சமீபத்திய பதிவுகள்

தமிழர்கள் மீதான பண்பாட்டுப் படையெடுப்பு - 9

>> Friday, April 18, 2008

 

ஆரியநஞ்சு கலந்த குறள் உரை

தமிழ் மன்னர்கள் ஆரியப் பண்பாட்டுக்கு அடிமைப் படுத்தப்பட்டதுபோல, நம்முடைய பழக்க வழக்கங்கள் எப்படி அதற்கு வயப்பட்டு மாறின என்பதை முந்தையக் கட்டுரையில் கண்டோம்.
நமது இலக்கியங்கள் கூட, பார்ப்பனப் பண்பாட்டுக்கு ஆளாக்கப்பட்டது; அந்த பழைய நூல்களுக்கு உரையெழுதிய பல பார்ப்பனர்கள் அதற்கு அவர்களது இன உணர்வுக்கு ஏற்ப உரைகளையும், விளக்கங்-களையும் எழுதி உலா வரச் செய்தனர்.
திருவள்ளுவரின் திருக்குறள் என்ற அறநூல் உலக மாந்தர் அனைவருக்கும் உரிய வாழ்க்-கைக்கு வழிகாட்டிடும் ஒரு நூல்.
என்றாலும் இதனையும் ஆரியமயமாக்கிட - ஆரியக் கருத்து என்னும் வட்டம் வளையத்-திற்குள் கொணர பார்ப்பனப் புலவர்கள் தமிழாய்ந்தவர்கள் - அதனை மிக இலாவகமாகச் செய்துள்ளனர்.
திருக்குறள் எழுதப்பெற்று ஆயிரம் ஆண்டு-களுக்குப் பின்னர் வந்து அதற்கு உரை எழுதியவர் பரிமேலழகர் என்ற பார்ப்பனர்.
இவரது குறளுக்கு ஆரியப் பூச்சுப் பூசும் பல்வேறு முயற்சிகளை, குறளுக்கு இவர் எழுதிய உரைகள் மூலம் காணலாம்!
பரிமேலழகர் எழுதிய நுழைவு வாயிலான உரைப்பாயிரத்திலேயே திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் என்பதில், அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செயலும், விலக்கியன ஒழிதலுமாம் என்று மனுதர்மத்தைப் பின்-பற்றித்தான் வள்ளுவர் குறள் எழுதினார் என்று கூறிய விஷமம் எளிதாக ஒதுக்கி விட முடியாத ஒன்று!
தொடக்கத்திலேயே ஆரிய நஞ்சு கலந்த நிலை அது!
வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந்தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கொரு நீதி? என்று கேட்டார். மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள்!
மனுவின் மொழி அறமான-தொரு நாள் அதை மாற்றிய-மைக்கும் நாளே தமிழர் திருநாள் என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்.

இராவண காவியம் இயற்றிய இனமானப் பெரும் புலவர் குழந்தை அவர்கள், திருவள்ளுவரும், பரிமேலழ-கரும் என்ற ஓர் ஆய்வு நூலையே இது குறித்து மிக விளக்கமாக எழுதியுள்ளார்!
ஆரியக் கருத்துகளுக்கு மறுப்பு நூலே வள்ளுவரின் குறள் என்பது குறள் பற்றிய கருத்துகள் எழுதிய பல்வேறு புலவர்களின் - குறள் பற்றி பாடியவர்களின் தொகுப்பு மாலையில் காணலாம்.
வள்ளுவர் குறளை பரிமேலழகர் எப்படி அவர் என்னதான் சிறந்த புலவர் ஆயினும் - ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்புக் குரித்தாக்கிக் காட்ட முயன்றார் என்பதற்கு ஏராளமான குறள் உரைகள் ஆதாரங்கள் உண்டு.
வள்ளுவர் குறளில், கடவுள், கோயில், ஜாதி, ஆத்மா போன்ற சொற்களை 1330 பாக்களில் எங்கு தேடினாலும் கண்டறியவே முடியாது.
(குறளில் கோயில் இல்லை என்பதை குடும்ப விளக்கு நூலில் முதியோர் காதல் என்ற அய்ந்தாம் பாகத்தில் புரட்சிக் கவிஞர் ஒரு தாத்தா, தன் பெயரனுக்குக் கூறுவது போல் அமைத்துள்ள நயமான கதை சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.)
ஒல்காப்புகழ் படைத்த தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய உச்சி மேல் புலவர் கொள் நச்சினார்க்கினியர் (இவர் பார்ப்பனர் என்பது முடிபு) எழுதுவதை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் தனது தொல்காப்பியப் பூங்கா நூலில் (294ஆம் பக்கத்தில்).
... களவொழுக்க முறையை ஒட்டி காதலர்கள் கூடிப் பேச வாய்ப்பு வந்த வேளை ஓரையும் நாளும் உத்தமமாயில்லை யென்று ஒத்திப்போடும் வழக்கம் மட்டும் உண்டாம் என்று; நச்சினார்க்கினியர் என்னும் உரையாளர் நவிலுகின்றார். நாளும் ஓரையும் பார்த்தல் நலமே என்று இன்னொரு உரையாளர் இளம் பூரணர் என்பார் இதற்கு அதே உரை கூறியுள்ளார் ஏறத்தாழ! ஆய்வுரை எழுதியுள்ள அறிஞர் வெள்ளை வாரணனார், ஓரை எனில் விழாவும் விளை-யாட்டும் என்கின்றார் ....
காப்பியர் நூற்பாவில் ஓரையென்ற சொல்லுக்கு கால நேரமெனும் பொருள் தவிர்த்து விழாவெனவும் ஒரு பொருள் கொள்வதானால், அக்கால வழக்கத்தில் நாள்கோள் பார்ப்பதில்லை எனும் செய்தி நிலைநாட்டப்படும்! இல்லை இல்லை பார்ப்பதுண்டு என்று சொன்னால்; இடையில் புகுந்த கொள்கையினால் நாளும் கோளும் நம்மினத்தில் தேளும் பாம்புமாய் வந்து சேர்ந்தன என்போம்!
(தொல்காப்பியப் பூங்கா, பக்கம் 295)

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டுக் காட்டிய பெரும் ஆய்வாளரான புலவர் கா.வெள்ளைவாரணன் அவர்கள் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் யான் பயின்ற காலத்தில் அவர் என் தமிழாசிரியர் என்பது மகிழத்தக்க பெருவாய்ப்பு ஆகும்).
அவர் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம் என்ற நூலில் (1957) (அண்ணாமலைப் பல்கலைக் கழக வெளியீடு) பண்பாட்டுப் படையெடுப்பு களவியலையும் விட்டு வைக்கவில்லை என்று எழுதுவதை அடுத்த இதழில் காண்போம்.

(வளரும்)

 http://unmaionline.com/20080401/pa-12.html

 

StumbleUpon.com Read more...

உலக வங்கி - இந்தியா - அயல் உறவு-உலகப் பார்வை

உலகப் பார்வை

உலக வங்கி - இந்தியா - அயல் உறவு

- செ. முகிலன்

அமெரிக்காவின் நோக்கம்
வெனிசுலா குடியரசுத் தலைவர் ஹியூகோ சாவேஸ். அமெரிக்கா கடந்த காலம் என்ற ஒன்றே நமக்கு இல்லாதது போல் ஆக்கும் நோக்கத்துடன் இளைஞர்கள், குழந்தைகள் மனங்களை ஆக்கிரமிக்க முயல்கிறது. நம் மக்களை வருங்காலம் என்ற ஒன்றே இல்லாதாதவர்களாக ஆக்கிவிடத் தூண்டுகிறது என்று கூறியுள்ளார்.
உலக மயம்
எல்லை வகுத்துக் கொள்கிற உரிமையை நம் அரசிடம் இருந்து பறிப்பதற்காகவே அது எல்லைகளை உடைக்கிறது. தேசக்கோடுகள் என்பதும் ஆளுமைக்குரிய பகுதி என்பதும் பெயருக்குத்தான் எல்லா தேசங்களையும் பன்னாட்டு மூலதனங்களின் குசயஉளைந ஆக மாற்ற முயற்சிக்கிறது என்பதே உண்மை..
வளர்ச்சி
சென்செக்ஸ் புள்ளிகளையும் அன்னியச் செலாவணி இருப்பையும், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் (ஜி.டி.பி.) உலக வங்கி தரும் புள்ளி விவரங்களையும் கதைக்காமல் தேசிய மாதிரிக் கணக்கெடுப்பு அறிக்கைகளையும் ஆட்சி செய்பவர்-கள் படிக்க வேண்டும். நியூயார்க் நகரக் குப்பை-களையும், மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு இந்தியாவுக்கு அனுப்பியுள்-ளார்-கள். இது நாம் வளர அமெரிக்கா அளிக்கும் உதவியாகுமா?
உலக வங்கி பன்னாட்டு நிதியத்தின் கூட்டத்தில் நிதியமைச்சர் கிராமங்களில் விவசாயத்தை நம்பி 60 கோடி மக்கள். வளர்ச்சி விகிதம் 4 சதவிகிதம் குறைவே. பன்னாட்டு நிதியம் வளர்ந்த நாடுகளின் தலைமையில் மட்டுமே தொடர்வது சரியல்ல என்று விளக்கமளித்துள்ளார்.
அணிசாரா இயக்கம்
எகிப்து, இந்தோனேசியா, யுகோஸ்-லாவி-யாவுடன் இணைந்து இந்தியா ஏற்படுத்தியது. இன்று 118 நாடுகள் அடங்கியது அணிசாரா இயக்கம். காமன்வெல்த் மாநாட்டில் அத்தனை சிறிய நாடுகளும் இந்திய வேட்பாளரை ஆதரித்ததன் மூலம் அணி சாரா இயக்கத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்து இந்தியா இழந்த மரியாதையை பெற வேண்டும், ஈராக்கை நிர்மூலமாக்கிய பின், ஈரானையும் நிர்பந்தப்படுத்த, அமெரிக்காவுக்கு இந்தியாவும் அடிபணிந்தது. ஈரான் மீதான குற்றச்சாட்டு பொய் என்றாகிவிட்ட பின்பாவது நாம் சுயசிந்தனை பெற்று அணிசாரா அயல்துறை கொள்கையை மீட்டு எடுக்க வேண்டும். என் வீட்டிற்குள் எல்லா நடுகளின் பண்பாடும் இயல்பாய் பரவ வேணடும், எதுவும் என்னை அடிமைகொள்ள அனுமதியேன் . - காந்தி
மகாத்மாவும், பெரியாரும் கட்சியையோ, பணத்தையோ கொண்டு மாற்றங்கள் நிகழ்த்த-வில்லை. மக்களை திரட்டியே மாற்றங்கள் கொண்டு வந்தார்கள்.
அயல் உறவு
அய்.நா. அவையின் அறிவுக்கு எட்டிய இலங்கை மனித உரிமை மீறல்கள் தொப்புள் கொடி உறவான இந்தியாவுக்கு எட்டவில்லை. சிங்கள அரசு எந்த நேரத்திலும் நமக்கு நட்பு நாடாக இருந்ததில்லை. இந்திராகாந்தியிடம் இருந்த தைரியம் இன்று இல்லை. பாகிஸ்தானில் நெருக்கடி நிலை. இந்தியா வருந்தியது. ஆனால் எதிர்க்கவில்லை. மியான்மரில் புத்த பிக்குகளை ராணுவ அரசு கொன்று குவித்தபோது, அமைதி திரும்ப அனைவரும் முயல்க என்றதே தவிர, கண்டனமோ, போராட்டத்திற்கு ஆதரவோ தெரிவிக்கவில்லை. அமெரிக்காவே தலாய்லா-மாவை கவுரவிக்கும் போது அதில் இந்தியா கலந்து கொள்ளவில்லை.
இலங்கைப் பிரச்சினையிலும் இதுவரை எந்த வித திடமான வெளிப்படையான முயற்சியும் எடுக்கவில்லை. வங்க தேசத்திலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடியவில்லை. தென் ஆசியாவில் மக்கள் தொகையிலும் பொருளாதாரத்திலும் ராணுவ பலத்திலும் நாம்தான் வல்லரசு என்று இந்தியாவிற்குத் தோணுவதே இல்லை.
அன்னிய செலாவணி
1990--91-ல் இறக்குமதி 50,086 கோடி, ஏற்றுமதி 3,31,152 கோடி, பற்றாக்குறை ரூ. 16,934 கோடி, 2005-06-ல் பற்றாக்குறை ரூ. 2,29,000 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 16 ஆண்டு-களில் இதுவரை ஏற்றுமதியை கூடுதலாக்கி எந்த ஆண்டும் நேர் செய்ததில்லை. ஆனால், அன்னியச் செலாவணி கையிருப்பு உயர்ந்துள்ளது.
அன்னிய முதலீடு, புதிய தொழிலில் போட்ட மூலதனத்தை விட உள்நாட்டு தொழிலை கபளீகரம் செய்ததே அதிகமாகும். அதைவிட அதிகம் பங்குச் சந்தை வர்த்தகத்தில் போட்டது பல மடங்கு. 2007 மார்ச்சி-ல் 5200 கோடி டாலராக பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு விசுவரூபம் எடுத்துள்ளது. இதற்காக நாம் கொடுத்த விலை ஏராளம். அன்னிய மூலதன வரவுக்கு கட்டுப்பாடு, நிபந்தனை போட்டது யார் என்று எதுவும் தேவையில்லை. லாபத்திற்கு வரி இல்லை பங்கு வர்த்தகம் சில நேரங்களில் வியப்பாகவும், சில நேரங்களில் கவலையளிப்பதாகவும் இருக்கிறது -ப. சிதம்பரம். இந்த மாயாபஜார் சூதாட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு சிந்திக்க மறுக்கிறது.
உலகவங்கி, பன்னாட்டு நிதியத்தின் கட்டளைகள்
1)நியாய விலைக் கடைகள் மூடப்பட-வேண்டும்.
2) உணவு தானியங்களை மத்திய மாநில அரசுகள் கொள்முதல் செய்யவேண்டாம்.
3) உணவுத் தேவை ஏற்படின் உலக டெண்டர் மூலம் வாங்க வேண்டும்.
4) தானியக் கையிருப்பு இனி வேண்டாம்.
5) பொதுத்துறை நிறுவனங்களை விற்றுவிட வேண்டும்.
6) நியாய விலைக் கடைகளை மூட முடியாத நிலையில் அந்த பொருட்களுக்கான மானியத்தை வெட்டவேண்டும்.
7). தொலைத்தொடர்பு துறையில் 74 சதவிகித அந்நிய முதலீட்டை அனுமதிக்கவேண்டும்.
8) தேசிய வங்கிகள் 67 சதவிகிதப் பங்குகளை விற்கவேண்டும். மானியம் வேண்டியவர்களுக்கு சென்று சேர்வதில்லை. அதனால் மானியத்தை நிறுத்தவேண்டும் என்கிறார் அன்புள்ளம் கொண்ட பிரதமர்.
பாதுகாப்புக் கட்டமைப்பு உடன்பாடு
இப்படி ஒரு ஒப்பந்தம் அமெரிக்காவுடன் கையெழுத்தாகியுள்ளது. இனி இந்தியா அமெரிக்காவின் ராணுவக் கூட்டாளியாகிவிடும்.
1) ஈராக் பிரச்சினையில் மக்களின் எதிர்ப்பை தாங்கமாட்டாமல் இங்கிலாந்து பிரதமர் டோனிபிளேர் பதவி விலகினார்.
2) இந்தியத் துறைமுகங்கள், விமானத் தளங்கள் அமெரிக்காவுக்கு பயன்படும் படைகள் வந்து தங்கும், எண்ணெய் நிரப்பிக் கொள்ளும், சூட்டைத் தணிக்க பெண்கள் விருந்து கேட்டுப் பெறும்.
3) அமெரிக்கா வியட்நாம் யுத்தத்திலும் ஆப்கான் மீது குண்டு போடவும் ஜப்பான் தளங்களை பயன்படுத்தியது. இந்த ரத்த வெறியை மக்கள் எதிர்த்ததால் பதவி விலகினார். ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.
4) ஈராக்கில் இருந்து பிரிட்டிஷ் படைகள் வெளியேறின. தென்கொரியப் படைகள் வெளியேறுகின்றன.
5) இனி அமெரிக்காவின் சண்டியர் தனத்திற்கு இந்தியா படைகளை அனுப்பவேண்டும். அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களுடன்.
அணுசக்தி ஒப்பந்தம்
இனி நடுநிலை அணிசேரா என்று இந்தியா வாய் வேதாந்தம் பேசக் கூடாது -கண்ட லிசாரைஸ், அமெரிக்க வெளியுறவு அமைச்சர். அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே மிக மோசனவர் புஷ் --அமெரிக்க மக்கள். புஷ் இருக்கும் வரை எந்த உடன்பாடும் கூடாது. ஆஸ்திரேலிய மக்கள் புஷ் ஒரு சைத்தான் -போப் ஆண்டவர் இந்தியாமீது பரிவும் அக்கறையும் கொண்டவர் இது நமது பிரதமர் நட்ட நடுநிசியில் 60 ஆண்டு மரபை உடைத்து புஷ்ஷை விமான நிலையம் சென்று வரவேற்றார் பிரதமர்.
அமெரிக்கா அதன் தீவில் அணு உலை விபத்தால் ஏற்பட்ட காரியத்தை தடுக்க 7 ஆண்டுகளாக போராடி 100 கோடி டாலர் செலவு செய்துள்ளது. கான்கிரீட் கலவையை மீறியும் கதிரியக்கம் பரவும் என்பது உண்மை என்று ஆகியுள்ளது.
ஜப்பானில் ஓர் அணு உலை உடைந்தது. கதிரியக்கம் கடலுக்குள் திருப்பிவிடப்பட்டது. பிரிட்டன் ஒவ்வொரு அணு உலையாக இழுத்து மூடுகிறது. நியூயார்க் அருகில் லாங்அய்லாண்டு தீவில் அமைத்த அணு உலையை நியூயார்க் மக்களின் எதிர்ப்பால் இன்றுவரை இயக்கவில். ஒரு அணு உலையின் ஆயுட்காலம் 40 ஆண்டு ஆனால், உயிரினங்களை அழிக்கும், ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் நீடிக்கும். கதிர் இயக்கக் கழிவுகளை எங்கே கொட்டுவது?
50 ஆண்டுக்கால இந்திய அணு சக்தி சரித்திரத்தை புரட்டிப்போட்டு விடும்இந்த ஒப்பந்தம் -ஏ.என். பிரசாத் முன்னாள் தலைவர் பாபா அணுசக்தி ஆய்வுமையம்.
இந்தியாவில் அபரிமிதமாக கிடைக்கக் கூடிய தோரியத்தை பயன்படுத்தி அணுமின் உற்பத்தி செய்து தன்னிறைவை எட்ட முடியும் -அப்துல்கலாம் இந்த விவகாரத்தில் இப்பொழுதே அமெரிக்கா மிரட்டல் விடுவது இந்தியாவின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்படாதா?
ரஷ்யா, கனடா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அடிமை ஒப்பந்தம் இல்லாமல் 400 கோடி ரூபாய் அணுசக்தி பொருட்களைத்தரத் தயாராக இருக்கின்றன. தொழில் நுட்பத்தைத் தர பிரான்ஸ் தயார் என்கிறது.
மீண்டும் ரஷ்யாவுடன் நாம் கூட்டு சேருவதைக் தடுப்பது, பொருளாதாரப் போட்டியாக இருக்கும் சீனாவை எதிர்கொள்வது குடியரசு கட்சியை வீழ்ச்சியிலிருந்து மீட்பது, இந்த ஒப்பந்தத்தால் சாதித்து விட்டதாக விளம்பரப்படுத்திக் கொள்வது - இதுவே புஷ்ஷின் நோக்கம். உலக வங்கி
டில்லியில் செப்டம்பர் மாதம் உலகப் பட்டிமன்றம் நடத்தியது. மக்கள் தீர்ப்பாயம் உலக வங்கிக் கடனால் லாபம் யாருக்கு? தீர்ப்பு - லாபம் உலக வங்கிக்குத்தான். பாலம், சாலை, வாய்க்கால் என்ற 60 பணிகளுக்கு கடனளிக்கிறது.
1) உலக வங்கி வளர்ச்சியடைகிறது. 2) இந்தியாவின் பெரும் தொழில் நிறுவனங்கள் வளர்கின்றன.
3) அரசியல்வாதிகள், மேல்தட்டு அதிகாரிகள் வளர்கிறார்கள்.
4) ஏழைகளுக்காக என்று ஏழ்மையைக் காட்டி கடன் பெறப்படுகிறது.
5) 2001-07 வரை 1.37,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்
6) கடற்கரைப் பகுதிகளில் மீனவர்கள் தொழிலை இழந்துள்ளனர்.
7) தண்ணீர் உரிமை (டில்லி, கர்நாடகம்) தனியார் வசம் ஆகிவிட்டது.
8) உலக வங்கிக் கடனால் கோடியை ஒருவரும், கோமணத்தைக் கோடி மக்களும் பயனடைகிறார்கள்.
9) எல்லாம் வளர்ச்சிதான் என்று பேசாமல் யார் யார் வளர்ந்துள்ளார்கள் என்று சிந்திக்கத் தெரிந்தவர்கள் யோசித்தால் போதும்.
10) உலக வங்கியில் கடன்பெற்ற மெக்சிகோ, சிலி, தென்கிழக்கு ஆசிய நாடுகள் பாடம் கற்று இன்று மீள முயற்சிக்கின்றன.
11) உலக வங்கிக் கடனில் அகப்பட்டு மீள முடியாத ஆப்பிரிக்க நாடுகள் இன்று சீன உதவியை நாடியுள்ளன.
12) தமிழகம் ஏரி, குளம் தூர்வார 2000 கோடி வாங்கியதாக பெருமைப்படுகிறார் சிதம்பரம்
14) லாலு பிரசாத்திடம் உனக்கு எவ்வளவு வேண்டும் என்று உலக வங்கி கேட்க, உனது கடனும் வேண்டாம், தூக்குக் கயிறும் வேண்டாம் என்றார் லாலு.
விவசாயம்
ரஷியப் பொருளாதாரச் சீர் குலைவுக்குக் காரணம் விவசாயத்தைப் புறக்கணித்ததுதான். சீன அரசு வேளாண் வளர்ச்சியை பெரிய அளவில் முன்னேற்றிவிட்ட பின்பே தொழில் வளர்ச்சி, அன்னிய முதலீடு என்று முக்கியப்-படுத்துகின்றனர். அமெரிக்கா தொழில், விஞ்ஞான வளர்ச்சியுடன் விவசாய உற்பத்தியும் குறைந்துவிடாமல் கவனமாக இருக்கிறது. இந்தியாவின் பலம் விவசாயிகளிடமும் வேளாண் சார்ந்த தொழில் வளர்ச்சியிலும்தான் இருக்கிறது - அப்துல் கலாம்.
விளைபொருள்களுக்கு உள்ளூரிலே விலை இல்லை. நல்ல விலை பெற்றுத்தராத அரசு அந்நியர்களை அழைத்துக் கடை போட கூறுகிறது. விளைபொருள் விலை உயரும்போது அதிக விலையில் இறக்குமதி செய்து விலைகளை வீழ்த்தி, பண வீக்கத்தைக் கட்டுப்படுத்தி விட்டோம் என்கிறார் நிதியமைச்சர்.
 

StumbleUpon.com Read more...

5 ஆயிரம் பணத்துக்கு ஆறு லட்சமா?
http://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...

பெண்களால் நடத்தப்படும் டிவி

http://epaper.dinamalar.com

StumbleUpon.com Read more...

பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவும் அபாயம் ?


மேற்கு வங்கத்தில்


பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவும் அபாயம் ? அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை


கொல்கத்தா, ஏப். 18-
மேற்குவங்க மாநிலத்தில் கோழிகள் மத்தியில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் நோயை முறையாக தடுக்க தவறினால் வெகு விரைவில் அந்நோய்க்கு மனிதர்களை பலிகொடுக்க நேரிடும் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களுக்கு முன் பறவைக் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தெரிந்தன. தொடர்ந்து பக்கத்து மாவட்டங்களில் பரவத் தொடங்கியது. இதையடுத்து கோழிகளை கொல்லும் பணியை மாநில அரசு தொடங்கியது. சுமார் 20 லட்சம் கோழிகள் அழிக்கப்பட்டன.
பறவைக்காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டது. அடுத்த சில வாரங்களில் இந்நோய் மீண்டும் சில இடங்களில் தலைகாட்டியது. மீண்டும் கோழிகளை கொல்லும் பணி தொடங்கியது. ஜனவரி முதல் இன்று வரை மேற்குவங்கத்தில் சுமார் 39 லட்சம் கோழிகள் கொல்லப்பட்டுள்ளன.
இந்நிலையில் தோன்றிய நாடியா மாவட்டத்தில் மீண்டும் பறவைக்காய்ச்சல் அறிகுறிகள் தென்படத் தோன்றியுள்ளன. முதல்முறையிலேயே முழுத் தீவிரத்துடன் செயல்பட்டு பறவைக் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்த தவறியதன் விளைவாக தற்போது மீண்டும் இந்நோய் பரவத் தொடங்கியிருப்பதாக இந்திய உணவு மற்றும் விவசாய அமைப்பு அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 3 மாதங்கள் ஆகியும் இன்னும் பறவைக்காய்ச்சல் நோயை முழுமையாக கட்டுப்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும், ஒரு சில வார இடைவெளியில் புதிய புதிய இடங்களில் இந்நோய் பரவி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேற்குவங்க பறவைக் காய்ச்சல் நிலைமை குறித்து மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறுகையில், Ôபறவைக் காய்ச்சலை முறையாக கட்டுப்படுத்த தவறினால் விரைவில் இந்நோய்க்கு மனித உயிர்களை பலிகொடுக்க நேரிடும். நோயைக் கட்டுப்படுத்துவதில் மேற்கு வங்க அரசின் செயல்பாடுகள் திருப்தியளிக்கவில்லைÕ என்றார்.
மே.வங்க அரசின் கால்நடைத்துறை அமைச்சர் அனிஸ் உர் ரகுமான், இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். 'பறவைக் காய்ச்சலை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசின் பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றி வருகிறோம்' என்றார் அவர்.

http://tm.dinakaran.co.in/firstpage.aspx#

StumbleUpon.com Read more...

நடன ஒத்திகை

 


   பெய்ஜிங்: நீங்கள் பார்ப்பது, காது கேட்காத நடனக் குழுவினரின் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை.

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உடல் ஊனமுற்றவர்களுக்கான நடனக்குழு ஒன்று 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் காது கேளாத, கண் பார்வையற்ற மற்றும் உடல் ஊனமுற்ற 88 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழுவினரால் உருவாக்கப்பட்டதுதான் 'மை டிரீம்' எனப்படும் நடன நிகழ்ச்சி. இவர்களின் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 

StumbleUpon.com Read more...

அந்தரத்தில் கதை
சிட்னி: கம்பத்தின் உச்சியில் நின்று கொண்டு இருப்பவர்கள் ஆஸ்திரேலியாவின் ஸ்ட்ரேஞ்ச் ப்ரூட் குழுவினர். தமிழில் குழுவின் பெயரைச் சொன்னால் புதுமை பழம் என்றாகிறது.

நிஜமாகவே இவர்கள் புதுமை செய்து கொண்டு இருக்கிறார்கள். குழு உறுப்பினர்கள் கேத்ரின், அவான், மைவா, பென் ரோகன் ஆகியோர்தான் இவர்கள்.

இவர்கள் 16.5 அடி உயரமுள்ள கம்பத்தின் உச்சியில் நின்று கொண்டு, ஒரு காதல் கதையை விளக்குகிறார்கள். இந்த நிகழ்ச்சிக்கு ஸ்வூன் எனப் பெயர். மொத்தம் 20 நிமிடம் இந்த காதல் கதை நடக்கிறது.


http://www.dinakaran.com/daily/2008/apr/18/jannal.asp

StumbleUpon.com Read more...

இந்திய நண்டு மேலே ஏறாது

இந்திய நண்டு மேலே ஏறாது

இந்திய நண்டு

நண்டுகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் ஒன்று கூடைகளில் நண்டுகளை ஏற்றி அதை கப்பல்களில் அனுப்புவது வழக்கம்

.அந்த ஒவ்வொரு கூடைகளிலும் எந்த நாட்டை சேர்ந்த நண்டுகள் என்ற பெயரும் எழுதி இருக்கும்.

இது போலவே ஓரு முறை நண்டுகள் ஏற்றி அனுப்பப்பட்டது

.சிறிது நேரம் கழித்து அந்த கப்பல் தளத்தில் இருந்து ஒரு செய்தி அந்த நிறுவனத்துக்கு வந்தது.நண்டு கூடைகள் எல்லாம் சரியாக மூடி அனுப்பப்பட்டு இருந்தது.ஆனால் ஒரே ஒரு கூடை மட்டும் திறந்த நிலையில் அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,அவைகள் உள்ள நண்டுகள் வேளியே வந்துவிடும் வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி பதட்டத்துடன் சொன்னார்.

உடனே நிறுவன மேனேஜர் அந்த அதிகாரியிடம்

"சார் திறந்திருக்கும் கூடை எந்த நாட்டுடைய நண்டுகள் என்பதை அதில் இருக்கும் பெயரைப் பார்த்து சொல்லுங்கள்.

அந்த அதிகாரி அந்த கூடையில் உள்ள பெயரை பார்த்து சொன்னார்

"இந்தியா" என்று

உடனே அந்த நிறுவன மேனேஜர்

:அப்பாடா இப்பொழுதுதான் உயிரே வந்தது.சார் நீங்கள் எந்த கவலையும் படவேண்டாம்.அந்த நண்டுகள் வெளியே வராது என்றார்.

அந்த அதிகாரிக்கு கோபம் வந்தது

;என்ன சொல்லுகிறீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருக்கும் நண்டுகள் எப்படி வெளியே வராமல் இருக்கும்.?

நிறுவன மேனேஜர்

;சார் கோபபடாதீர்கள்.திறந்திருக்கும் கூடையில் இருப்பவை இந்திய நண்டுகள்.கண்டிப்பாக வெளியே வர முயற்சி செய்யும்.மேலே வரை வரும்.ஆனால் கீழே இருக்கும் நண்டு சும்மா இருக்காது.மேலே ஏறும் நண்டின் காலை பிடித்து இழுத்து விட்டு இது மேலே ஏறும்.இன்னொன்று இதன் காலை பிடித்துவிட்டு அது தான் மேலே ஏற முயற்சிக்கும்.ஆக மொத்தம் எந்த நண்டும் கூடையை விட்டு வெளியே வராது.ஏன் என்றால் இந்திய நண்டுகள் எப்பவுமே சுயநலம் தான் என்றார்.

அந்த அதிகாரி

:!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
 
http://aanthaiyaar.blogspot.com/2008/04/blog-post_07.html

StumbleUpon.com Read more...

கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

கத்தோலிக்க பள்ளிகளில் கிறிஸ்தவ விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்; போப் ஆண்டவர் வற்புறுத்தல்

வாஷிங்டன், ஏப். 18-

போப் ஆண்டவர் பெனடிக் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரு கிறார். வாஷிங்டனில் அவர் கத்தோலிக்க பல்கலைக்கழ கத்தில் உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதா வது:-

ரோமன் கத்தோலிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் கிறிஸ்தவ விதி முறைகளை மறந்து விட்டன. சுதந்திரமான கல்வி என்ற பெயரில் மாணவர்களை குழப்பம் அடைய செய்யக் கூடாது.

வகுப்பறையின் உள்ளே யும் வெளியேயும் கல்வி நிலையங்கள் ஒரே மாதிரி யான பார்வையுடன் செயல் பட வேண்டும். சுதந்திர மான கல்வியை நான் ஆதரிக் கிறேன். அதே சமயம் கிறிஸ் தவ விதிமுறைகளை பின் பற்ற வேண்டும். ஏனெனில் கிறிஸ்தவ விதிமுறைகள் நல்வழிக்கு மக்களை அழைத் துச்செல்வதாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் அமெரிக்க கத்தோலிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றும் 400 பேராசிரி யர்கள் கலந்து கொண்டனர்.
 

StumbleUpon.com Read more...

செத்துப்போன பிணத்தைக்கூட நிம்மதியாக விடாத வெறியர்கள்

ஈராக்கில் தற்கொலை தாக்குதல் ; சவ ஊர்வலத்தில் குண்டு வெடித்து 45 பேர் பலி

பாக்தாத், ஏப். 18-

ஈராக்கில் அமெரிக்க படையை எதிர்த்து தீவிரவாதி கள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தி வருகிறார் கள். சன்னி, ஜியா முஸ்லிம் கள் இடையிலும் மோதல் உள்ளது.

இதன் காரணமாக ஈராக் நாட்டின் பல்வேறு பகுதி களில் குண்டுகள் வெடிக் கின்றன. இதற்கு அமெரிக்க ராணுவ வீரர்களும், அப்பாவி பொதுமக்களும் பலியாகி வருகிறார்கள்.

இந்த நிலையில் தெற்கு ஈராக்கில் உள்ள ஒரு கிராமத்தில், நடந்த சவ ஊர்வலத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. சன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் இந்த கிராமம் தெற்கு ஈராக்கில் உள்ள எண்ணெய் நகரமான கிர்குக்கில் இருந்து 120 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.

நேற்று காலை 11 மணி அளவில் நடந்த சவ ஊர்வ லத்தில் ஏராளமானோர் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று குண்டு வெடித்தது.

திடீரென்று நடந்த இந்த குண்டுவெடிப்பில் 45 பேர் உடல் சிதறி பலியானார்கள். தற்கொலைப்படை தாக்கு தலே இந்த குண்டு வெடிப் புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அல்-கொய்தா தீவிரவா திகள் அமெரிக்க படைக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறார்கள். உள்ளூர் முஸ்லிம்களுக்கு இடையிலும் மோதல்கள் உள்ளன. குண்டு வெடிப்பு காரணம் குறித்து ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
 

StumbleUpon.com Read more...

இஸ்லாமின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் பிட்னா(Fitna) படம்

இஸ்லாமின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் பிட்னா(Fitna) படம்

இஸ்லாமின் உண்மை நோக்கத்தை வெளிப்படுத்தும் பிட்னா(Fitna) படம்

சமீபத்திய நாட்களில் பரபரப்பான செய்திகளில் ஒன்று பிட்னாவுக்கு எதிரான முஸ்லீம்களின் உலகளாவிய போராட்டம் ஆகும். இந்த பிட்னா என்றால் என்ன? முஸ்லீம்கள் அல்லாதவர்கள் மேல் தொடரப்படும் தாக்குதல் போர்,யுத்தம் அல்லது பயங்கரவாதமே பிட்னா ஆகும்.For further details http://en.wikipedia.org/wiki/Fitna_(word)

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த கீட் வைல்டெர்ஷ் என்பவர் த்யாரித்த குறும்படமே இன்று உலகில் பிட்னா என்ற வார்த்தையை உலகளவில் பிரபலமாக்கியுள்ளது. கிட்டதட்ட பதினைந்து நிமிடங்களே ஓடும் இந்தப் படத்தில் இஸ்லாம் வன்முறையைத் தூண்டும் குரான் வசனங்களும் உலகளாவிய இஸ்லாம் பயங்கரவாதம் குறித்த காட்சிகளையும் காண்பிக்கின்றனர். அந்த படத்தில் வரும் குரான் வசனங்களை தமிழில் கீழே கொடுத்துள்ளேன். இஸ்லாமின் அடிப்படை நம்பிக்கை அல்லா அல்ல வன்முறையே என்பதை இந்த படம் எனக்கு உணர்த்தியது.
இந்த பிட்னா படத்தின் விடீயோ லின்க்கையும் கீழே கொடுத்துள்ளேன்:

Part- 1
Part -2

பிட்னா திரைப்படத்தில் வரும் குரான் வசனங்களின் வரிசை:
1.அவர் (நிராகரிப்பவர்)களை எதிர்ப்பதற்காக உங்களால் இயன்ற அளவு பலத்தையும், திறமையான போர்க் குதிரைகளையும் ஆயத்தப்படுத்திக் கொள்ளுங்கள்¢ இதனால் நீங்கள் அல்லாஹ்வின் எதிரியையும், உங்களுடைய எதிரியையும் அச்சமடையச் செய்யலாம்¢ அவர்கள் அல்லாத வேறு சிலரையும் (நீங்கள் அச்சமடையச் செய்யலாம்)¢ அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள் - அல்லாஹ் அவர்களை அறிவான்¢ அல்லாஹ்வுடைய வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும், (அதற்கான நற்கூலி) உங்களுக்கு பூரணமாகவே வழங்கப்படும்¢ (அதில்) உங்களுக்கு ஒரு சிறிதும் அநீதம் செய்யப்பட மாட்டாது.(ஸுரா 8:60)

2.யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்¢ அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.(ஸுரா 4:56)

3.(முஃமின்களே! வலிந்து உங்களுடன் போரிட வரும்) நிராகரிப்பவர்களை நீங்கள் (போரில்) சந்திப்பீர்களாயின், அவர்களுடைய கழுத்துகளை வெட்டுங்கள்¢ கடும் போர் செய்து (நீங்கள் அவர்களை வென்று) விட்டால் (அவர்களுடைய) கட்டுகளை பலப்படுத்தி விடுங்கள்¢ அதன் பிறகு யாதொரு ஈடுபெற்றோ அல்லது (ஈடு பெறாது) உபகாரமாகவோ அவர்களை விட்டு விடுங்கள். போர்(ப் பகைவர்கள்) தங்கள் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரையில் (இவ்வாறு செய்யுங்கள்) இது (இறை கட்டளையாகும்) அல்லாஹ் நாடியிருந்தால் (போரின்றி அவனே) அவர்களிடம் பழிவாங்கியிருப்பான்¢ ஆயினும், (போரின் மூலம்) அவன் உங்களில் சிலரை, சிலரைக் கொண்டு சோதிக்கின்றான்¢ ஆகவே, அல்லாஹ்வின் பாதையில், யார் கொல்லப்படுகிறார்களோ அவர்களுடைய (நற்) செயல்களை அவன் பயனற்றுப் போகுமாறு செய்யமாட்டான்.(ஸுரா 47:4)

(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்¢ ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் (தம் இருப்பிடங்களை விட்டு வெளியே)புறப்படும் வரையில் அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள்¢ (அல்லாஹ்வின் பாதையில் வெளிப்பட வேண்டுமென்ற கட்டளையை) அவர்கள் புறக்கணித்துவிட்டால் அவர்களை எங்கு கண்டாலும் (கைதியாகப்) பிடித்துக் கொள்ளுங்கள்¢ (தப்பியோட முயல்வோரைக்) கொல்லுங்கள் - அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாகவோ, உதவியாளர்களாகவோ எடுத்துக் கொள்ளாதீர்கள்.(ஸுரா 4:89)

(முஃமின்களே! இவர்களுடைய) விஷமங்கள் முற்றிலும் நீங்கி, (அல்லாஹ்வின்) மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே ஆகும்வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்¢ ஆனால் அவர்கள் (விஷமங்கள் செய்வதிலிருந்து) விலகிக் கொண்டால் - நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.(ஸுரா 8:39)

இஸ்லாம் தவிர வேறெதுவும் இந்த உலகில் இருக்கக் கூடாது என்பதற்காக வெறிகொண்டு அலையும் இஸ்லாம் சகோதரர்கள்தான் சீக்கிரம் இந்த உலகத்தில் கூட இருக்க இடம் கிடைக்காமல் போகப்போகிறார்கள். இஸ்லாமியரினிரத்தவெறியினால் அவர்கள் மேல் உண்டான இரத்தப் பழி நீங்க இயேசுவை தவிரவேறு வழியில்லை. இயேசுவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி......சுத்திகரிக்கும்.

source:  http://isaforall.blogspot.com

http://unmaiadiyann.blogspot.com/2008/04/fitna.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP