சமீபத்திய பதிவுகள்
ஆங்கிலத்தில் வெளிவந்த அருந்ததிராயின் இந்தக் கட்டுரை மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
அங்கிருந்து வடிகட்டப்பட்டு வெளிவரும் செய்திகளினூடாக இலங்கை அரசாங்கம் பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற பெயரில் நாட்டின் ஜனநாயகத்தையே சிதைத்து அழித்து வருவதை அறிய முடிகிறது. அது மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் மேல் சொல்லுந்தரமற்ற குற்றங்களைப் புரிந்து வருகிறது.
மேலும் வாசிக்க அழுத்தவும் Read more...
ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது போர் நிறுத்தத்துக்கு உடண்பாடு
ஐ.நாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்தது அரசாங்கம். தற்காலிக தாக்குதல் நிறுத்தத்திற்கு உடன்பாடு!! அரசாங்கம் தற்காலிகமான தாக்குதல் நிறுத்தமொன்றை இன்று அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். வன்னியில் சிக்கியுள்ள மக்கள் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவதற்கும் அந்த மக்களுக்கான மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கும் இந்த தாக்குதல் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 500 மீற்றர் பின்நகர்வு: லக்பிம தகவல்
விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி
புதுக்குடியிருப்பில் சிறிலங்கா படையினரின் யுத்த டாங்கி புலிகளால் தாக்கியழிப்பு: தப்பியோடும் படையினர் தொகை அதிகரிப்பு
இமாம் வேடத்தில் இருந்தவர் மசூதி ஒன்றில் வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்
>> Friday, March 27, 2009
தமிழீழத்தை அழிக்கும் இந்திய இராணுவம்.-தேர்தலுக்குள் தீர்த்துக் கட்டு!....
'ஆதரவு கொடுத்தும் ஆயுதங்கள் கொடுத்தும் சிங்கள இராணுவத்தின் கொடூரத்துக்கு துணை நின்ற இந்திய அரசுஇ தன்னுடைய ராணுவத்தையே அனுப்பி இப்போது இலங்கைப் போரில் அப்பட்டமாக குதித்துவிட்டது!' என படபடக்கும் தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன. |
இதுபற்றி இலங்கைப் பத்திரிகையாளர்களிடம் பேசினோம். ''சிங்கள அரசு பல நாட்டு உதவிகளுடன் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த நிலப்பரப்புகளை வேகமாக வென்றது. ஆனால்இ புலிகளின் முக்கியத் தளபதிகளைக்கூட நெருங்க முடியவில்லை. கடந்த இரண்டு மாதங் களுக்குள் நாலாயிரத்துக்கும் அதிகமான ராணுவத்தினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான வீரர்கள் சிங்கள இராணுவத்தைவிட்டு ஓடி விட்டனர். அதனால் ஊர்க்காவல் படை வீரர்கள்கூட களமிறக்கி விடப்பட்டிருக்கிறார்கள். ஆனால்இ இதையெல்லாம் மறைத்துவிட்டுஇ 'வெற்றி... வெற்றி!' என சிங்கள அரசு ஒப்புக்கு முழங்கிவருகிறது. இந்திய ராணுவமோ... சமீப நாட்களாக இந்தியாவின் சக்தி மிகுந்த போஃபர்ஸ் பீரங்கிகளை ஈழப் போருக்கு அனுப்பியுள்ளது. இந்திய ராணுவ அதிகாரிகளே அந்த பீரங்கிகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பீரங்கி குண்டுகளின் கடுமையான வெப்பம்இ விழுகிற இடத்தையே பஸ்பமாக்கி விடுகிறது. பதுங்கு குழிகளுக்கு அருகே விழுந்தால்கூட உள்ளே ஒளிந்திருக்கும் மக்கள் கருகி விடுவார்கள். மூவாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வன்னிக் காடுகளில் இருந்து கிளிநொச்சிஇ பூநகரிஇ வவுனியா உள்ளிட்ட பகுதிகளுக்கு ரகசியமாக நகர்ந்து விட்டார்கள். சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அந்தப் பகுதிகளில் இப்போது அவர்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் சிங்கள ராணுவம் எந்தப் பகுதியைப் பாதுகாப்பதுஇ எங்கே தாக்குதல் நடத்துவது எனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. சில வருடங்களுக்கு முன் புலிகளிடம் இருந்த பகுதிகளை சிங்கள ராணுவம் மீட்டு வைத்திருந்தபோதுஇ பிரிகேடியர் பால்ராஜ் தலைமையிலான 180 புலிகள் இத்தா என்ற ஊர் வழியாக குறுக்கறுத்து யானையிறவை கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தனர். அதே போன்ற தாக்குதல்கள் மறுபடியும் நடந்து விடுமோ என சிங்கள ராணுவம் அஞ்சுகிறது. போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனச் சொல்லி இந்திய அரசு திரிகோணமலை மாவட்டம் புல்மோட்டை என்ற இடத்துக்கு மருத்துவக் குழுவை அனுப்பி வைத்தது. உண்மையில்இ இலங்கைப் போரில் காயமடைந்த இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை கொடுக்கத்தான் இந்திய மருத்துவக் குழு போயிருக்கிறது. இலங்கை மருத்துவக் கூடங்களில் விசேஷ மருத்துவர்களாக இருக்கும் பலரும் தமிழர்கள். அவர்களைக்கொண்டு இந்திய இராணுவத்தினருக்கு சிகிச்சை அளித்தால் ரகசியங்கள் தங்காது என்பதால்தான் புல்மோட்டையில் இந்திய மருத்துவக் குழுஇ ஒரு மருத்துவமனையையே நிறுவியது. இந்த பின்னணியைப் புரிந்துகொள்ளாத இலங்கை எம்.பி-யான அனுர திசநாயகஇ 'இந்தியா அத்துமீறிமருத்துவ மனையை நிறுவிஇருக்கிறது. அதனை உடனே அகற்றவேண்டும்!' என நாடாளுமன்றத்தில் கூச்சலிட்டார். அதற்கு பதில் அளித்த இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் நிமல் ஸ்ரீபால டிசில்வா வேறு வழியில்லாமல்இ 'இந்தியாவைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். இந்தியா உதவி செய்வதால்தான் விடுதலைப்புலிகளை நம்மால் வீழ்த்த முடிந்தது!' என இந்தியாவின் பங்களிப்பை பகிரங்கமாகவே போட்டு உடைத்தார். சமீபத்தில் சிங்கள மீடியாக்களுக்குப் பேட்டியளித்த ராணுவ அதிகாரி ஒருவர்இ 'வன்னியில் இப்போது போரை முன்னெடுத்துச் செல்வதே இந்திய ராணுவம்தான். சிங்களப் படைகள் பெயரளவுக்கு மட்டுமே களத்தில் இருக்கின்றன...' என்று சொன்னார். இடதுசாரி முன்னணித் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னஇ 'ஈழத்தமிழர்கள் மீது தற்போதையை போரை முற்றாகவும் நேரடியாகவும் நடத்துவதே இந்திய அரசுதான்!' என பகிரங்கக் குற்றம் சாட்டினார். இலங்கைப் போரில் இந்தியாவின் பிரதான பங்களிப்பை அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்கின்றன. அதனால்தான் போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தத் தயங்குகின்றன...'' எனச் சொல்லும் கொழும்பு பத்திரிகையாளர்கள்இ இந்தியாவின் இறுதிக்கட்ட முயற்சி குறித்தும் சொன்னார்கள். ''சிங்கள ராணுவத்தின் பலவீனம் இந்திய அரசுக்கு விளங்கிவிட்டது. அதனால் இந்திய ராணுவத்தின் முக்கியத் தளபதிகள் அடங்கிய ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட படையை இலங்கைக்கு அனுப்பத் தயாராகி விட்டது. முல்லைத் தீவு அருகே இலங்கைக் கடற்பரப்பில் இந்தியாவின் மூன்று நவீன போர்க் கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 10 அடி ஆழத்தில் கூட பயணிக்கக் கூடிய துருப்பு காவி கப்பல் இந்திய ராணுவத்தினரை சுமந்தபடி முல்லைத் தீவுக்கு அருகே நிற்கிறது. இந்தப் படைகள் ஒருசேர முல்லைத் தீவுக்குள் நுழைந்து ஓர் இரவுக்குள் புலிகளின் கணக்கை முடித்துவிடத் திட்டமிட்டிருக்கின்றன. இந்த திடீர் தாக்குதலில் புலிகளை நம்பி வன்னிக்காட்டில் தங்கி இருக்கும் தமிழ் மக்களில் பாதிக்கும் மேலானோர் பலியாகக் கூடும் என அஞ்சப்படுகிறது. காங்கிரஸ் அரசு 'தேர்தலுக்குள் புலிகளை தீர்த்துக் கட்டுங்கள்!' என உத்தரவிட்டிருப்பதால்இ இந்திய ராணுவம் இனியும் காத்திருக்காது என்றே சொல்கிறார்கள். இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தப் போகும் அபாயத்தை உணர்ந்துதான் புலிகளின் அரசியல் பிரிவு தலைவரான நடேசன்இ 'நிபந்தனையற்ற சமசரப் பேச்சுக்கு தயார்!' என அறிவித்திருக்கிறார். இருந்தும்இந்தியாவின் கண்ணசைவுக்குத் தக்கபடிஇ 'போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை!' என அறிவித்திருக்கிறது சிங்கள ராணுவம். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 16-ம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 14 அன்று ஈழத்தில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப்படும். அன்றைய தினத்திலேயே தமிழீழத்தை மண்ணோடு மண்ணாக்கப் பார்க்கிறது இந்திய அரசு!'' என வேதனைப்பட்டார்கள். தமிழ் ஆர்வலர்களோஇ ''கடல் வழியே பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் கொடூரத் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில்... அங்கே பாரசீக வளைகுடாவில் ரோந்து கப்பல்களை நிறுத்தி வைக்காத இந்திய ராணுவம்இ இலங்கையில் தாக்குதல் நடத்தத் தயாராகிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில்இ இலங்கையின் உதவியோடு பாகிஸ்தானின் ராணுவ அதிகாரிகள் சமீபத்தில் கச்சத்தீவுக்கே விசிட் அடித்து விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல் பழிவாங்கலுக்காக இந்தியப் பாதுகாப் பையே கோட்டைவிட்டுக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு. 'அடுத்து நாம் வருவோமோ... மாட்டோமோ...' என்கிற பயத்தில்இ ஆட்சி முடிவதற்குள் புலிகள் மீதுள்ள தன் வன்மத்தைத் தீர்த்துக்கொள்ளத் துடிக்கிறார் சோனியா காந்தி!'' என குமுறுகின்றனர். ஆனால் காங்கிரஸ் அரசோ ''இலங்கையில் நிரந்தர அமைதி ஏற்படுத்துவதுதான் எங்களின் பிரதான நோக்கம்!'' என்கிறது. மொத்த மக்களையும் கொன்று ஈழத்தையே மயானம் ஆக்குவதுதான் 'நிரந்தர அமைதி'யோ? |
http://www.seithy.com/breifNews.php?newsID=13078&category=TamilNews
Read more...இரணைபாலையில் புலிகள் நடத்திய தாக்குதலின் நேரடி வீடியோ காட்சிகள்
>> Thursday, March 26, 2009
விடுதலைப் புலிகளைப் பற்றிய மதிப்பீடுகள் என்றுமே மாறப் போவதில்லை. ஏனெனில், மக்களே புலிகள் புலிகளே மக்கள்.
என் கற்பு விற்பனைக்கு:கல்லூரி மாணவி
>> Tuesday, March 24, 2009
இது... இது... எப்படிச் சாத்தியம்? லசந்தவா? லசந்த விக்ரமதுங்கவா? கொல்லப்பட்ட லசந்தவா?
ஈழம் எரிய வைக்கிறார்கள் அங்கே,வயிறு எரிய வைக்கிறார்கள் இங்கே
ஊடகவியாளர்களை இலங்கை ஒடுக்குகிறது-அமேரிக்க அமைப்பு கண்டணம்
மட்டக்கிளப்பில் அதிரடிப்படையினரின் மினி முகாம் தாக்கியளிப்பு
>> Monday, March 23, 2009
புலிக்கொடியை தடைசெய்ய வேண்டுமாம்? ஏன்
புலிகள் தயாரித்துள்ளா மோட்டரை கண்டு அதிர்ச்சி அடைந்த ராணுவம்-போட்டோ இணைக்கப்பட்டுள்ளது
>> Sunday, March 22, 2009
Breaking News:வியாழன், வெள்ளி மோதல்களில் 600 வரையான படையினர் பலி!
விடுதலைப்புலிகளின் சர்வதேச நெட்வொர்க்-புலிகள் அறிவிப்பு
>> Saturday, March 21, 2009
Breaking News:களமுனையில் நேற்றைய மோதல்களில் 100-க்கும் அதிகமான படையினர் பலி!
ப்லீஸ்ஸ்ஸ்ஸ்ஸ் இதை ஒரு முறை படியுங்களேன்.
வானாந்திர வழியாய் சமாதானத்தைத் தேடி
பிரியமானவர்களே..,
கடவுளின் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன், இங்கே என்னைப் பற்றிய ஒரு சிறு அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
நான் ஒரு கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தவன். சிறு வயதில் ஜெபிப்பதிலும் வேதம் வாசிப்பதிலும் பெற்றோரின் வழிகாட்டுதல் படி நடந்தவன், நான் பிறந்து 16 ஆம் நாள் முதற்கொண்டு 5 வயது வரை மிகவும் பெலவீணம்(5ஆவது வயதில் என் மருத்துவப் பதிவில் உள்ள என் எடை 8 கிலோ மட்டுமே) உள்ளவனாய் இருந்தேன், மேலும் எனக்கு இல்லாத நோயின் அறிகுறியே இல்லை என்று இப்போதும் என் உறவினர்கள் சொல்லக் கேட்பதுண்டு காசநோய் தொடங்கி காமாலை, ஆஸ்துமா, மாதம் ஒரு முறை கடும் காய்ச்சல் என மிகவும் அவதிப்பட்டேனாம், என்னுடைய 5ஆவது வயது வரை நான் மருத்துவமனை செல்லாத மாதமோ, மருந்து எடுத்துக் கொள்ளாத நாளோ இல்லை என்றே சொல்லி விடலாம், என் தகப்பனும் தாயும் என் படுக்கையில் வந்து மணிக்கனக்காய் ஜெபித்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,
அப்போது ஒருமுறை எங்கள் நகருக்கு சகோதரர் DGS தினகரன் அவர்கள் வந்திருந்தார், கூட்டம் நடந்த இடத்திற்கு என் தகப்பனார் என்னை அழைத்துச் சென்றார், அங்கே அவர் விபத்திலிருந்து மீண்டு கையில் கட்டோடு தம்மிடம் வருபவர்களுக்காய் ஜெபித்துக்கொண்டிருந்தார், அப்போது எனக்காகவும் அவர் ஜெபித்தார், அப்போது ஆண்டவராகிய கிறிஸ்துவின் மூலமாக அற்புத சுகம் பெற்றுக் கொண்டேன். அன்றிலிருந்து என் உடலில் அதிசய மாற்றங்கள் நிகழ்ந்தது பல நாட்கள் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என சொன்ன மருத்துவர்கள் மருந்து தேவையில்லை என நிறுத்திவிட்டார்கள், காச நோய் அறிகுறிகள் முற்றிலும் மாறின, ஆஸ்துமா அறவே இல்லை, ஆரோக்கியமான மற்ற குழந்தைகளைப்போல் கிறிஸ்துவே என்னை அதிசயமாய் மாற்றினார்,
இப்படி கிறிஸ்துவின் மூலம் அற்புதம் பெற்றுக்கொண்ட நான் அவருக்கு உண்மையாய் வாழ்தேனா? இல்லை என்றுதான் சொல்லவேண்டும், என் 15ஆவது வயதில் பெரியார் அவர்களில் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டேன், கடவுள் மறுப்பை என் கொள்கையாக ஏற்றுக்கொண்டேன். அன்றிலிருத்து ஜெபத்தையும் கிறிஸ்துவ நம்பிக்கையையும் கேலிசெய்வேன், கிறிஸ்து சிலுவையில் மாண்டிருந்தால் தானே உயிர்த்தெழுவதற்கு? அவர் மயக்கதிலிருந்திருப்பார் என வாதிடுவேன்.
இப்படியாக என் வழிவிலகல் ஆரம்பமானது. ஒரு வருடம் கழித்து கண்ணதாசனின் "அர்த்தமுள்ள இந்து மதம்" (இந்த புத்தகம் கீழே கண்டெடுத்தேன் இரகசியமாக பள்ளியில் படிப்பேன்) என்ற புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது அவைகளில் சொல்லப்பட்ட தகவல்கள் நான் அனுதின வாழ்க்கையில் சாதாரனமான வழக்கத்தில் இருந்த பழக்கங்களாய் இருந்தபடியால் அவைகளின் ஆழமான உண்மைகளை அறிந்து? நம் பண்பாட்டிற்கு கலாச்சாரத்திற்கு இந்து மதமே சரியானது என நினைத்தேன், அந்த நினைவுகள் இந்து மதத்தின் மீது பற்றாக வளர்ந்தது, மற்ற மதங்கள் அது தோன்றிய பகுதிகளுக்கு வேண்டுமானால் சரியானதாக இருக்கலாம் ஆனால் நம் நாட்டிற்கு இந்து மதமே சரியானது என முடிவுக்கு வந்தேன்.
என்னுடைய நண்பர்கள் சிலர் இந்துக்கள் என்பதால் அவர்களோடு கோவில்களுக்குச் செல்லும் பழக்கம் உருவானது, அது மெல்ல மெல்ல என்னை அதன் ஆழங்களான சகுனம்பார்த்தல், ஜோதிடம், வாஸ்து ஜாககம் எனப் பரினாமம் அடைந்தது, நாளிடையில் நான் ஒரு பூரண இந்துவாக மாறிவிட்டேன், படங்களை இரகசியமாக வைத்து வழிபடுவது, சிறிய விநாயகர் சிலையை வீட்டில் மறைத்து வைத்து வழிபடுவது நண்பர்கள் வீட்டில் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றால் எனக்காக அர்ச்சனை செய்யச் சொல்வது அவர்கள் தரும் பிரசாதத்தை(குங்குமம், எலுமிச்சம்பழம் படங்கள்) வாங்கி வைத்துக்கொள்வது, நாள் பார்ப்பது (அஸ்டமி, நவமி, சந்திராஸ்டமம், ஆகிய நாட்களில் புதிய காரியம் செய்வதில்லை)
கல்லூரி நாட்களில் வீட்டிற்குத் தெரியாமல் ஒரு ஜோதிடரிடம் சென்று என்னுடைய ஜாதகத்தை எழுதிக்கொண்டேன், மேலும் குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, மேற்படிப்பு, அல்லது மற்ற ஏதாவது குழப்பங்கள் ஆகியவை நேரிடும் போது ஜோதிடரிடம் சென்று என்னுடைய நேரம் எப்படி எனக் கேட்டுத் தெரிந்து அதன் அடிப்படையிலேயே முடிவுகளை எடுப்பேன்,
நான் UG இரண்டாம் ஆண்டு படிக்கும் போது எங்கள் வீட்டின் முன் பகுதியில் அரசின் வீட்டு வசதி வாரியத் திட்டம் ஒன்று செயல் படுத்தப்பட்டது, அப்போது வீட்டிற்கு முன்னால் ஒரு சாலை அமைக்கப்பட்டது வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டிற்கு முன்னால் சாலையிருந்தால் அது "முச்சந்தி" "நேர்குத்து" ஆகும். இந்துக்கள் முறைப்படி தங்கள் தீட்டான பொருட்கள், மற்றும் திருஸ்டி கழித்த பொருட்களாகிய அசுத்தங்களை முச்சந்தியிலேயே கொட்டுவார்கள், இதனால் அதற்கு நேராக வாசல் இருக்கும் நாலாவது சந்தியான வீட்டிற்குள் அந்த அசுத்தங்கள் குடியேரும் என்பதும், இதனால் அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு ஆகாது என்பதும், அவர்களது நம்பிக்கை இந்த (மூட)நம்பிக்கையை நானும் நம்பினேன்.
இதனால் நான் என்னுடைய மூத்த நண்பர் ஒருவர் வாஸ்துவில் கைதேர்ந்தவர் அவரது உதவியோடு வாஸ்துவைக் கற்றுக்கொண்டேன் அவர் ஒரு இஸ்லாமியர். நாங்கள் இருக்கும் வீட்டை வாஸ்து முறைப்படி மிக மிக கவனமாக மாற்றி அமைக்கத் திட்டமிட்டேன். அயலாரின் தொடர்ச்சியான பயப்படுத்தலாலும், என்னுடைய விடாத நச்சரிப்பாலும், என் தகப்பனார் நான் வடிவமைத்திருந்த திட்டப்படி வீட்டை மாற்றியமைக்க அரை மனதாக ஒப்புக்கொண்டார், தொழில் முறை வாஸ்து பார்ப்பவரின் சரிபார்புக்குப் பிறகு வீடு மாற்றியமைக்கப்பட்டு விட்டது, எனக்கு ஏதோ உலக சாதனை செய்தது போல மன நிறைவு, இனி தான் எந்த தீங்கும் எங்கள் வீட்டை அனுகாதே? ஆனால் நடந்தது என்ன? வீடு மற்றியமைக்கப்பட்ட ஆறே மாதத்தில் என் தாயார் ஆரோக்கியமாக இருக்கும் போதே நினையாத நேரத்தில் மரணம் அடைந்தார். அவர் மரணம் அவருக்கே ஒரு நிமிடத்திற்கு முன்பு வரை தெரியாது. நான் இதை நம்பவே எனக்கு ஒரு மணி நேரம் பிடித்தது. என்னுடைய் மீருதல்களுக்கு எங்கள் குடும்பம் என் தாயாரின் உயிரை விலைக் கிரையம் செலுத்த வேண்டியதாயிற்று. அப்போதாவது மனம் மாறினேனா? அதுதான் இல்லை, என் பயனம் தீவிரமானதே தவிர பாதை மாறிவிடவில்லை, ஜோதிடத்தை நாடினேன் அவர்கள் உன் ஜாதகப்படி உன் தந்தையின் உயிருக்கு வேண்டுமானால் பாதிப்பு வரலாம், உன் தாய் நீடிய ஆயுள் பெற்றவர்கள் என்றே சாதித்தனர், (சமீப காலங்களில் ஜோதிடத்தை நம்பும் என் புற மத நண்பர்களிடம் என் ஜாதகத்தை கொடுத்து ஜோதிடத்தின் முகத்திரையை கிழித்த சம்பவங்களும் அரங்கேறயிருக்கின்றன.)
நான் PG படிக்கும் போது ஒரு முறை என் நண்பன் ஒருவரின் வழிகாட்டுதலில் ஒரு வயதான ஜோதிடரை சந்திக்க நேர்ந்தது அவர் என் ஜாதகத்தை ஆராய்ந்த போது எனக்கு கால சர்பதோஸம் (இராகு தோசம்) இருப்பதாகவும், அது ஒரு பரம்பரைச் சாபம் எனவும், அதற்கு ஒரு யாகம் செய்தால் அதை நிவர்த்தி செய்யலாம், என்று கூறினார். நானும் அதை ஏற்றுக் கொண்டு யாகம் செய்தேன். அதிகாலை வேளையில் ஒரு புகழ்பெற்ற மலை மீது யாக குண்டம் முழங்க இரண்டு புரோகிதர்கள் ஒரு ஜோதிடர் உட்பட நான்குபேர் கலந்து கொண்டோம். சுமார் மூன்று மணி நேரம் யாகம் நடந்தது, மந்திரம் சொல்லச் சொல்ல புரோகிதர் கொடுக்கும் பொருட்களை நான் தீயிலிட்டேன் பிறகு முடிவாக ஒரு பாம்பு உருவத்தை மாவினால் செய்து அதனோடு சில பொருட்களை வைத்து அதை ஒரு நீர் நிலையில் கொண்டுபோய் விட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வரச்சொன்னார்கள். நான் அப்படியே செய்தேன். பிறகு என் தலையில் தண்ணீரை ஊற்றி புதிதாக வாங்கி வைத்திருந்த உடையை உடுத்திக் கொண்டேன்.
அன்று எனக்கு நடந்தது என்னவென்றால் ஒரு பாம்பின் ஆவியை அவர்கள் என்மீது ஏவி விட்டிருகிறார்கள், ஆனால் எனக்கு இது தெரியாது. காரனம் (அது எனக்கு கிறிஸ்துவால் இரட்சிக்கப்பட்டு சில நாட்களுக்குப் பிறகே எனக்கு தெரியவந்தது, இது பற்றி பின்பு விளக்கம் தருகிறேன்.) பொதுவாக நான் இந்து மதத்தின் கோட்பாடுகளை நம்பினாலும், அவர்கள் சொல்லும் மந்திரம், செய்வினை, ஏவல், ஆகியவற்றின் மீது எனக்கு சிறிதும் நம்பிக்கையில்லை.
நாட்கள் கடந்தன ஒரு இந்துவாகவே வாழந்தேன். ஆனாலும் என்னையும் அறியாமல் ஓர் வெறுமை, சமாதானமின்மை காரணம் நான் இயல்பிலேயே மனதிடம் குறைவானவனாய் இருந்ததாலும் என்னுடைய தகப்பனாரும் சகோதரியும் என்னோடு ஒரே வீட்டில் இருந்தாலும் அவர்களின் அன்பைப் பெற முடியாமல் போனேன், காரனம் என் வழி அவர்களின் வழியிலிருந்து முற்றிலும் வேறாய் இருந்தது. மேலும் நான் இந்துவாக இருந்தாலும் என் நெருங்கிய நட்பு வட்டம் கிறிஸ்தவ வட்டமாய் இருந்தது, அவர்களோடு நேரம் செலவிடுவதை தவிர்த்தேன். காரனம் அவர்களோடு தர்க்கம் செய்வதே. அதனால் நண்பர்களின் ஆதரவையும் இழந்தேன். அலுவலக கசப்புகள் ஒரு புறம் என்னை வாட்ட இவ்வுலகில் எனக்கு அடைக்கலம் இல்லாததைப் போல உண்ர்ந்தேன். சிறு பிரச்சனைகளையும் எதிர்கொள்ள முடியாத கோழையாக மாறினேன்.
திருச்சந்தூர், இராமேஸ்வரம், பழநி, மதுரை, சென்னிமலை, திருச்செங்கோடு, பொள்ளாச்சி, பண்ணாரி, பாரியூர், திருநள்ளாரு, என எல்லாக் கோவில்களுக்கும் சென்று வந்தேன், ஆனாலும் என் வெறுமை மாறவில்லை, வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்க வாசல் திறப்பின் தரிசனம் சிறப்பானது எனக் கேள்விப்பட்டு, அதிகாலை ஒரு மனிக்கு எழுந்து அதையும் பார்த்தேன. ஆனாலும் வெறுமையும் சமாதானமின்மையும் மாறவில்லை. காரனம் நான் அங்கே சென்று பார்த்தவைகள் வெறும் மனிதனின் கற்பனைக்கு உட்பட்ட கற்சிலைகளாகவே இருந்தன. அவைகள் அழகாய்த்தோன்றுவதாக மற்றவர்கள் சொன்ன போது நானும் அதை ஆமோதித்தேன் அரை மனதோடு, ஆனாலும் அவைகளின் அழகு எனக்கு சமாதானத்தைத் தரவில்லை.
நான் மிகவும் நம்பிய சகுணம் பார்ப்பது, வாஸ்து, ஜோதிடம், ஜாதகம், புண்ணிய ஸ்தல வழிபாடு, ஆகியவைகளில் உண்மையில்லை என்பதை கசப்பான அனுபவங்கள் மூலமாக அறிந்து கொண்டேன்.
சரி யோகா கற்றுக்கொள்ளலாம் என யோகாவும் தியானமும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். அதுவும் என் வெறுமைக்குத் தீணி போடமுடியவில்லை. தியானமும் யோகாவும் இன்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்தாக பரவலாக அறியப்பட்டாலும் என்னைப் போன்ற சாமானியனுக்கு அதன் பயன் என்ன எனபதே அறியமுடியாமல் போனது. இதைப் படிக்கும் மருத்துவர்கள் தங்களிடம் வரும் "மன இருக்கமுள்ள நோயாளிகள் மிகவும் புத்தியுள்ள ஞானிகளா என அறிந்து யோகாவை அவர்களுக்குப் பரிந்துரையுங்கள் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாக இருக்கும், காரணம் அவர்கள் என்னைப் போன்ற பேதையாக இருக்கும் பட்சத்தில் அவைகளால் பலன் ஒன்றும் ஏற்படாது என்பதற்கு நானே ஒரு சான்று.
என் தேடல் என்ன என்பதே எனக்கு அறியமுடியாத பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டேன். சரி கடைசியாக மன நல மருத்துவரை பார்க்கலாம் என முடிவு செய்தேன், ஆனால் மருந்து வெறுமையையும் சமாதானமின்மையையும் எப்படிப் போக்கும் என எண்ணி, அம்முயற்சியை கைவிட்டேன், கடைசியாக தற்கொலை மட்டுமே தீர்வு எனத் தீர்மானித்த நான், நாளும் குறித்துவிட்டேன். ஏற்கெனவே எங்கள் தாயாரை இழந்து வாடும் என் குடும்பத்திற்கு மீண்டும் ஓர் இழப்பை தெரியப்படுத்த வேண்டாம் என எண்ணி வீட்டில் நேர்முகத்தேவுக்குச் செல்வதாகக் கூறிக் கொண்டு வேறொரு திசையில் பயனிக்கலானேன், நான் தற்கொலை செய்யத் தேர்வு செய்த மாநிலம், இது வரை பழக்கமில்லாத வேறு ஒரு வட மாநிலம், காரணம் என் தகப்பனாருக்கும் என் சகோதரிக்கும் என் மரணம் தெரியக்கூடாது என நான் நினைத்ததுதான்,
நான் மனதில் மரணமடையப் போகிறோம் என்ற கலக்கம் சிறிதும் இன்றி உறங்கலானேன், இரவில் ஓர் கனவு; "வீட்டிலுள்ள வேதத்தின் மீது என்னை என் தாயார் மிக ஆக்ரோசமாகத் தள்ளி விடுவது போல்"
உடலெல்லாம் ஒரே வலி, ஊர் பெயர் தெரியாத இடத்தில் இரங்கி மனம் மாறி வீட்டிற்கு வந்து விட்டேன்,
ஒரு சில நாட்கள் சென்றன, மீண்டும் வெறுமை....
இம்முறை மன நல மருத்துவரை சந்திப்பது என முடிவு செய்தேன். கிறிஸ்துவின் சித்தத்தால் நான் சந்தித்த மன நல மருத்துவர் ஓர் கிறிஸ்தவர், அவர் நான் சொல்வதை எல்லாம் பொறுமையாகக் கேட்டு முடித்து "உனக்குத் தேவையான மருந்து இயேசுகிறிஸ்துவே நீ இன்றே அவரிடம் சரனடைந்து விடு" எனச் சொன்னார். இதைக் கேட்டதும் தாங்க முடியாத கோபத்திற்குள்ளானேன். என் பெற்றோர் உறவினர், நண்பர்கள், எல்லார் சொல்லியும் கேட்காத நான் நீங்கள் சொல்வதைக் காசுகொடுத்துக் கேட்கவேண்டுமா? என்று காட்டமாகப் பேசிவிட்டு வெளியே வந்துவிட்டேன்.
சில நாட்கள் முடிவு ஏதுமின்றி சென்றது மீண்டும் வெறுமை......
பசியில்லை, தூக்கமில்லை, எதிலும் ஈடுபாடில்லை, சமாதானமில்லாத எதையோ இழந்துவிட்டது போல ஒரு மாயை ஒரு நாள் நள்ளிரவு திடீரென ஒரு யோசனை "இயேசுவை முயற்சி செய்து பார்த்தால் என்ன?" என்று , ஆனால் யாரிடம் போய் அவரைப் பற்றித் தெரிந்து கொள்வது? தகப்பனார்....? உறவினர்கள்....? நண்பர்கள்...?
முடியாது முடியவே முடியாது..
காரணம் நான் அவர்களிடம் கேட்பதற்கு வெட்கப்பட்டேன், ஏனென்றால் நான் அவர்களிடம் கிறிஸ்துவைப் பற்றி மிகக் கேவலமாக வாதிட்டிருக்கிறேன். சரி என்ன தான் வழி? அந்த மருத்துவரிடமே கேட்டுவிடலாம், என்ற முடிவுக்கு வந்துவிட்டேன், நான் திரும்பி வந்ததை பார்த்து சிரித்த அவர் பின்பு புன்முறுவலோடு கிறிஸ்துவை எனக்கு அறிமுகப் படுத்தினார், ஆனாலும் நான் தேடுவது கிறிஸ்துவிடம் தான் இருக்கின்றது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடியவில்லை, வீட்டில் எப்போதும் போல இரகசியமாய் வேதத்தையும் கிறிஸ்தவ அறிஞர்களின் புத்தகத்தையும் படிக்கலானேன், இவைகளில் பெரும்பாலவைகளை நான் ஏற்கெனவே படித்ததுண்டு நான் முன்பு படித்தது விவாதத்திற்கும் குற்றம் கண்டுபிடிப்பதற்குமே தவிர வேறு எதற்கும் இல்லை. ஆனால் இப்போது நான் படிப்பது ஒரு தேடல் அடிப்படையில்.. ஆம் நான் இழந்து போன சமாதானத்தைத் தேடி
மெல்ல மெல்ல நான் தேடியது கிடப்பதாகத் தோன்றியது, ஆனாலும் இவைகள் உண்மையா? என்ற எண்ணம் என்னைக் குழப்பியது, குழப்பம் தொடர்ந்து கொண்டிருக்க ஒரு நாள் இயேசு அழைகிறார் புத்தகத்தில் கோவை காருண்யாவில் சகோ. தினகரன் அவர்களின் கூட்டம் பற்றிய அறிவிப்பு கண்ணில் பட்டது அங்கே செல்ல முடிவு செய்தேன். அங்கே சொல்லப்பட்ட சில வார்த்தைகள் எனக்காகவே கிறிஸ்துவால் சொல்லப்பட்டதாக உணர்ந்தேன், ஆனாலும் அடுத்தநாள் தான் அது எனக்காகச் சொல்லப்பட்டது என்பதை மிகவும் சங்கடப்பட்டு எனக்குள்ளேயே ஒத்துக் கொண்டேன். சில நாட்களிலேயே பழைய, புதிய ஏற்பாடுகளின் ஒற்றுமைகளை நண்பரொருவர் மூலமாய் அறிந்து கொண்டேன்.
சரியாக நான் தற்கொலை முடிவைக் கைவிட்ட மூன்றாம் மாதத்தில் இந்த உலகத்தில் நான் தேடிய நிம்மதியை கிறிஸ்துவே தரமுடியும் என முழு மனதோடு ஒத்துக்கொண்டேன், அன்றே என் பாவங்களை அறிக்கையிட்டு என் வாழ்க்கையை கிறிஸ்துவிடம் ஒப்புக்கொடுத்தேன். என்னிடம் இருந்த செப்புத்தகடுகள், எந்திரங்கள், தாயத்துகள் படங்கள், சிலைகள், ஆகியவற்றை தேடியெடுத்து தூக்கி எறிந்துவிட்டேன். ஆனாலும் என்னால் சரியாக ஜெபிக்க முடியவில்லை,
கிறிஸ்தவம் தொடர்பான என் சந்தேகங்களை நான் எப்போதும் கேட்டுத் தெளிவு பெறும் நண்பரிடம் நான் ஜெபம் செய்ய முடியாததை முறையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் அவர் முகம் பயம் கலந்த கலவரமாக மாறத்தொடங்கியது, எனக்கு எதுவும் தெரியவில்லை, பின்பு அவர் சுதாரித்துக் கொண்டு உனக்கும் பாம்புக்கும் என்ன தொடர்பு என்றார்? எனக்கு அவர் கேட்பது சிறிதும் சம்பந்தம் இல்லாமல் இருந்ததால் நானும் குழம்பிவிட்டேன். பிறகு அவர் திரும்பத்திரும்பக் கேட்டதால் என் ஜாதகத்தில் கால சர்ப தோசம் என்ற ஒன்று இருப்பதாக சொன்னேன். அவர் அதையும் மீறி நீ பாம்போடு எதாவது ஒப்பந்தம் செய்திருக்கிறாயா? என்றார். நான் நான் பாம்பிடம் ஒப்பந்தம் செய்து கொள்ள நான் என்ன பாம்பா? நான் அந்த தோசம் நீங்க சில ஆண்டுகளுக்கு முன்னால் யாகம் வேண்டுமானால் செய்தேன் வேறொன்றுமில்லை என்றேன், அப்போது தான் அவர் ஒரு உண்மையைச் சொன்னார் நான் பேசிக்கொண்டிருக்கும் போது அவருக்கு நான் தெரியவில்லை பாம்புதான் தெரிந்தது, என்றார் மேலும் அந்த பாம்பின் ஆவியை உடனே விரட்ட வேண்டும் என்றார்.
நான் நம்பவில்லை ஆனாலும் அவர் வற்புறுத்தலினால் அரைமனதோடு ஜெபத்தில் அமர்ந்தேன், அப்போது திடீரென என் உடலை என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத துடிப்பு என்னில் தோன்றி நேரமாக ஆக அதிகமானது என் நாக்கு வெளியே வந்து விட்டது ஆனாலும் என் மனம் இது வேறொருவரின் இடம் நான் இப்படி நடந்து கொள்ளக்கூடாது என என் உடலைக் கட்டுப்படுத்த துடியாய் துடித்தது ஆனால் உடலை என்னால் சிறிதும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை பிறகு சிறிது நேரத்தில் என் உடல் என் கட்டுக்குள் வந்தது. நான் PG படிக்கும் போது அந்த பிசாசோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை என் ஆண்டவராகிய கிறிஸ்துவே முறித்துப் போட்டார், அன்றிலிருந்து நான் கிறிஸ்துவை என் முழு முதல் பரம தகப்பனாக ஏற்றுக்கொண்டேன்.
அன்றிலிருந்து நான் இழந்து போயிருந்த சமாதானம் என்னில் நிலைபெற்று வளர ஆரம்பித்தது, இதை வாசித்த சிலருக்கு இப்போது உனக்கு பிரச்சனைகள் இல்லையா? என ஒரு ஐயம் தோன்றும், ஒரு உண்மையைச் சொல்கிறேன் நான் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாத நாட்களைவிட கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட பிறகு தான் எனக்குப் பல பிரச்சனைகள் ஏற்பட்டன, பிரச்சனைகளைச் சந்திக்கும் தெம்பு எப்போதும் எனக்கு இருந்ததில்லை ஆனால் நான் கிறிஸ்தவனான பின்பு எனக்கு பிரச்சனைகள் வரும்போது நான் எந்த இடத்தில் எந்த நிலையில் இருக்கிறேனோ அதே நிலையில் என் இயேசப்பாவிடம் என் பிரச்சனைக்ளை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடுவேன்(1 பேதுரு 5:7). மேலும் அவர் எப்போது என்னோடு இருக்கிறார் என்ற அவரது உறுதிமொழியும், அவர் என்னைக்கை விடுவதில்லை என்ற வாக்குறுதியும்(ஆதி 28:15), தானாக எனக்கு தன்னம்பிக்கையைத் தருகின்றன இப்போது எனக்கு தேவையில்லா பயமும், நம்பிக்கையில்லாதால் உருவாகும் சமாதானமின்மையும், அரவே இல்லை, காரணம்: நான் இந்த உலகத்தை உருவாக்கிய சர்வ வல்லவரின் பிள்ளை, அவரிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்(சங் 121:2),
முடிவாக "என் ஆத்மா தேடி அலைந்தது கிறிஸ்துவத்தான், அவர் எனக்கு வைத்துவிட்டுப் போன சமாதானத்தைத்தான், என இப்போதும் உணர்கிறேன். மேலும் என் வாழ்க்கையில் இப்போது வெறுமையில்லை. நான் கிறிஸ்துவுக்குள்ளாகவே மரிக்க விரும்புகிறேன், காரணம் நான் கிறிஸ்துவிடம் தேடியத்தை விடவும் கேட்டதை விடவும் அதிகமாகவே பெற்றுகொண்டேன். பெற்றுக் கொள்கிறேன். பெற்றுக் கொள்வேன் என்றும் விசுவாசிக்கிறேன்.
இதைப் படிக்கும் சகோதரனே சகோதரியே ஒருவேளை நீங்களும் இதே போன்ற சமாதானமில்லாத ஒரு வெறுமையான வாழ்க்கையை வாழ்ந்து கொன்டிருக்கலாம், உங்களுக்கு நிரந்தரமான சமாதானத்தையும் நிம்மதியையும் கிறிஸ்துவே தரமுடியும். என்னை நேசிக்கும் இயேசு கிறிஸ்து உங்களையும் நேசிக்க ஆயத்தமாய் இருக்கிறார்(யோவான் 6:37). ஒரு முறை.... ஒரே ஒரு முறை.... கிறிஸ்துவுக்குள் உங்கள் முழு மனதோடு வந்து உங்கள் குறைவுகளை ஒப்புகொடுங்கள், கட்டாயம் ஒரு மாற்றத்தைக் காண்பீர்கள். அவர் உங்கள் குறைவுகளையெள்ளாம் நிறைவாக்குவார்(பிலிப்பியர் 4:19). அவர் என்றென்றும் மாறாதவராக இருக்கிறார்(எபிரெயர் 13:8), அவர் பொய் சொல்லாதவர், மனிதனைப்போல மனம் மாறுகிறவர் அல்ல (எண்ணாகமம் 23:19). எனவே நீங்கள் ஒருமுறை அவரை முழு மனதோடு தேடிப்பாருங்கள், நீங்கள் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமானதைச் தருவார், செய்வார். ஆமேன்.
33 வருடத்திற்கு பிறகு வரலாற்று சாதனை-இதில் சச்சின் பங்கு என்ன?
விடுதலைப்புலிகள் மீண்டும் ஒரு வான் தாக்குதல்?
>> Friday, March 20, 2009
மகளோடு வல்லுறவு வைத்துள்ள இந்து,முஸ்லீம்,கிறிஸ்தாவர்
தாறுமாறான எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு மதம்,நாடு,கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லை.அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் எந்த நாட்டவர்களாக இருந்தாலும்,எந்த கலாச்சாரமாக இருந்தாலும் ஓரே இனத்தை சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.அது மிருக இனம்.
இதில் அந்த மதத்தவர் செய்தார்,இந்த மதத்தவர் செய்தார்,இல்லை நாத்திகர் செய்தார் என்று சொல்லிக்கொள்ளும் கீழ்தரமான செயலை எந்த மதத்தவர்களும் தங்கள் சட்டைக் காலரை தூக்கிவிட்டு சொல்ல முடியாது என்பது என் கருத்து.இதற்கு உதாரணமாக சமீபக்காலங்களாக இதயத்தை பிழிந்தெடுக்கும் சம்பவங்கள் உலகத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது.
தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர்
பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் போன பாரத நாட்டில் மும்பை அருகே அரங்கேறி, இந்திய மக்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. கணினியுகம், இன்டர்நெட் யுகம் என்று கூறப்படுகிற இந்தக் காலகட்டத்தில் பணத்தாசை பிடித்து, மூட நம்பிக்கைக்கு ஆளாகி, பெற்ற மகளையே சிதைத்த ஒரு வியாபாரியின் அலங்கோலம் இது.
வியாபார நஷ்டம்
மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர் அந்த வியாபாரி. அவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு 20 வருடங்களாக அறிமுகமான வில்லேபார்லேயை சேர்ந்த மந்திரவாதி ஹஸ்முக் ரத்தோடை கடந்த 2000-ம் ஆண்டு சந்தித்தார். தான் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதை எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழி என்று யோசனை கேடடார்.
அப்போதுதான் அந்த வியாபாரியிடம் மந்திரவாதி, "உங்களது மூத்த மகளுடன் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்கள் நிலைமை மாறிவிடும். வாழ்வில் வளங்கள் வந்து சேரும்'' என்றார்.
துணை போன தாய்
இதை வியாபாரி நம்பினார். வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் மந்திரவாதி சொன்ன விஷயத்தை போட்டு உடைத்தார். பணத்தாசை பிடித்த மனைவியும், "மந்திரவாதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீங்கள் அப்படியே செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.
அதுமட்டுமின்றி, தனது மூத்த மகளை அழைத்து, "நமது குடும்பம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அப்பாவின் வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் அவர் சொல்கிறபடி நீ நடந்து கொள்'' என்று கூறினார். அந்தப் பெண், அந்த நிமிடத்தில், தந்தை இப்படித்தான் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க வில்லை.
.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி
தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.
அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.
இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் ஜோசப்
இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.
சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.
எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.
மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்
சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்
புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம்
|
சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது.... ஒரு ஆய்வு
|
ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான். ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது. ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது. இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது. புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? . பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும். இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள். வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது. ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து அதிபதி. |
Read more...