சமீபத்திய பதிவுகள்

தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் (காணொளி)

>> Saturday, January 2, 2010

 


தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன்உங்கள்ஒவ்வொருவருக்கும் ஒரு கனவுண்டு எங்கள் அனைவருக்கும்ஒரேகனவு தான் உண்டு எம் மண்எம் நாடுஎம் உரிமை.

எங்கள் மீது வன்முறை ஏவப்படும் போது நாங்கள்வாதடிக்கொண்டு இருக்கமுடியாது.

நாங்கள் என்ன ஆயுதம் எடுக்கவேண்டுமென்பதை எங்கள் எதிரி தான் தீர்மானித்தான்.

நாங்கள் அடங்கிப்போகும் ஆட்டுமந்தைகள் அல்லஆளப் பிறந்த அக்கினிக்குஞ்சுகள்.

காற்றடித்தால் பறந்தோட நாங்கள் காகித புலிகளல்லகாற்றை எதிர்த்தோடும்கரும்புலிகள்.

பச்சையூ னியைந்த வேர் படைகள் வந்த போதினும் அச்சமில்லை அச்சமில்லைஅச்சமென்பதில்லையேஇச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதிலும் அச்சமில்லைஅச்சமில்லை அச்சமென்பதில்லையே.

எங்கள் உடம்பில் இருந்து வழியும் உதிரம் என் மண்ணுக்கு நாங்கள் இடும் உரம்.

நீண்ட மகிழ்ச்சி மூண்டு விளைய

நினைத்திடு மின்பம் அனைத்தும் உதவ

வேண்டுமடி எப்போதும் விடுதலை


படத்தொகுப்புகோமகன்

ஒளிப்பதிவு இயக்குனர்சந்தோஷ்

இயக்கம்தமிழன்

பாடல் இசைதேவேந்திரன்

பின்னணி இசைநிரு

ஒலிக்கலவைதுகாரம்source:vannionline
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உளவுத் துறை அசட்டை: அமெரிக்கா கோபம்


 
 

வாஷிங்டன்:"அமெரிக்க விமானத்தை நைஜீரிய நாட்டைச் சேர்ந்த வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை சில உளவு நிறுவனங்கள் மற்ற பாதுகாப்பு நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளாதது பொறுத்துக் கொள்ள முடியாது. எதிர்காலத்தில் இதுபோன்று நடக்கக் கூடாது' என, அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.இது தொடர்பாக, அந்த அதிகாரி கூறியதாவது:அமெரிக்க உளவு நிறுவனங்கள் எப்படி செயல்பட வேண்டும் என, நாங்கள் அடிக்கடி கூறி வருகிறோம். இருப்பினும், அமெரிக்க விமானத்தை நைஜீரிய வாலிபன் தகர்க்கப் போவதாக கிடைத்த தகவலை, சில உளவு நிறுவனங்கள் மற்ற நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. அந்தத் தகவலை எளிதாக எடுத்துக் கொண்டுள்ளன. இது உளவுத் துறையின் தோல்வியே.இதுபோன்ற செயல்பாடுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.உளவுத் துறையினர் தங்களுக்கு கிடைத்த தகவலை பகிர்ந்து கொள்ளாததால், அபாயகரமான வெடி பொருட்களுடன் விமானத்தில் ஏறி 300 பேரின் உயிரை பறிக்க முற்பட்டுள்ளான் பயங்கரவாதி ஒருவன். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்க அனுமதிக்கக் கூடாது.பிரச்னைகளை நாம் விரைவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும்.பாதுகாப்பு அமைப்பு முறையில் எந்த விதமான குறைபாடும் இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வதில், சர்வதேச அளவில் ஒரு ஒத்துழைப்பை உருவாக்க வேண்டியதும் அவசியம் என்றார்.இதற்கிடையில், கடந்த செவ்வாய் கிழமை இந்தப் பிரச்னை தொடர்பாக, அமெரிக்க உளவு நிறுவன உயர் அதிகாரிகளுடன் அதிபர் ஒபாமா ஆலோசனை நடத்தினார்.அப்போது, விமான நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிப்பது, உளவுத் தகவல்களை பகிர்ந்து கொள்வது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்றவை பற்றி விவாதித்துள்ளார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சீனாவில் திபத் புத்தமத தலைவருக்கு ஜெயில்

சீனாவில் திபத் புத்தமத தலைவருக்கு 8 1/2 ஆண்டு ஜெயில்
 ஷாங்காங், ஜன. 1-
 
சீனாவின் ஆக்கிரமிப்பு பகுதியான தீபத்தில் கார்ட்ஷ் கவுண்டி பகுதியை சேர்ந்தவர் ஹர்பு செருங்கின்போச் (வயது 52). இவர் அங்குள்ள புத்த சாமியார்கள் மடத்தின் தலைவராக இருந்தார்.
 
இந்த நிலையில் கடந்த ஆண்டுதான் ஆக்கிரமித்துள்ள திபத் பள்ளிகளில் கட்டாய தேசபற்று கல்வியை சீனா அமல்படுத்தியது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
 
இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு ஹர்பு தலைமை தாங்கினார். இவர் அனாதைகள் மற்றும் ஊனமுற்ற குழந்தைகளின் விடுதிகளை நடத்தி வந்தார்.
 
இப்போராட்டத்தில் அவர்கள் தீவிரமாக பங்கேற்றனர். எனவே, அவரை சீன போலீசார் கடந்த 2008-ம் ஆண்டு மே 18-ந்தேதி கைது செய்தனர். அவர் வீட்டில் இருந்து துப்பாக்கிகளும், 100 ரவுண்டு குண்டுகளும் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இதை தொடர்ந்து அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட ஹர்புக்கு 8 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
 
ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஹர்பு வாழும் புத்தர் என திபத் மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.


source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தன்னம்பிக்கை பெண்களின் 'ரோல் மாடல்' ஜெரீனா


 
 

Front page news and headlines todayபெண்கள் எதிலும் சளைத்தவர் கள் இல்லை என்பதற்கு இலக்கணமாக, பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். அதேசமயம், பெற்றோர், கணவரால் கைவிடப் பட்ட இளம்பெண்கள் சிலர் வாழ்கையில் பிடிமானம் இல்லா மல் விபரீத முடிவுகளை மேற் கொள்கின்றனர். இன்னும் சிலர், தவறான வழிக்கு சென்று வாழ்க்கையை இழந்து தவிக்கின்றனர். அப்படிப் பட்ட சூழ்நிலையில் சிக்கித் தவித்து, மீண்ட இளம்பெண் ஜெரீனாபேகம் தற்போது லோடு வேன் ஓட்டி குடும்பத்தை கவுரமாக நடத்தி வருகிறார்.சென்னை, கொருக்குப்பேட்டை, பென்சில் பேக்டரியைச் சேர்ந்தவர் ஜெரீனாபேகம். சிறு வயதில் காதல் வயப் பட்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டார். பின் கணவரால் கைவிடப்பட்டு, மூன்று குழந்தைகளுடன் நடு வீதிக்கு தள்ளப்பட்டார். தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் தற்போது வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்.தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் ஜெரீனாபேகம்: நான் ஒரு ஏழை குடும்பத்தைச் சேர்ந்த பெண். குடும்ப சூழ்நிலை காரணமாக, ஐந்தாவதோடு படிப்பை நிறுத்திக் கொண்டேன். டீன் ஏஜில் ஏற்படும் காதல் நோய் என்னுடைய 13வது வயதில் தொற்றிக் கொண்டது. காதல் வயப்பட்டேன். வீட்டை விட்டு வெளியேறி காதலனை கைப்பிடித் தேன். ஆயிஷாபானு, தாஜுநிஷா என இரண்டு மகள்களும், முகமதுசலீம்(8) என்ற மகனும் பிறந்தனர். சில ஆண்டுகள் குடும்பம் நடத்திய எனது கணவர் திடீரென பிரிந்து சென்றுவிட்டார். மூன்று குழந்தைகளுடன் நடுத் தெருவில் நின்றேன். காதல், கலப்பு திருமணம் என்பதால் பெற்றோர் எங்களை ஏற்கவில்லை. போக்கிடம் இல்லாமல் தவித் தேன். மூன்று பிள்ளைகளின் தினசரி உணவிற்கு பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டேன்."இனி பிச்சை எடுக்காமல் கவுரமாக வாழவேண்டும்' என முடிவு செய்தேன். ஆனால், ஆரம்பத்தில் இருந்தே தற்கொலை என்ற எண்ணம் மட்டும் என் மனதில் ஏற்படவில்லை. அவற்றை ஒதுக்கி, வீட்டு வேலைக்கு சென்றேன். சில நல்ல மனிதர்கள் உதவியுடன் கார் ஓட்ட பழகிக் கொண் டேன். முறையாக "லைசென்ஸ்' பெற்று ஒரு வீட்டில் கார் டிரைவராக இரண்டு ஆண்டுகள் வேலை பார்த்தேன். கடந்த இரண்டரை ஆண்டுகளாக வாடகைக்கு லோடு வேன் ஓட்டி வருகிறேன். நாள் ஒன்றுக்கு 250 ரூபாய் சம்பாதிக்கிறேன். காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வேன் ஓட்டுவேன். பஞ்சரானால் "ஸ்டெப்னி' மாற்றுவது உள்ளிட்ட சிறு சிறு மெக்கானிக் வேலையும் கற்று வைத்துள்ளேன்.லோடு ஏற்றிச் செல்லும்போது, வேன் "பிரேக் டவுன்' ஆனாலும் சமாளித்து விடுவேன். நான் சம்பாதிப்பது, குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது. இருப்பினும், என்னுடைய லட்சியம் பிள்ளைகளை நன்கு படிக்க வைக்கவேண்டும்; சொந்தமாக ஒரு வேன் வாங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது தான். இவ்வாறு தன்னம்பிக்கையுடன் ஜெரீனாபேகம் தெரிவித்தார். இவரது மூத்த மகள் ஆயிஷாபானு ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாள். தாஜுநிஷா கடந்த ஆண்டு காணாமல் போய்விட்டாள். தனது வேலையுடன் இன்றுவரை அவரை தேடிவருகிறார். இளம் வயதில் சறுக்கியதால் வாழ்க்கையே இழந்தது விட்டதாக கருதும் இளம்பெண்களுக்கு ஜெரீனாபேகம் ஒரு முன் உதாரணமாக திகழ்கிறார்.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டருக்குப் புதியவர்களா!

 
 


எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் 


மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன.  எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்கStart menu >> All Programs > Accessories > Paint  எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View  மெனு சென்று Tool Box, Color Box மற்றும்Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதான் எனப்பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.  

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா?  Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம். இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா?Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள். செய்து பாருங்கள்.
படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம். 
ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும் சீரியஸான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open ன்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image  மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம். 
உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா?  சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG,  அல்லது GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பொன்சேகா 'பகீர்' குற்றச்சாட்டு


 
 

Top global news update கொழும்பு:"தனது ஆதரவாளர்களை தீர்த்துக் கட்டவும், கைது செய்யவும் அதிபர் ராஜபக்ஷே முடிவு செய்துள்ளார்' என, இலங்கையின் முன் னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத் பொன்சேகா பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.இலங்கையில், வரும் 26ம் தேதி, அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில், தற்போதைய அதிபர் ராஜபக்ஷே, அந்நாட்டின் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி சரத்பொன்சேகா ஆகியோருக்கிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், தனது ஆதரவாளர்களை தீர்த்துக் கட்டவும், கைது செய்யவும் அதிபர் ராஜபக்ஷே திட்டமிட்டுள்ளதாக, சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு ஆதரவாக செயல்படுபவர்களது பெயர்கள், இ-மெயிலிலும் வெளியிடப்பட்டுள்ளதாக, அந்நாட்டில் இருந்து வெளிவரும், "டெய்லி மிரர்' என்ற பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, "பொன் சேகாவின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றது, உண்மைக்கு புறம்பானது' என, இலங்கை போலீசார் மறுத்துள்ளனர்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP