நிர்வாண சாமியாருக்கு 'ஜட்டி'
>> Wednesday, August 6, 2008
நிர்வாண சாமியாருக்கு 'ஜட்டி'
ஈரோட்டில் கிரி அய்யர் பெண்ணிடம் அடிவாங்கியது நிர்வாணம் தந்த நிவாரணம் என்று கொண்டால், சென்னையில் மக்களின் இன்னல்களுக்கு நிவாரணம் தனது நிர்வாணம் தான் என்று ஊருக்கு தங்களது நிர்வாணம் மூலமே காட்டிக் (?) கொண்டு இருக்கும் திகம்பர சமண சாமியார்கள்.
சமீபத்தில் அருவருப்பில் அதிர்ந்து போன இன்னொரு நிகழ்வு. திண்டிவனத்தில் நிர்வாண சாமியாரின் மீது பெண்கள் பாலை ஊற்றி அது அவரது ஆண்குறியில் வழிந்த-போது அதைப் பிடித்து குடித்தார்கள் என்ற செய்திதான். மேலே சொன்ன சாமியார்கள் சென்னையில் உள்ள கொண்டித்தோப்பு பகுதியில் பொன்னிவளவன் தெருவில் உள்ள ஜெயின் மடத்தில் தங்கி நாள்தோறும் ஆண், பெண் என்ற பேதமில்லாமல் நிர்வாண தரி-சனமும், ஆசியும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண்கள் தலையிலிருந்து பாதம் வரையில் வெண்மை நிறத்தில் கவுன் ஒன்றை மாட்டிக் கொண்டு நிர்வாண சாமியாருக்கு எடுபிடியாக இருக்-கிறார்கள். நல்ல வாய்ப்பாக, ஆணாதிக்கமோ, எதுவோ, திகம்பர சமண சாமியார்களில் பெண்கள் நிர்வாணமாக இல்லை. என்ன சாதிக்க நினைக்கிறாகள் இந்த நிர்வாணக் கோலத்தில்? இதனை கண்டித்து தி.க. இளைஞரணியினர் திரண்டு சென்று அந்த மடத்தின் முன் நிர்வாண சாமியார்-களுக்கு ஜட்டி (உள்ளாடை) கொடுக்க முயன்ற ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கைதானார்கள்.
0 கருத்துரைகள்:
Post a Comment