செய்தியும் 'பொய்'தியும்
>> Tuesday, September 30, 2008
| |||||||
|
அல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.
| |||||||
|
|
| |
இங்கு நவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். நாடு முழுவதும் வாழும் ராஜஸ்தான் மக்கள் குடும்பத்தோடு வந்து இந்த விழாவில் கலந்து கொள்வது வழக்கம். நவராத்திரியின் முதல் நாள் இன்று தொடங்கியதை அடுத்து ஜாமுண்டா தேவி கோவிலில் நேற்று இரவு சிறப்பு திருவிழா நடந்தது. இதில் ராஜஸ்தான் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டபக்தர்கள் கலந்து கொண்டனர். விடிய, விடிய திரு விழா நடந்தது. இன்று அதிகாலை5.30 மணிக்கு கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. அப்போது சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கோவில் உள் வளாகத்துக்குள் சென்றனர். அந்த பாதை குறுகியதாக இருந்தது. முன் பகுதியில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பதற்காக பல்லாயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் முண்டியடித்து உள்ளே நுழைந்தனர். இதன் நுழைவு வாயில் பகுதியில் மதில் சுவர் உள்ளது. அதை உரசி தள்ளிபடி பக்தர்கள் சென்றனர். அப்போது பாரம் தாங்காமல் அந்த சுவர் இடிந்து விழுந்தது. இதனால் பீதி அடைந்த பக்தர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள். இதை பார்த்த சிலர் கோவிலில் வெடிகுண்டு இருப்பதாக புரளியை கிளப்பி விட்டனர். இதனால் இன்னும் பீதி அதிகரித்தது. அந்த இடத்தில் பெரும் நெரிசல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு நெரிசலில் இருந்து தப்பிக்க முயன்றனர். இதனால் நெரிசல் மேலும் அதிகமாகியது. ஏராள மான பெண்களும், குழந்தைகளும் பக்தர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவர் களும் நெரிசலில் சிக்கி கொண்டனர். இதில் சிலர் தடுமாறி கீழே விழுந்தனர். அவர்களை மிதித்துக் கொண்டு மற்றவர்கள் ஓடினார்கள். கீழே விழுந்தவர்கள் மிதி பட்டே செத்தனர். பலர் மூச்சுத் திணறி கீழே சாய்ந்தனர். அவர்களும் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் அந்த இடத்திலேயே பலியானார் கள். 250 பேர் காயம் அடைந்தனர். அங்கு ஒரே கூச்சலும் மரண ஓல முமாக இருந்தது. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் அலறி யடித்து அங்கும் இங்கும் ஓடி னார்கள். 15 நிமிடத்துக்கு பிறகு நெரிசல் ஏற்பட்ட இடத்தில் நிலைமை சீரானது. உடனே போலீசாரும் பொதுமக்களும் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் ஜோத்பூரில் உள்ள மது ராதாஸ் ஆஸ்பத்திரி, மகாத்மா காந்தி ஆஸ்பத்திரி ஆகியவற்றில் சேர்க்கப் பட்டனர். ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலும், சிகிச்சை பலன்னிறியும் மேலும் பலர் செத்தனர். இத்துடன் சாவு எண்ணிக்கை 170 ஆனது. சிகிச்சை பெறுப வர் களில் 26 பேர் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. சம்பவ இடத்துக்கு உயர் போலீஸ் அதிகாரிகளும், மருத்துவ குழுக்களும் விரைந் தனர். முதல்-மந்திரி வசந்தராஜே சிந்தியாவும் அங்கு விரைந்தார். மாநில உள்துறை மந்திரி குலாப்சர்த் கதாரியா கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். பாதுகாப்பு குறைபாடுகள் தான் நெரிசலுக்கு காரணமா என்று கேட்டதற்கு பதில் அளித்த அவர் "போதுமான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனாலும் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் போய் விட்டது'' என்றார். விபத்து ஏற்பட்டது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கோவிலில் ஏற்பட்ட நெரிசலுக்கு கோவில் சுவர் இடிந்தது தான் காரணம் என்று ஒரு தகவல் தெரிவித்தது. ஆனால் பக்தர்கள் சிலர் கூறும்போது, "கோவிலில் வெடி குண்டு இருப்பதாக புரளி ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் பயந்து ஓடியதால் நெரிசல் ஏற்பட்டது'' என்றனர். மலையில் நிலச்சரிவு ஏற்பட்ட தாக புரளி கிளம்பியதாகவும் சில பக்தர்கள் கூறினார்கள். மலைப்பாதையில் சென்ற போது சிலர் தவறி கீழே விழுந்ததாகவும் இதனால் தான் நெரிசல் ஏற்பட்டதாகவும் இன் னொரு தகவல் தெரிவிக் கிறது. இந்தியாவில் கோவில் கூட்டங்களில் இதேபோல அடிக்கடி நெரிசல் ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகின்றன. மராட்டிய மாநிலத்தில் உள்ள கோவிலில் 2005-ம் ஆண்டு ஜனவரி மாதம் நெரிசல் ஏற்பட்டு 265 பக்தர்கள் பலியானார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் இமாச்சல பிரதேசத்தில் உள்ள நைனாதேவி மலைக் கோவிலில் நெரிசல் ஏற்பட்டு 130 பேர் பலியானார்கள். கடந்த ஜுலை மாதம் ஒரிசா மாநிலம் பூரி ஜெகநாதர் கோவிலில் நெரிசலில் சிக்கி 8 பக்தர்கள் பலியானார்கள். நெரிசலில் சிக்கி உயிர் இழந்தவர்களில் பலர் உடலில் எந்த காயமும் இல்லை. அவர்கள் மூச்சு திணறியே இறந்திருப்பது தெரிந்தது.பலியானவர்களில் பெண்கள், குழந்தைகளே அதிகம் பேர் இருந்தனர். |
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …
…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …
Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை
தமிழில் "நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'
Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.
Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….
References in Hadith
Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..
Critical responses
In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]
["lan astaslem" (Arabic: لن استسلم )
இத்தாலிய ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]
On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]
[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI
இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]
Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam
இன்று (27 செப்ரெம்பர்) ஓயாத அலைகள் -2 நடவடிக்கை மூலம் கிளிநொச்சி நகரம் தமிழர் தரப்பால் வெற்றி கொள்ளப்பட்ட நாள். இன்று கிளிநொச்சியானது தமிழர், சிங்களவர் தரப்பில் மட்டுமன்றி உலகிலும் உச்சரிக்கப்படும் ஒரு பெயர். தமிழர் தரப்பின் அரசியில் தலைமையகமாகக் கருதப்படுகிறது கிளிநொச்சி. பன்னாட்டு நிறுவனங்கள் அடிக்கடி சென்று வரும் நகரம் அது. |
தாய்லாந்து ஓபன் டென்னிஸ்
லியாண்டர் பெயஸ் ஜோடி `சாம்பியன்'
பாங்காங், செப்.29-
தாய்லாந்து ஓபன் டென்னிஸ் போட்டி பாங்காங்கில் நடந்தது. நேற்று நடந்த இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-லுகாஸ் (செக் குடியரசு) ஜோடி, அமெரிக்காவின் ஸ்காட்-டேவிட் மார்டின் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் லியாண்டர் பெயஸ் ஜோடி 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த வெற்றியை பெற 76 நிமிடம் தேவைப்பட்டது. லியாண்டர் பெயஸ் வென்ற 40-வது இரட்டையர் பட்டம் இதுவாகும். 2005-ம் ஆண்டில் லியாண்டர் இந்த பட்டத்தை ஆஸ்திரேலிய வீரர் பால் ஹான்லேவுடன் இணைந்து வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் வீரர் ஜோ வில்பிரட் டோங்கா 7-6, 6-4 என்ற நேர் செட்டில் செர்பியாவின் முன்னணி வீரர் நோவாக் டோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=441580&disdate=9/29/2008
|
|
நேற்றைய மோதலின்போது நாச்சிக்குடாவின் எல்லைப் பகுதியிலிருந்து 1.5 கிலோ மீற்றர் தூரம் வரை இராணுவத்தினர் முன்னேறியிருக்கின்றனர் என நேற்று மாலை படைத்தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன், இந்த மோதலில் 10 விடுதலைப் புலி உறுப்பினர்களும் இரு படைச்சிப்பாய்களும் உயிரிழந்துள்ளனர். 8 படையினர் காயமடைந்தனர் என்றும் படைத்தரப்பு தெரிவித்திருக்கிறது. 58ஆவது படைப்பிரிவினரே இந்த மோதலில் ஈடுபட்டனர் எனவும் கூறப்பட்டது. இதேவேளை, நேற்றைய மோதல் தொடர்பில் விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து தகவல்கள் எவையும் கிடைக்கப்பெறவில்லை. |
அமெரிக்காவின் பொருளாதாரத்தை சரிவிலிருந்து மீட்பதற்கான ஆயிரம் கோடி டாலர்கள் கணக்கிலான பெரிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க முயன்றுவரும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் உடன்பாட்டின் கடைசி கட்ட விஷயங்களில் தற்போது கவனம் செலுத்திவருவதாகக் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் பாதிப்புக்குள்ளான நிதி நிறுவனங்களிடம் இருந்து வராக் கடன்களை பெற்றுக்கொள்வதற்காக எழுபதாயிரம் கோடி டாலர்களை அமெரிக்க கருவூலம் செலவுசெய்ய அனுமதிக்கும் இத்திட்டத்திற்கு ஒரு ஆரம்பகட்ட ஒப்புதல் கிடைத்திருக்கிறது என்று காங்கிரஸ் மன்றத் தலைவர்கள் கூறுகின்றனர்.
இத்திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துவருகிறது என்ற செய்தியை ஜனநாயக கட்சி அதிபர் தேர்தல் வேட்பாளர் பராக் ஒபாமா வரவேற்றுள்ளார்.
ஒப்பந்தத்தின் இறுதி வடிவத்திற்கு தன்னால் ஆதரவு வழங்க முடியும் என்று நம்புவதாக குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளரான ஜான் மெக்கெய்ன் கூறியுள்ளார்.
பீஜிங், செப்.29-
சீன விண்வெளி வீரர்கள் 3 பேரும் சீன விண்கலம் ஷென்ஷூ-7ல் விண்வெளியில் பறந்தனர். அந்த விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் பூமியை சுற்றி வந்தது. அப்போது விண்வெளி வீரர் ஜாய் ஜிகாங் விண்வெளியில் நடந்தார். அமெரிக்கா, ரஷியாவுக்கு பிறகு விண்வெளியில் நடந்து சாதனை படைத்தது சீன வீரர்கள் தான்.
அவர்கள் நேற்று 5.40 மணிக்கு பூமிக்கு திரும்பினார்கள். உள் மங்கோலியாவில் உள்ள பகுதியில் அவர்கள் தரை இறங்கினார்கள். பூமிக்கு திரும்புவதற்கான வாகனம் பூமியின் வளி மண்டலத்தில் நுழைந்த 3-வது நிமிடத்தில் அவர்கள் அதில் இருந்து வெளியே வந்து பாரசூட்டில் கீழே இறங்கினார்கள். பூமிக்கு 50 கி.மீ உயரத்தில் பாராசூட் விரிந்தது. அது புல் வெளியில் இறங்கியது. அவர்களை தேடுவதற்காக ஹெலிகாப்டரும், மீட்புக்குழுவினரும் தயாராக இருந்த இடத்துக்கு அருகே அவர்கள் இறங்கினார்கள். அவர்கள் பத்திரமாக தரை இறங்கியதை கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=441572&disdate=9/29/2008
கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை
வெளிநாட்டு மாணவர்கள் கண்காணிக்கப்படுவார்கள்
முதல்-மந்திரி எடிïரப்பா அறிவிப்பு
மங்களூர், செப்.29-
கர்நாடகத்தில் தீவிரவாதத்தை ஒடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும். இதன்படி, வெளிநாட்டு மாணவர்களின் நடவடிக்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று முதல்-மந்திரி எடிïரப்பா கூறினார்.
முதல்-மந்திரி எடிïரப்பா நேற்று காலை 9 மணிக்கு விமானம் மூலம் மங்களூர் வந்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் மங்களூர் டவுன்ஹால் சென்றார். அங்கு நடந்த பிரம்மஸ்ரீ நாராயணகுரு சாமியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் கலந்து கொண்டார்.
விழா முடிந்ததும் நிருபர்களுக்கு எடிïரப்பா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாது:-
உதவவில்லை
கர்நாடகம் தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறதோ என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. தீவிரவாதிகளை ஒடுக்க மாநில அரசு அனைத்து விதமான நடவடிக்கை எடுத்து வந்தாலும் அது எந்த பலனையும் அளிக்கவில்லை.
இந்த விஷயத்தில் மத்திய அரசு கர்நாடகத்திற்கு எந்த விதத்திலும் உதவவில்லை. வெறும் வாய்ப்பேச்சோடு சரி. கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு இதுவரை செயல்படுத்தவில்லை. நாட்டில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் விட்டு விட்டது. மத்திய அரசின் மெத்தன போக்கு காரணமாக தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் தற்போது எல்லைமீறி விட்டன. எனவே, இனியும் மத்திய அரசு கை கட்டி நிற்காமல் இரும்புக் கரம் கொண்டு தீவிரவாதிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசியலாக்காதீர்
கர்நாடகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறு சிறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அரசியல் சாயம் பூச யாரும் நினைக்க கூடாது.
மேலும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் இனிமேல் நடைபெறாமல் தடுக்கவும், தசரா, ரம்ஜான் போன்ற பண்டிகை கொண்டாட்டங்களின் போது தீவிரமாக கண்காணிக்கவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
வெளிநாட்டு மாணவர்கள்
கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு நன்றாகவே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சொல்வது போல சட்டம்-ஒழுங்கு நிலைமை சீர்கேடு அடைந்து விடவில்லை. மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. மத்திய அரசின் உதவி இல்லாமலேயே கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகக் பாதுகாக்கப்படும். கர்நாடகத்தில் இருந்து வெடிகுண்டு போன்ற பொருட்கள் மற்ற இடங்களுக்கு அனுப்பப்படுவதாக வரும் செய்திகள் எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. இதனைத் தடுக்க கர்நாடகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
குறிப்பாக கர்நாடகத்தில் பாகிஸ்தான், வங்காள தேசத்தை சேர்ந்த மாணவர்கள் அதிக அளவில் படித்து வருகிறார்கள். இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் தீவிரமாக கண்காணிக்கப்படும். கர்நாடக மாநில போலீஸ் அதிகாரிகள் திறமையுடன் செயல்படுகிறார்கள். அவர்களின் பணிகள் பற்றி குறை சொல்ல முடியாது.
இவ்வாறு எடிïரப்பா கூறினார்.
தேவையில்லை
கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த எடிïரப்பா, ``கர்நாடகத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டை தேவையான அளவுக்கு போலீஸ் படை இருக்கிறது. எனவே, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரை வரவழைக்க வேண்டிய தேவை ஏற்படவில்லை'' என்றார்.
``கர்நாடக மாநிலம் சுள்ளியா தாலுகா வில் உள்ள மண்டேகோலு அருகே சில ஏக்கர் நிலத்தை கேரள அரசு ஆக்கிரமிப்பு செய்து இருப்பதாக கூறப்படுகிறதே?'' என்று ஒரு நிருபர் கேட்டார். அதற்கு எடிïரப்பா, ``கர்நாடகத்தின் வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்'' என்று பதில் அளித்தார்.
பேட்டியின்போது உடன் இருந்த மாநில பா.ஜனதா தலைவர் சதானந்த கவுடா கூறியதாவது:-
அசைக்க முடியாது
காங்கிரஸ் கட்சியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் ஒன்று சேர்ந்தால் கூட பா.ஜனதாவை அசைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேஷ்பாண்டே, முதலில் அவருடைய கட்சிக்குள் உள்ள பிரச்சினைகளை சரி செய்ய வேண்டும். அதற்கு முன் பா.ஜனதா பற்றி பேசக் கூடாது. பா.ஜனதாவை விமர்சிக்கும் தகுதி தேஷ்பாண்டேக்கு கிடையாது.
இவ்வாறு சதானந்த கவுடா தெரிவித்தார்.
அதிகாரிகளுடன் ஆலோசனை
அதன்பிறகு நகர வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் எடிïரப்பா ஆலோசனை நடத்தினார். பின்னர் மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து தேரடி வீதியில் உள்ள வெங்கடரமணசாமி கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலில் எடிïரப்பா சிறப்பு பூஜை செய்து சாமி கும்பிட்டார். எடிïரப்பா வருகையை முன்னிட்டு மங்களூரில் நேற்று பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
Muhammad and the Seal of Prophethood
A Sign or A Physical Deformity?
முகமது, "நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்ஆன் சொல்கிறது:
முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்ஆன் 33: 40)
Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali
முதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, "முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்" விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு(Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)
சஹிஹ் அல்-புகாரி(Sahih al-Bukhari):
பாகம் 1, அத்தியாயம் 4, எண் 190
'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.
பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352
சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.
(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.
சஹிஹ் முஸ்லீம்(Sahih Muslim):
அதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.
ஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது.(Book 030 Number 5790)
அப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரை(ஸல்)ப் பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா? என்று. அவர் சொன்னார்: "ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: " உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள்(xlvii. 19)" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)
அபு தாவுதின் சுனான்(Sunan of Abu Dawud):
குர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:
நான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)
திர்மிதியின் ஜமி சுனான்(Jami (Sunan) of at-Tirmidhi)
அலி இப்னு அபுதலிப் கூறியதவாது:
அலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும் கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)
அபுமூஸா கூறியதாவது
அபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம் க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந்த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, "இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், " நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது." அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு(சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , " எப்படி அந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்." என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)
அல்-டபரியின் சரித்திரம்(Tarikh (History of) al-Tabari):
…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… "நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது."…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)
அல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்தை– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது….." (பக்கம் 64)
அகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, " உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி." என்றான் "நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா" என்று நபி கேட்டார். "ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் "இதை திருப்பி அனுப்புங்கள்."; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், " ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை" (பக்கம் 66- 67)
"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் "அவருடைய மார்பைத் தையலிடு" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்…." (பக்கம் 75)
இங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்?
மூலம்: http://www.answering-islam.org/Shamoun/seal_of_prophethood.htm
முகமது பற்றிய இதர கட்டுரைகள்
|
அதேநேரத்தில், அதே சாரா பாலினை சந்தித்த பிரதமர் மன்மோகன்சிங்கின் மிடுக்கான செயல்பாடுகளை கண்டு, பத்திரிகையாளர்கள் பலரும் பாராட்டினர். பெரிய பொருளாதார நிபுணரை சந்திக்கிறோம் என, நினைத்து சாரா பாலின் பதட்டம் அடைந்ததையும் அவர்கள் கண்டனர். பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் என்பதையும், உலகின் முதல் தர பொருளாதார நிபுணர் என்பதையும், மன்மோகன்சிங் தன் செயல்பாடுகள் மூலம் வெளிப்படுத்தினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா.,சபையின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக, உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர். பிரதமர் மன்மோகன்சிங், பாகிஸ்தானின் புதிய அதிபர் ஆசிப் அலி சர்தாரி ஆகியோரும் சென்றுள்ளனர். அப்படிச் சென்றுள்ள தலைவர்கள், பன்னாட்டு தலைவர்களுடன் மட்டுமின்றி, அமெரிக்க குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அந்த அடிப்படையில், குடியரசு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்காவின் அலாஸ்கா மாகாண முன்னாள் அழகு ராணியுமான சாரா பாலினையும் சந்தித்து வருகின்றனர். சாரா பாலின் அழகி, அதிகம் அரசியல் அனுபவம் இல்லாதவர். அவர் விதவிதமாய் டிரஸ் அணிந்து ஆளும் கட்சி சார்பில் தேர்தல் பிரசாரம் செய்கிறவர் என்று பெயர் பெற்றவர். கடந்த புதனன்று சாரா பாலினை, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சந்தித்துப் பேசினார். அப்போது, "நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள். ஒட்டு மொத்த அமெரிக்காவும் உங்கள் மீது ஏன் பைத்தியமாக இருக்கிறது என்பது எனக்கு இப்போதுதான் புரிகிறது"என்று சர்தாரி கூறினார். அப்போது அங்கிருந்த உதவியாளர் ஒருவர், போட்டோ எடுப்பதற்காக இருவரையும் கைகுலுக்கும்படி கேட்ட போது, "நான் மீண்டும் போஸ் கொடுக்க வேண்டுமா?"என புன்சிரிப்புடன் கேட்டார். உடனே சர்தாரி, "உதவியாளர் வலியுறுத்தினால், நான் உங்களை தழுவிக் கொள்வேன்"என, அசடு வழியும் வகையில் பேசினார். அவரின் இந்தப் பேச்சை கேட்ட சாரா பாலின், எதுவும் கூறாமல், புன்னகையை மட்டுமே பதிலாக தந்தார். அதிபர் சர்தாரியின் சந்திப்புக்குப் முன்னதாக, பிரதமர் மன்மோகன்சிங்கை சாரா பாலின் சந்தித்தார். அப்போது, மன்மோகனின் முகம் இறுக்கமாக காணப்பட்டது. அதேநேரத்தில், அரசியலில் மற்றும் சர்வதேச விவகாரங்களில் சிறிதும் அனுபவம் இல்லாத நாம், மிகப்பெரிய பொருளாதார நிபுணரை, மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவரை சந்திக்கிறோம் என்பதால், சாரா பாலினும் ஒரு தர்ம சங்கடமான நிலைமைக்கு ஆளானார். சர்தாரியைப் போல அசடு வழியாமல், பிரதமர் மன்மோகன்சிங் அவரை லேசாக கையைப் பிடித்து குலுக்கியது, சாராவை மட்டுமின்றி, அங்கிருந்த நிருபர்களையும் வியப்படைய வைத்தது. சர்தாரியை சந்திக்கும் போது, சாதாரணமாக இருந்த சாரா பாலின், பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்கும் போது, சற்று பதட்டத்துடன் காணப்பட்டார். பிராந்திய பிரச்னைகள், எரிசக்தி பாதுகாப்பு உட்பட பல பிரச்னைகள் குறித்து, சாரா பாலினுக்கு பிரதமர் மன்மோகன்சிங் விளக்கினார். |
குழந்தையின் முகம் பார்த்தும் மாறாத தீவிரவாதிகள் |
|
நெரிசலான பகுதி என்பதால் மோட்டார் சைக்கிள் இளைஞர்களை எளிதில் நெருங்கிய சிறுவன், அவர்களிடம் பையை அளிக்க முயன்றான். ஆனால் அந்த சின்னஞ்சிறுவனின் முகத்தைப் பார்த்தும் மனம் மாறாத அவர்கள், பையை சிறுவனிடம் திணித்து விட்டு அங்கிருந்து தப்பி விட்டனர். ஏதுமறியாமல் சிறுவன் திகைத்து நின்றபோதுதான் குண்டு வெடித்து சிதறியுள்ளது |
பெங்களூரில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த பெண் ஒருவர் உயரதிகாரிகளின் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் 3 கடிதங்களை எழுதி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள மாரத்தஹல்லி என்ற இடத்தில் நோக்கியா நிறுவனத்தின் அலுவலகம் உள்ளது. இதில் சோனி என்ற பெண் சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார். கடந்த வியாழக்கிழமை இரவு சோனி தனது பெற்றோர், நண்பர் மற்றும் போலீசாருக்கு தனித்தனியே3 கடிதங்களை எழுதி வைத்துவிட்டு வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெள்ளிக்கிழமை முழுவதும் சோனியை தொடர்பு கொள்வதற்காக மைசூரில் உள்ள அவரது பெற்றோர்கள் முயற்சி மேற்கொண்டுள்ளனர். ஆனால் அவரை தொடர்பு கொள்ள இயலாததால் வீட்டின் உரிமையாளரை தொடர்பு கொண்டுள்ளனர். அதன்பிறகு சனிக்கிழமை காலையில் தான் சோனி தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. கடந்த சில தினங்களாகவே தனது மேலதிகாரிகள் தம்மை துன்புறுத்தி வந்ததாக சோனி கூறியதாகவும், இதுகுறித்து அவர்களிடம் தாம் பேசியதாகவும் சோனியின் தந்தை ஜெகதீஷ் தெரிவித்துள்ளார். தனது பெற்றோருக்கு எழுதிய கடிதத்தில் நிறுவனத்தின் மேலதிகாரிகள் எந்தவித காரணமுமின்றி தம்மை துன்புறுத்தி வந்ததாகவும், இதனால் விரக்தி அடைந்த தான் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தனது நண்பர் வெங்கட்டிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவரை திருமணம் செய்துகொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். தமது பெற்றோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் வெங்கட் உயர் கல்வி பெற வசதியாக தனது பணம் அனைத்தையும் வெங்கட்டிடம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தற்கொலை குறித்து திலக் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியுள்ளனர் |
கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் இந்துத்துவா பயங்கரவாத சங் பரிவார் அமைப்பைச் சேர்ந்த பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் சேலம் வருகையை கண்டித்து இன்று காலை பெரியார் திராவிடர்கழகம் சார்பில் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி தலைமையில் சேலம் இரும்பாலை சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 200க்கும் மேற்பட்ட தோழர்களுடன் அனைத்து மனிதநேய அமைப்புகளும் கலந்துகொண்டன.
ஆர்ப்பாட்டம் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் பொழுது இந்துத்துவா பயங்கரவாதிகள் பெரியார் திராவிடர்கழகத்தோழர்கள் மீது கற்களை எறிந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அமைதியாக தங்கள் கண்டனத்தை தெரிவித்த பெரியார் திராவிடர்கழகத்தோழர்களை கைது செய்து வாகனத்தில் ஏற்றிச்சென்றனர்.
அதன் பின்பு அப்பகுதிக்கு இரு சக்கரவாகனத்தில் தனியாக வந்த தோழர் ஒருவரை இந்துத்துவா பா.ச.க பயங்கரவாதிகள் காட்டுமிராண்டித்தனமாக தாக்கி அவரது இரு சக்கரவாகனத்துக்கு தீ வைத்து எரித்துள்ளார்கள்.
படுகாயம் அடைந்த தோழர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தோழர்கள் இன்னும் சிறையில் உள்ளனர்.
செய்தி
வ.அகரன்
தமிழகத்தில் ஆங்காங்கே கிறிஸ்தவ ஆலயங்கள் மீது கல்வீச்சு சம்பவம்
வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
கருணாநிதி எச்சரிக்கை
தமிழ்நாட்டில், கிறிஸ்தவ ஆலயங்களை தாக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார்.
சென்னை, செப்.27-
இந்து மத அமைப்பை சேர்ந்த லட்சுமணானந்தா சுவாமிகள் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, ஒரிசா மாநிலத்தில் கலவரம் மூண்டது.
கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்
அங்குள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன. கடந்த வாரத்தில், கர்நாடகா மாநிலத்திலும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் பிரார்த்தனை கூடங்கள் மீது தாக்குதல் நடந்தது.
ஒரிசா, கர்நாடக மாநிலங்களை தொடர்ந்து, சமீபத்தில் தமிழ்நாட்டிலும் ஒரு சில இடங்களில் கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டன.
கருணாநிதி எச்சரிக்கை
இந்த நிலையில், "தமிழகத்தில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்த முற்படுவோர், மத நல்லிணக்கத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவோர் மீது, தமிழக அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்" என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
"ஒரிசா, கர்நாடகம் போன்ற மாநிலங்களில் கிறிஸ்தவ தேவாலயங்களின் மீது நடைபெற்ற தாக்குதல்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஆங்காங்கு சில கிறிஸ்தவ ஆலயங்களின் மீது கல்லெறிதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
மத நல்லிணக்கம்
எந்த விதமான மத மாச்சரியங்களுக்கும் இடமில்லாத வகையில் தற்போது தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ்கிறது.
இதைக் கண்டு பொறுக்காத ஒருசிலர் இது போன்ற வன்முறைகள், அராஜகங்களில் யாராவது ஈடுபட்டு தமிழகத்தில் நிலவிடும் மத நல்லிணக்கத்திற்கும், மனித நேயத்துக்கும் இழுக்கினை ஏற்படுத்துகின்ற வகையில் நடந்து கொள்ள முற்படுவார்களேயானால், அதனை இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிராது.
கடும் நடவடிக்கை
மேலும் அத்தகைய செயல்களைக் கண்டிப்பாக அனுமதிக்காது என்பதோடு, அதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தமிழக காவல் துறை தனது கடமை உணர்ந்து உடனடியாக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் தயங்காது என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக்கொள்கிறேன்''.
இவ்வாறு கருணாநிதி கூறி உள்ளார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=440999&disdate=9/27/2008
Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன. இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன. இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன. இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன. இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். |