சமீபத்திய பதிவுகள்

மீண்டும் வருது கிழக்கிந்தியக் கம்பெனி

>> Monday, February 22, 2010

  விலை கொடுத்து வாங்கினார் ஒரு இந்தியர்

 

லண்டன் : இந்தியாவை நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆண்ட "கிழக்கிந்திய கம்பெனி' யை இப்போது ஒரு இந்தியர் வாங்கியுள்ளார். கி.பி., 1600ல் பிரிட்டனில் பலதரப்பட்ட வியாபாரிகள் சேர்ந்து, வெளிநாடுகளில் பல்வேறு பொருட்களை வியாபாரம் செய்து தம்நாட்டுக்கு செல்வத்தைச் சேர்ப்பதற்காக துவங்கப்பட்டதுதான் கிழக்கிந்தியக் கம்பெனி. இதை அப்போதைய பிரிட்டன் ராணி எலிசபெத் -1 அங்கீகரித்தார். பின் அந்தக் கம்பெனி, இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கால்பதித்து வியாபாரத்தில் கொடி கட்டிப் பறந்தது. அத்துடன் பிரிட்டன் அரசைப் போல் தனக்கான ராணுவம், கப்பல்கள், கணக்கற்ற ஊழியர்கள், இந்தியாவில் உயர்ந்த பதவிகள், பணம் போன்றவற்றைக் கொண்ட ஆலமரமாக வளர்ந்தது.கடந்த 1857ல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போரையடுத்து கிலியடைந்த பிரிட்டன், இந்திய நிர்வாகத்தை கம்பெனியிடமிருந்து பறித்து விக்டோரியா ராணியின் நேரடிப் பார்வையில் கொண்டு வந்தது. பின், அதையே காரணம் காட்டி, 1874ல் கம்பெனியை தேசிய மயமாக்கியது. கம்பெனியின் முக்கிய வர்த்தகம், டீ, காபி மற்றும் ஆடம்பரப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளில் கொள்முதல் செய்து உலகம் முழுவதும் விற்பதுதான். இந்தியாவை செருக்குடன் கட்டியாண்ட அந்தக் கம்பெனி இப்போது ஒரு இந்தியர் கையில். ஆம்... மும்பையைச் சேர்ந்த சஞ்சீவ் மேத்தா என்ற இளம் தொழிலதிபர், அந்தக் கம்பெனியை நிர்வகித்து வந்த 40 பங்குதாரர்களிடமிருந்து விலைகொடுத்து வாங்கி விட்டார். அந்தக் கம்பெனியில் 240 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்து, அதன் முதல் லண்டன் கிளையை மார்ச் மாதத்தில் திறக்க இருக்கிறார். "ஒரு இந்தியனாக என் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்; இந்தக் கம்பெனியை நான் வாங்கிய போது என்னுள் எழுந்த உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்ல முடியாது ' என்று உணர்ச்சிவயப்பட்டார் சஞ்சீவ் மேத்தா


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எக்ஸெல் டிப்ஸ்... டிப்ஸ்....

 
 

வரிசைகள் எத்தனை?
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்? 
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது. 
எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம். அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக நான்கு காலம் என்றால் 4இ எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4கீ எனக் காட்டப்படும். எங்கே, உடனே இந்த எண்ணிக்கையை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.படுக்கை வரிசைகளை இடைச்சேர்க்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இன்ஸெர்ட் மூலம் ஒரு வரிசையினை இணைப்பது எளிது. ஆனால் பல வரிசைகளை இணைக்க விரும்பினால் என்ன செய்வது? அதற்கான இரு வழிகளை இங்கு காணலாம். ஒவ்வொன்றாக இன்ஸெர்ட் அழுத்தி அடுத்தடுத்து வரிசைகளை இணைக்கலாம். முதல் வரிசையை இணைத்தவுடன் எப்4 கீயை அழுத்தினால், அழுத்த அழுத்த ஒரு வரிசை இணைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். (எப்4 கீ அழுத்துகையில் அதற்கு முன்னால் என்ன செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதோ அதே செயல்பாடு திரும்ப மேற்கொள்ளப்படும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.)
இன்னொரு வழி தான் இங்கு புதிதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் ஐந்து படுக்கை வரிசைகளை இணைக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு இணைக்குமுன், ஏற்கனவே இருக்கின்ற ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் இன்ஸெர்ட் மெனுவில் கீணிதீண் என்பதைத் தேர்ந்தெடுத்தால், எக்ஸெல் அழகாக ஐந்து படுக்கை வரிசைகளை இன்ஸெர்ட் செய்திடும்.செல் பார்முலா :
செல் ஒன்றில் உள்ள எண்ணைக் கொண்டு, பார்முலா ஒன்றை அமைக்கிறீர்கள். அந்த செல்லில் எண் உள்ளதோ இல்லையோ, எக்ஸெல் அந்த செல்லைத் தேடி, அதில் உள்ள மதிப்பைக் கொண்டு பார்முலாவினை இயக்கத் தொடங்கும். எண் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அல்லது எண்ணுக்குப் பதிலாக டெக்ஸ்ட் இருந்தால் விளைவு என்ன? அதில் எண்ணை நிரப்புமாறு கட்டளை இடச் சொல்லி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, A3 செல்லில் உள்ள மதிப்பைக் கொண்டு ஒரு பார்முலாவினை அமைக்கிறீர்கள். பார்முலா இப்படி அமைக்கலாம் =IF(ISNUMBER(A3), (A3*12)/52,"Enter number in cell A3"). A3  செல்லில் எண் இருந்தால், A3 * 12) / 52 என்ற கணக்கின் அடிப்படையில் மதிப்பு பார்முலாவிற்கான செல்லில் அமைக்கப்படும். இல்லை என்றால் "Enter number in cell A3."  என்ற டெக்ஸ்ட் அமைக்கப்படும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சினிமாவை விழுங்குகிறது ஐ.பி.எல்., கிரிக்கெட்


 Front page news and headlines today 

தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பக் கூடாது என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கமும், வினியோகஸ்தர்கள் சங்கமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், புதிய மோதல் உருவாகியுள்ளது. மீறும் தியேட்டர்களுக்கு புதிய படங்கள் தராமல், "ரெட் கார்டு' போடவும் வியூகம் வகுக்கப்பட்டு வருகிறது.ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் வருகிற 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இப்போட்டிகள் டில்லி, மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை உட்பட முக்கிய நகரங்களில் 59 ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் ஏழு ஆட்டங்கள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியை தியேட்டர்களில் காண, இந்தியா முழுவதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.இதையொட்டி, இப்போட்டிகளை இந்தியா முழுவதும் 450 தியேட்டர்களில் திரையிட, தனியார் நிறுவனங்கள் முயன்று வருகின்றன. தமிழகத்தில் 100 தியேட்டர்களில் கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்ப தனியார் நிறுவனம் ஒன்று களமிறங்கி, சென்னையில் ஐநாக்ஸ், பைலட், பேபி ஆல்பர்ட், பி.வி.ஆர்., மதுரையில் மாணிக்க விநாயகர், திருச்சியில் மாரீஸ் காம்ப்ளக்ஸ், கோவையில் கங்கா காம்ப்ளக்ஸ் தியேட்டர் உட்பட 70 தியேட்டர்களில் திரையிட ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும், 30 தியேட்டர்களில் ஒப்பந்தம் பேசி வருகிறது. இதன் மூலம் இந்நிறுவனமும், தியேட்டர்காரர்களும் கணிசமான வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளனர்.இந்த முடிவிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்கள் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. "தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட்டை ஒளிபரப்புவது, சினிமா தொழிலை அழித்து விடும்' என்று தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து தயாரிப்பாளர்கள் சிலர் கூறியதாவது:எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழ்ப் படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதங்களாக வாரத்தில் நான்கு அல்லது ஐந்து படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், கார்ப்பரேட் கம்பெனிகள் தியேட்டர் பிடிப்பதற்கு போட்டி போடுவதால், சுமாராக ஓடிக் கொண்டிருக்கும் படங்கள் கூட திடீரென்று தியேட்டர்களிலிருந்து தூக்கப்பட்டு, அடுத்தடுத்த படங்கள் திரையிடப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் சினிமா கம்பெனிகள், முன்னணி நடிகர்களின் படங்களை அதிகமான தியேட்டர்களில் வெளியிட்டு வருகின்றன.கடந்த ஜனவரியிலிருந்து இதுவரை 18 படங்கள் வெளியாகியுள்ளன. இதில், மூன்று படங்களை தவிர மற்ற படங்களின் தயாரிப்பாளர்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். இந்நிலையிலும் புதிய பட வெளியீட்டில் போட்டி ஓய்ந்தபாடில்லை. 21 படங்கள் ரிலீசிற்கு தயாராக உள்ள நிலையில், மார்ச் 12ம் தேதியிலிருந்து ஏப்ரல் 25ம் தேதி வரை, 70க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பப்பட உள்ளதால் ஆறு மணி நேரம் தியேட்டரில் இந்த ஒளிபரப்பு இருக்கும். இதனால், இந்நாட்களில் சில காட்சிகள் அல்லது நாள் முழுவதும் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்படும் நிலையும் ஏற்படும்.இவ்வாறு தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்து சென்னையில் உள்ள தியேட்டர் நிர்வாகிகள் சிலரிடம் கேட்ட போது, " ஐ.பி.எல்,, கிரிக்கெட் போட்டிகள் குறிப்பிட்ட தியேட்டர்களில் தான் திரையிடப்படுகிறது; இதற்கு ஒப்பந்தமும் செய்யப்பட்டு விட்டது. ஒப்பந்தத்தை மீற முடியாது. தனி தியேட்டர்களை விட காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் தான் அதிகமாக கிரிக்கெட் போட்டி ஒளிபரப்ப ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.படம் திரையிட்டு கிடைக்கும் வருமானத்தை விட கிரிக்கெட் போட்டி ஒளிரப்பில் பல மடங்கு கூடுதல் வருமானம் கிடைக்க வழி உள்ளது. இப்படியிருக்க தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கட்டுப்பாட்டுக்கு எப்படி நாங்கள் தலை ஆட்ட முடியும். திட்டமிட்டபடி தியேட்டர்களில் மார்ச் 12ம் தேதியிலிருந்து 45 நாட்கள் கிரிக்கெட் ஒளிபரப்பப்படும்' என்றும் தெரிவித்தனர். 

source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP