சமீபத்திய பதிவுகள்

இலங்கை அதிர்ச்சி !தென்னாபிரிக்க அதிபருடன் புலிகளின் நெருக்கம்(புகைப்படம் இணைப்பு)

>> Monday, August 29, 2011


 

விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அரசுடனும் அங்கே இருக்கும் பல நாடுகளோடும் கொண்டுள்ள நெருக்கமான தொடர்புகள் தொடர்பாக இலங்கை பெரும் அதிர்சியடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. புலிகள் சமாதான காலத்தில் அதன் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்செல்வனூடாகவும் மற்றும் இதர சிரேஷ்ட உறுப்பினர்களூடாகவும் ஆபிரிக்காவில் உள்ள பல நாடுகளிடம் நட்புறவை வளர்த்து வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எரித்திரியா நைஜீரியா மற்றும் சூடான் போன்ற நாடுகளில் அவர்கள் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் இலங்கை அரசு கவலை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் வெளியான புகைப்படம் தொடர்பாகவும் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜக்கொப் ஸுமா சு.ப.தமிழ்ச்செல்வனுடன் தனது வீட்டில் வைத்து உரையாடும் இப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பல நாடுகளை உள்ளடக்கிய ஒன்றுபட்ட தென்னாபிரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜக்கொப் ஸுமா அவர்கள் உலகில் உள்ள பலம்பெருந்திய தலைவர்களில் ஒருவர் ஆவார். விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்க அதிபருடன் கொண்டுள்ள உறவுகள் குறித்து இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது. புலம்பெயர் மக்களின் போராட்டம் ஒரு புறம் இருக்க, மேற்குலகின் போர் குற்ற அழுத்தங்கள் மறு முனையில் இருக்க ஏக காலத்தில் புலிகளின் மறை முகப் பலம் தொடர்பாக இலங்கை அரசு தற்போது தனது கவனத்தை திருப்பியுள்ளது எனக் கொழும்பில் இருந்து கசியும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகளிடன் மொத்தமாக 3 விமானங்கள் இருந்ததாகவும், அவற்றில் 2 விமானங்கள் கொழும்பு நோக்கிப் புறப்பட்டு தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 3 விமானம் எங்கே சென்றது என்பது தொடர்பாக இலங்கைப் புலனாய்வு இன்னும் ஆராய்ந்து வருகிறது. அதுமட்டுமல்லாது புலிகளிடம் கிளைடர் எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்றும் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவ்விமானமும் மாயமாக மறைந்துள்ளது. இலங்கை அரசானது தனது தரைப்படையின் கட்டமைப்பை மாற்றாது, வான்படை மற்றும் கடற்படைகள் கட்டமைப்பை பலப்படுத்தி வருவதன் பின்னணி தான் என்ன எனப் பலர் கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், இலங்கை அரசானது எதற்கு இவ்விரு கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகின்றது என்பதற்கு தற்போது விடை கிடைத்துள்ளது எனலாம்.


source:athirvu
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP