சமீபத்திய பதிவுகள்

ஜிமெயிலில் சிக்கலாமா?

>> Friday, February 26, 2010

 
 

 இன்று உலக அளவில் இமெயில் பயன்படுத்தும் அனைவரும் ஜிமெயிலில் அக்கவுண்ட் வைத்து பயன்படுத்தி வருகின்றனர். அதனை மட்டுமே நம்பி இருப்போர் பெரும்பாலான எண்ணிக்கையில் உள்ளனர். அதனை அவ்வளவாகப் பயன்படுத்தாதவர்களும், ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை வைத்து எப்போதாவது பயன்படுத்தி வருகின்றனர். எனவே ஜிமெயில் சர்வீசஸ் திடீரென முடங்கிப் போனால், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பதறிப் போய்விடுவார்கள்; அது சரியாகிக் கிடைக்கும் வரை புலம்பித் தவித்துவிடுவார்கள். ஆனால் கூகுள் மெயிலை வேறு சில வழிகளிலும் பெறலாம் என்பதைப் பலர் அறிந்திருப்பதில்லை. இங்கு அந்த வழிகளைக் காணலாம். 
கூகுள் மெயில் மூன்று வழிகளில் இயங்குகிறது. அவை ஸ்டாண்டர்ட், எச்.டி.எம்.எல். மற்றும் மொபைல் (standard, HTML and mobile)ஸ்டாண்டர்ட் வகையில் எர்ரர் காட்டப்பட்டு பிரச்னை இருந்தாலும், மற்ற இரண்டு வகைகள் இயங்கிக் கொண்டு தான் இருக்கும். பெரும்பாலான நேரங்களில் ஸ்டாண்டர்ட் வகை தான் சிக்கலில் மாட்டிக் கொண்டு நமக்குக் கிடைக்காமல் இருக்கும். எனவே அந்த வேளைகளில் எப்படி மற்ற வகைகளில் ஜிமெயிலைப் பெறலாம் என்று பார்க்கலாம்.
முதலாவதாக எச்.டி.எம்.எல். வகையில் சென்று பெறுவது. இதற்கு நீங்கள் செல்ல வேண்டிய இணைய முகவரிhttp://mail.google.com/mail/?ui=html  இது ஸ்டாண்டர்ட் வகைக்கு மாற்றானதாக இருக்கும். படங்கள் ஏதுமின்றி மிகவும் சாதாரணத் தோற்றத்தில் கிடைக்கும். இந்த இணைய முகவரியை உங்கள் புக்மார்க் / பேவரிட் தளப் பட்டியலில் வைத்துக் கொண்டால், ஸ்டாண்டர்ட் ஜிமெயில் பிரச்னைக் குள்ளாகுகையில் இதனைப் பயன்படுத்தலாம். 
இரண்டாவதாக, கூகுள் மெயிலின் மொபைல் பதிப்பை நாடுவது. இது நம் மொபைல் போன்களுக்கானது. இதனை உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரிலும் பெறலாம். இதனைப் பெற உங்கள் பிரவுசரின் அட்ரஸ் பாரில் m.gmail.com என டைப் செய்திட வேண்டும். இதன் வடிவமும் எலும்புக் கூடு போலக் காட்சி அளிக்கும். ஆனால் இது டெக்ஸ்ட் மட்டுமே காட்டுவதால், விரைவில் உங்கள் மெயில்கள் கிடைக்கும். இதனைப் பார்த்து நீங்கள் அசௌகரியப்பட்டால், ஐபோனுக்கான கூகுள் மெயில் தளத்தினைப் பெறலாம். இதனைப் பெற http://mail.google.com/mail/x/gdlakb/gp/ / என்ற முகவரியினை டைப் செய்திடவும். இறுதியாக நமக்குக் கிடைக்கும் ஐகூகுள் (iGoogle)  வசதி. நீங்கள்iGoogle பயன்படுத்தாதவராக இருந்தாலும் அதன் தளத்தின் மூலம் ஜிமெயில்களைப் பெறலாம். இன்னும் சொல்லப் போனால், ஐ கூகுள் தளத்தில் மூலம் நீங்கள் உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸ் முழுவதும் காண முடியும். ஜிமெயில் மட்டுமே பயன்படுத்தும் அனைவருக்கும் ஐ கூகுள் மிகச் சிறந்த தளமாகும். இதனைப் பெற http://www.google.com/ig/gmailmax   என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். மேலே காட்டப்பட்டுள்ள நான்கு வழிகளிலும் நீங்கள் உங்கள் ஜிமெயிலைப் பெறலாம். சரி, இந்த நான்கு வழிகளிலும் பெற முடியவில்லை என்றால் என்ன செய்வது? உங்கள் டெஸ்க் டாப் மெயில் கிளையண்ட் புரோகிராம்களை நாடவேண்டியதுதான். போன்ற இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் நமக்கு இந்த வகையில் உதவிடும். ஜிமெயில் சர்வரை இந்த புரோகிராம்கள் அணுகி, மெயில்களைப் பெற நிச்சயம் உங்களுக்கு இது உதவும். இதற்கு எப்படி செட் செய்வது என்ற வழியை http://mail.google.com/support /bin/answer.py?hl=en&answer=12103 என்ற முகவரியில் உள்ள கூகுள் தளம் உங்களுக்குப் படிப்படியாக விளக்கும். எனவே ஜிமெயில் என்றைக்கும் எப்போதும் கை கொடுக்கும் என்பதே இன்றைய நிலை.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கோழிக்குஞ்சுகளின் விழித்திரை மனிதனை விட விசேஷமானது


 வாஷிங்டன்:கோழிகளின் விழித்திரை மனிதனின் விழித்திரையை விட வண்ணங்களை பகுத்துணரும் சக்தி மிக்கது, என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.வாஷிங்டன் பல்கலைக் கழக விஞ்ஞானி ஜோசப் கார்போ இது குறித்து கூறியதாவது: மனிதனின் விழித்திரையை விட பறவைகளின் விழித்திரை சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.இதனால் தான் வானத்தில் வட்டமிடும் கழுகு கீழே கிடக்கும் சிறிய சுண்டெலியை கூட கூர்ந்து பார்த்து வேட்டையாடுகிறது. பாலூட்டிகள், பறவைகள் எல்லாம் ஒரே மூதாதையரை கொண்டவை. டைனோசர் உள்ளிட்ட ராட்சத விலங்குகள் கூட இரவில் வேட்டையாடும் குணம் கொண்டவையாக இருந்தவை. கும்மிருட்டிலும் கூட சுற்றுப் புறங்களை தெளிவாக பார்க்கும் திறன் வாய்ந்தவையாக இருந்தன. நாளடைவில் இந்த பழக்கம் பகலில் வேட்டையாட துவங்கியதும் மங்க துவங்கி விட்டது. ஆனால், இந்த விசேஷ குணத்தை பறவைகள் இன்று வரை கட்டி காக்கின்றன.குறிப்பாக, கோழிகள் அதை விட கோழி குஞ்சுகளுக்கு வண்ணங்களை பிரித்தறியும் வகையில் விழித்திரை பிரமாதமாக உள்ளது. மனிதனை பொறுத்தவரை சிகப்பு, நீலம், பச்சை வண்ணங்களை கூர்ந்து அறிய முடிகிறது. ஆனால், கோழிக்குஞ்சுகளின் விழித்திரை புறஊதா கதிர்களை கூட பகுத்துணரும் தன்மை வாய்ந்தவை.இதனால், தான் கோழிகள் தனது இணையை அதன் இறகுகளை வைத்து அடையாளம் காண்கின்றன.இதேபோன்ற குணம் மற்ற பறவைகளுக்கும் உள்ளன. இதன் காரணமாக தான் சில பறவைகள் வண்ண மிகு பழங்களை சுவைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன.மனிதர்களுக்கு 200 வகையான பாரம்பரிய குறைபாடுகளின் காரணமாக குருட்டு தன்மை ஏற்படுகிறது. கோழிக்குஞ்சுகளின் விழித்திரையிலிருந்து ஸ்டெம் செல்லை பிரித்தெடுத்து மனிதர்களுக்கு பொருத்துவதன் மூலம் குருட்டு தன்மை மற்றும் நிறக்குருடு குறைப் பாட்டை போக்கமுடியும், என நம்புகிறோம். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. இவ்வாறு ஜோசப் கார்போ கூறினார்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஹேக்கர்களின் புதிய இலக்குகள்

 
 


கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் மேக் அபி நிறுவனப் பிரிவு, இந்த ஆண்டில் அடோப் பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் தொகுப்புகளை வைரஸ் மற்றும் பிற நாசவேலை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சைபர் கிரிமினல்கள் இதுவரை மைக்ரோசாப்ட் சிஸ்டம் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்களைத்தான் தங்கள் இலக்காக வைத்துச் செயல்பட்டு வந்தனர். அதில் உள்ள பிரச்னைக்குரிய இடங்களைக் கண்டறிந்து, அவற்றின் மூலம் வைரஸ் களையும், மால்வேர்களையும் அனுப்பி நாசவேலைகளை மேற்கொண்டு வந்தனர். ஏனென்றால் இவைதான் கம்ப்யூட்டரில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் இப்போது பிளாஷ் மற்றும் அடோப் அக்ரோபட் ரீடர் போன்றவை அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவர்களின் கவனம் இவற்றின் பக்கம் திரும்பியுள்ளது. மேலும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் தொகுப்புகளைச் சரியான பாதுகாப்பு வளையத்தில் அமைத்து வருகிறது. 
அடோப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தங்கள் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மீது ஹேக்கர்களின் கவனம் திரும்பி இருப்பதனையும், பலர் புதிய மால்வேர் புரோகிராம்கள் மூலம் தங்கள் புரோகிராம்களுக்குள் புக முயற்சிப்பதனையும் ஒத்துக் கொண்டுள்ளார். அதற்கேற்ற வகையில் அவற்றை முறியடிக்க தங்கள் நிறுவனம் பேட்ச் பைல்களைத் தந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 
இவற்றுடன் மொஸில்லா நிறுவனத்தின் பயர்பாக்ஸ் பிரவுசர் மற்றும் ஆப்பிள் நிறுவனத் தின் குயிக் டைம் புரோகிராமில் இத்தகைய தாக்குதல்கள், அண்மைக் காலங்களில் அதிகமாகி உள்ளதையும் மேக் அபி நிறுவனம் கண்டறிந்து தெரிவித்துள்ளது. 
மேலும் இது பற்றிக் கூறுகையில், சோஷியல் நெட்வொர்க் தளங்களான பேஸ்புக் மற்றும் ட்விட்டர் தளங்களிலும் இந்த தாக்குதல் அதிக அளவில் இந்த ஆண்டு இருக்க வாய்ப்புகள் உண்டு எனவும் தெரிவித்துள்ளது. 
ஆனால் பன்னாட்டளவில் இது குறித்த விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளதால், இந்த சைபர் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட்டு அமலாக்கப்பட இருக்கின்றன. எனவே இந்த வகை குற்றங்கள் குறையவும் வாய்ப்புகள் உள்ளன.பயர்பாக்ஸ் பேட்ச் பைல்
அண்மையில் பயர்பாக்ஸ் 3.5.6 பிரவுசரில் உள்ள பல பிரச்னை களைத் தீர்க்கும் அப்டேட் பேட்ச் பைல் ஒன்றை, மொஸில்லா வெளியிட்டுள்ளது. இவற்றில் சில மிக ஆபத்தான வையாக இருந்தன. 62 இடங்களில் பிழை கண்டறியப்பட்டு, இந்த பேட்ச் பைல் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. இதனுடன் கிடைத்துள்ள வெளியீட்டுக் குறிப்புகளில், பயர்பாக்ஸ் பிரவுசரில் மிக மிக முக்கியமான மூன்று பிழைகள் இதில் சரி செய்யப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் செயல்படுகையில் பயர்பாக்ஸ் பிரவுசர் மெமரியில் பிரச்னைகளை ஏற்படுத்தியது எனவும், அது சரி செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இவை தவிர 62 இடங்களில் இருந்த சில குறைகளும் களையப்பட்டுள்ளன. இந்த பேட்ச் பைலை கீழ்க்காணும் முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிப் பயன்படுத்தலாம். http://enus.www.mozilla.com/enUS/products/download.html?product=firefox3.5.6&os=win&lang=enUS இதனால் நமோரகா (Namoroka) என்ற பெயரில் வெளியிடப்படப் போவதாக இருந்த பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு 3.6 இன்னும் கொஞ்சம் தள்ளிப் போகும் என்று தெரிகிறது


source:dinamalar

--
www.thamilislam.co.cc--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP