|
சமீபத்திய பதிவுகள்
கிரிக்கெட் போலவே தேர்தலுக்கும் நடன அழகிகள் ஆட்டம்-சீர் கெட்டுப் போகும் சமுதாயம்
கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.50 கோடி மோசடி
|
வேலை தருவதாக கூறி பணம் வசூலிப்பு
தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் ரூ.50 கோடி மோசடி
சென்னை போலீசில் என்ஜினீயர்கள் புகார்
சென்னை, மே.11-
சென்னையில் வேலை தருவதாகக் கூறி ரூ.50 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாக தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் மீது என்ஜினீயர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தனியார் நிறுவனம்
சென்னை அண்ணாநகர் மேற்கு 18-வது மெயின் ரோட்டில் `விஸ்ப்ரோ டெக்னாலஜிஸ்' என்ற பெயரில் தனியார் கம்ப்ïட்டர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு, பல்வேறு நிறுவனங்களின் திட்டப் பணிகளை (புராஜக்ட் ஒர்க்) `ஆர்டர்' எடுத்து வாங்கி, அதை முடித்துக் கொடுக்கும் பணியினை செய்து வருகின்றனர்.
புராஜக்ட் ஒர்க் வேலைகளை செய்து முடிப்பதற்காக இந்த கம்பெனியில் கம்ப்ïட்டர் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களை வேலைக்கு சேர்த்தனர். இதற்காக பல பத்திரிகைகள், டி.வி.களில் விளம்பரம் செய்தனர். பி.சி.ஏ., எம்.சி.ஏ. முடித்த சாப்ட்வேர் என்ஜினீயர்களும் வேலைக்கு சேர்ந்தனர்.
ரூ.2 லட்சம் பணம்
இங்கு வேலையில் சேர விரும்புகிறவர்கள் முதலில் டெபாசிட் தொகையாக குறைந்தபட்சம் ரூ.35 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பணம் கட்ட வேண்டும் என்று இந்த நிறுவனத்தார் வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இந்தத் தொகையை கொடுத்தவர்களுக்கு மட்டும் வேலை தரப்பட்டதாகத் தெரிகிறது.
வேலைக்கு சேரும் என்ஜினீயர்களுக்கு முதல் 6 மாதம் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி காலத்தில் ரூ.11 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும், அதன் பிறகு தகுதிக்கேற்ப சம்பள உயர்வு வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவிப்பு செய்திருந்தது.
சம்பளம் வரவில்லை
நிரந்தர வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் சுமார் 1,600 பேர் லட்சக்கணக்கில் பணம் கட்டினார்கள். இதனால் டெபாசிட் தொகை கோடிக்கணக்கில் சேர்ந்தது. பணம் கட்டிய சிலருக்கு உடனே வேலை வழங்கப்பட்டது. பலருக்கு விரைவில் வேலை வழங்கப்படும் என்று கூறினார்கள். இந்த வகையில் அங்கு 2 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஏப்ரல் மாத சம்பளம் வரும் என்று கடந்த சில நாட்களாக ஊழியர்கள் காத்திருந்தனர். சம்பளம் வந்தபாடில்லை. தேதி 9 ஆகிவிட்டதால் சம்பளத்தை உடனடியாகத் தரும்படி ஊழியர்கள் சிலர் கேட்டனர்.
தலைமறைவு
சம்பளம் கேட்டவர்களிடம் அதிகாரி ஒருவர், `இன்னும் 2 மாதங்கள் வேலை பாருங்கள். 3 மாத சம்பளத்தையும் சேர்த்து தந்து விடுகிறோம். இதற்கு விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம். அப்படி வெளியேறியவர்கள் தலைமை அலுவலகம் சென்று பணம் கேட்டுப் பாருங்கள். தருவதை வாங்கிச் செல்லுங்கள்' என்று கூறினார். எனவே ஊழியர்கள் அனைவரும் கடும் கோபமடைந்து, அவரை அறை ஒன்றில் அடைத்து, பூட்டி விட்டனர். போலீசார் வந்து அவரை மீட்டுச் சென்றனர்.
அதைத் தொடர்ந்து அண்ணாநகர் மற்றும் திருமங்கலத்தில் இயங்கி வந்த `விஸ்ப்ரோ டெக்னாலஜி' நிறுவன அலுவலகங்கள் நேற்று முன்தினம் மாலை திடீரென மூடப்பட்டன. அதன் நிர்வாக இயக்குனர் சிவகுமார் மற்றும் பொதுமேலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் செந்தில் மற்றும் கிரண் என்ற பெண் அதிகாரி உள்பட 15 பேர் கம்பெனிக்கு பூட்டு போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். அவர்கள் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இதனால் லட்சக்கணக்கில் பணம் கட்டியிருந்த என்ஜினீயர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு வேலை பார்த்தவர்களில் 150-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று முன்தினம் திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தனர். அந்தப் புகாரில், ``விஸ்ப்ரோ கம்பெனி அறிவித்தபடி வேலையில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. பணம் கட்டியவர்களுக்கு குறிப்பிட்ட காலத்தில் வேலையும் வழங்கப்படவில்லை'' என்று கூறி இருந்தனர்.
இந்த புகார் குறித்து உடனே விசாரணை நடத்தும்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார். இணை கமிஷனர் பாலசுப்பிரமணியம், துணை கமிஷனர் ஜெயகவுரி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் அழகு சோலைமலை, திருமங்கலம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமங்கலம் போலீசார் தலைமறைவாக உள்ள கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சிவகுமார், பொதுமேலாளர் வெங்கடேசன், நிர்வாகிகள் செந்தில், கிரண் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ரூ.50 கோடி மோசடி
பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியதில் ரூ.50 கோடி வரை மோசடி செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். தப்பி ஓடிய மோசடி கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
விஸ்ப்ரோ டெக்னாலஜிஸ் என்ற இந்த நிறுவனம் கடந்த 8 மாதத்திற்கு முன்புதான் தொடங்கப்பட்டுள்ளது. அண்ணாநகர் பகுதியில் மட்டும் சுமார் 5 அலுவலகங்கள் உள்ளன. டி.வி. மற்றும் பத்திரிகைகளில் கவர்ச்சிகரமான விளம்பரங்களை கொடுத்து இளைஞர்களை கவர்ந்துள்ளனர். ``கை நிறைய சம்பளம் வேண்டுமா? உடனடியாக எங்களை நாடுங்கள்'' என்ற வாசகங்கள் அவர்களின் விளம்பரத்தில் இடம்பெற செய்துள்ளனர்.
இந்த மோசடி கும்பல் சிக்கினால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல கோடிக்கணக்கில் நடந்துள்ள தங்க காசு மோசடி பற்றிய பரபரப்பு அடங்கும் முன்னர் சென்னையில் மீண்டும் ஒரு மோசடி கும்பல் தலை தூக்கியிருப்பது போலீஸ் அதிகாரிகளை மட்டும் அல்லாமல் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரூ.40 ஆயிரம் பணம்
இந்த நிலையில், கம்ப்ïட்டர் நிறுவனத்தில் வேலை கிடைக்கும் என பணம் கட்டி ஏமாந்த இளைஞர்கள், இளம் பெண்கள் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர். அங்கு வந்த பாதிக்கப்பட்ட என்ஜினீயர் ஒருவர் கூறியதாவது:-
நான் பி.சி.ஏ. படித்திருக்கிறேன். விஸ்ப்ரோஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் கொடுத்த விளம்பரத்தை பார்த்து வேலைக்காக விண்ணப்பித்தேன். ரூ.40 ஆயிரம் பணத்தையும் கொடுத்தேன். 6 மாத பயிற்சி கொடுத்து ரூ.9 ஆயிரம் சம்பளம் தருவதாக சொன்னார்கள். அதை நம்பி என்னுடைய மோட்டார் சைக்கிளை விற்று பணத்தை கட்டினேன்.
ஆனால் எனக்கு எந்த வேலையுமே தரவில்லை. தினமும் என்னைப்போல் ஏராளமானோர் வேலைக்கு பணம் கட்டி சேர்ந்தார்கள். சென்னையில் நிறைய அலுவலகங்கள் வைத்திருக்கிறோம். அதில் ஏதாவது கிளையில் உங்களுக்கு வேலை தருவோம் என்றார்கள். ஆனால் கடைசியில் நிறுவனத்தை மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். தற்போது பலருக்கு வேலையில் சேர ஆர்டர் அனுப்பியுள்ளனர். அவர்களுக்கு விவரம் தெரிந்தால் அதிர்ச்சி அடைவார்கள்.
அங்கு வேலை பார்க்கும் பலருக்கு பணி எதுவும் தரப்படவில்லை. கம்ப்ïட்டர் முன்பு சும்மாதான் உட்கார்ந்திருப்பார்கள். இந்த வெட்டி வேலைக்கு இரவுப் பணியும் தரப்படும். அப்போதும் தூங்காமலும், வேலை செய்யாமலும் உட்கார்ந்திருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மோசடி நிறுவனம்
திருவொற்றிïரை சேர்ந்த சுப்பிரமணியன் கூறும்போது, ``இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்காக, ரூ.60 ஆயிரம் கட்டினேன். அலுவலகம் மிகவும் ஆடம்பரமாக இருந்தது. அங்கிருந்தவர்கள் எல்லாருமே ஆந்திராவை சேர்ந்தவர்கள்தான். தினமும் நூற்றுக்கணக்கானோர் இந்த நிறுவனத்தில் வந்து சேர்ந்தவண்ணம் இருந்தனர். உங்களுக்கு பிறகுதான் அவர்களுக்கு வேலை கொடுப்போம் என்று தெரிவித்ததால் நான் மிகவும் சந்தோஷப்பட்டேன். ஆனால் இப்போதுதான் அவர்கள் எல்லாரையுமே ஏமாற்றி விட்டு பணத்துடன் ஓடி விட்டார்கள்'' என்று தெரிவித்தார்.
கீழ்க்கட்டளையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் கலியமூர்த்தி கூறும்போது, ``நூற்றுக்கு 5 பைசா வட்டிக்கு வாங்கி எனது மகனுக்காக ரூ.40 ஆயிரம் பணம் கட்டியிருந்தேன். பணம் கட்டி 4 நாட்கள்தான் ஆகிறது. எனது மகன் எம்.சி.ஏ. படித்திருப்பதால் ரூ.1 லட்சம் வரை சம்பளம் கொடுப்பதாக சொன்னார்கள். 12-ந் தேதி வேலைக்கு சேரும்படி கடிதம் கொடுத்திருந்தனர். ஆனால் வேலைக்கு சேர்வதற்கு முன்பே இது மோசடி நிறுவனம் என்று தெரிந்து விட்டது'' என்றார்.
இனி வேறு எங்கு சென்றாலும் வேலை கிடைக்க தாமதமாகும் என்பதால் நிறைய பேர் பணம் போனால் போகட்டும் போலீசுக்கு போக வேண்டாம் என்று உள்ளனர். மோசடி நிறுவனத்தை ஆரம்பத்திலேயே போலீசார் கண்டுபிடித்திருந்தால் இந்த மாதிரியான சம்பவங்கள் நடந்திருக்காது என்று தெரிவித்தார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=411986&disdate=5/11/2008
மதத்தடை என்னை சிறந்த மனிதனாக்கி இருக்கிறது: சல்மான் ருஷ்டி கருத்து
மதத்தடை என்னை சிறந்த மனிதனாக்கி இருக்கிறது: சல்மான் ருஷ்டி கருத்து
லண்டன், மே. 11-
இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததால் எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மதத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சல்மான் ருஷ்டி கூறியதாவது:-
எனக்கு விதிக்கப்பட்ட மதத்தடை, மரண தண்டனை ஆகியவை என்னை பற்றி நிறைய சிந்திக்க வைத்தது. அது என்னை சிறந்த மனித னாக்கி இருக்கிறது. என்னை விரும்பாதவர்களை நானும் விரும்புவது இல்லை. நான் ஒரு கூண்டுக்குள் அடைப் பட்டு கிடக்க விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.http://www.maalaimalar.com/
இன்று அன்னையர் தினம்-மும்பையில் 4-வது மாடியில் இருந்து குழந்தையை வீசி கொன்ற தாய்
உண்மைதான் இன்று அன்னையர் தினம்.உலகுக்கு ஒரு மனிதனை தந்து விடுவது மட்டுமல்ல ஒரு அன்னையின் கடமை.அவன் மகானாக மாறும் வரை அவனுக்கு வழிக்காட்ட வேண்டும்.அதுவே உண்மையான அன்னையின் செயலாக அமையும்.
மும்பை, மே. 11-
மும்பை நரேலியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் தயானதா. இவரது மனைவி அனிதா. இவர்களுக்கு 4 வயதில் ரிஷிகேஷ் என்ற குழந்தை இருந்தது.
தயானதாவுக்கும் மனைவிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத் தன்று அனிதா கணவருடன் சண்டை போட்டார். அப் போது ஆவேசம் அடைந்த அனிதா கணவர் மீது உள்ள ஆத்திரத்தில் குழந்தை ரிஷிகேஷை 4-வது மாடியில் இருந்து வெளியே தூக்கி வீசினாள்.
ரத்த வெள்ளத்தில் உயி ருக்கு போராடிய குழந் தையை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்றனர். அங்கு குழந்தை ரிஷிகேஷ் பரிதாப மாக இறந்தது.
முதலில் குழந்தை தவறி விழுந்து இறந்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் உறவினர் ஒருவர் குழந்தை சாவில் மர்மம் இருப்பதாக புகார் கூறினார்.
போலீசார் தீவிர விசா ரணை நடத்தியதில் அனிதா குடிபோதையில் கணவருடன் சண்டை போட்டு குழந்தையை தூக்கி வீசியதாக தெரிய வந்தது. போலீசார் அவளிடம் விசாரணை நடத்தி வருகிறார் கள்.http://www.maalaimalar.com/