அதிர்சி தகவல்: 91 பேரைக் கொன்ற இடத்தில் இருந்து நீந்தித் தப்பிய ஈழத் தமிழ் பெண் !
>> Tuesday, July 26, 2011
91 பேரைக் கொன்ற இடத்தில் இருந்து நீந்தித் தப்பிய ஈழத் தமிழ் பெண் !
கடந்த 22ம் தேதி நோர்வே தலைநகர் ஒஸ்லோவிலிருந்து 50 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள உட்டோயா தீவில் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் போலிசார் போல வேடமிட்டு துப்பாக்கி ஏந்திவந்த ஆயுததாரி இளையோர்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார். இதில் சுமார் 91 பேர் உயிரிழந்தனர் என்பது யாவரும் அறிந்த விடையம். ஆனால் அக் கூட்டத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவரும் இருந்திருக்கிறார். அவர் தன்னை எவ்வாறு பாதுகாத்தால், ஆயுததாரி சுட்டபோது என்ன செய்தார் என்பதைக் கேட்கும்போது நாம் அதிர்சியில் உறைந்துபோனோம். அதிர்வு இணையம் சார்பாக அவரை நாம் தொடர்புகொண்டு மேலதிகத் தகவல்களைப் பெற்றுள்ளோம். குறிப்பிட்ட தீவில் பல நூற்றுக்கணக்கான இளையோர்கள் நின்றிருந்தவேளை ஆயுததாரி அவர்களை நோக்கிச் சுட்டு சுமார் 50 பேர் இறந்த பிற்பாடு ஆயுதத்தை ஒளித்துவைத்துவிட்டு உதவிசெய்யும் ஒரு பொலிசார் போல வந்து அனைவரையும் கட்டிடத்துக்குள் பாதுகாப்பாகச் செல்லுமாறு கூறியுள்ளார்.
இந் நபரின் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் தலைதெறிக்க ஓடி மறைவிடங்களைத் தேடியுள்ளனர். அங்கே நின்றிருந்த நூற்றுக்கணக்கான இளையோர்களை இவர் கட்டிடத்துக்குள் போகச்சொன்னதன் அர்த்தம் என்ன என்று புரிகிறதா ? எல்லோரும் கட்டிடத்துக்குள் சென்றிருந்தால், தான் மறைத்து வைத்த ஆயுதத்தை எடுத்துவந்து கட்டிடத்துக்குள் புகுந்து அவர் தாக்கியிருப்பார். அப்படி என்றால் இன்னும் பலர் உயிரிழந்திருப்பார்கள். ஆனால் அதிஷ்டவசமாக அவர் கூற்றைப் பல இளையோர்கள் ஏற்கவில்லை. அது புத்திசாலித் தனம் இல்லை என பலர் எண்ணியுள்ளனர். ஆயுததாரி பொலீஸார் போல வேடமிட்டு அனைவரையும் கட்டிடத்துக்குள் செல்லுமாறு உத்தரவிட்டவேளை, குறித்த தமிழ் பெண் அவருடன் பேசியிருக்கிறார். யார் சுடுகிறார்கள் எதற்காகச் சுடுகிறார்கள் என இப் பெண் அவரையே கேள்விகேட்டும் உள்ளார். அவரோ எனக்குத் தெரியாது ஆனால் யாரோ சுடுகிறார்கள் என்று பதிலளித்துள்ளார்.
சொன்ன பேச்சை இளையோர்கள் கேட்காத பட்சத்தில் திரும்பவும் மறைவிடத்துக்குச் சென்று தனது துப்பாக்கியை எடுத்து அவர் இளையோர்களை நோக்கிச் சுட ஆரம்பித்துள்ளார். அது ஒரு தீவு என்பதால் நீந்தத்தெரிந்த பல இளையோர்கள் தண்ணீரில் குதித்து நீந்தித் தப்பித்துள்ளனர். இதனிடையே குறிப்பிட்ட ஈழத் தமிழ் பெண்ணும் இவரது துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க ஏரிக்கரை நோக்கி ஓடியுள்ளார். இப் பெண்ணையும் ஆயுததாரி குறிவைத்துச் சுட்டுள்ளார். ஆனால் அவற்றில் இருந்து தெய்வாதீனமாகத் தப்பிய அவர் நீரில் குதித்துள்ளார். சாதாரணமாகவே ஐரோப்பாவில் காணப்படும் அனைத்துக் கடல், மற்றும் கடல் ஏரிகளின் வெப்ப நிலை என்ன என்று உங்களுக்குத் தெரியும். அதிலும் நோர்வே போன்ற குளிர் நாடுகளில் கடல் உறையும் நிலையில் குளிர் இருக்கும். நோர்வே நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் அதிகமாக இக் கடலில் குளித்துப் பழக்கப்பட்டதால், உறையும் குளிராக இருந்தாலும் அவர்கள் கடலில் நீந்த வல்லவர்களாக உள்ளனர். வெப்ப நாடுகளில் இருந்து வருவோர் இக் கடலில் குதித்தால் சில நொடிகளில் குளிர் தாக்கி இறக்கக்கூடும்.
தண்ணீரை உறையவைக்கும் குளிரில் அவர் சுமார் 1 கி.மீட்டர் தூரம் நீந்தியுள்ளார். மரணப் பயம் ஒரு புறம், தனது நண்பி மற்றும் நண்பர்கள் இறந்து கிடந்ததைப் பார்த்த அதிர்ச்சி ஒருபுறம் இருக்க அவர் கடலில் நீந்திய வண்ணம் இருந்திருக்கிறார். கரை எவ்வளவு தூரத்தில் இருக்கிறது , இல்லை எவ்வளவு நேரம் நீந்தவேண்டும் என்று கூடத் தெரியாத அத் தமிழ் பெண் தனது நம்பிக்கையை மட்டும் விட்டுவிடவில்லை. இதற்கும் மேலும் ஒரு கொடுமையும் அரங்கேறியுள்ளது. கடல் ஏரியில் நீந்தும் வேளை அவ்வளியே ஒரு படகு அவரை நோக்கி வந்துள்ளது. தன்னை நோக்கிச் சுட்ட ஆயுததாரி தனக்கு சூடு விளவில்லை என்பதனால் தன்னைத் திரத்திக்கொண்டு படகில் வருவதை அவர் கண்டுள்ளார். அதாவது கடலில் குதித்து தப்பிக்கும் இளையோர்களையும் கடலில் வைத்து சுட்டுக்கொல்ல ஆயுததாரி படகில் வருவதாக நினைத்த அவர் நீருக்குள் இன்னும் மூழ்கி ஆழத்துக்குச் சென்றுள்ளார். சில வினாடிகள் கழித்து வெளியே வரும்போது, அவர் வேறு ஒருவர் படகில் செல்வதைப் பார்த்துள்ளார்.
இவர் தண்ணீரில் மூழ்கி ஆழத்துக்குச் சென்ற காரணத்தால் படகில் சென்றவர் இவரைக் காணவில்லை. கண்டிருந்தால் காப்பாற்றி இருந்திருப்பார். இப்படியும் ஒரு நிகழ்வா என அனைவரையும் உறையவைக்கும் நிலை அங்கே இருந்திருக்கிறது. இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டு தளராத உறுதியோடு அவர் இளைப்பாறி இளைப்பாறி நீந்த ஆரம்பித்துள்ளார். இறுதியில் சுமார் 1 கி.லோமீட்டர் நீந்தி ஒரு கரையை அடைந்துள்ளார். அங்கே நின்ற நோர்வே மக்கள் சிலர் அவரின் கரங்களைப் பற்றி வெளியே இழுத்து உதவிசெய்துள்ளனர். இப் பெண் துணிச்சலாகவும் விடா முயற்சியோடும் தன்னைக் காப்பாற்றியிருந்தாலும், தனது நண்பர்கள் இறந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை. அத்தோடு தொலைக்காட்சியில் பார்த்தபோது போலீஸ் சீருடையில் தன்னோடு வந்து பேசிய ஆள் தான் அந்த ஆயுததாரி என்று அவர் தற்போது உறுதியாகக் கண்டறிந்துள்ளார். அவர் அடைந்துள்ள சோகங்களில் இருந்தும் அதிர்சியில் இருந்தும் அவர் விரைவில் மீண்டுவர உதவேண்டும்
--
http://thamilislam.tk Read more...