட்டார்.

ஒலிம்பிக் செல்லும் இந்திய வீரர், வீராங்கனைகளுக்கு கடந்த ஜூன் 29-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனையின் முடிவு வெளியிடப்பட்டது.

அதில், மோனிகா பேடி தடைசெய்யப்பட்ட மருந்தினைப் பயன்படுத்தியிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பீஜிங் செல்லும் இந்திய அணியில் இருந்து 69 கிலோ எடை பிரிவின் பளுதூக்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கு தேர்வு செய்யப்பட்டிருந்த மோனிகா தேவி நீக்கப்பட்டுள்ளார்.

இதனால், மோனிகாவுக்கு பதிலாக ஷைலஜாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பளுதூக்கும் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வு செய்வதற்கு, இந்திய பளுதூக்கும் விளையாட்டுக்கான கூட்டமைப்பு நடத்திய பயிற்சிகளின்போது, மனிப்பூரைச் சேர்ந்த மோனிகா தேவியைக் காட்டிலும், ஆந்திராவைச் சேர்ந்த பி.ஷைலஜாவே சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

எனினும், இறுதியில் மோனிகா தேவியை ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றார்.

முன்னதாக, ஏப்ரலில் ஜப்பானில் நடந்த ஆசிய கோப்பை போட்டிகளில் மோனிகா சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

'சிமி' மீதான தடை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

'சிமி' மீதான தடை நீடிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்ற குற்றம் சாட்டப்பட்ட 'சிமி' அமைப்பின் மீதான தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதித்துள்ள உச்நீதிமன்றம், அந்த இயக்கத்தின் மீதான தடை நீடிப்பதாக அறிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் நடந்த பல்வேறு தீவிரவாத செயல்களில் 'இஸ்லாமிய மாணவர் அமைப்பு' என்ற 'சிமி' அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு 'சிமி'க்கு 2 ஆண்டு தடை விதித்தது. பின்னர் 2 ஆண்டுக்கு ஒருமுறை தடை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010ம் ஆண்டு வரை 'சிமி'க்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் சிமி அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என்று அந்த அமைப்பு மனுவில் கூறியிருந்தது.

இதுகுறித்து விசாரித்த நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம், 'சிமி'க்கு எதிரான ஆதாரங்களை சமர்ப் பிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், "பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க முடியாது' என்று கூறி சிமி மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், 'சிமி' மீதான தடையை நீக்கி டெல்லி உயர் நீதிமன்றம் விதித்த தீர்ப்புக்கு தடை விதித்ததோடு, அந்த இயக்கத்தின் மீதான தடை நீடிப்பதாகவும் அறிவித்தது.

அத்துடன் தடையை ஏன் நீட்டிக்கக்கூடாது என்பது குறித்து 3 வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு கூறி 'சிமி'இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.


(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள்

ரோமர்: 1:21.

அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது.22. அவர்கள் தங்களை ஞானிகளென்று சொல்லியும் பயித்தியக்காரராகி,23. அழிவில்லாத தேவனுடைய மகிமையை அழிவுள்ள மனுஷர்கள் பறவைகள் மிருகங்கள் ஊரும் பிராணிகள் ஆகிய இவைகளுடைய ரூபங்களுக்கு ஒப்பாக மாற்றினார்கள்.24. இதினிமித்தம் அவர்கள் தங்கள் இருதயத்திலுள்ள இச்சைகளினாலே ஒருவரோடொருவர் தங்கள் சரீரங்களை அவமானப்படுத்தத்தக்கதாக, தேவன் அவர்களை அசுத்தத்திற்கு ஒப்புகொடுத்தார்.25. தேவனுடைய சத்தியத்தை அவர்கள் பொய்யாக மாற்றி, சிருஷ்டிகரைத் தொழுது சேவியாமல் சிருஷ்டியைத் தொழுது சேவித்தார்கள், அவரே என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்டவர். ஆமென்.
 
 
 


StumbleUpon.com Read more...

ஜோதிடரை அடித்து உதைத்த பெண்

ஜோதிடரை அடித்து உதைத்த பெண்


ஆத்திகர்களின் மனோநிலை எப்-பொழுதுமே நிச்சயமற்ற, அதாவது மதில்மேல் பூனையாக, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இனிமேலும் அப்படித்தான். கோயிலுக்கு போவதாக இருந்தாலும் சரி, சாமியாடிகளை பார்க்கப் போவதாக இருந்தாலும் சரி தங்களது கோரிக்கை நிறைவேறக் கூடும் என்ற அய்யப்பாட்டுடன்தான் அணுகுவார்களே தவிர,

நிறைவேறியே தீரும் என்று அவர்களுக்கே நிச்சயமிருக்காது. ஏனெனில், அவர்களே அவர்களுக்கு உரைகல். இதற்கு முன்பும் பல விசயங்களில் ஏமாந்த அனுபவம் அவர்களுக்கு உண்டு. என்ன கேடு இந்த கடவுளுக்கு, எதில குறை வச்சேன், இப்படி மொத்திபுடுச்சே என்று கடவுளை உள்ளுக்குள் வைவதும் உண்டு. வைதபின், அதுசரி, நம்ம தலைவிதி இப்படின்னு எழுதி வச்சிருக்கும் போது கடவுள் என்ன பண்ணுவாரு? அவரு எழுதின விதிய அவரே மாத்தினா அப்புறம் எதுக்கு எழுதனும் என்று இப்படியும் நினைத்துக் கொண்டாலும், ஏற்கெனவே எழுதி வச்சிருக்கும் போது, எழுதி வச்சது நடந்துதான் தீரும்னு இருக்கும் போது அதை நம்ம வசதிக்கு மாத்தச் சொல்லி வேண்டுகோள் வைக்கலாமா என்று நினைப்-பதில்லை. ஆக, எதிலும் நிலைத்த முடிவு எடுக்க முடியாமல் தடுமாறுகிறவர்களே ஆத்திகர்கள்.

அப்படியே இருந்தாலும் சில நேரங்களில் சில மனிதர்கள் சுயமரியாதையால், உந்தப்-பட்டு ஆத்திகராகவே இருந்தாலும் தெளிவான முடிவு எடுப்பதுண்டு. அப்படி ஒரு முடிவை ஆண்களைக் காட்டிலும் பக்தியில் அதிகம் ஈடுபடும் பெண் ஒருவர் எடுத்திருப்பது நமது புருவங்களை உயர வைத்திருக்கிறது. அதற்குக் காரணம் நிர்வாணம். ஆச்சர்யமாக இருக்கிற-தல்லவா. அந்த நிர்வாணம் ஒரு நிவாரணத்-தையும் தந்திருக்கிறது. ஆம், ஈரோட்டை அடுத்த ரங்கம்பாளையத்தில் பிரம்மரிஷி என்கிற ஜோதிட நிலையம் வைத்திருப்பவர், கிரி எஸ்.அய்யர், இவரிடம், ஓட்டல் வியா-பாரத்தில் நொடித்துப் போனதாக பரிகாரம் தேடிவந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியைச் சேர்ந்த கலையின் மனைவிடம் பரிகாரம் கூறுவதற்காக திட்டமிட்டு கண-வனை வெளியே அனுப்பிவிட்டு பெண்ணிடம் சாமியார் நிர்வாண பூஜை செய்ய வேண்டும் என்று கூற மதில்மேல் பூனை, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால், என்ற அய்யமெல்லாம் காணாமல் போய், அல்லது சுயமரியாதை, அந்த அய்யப்பாடுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி, நிர்வாணமாக நிற்பதா? அதுவும் ஓர் அந்நியன் முன்பா? என்று பொங்கி எழுந்து கணவன், உறவினர்கள் துணையுடன் அந்தப் பெண் ஜோதிடப் பார்ப்பனரை அடுத்த-நாள் கண்மண் தெரியாமல் அடித்திருக்கிறார். அந்தப் புகைப்படங்களும் நாளிதழ்களில் வந்திருக்கின்றன. இது பகுத்தறிவாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருந்தாலும், நிர்வாணமாக நில் என்று சொன்ன பிறகுதான் இந்த நிவாரணம் கிடைத்ததே தவிர, அந்தப் பெண்ணோ மற்றவர்களோ மூடத்தனங்களை இத்தோடு மூட்டை கட்டி குப்பைத் தொட்டி-யில் போட்டு விடுவார்கள் என்பதில் நிச்சய-மில்லை என்று எண்ணும்போது நெருடுகிறது. போகட்டும், இந்த செய்தியும் அது தொடர்-பான நாளிதழ்களில் வந்திருக்கின்றன. புகைப்படங்களும் மக்களிடம் பொதிந்து கிடக்கின்ற மூடத்தனங்களை ஓரளவாவது தூர்வார உதவும் என்பதில் அய்யமில்லை. அடிமேல் அடி வைத்தால் அம்மி மட்டுமா? மூடத்தனங்-கள் கூடத்தான் நகர்ந்துவிடும்; தகர்ந்து-விடும். அதற்கு கிரி அய்யரை அடித்த பெண் துவக்கி வைத்துள்ளார். துவங்கிய இடமும் பொருத்தமானதுதான். மூடத்தனங்-களை பகுத்தறிவுத் தீ நாக்குகளால் சுட்டுப் பொசுக்கிய பெரியார் என்னும் அக்கினிக் குஞ்சை ஈன்ற இடமல்லவா - ஈரோடு.
 

StumbleUpon.com Read more...

அமர்நாத் பனிலிங்கம் அம்பலமாகும் மோசடி

அமர்நாத் பனிலிங்கம் அம்பலமாகும் மோசடி

- சார்வாகன்

இமயமலையில் 3800 மீட்டர் உயரத்தில் ஒரு சுண்ணாம்புக் கல் குகை. இதில் பனிக்கட்டி மேலெழும்பிக் குறிப்பிட்ட காலத்தில் மட்டும் காட்சியளிக்கும். எதையும் பிறப்பு உறுப்பு களோடு தொடர்புபடுத்தியே பார்க்கும் இந்து மதத்தினர் இதை சிவலிங்கம் என்று சொல்லி வருகின்றனர். பனியால் ஆனதால் பனிலிங்கம்.

லிங்கம் என்பது ஆண்குறி. ஆவுடைலிங்கம் என்பது பெண் குறியுடன் சேர்ந்த ஆண்குறி. ஓம் என்பது பெண் குறி. நாமத்தில் வெள்ளைக் கோடுகள் சுக்கிலம் (ஆண்விந்து) சிவப்புக் கோடு (பெண் சினை முட்டை) இப்படி இந்து மதத்தில் எல்லாமே அது தான்! அப்படித் தான் பனி லிங்கமும்.

கூடுதலாகப் பனிலிங்கத்திற்கு ஒரு கதையைக் கட்டிவிட்டார்கள். அந்தக் குகையில்தான் சிவன் பார்வதிக்கு வாழ்வின் இரகசியங்களைக் கற்றுக் கொடுத்தான் என்கிற கதை. 15 அடிக்குப் பத்தடி அளவுள்ள குகையில் கற்றுத் தரும் வாழ்க்கை இரகசியம் என்னவாக இருக்கும்? கொக்கோக ரகசியம் என்று பழங்காலத்தில் வருணிக்கப்பட்ட சமாசாரம் தானே!

இது - இந்த இடம் - வழிபாட்டுக்குரியதா? வணங்குதற்குரியதா?

வாரம் இரண்டு முறை வரும் அக்கப்போர் ஏடு ஒன்று ஒன்றுமே தெரியாத பாப்பா மாதிரி பனிமலையில் மத எரிமலை என்று செய்தி வெளியிடுகிறது. எப்படி அங்கே மத எரிமலை வந்தது? இம்மாதம் 10ஆம் தேதி கூட காஷ்மீரின் பெரிய முஃப்டி அமர்நாத் யாத்ரீகர்களைச் சந்தித்து வாழ்த்து கூறியுள்ளாரே!

பனிலிங்கத்துக்கு 40 ஏக்கர் நிலம் கொடுத்தார்கள். முசுலிம் அமைப்பு எதிர்த்தது. நிலத்தைத் திரும்பப் பெற்று விட்டார்கள். ஆனாலும் மாநில அரசு கவிழ்ந்து விட்டது.

இவை, முழு உண்மையா? பனிலிங்கத்தைச் சுற்றிக் கோயிலுக்கு வருபவர்களுக்குத் தங்கும் விடுதிகள் கட்ட சற்றுக்குறைய 40 எக்டேர் நிலம் ஒதுக்கப்பட்டது. 40 ஏக்கர் அல்ல. ஒரு எக்டேர் என்பது 2.47 ஏக்கர். 40 எக்டேருக்குச் சற்றுக் குறைவாக 100 ஏக்கர் நிலம் ஒதுக்கப் பட்டது. அக்கப்போர் ஏடு உண்மையை எழுதவேண்டும்.

இந்த நிலம் வனத்துறை நிலம். வனத்துறை நிலத்தைக் காடு வளர்ப்பதற்கு அல்லாத வேறு காரியத்துக்குப் பயன்படுத்தக்கூடாது என்பது வனச் சட்டம். தவிர்க்க முடியாமல் தேவைப்படு கிறது என்றால் இந்திய அரசின் ஒப்புதலுடன் இருமடங்கு வேறு நிலம் கொடுத்தால்தான் ஒரு மடங்கு வனநிலத்தைப் பெறமுடியும். அமர்நாத் விசயத்தில் 100 ஏக்கர் வனநிலத்திற்கு 200 ஏக்கர் நிலம் மாநில அரசு தரவேண்டும். தந்தார்களா? இல்லை, இந்திய அரசின் ஒப்புதல் பெற்றார் களா? இல்லை.

பின் எப்படி நிலம் தந்தார்கள்? ஆளுநரின் நிர்ப்பந்தம். இப்போதிருக்கும் ஆளுநர் அல்ல. பதவி முடிந்துபோன முன்னாள் ஆர்மிக்காரர், எந்நாளும் ஆர்.எஸ்.எஸ்.காரரான சின்கா. இப்போதிருக்கும் ஆளுநர் வோரா மக்கள் எதிர்ப்பைக் கண்டு நிலம் தேவையில்லை என்று எழுதிவிட்டவர். எனவே இவருக்கும் பிரச்சினைக்கும் தொடர்பில்லை என்பதை அக்கப்போர் ஏடு அறிந்து கொள்ளவேண்டும்.

இங்கே விசுவ இந்து பரிசத்துக்கு என்ன வேலை? பிரவீண் தொகாடியா ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்? பொய்யை மட்டுமே பேசுவது எனச் சங்கல்பம் எடுத்துக்கொண்டு இந்து வேடம் போடும் ஜைனர் இவர். திரிசூல தீட்சை புகழ் திருமேனி இவர். 100 ஏக்கரை 40 ஏக்கர் என ஏடு எழுகிறது என்றால் இந்த அரிச்சந்திரன் 39 ஏக்கர் என்கிறார். அதுவும் வெறும் 39 ஏக்கராம்? அதுதான் வெறும் நிலமாயிற்றே, அதற்கேன் போராட்டம்?

இரண்டு மாதங்கள் மட்டுமே பனிலிங்க தரிசனம் எனும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப் படாது என்கிறார், பரிசுத்தவான்! அவர் பார் வைக்காக தினமணிகதிர் ஏட்டில் கீதாவாசன் என்பார் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைக் கீழே தந்திருக்கிறோம்.

எல்லாமே இலவசமாகக் கிடைப்பதால், இந்த யாத்திரையை மேற்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது... தொண்டு நிறுவனங்கள் இலவச தின்பண்டங்களை இயற்கையால் எளிதில் ஜீரணிக்க முடியாத பாலிதீன் பைகளிலும் அலுமினியத் தாள்களிலும் அளிக்கின்றன. பண்டங்களைத் தின்று முடித்ததும் பயணிகள் தூக்கி எறியும். அந்த பிளாஸ்டிக் பைகள் மண்ணில் மட்காமல் கிடந்து சுற்றுச் சூழலை மாசுபடுத்துகின்றன. எழில் மிகுந்த இடங்கள் எங்கும் இறைந்து கிடந்த இந்த பிளாஸ்டிக் குப்பைகள் காண்போரின் கண்களை உறுத்தின. நீரோடைப் பாதைகளில் குவிந்துவிடும் இவற்றால் தேங்கும் குட்டைகள் உருவாயின. நிரூற்றுகள் அடைபட்டு நின்றன.. சொல்லி வைத்தாற்போல் அவர்கள் அனைவரும் கழிப் பிட வசதிகளை அமைத்திருந்த இடம் ஆற்றுப் படுகைகளே. இதனால் அங்கு காலார நடந்து இயற்கையை ரசிக்கவோ நீரில் ஆடிக்களிக் கவோ முடியவில்லை. கீழுள்ள கிராமங்களுக்கு நீர் வசதி தரும் ஆற்று நீர் அசுத்தம் ஆவதை, யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

(தினமணி கதிர், 11.10.1998)

 

போதுமா ஆதாரம்? சுற்றுச் சூழல் பத்தாண்டுகளுக்கு முன்பே பாதிக்கப்பட்டு விட்டது என்பதும் மேலும் கெடுதல் கூடுதலாகக் கூடாது என்பதும் நல்லவர்களின் எண்ணம், குறிக்கோள்! இதற்கும் பிரவீணுக் கும் தான் தொடர்பு கிடையாதே!

காஷ்மீர் மாநிலத்திற்கு அரசமைப்புச் சட்டப் பிரிவு 370-இன்படி உள்ள தனி அந்தஸ்து இதற்குக் காரணம் என்றும், அதை ரத்து செய்யாதவரை இந்நிலை தொடரும் என்று கரித்துக் கொட்டுகிறார்.

ஆறு ஆண்டுக்காலம் அடல்பிகாரி வாஜ்பேயி ஆண்டாரே, அப்போது இந்தப் பிரிவை நீக்கியிருக்கலாமே! ஏன் செய்ய வில்லை? நாள் பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்து விட்டு இப்பொழுது ஏன் புலம்பல்?

பனிலிங்கம் என்கிறார்களே, வழிபடும் பொருள் என்கிறார்களே, இது என்ன புண்ணிய பாரத பூமிக்கு மட்டும் சொந்தமானதா? உலகின் பல பகுதிகளிலும் இம்மாதிரி அமைப்பு உண்டே! இதனை ஸ்டாலக்மைட் (Stalagmite) என்கிறார்கள். கிரேக்கச் சொல் ளுவயடயபஅய என்பதிலிருந்து இங்கிலீஷ் சொல் வந்தது. கிரேக்கச் சொல்லுக்கு "சொட்டு" (Drop) சொட்டுதல் (Drip) என்னும் பொருள். சுண்ணாம் புக் குகைகளில் மேலிருந்து கீழாகக் கொட்டும் குளிர் நீர்க் குழம்பால் சேர்ந்து கீழி ருந்து மேல் நோக்கி வளர்ந்து காணப்படும் கால்சியம் கார்பனேட் என்கிறது என்சைக்ளோபீடியா!

இதே முறையில் குகையின் மேலேயிருந்து கீழ் நோக்கித் தொங்கிக் கொண்டிருப்பது (Stalactite) ஸ்டாலக்டைட் எனப்படுகிறது.

விஞ்ஞான விளக்கம் இப்படி இருக்கும் போது இது லிங்கம், பரமசிவனுக்கும் பார்வதிக்குப் பலான விசயம் சொல்லிக் கொடுத்த பவித்ரமான பகுதி இந்துக்கள் தானே! விசுவ இந்து பரிசத் தானே!

சுற்றுலாப் பயணிகள் வந்து பார்க்கும் இத்தகைய குகைகளில் இவற்றைத் தொடக் கூடாது என எச்சரிக்கை விடப்படுகிறது. ஏன்?

நொடி தோறும் இது வளர்கிறது; தொட்டால் வளர்ச்சி தடைபடும். கையில் உள்ள எண்ணெய்ப் பசை, அழுக்கு முதலியவை பட்டால் அவற்றின் நிறமே நிரந்தரமாக மாறிவிடும்.

இந்நிலையில் இவர்கள் மூன்று கல் அடுப்பு மூட்டியோ, கெரசின் ஸ்டவ்வைக் கொளுத்தியோ ரொட்டி சுட்டால் ஏற்படும் புகை முழுவதும் 15 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள சூழலைப் பாதிக்கும் என்பதோடு பனி லிங்கத்தையே பாழ்படுத்தி விடுமே!

தொட்டதனாலும், ரொட்டி சுட்டதனாலும் போன ஆண்டு பனிலிங்கம் கரைந்து போய் பல்லை இளித்ததே! அதனால்தானே போன ஆண்டு இருந்ததைவிட உயரமான கிரில்கேட் போட்டிருக்கிறார்கள் இந்த ஆண்டு! மறுக்க முடியுமா பிரவீண் தொகாடியா?

இரண்டு மாதங்களில் பனிலிங்கம் தரிசனம் செய்கிறார்கள். மீதி மாதங்களில் என்ன ஆகிறது பனிலிங்கம்? அதைக் கூறியிருக்க வேண்டாமா, அறிவு நாணயத்தோடு!

இதோ, தினமணி கதிர் கூறுகிறது படியுங்கள்: எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றம் அமர்நாத் லிங்கத்தைப் பற்றியதே! ஜம்மு காஷ்மீர் சுற்றுலாக் கழகக் கையேட்டில் இந்த லிங்கம் இயற்கையாக வளர்ந்த பனிலிங்க உருவம் என்றும் அது சந்திரனின் கலையை ஒட்டி வளர்வதும் தேய்வதுமானது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை முற்றிலும் நம்பி சடி எனும் குகை மூடும் திருவிழா நடக்கும் ஆகஸ்ட் மாதம் பவுர்ணமியன்று பனி லிங்கத்தைத் தரிசிக்கச் சென்றேன். பனி முழு வதும் உருகிக் கரைந்து அதன் உள்ளிருந்த சுண்ணாம் புக்கல்லால் ஆன லிங்க வடிவிலான மோல்டை (Mould) மட்டுமே கண்டு திரும்பினேன்.

(கீதாவாசன்: தினமணி கதிர், 11.10.1998)

பத்தாண்டுகளுக்கு முன்பே பனிலிங்க மோசடி பற்றி தினமணி கதிர் 11.10.1998 ஏட்டில் எழுதிய கீதாவாசன் (அன்று) 53 வயதான மலையேற்றப் பயணங்களை மேற்கொண்டு வருபவர்.

அந்த இடம் தூய்மையான இடம் என்று உருகி உருகி மாய்ந்து போகிறார்களே, பிரவீண் தொகாடியாவும் வேதாந்தமும்! இதையும் படியுங்கள், இந்து மத யாத்ரீகர்களின் யோக்யதையைத் தெரிந்து கொள்ள!

இந்த மோல்டின் மீது உருவான பனி லிங்கமே அமர்நாத் லிங்கம் என்பதையும் அது ஜூலை மாதம் குகை திறக்கப்படும் சிராவண பவுர்ணமியன்று மட்டுமே முழு வளர்ச்சியுடன் காணப்படும் என்பதையும் அறிந்து கொண் டேன். இதன் அருகிலேயே பனிக்குவியலின் வடிவில் இருந்த பார்வதி, கணேச லிங்கங்கள், கையேட்டில் காட்டப்பட்டுள்ள அளவுள்ள கச்சிதமான பனிலிங்க வடிவம் இயற்கையாக அமைய முடியாது என்பதை அறிவுபூர்வமாக உணர்த்தின.

ஆக இயற்கையில் ஏற்படுவதை, தெய்வாம்சம் எனக் கூறிப் பித்தலாட்டத்தில் ஈடுபடுகிறது இந்து மதம். பிரேசில் நாட்டின் மினாஸ் கிராய்ஸ், அயர்லாந்தில் கவுன்ட்டி கிளார், தி பர்ரன், லெபனானில் ஜெயட்டா க்ரோட்டோ, நியுஜிலாந்தில் ரோட்டருவா முதலிய பல இடங்களிலும் கிரீஸ் நாட்டிலும் இப்படிப் பட்ட ஸ்டாலக்மைட்களும் ஸ்டாலக்டைட் களும் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் ஏசுவின் விரல்கள், கால்கள், கைகள் எனக் கூறி யாரும் வணிகம் செய்யவில்லை.

சுண்ணாம்புக் கட்டை கட்டி அதன்மீது கால்சியம் கார்பனேட் படிந்து காணப்படும் நிலையை - முன்னதாகச் செயற்கை முறை, பிறகு இயற்கை முறை - என்று ஏற்பாடு செய்து ஏய்த்து வரும் இந்து மதப்புரட்டு சபரிமலை மகர விளக்குப் புரட்டு போல வெளிச்சத் திற்கு வரும்! உண்மை தெரியும்!
 

StumbleUpon.com Read more...

நிர்வாண சாமியாருக்கு 'ஜட்டி'

நிர்வாண சாமியாருக்கு 'ஜட்டி'


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP