சமீபத்திய பதிவுகள்

என்ன பொருத்தம்?!

>> Thursday, June 26, 2008

   
 
 
 
  
 
கோவையில் உள்ள ஒரு மருத்துவமனையின் பெயர், `நிம்மதி கிளினிக்'

மருந்து கடையின் பெயர், `நிம்மதி பார்மஸி'

- வெ.ஆசை, கோவை.
 

 
 
 
 

 

 
 
 
`நச்' ஹைக்கூ 
  
 
 
 
 
 
இறக்காமல்
உயிரை
இழக்கும்
அதிசயம்
காதல்!

- ஈ.கார்த்திகேயன், அறமத்தாபாளையம்.
 

 
 
 
 

 

 
 
 
ஆட்டோ`கிராப்' 
  
 
 
 
 
 
தஞ்சாவூர் ஈஸ்வரி நகர் பகுதியில் ஓடிய ஒரு ஆட்டோவில் கண்டது:
`வெற்றி எளிதல்ல...
தோல்வி முடிவல்ல..!'

- மு.முத்துக்குமார், தஞ்சாவூர்.
 

 
 
 
 

 

 
 
 
எஸ்.எம்.எஸ் ஏவுகணை 
  
 
 
 
 
 
`விபத்தில் மண்டை உடையாம
இருக்க ஹெல்மெட் போடலாம்,
ஆனா ஹெல்மெட் உடையாம
இருக்க மண்டையப் போட முடியாது!'

(உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ...)

- ப.கோபி, கிருஷ்ணகிரி.
 

 
 
 
 

 

 
 
 
ஆத்தாடீ...! 
  
 
 
 
 
 
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள ஒரு ஊரின் பெயர் என்ன தெரியுமா?

`கொள்ளித்தீவு!'

- மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.
 

 
 
 
 

 

 
 
 
அடடே... பெயர்! 
  
 
 
 
 
 
நான் சாலையில் சென்று கொண்டிருந்த போது...
எதிரே வந்த லாரியின் பெயர், `அடேங்கப்பா!'

- வெ.ஆசைத்தம்பி, விளார்.
 

 
 
 
 

 

 
 
 
`பஞ்ச்' தத்துவம்! 
  
 
 
 
 
 
`கல்லில் செதுக்கிய
கடவுளைவிட...
கருவில் சுமந்த
அன்னையே
முதல் கடவுள்!'

- ப.பச்சமுத்து, தர்மபுரி.
 

 
 
 
 

 

 
 
 
சிரிப்`பூ' 
  
 
 
 
 
 
டாக்டர்: உங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

நோயாளி: என்ன செய்தி அது?

டாக்டர்: உங்களுக்கு சர்க்கரை வியாதி!

- லோ.மோகனசுந்தரி, கிருஷ்ணகிரி.
 

 http://www.dailythanthi.com/muthucharam/Home/second_page.asp?secid=23&artid=3276&issuedate=6/21/2008
 

StumbleUpon.com Read more...

கலக்குது யூரோ... இந்தியா ஜீரோ?


   
 
 
 
  
 
இந்தியாவின் மக்கள்தொகை 106 கோடி. நம் நாட்டின் காலடியில் புள்ளிபோல ஒட்டிக்கொண்டிருக்கும் மாலத்தீவுகளின் மக்கள்தொகை வெறும் 3 லட்சம்.

இந்தப் `பொடியன்', தெற்காசிய கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்து சாம்பியனாகிவிட்டது .

ஐரோப்பிய கோப்பை (ïரோ கப்) கால்பந்து போட்டிகள் கலக்கிக் கொண்டிருக்கும் நிலையில், இந்திய கால்பந்து அணிக்கு இப்படியொரு பரிதாபம்.

முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியுற்ற பரபரப்பில் இந்தத் தோல்வி அமுங்கிப் போய்விட்டது. ஆனால் இது கவலைக்குரிய விஷயம்.

ஏற்கனவே உலக அளவில் கால்பந்தில் 153 என்ற `உயர்ந்த' இடத்தில் இருக்கிறோம். நம்மை விட 6 இடங்கள் மட்டுமே பின்தங்கியிருக்கும் மாலத்தீவு இம்முறை அதிர்ச்சித் தோல்வி அளித்து விட்டது.

உலகக்கோப்பை போட்டிகளில் நாம் நெருங்கவே முடிவதில்லை. 1950-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியìல் இந்தியாவுக்கு நேரடி வாய்ப்பு அளìக்கப்பட்டது. ஆனால் கால்பந்து ஷூக்கள் அணிய இநëதிய வீரர்கள் மறுத்துவிட்டதால் அந்த வாய்ப்பும் அதோகதியாகிவிட்டது. களமிறங்க அனுமதிக்கப்படவில்லை.
 
 
 
 
மற்றபடி 1956-ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில் 4-வது இடம் பெற்றதும், 1962-ம் ஆண்டு ஆசிய விளையாட்டுப் போட்டி சாம்பியன் ஆனதும், தொடர்ந்த அடுத்த இரண்டு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அரையிறுதியை எட்டியதும்தான் இந்தியாவின் ஆகக்கூடிய சாதனைகள். (1948-ம் ஆண்டு இந்தியா தனது முதல் சர்வதேசப் போட்டியில், இன்று உலகின் முன்னணì அணிகளுள் ஒன்றாகத் திகழும் பிரான்சுடன் 2- 2 என்ற கோல்கணக்கில் `டிரா' செய்தது எத்தனை பேருக்குத் தெரியும்?)

தற்போது ஆசிய அளவிலேயே 26-வது இடத்தில் இருக்கும் இந்தியா, ஏதோ தெற்காசிய அளவிலாவது தனது கவுரவத்தைக் காப்பாற்றி வருகிறது. இதற்கு முன் நடைபெற்ற 6 தெற்காசிய கோப்பை போட்டிகளில் நான்கில் சாம்பியனான இந்தியாவுக்கு வேட்டு வைத்துவிட்டது மாலத்தீவுகள்.

இந்திய கால்பந்துக்கு இனி விமோசனம் உண்டா? 
 
http://www.dailythanthi.com/muthucharam/home/second_page.asp?issuedate=6/21/2008&secid=11

StumbleUpon.com Read more...

வெற்றிகரமாக தரை இறங்கியது...


   
 
 
பூமியில் இருந்து 67 கோடியே 90 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது செவ்வாய் கிரகம். இந்த கிரகத்தை பற்றி ஆராய்ச்சிகள் மேற்கொள்வதற்கு அமெரிக்கா முயற்சிகள் மேற்கொண்டு உள்ளது. இதன்பலனாக செவ்வாய் கிரகத்தின் துருவப்பிரதேசங்களில் தண்ணீர் உறைநிலையில் இருப்பதை விஞ்ஞானிகள் கடந்த 2002-ம் ஆண்டு கண்டறிந்தனர்.

இதைத் தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் முழுப்பகுதியையும் ஆராய்வதற்காக ராக்கெட் மூலம் `பீனிக்ஸ்' என்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பியது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 4-ந்தேதி இந்த விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்டது. அது மணிக்கு 21 ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் பயணித்தது.

கிட்டத்தட்ட 10 மாத பயணத்துக்கு பிறகு மே 26-ந் தேதியன்று லண்டன் நேரம் இரவு 11.53 மணிக்கு செவ்வாய் கிரகத்தின் உறை பாலைவனத்தில் அது தரை இறங்கியது. அது செவ்வாய் கிரகத்தில் தரைஇறங்கியதற்கான சிக்னல் கிடைத்ததும் அமெரிக்காவில் பசடெனா நகரில் உள்ள தரைக்கட்டுப்பாடு நிலையத்தில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
 

 

 
http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=6/21/2008&secid=93

StumbleUpon.com Read more...

ஆசியா கோப்பை கிரிக்கெட்-இந்தியா பாக்கிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது

June 26, 2008
Asia Cup 2008
Pakistan vs India, 6th Match Group B
National Stadium, Karachi (D/N)

Umpires: T Hill (NZ) and B Jerling (SA) Third Umpire: A Akhtaruddin (PAK)
Match Referee: A Hurst (AUS)
Toss: Pakistan (Elected to Bat)  
Result: India won by 6 wickets Man of the Match: Suresh Raina
Match Summary: Match Over
Pakistan innings
Runs Balls Fours Sixes SR FoW
Salman Butt c Raina  b Chawla  35  64  54.69  1-90 ( 21.4 ov. ) 
Shoaib Malik (c) retired hurt     125  119  16  105.04   
Younis Khan c Raina  b Yusuf  59  60  98.33  2-223 ( 40.6 ov. ) 
Mohammad Yousuf run out     30  20  150.00  3-261 ( 45.3 ov. ) 
Misbah-ul Haq not out     31  26  119.23   
Shahid Afridi c Dhoni  b RP Singh  112.50  4-290 ( 48.5 ov. ) 
Sohail Tanvir not out     100.00   
Fawad Alam                
Sarfraz Ahmed (wk)                
Umar Gul                
Rao Iftikhar                
Extras: ( 5 wd, 1 lb, 1 b, 0 nb, 0 p)   Total: 299 / 4 in 50.0 overs (Run Rate: 5.98) 
Bowler Overs Maidens Runs Wickets NoBall Wide Eco
Praveen Kumar 10.0  56  5.60 
RP Singh 10.0  44  4.40 
Ishant Sharma 10.0  69  6.90 
Piyush Chawla 7.0  52  7.43 
Yusuf Pathan 9.0  52  5.78 
Yuvraj Singh 4.0  24  6.00 
India innings
Runs Balls Fours Sixes SR FoW
Gautam Gambhir c Misbah  b Iftikhar  12  75.00  1-12 ( 2.3 ov. ) 
Virender Sehwag c Younis  b Afridi  119  95  12  125.26  3-231 ( 30.4 ov. ) 
Suresh Raina c Alam  b Iftikhar  84  69  10  121.74  2-210 ( 27.1 ov. ) 
Yuvraj Singh c Butt  b Tanvir  48  47  102.13  4-294 ( 41.4 ov. ) 
MS Dhoni (c)(wk) not out     26  30  86.67   
Rohit Sharma not out     0.00   
Yusuf Pathan                
Praveen Kumar                
Piyush Chawla                
Ishant Sharma                
RP Singh                
Extras: ( 7 wd, 6 lb, 1 b, 1 nb, 0 p)   Total: 301 / 4 in 42.1 overs (Run Rate: 7.14) 
Bowler
Overs
Maidens
Runs
Wickets
NoBall
Wide
Eco
Umar Gul
1.2 
4.50 
Sohail Tanvir
9.0 
55 
6.11 
Rao Iftikhar
9.4 
61 
6.31 
Shahid Afridi
10.0 
64 
6.40 
Fawad Alam
7.0 
64 
9.14 
Salman Butt
1.0 
13 
13.00 
Younis Khan
4.1 
31 
7.44 

 

 
 

StumbleUpon.com Read more...

நடமாடும் போது செல்போன் பேட்டரியை ரிசார்ஜ் செய்யும் கருவி

 

முக்கிய நேரத்தில் உங்கள் செல்போனில் பேட்டரி சார்ஜ் குறைந்து போகிறதாப இனி பேட்டரி சார்ஜரை எடுத்துக் கொண்டு மின்சார பிளக்கை தேடி செல்லத்தேவை இல்லை. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் புதிய வகை செல்போன் பேட்டரி சார்ஜரை உருவாக்கி உள்ளனர். செல்போன் அளவிலேயே இருக்கும் இந்த பேட்டரி ரிசார்ஜரை கையிலோ காலிலோ மாட்டிக் கொண்டால் போதும் கை கால்களை ஆட்டி நீங்கள் நடனம் ஆடும் போதோ அல்லது நடக்கும் போதோ குறைந்த மின்சாரம் உற் பத்தியாகி அது பேட்டரியில் சேகரிக்கப்படுகிறது. அதை செல்போனில் இணைத்துக் கொண்டால் தானாகவே செல்போன் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
 

StumbleUpon.com Read more...

நக்மாவும், மனமாற்றம் குறித்த சிந்தனைகளும்

 

 

Bernardo Strozzi 1581 – 1644

நடிகை நக்மா கிறிஸ்தவரானார் என்னும் செய்தி பல தினசரிகளில் முதன்மைப் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தனது துயரமான சூழலில் பைபிள் தனக்கு ஆறுதல் அளித்ததாகவும் அதுவே தன்னை கிறிஸ்தவ மதத்துக்குள் நுழைய வைத்தது எனவும் நக்மா தெரிவித்திருக்கிறார்.

பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சூழல்களில் நிகழும் இத்தகைய மனமாற்றங்கள் முதலில் ஏற்படுத்தும் அலைக்கும், வேர் விடுதலுக்கும் இடையே ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.

பலருடைய மதமாற்றம் வெறும் அடையாளங்களை மாற்றிக் கொள்வதாகவோ, ஏற்றுக் கொள்வதாகவோ இருக்கிறதே தவிர உண்மையான அர்த்தங்களைக் கண்டு கொள்வதாக பல வேளைகளில் இருப்பதில்லை.

எனவே தான் கிறிஸ்தவ மதத்தில் பிறந்து விட்டதாலேயே கிறிஸ்தவர் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூட "மீண்டும் பிறத்தல்" எனும் கிறிஸ்தவத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டு இறையில் சரணடைதல் என்பதை நம்புகின்றனர்.

குழந்தையாக இருக்கும் போது அளிக்கப்படும் திருமுழுக்கின் வழியாக கிறிஸ்தவத்தில் நுழைந்தாலும், சுய அறிவு வந்தபின் இயேசுவில் முழுமையாய் சரணடையும் முடிவை எடுப்பதே இந்த இரண்டாவது பிறப்பு.

இத்தகைய இரண்டாம் பிறப்புக்குப் பின் கிறிஸ்தவத்தை விட்டு விலகிச் செல்பவர்கள் மிக மிக மிக அபூர்வம்.

பலர் இக்கரைக்கு அக்கரை பச்சை எனும் கணக்கில் மதங்கள் மாறுகின்றனர். இப்படிப்பட்ட பொருளாதார, அரசியல், செல்வாக்கு, புகழ், பதவி ஆதாயத்துக்காய் மதம் மாறுபவர்களால் எந்த மதமும் வலுவடைவதுமில்லை, மதம் மாறுபவர்கள் வாழ்வடைவதும் இல்லை.

யார் உண்மையாய் மனம் மாறுகிறார்கள் என்பதும், யார் வெறுமனே வேடம் தரிக்கிறார்கள் என்பதும் முழுப் பூசணிக்காய் கணக்காக விரைவில் வெளியே தெரிந்து விடும்.

ஏனெனில் கிறிஸ்தவத்தைப் பொறுத்தவரையில் இயேசுவின் போதனை மிக மிகத் தெளிவானது

"நீங்கள் மனம் திரும்பியதை செயல்களில் காட்டுங்கள்" என்பதே அந்த போதனை.

உங்களுடைய பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையேயான வேறுபாடு நீங்கள் மதம் மாறியிருக்கிறீர்களா அல்லது வெறுமனே வேறோர் நிறுத்தத்தில் இறங்கியிருக்கிறீர்களா என்பதைச் சொல்லி விடும்.

உதாரணமாக சுயநல எண்ணங்கள் விலகியிருக்கின்றனவா, பொய் பேசுவதை விட்டு விட்டீர்களா, புகழ், பணம், இச்சை என உலக மாயைகள் விலகியிருக்கின்றனவா, பிறருக்காய் செபிக்கிறீர்களா, உங்களைக் காயப்படுத்துபவர்களை கணநேரத்தில் மன்னிக்கிறீர்களா ? இறையில் ஒன்றித்திருக்கிறீர்களா, படைப்புப் பொருட்களை ஒரு பொருட்டாக எண்ணாமல் படைத்தவரையே பற்றிக் கொள்கிறீர்களா ? இவையெல்லாம் நீங்கள் உண்மையான கிறிஸ்தவராகி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கும் சிற்சில சோதனைகள்.

உண்மையான மனமாற்றம் என்பது உள்ளுக்குள் உருவாகி ஆளை மாற்றியபின்பே வெளியே தெரியும். போலியான மாற்றம் ஆடைபோல புதிதாய் அணியப்பட்டு கழற்றி வீசப்படும்.

ஏனெனின், மன மாற்றம் என்பது எண்ணிக்கைகளின் இலக்கத்தைக் கூட்டுவதல்ல, தூய ஆவியானவரின் இயக்கத்தைக் காட்டுவதே,

 

http://jebam.wordpress.com/2008/05/15/nagma_christianity/

StumbleUpon.com Read more...

தினமலர் செய்தி பொய்-மாலைமலர் பத்திரிக்கை குற்றச்சாட்டு

தினமலர் பத்திரிக்கை செய்தியை வைத்து கமேண்ட் எழுதிய அருமையான பிளக்கர்  நண்பர்களுக்கு ஆப்படித்த மாலைமலர் பத்திரிக்கை
 
 
மதம் மாறிய பிறகு நடிகை நக்மாவின் முதல் கிறிஸ்தவ போதனை; நாலுமாவடி கூட்டத்தில் பேசுகிறார்

சென்னை, ஜுன். 26-

"பாட்ஷா'', "காதலன் உள்பட ஏராள மான தமிழ் படங்களில் நடித்திருப்பவர் நக்மா. இந்து மதத்தை சேர்ந்த இவர் சில மாதங்களுக்கு முன்பு கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்.

இதையடுத்து அவர் கடந்த மாதம் சென்னை நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாலுமாவடி "ஏசு விடுவிக் கிறார்'' நிறுவனர் மோகன் சி.லாசரஸ் நடத்திய பிரார்த் தனை கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது நக்மா பேசும் போது, "பல் வேறு பிரச்சினைகளில் சிக் கித் தவித்த என்னை ஏசு கிறிஸ்து காப்பாற்றினார். அவர் நான் செய்த பாவங் களை மன்னித்து விடுதலை அளித்தார்.

அவர் என் வாழ்வில் செய்த அற்புதங்கள் பற்றி உலகம் முழுவதிலும் பிரசா ரம் செய்வேன்'' என்றார். இதையடுத்து சில பத்திரிகைகளில் "நக்மா மதம் மாறவில்லை. அவர் கிறிஸ் தவ பிரசாரம் எதிலும் ஈடு பட மாட்டார்'' என்று செய்திகள் வெளியாயின.

இந்த நிலையில் நக்மா மதம் மாறிய பிறகு தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகே உள்ள நாலுமாவடியில் முதன் முறையாக கிறிஸ்தவ போதனை செய்கிறார். இக்கூட்டம் அங்குள்ள "ஏசு விடுவிக்கிறார்'' தேவனுடைய வீட்டில் 28-ந் தேதி (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.

இந்திய நாட்டின் நல னுக்காக நடைபெறும் இந்த சிறப்பு பிரார்த்தனை கூட்டத்தில் நக்மா தன் வாழ்வில் ஏசு கிறிஸ்துவால் நடந்த அற்புதங்கள் பற்றி பேசுகிறார். மேலும் தான் சினிமா துறை மற்றும் சொந்த வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், அதில் இருந்து ஏசு எப்படி தன்னை மீட்டார் என்பது பற்றியும் விரிவாகப் பேசுகிறார்.

இக் கூட்டத்திற்கு `ஏசு விடுவிக்கிறார்' நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்குகிறார். இக் கூட்டத்தில் இந்திய ஜனாதிபதி, பிரத மர், முதல்-மந்திரிகள், மத்திய -மாநில மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் நலனுக் காக பிரார்த்தனை செய்யப் படுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடி ஏசு விடுவிக்கி றார் ஊழிய நிறுவன மேலா ளர் செல்வ குமார் செய்து வருகிறார். நாலுமாவடியில் மாதந் தோறும் கடைசி சனிக்கிழமை தோறும் நடைபெறும் கூட் டத்தில் தென் மாவட்டங் களை சேர்ந்த ஆயிரக் கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

StumbleUpon.com Read more...

யூரோ 2008 : இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி முன்னேற்றம்

யூரோ 2008 : இறுதிப் போட்டிக்கு ஜெர்மனி முன்னேற்றம்
துருக்கியை 3- 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மனி அணி, யூரோ 2008 கால்பந்து இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

விறுவிறுப்பாக நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், ஜெர்மன் அணியில் வெற்றிக்கு வித்திட்டார், பிலிப் லாம்.

இந்த ஆட்டத்தில் 22-வது நிமிடத்தில் துருக்கி வீரர் உகுர் போரல் முதல் கோலை அடித்தார். அதைத் தொடர்ந்து சில நிமிடங்களில் ஜெர்மனியின் பாஸ்டியன் ஷ்வெய்ன்ச்டெய்ஜர் அபாரமான கோலை அடித்தார். இதனால், இரு அணிகளும் 1- 1 என்ற சம நிலையில் இருந்தது.

இடைவேளை வரை துருக்கியின் ஆதிக்கம் இருந்தது. 6 முறை கோலை நோக்கி துருக்கி வீரர்கள் ஷாட்களை அடிக்க ஜெர்மனி அந்த ஒரு கோல் தவிர மற்றபடி துருக்கியை பெரிதாக அச்சுறுத்தவில்லை.

இடைவேளைக்குப் பிறகு, 79வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லாம் தூக்கி அடித்த ஷாட்டை பிடிக்க, துருக்கி கோல் கீப்பர் ரஸ்டு முய‌ன்றா‌ர். ஆனால், ஜெர்மனி வீரர் க்ளொஸ் அதற்குள் பந்தை தலையால் முட்டி கோலாக மாற்றினார்.

அதையடுத்து, துருக்கி வீரர் சாப்ரி சரியோக்லு தாழ்வாக ஒரு ஷாட்டை அடித்தார். அதனை கோலாக மாற்றினார்,செமி. இதனால், இரு அணிகளும் மீண்டும் சமநிலை பெற்றது.

ஆனால், இறுதி கட்டத்தில் தனது அதிவேக ஆட்டத்தால் லாம் வெற்றிக்கான கோலை அடித்து, ஜெர்மனி அணி இறுதிக்கு முன்னேற வழிவகுத்தார்.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

ஓவியம் வரையும் யானை

 
 

StumbleUpon.com Read more...

இந்து மதம் எங்கே போகிறது? (1-15)

இந்து மதம் எங்கே போகிறது?  (1)

 

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

'நக்கீரன்"; இதழில் தொடந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டை களாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது ப+மி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது. சிந்து நதி என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து. அது அந்தக்கால ஆப்கானிஸ்தான.; நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம்போய் வெளியே வருவார்கள்.

ப+மியே புதிராக தெரிந்தது அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர். சுற்றிலும் இருள் ப+சியது யார்? நடுங்கினர்.

இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள.; மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.

அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு...!

கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (னுiஎiநெ) என வழங்கப்படுகிறது. ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).

இயற்கைதான் கடவுள.; துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள.; உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.

அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.

நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்கு நாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள் உண்டாயிற்று வேதம்.

உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.

'இந்த உலகமே தெய்வம்தான் நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும் - வகுத்தது வேதம்.ஊiஎடைளையவழைn நெஎநச டிழசnஇ டிரவ வை ளை வாந hநசவையபந ழக hரஅயnவைல என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.

முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான். .பயப்படாதே! நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.

நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான.; வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது. ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...

இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.

இந்த நல்லெண்ணச் சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும.; வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழக் கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள்! நன்றாகப் பிரித்தார்கள.; தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்த வில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறிமுறைகளைச் சொல்லிக் கொடுத்து.. அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.

ஆள்பவன் சத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.

ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் சத்திரியர்கள். உழைக்க வேண்டும் பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.

பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....

அதிலுள்ள கருத்து களை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும்? எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.

இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன. வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.

வேதம் பிராமணர்கள் கைக்குப் போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால் வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 45 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்? (நக்கீரன்-15-12-2004)

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (2)

இந்தியாவில் இருந்த 45 மதங்களில் எது இந்து மதம்? படிப்படியாகப் பார்ப்போம்.

ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள.; வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து 'சகதி" அந் தஸ்தோடு கிடக்கிறது.

புருஷன் பார்த்தான.; ஒரே தாண்டு இந்தப் பக்கம் வந்துவிட்டான.; திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.

'கொஞ்சம் கை குடுங்கோ.. வந்துடறேன்" என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.

இதேபோலத்தான் அன்று.. ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக் கிறார்கள் நமமூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரியப் பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட் டது.

'வரும் பெண்கள் வரலாம் வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்."

ஆப்கானிஸ்தானைவிட்டு ஆரியக் கூட்டம் கிளம்பி இந்தியாவுக்குள் நுழைந்த போது, கூட வந்த பெண்கள் கம்மி. வரலாற்றுக் கண்ணோட்டத்தில், இங்கு வந்த ஆண்களின் எண்ணிக்கையோடு, பெண்களின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் அது புறக்கணிக்கத்தக்கதுதான.; ஆரியர்கள் பெண்களைத்தான் விட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், மனு ஸ்மிருதியை கையோடு கொண்டு வந்தனர்.

மனு?

வேதங்களை எல்லாராலும் படிக்க முடியாது.

அஃதை விளங்கிக் கொள்ள அனைவருக்கும் அறிவு குறைவு. அதனால் வேதம் வகுத்த கர்மாக்களை, கட்டளைகளை விளக்கி, புரியும்படி சொல்கிறோம் என எளிமை என்ற பெயரில் செய்யப் பட்டதுதான் மனுதர்மம்.

பிராமணன், சத்திரியன், வைசியன் என வேதம் வகுத்த சமூக நிலைகளை 'மனு" பிளவாக்கியது. கூடவே, இவர்களைத் தாண்டி 'சூத்திரர்கள்" என்ற பிரிவினரை உருவாக்கி அவர்களை வெறும் வேலைக்காரர்களாகவே ஆக்கியது. மனு பிராமணனுக்கு தவம், வேத அறிவு, ஞானம், விஞ்ஞானம் உள்பட 11 குணங்களை வகுத்த மனு சூத்திரனைப்பற்றி இப்படி எழுதியது.

"சூத்திரனுக்கு அறிவு கொடுக்காதே, தர்மோ பதேசம் பண்ணாதே! சண்டை வந்தால் சூத்திரன் எந்தப் பக்கம் இருக்கிறானோ அந்தப் பக்கத்துக்கே தண்டனை கொடு. அவனை உதை..." இப்ப டிப் போகிறது மனு.

வந்தேறிய இடத்தில் அனைவரும் சூத்திரர்கள் என்றும், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கவேண்டும் என்றும் பிராமணர்கள் செய்த திட்டம் 'நன்றாகவே" வேலை செய்தது ஏற்கெனவே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சத்திரியர்களும், வைசியர்களும் சூத்திரர்களை வேலைக்காரர்களாக எடுபிடிகளாக வைத்திருப்பது என்ற பிராமணர்களின் கோட்பாட்டுக்கு குழைந்தனர்.

'அடே.. குழந்தாய் இந்தா பால் இதைக் குடித்து மகிழ்வாய் வாழு" என்ற வேதத்தை மனு திரித்து.. "இந்த பாலை இவன் குடிக்க வேண்டும்.. இவன் குடிக்கக் கூடாது இவன் எச்சில் படாமல் குடிக்க வேண்டும். இவன் பால் கறக்கும் மாட்டை மேய்க்க வேண்டும் என பிளவு செய்தது.

ஆரியர்கள் பெண்களை அழைத்து வரவில்லை என்று சொன்னேன் அல்லவா? இதற்குக் காரணம் என எடுத்துக்கொள்ள ஏதுவான மனு ஸ்லோகம் ஒன்றைப் பாருங்கள்.

பால்யே பிதிர்வஸே விஷ்டேது

பாணிக்ரஹா யௌவ் வனே

புத்ரானாம் பர்த்தரீ ப்ரேது

நபஜேத் ஸ்த்ரீ ஸ்வ தந்த்ரதாம்

"பெண்ணே.. நீ குழந்தைப் பருவம் வரை அப்பன் சொன்னதை கேள்.. வளர்ந்து மணமானதும் கணவன் சொன்னதைக் கேள். உனக்கு குழந்தை பிறந்து தலை யெடுத்ததும் உன் மகன் சொல்வதைக் கேட்க வேண்டும். உனக்கு இது தான் கதி, நீ சுதந்திரமாக வாழத் தகுதியவற்றவள், ஆண் சொல்படி கேள்."

இப்படி 'பெண்ணுரிமை" பேசும் மனு இன்னொரு இடத்தில் சொல்கிறது "பெண்கள் அசுத்தமானவர்கள் உனக்கு விதிக்கப்பட்டுள்ள மந்த்ரோபதேச சம்ஸ்காரங்கள் அவளுக்கு கிடையாது. அவளை மதிக்காதே... பிராமண ஆணுக்கு சொல்லுவதாய் வந்த கருத்து இது.

மனுவின் இத்தகைய கட்டுப்பாடுகளுக்கு 'ப+ம் ப+ம்" மாடுகள்போல தலையாட்டினார்கள் மற்ற வர்ணத்தவர்கள்.

வைதீக கட்டுப்பாடுகள் சர்வாதிகாரமாக விதிக்கப்பட்டன. கடவுள் இப்படித்தான் செய்யச் சொல்லியிருக்கிறான.; இதுபடி கேள.; இல்லையேல் நீ பாபியாவாய்... என மந்த்ரங்களால் மிரட் டப்பட்டனர் மக்கள்.

பல நூறு வருடங்கள் ஒரு கிரிமினல் லா போன்றே மனுநீதி சமூக கட்டமைப்பை தன் கட்டுக்குள் வைத்திருந்தது வைதீக கர்மாக்களை பிறருக்கு எடுத்துச் சொல்லி நீதி பரிபாலனம் செய்ய வேண்டிய பிராமணன், சத்ரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் எல்லோரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.

இப்படிப்பட்ட ஒரு 'சாஸ்திர ஏகாதிபத்ய" சூழ்நிலையில்தான்.. இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு குரல் புறப்பட்டது.

"கடவுள் பெயரை சொல்லியும்.. கர்மாக்கள் பெயரைச் சொல்லியும் சிந்தனை வளராத அப்பாவிகளை ஏமாற்றிப் பிழைக்கிறீர்களே? உங்களுக்கு இந்த உரிமையை யார் கொடுத்தது? கடவுளா? அவன் எங்கே இருக்கிறான்?"

வேதத்தை சாதத்துக்கு (பிழைப்புக்கு) பயன் படுத்தாதீர்கள். பேதம் வளர்க்காதீர்கள் கொடுமைதான் உங்கள் கொள்கை என்றால் வேதம் வேண்டாம் மனு வேண்டாம் கடவுள் வேண்டாம் கர்மாக்கள் வேண்டாம் மனித தர்மம் மட்டும் தான் வேண்டும்..."

என அந்த சூழ்நிலையில் மிகமிக வித்தியாச மான குரல் தொனித்தது. அது புத்தர் குரல்.

இன்றைக்கு அணு குண்டு வெடி சோதனைக்கே 'புத்தர் சிரித்தார்" என பெயர் வைக்கிறோம். அன்றைக்கு புத்தரே வெடித்தார் என்றால் விளைவுகள் என்ன? 

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (3)

'நக்கீரன"; இதழில் தொடந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன. கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது....

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பதுபற்றி இப்போது பார்க்கலாம்.

சகல சவுபாக்கியங்ளையும் ருசித்துக் கொண்டு மனைவி யசோதராவோடு இளமைப் பருவத்தில் இல்லறம் நடத்திக் கொண்டிருந்த புத்தருக்கு ஒரு வைராக்கியம் பளிச்சிட்டது. இனிப் பெண் சுகம் வேண்டாம். இல் சுகம் வேண்டாம். வெளியே போகலாம்இ அங்கே என்னென்ன நடக்கிறது பார்க்கலாம் என மூளைக்குள் முடிவெடுத்தார்.

சட்டென இளம் மனைவி யசோதராவையும், பிஞ்சு மகன் ராகுலையும் விட்டு விட்டு வெளியே போய் விட்டார்.

வெளியே வந்த பிறகு அவர் கண்ட காட்சிகள் தான் புத்தரை போராட்ட களத்துக்கு கொண்டு சென்றன.

எங்கெங்கு காணினும் மூடப் பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப் புகை. அந்தப் புகையில் புறக் கண்களும் தெரியாமல், அக அறிவுக் கண்களும் தெரியாமல் துழாவிக் கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப் புகை...?

பிராமணர்கள் சொன்னார்கள், "ஊரெல்லாம் நலமாக இருக்க, நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகி றோம.; பிராணிகளையும், தட்சணையையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள் என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய் சொன்னார்கள்.

(அந்த காலத்திலேயே பிராமணர்கள் பசுவை பலியிட்டிருக்கிறார்களா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். பசு என்றால் சமஸ்கிருதத்தில் நாலுகால் பிராணி எனப் பொருள். பிற்காலங்களில் பசு என்றால் கறவை மாடு என வழங்குவது வழக்கமாகி விட்டது. தமாஷ{க்காக இப்போது நாலு சக்கர பஸ்ஸைகூட பசு என கூறினாலும் கூறலாம்).

அந்த புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரங்களை சொல்லச் சொல்ல ஒன்றும் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். காரணம், அன்று மக்கள் பேசியது பிராக்ருத மொழி. அவர்களுக்கு சமஸ்கிருத மந்திரங்கள் புரியவில்லை. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றும் தெரியவில்லை.

புத்தர் இதைப் பார்த்தார். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமானால், அவர்களின் மொழியான ப்ராக்ருதத்திலேயே கருத்துகளை பரப்பவேண்டும் என முடிவெடுத்தார்.

அப்போதுதான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாகக் கண்டார். புத்தர் அதென்ன அசுவமேதயாகம்?

ராஜாக்கள் ஒரு ஆண் குதிரையை அவிழ்த்து விட்டு.. அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்று விட்டு வருகிறதோ.. அந்த எல்லை வரைக்கும் போரிட்டு ஜெயித்து விட்டு அந்த வெற்றியை கொண்டாடுவதற்காக நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம்.

ஓடிக் களைத்து வந்த அந்த குதிரையை கட்டிப் போட்டுவிட்டு விடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்து விடுவார்கள். இயற்கை உந்துதலால் ஆண் குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும.; அப்போது ஓரிரவு முழுவதும் சம் பந்தப்பட்ட ராஜா வீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி.. குதிரையின் உறுப்பை கைகளால் இரவில் பிடித்துக் கொண்டிருக்கவேண்டும.; இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.

இதைக் கூற சவுஜன்ய (கூச்சம்)மாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய, அசுவமேத யாக ஸ்லோகமே அப்படித்தானே இருக்கிறது.

"அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து

பத்னி க்ராக்யம் ப்ரசக்ஷதே..."

என போகிறது ஸ்லோகம். அஸ்வமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி 'வழிபட" வேண்டிய முறையைத் தான் விளக்குகிறது இந்த ஸ்லோகம்.

இரவு இந்த கடமை முடிந்ததும்.. மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்கினியில் போட்டு பஸ்பமாகும் வரை எரித்துவிடுவார்கள். இதுதான் அஸ்வமேதயாகம்.

மக்களைபோலவே, ராஜ குடும்பத்தினரும் பிரமாணர்களின் மந்த்ர யாகத்துக்கு கட்டுப்பட்டிருந்தார்கள்.

யாகம் முடிந்ததும்.. "ஏ.. ராஜா, இந்த யாகத்தை நல்ல விதமாக ப+ர்த்தி செய்தாகி விட்டது. இதற்காக நீ பொன்னும், பொருளும் தட்சணை கொடுத்தாய.; அஃதோடு யாகத்தில் பங்குகொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணை யாக்கி பிறகு அழைத்துச் செல்லவேண்டும்" என்றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்டார் புத்தர். "மனித தர்மம் மிருக காருண்யம் இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே...? ஏன் இப்படி...?"

என யாகம் நடந்த இடத்துக்கே போய் கேள்விகள் கேட்டார்.

பிராமணர்கள் பதில் சொன்னார்கள் "குதிரைக்கு மோட்சம் கிடைக்கும் லோகத்துக்கு Nடீமம் கிடைக்கும்" என்று புத்தர் திரும்ப கேட்டார்.

"ஒன்றும் தெரியாமல் வளர்ந்து, வாழ்ந்து சாகப் போகும் குதிரைக்கு மோட்சம் தருகறீர்களே! எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெறவேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில், யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா...?"

ப்ராக்ருத மொழியில் மக்களிடம் இதே கேள்வியை புத்தர் பரப்ப.. திடுக் கிட்டுப் போனார்கள் பிராமணர்கள்.

பிறகு...? (தொடரும்)


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (4)


அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்
 

'நக்கீரன் இதழில் தொடந்து வெளி வந்துகொண்டிருக்கும் இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்றும் சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ள பெரிதும் உதவும் என்பதால் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருக்கும் இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.

முரட்டுத் தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி ஆலமரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெறத் தொடங்கியது.

முதலில், உடனடி அழிவிலிருந்து பிராணிகளை காப்பாற்றுவது, பிறகு, மெல்ல மெல்ல கவ்வும் அழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது என முடிவெடுத்த புத்தர்.. தன் சிந்தனையோடு ஒத்துப்போகும் சில வாலிபர்களை தேர்ந்தெடுத்தார். புத்தருக்கு அப்போது முப்பது வயது இருக்கலாம.; முறுக்கேறிய தேகம்.. முன்னேறும் கண்கள் ஓயாத சிந்தனை... தனக்கே உரிய குணங்களைப் பெற்றிருக்கும் அவர்களோடு சாலை சாலையாக நடந்தார்.

எங்கேனும் வேள்விச் சாலை அனல் அடித்தால் அங்கே விரைந்து சென்றது புத்தர் படை.

யார் நலனுக்காக யாகம் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறதோ அவர் களை அணுகியது. பாரப்பா.. இப்படி உயிர் களைப் பலிகொடுத்து உனக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது?.. சென்ற முறை பக்கத்தில் ஒருத்தன் பல யாகங்கள் நடத்தினான் பொருள் செலவு தான் மிச்சம். அவன் கண்ட பலன் ஒன்றுமில்லை.

நீ பலி கொடுக்கும் நாலு கால் பிராணியை நீயே தீனியிட்டு வளரு. அது இறந்து கொடுக்காத பலனை இருந்து கொடுக்கும். இந்த வைதீக கர்மாக்களை நம்பாதே! ஒருவனுக்கு இழப்பும், ஒருவனுக்குப் பிழைப்பும் கொடுக்கும் மோசடி வித்தை.. ப்ராகிருத மொழியில் பிளந்து கட்டியது புத்தர் குழாம். இதைக்கேட்ட யாகம் நடத்துபவர்கள்.. உடனடியாக நிறுத்தவில்லை என்றாலும் இனிமேல் யாகம் நடத்தமாட்டோம் என புத்தரிடம் உறுதி தந்தனர்.

புத்தர் நடந்தார். வீடு வீடாய்ச் சென்றார். இப்போது தேர்தல் வந்தால் கட்சிக்காரர்கள் வீட்டு எண்களைப் பார்த்துப் பார்த்துக் கும்பிடுவார்களே.. அதே போல. ஆனால் பதவியை எதிர் பாராமல் ஒவ்வொரு வீடாய்ப் புகுந்தார் புத்தர் யாகங்கள் நடத்தாதீர்கள். நெருப்புக்குள் உயிர்களைப் போட்டு கொல்லாதீர்கள். உங்கள் அறிவைப் பயன்படுத்தி வாழுங்கள்.

இதுதான் புத்தோபதேசம்.

இங்கே முக்கியமான ஒரு செய்தியை குறிப்பிட்டாக வேண்டும். புத்தருக்கு நெடுங்காலம் கழித்து தோன்றிய கிறிஸ்தவ மதத்தின் புனிதநூல் பைபிளில் மைக்கேல் கூறுவதாக கீழ்க்கண்ட வாசகங்கள் அமைந்துள்ளன.

"னுழn'வ pழரச inழெஉநவெ அயவவநசள iவெழ வாந கசைந. புழன றயவெள லழரச டழஎந ழடெல"

"ஒன்றும் அறியாத அப்பாவி ஜீவன்களை நெருப்புக்குள் போட்டு எரிக்காதீர்கள்! கடவுள் இதை விரும்புவதில்லை! அவர் உங்கள் அன்பை மட்டுமே விரும்புகிறார்" என கிறிஸ்தவ புனித நூலில் சொல்லப்பட்ட கருத்தை.. மிக மிக மிக முன்கூட்டியே வீடுவீடாகக் சென்று சேர்த்தவர் புத்தர்.

யுவெi-ஏநனiஉ வேத எதிர்ப்புக் கொள்கையை இன்னும் முழுவீச்சில் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுமானால் மக்கள் மனதில் பதியும் சில அடையாளங்களை பெற்றிருக்க வேண்டும் என ஜனரஞ்சகமான முடிவுக்கு வந்தார் புத்தர்.

என்ன செய்யலாம்? மொட்டையடிக்கலாம்! ஆடையைக் குறைக்கலாம்! இவை வெளிப்புற அடையாளங்கள். தலையிலிருந்து ரோமங்களையும், உடலிலிருந்து உடையையும் களைந்தது போல், மனசிலிருந்து ஆசையைக் களைய வேண்டும். பெண்ணாசை, பொருளாசை துறந்து விட்டு வீட்டை திறந்து வெளியே வந்துவிட வேண்டும்.

தனி குழாமுக்கு இப்படி அழைப்பு விடுத்தார். குவிந்தனர் வீட்டை விட்டு வெளியே வந்தாகி விட்டது. இனி மக்களிடம் நம் கொள்கையைப் பரப்புவதுதான் முழு முதல் வேலை. வேறொருவர் வீட்டிலும் தங்கக் கூடாது. எங்கே போவது?...

உருவாகின புத்த விஹாரங்கள். சிறு சிறு எளிய குடில்கள் புத்த சன்யாசிகள் என (டீரனனாளைவ ஆழமௌ) பிட்சுகள் தங்குவதற்காக அமைக்கப்பட்ட கோயில் போன்ற ஸ்தலங்கள் தான் விஹாரங்கள் என அழைக்கப்பட்டன.

மக்கள் பேசும் மொழியான ப்ராக்ருதத்திலேயே புத்த பிட்சுகளின் பிரச்சாரங்களும் போதனைகளும் பரவத் தொடங்கின. விஹார்களின் எண்ணிக்கை சரசரவென அதிகரிக்க ஆரம்பித்தது.

இன்றைய பிஹார் மாநிலத்துக்கு இப்பெயர் வரக் காரணமே அங்கே புத்த விஹார்கள் எக்கச்சக்கமாய் இருந்ததுதான் காரணம் என்ன ஒரு வரலாற்றுக் குறிப்பும் உள்ளது.

புத்தர் காலத்துக்குப் பிறகும் அவருடைய ஞான மார்க்கம் பரவி பெருகிய நிலையில்தான் பிராமணர்கள் தங்கள் கர்ம மார்க்கத்தை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித் தனர். உயிர்ப்பலிகளை குறைக்க முடிவெடுத்தனர்.

பிராமணர்களின் மிகப் பெரிய பலமே.. யாரிடம் எது நல்லதாக இருக்கிறதோ அதை தங்களுக்கு ஸ்வீகாரம் செய்து கொள்வது தான். ஆங்கிலத்தில் 'ஹயுனழிவழைn" என சொல்வோமே...

புத்த இயக்கத்திடமிருந்து.. ஜீவகாருண்யத்தை மட்டுமா ஸ்வீஹரித்தார்கள்?

இப்போது மடம் மடம் என சர்ச்சைகளுக்கிடையே பேசப்படுகின்றதே.. இதுபோன்ற மடங்களுக்கான மூலத்தையும் புத்த விஹார்களிடமிருந்துதான் பிராமணர்கள்
பெற்றார்கள்.

மெல்ல மெல்ல புத்த இயக்கத்தினர் வட இந்தியாவிலிருந்து தென்னிந்தியாவுக்கு வந்தனர். பிராமணர்களும் பின் தொடர்ந்தனர் பிறகு?...
 


--------------------------------------------------------------------------------


இந்து மதம் எங்கே போகிறது? (5)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி.. சங்கம் சரணம் கச்சாமி.. என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம் இங்கே தமிழ் பண்பாடு.. நாகரிகத்தின் உச்சியில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தது. சங்க இலக்கியங்கள் இயற்கை, இறைமை, காதல், பக்தி என சகல விசேஷங்களையும் தொட்டு தமிழாட்சி நடத்திக் கொண்டிருந்தது.

பொதுவாகவே உலக அளவில் வழிபாட்டு முறையில் ஓர் ஒற்றுமை இருந்து வந்துள்ளது-

(i) கல்லை வழிபடுதல்-                         குநவiளா றழசளாip
(ii) விலங்குகளை வழிபடுதல்-              வுழவநஅளைஅ றழசளாip
(iii) மனித- உரு செய்து வழிபடல்-      ளூயஅயளைஅ றழசளாip
(iஎ) விக்ரம், சிலை செய்து வழிபடுதல்- ஐனழட றழசளாip

நாகரிக பண்பாட்டு வளர்ச்சியின் அடிப்படையில் இந்த வழிபாட்டு முறைகளும் வளர்ச்சி கண்டு வந்தன தமிழ் நாகரிகமோ சிற்பக்கலையில் தேர்ந்து விளங்கியது.
பழங்கால மன்னர்கள் தங்கள் ஆட்சியின் பெருமைகளை வரலாறு தாண்டி உரத்துச் சொல்லும் அளவுக்கு சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டி அங்கே தெய்வச் சிலைகளை எழுப்பி வழிபாடு நடத்தி வந்தனர்.

வழிபாடு என்றால்?

தமிழன் கல்லை சிலையாக்கும் நுண்மையான வன்மை கொண்டவன் என்றாலும்.. அதே அளவுக்கு மென்மை தன்மையும் அவனிடத்தில் மேவிக் கிடந்தது.

ப+க்களை பறித்து அவற்றால் வழிபாடு நடத்த ஆரம்பித்தான். அருகில் அணையாமல் நந்தா விளக்கு எரிந்து கொண்டே இருக்கும.; தீப வெளிச்சத்தில் ப+க்களால் நடத்தப்பட்டதுதான் தமிழனின் முதல் வழிபாடு ப+செய்.  ப+வால் செய். இது இணைந்ததுதான் ப+செய் ப+சை என இப்போதைய வார்த்தையின் வடிவம் தோன்றியது.

இதனை திராவிட மொழியியல் ஆராய்ச்சியாளர் எஸ்.கே சாட்டர்ஜி தனது ஆராய்ச்சி நூலில் எடுத்துக் காட்டுகிறார். வழிபாடு மட்டுமல்ல பக்தியிலும் தமிழினம்தான் முன்னோடியாக இருந்திருக்கிறது.

நீ உன் மனைவியிடம் காட்டும் அன்பை கடவுளிடம் காட்டு.. என பக்திக்கு இலக்கணம் வகுத்தது பரிபாடல்.

'நாயக நாயகி பாவம்" என்ற பக்தி வடிவத்தை உலகுக்கு கொடுத்ததே தமிழ் இனம்தான்".

இவ்வாறு கடவுளை காதலியாகவும், காதலனாகவும் உருவகிக்கும், வர்ணிக்கும் அளவுக்கு வளர்ந்திருப்பது தமிழ்ப் பண்பாடு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்.. புத்தம் மற்றும் சமண கொள்கைகள் தமிழ்நாட்டில் பரவின. பரவின என்றால் சும்மா அல்ல.. தெற்கே திருநெல்வேலிவரை சமணம் பரவிவிட்டது. நாகப்பட்டினம்வரை புத்தம் புகுந்து விட்டது.

வடஇந்தியாவில் புத்திஸத்தால் எதிர்க்கப்பட்ட வேத பிராமணர்கள் நகர்ந்து நகர்ந்து தென்னிந்தியாவைத் தொடுகின்றனர்.

அவர்களில் ஒருவர்தான் மகேந்திர பல்லவ ராஜா என்றும் கருத இடமுள்ளது புத்தர் இனத்தவர்கள் தமிழினத்தவரோடு 'சம்மந்தி உறவு முறை வரை நெருங்கிவிட்ட நிலையில்..

பல்லவ ராஜாக்கள் வேதத்தை வேத நெறிமுறைகளை இங்கே விதைத்து வைத்தனர் புத்த போதனைகளால் எதிர்க்கப்பட்ட வேத போதனைகள் இங்கே பிராமணர்களால் மறுபடியும் தலை தூக்கின.

பிராமணர்கள் இங்கே வந்தபோது அவர்கள் அணிந்திருந்த நூல்.. அதாவது ப+ண்டிருந்த நூல். அதாவது ப+ணூல் (இப்போது பெயர்க்காரணம் புரிகிறதா).. பார்த்து ஆச்சரியப்பட்டார்கள் இங்கிருந்தவர்கள் என்ன இது? என கேட்க.. அதற்கு பிராமணர்கள் பதில் சொன்னார்கள் 'சமூகத்தில் நாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்பதற்காக அணிவிக்கப் பட்டிருக்கும் அந்தஸ்து'..

ஆனால்.. உண்மையில் இந்த ப+ணூல் வந்த கதை வேடிக்கையானது.

வேத கர்மாக்களை நிறைவேற்றுவதற்கான சடங்குகளில் ஈ டுபட்டிருக்கும்போது. வஸ்திரத்தை தோள்பட்டை வழியாக மார்புக்கு குறுக்காக அணியவேண்டும் என்பது வேதம் வகுத்த விதி.

அதேபோல் அணிந்து பார்த்தார்கள் கைகளை உயர்த்தி வேள்விச் செயல்களில் ஈடுபடும்போது அடிக்கடி அமர்ந்து எழுகின்றபோதும் வஸ்திரம் அவிழ்ந்து நிலை மாறிவிடுவதால். இது நிலையாகவே இருக்க என்ன வழி என்று பார்த்தார்கள்.

இதே போல மெல்லியதாய் அணிந்தால் பணி செய்யும்போது உபத்திரவம் செய்யாமல் இருக்குமே என யோசித்தனர். வஸ்திரம் நூலானது அதுவே ப+ணூலானது.

இதை 'அந்தஸ்து" என வழங்கிக் கொண்ட பிராமணர்களுக்கு வசதி செய்து கொடுக்கும் வகையில்.. புத்த, சமண கொள்கைகளை பின்பற்றுவதில் கஷ்டங்கள் இருந்தன.

சமண கொள்கைப்படி.. உயிர்களை அதாவது எறும்பைக்கூட கொல்லக்கூடாது. நடக்கும்போதுகூட ப+மிக்கு நோகக்கூடாது!

மேலும் இரு கொள்கைகளுமே கடவுளை முக்கியப்படுத்தவில்லை என்பதால். கொஞ்சம் கொஞ்சமாய் மங்க ஆரம்பித்தன. இந்த மகா கொள்கைகள் இந்த மாற்றங்கள் நடந்த பிறகு.. தமிழ்நாட்டில் வேதம் வழிந்தோடியது கிடைத்தது. இங்கேயுள்ள மிகச் சிறந்த சிலைகளை பார்த்த பிராமணர்கள "இவை வெறும் கல்லாகவே இருக்கின்றன. நான் என் மந்த்ரத்தன்மை மூலம் இவைகளை தெய்வமாக்குகிறேன் என்றனர்.

ப+செய்.. என்பதை மாற்றி ப+ஜை ஆக்கினார்கள் ப+, நந்தாவிளக்கு என இருந்த தமிழர் வழிபாட்டில் மட்டுமா?.. கலாச்சாரத்திலும் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள் என்னென்ன? (வளரும்) நக்கீரன் -29-12-2004
 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (6)

தமிழ் ப+க்களால் தமிழர்கள் செய்த ப+ஜை (ப+ செய்) எப்படி ப+ஜையானது என பார்த்தோம்.

இதுமட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர் சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...

'ஏ.. காவல் காக்கும் அம்மா.. என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு.. எங்கள் ஊருக்கு மழையைக் கொடு.." என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்.. சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால்தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போதுதான் நமது கோரிக்கை நிறைவேற்றப் படும்.. என்பது நம்பிக்கை.

இப்படியே கொஞ்ச காலம் போக.. ஒருவன் சொன்னான். "நாம் நமக்குள் பேசுவதுபோல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா? க்ரீம் த்ரீம் ப்ரீம்.. என அடி வயிற்றிலிருந்து அதிரும் படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும்" என்றான்.

இந்த உரத்த வழிபாடு ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக்கொடுத்தார்கள் பிராமணர்கள.; எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல.. அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து.. 'இனி உங்களை தாக்கமாட்டோம்" என அடிபணிந்தனர்.

அதுபோல வைத்துப் பாருங்கள.; கும்பிடுவது போல் தோன்றும் அந்த 'தாஸே' இனப் பெயரிலி ருந்துதான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது.

தங்களை அன்று கும.;பிட்ட 'தாஸே' இன மக்கள் மாதிரியே.. பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள் கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக.. தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.

"நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம் அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும்! தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்?"

.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள். புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள்தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்.. கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உப தேசிப்பது என்னவென்றால்.. "கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது உருவம் இல்லாததுதான் உண்மையான உருவம்."

வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

தமிழன் வழிபாட்டு முறையான ப+வோடு.. தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா தொடங்கியது படையல் பண்பாடு.

நந்தா விளக்கு தீபம், ப+ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன. தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.

வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?.. உண்டானது.

கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை. அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி ப+ப்பெய்துகிறாள். உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகையிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே! அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து ப+ரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்தக் காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள் பெண்களின் பாதுகாப்பு.. அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.

ஒரே தூக்கு! அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாயமாய்ப் போன பின்னே.. தேடுகிறார்கள். சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது.

கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம்.

பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது.

கையும் களவுமாக பிடித்தபின் என்ன தண்டனை தெரியுமா?  (தொடரும்)


--------------------------------------------------------------------------------

 


இந்து மதம் எங்கே போகிறது? (7)
 

கன்னியை தூக்கிக்கொண்டு ஓடிய அந்தப் பக்கத்து வீட்டு காளைக்கு தமிழ்க்கூட்டம் என்ன தண்டனை கொடுத்தது தெரியுமா?

"இதோ பாரடா.. நீ அவளை தொட்ட முதல் ஆண்மகன் அதனால் அவள் உனக்குரியவள்தான் உன்னுடன்தான் வாழ வேண்டும் அவள்" என இரண்டு பேரையும் சேர்த்து வைத்தது தீர்ப்பு.

இஃது களவியல் என்றால்.. தமிழர்களின் இன்னொரு சிறப்பு, சங்கப்பாடல் ஒன்று சொல்கிறது பாருங்கள் காதலை அஃதாவது கற்பியலை.

"யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர்போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே...''

நானும் நீயும் யார் யாராகவோ இருந்தோம் என் தந்தையும் உன் தந்தையும் எந்த முறையில் சொந்தக்காரர்கள் என்றும் தெரியாது நானும், நீயும் எங்கிருந்து வந்தோம் எனவும் இப்போது தெரியவில்லை.

ஆனாலும்.. இந்த அறிமுகங்கள் எல்லாம் தேவையே இல்லாமல் அன்பு கொண்டோம்.. எப்படி தெரியுமா.. செம்மண்ணிலே பெய்யும் மழைநீரும் செந்நிறம் அடைந்துவிடுகிறதே அதுபோல அன்பு கொண்ட நம் நெஞ்சங்கள் இரண்டும் பிரிக்க முடியாதபடி கலந்துவிட்டது.

இப்படி காதல் வாழ்க்கையிலும் நாகரிகத்தின் சிகரத்தில் இருந்தனர் தமிழர்கள்.

இவ்வாறு களவியல், கற்பியல் இரண்டு விஷயங்களிலுமே முன்னணியில் இருந்த தமிழர்களின் கல்யாணங்களில் "தாலி" வந்த கதை சுவாரஸ்யமானது.

திருநெல்வேலி போன்ற பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்.. பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் "இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்" என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள்.

பனைமரத்துக்கு தால் என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்.. பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

"இவ்வளவு கஷ்டப்பட்டு களவியல் செய்கிறீர்களே.. இவ்வளவு மகிழ்ச்சியுடன் காதல் மணம் புரிகிறீர்களே? இவற்றையெல்லாம் முறைப்படி சடங்குகள் செய்து விழாக்களாக கொண்டாடினால்தானே மகிழ்ச்சி என்றும் கூடும்?''

கல்யாண கலாச்சாரத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் பிராமணர்கள்.

ஒன்றா, இரண்டா? எக்கச்சக்க சடங்குகள் என்னென்ன... ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1) திருமணத்துக்கு முன்பே இந்த பெண்ணுக்கு இவன்தான் கணவன் என்பதை நிர்ணயிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியில் பெண் தரப்பில் பொருள்களை மாப்பிள்ளை வீட்டாருக்குக் கொடுக்கவேண்டும். இதற்கு பெயர் நிச்சயதாம்ப+லம்.

2) கல்யாணச் சடங்குகள் ஆரம்பிக்கின்றன.

முதலில் காசி யாத்திரை.

சந்நியாசம் வாங்கவேண்டுமென்றால்.. மகனே கல்யாணத்துக்கு முன்னரே நீ சந்நியாசம் வாங்கிவிட வேண்டும். அதைவிட்டு கல்யாணத்துக்குப் பிறகு துறவறம் போகிறேன் என சொல்லி பெண்ணின் வாழ்வை படுத்தாதே என சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

அதனால் கல்யாணத்துக்கு முன் காசியாத்திரை என்றொரு சடங்கு.

அதாவது மாப்பிள்ளை குடைக்கம்பை பிடித்துக்கொண்டு காசிக்கு புறப்படுவதுபோல பாவ்லா (னுசயஅய) செய்யவேண்டும.; மாப்பிள்ளையை சமாதானப்படுத்தி மறுபடி திருமணத்துக்கு அழைத்துப் போவார்கள்.

3) ஊஞ்சலாட்டுதல்

"குழந்தாய்.. நீ பெண்ணோடு சந்தோஷமாக இருக்கும்போது அவருடன் ஊஞ்சல் பலகையில் அமர்ந்து ஆனந்தமாய் ஆடுவாயாக" என்பது வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது கல்யாணம் என்றால் மஹஸ் அதாவது (குநளவiஎயட) கொண்டாட்டம் இதற்காகத்தான் ஊஞ்சல்.

4 மாலை மாற்றுவது:

இது டீத்திரியர்களின் கலாச்சாரம் மணமகனும், மணமகளும் சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்ளவேண்டும் என்பதன் அடையாளமாகத்தான் மாலை மாற்றிக் கொள்வார்கள்.

5) திருஷ்டி சுத்தி போடுவது மணமக்களுக்கு யார் கண்ணும் பட்டுவிடக் கூடாது என்பதற்காக உறவினர்கள் எல்லாம் மணமக்களுக்கு திருஷ்டி கழிப்பார்கள்.

6) நீராஜனம் எனப்படும் ஆரத்தி எடுப்பது.

7) இது முக்கியமானது. பெண்ணும், பையனும் இப்போதுதான் நேருக்கு நேராக பார்த்துக் கொள்ளவேண்டும். மந்த்ரங்கள் ஒலிக்க.. பெண்ணை உட்கார வைத்து அவள் தலையில் தண்ணீரை மெல்ல மெல்ல ஊற்றிக் குளிப்பாட்ட வேண்டும்.

8) பிறகு.. முழுக்க நனைந்த அவளை.. உள்ளே அழைத்துச் சென்று மணமகனே அவளுக்கு புடைவை உடுத்திவிட வேண்டும்.

அவளது நனைந்த புடைவையை களைந்துவிட்டு.. புதுப் புடைவையை மணமகன் உடுத்திவிடும்போது.. இந்த சேலை வளர்வதுபோல் நம்முடைய மகிழ்ச்சி சந்ததியெல்லாம் வளரவேண்டும் என்பதற்காகத்தான் இப் புடைவைச் சடங்கு.

இன்னும் இருக்கும் கல்யாணச் சடங்குகளையும்.. அவை மறுபடியும் எப்படி மாறின என்பதையும் அடுத்துப் பார்ப்போம். (தொடரும்)

 


--------------------------------------------------------------------------------


இந்து மதம் எங்கே போகிறது? (8)
 

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இதுவரை ஏழு பார்த்தோம். எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம்.

பாணிக்ரஹனம் இதுதான் முக்கியமான சடங்கு. கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் 'கை' பற்றுவதுபோலவும் அமைந்தது இச்சடங்கு.

மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வதுதான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

9 கைத்தலம் பற்றிய பின், மணமகள் 7 அடி எடுத்து வைக்கவேண்டும். எதற்காக தெரியுமா?

முதல் அடி அன்னம் பெருகவேண்டும் என்பதற்காக.  இரண்டாவது அடி அந்த அன்னம் உண்டபின் செரிக்க வேண்டும், மூன்றாவது அடி கணவனுக்காக விரதங்கள் அனுஷ்டிக்க வேண்டும் என்பதற்காக. நான்காவது, குடும்பம் சந்தோசமாக விருத்தியாக வேண்டும் என்பதற்காக. 5 வது அடி வீட்டில் மாடுகள் பெருகவேண்டும் என்ற வேண்டுதலுக்காக.  6 வது அடி வைப்பது குடும்பத்தில் அய்ஸ்வர்யம் (செல்வம்) கொழிப்பதற்கு. 7 வது அடி இந்த சகல சவுபாக்கியங்களும் சேர்ந்து கிடைக்க. தாலிக்கு அதாவது, நம் குடும்பம் இனிமேல் ஒன்று உன் அப்பா யாரோ என் அப்பா யாரோ.. ஆனால், இன்று முதல் நாம் ஒன்று என சங்கப் பாடல் படித்தோமே? அதே பொருளுக்காக யாகத்தை நெருங்குவதுதான் 7 வது அடி.

இந்த சடங்குகளோடு தமிழ்த் தாலியையும் சேர்த்தனர். இப்படியாகத் தூக்கிப் போவது, காதலிப்பது என சம்பிரதாயங்களில் சிக்காமல் இருந்த தமிழ் திருமண முறையும், பிராமண திருமண முறையும் திருமணம் செய்துகொண்டன.

இதன் விளைவாக தமிழனின் களவியல், கற்பியலில் மந்த்ர இயல் புகுந்தது. சடங்குகள் பிறந்தன. கல்யாணம் என்பது வேதக் கட்டளைப்படி நடக்கும் விழா ஆனது.

மேலோர்க்கு யாத்த கரணம்
கீழோர்க்கு ஆன காலமும் உண்டே....

என்கிறது தொல்காப்பியம்.

கரணம் என்றால் கல்யாணம். அதாவது, மேலோர்களான பிராமணர்கள் வகுத்த கல்யாண கர்மாக்கள்.. மற்றவர்களுக்கும் வழக்கத்தில் இருந்தது. விளக்கம் என்னவென்றால் தொடர்ந்து 10 நாள்கள் வரை நடக்கும் கல்யாணச் சடங்குகளை பிராமணர்கள் தங்களால் சூத்திரர்கள் என அழைக்கப்பட்ட தமிழர்களுக்கும் பண்ணி வைத்தனர்.

மந்த்ர ப+ர்வமான கல்யாணத்தில் இடமில்லை. ஆனால், தமிழர்களுக்கு கல்யாணம் பண்ணி வைக்கும்போது அவர்களின் வழக்கத்துக்கு விரோதமாக செயல்பட இயலாதென்பதால் தாலியை -பனை ஓலை கயிறை - மெல்ல மந்த்ர மஞ்சளில் இழைத்து மாங்கல்யமாக்கி விட்டார்கள், தங்களுக்கும் சேர்த்து.

மேற்கூறிய தொல்காப்பிய வாசகத்தில் கவனிக்கவேண்டிய பதம் ஒன்று உண்டு. 'மேலோர்க்கு யாத்த கரணம் கீழோர்க்கு ஆன காலம் உண்டே''
என்பதில் கீழோர்க்கு ஆன காலம் உண்டே என்பதை மட்டும் உற்றுப் பாருங்கள். பிற்பாடு - இந்த கல்யாண முறையில் மாற்றம் வந்துவிட்டது- ஒன்றாக இருந்த காலம் உண்டு என்று தெரிய வரும்.

ஏன் மாறிப் போனது? முதல் காரணம் தனக்கும் கீழானவர்கள் அதாவது சூத்திரர்களின் கல்யாணச் சடங்குகளும் ஒன்றாக இருக்கலாமா? அவர்களுக்கும் நாமே கல்யாணம் செய்து வைப்போம் அதனால் சடங்குகளில் சிற்சில மாற்றங்களைக் கொண்டு வருவோம் என நினைத்தார்கள் பிராமணர்கள்.

இரண்டாவது காரணம் இவ்வளவு நீண்ட சடங்குகளை நடத்தி திருமண விழாவை பத்து நாள்கள் நகர்த்திச் செல்ல தமிழர்களுக்கு பொறுமையோ அல்லது விருப்பமோ இல்லை. கண்ணிமைக்கும் நேரத்தில் கன்னியை தூக்கிக் கொண்டோடி சுகித்து திடீர் திருமணங்களை நடத்திக்கொண்ட களவியல் மரபுக்காரர்களாயிற்றே!

அவனது கண்களும், அவளது கண்களும் சந்தித்துக்கொண்ட சிற்சில நொடிகளில்.. மவுனப் புன்னகையே மந்திரமாக.. கற்பியல் முறையில் காதல் மணம் கண்டவர்களாயிற்றே!

அதனால் தமிழர்களுக்கு அந்த நீண்ட நெடிய சடங்குகளில் பிடிப்பு வரவில்லை. கல்யாண கலாச்சாரங்களுக் கிடையில் விவாகரத்து ஏற்பட்டுவிட்டது.

இத்தகைய காரணங்களால்.. சூத்திரர்களை தனியாகப் பிரித்து வைத்த பிராமணர்கள் கல்யாண முறை மட்டுமல்லாது அனைத்து வகையிலும் சூத்திரர்களை கீழ்ப்படுத்தினார்கள்.

இப்படி செய்வதற்கு அவர்கள் கையில் கசங்காமல் இருந்த மனு ஸ்மிருதி தான் ரொம்ப உதவியாக இருந்தது.

மனு மூலம் சூத்திரர்களை கெடுபிடி செய்த பிராமணர்கள இந்தக் கொடுமைக்கும் அதிகமான கொடுமைகளை இன்னொரு பிரிவினருக்குச் செய்தார்கள்.

யாருக்கு டீத்திரியர்களுக்கா...? வைஸியர்களுக்கா...? இல்லை, இல்லை சண்டாளர்களுக்கு.

சண்டாளர்களா? யாரவர்கள்?

மனு கூற்றுப்படி சண்டாளர்கள் யார் என்பதை என் எழுத்தில் என்னால் கூற முடியவில்லை. என்னிடம் மகாத்மா காந்தி கூறியதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்.

 


--------------------------------------------------------------------------------

இந்து மதம் எங்கே போகிறது? (9)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

யார் அந்த சண்டாளர்கள்?

துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனைதான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மனு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள் எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மனு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.

ஏன் அவர்களைச் சண்டாளர்கள் என குறிப்பிடவேண்டும்? அவர்கள் அப்படி என்ன பாவம் செய்தார்கள்?

இதற்கான பதிலைத்தான் தானே எழுதிட முன் வரவில்லை அண்ணல் காந்தியடிகள் எனக்கு உரைத்த பதிலை அப்படியே உங்களுக்குத் தருகிறேன் எனக் குறிப்பிட்டேன்.

முதலில் காந்தியாரை நான் சந்தித்த சந்தர்ப்பம் பற்றி விரிவாகச் சொல்லுகிறேன்.

இந்திய நேரத்தின் விடுதலைக்கு முந்தைய காலம் சுதந்திர போராட்டத்தை விடவும் காந்தியடிகள் சமூக சீர்திருத்த போராட்டத்தில்தான் அதிகம் ஈடுபட்டிருந்தார் அந்த வகையில் எங்கள் ஊரான கும்பகோணத்திற்கு தீண்டாமை ஒழிப்பு பிரச்சாரத்துக்காக காந்தி பலதடவை வந்தார்.

அப்படி ஒரு தடவை வந்தபோது ஊரிலுள்ள நான் உட்பட சில பிராமண இளைஞர்கள் ஒன்று கூடினோம். காந்தி சனாதன தர்மத்தை சாய்க்க வருகிறார் அவரை நாம் எதிர்க்கவேண்டும் அவரது பிரச்சாரத்தை முறியடிக்கவேண்டும் என திட்டம் தீட்டப்பட்டது.

உடனடியாக அந்த கூட்டத்தின் தீர்மானங்கள் செயலாக்க வடிவம் பெறத் தொடங்கின. அதில் முதல் திட்டம்தான் முதன்மையான காந்தியடிகளுக்கு கருப்புக் கொடி காட்டுவது தான்.

திட்டப்படி காந்தியடிகள் கும்பகோணம் நகருக்கு வந்தபோது, நானும் சில சனாதன இளைஞர்களும் ஒன்று சேர்ந்து கருப்புக்கொடிகளைப் பிடித்துக்கொண்டோம்.

தீண்டாமை ஒழிப்பில் ஈடுபடும் காந்தியாரே திரும்பிப் போங்கள!; சனாதன வர்ணாஸ்ரமத்தை எதிர்க்காதீர்கள்! என்று நாங்கள் பல முழக்கங்களை போட்டோம்.

காந்தி மேடைக்கு வந்துவிட்டார். அவரது பேச்சைக் கேட்க நிறைய பேர் கூடியிருக்கிறார்கள.; நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக முழக்கங்களை எழுப்பி கருப்புக் கொடிகளை உயர்த்திக் காட்டினோம்.

அப்போதைய கும்பகோணம் காங்கிரஸ் தலைவர் பந்தலு அய்யர் என நினைக்கின்றேன். காந்தி பந்துலு அய்யரை தன் அருகே அழைத்தார் என்ன விவகாரம்? எனக் கேட்டார். அய்யரும் எங்களின் எதிர்ப்புணர்வை சுட்டிக்காட்டி, 'உங்களை தீண்டாமைக்கு எதிராக பேச வேண்டாம் என்கிறார்கள.; கொஞ்ச நேரம் போராடிவிட்டு போய்விடுவார்கள.; நீங்கள் பேசுங்கள் என காந்தியடிகளிடம் தெரிவித்தார். ஆனால், காந்தி அவ்வாறு எங்களை அலட்சியப் படுத்தவில்லை.

எங்களை நோக்கி கையசைத்து கூப்பிட்டார். போனோம.; முன்வரிசையில் நான்தான் இருந்தேன். றூல யசந லழர னநஅழளெவசயவiபெ லழரபெ அநn? எனக் கேட்டார்

நாங்கள் போராட்டம் பற்றிச் சொன்னோம். அதற்குப் பிறகு காந்தி முதலில் எங்களிடம் பதிலளிக்க ஆரம்பித்தார்.

நான் தீண்டாமை முற்றாகவேண்டாம் என்கிறேன். பஞ்சமர்கள் என பட்டம் கட்டி அவர்களை கொடுமைபடுத்துவதை விட்டுவிடுங்கள். அவர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்கும் இவ்வுலகில் வாழ உரிமை உண்டு. அவர்களை தீண்டத் தகாதவர்கள் என ஒதுக்கிவைக்காதீர்கள். அவர்களையும் பொது இடங்களில் அனுமதியுங்கள். கோயில்களில் நுழைய விடுங்கள் என பிரச்சாரம் செய்யவந்தேன்.

இதையெல்லாம் வர்ணாஸ்ரமம் பேசும் நீங்கள் எதிர்க்கிறீர்கள.; நீங்கள் மனு ஸ்மிருதி படித்துள்ளீர்களா? மனவில் பஞ்சமர்களை சண்டாளர்கள் என அபாண்ட வார்த்தையால் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் என்பதையும் குறிப்பிட்டுள்ளார்கள்.

அந்த காலத்தில் பிராமணர்கள் சூத்திரர்களை தங்களது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அதாவது, தாங்கள் இட்ட கட்டளைகளை சிரமேற்கொண்டு செய்து முடிக்கக்கூடிய அளவுக்கு சூத்திரர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள். இத்தகைய காலகட்டத்தில் பிராமண சமூகத்துப் பெண்கள் சிலருக்கு சூத்திரர்கள் மீது பரிதாபம், அனுதாபம் ஏன் ப்ரியம் ஏற்பட்டது.

தனது வீட்டிலுள்ள பிராணர்களுக்கு தெரியாமல் அப்பெண்கள் சூத்திரர்களுடன் நட்பு பாராட்டினார்கள். உறவு கொண்டாடினார்கள். ஏன் கல்யாணம் கூட பண்ணிக் கொண்டார்கள். சூத்திரர்களை கடுமையாக நடத்திவந்த பிராமணர்கள் தங்கள் வீட்டு பெண்களில் சிலரே அவர்களுடன் வாழ்க்கை அமைத்துக்கொண்டதை பெரும் அவமானமாக கருதினார்கள். பிராமண ஸ்திரீகளுக்கும் சூத்திர ஆண்களுக்கும் பிறந்த சந்ததியை அதனால்தான் சண்டாளர்கள் என பெயரிட்டு ஒதுக்கிவைத்தனர்.

நாளடைவில் பிராமண ஆண்கள் சூத்திர பெண்களை கள்ளத்தனமாக உறவு கொண்டனர். இவர்களுக்கு பிறந்த சந்ததியினருக்கும் அதே சண்டாளர்கள் என்றுதான் பெயர். அதனால்தான் சண்டாளர்களை ஊரைவிட்டு ஒதுக்கிவைத்து நீ என் கண்ணில்பட்டாலே தீட்டு, அபச்சாரம் என புறந்தள்ளி வைத்தார்கள். பிராமணர்கள் நான் சொல்வது வெகு காலம் முன்பு.

இப்படி வளர்ந்த சந்ததியைத்தான் இப்போது நீங்கள் தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைக்கிறீர்கள.; அவர்களின் தாயார் தகப்பனார் யார் என எண்ணிப் பாருங்கள். இதெல்லாம் புஸ்தகத்தில்தான் இருக்கிறது. நானாக சொல்லவில்லை என எங்களிடம் ஆங்கிலத்தில் சரசரவென பேசிமுடித்தார் காந்தியடிகள்.

முன்வரிசையில் இருந்த நான் திரும்பிக்கொண்டேன்.

 

--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (10)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

என்ன?.. அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா? 

நீங்கள் இப்போது கேட்டதை நான் பற்பல வருடங்களுக்கு முன்னால் காந்தி வாயால் கேட்டு லேசாக அதிர்ந்தேன்.

பிறகு.. நான் மதுவுக்குள் _ழ்க ஆரம்பித்தேன் 'சண்டாளர்கள் என குறிப்பிட்ட மநு அவர்களைப் பற்றி மேலும் என்ன சொல்லியிருக்கிறது என்பதுதான் தேடல். 

பிராமண வீட்டுப் பெண்கள் சூத்திரர்களோடு ப்பிரியப்பட்டார்கள் அல்லவா?.. அதே காரணத்துக்காக அவர்கள் சமூகத்திலிருந்து தனியே பிரிக்கப்பட்டார்கள். 

சமூகம்?... 

ஆமாம்.. தொழில் முறையில் பிரிவு பிரிவுகளாக வாழ்ந்த மக்களை பிராமணர்கள் பார்த்தார்கள் 'நாளைய சந்ததியில் இவர்கள் தொழில் மாறிவிட்டால் என்ன சொல்லி அழைப்பது'-சிந்தித்தார்கள் ய ளவயடெந ளடிஉநைவல அதாவது நிலையான ச_கக் கட்டுமான அமைப்பு வேண்டுமென்றால் அது சாதியாக பிரிக்கப்பட்டால்தான் உறுதியுடன் இருக்கும் என்பது பிராமணர்களின் கணிப்பு அதற்காக?

பிறப்பின் அடிப்படையில் ஜாதியை வளர்த்தார்கள் சூத்திரனுக்கு பிறந்தவன் நாளை தொழில் மாறினாலும் சூத்திரன்தான் வைசியனுக்கு பிறந்தவன் பிறகு வணிகத்தை மறந்தாலும் அவன் வைசியன்தான் டீத்திரியனுக்கு பிறந்தவன் பின்னாளில் ராஜ்யமின்றி நடுத்தெருவில் நின்றாலும் அவன் டீத்திரியன்தான்.

இதுதான் அவர்கள் வகுத்த ளவயடிடந ளழஉநைவல மறுபடியும் மநுவுக்குள் செல்வோம். 

சாதிவிட்டு சாதி மாறிய காதல்கள் பிராமண ஸ்திரிகளுக்கும், சூத்ர புத்ரர்களுக்கும் மட்டுமல்ல

சத்திரிய ஸ்த்ரிகள்- சூத்ர புத்ரர்கள்
வைசிய ஸ்திரிகள்- சூத்ர புத்ரர்கள்

மேலும்...

சூத்ர ஸ்திரிகள்- பிராமண, சத்திரிய, வைஸிய புத்ரர்கள். 

இப்படி காதல்தேவன் கட்டுகளை உடைத்து கல்யாணங்களை கள்ளத்தனமாக பண்ணிக் கொண்டிருந்தான்.

காதல் தேவனும், காமதேனும் கூட்டணி வைத்துஇஷ்டத்துக்கு திருவிளையாடல் நடத்திக் கொண்டிருந்தால் மநு நினைத்த 'ளவயடெந ளடிஉநைவல அமையுமா? அமையாதே.

இதுவும் தெரிந்திருந்தது மநுவுக்கு அதனால்தான் இந்த பிரச்சினைக்காக மாற்றுச் சட்டமும் இயற்றியிருக்கிறார். 

என்ன மாற்றுச் சட்டம்?

முறைகேடான சாஸ்திரங்களை சாகடிக்கக்கூடிய வகையில் இதுபோல கலப்பு மணம் செய்து கொண்டவர்களுக்கு இரண்டு அளவுகோல் வைத்துப் பார்த்தார் மநு ஒன்று. அனுலோம சங்கரம்.. இரண்டு.. ப்ரதிலோம சங்கரம் அனுலோம.. பிரதிலோம என்றால் என்ன என தெரிந்தது கொள்வதற்கு முன் 'சங்கரம் என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான. சபிக்கப் படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம் என்பதற்கு இந்த இடத்தில் என்ன பொருள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.

முறைகேடான.. சபிக்கப்படக்கூடிய உறவுகள் உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் 'சங்கரம்'.

சரி அனுலோம சங்கரம் என்றால்? இந்த உறவில். ஆண் மேல்ஜாதிக்காரனாக இருந்தால், இதற்கு பெயர் அனுலோம சங்கரம்.

ஆனால், இவர்களை மநு சண்டாளர்களாக பார்ப்பதில்லை ஏனென்றால் மேல் ஜாதி ஆண் அல்லவா? கீழ் ஜாதிப்பெண்ணை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

நம் இனத்து ஆண்.. பிற இன பெண்களை பார்ப்பது, பறிப்பது, நுகர்வது, உறவுகள், உண்டாகுமானால் அந்த சாஸ்திர விரோத சம்பந்தத்துக்குப் பெயர்தான் பொதுவாய் 'சங்கரம்'.

இக்கட்டுரையின் முற்பகுதியிலேயே சொன்னது போல எல்லா ஜாதிக் காரர்களுக்கும் அந்த ப்ரியம் பொதுவானதாக இருந்தது.

இந்த சம்மந்தத்தில் ஆண் மேல்ஜாதிக் காரனாகவும் பெண் கீழ்ஜாதிக்காரியாகவும் இருந்தால் இதற்கு பெயர் அனுலோம 'சங்கரம்'.

உலகத்துக்கே அமைதியைத் தருவது பெண்களின் அழகுதான்.. என்றது வேதம் மநுவோ.. கீழ்ஜாதிப் பெண்கள் மேல் ஜாதி ஆண்களைக் கவர்ந்தபோது மட்டும் அவர்களை கண்டுகொள்ளவில்லை என்ன செய்தாலும் அது பாபம் அல்ல என்கிறது மநு.

இவர்களை அடித்துத் துரத்தி கொடுமைகள் செய்யாமல் தங்கள் உடனேயே தங்க வைத்துக் கொள்கிறது மநு சாஸ்திரம்.

அடுத்து சொல்லப்போகும் 'ப்ரதிலோம சங்கரம் பற்றி நீங்கள் ய+கித்திருக்கலாம் அதாவது....

மேல்ஜாதிப் பெண்களை கீழ்ஜாதி ஆண்கள் கவர்ந்தது, பறித்து நுகர்ந்து சென்றால் மநுவின் பார்வையில் இது பிரதிலோம சங்கரம். 

அடேய். அதெப்படி நம் இனத்து பெண்ணை ஒரு கீழ்சாதிப் பயல் கவர்ந்து செல்லலாம்?.. இவளுக்கு எங்கே போயிற்று புத்தி? ஊரைவிட்டே பகிஷ்காரம் பண்ணுங்கள் நாம் வாழும் தெருவில் அவர்களின் பாபத்தடங்கள் படக்கூடாது அவர்களின் சுவாசக்காற்று நமது தெருக்காற்றை உரசக்கூடாது. 

அவர்களும், அவர்களைத் தொடர்ந்துவரும் சந்ததிகள் அத்தனைபேரும் சண்டாளர்கள்தான் சட்டம் இயற்றி தண்டனை விதித்தது மநு.

இதன் காரணமாக பிரதிலோம சங்கர கூட்டம் ஊரைவிட்டு விரட்டப்பட்டது இன்று வரை அவர்கள் ஊரோரம் குடியிருக்கும் காரணம் புரிகிறதா?

ஆனால்.. 'அனுலோம சங்கர கூட்டத்துக்கு ஊரிலேயே இடம் கொடுத்து தேர் ஓட்டுங்கள் என ஆணையிட்டது மநு மநுவின் 'சண்டாளன் என்ற பதத்துக்கு.. சமஸ்கிருத மொழியியல் பேரறிஞரான பாணினி கூட அர்த்தம் தேடுகிறேன் எனச் சொல்லியிருக்கிறார்.

நாம் மேலும் வரலாற்றைத் தேடுவோம்.

 

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மத எங்கே போகிறது? (11)

அக்னி ஹோத்ர ராமானுஜதாத்தாச்சாரியார் 

'நக்கீரன் இதழில் தொடர்ந்து வெளி வந்துகொண்டிருக்கு இந்த கட்டுரைகள் பல உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளன கட்டுரையை எழுதுபவர் மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நம்பிக்கைக்குரிய மகா வைணவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்." 

சங்கர மடங்களின் சங்கராச்சாரியார்களின் இந்து மத வருணவெறி மற்று சூழ்ச்சிகளைத் தெரிந்துகொள்ளப் பெரிதும் உதவு என்பதால் "நக்கீரனில்" வெளிவந்து கொண்டிருக்கு இந்தக் கட்டுரைத் தொடர் அப்படியே இங்கு வெளியிடப்படுகிறது.

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள் பிராமணர்கள் என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்." 

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான். சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். டீத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் டீத்திரியன்தான்.

-என ஸ்டேபிள் சொசைட்டிக்கு மனு முடிந்து வைத்த சாதி முடிச்சுகளைப் படிப்பவர்களுக்கு ஒரு கேள்வி எழலாம்" அப்படியானால், பிராமணனுக்குப் பிறந்தவன் என்ன தொழில் செய்தாலும் பிராமணன் என்றாகுமே உண்மையில் பிராமணர்களுக்கு இன்னதுதான் தொழில் என சாஸ்திர ஏதாவது சொல்லியிருக்கிறதா?  என்ற கேள்விதான் அது. 

இந்த கேள்வியின் பதிலுக்குள் செல்வதற்கு முன் பல ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் 'படம் பார்த்து தெரிந்துகொள்" என்ற தலைப்பில் அச்சிடப்பட்டிருந்த பாடத்தை உங்கள் எல்லோருக்கும் சொல்கிறேன். 

'என்னடா.. ஒண்ணாவது பிள்ளைகள் படிப்பதையெல்லாம் நமக்கு சொல்லிக் கொடுக்கிறாரே இந்த ஆள் என நினைக்காதீர்கள். அந்த பாடத்திலிருந்துதான் பதிலை ஆரம்பிக்கவேண்டும.;"

சொல்லிக் கொடுத்தவுடனேயே 'பசுமரத்தில் இறங்கிய ஆணிபோல' 'பற்றிக்கொள்ளும் கற்ப+ரம் போல" கரகித்துக் கொள்ளும் சின்னக் குழந்தைகளுக்கு என்ன தெரியுமா சொல்லிக் கொடுக்கப்பட்டது - அந்த புத்தகத்தில்? 

டீத்திரியன் ("ராஜாபோல் படம்") நாட்டை ஆள்பவன் வைசியன் ("ஒரு வியாபாரி படம்"), வியாபாரம் செய்பவன் சூத்திரன் ("ஏர் உழுவது மாதிரி படம்"), விவசாயம் செய்பவன் அய்யர் ("ஒரு பிராமணர் படம்") நல்லவர். 

இந்த ஒன்றாம் வகுப்பில் சொல்லிக் கொடுத்த பாடத்தை வைத்துதான் நீங்கள் மேலும் மேலும் படித்திருப்பீர்கள.; ஆனால், அதில் பிராமணர் என்பவருக்கான தொழிலாக 'நல்லவர்" என எழுதப்பட்டிருக்கிறது ஏன்? 

பிராமணியம் தனிச் சிறப்பு வாய்ந்தது. தனி நோக்கம் கொண்டது. பிராமணன் ப்ரம்மத்தின் அவதாரம். 

பிராமணன் தெய்வம் செய்யவேண்டிய காரியங்களைச் செய்விக்க வந்தவன். தெய்வ நம்பிக்கையை வளர்க்க வந்தவன். பொய் சொல்லமாட்டான். கொலை செய்யமாட்டான். லோக சாந்திக்காக வாழ்வான். இவனால்தான் அரசர்கள் முதற்கொண்டு அனைவரும் சமாதானமாக ஷேமமாக வாழ்கிறார்கள்.

என வேத நூல் நீட்டி முழக்கிச் சொன்னதைத்தான் நமது பாட நூல் அய்யர் - நல்லவர் என இரண்டு வார்த்தைகளில் திரட்டித் திரட்டி தந்திருக்கிறது.

சரி.. நல்லவனாக இருப்பது ஒரு தொழிலா? அப்படியானால், மற்ற வர்ணத்தவர்கள் கெட்டவர்களா? இப்படியும் கேள்விகள் உங்களுக்கு எழலாம். சிலருக்கு ஒன்றாம் வகுப்பிலேயே எழுந்திருக்கலாம.;

அப்போது கேள்விகள் கேட்டால் வாத்தியார் அதட்டி அமரவைத்துவிடுவார். ஆனால், சாஸ்திர புஸ்தகங்கள் அப்படியல்ல. பிராமணர்களின் கடமைகள், வேலைகள் என்னென்ன என்பதுபற்றி அவைகளில் ரொம்ப விளக்கமாக விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார்கள் சாஸ்திரக்காரர்கள்.

"அய்யர் - நல்லவர் மாதிரி இங்கேயும் முதலில் இரண்டே இரண்டு பதங்கள்தான் யஜனம் யாஜனம் அப்படியென்றால்?

யஜனம் - பண்ணுவது

யாஜனம் - பண்ணுவிப்பது. பண்ணிவைப்பது எதை? மந்த்ரம், யாகம், ஹோமம் ஆகியவற்றைதான்.

எப்படி? இங்கேயும் பள்ளிக் குழந்தைகளை உதாரணம் காட்ட வேண்டியிருக்கிறது. சின்னக் குழந்தைகள் டைம் டேபிள் பயன்படுத்துவதுபோல ஒரு நாளில் இன்னின்ன சமயத்தில் இன்னதை செய்யவேண்டும். காலக்கிரமப்படி கர்மாக்கள் வந்;துள்ளது சாஸ்திரம்.

என்னென்ன என்று பார்ப்போம்!

காலை 4..30 இல் இருந்து 5 மணிக்குள் அதாவது சூரியோதயத்துக்கு முன் நித்திரையிலிருந்து எழுந்திருக்கவேண்டும்.

சிறுநீர் கழிக்கச் செல்லும்போது ப+ணூலை எடுத்து காதில் சுற்றிக் கொள்ள வேண்டும். காலைக் கடன்கள் கழித்தபின் கை, கால்களை அலம்பிக் கொண்டு சில மந்திரங்களைச் சொல்லவேண்டும்.

பிறகு ஸ்நானம் செய்வதற்கென சில மந்த்ரங்கள்.

சூரியோதயத்துக்கு முன்னரே செய்யவேண்டிய இன்னொரு முக்கியமான சடங்கு சந்தியாவந்தனம்.

(பின்னாளில் ராட்சஸர்கள் சூரியனை மறைத்துக் கொண்டதாகவும், அதனால் ராட்சார்களிடமிருந்து சூரியனை மீட்பதற்காகவே எல்லோரும் பிராமணர்களைத் தேடியதாகவும் ஒரு நம்பிக்கை உண்டு. பிறகு பிராமணர்கள் சிறிது தீர்த்தத்தை எடுத்து மந்த்ரங்கள் சொல்லித் தெளிக்க அதன் வலிமையினால் அசுரர்கள் ஓடிவிட்டனர். சூரியன் மெல்ல மேலெழுந்தான் என சந்தியாவந்தனத்துக்கு ஒரு திரைக்கதை தயாரித்தார்கள் பின் வந்தவர்கள். )

இந்தச் சடங்கில் ப்ராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியும் உண்டு. இதனைக் காலையிலும் மாலையிலும் செய்தால் உடம்புக்கு நல்லது என அன்றே அறிந்தவர்கள் பிராமணர்கள். இன்றைக்கு அனைவருக்கும் தேவைப்படுவது இந்த மூச்சுப் பயிற்சிதான்.

அடுத்ததாக "யஜனம்" "யாஜனம்" இரண்டுந்தான் அன்று முழுக்க பிராமணர்களின் பிரதானப் பணி. அதாவது தங்களுக்குரிய பிற கர்மாக்கள் செய்யவேண்டும். பிறருக்கு அவர்களுக்கென அமைக்கப்பட்டுள்ள கர்மாக்களை செய்துவைத்து தட்சணைகள் பெற்றுக்கொள்ள வேண்டும். இக்கர்மாக்களில் அக்னிஹோத்ரம் உள்ளிட்ட மந்த்ர சம்பிரதாயங்கள் அடங்கும்.

சூரியன் உச்சி வரும் வேளையில் போஜனம் முடித்து, பின் கொஞ்சநேரம் சயனம். அதாவது தூக்கம்.

பிறகு சில சாஸ்திர புஸ்தகங்களைப் படிப்பது. மாலையில் சூரியன் சாயும் வேளையில் மறுபடியு சந்தியாவந்தனம் செய்வது, பின் உண்டு உறங்குவது

இதுதான் பிராமணர்களுக்கென சாஸ்த்திர புஸ்தகங்கள் வகுத்து வைத்த க்ரமம். 

இப்படி இருந்துகொண்டு மக்களைப் பிளவுபடுத்தி வாழ்ந்த பிராமணர்களுக்குள்ளேயே பிளவு ஏற்பட்டது.

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (12)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

பிராமணர்களிடையே பிளவா? லோக Nடீமத்துக்காகவே தெய்வத்தின் அவதாரமாக வாழ்பவர்கள் எப்படிப் பிளவுபடுவார்கள்?

இதற்கான பதில் அறிவதற்கு முன்பு தமிழர்களின் முக்கிய வழிபாட்டு முறையைப்பற்றி ஓரளவு தெரிந்துகொள்வோம்.

உலகிலேயே பக்தியை காதலிலும், காமத்திலும் தோய்த்தெடுத்தவர்கள் தமிழர்கள்தான் என்பதை முதலிலேயே பார்த்திருக்கிறோம். காதலையும், காமத்தையும் பக்தியாகப் பாவித்து கடவுளை ஆணாகவும், தன்னைப் பெண்ணாகவும்... கடவுளை பெண்ணாகவும், தன்னை ஆணாகவும் உருவகித்து நாயக - நாயகி - பாவத்தை காட்டியது தமிழ் வழிபாடு. 

பல வழிபாட்டு வடிவங்களுக்கு முன்னுதாரணமான இந்த நாயக - நாயகி பாவ வழிபாட்டு முறைக்காக தமிழர்கள் வைத்துக்கொண்ட வடிவம்தான் லிங்கம்.

இன்னும் லிங்கத்தைப் பார்ப்பவர்கள் அது கடவுளின் உருவம் என்றும், அதில் கண்கூட வைத்திருக்கிறார்கள் என்றும் நினைக்கலாம். வழிபாட்டு முறையிலேயே அணுகப்போனால் லிங்கம் ஓர் உருவம் அல்ல அது ஒரு சின்னம்.

ஆமாம்.. காமமே பக்தியின் சின்னமாக காட்சியளிப்பதுதான் லிங்கத்தின் தத்துவம். ஆணும்.. பெண்ணும் ஆலிங்கனம் செய்து ஆனந்தத்தில் கூத்தாடும்போது அவர்களது அங்கங்களை மட்டும் தனியே வைத்தால் என்ன தோற்றம் தருமோ அதுதான் லிங்கம்.

தமிழர்களின் இந்த வழிபாட்டு முறைக்கு ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் இவ்வடிவத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால்...

லிங்கத்தை மரத்தடிகள், குளத்தங்கரைகள், ஆற்றங்கரைகள் என இயற்கையின் மடியிலேயே வைத்து வழிபட்டுக் கொண்டிருந்தனர். அங்கங்கே அன்றலர்ந்த ப+க்களைக் கொண்டு ப+சை செய்தும் வந்தனர். அதிலும் வில்வ மரத்தடிகளில்தான் லிங்கத்தை அதிகளவில் வைத்து வழிபட்டனர் என்றும் ஒரு தகவல். 

இப்படி லிங்க வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க வேத வழி வந்த பிராமணர்கள் வேதத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வைஷ்ணவ சம்பிரதாயத்தில் ஈடுபட்டிருந்தார்கள். 

வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற பிரம்மமாகிய விஷ்ணுவை வழிபடுபவன் சூத்திரனாக இருந்தாலும் பிராமணனாகி விடுகிறான். விஷ்ணு பக்தி இல்லாத பிராமணன்கூட சூத்திரனாவான் என்கிறார் வேதாந்த தேசிகர்.

'நசூத்ரஜா பகவத் பக்தாஜா
லிப்ரா பாகவதா'

என போகும் ஸ்லோகத்தில்தான் இப்படி விஷ்ணு பக்தியை பிரதானப்படுத்தி சொல்லப் பட்டிருக்கிறது.

ஆரிய மதம் - வேத மதம் - ப்ராமணமதம் - வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில்...

ஒரு குரல் எழுந்தது. 

இன்றைய வட ஆற்காடு மாவட்டத்தில் இருக்கும் அடையப்பலம் எனும் ஊரைச் சேர்ந்த அப்பய்ய தீட்சிதர் என்பவரின் குரல்தான் அது.

வேதத்தில் ப்ரம்மம் என சொல்லப் பட்டிருப்பதெல்லாம் சிவனைத்தான் விஷ்ணுவை அல்ல... என குரல் கொடுத்த அப்பய்ய தீட்சிதர் 'ஷிவோத் கிருஷ்டம்" என அழைக்கப்பட்டவர். அதாவது பரமசிவனையே போற்றிப் புகழ்பவர் - சிவனையே துதிப்பவர் என்பது இதன் பொருள்.

வேதத்தில் சிவன்தான் மையப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதை நிறுவ அப்பய்ய தீட்சிதர் நீலகண்ட விஜயம் எனும் நூல் உள்பட பல புஸ்தகங்களை எழுதினார்.

தீட்சிதரும் பிராமணர்தான். ஆனாலும், சிவனே வேதத்தில் சொல்லப்பட்டிருக்கிற கடவுள் என அப்பய்ய தீட்சிதர் வரையறுத்ததற்கு ஏகப்பட்ட எதிர்ப்புகள் எழுந்தன.

வேதாந்த தேசிகன் உள்ளிட்ட வைஷ்ணவ வித்வான்கள் இதனைக் கடுமையாக எதிர்த்தனர்.

வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரண்டு பிரிவுகள் உண்டு. கர்மாக்களை எப்படிச் செய்யவேண்டும் என்பதைப்பற்றியது கர்ம காண்டம். கர்மாக்களை செய்தால் மட்டும் மோட்சம் கிடைத்துவிடாது. அதற்கு பகவான் நாராயணனை வழிபடவேண்டும். அப்போதுதான் மோட்சகதி கிடைக்கும் என சொல்வது வேதத்தில் ஞான காண்டம் என அழைக்கப்படுகிற உபநிஷது.

இந்த உபநிஷத்திலுள்ள ஸ்லோகங்களை அடிப்படையாக எடுத்து வைத்துக்கொண்டு வேதத்தின் நாயகன் நாராயணனே என வைஷ்ணவ பிராமணர்கள் வாதிட்டனர்.

நாராயணம் மகாக்ஞயம் விஸ்வாத்மானாம் பராயணம்
'நாராயண பரம்ப்ரும்ஹா தத்வம் நாராயணா பரஹா...'

என்கிறது தைத்ரிய உபநிஷதும்.  அதாவது உலகத்தை உய்விக்க ஒரே சக்தி நாராயணன்தான். அவன்தான் அனைத்துலகுக்கும் பரம்பொருள். அதனால் நாராயண தத்துவத்தை நாடிச் சென்று வழிபட்டு வழிபட்டு மோட்சத்தைப் பெறுங்கள் என்கிறது தைத்ரிய உபநிஷத்தின் இந்த ஸ்லோகம்.

மோட்ச மிச்சேது ஜனார்த்தனாது என்ற இன்னொரு ஸ்லோகமும் இதற்கு கட்டியம் கூறுகிறது.

சைவ சம்பிரதாயத்தினர் லிங்க வழிபாட்டை ஏற்றுக்கொள்ள...

வைஷ்ணவ சம்பிரதாயத்தினர் நாராயணனை மட்டும் வழிபடவேண்டும் என வாதிட...

சைவ.. வைணவ வாத, பிரதிவாதங்களால் பிராமணர்களே பிளவுபட்டனர். 

ஆரிய மதம் வேத மதம் பிராமண மதம் வைஷ்ணவ மதம் என வைஷ்ணவம் தழைத்திருந்த அந்த நேரத்தில் ...

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (13)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம.; அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும். 

இப்போது நாம் ஒரு புதியவரைத் தரிசிப்போம். இன்றுவரை இவரை மையமாக வைத்து ஒரு பக்தி உலகமே சுழன்று வருகிறது. இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன? இதெல்லாம் தெரிந்தோ-தெரியாமலோ இவரையே தெய்வமாக வழிபடும் ஓர் ஆன்மீக உலகம்தான் அது. 

இவரைப் பின்பற்றும் சீடர்களும் இன்று இருக்கிறார்கள். அவர்களுக்கும் சீடர்கள் இருக்கிறார்கள். ஆன்மீக உலகில் இவரை மையமாக வைத்து ஸ்தோத்ரங்கள் மட்டுமல்ல கோஷங்களும்கூட எழுந்து கொண்டிருக்கின்றன. 

யார் இவர்?

கேரள மாநிலம் திருச்சூரிலிருந்து சில தொலைவு போனால் ஆல்வே.. அங்கிருந்து கொஞ்சம் திரும்ப வந்தால் அங்கமாலி என்கிற ஊர். அங்கமாலியிலிருந்து சில பல காலடிகள் எடுத்து வைத்து நடந்தால் வருவதுதான் காலடி.. தற்போது தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே பிரச்சினைகள் எழும்பியிருக்கும் பெரியாறு நதி அழகாக காலடி வழியாக ஓடிக் கொண்டிருக்கிறது. இயற்கை செழிப்பான இந்த காலடியில்... 

ஷிவகுரு எனும் பிராமணர். இவருக்கு ஆரியம்பாள் எனும் பத்தினி. இவர்களுக்கு மகனாக பிறந்த செழுமை ப+மியில் தன் மழலை காலடிகளைப் பதித்தான் சங்கரன். காலடியே இவனைக் கண்டு துள்ளிக் குதித்தது.  'அழகான குழந்தை.. கண்ணைப் பாருங்கள் ஞானம் சிரிக்கிறது காதுகள் பாருங்கள் உலகத்தையே கேட்பது மாதிரி விரிந்திருக்கிறது' என பார்த்த ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் சங்கரனுக்கு திருஷ்டி வைத்தார்கள். 

அப்பாவும்.. அம்மாவும் சங்கரனைப் பெற்ற மகிழ்ச்சியில் ஆனந்தமாயிருக்க. ஆனந்தம் அக்குடும்பத்துக்கு நிரந்தரமாய் நீடிக்கவில்லை. சங்கரன் சிறு குழந்தையாய் இருக்கும் போதே அவனது அப்பா இறந்து விட்டார். 

அதுவரை அக்குடும்பத்தை கொஞ்சிக் கொண்டிருந்தவர்கள்.. கொஞ்சம் கொஞ்சமாய் விலகத் தொடங்கினர். விதவையாய் போன சங்கரனின் அம்மாவை பார்த்தாலே பாபம் என சாஸ்திர சாலையில் நடந்து போனார்கள். சங்கரனின் குடும்பம் ஏழ்மையில் விழுந்தது. 

ஆனாலும்.. சங்கரனின் ஞானத்தேடலுக்கு ஒரு குறையும் வைக்கவில்லை அவனது அப்பா. 

அவனது வயிற்றுப் பசியையும் போக்கி.. அறிவுப்பசிக்கும் பல்வேறு சாஸ்திர பண்டிதர்களிடம் சேர்த்து படிக்க வைத்தாள். உள்ளுர் பண்டிதர்களிடம் படித்துக் கொண்டிருக்கும் போதே 8 வயதில் சங்கரனுக்கு உபநய சடங்கை செவ்வனே செய்து வைத்தார்கள். 

இதன்பிறகு சங்கரனின் சாஸ்திர தேடல் வீரியம் கொண்டது. அம்மாவிடம் ஒருநாள் சங்கரன் சொன்னான். 

"அம்மா.. உள்ளுர் பண்டிதர்களிடம் படித்தது போதும் அம்மா.. நர்மதா நதிக்கரையில் சில பண்டிதர்கள் இருப்பதாக கேள்விப்பட்டேன். அவர்களிடம் பயில்கிறேனே... அம்மாவிடம் சொல்லிவிட்டு... 

பெரியாறு நதிக்கரையிலிருந்து நர்மதா நதிக்கரைக்கு பயணம் செய்தான் சங்கரன். அறிவு நதியில் குளிப்பதற்காக, மூழ்குவதற்காக, நர்மதா நதிக்கரையில் கோவிந்த பாதர், பத்மபாதர், கவுடபாதர் போன்ற வித்வான்களிடம் அங்கேயே வாசம் செய்து கற்ற சங்கரர். அங்கே பல விடயங்களைத் தெரிந்து கொண்டார்.

அவர்கள் உபதேசித்த விடயங்களை உள் வாங்கிக் கொண்டு யோசிக்க ஆரம்பித்தார் சங்கரர். கற்ற வேதம், பகவத் கீதை, பிரம்ம சூத்ரம் போன்றவற்றுக் கெல்லாம் பாஷ்யம் அதாவது உரை எழுதிய சங்கரர்.. அப்போது புத்தரையும் வாசிக்க ஆரம்பித்தார். 

அதுவரை அவர் படித்த வேதம். பிரம்ம சூத்ரம், ஆகியவற்றை பற்றியெல்லாம் சங்கரரை மறுபரிசீலனை செய்ய வைத்தது புத்தம். 

புத்தன் சங்கரருக்குள் வெளிச்ச விழுதுகளை இறக்க ஆரம்பித்தார். 

மறுபடியும் மற்ற சாஸ்திரங்களையும் வாசிக்கத் தொடங்கிய சங்கரர். இறுதியில் ஒரு தெளிவிற்கு வந்தார். 

புத்தன் சொன்ன ஞானத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். இவ்வுலகில் உள்ள அனைத்தும் பொய்.. அதுதான் எனக்கு கிடைத்த ஞானம்.
நம் பிறப்பு பொய். வாழ்வு பொய். இவ்வுலகத்தில் ஞானம் அக்ஞானம் ஆகிய இரண்டும்தான் உண்டு. மற்ற எதுவுமே கிடையாது. என தனக்குக் கிடைத்த ஞானத்தை ஊருக்கெல்லாம் சொல்ல ஆரம்பித்தார் சங்கரர். 

வேதம் அது சொன்ன கர்மாக்கள் எல்லாம் பொய் கடவுளைத் தவிர.. என சங்கரர் மேலும் உபதேசம் செய்யச் செய்ய வைதீகர்கள் சங்கரரை எதிர்க்க ஆரம்பித்தனர்.                                                   

இதெல்லாம் சங்கரரின் இளமைக்காலம். ஆண் பொய், பெண் பொய் அனைவரும் பொய் என்ற சங்கரர் கல்யாணம் பண்ணிக் கொள்ளவும் மறுத்தார். அம்மா எவ்வளவோ சொல்லியும் ஏற்றுக் கொள்ளவில்லை. இளமை பொங்கும் வயதில் சந்யாசம் போனார். தான் சொன்னவற்றை ஏற்றுக் கொண்ட உலகையே மாயம் என ஒப்புக் கொள்கிற இளைஞர்களை திரட்டினார் சங்கரர். 

அவருக்கு முதன் முதலில் கிடைத்த வர்கள் நான்குபேர். ஆனந்தகிரி, சுரேஷ்வரன், பத்மநாபர், ஹஸ்தாமலகம் இவர்கள் தன்னை பின்தொடர ஒவ்வொரு ஊராய் சென்றார். உலகமே மாயம் எதுவுமே உண்மையில்லை எதற்கும் கலங்காதே... 

தனது அத்வைதத்தை ஊர் முழுக்க பரப்பினார் ஆதிசங்கரர்.

'எல்லாமே பொய்.. எதுவும் மெய்யில்லை" என அழுத்திச் சொல்லிக் கொண்டிருந்த ஆதி சங்கரரை அந்த சம்பவம் அழுத்தமாக உலுக்கியது.

 

 


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (14)

 

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்
 

வேதம், கர்மாக்களை பொய் என்று சொல்லி பிரச்சாரம், உபந்யாசம் என அருளிக் கொண்டிருந்த ஆதிசங்கரரை அழுத்தமாகப் பாதித்த சம்பவம்.

இளமைப் பருவத்திலேயே - அவரது தாயாரும் இறந்ததுதான், அனைத்தையும் பொய் என்ற போதும் அன்னையின் இறப்பு சங்கரரை ரொம்பவே பாதித்தது.

வைதீகர்கள் வந்தார்கள் 'பாரப்பா உன் அம்மாவுக்குரிய இறுதிச் சடங்குகளை நீதான் செய்யவேண்டும் வழக்கம்போல. அது பொய், இது பொய் என உளறாதே... என அவர்கள் பலவந்தப்படுத்தியதை அடுத்து தன் அம்மாவுக்கான கடைசிக் காரியங்களை தான் இதுவரை உபதேசித்து வந்த கருத்துகளுக்கு மாறாக இருந்தபோதும் செய்து முடித்தார் சங்கரர்.

'இனி நமக்காக, நம்மை நம்பி யாருமில்லை... என்ற நிலைமை அன்னையின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்டதால் சந்யாசத்தில் தீவிரமானார் ஆதிசங்கரர். மறுபடியும் ஒவ்வொரு ஊராகச் சுற்றினார்.

சந்யாசம் வாங்க வேண்டியதன் அவசியத்தை ஒவ்வொரு இளைஞனுக்கும் சூடான ஸ்லோகங்கள் மூலம் பரப்பினார்.

பிற்பாடு கேரளாவைத் தாண்டியும் சங்கரர் பயணம் மேற்கொண்டு அத்வைதத்தையும் சந்நியாசத்தையும் உபதேசித்தார் என்றும் சங்கரரின் வாழ்க்கை வரலாற்றில் தகவல்கள் வழிகின்றன.

சங்கரர், சந்யாசிகள் எப்படி வாழவேண்டும் எனக் கடும் நிபந்தனைகளை தனக்கும் விதித்துக் கொண்டு தன்னைப் பின்பற்றும் அதாவது சந்யாசத்தைப் பின்பற்றும் சீடர்களுக்கும் அதை உபதேசித்தார்.

சந்நியாசியானவன் தனக்கென எதுவும் வைத்திருக்கக் கூடாது. தனக்கு உணவு தேவையென்றால்கூட பொருள்களை வாங்கி அவன் சமைக்கக் கூடாது. நமக்கென்று உலகில் எதுவும் இல்லை என்றபோது மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு.

சந்யாசி அக்னியைக்கூட தேவைக்காக நெருங்கக்கூடாது. ஒவ்வொரு வீடாய் போய் பிச்சையெடுக்கவேண்டும். அதில் கிடைப்பவற்றை சாப்பிட்டுக் கொள்ளவேண்டும்.

என்ற சங்கரர்.. சந்யாச ஸ்மிருதி வகுத்த விதிகளை கடுமையாக பின்பற்றினார்.

சந்யாச ஸ்மிருதியா? அது என்ன சொல்கிறது?

ஆசையைத் துறந்த சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது என்பவற்றை வகுத்ததுதான் சந்யாச ஸ்மிருதி.

'பததீ அஸோவ் ஸ்வயம்
பிக்டீஹீ யஸ்ய ஏதது
த்வயம் பவேது...'

சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால்கூட அது மிகப்பெரிய பாவம் என்று சொன்ன சந்யாச ஸ்மிருதி, சந்யாசிகள் எவ்வளவு எளிமையாக இருக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறது. எங்கு போனாலும் சந்யாசி கால்நடையாகத்தான் செல்லவேண்டும் அல்லது பல்லக்கில் போகவேண்டும்.

இதைத் தவிர்த்து வேறு எந்த வசதிகளையும் சந்யாசிகள் பயன்படுத்தக் கூடாது. என்பதை பின்வரும் ஸ்லோகத்தில் சொல்கிறார்கள்.

"வாகனஸ்த்தம் யதீம் திருஷ்ட்வா
சஜேஸ ஸ்நான மாசரேது..."

என போகும் இந்த ஸ்லோகத்தின் உள்ளர்த்தம் என்ன தெரியுமா?

சந்யாசியானவன் எத்தனை மாற்றங்கள் உலகியலில் வந்த பின்னாலும் தன்னை மாற்றிக் கொள்ளாதவனாக இருக்கவேண்டும். கால்நடையாக திரிந்து உன் உபதேசங்களைப் பரப்பவேண்டும்.

அதை விட்டுவிட்டு வண்டி வாகனங்களை தேடிக் கொண்டிருக்காதே அவற்றில் ஏறி ஜம்மென உட்கார்ந்து கொண்டு ஊர் ஊராகச் சுற்றிக் கொண்டிருக்காதே அதைவிட மிகப்பெரிய பாவம் வேறெதும் இருக்க முடியாது.

உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது.

பிறகு அவர் எப்படி பயணம் செய்ய முடியும்? தவிர்க்க முடியாத துரதிருஷ்டவசமாக சந்யாசி அப்படிப்பட்ட வண்டிகளைப் பார்த்துவிட்டால் அந்த கணமே தலைமுழுகி ஸ்நானம் செய்து அப்பாவத்தை தீர்த்துக் கொள்ளவேண்டும்.

என 'வாகன'த் தீட்டுபற்றி சந்நியாசிகளுக்கு அப்போதே அறிவுறுத்தியிருக்கிறது சந்யாச ஸ்மிருதி.

இத்தனைக் கட்டுப்பாடுகளையும், நியதிகளையும் துளிகூட வழுவாமல் தன் சந்யாசத்தை மேற்கொண்டிருந்தார் சங்கரர்.

இந்த இடத்தில் நானொரு விஷயத்தைச் சொல்வது மெத்தப் பொருத்தமாகயிருக்கும். மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இந்த வாகனத் தீட்டு விஷயத்தில் ரொம்ப கவனமாயிருந்தார்.

தான் இருக்கும்வரை எவ்வித இயந்திர வாகனத்திலும் அவர் பயணித்ததில்லை (பல்லக்குகளில்தான் ஏறிச் சென்று கொண்டிருந்தார்).

இளமையிலேயே இவ்வாறு சந்யாச ஸ்மிருதிகள்படி வாழ்ந்து வந்த ஆதிசங்கரர் இதோடு இல்லாமல் தானே பஜகோவிந்தம் என்னும் சாஸ்திர நூலையும் இயற்றினார்.

மூடமதே.. அதாவது மூடமனமே என மனங்களை அழைக்கும் பஜகோவிந்தத்தில் - ஆதிசங்கரர் அருளிய ஸ்லோகங்கள் இன்றளவும் சராசரி புருஷர்களுக்கும், சந்யாசிகளுக்கும் புத்தி சொல்லக் கூடியதாக.. அறிவ+ட்டக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

பணத்தாசை பிடித்தால் என்ன நேரும்? பெண் பித்து பிடித்தால் என்ன நேரும்?

என பல சூடான கருத்துகளை பஜகோவிந்தத்தில் (பஜகோவிந்தம் என்றால் கோவிந்தனை பஜனை செய்கிறேன் என பொருள்) எடுத்துக் காட்டியிருக்கிறார் ஆதிசங்கரர்.

அதில் சில தேவையான ஸ்லோகங்களைப் பார்ப்போம். அவை சொல்லக் கூடிய விதத்தில் இன்றைய சந்யாசிகள் இருக்கிறார்களா என்றும் அந்த ஸ்லோகங்களின் ஜன்னல்களைத் திறந்து தரிசிப்போம்.


(தொடரும்)


--------------------------------------------------------------------------------

 

இந்து மதம் எங்கே போகிறது? (15)

அக்னி ஹோத்ரம் ராமானுஜதாத்தாச்சாரியார்

பஜ கோவிந்தத்தில் ஆதி சங்கரர் சொன்ன சேதிகளையெல்லாம் அவரைப் பின்பற்றக்கூடியவர்கள் நிஜ கோவிந்தமாக காதில் வாங்கினார்களா? கடைப் பிடிக்கிறார்களா?

பானை சோற்றுக்கு பதச் சோறாக சில ஸ்லோகங்களை மட்டும் பார்க்கலாம்..

'அர்த்தம் அனர்த்தம் பாவைய நித்யம் நாஸ்தி தகஹா சுக வேஸஹா சத்யம்'

இதுவும் "பணம்" பக்தி பற்றிய ஸ்லோகம்தான்.

பணம் என்பதற்கு ஒன்றுமில்லை என்றுதான் பொருள். பணத்தால் திவலை அளவுகூட நன்மையில்லை. பணத்தை தேடித் தேடி அலையாதே! பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். உனக்குள்ளேயே கலகங்கள் நடக்கும். பணம் சம்பாதிப்பதைவிட அதைக் காப்பாற்றுவது கஷ்டம். நீ பணக்காரன் ஆனால், மித்ரன்கூட சத்ரு ஆகிவிடுவான். அதாவது நண்பன் கூட பகைவன் ஆகிவிடுவான்.

என்ற ஆதிசங்கரர்,

'புத்ராதபி தனபாஜாம் பீதிஹி என்றும் சொல்லுகிறார் இதற்கென்ன அருஞ்சொற் பொருள்?

பணக்காரனுக்கு தன் மனைவி மக்களால்கூட ஆபத்து, பீதி ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இவ்வாறு, மண்ணாசை, பொன்னாசை உள்ளிட்ட ஆசைகளுக்கு அடித்தளமான, பணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுக் காட்டி எச்சரிக்கும் ஆதிசங்கரர் அடுத்து முக்கியமாக.. பெண்ணாசையைப் பற்றி பொட்டில் அறைந்தாற் போல ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்:

"நாரீஸ் தனபர நாபீதேசம்
த்ரிஷ்டவா மாதா
மோஹாவேஸம்..."

என்று போகிற இந்த சமஸ்கிருத கவிதையின் சாராம்ஸமே 'பெண்களை" நம்பாதே என்பதுதான்.

பெண்கள் தங்களது பாவங்களையும், பாகங்களையும் காட்டி உங்களை மயக்கப் பார்ப்பார்கள். அவள் இருண்ட கேஸத்தில் சிக்கிக் கொண்டு நீ மோசம் போய்விடாதே! அந்த சிரிப்பு என்ற நெருப்பில் மாட்டிக் கொண்டு மாய்ந்து போய்விடாதே.

முக்கியமாக பாவி, பெண்களின் மேல் பாகங்களைப் பார்த்து மயங்கி விழுந்து விடாதே! பின்னர் அதிலிருந்து நீ எழுந்திருக்கவே முடியாது. அதனால் முன்னெச்சரிக்கையாக நடந்துகொள். உலகில் யாவும் பொய் பொண்ணும் பொய் அவளது மெய் (உடம்பு)
யும் பொய்.

- என எச்சரிக்கை விடுக்கிறார் அன்றே ஆதிசங்கரர்!

இன்று நாம் சகஜமாக செய்தித்தாளில் படிக்கிற பல செய்திகளையும் வைத்துப் பார்க்கிறபோது, சந்யாசிகள் முதல்கொண்டு சினிமாப்பட ரசிகர்கள் வரைக்கும் சங்கரரின் அறிவுரை மற்றும் எச்சரிக்கை எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது?

ஒரு பக்கம் தீவிர கட்டுப்பாடுகளுடன் சந்யாசத்தை தழுவிக் கொண்ட சங்கரர் வேத கர்மாக்களை எதிர்ப்பதிலும் அதி தீவிரம் காட்டிக் கொண்டிருந்தார்.

அதற்காக.. தான் சந்யாசியான கணத்திலேயே தலையை மொட்டை அடித்துக் கொண்டார். இதைவிட முக்கியமாக பிராமணர்களுக்கு வேத கர்மாக்களை செய்வதற்கு பிரதானமாக இருக்கக்கூடிய யக்ஞோபிதம் அதாவது ப+ணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர்.

வேதம் பொய் அதன் கர்மாக்கள் பொய் என்ற நிலையில் தன் தோள்பட்டையில் ப+ணூல் என்னும் பொய்யை எப்படி தாங்கிக் கொண்டிருப்பது என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் அதை கழற்றி எறிந்தார் சங்கரர்.

இந்த இரண்டு நடவடிக்கைகளும்தான் சங்கரர்மீது வேதக்காரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் சிகை (குடுமி) யக்ஞோபிதம் (ப+ணூல்) ஆகிய இரண்டும் கர்மாக்கள் செய்கையிலே பிராமணர்களுக்கு பிரதானம் என சாஸ்திரங்களில் வழங்கப்பட்டு வந்த நிலையில்...

சங்கரர் தடாலடியாக குடுமியை மழித்து, ப+ணூலை கழித்து சந்யாசியான விதம் அவர்களை அதிருப்தியாக்கியது.

சங்கரரின் இந்த செய்கைகள் ஏற்படுத்திய கோபத்தின்மீது இன்னொரு கோப அடுக்கை ஏற்படுத்தின -  அவரது உபதேசங்கள்.

இக்கட்டுரைத் தொடரின் முற்பகுதியிலே நான் குறிப்பிட்டுக் காட்டியதைபோல.. குழந்தாய். இந்தா பால், இதைக் குடித்து வளமோடு வாழு என்கிறது வேதம்.

உனக்கென உன்னை நம்பும் பெண்ணோடு இணைந்து வாழ்க்கையைச் சுகமாக நடத்துவாயாக! இதெல்லாம் கூடாது என சந்யாசம் பேசி வருபவர்களைச் சமூகத்துக்குள்ளேயே விடக்கூடாது அவர்களை விரட்டியடியுங்கள் என சொல்கிறது வேதசாரம்.

இன்னும் உபநிஷது சொல்வது என்னவென்றால் ஜானாதீ இச்சதீ யததே...? அதாவது நாம் பார்ப்பதன் மேல் அறிவானது ஆசைகொள்ளும். ஆசையின் மிகுதியால் அந்த பொருளை அடைய பிரயத்தனம் செய்யும். பிரயத்தனம் செய்து அந்த ஆசைப்பட்ட பொருளை அடைந்தால் அதுதான் ஆனந்தம். இந்த ஆனந்தமே வாழ்க்கை ஒரு பொருளின் மீது ஆசைப்பட்டு அடைய முயற்சிகள் செய்து முயற்சியில் வெற்றிபெற்று ஆனந்தப்படுவதுதான் அறிவு -

என்கிறது உபநிஷது.

ஆனால் சங்கரரின் அத்வைதம்.. இவைகளுக்கு எதிரானவையாக இருந்ததால் வேதக்காரர்கள் சங்கரர்மீது சரமாரியாக கருத்துத் தாக்குதல் நடத்தினார்கள்.

இந்நிலையில்தான் சங்கரரை பின்பற்றியவர்களிலேயே இரண்டாக சிறு பிளவு ஏற்பட்டது.

உலகமே மாயம் என்று மாயாவாதத்தை ஒரு பிரிவினரும், மாயம் அல்ல, அது நம் அக்ஞானம் என்று ஒரு பிரிவினரும் முளைத்தனர்.

சங்கரர் முழுக்க முழுக்க தன் தத்துவத்தை நுனரஉயவநன ஊடயளள அளவிலேயே கூறி வந்ததால், இந்த பிளவும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தவில்லை.

மாறாக, வேதபககாரர்களின் எதிர்ப்பை சமாளிக்க சங்கரரே ஒரு முரண்பாட்டை சூடிக்கொண்டார்.

"வேதோ நித்யமதிய தாம்
ததுஉதிதம் கர்ம ஸ்வனுஷ்டேதாம்
காம்யே மதிஹி"

அஃதாவது சித்த சுத்தியுடன் வேதம் சொன்ன கர்மாக்களை செய்தால் மோட்சம் எளிதில் பெறலாம் என்ற ரீதியில் சங்கரர் சொல்லி அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்.

(தொடரும்)

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP