சமீபத்திய பதிவுகள்

குன்னக்குடி வைத்தியநாதன் மறைவு

>> Tuesday, September 9, 2008

     
 
Imageபிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் சென்னையில் நேற்றிரவு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு (வயது 73).
Imageகடந்த ஒருவாரமாக உடல்நலம் சரியில்லாமல் இருந்து வந்த குன்னக்குடி வைத்தியநாதனுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். நேற்று இரவு 8.45 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு குன்னக்குடி வைத்தியநாதன் மரணம் அடைந்தார்
கர்நாடக இசையில் வயலினுக்கு இருந்த முக்கியத்துவத்தை தன்னுடைய அபாரமான பயிற்சி, திறமையால் பாமர மக்களும் உணரச் செய்தார்.
வயலினில் அவர் செய்த சாகசங்கள் பண்டிதர்களாலும் பாமரர்களாலும் ஒருங்கே பாராட்டு பெற்றன. 12 வயதிலேயே வயலின் வாசிப்பில் தனிச்சிறப்பைப் பெற்ற வைத்தியநாதன் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார், செம்மங்குடி சீனிவாச ஐயர், மகாராஜபுரம் சந்தானம் போன்ற மேதைகளுக்கு வாசித்திருக்கிறார்.
திரையுலகிலும் இசையமைப்பாளராகக் கொடிகட்டிப் பறந்த வைத்தியநாதன் தனது கச்சேரிகளில் வயலினைப் ""பேச வைத்து'' மக்களிடம் கரகோஷம் பெற்றவர். பல திரைப்படங்களுக்கும் இசை அமைத்து சாதனை படைத்திருக்கிறார்.
பத்மஸ்ரீ, சங்கீத மாமணி ஆகிய விருதுகளைப் பெற்றவர்.
இறுதிச்சடங்கு
அவரது உடல் நேற்று நள்ளிரவு சென்னை மந்தவெளி கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதிச்சடங்கு நாளை (புதன்கிழமை) மாலை நடக்கிறது.

http://www.adhikaalai.com/index.php?/en/?????????/???????/???????????-????????????-?????

 
 

StumbleUpon.com Read more...

5-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்

5-வது முறையாக அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார் ரோஜர் பெடரர்    
 
Imageயுஎஸ் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு பட்டத்தை சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் கைப்பற்றியுள்ளார்.
 
நேற்று நடைபெற்ற இறுதிச்சுற்று ஆட்டத்தில் பிரிட்டனின் ஆண்டிமுர்ரேவுடன் மோதிய பெடரர் 6-2, 7-5, 6-2 என்ற செட்களில் வெற்றிபெற்றார்.
இதன் மூலம் பெடரர் யுஎஸ் ஓபன் பட்டத்தை தொடர்ந்து 5வது முறையாக கைப்பற்றியுள்ளார். இது பெடரர் வென்றுள்ள 13வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். மேலும் யுஎஸ் ஓபன் போட்டிகளில் தொடர்ந்து 34 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார். யுஎஸ் ஓபன் பட்டத்தை வென்ற ரோஜர் பெடரருக்கு 1.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
 
இதுவரை 56 பட்டங்களை வென்றுள்ள பெடரர் அதிக எண்ணிக்கையில் பட்டங்கள் வென்ற சாதனையாளர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார். இதற்கு முன் பீட் சாம்ப்ராஸ் 14 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.

 

http://www.adhikaalai.com/index.php?/en/?????????/?????/5-???-???????-????????-????-????????-????????-?????-??????

StumbleUpon.com Read more...

ஆப்கனில் மனித வெடிகுண்டுகள் தாக்குதல்: 8 பேர் சாவு

lankasri.comஆப்கானிஸ்தானில் உள்ள காந்தகார் நகரில் போலீஸ் தலைமையகத்துக்குள் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் 2 பேர் அதிரடியாக நுழைந்து ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.

இதில் 8 பேர் இறந்தனர். இந்த தகவலை அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த இருவரும் ஒருவர் பின் ஒருவராக போலீஸ் தலைமையக கட்டடத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில் 8 பேர் இறந்தனர். 23 பேர் காயம் அடைந்தனர் என்று அதிபர் ஹமீது கர்ஸயின் சகோதரரும் காந்தகார் மாகாண கவுன்சிலின் தலைவருமான அகமது வாலி கர்ஸய் தெரிவித்தார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1220888843&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP