சமீபத்திய பதிவுகள்

மண்ணிபு கேட்ட தினமலர்

>> Thursday, September 4, 2008






http://epaper.dinamalar.com/Web/Article/2008/09/05/001/05_09_2008_001_004.jpg

StumbleUpon.com Read more...

விரட்டி விரட்டி வேட்டையாடிய மனித மிருகங்கள்! உயிரை உறைய வைத்த ஒரிஸா படுகொலைகள்!!

-சர்ஜுன்
ஒரிஸா மீண்டும் பற்றி எரிகிறது. ஆப்பிரிக்காவின் ருவாண்டா போல், 2002ன் குஜராத்தைப் போல் ஓர் பெரு மெடுப்பிலான ஒரு இனப்படு கொலை களுக்கான அசாதாரணமான ஆயத்தங் கள் அதில் தென்பட்டன. ஒரிஸாவின் துயர நிகழ்வுகள் மீண்டும் ஒருமுறை வெடித்தது. ஃபாதர் கிரகாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது பிஞ்சுக் குழந்தைகள் கொடூரமாகக் கொளுத்திக் கொல்லப் பட்ட சம்பவம் என வரலாறு மறக்காத வேதனைச் சம்பவங்கள் மீண்டும் ஒருமுறை அரங்கேறியது. மனித சமூகம் நாளும் நேசிக்கும் கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங் கள் அழிக்கப்பட்டதும் சேவை உள்ளம் கொண்ட கன்னியாஸ்திரிகள் வன்முறை ஹிம்சை போன்றவற்றை கனவிலும் கூட நினைக்காதவர்கள் அவர்களை கொளுத் திக் கொன்ற வேதனையையும் என்ன வென்று சொல்வது?

விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முக்கிய தலைவரான சாமியார் லஷ்மானந்தா சரஸ்வதி என்பவர் மாவோயிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து சாமியாரின் கொலைக்கு யார் காரணம் என உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்தும் கிறித்தவர்கள் தான் இதற்கு காரணம் என கொடூரமாகக் கதை பரப்பி கிறித்தவர்கள் வேட்டையாடப்பட்டனர். ஆகஸ்டு 23க்குப் பிறகு மனித வர லாற்றில் மீண்டும் சில கொடூர நிகழ்வுகள் அரங்கேறின. ஆம்! விஸ்வ ஹிந்து பரிஷத் தனது வெறியாட்டத்தை தொடங்கியது. 23ஆம் தேதி கோத்த குடா என்ற பகுதியில் வேகமாக சென்ற வாகனங்கள் வழி மறிக் கப்பட்டன, கொளுத்தப் பட்டன. வாகன ஓட்டுநர் கொடூரமாக தாக்கப்பட்டார். சம்பல் பூரில் உள்ள ஆனந்த பள்ளியில் இரண்டு கன்னியாஸ்திரிகள், ஒரு சிறு சர்ச் எல்லாம் பஸ்பமாக்கப்பட்டன. அழிக்கப் பட்டன. பாதிரியார்கள் கன்னியாஸ்திரி கள், கிறிஸ்தவர்கள் அவர்களின் வீடுகள் கடுமையாக தாக்கப்பட்டன. மானாவாரியாக கொளுத்தப்பட்டன.

பிரச்சனைக்குரிய கந்தமால் மாவட் டத்தில் ஒரிஸா மாநில அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்தும் ஒரு பயனும் விளையவில்லை.

ஆகஸ்டு 25ஆம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவித்த பந்தை தொடர்ந்து வன்முறை வெடித்தது. முழு அடைப்பின் போது விரும்பத்தகாத சம்பவமாக வன்முறை சம்பவங்கள் சில நடக்கும். ஆனால் வன்முறை வெறியாட் டத்தை நிகழ்த்துவதற்காகவே பந்த் நடத்தியது விஸ்வ ஹிந்து பரிஷத் என நடுநிலையாளர் நினைத்த வண்ணமே அந்த வன்முறைகள் நடந்தேறியன.

கிறித்தவர்களுக்கு எதிராக சர்ச்சை கள் நிகழ்த்தி வந்த வரும் உழைக்கும் மக்கள் சாப்பிடும் மாட்டிறைச்சிக்கு எதிராக அரசியல் நடத்தி வந்த சுவாமி லக்ஷ்மானந்தா கொலையை காரணம் காட்டி இதற்கென காத்திருந்தவர்களைப் போல வெறிகொண்ட விதமாக வேட்டை யாடினர் வி.ஹெ.பியினர்.

ஞாயிற்றுக்கிழமை 24 ஆம் தேதி வன்முறை வெறியாட்டத்துக்கு அஞ்சி தேவாலயங்கள் வெறிச்சோடின.

அதே நாளில் கந்த மால் மாவட்டத் தில் சிறுபான்மையினர் மீதான தாக்கு தல்கள் அதிகரித்தன. ஆர்ச் டயோசீசன் ஆஃப் புவனேஸ்வர் அலுவலகம் தாக்கப்பட்டது. ஜான் விகாஸ் என்ற சமூக நல அலுவலகம் இந்த டயோசீ சனுக்கு கீழ் செயல்பட்டு வருகிறது. அடித்தட்டு மக்களின் கோரிக்கையை ஏற்று விரைந்து செயல்படும் அந்த அலுவலகம் தீக்கிரையானது. சூறையாடப்பட்டது. மூன்று கார்களும், ஆறு இரு சக்கர ஊர்திகளும் கொளுத் தப்பட்டன.

முக்கியமான ஆவணங்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. மாலை
5 1/2 மணிக்கு இவையனைத்தும் கச்சிதமாக முடிக்கப்பட்டன.

6 மணிக்கு...

அதன்பிறகு திவ்ய ஜோதி பாஸ்ட்ரல் சென்டர் மீது மாலை ஆறு மணிக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. சூறையாடல் நடத்தப்பட்டது. பலிகுடாவில் மாணவர் விடுதி, மாணவியர் விடுதி, கன்னி யாஸ்திரிகளின் உறைவிடமும் தாக்கப் பட்டது. கன்ஜம்படி பகுதியில் உள்ள ரோமன் கத்தோலிக்க ஆலயம் தாக்கப் பட்டது. கன்ஜம்டி பகுதியில் உள்ள பிராட்டஸ் தேவாலயம் தாக்கப்பட்டது. சூறையாடப்பட்டது.

6.45 மணி...

பலிகுடா பகுதியில் உள்ள மூன்று பெந்தே கோஸ்தே தேவாலயங்கள் அழிக்கப்பட்டன.

இரவு 7 மணிக்கு..

ரைகியா பகுதியில் தலித் சமூகத் தினருக்கு சொந்தமான 12 கடைகள் சாம்பலாக்கப்பட்டன. விரட்டி விரட்டி வேட்டையாடப்பட்ட அப்பாவி மக்கள் அடர்ந்த காட்டுக்கு சென்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற அவல நிலையில் அவர்களுக்கு இருண்ட வாழ்வை அளித்த மாநில அரசை நொந்து கொண்டு இருண்ட காட்டுக் குள் சென்றனர்.

ஆகஸ்ட் 25, 2008...

வன்முறைகள் தொடர்ந்தன. ஒரிசா மாநிலம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர் கள் உச்சகட்ட பீதியில் உறைந்தனர்.

காலை 7 மணி..

புல்பானி சர்ச்சும் அநாதை இல்லங் களும் தாக்கப்பட்டன. சிறிசண்டா எம்.சி சகோதரர் விடுதி என்ற ஆதரவற்றோர் விடுதி தாக்கப்பட்டது. அதிலுள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் நோயாளிகள் அடித்து விரட்டப்பட்டனர். குஜராத் இனப்படுகொலையின் போது சிறு பான்மை சமூகத்தினர் வேட்டையாடப் பட்ட விவகாரம் நெருஞ்சி முள்ளாய் நாட்டு மக்களின் இதயங்களை நெருடிய போதும் கூட அரசும் காவல்துறையும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஒரிசாவில் மனித உரிமை மீறல்கள் நடந்தன. சிறுபான்மை யினரின் உயிர்கள் உடமைகள் எவ் வளவு மலிவானது என்பதை விவரித்தது.

10.30 மணி..

பலிகுடாவில் வாழும் கிறித்தவர் களின் வீடுகள் இப்போது தாக்கப்பட்டன. சேதங்கள், உயிர் பலிகள் குறித்த தெளிவான தகவல்கள் இதுவரை துல்லியமாகக் கிடைக்கவில்லை.

முற்பகல் 11.30 மணி...

நுஆஷி பகுதியில் உள்ள கிறிஸ்தவர் கள் வாழும் தெரு முழுமையாக தீயிட்டு கொளுத்தப்பட்டது. உயிருக்கு அஞ்சி மக்கள் கானகத்திற்கு ஓடினர்.
தேவாலயத்தின் சார்பாக நடத்தப் பட்ட மாணவர் விடுதி சரமாரியாக தாக்கப்பட்டது. அதில் இரண்டு மாணவர் களின் தலைப் பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டனர்.

ஒரு மணி..

ஜமாஜ் பரிச்சா என்ற கிறித்தவரின் வீடு. வாகன ங்கள் தீயிடப் பட்டன. கதவு கள் நெருப்பினால் துண்டு துண்டாக உடைந்தன. கூடியக் கூட்டத்தினரால் அவர் செம்மையாக உதைக்கப்பட்டார்.

தலையில் கடும் காயமடைந்த அவர் அவசர சிகிச்சைக்காக தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக் கிறார். (அவர் சிகிச்சை பெறும் மருத்துவ மனையின் பெயர் ரகசியமாக வைக்கப் பட்டிருக்கிறது) அவரது மனைவி ஹிந்து வாக இருந்தும் அவர் மீது கூடியிருந்த கும்பல் இரக்கம் காட்டவில்லை. அவர் மனைவியும் தாக்கப்பட்டார்.

2 மணி...

கிறிஸ்வர்களின் வீடுகளை தீயிட்டுக் கொளுத்துவதற்காக வன்முறை கும்ப லுக்கு அப்பகுதி பெண்கள் மண்ணெண்ணைய் கேன்களை போட்டி போட்டுக் கொண்டு கொடுக்கிறார்கள்.

இந்த வன்முறை கும்பல் செய்த குற்றச் செயலுக்கு இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 436ன்படி ஏழு வருடம் அதற்கு மேற்பட்ட காலம் சிறையில் தள்ள வேண்டிய அளவு குற்றம் செய்தார் கள். ஆனாலும் துணிச்சலுடன் உலா வருகிறார்கள்.

ஃபாதர் சல்லான் கன்ஜம்டி பாஸ்ட்ரல் சென்டரின் இயக்குநர், அந்த சென்டரின் நிர்வாகி சிஸ்டர் மீனா இருவரோடு சேர்ந்து அந்த அலுவலகங்கள் கொளுத் தப்பட்டன. உள்ளே மாட்டிக் கொண்ட இருவரும் உயிர் பயத்தில் அலறவும் அஞ்சி தப்பித்தோம் பிழைத்தோம் என அவர்களும் காட்டுக்குள் ஓடினார்கள்.

சில, இடங்களில் கிறித்தவர்களின் வீடுகளுக்குள் வன்முறை கும்பல் நுழைந்து அங்கு வீட்டுக்குள் இருந்தவர் களை வெளியே இழுத்து வந்து அருகிலுள்ள காவல்நிலையத்துக்கே கொண்டு சென்று உதைத்தனர்.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி பாதிக்கப் பட்டவர்கள் குறித்த தகவல்கள் வெளிவர ஆரம்பித்தன.

1. விஜய் பரிச்சா
2. ஆர்.கே. நாயக்
3. ஜோசப் நாயக்
4. சூசன் நாயக்
5. சந்தோஷ நாயக்
6. ஹரி ஹர்தாஸ்
7. மோசே நாயக்
8. பிரகாஷ் நாயக்
9. மோசே நாயக்
10. ராஜு மற்றும் பலர்

ரைகியா போலிஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட கருணா அநாதை நிலையம்.
பத்மஹாவில் உள்ள மூன்று பெந்தோ கோஸ்தே பள்ளி மஸாதிகா சர்ச்
பைசர் மஹா சர்ச், மொண்டாகியா பகுதியின் பாப்டிஸ்ட் சர்க் ஆர்.சி.சர்ச்
மாத பங்கா சர்ச் வன்முறைகள் தொடர்வதால் இன்றும் ஏராளமான பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் கதி குறித்த தகவல் தெரியவில்லை.

பூல்பானி, சரஸ்னந்தா, பேபின்கியா, பலிகுடா மற்றும் கொஞ்சம்ண்டி பகுதி களில் கிறிஸ்தவர்களின் வீடுகள் முற்றி லும் கொளுத்தப்பட்டன. இந்தியாவின் அனைத்து ஊடகங்களும் இதனை செய்தியாக மட்டும் வெளியிட்டன. இருந்தும் நாடெங்கும் பரபரப்பு ஏற்பட் டது. கலவரக்காரர்களை சுட உத்தரவிடப் பட்டதாக உள்துறை அமைச்சர் அறிவித் தும் கூட வன்முறை ஓயவில்லை.

குழந்தைகளையும் பெண்களையும் உயிரோடு கொளுத்திக் கொன்ற செயல் நாடெங்கும் கடும் கண்டனத்தை ஏற்படுத்தியது.

குழந்தைகளைக் கூட கொலை செய்யும், பெண்களைக் கூட தீயிட்டு கொல்லும் இரக்கமற்ற மிருகத்தனத்தை பல்வேறு இயக்கங்களும் கண்டனம் தெரிவித்துள்ளன. சட்டத்தை கையி லெடுத்து காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்ளும் மனித குல விரோதி சக்திகளை வேட்டையாட விட்டு வேடிக்கை பார்த்த ஒரிசா மாநில அரசையும் மத்திய அரசையும் வன்மை யாகக் கண்டிப்பதாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பொதுச் செயலாளர் நுஸ்ரத் அலி தெரிவித்தார். பல்வேறு மனித உரிமை அமைப்புகளும் போராட்டங் களை தொடர்ந்து நடத்தி வருகின்றன.

ஒரிசா மனித வேட்டையை எதிர்த்து உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் 16 ஆம் பெனடிக்ட் தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். வன்முறைகள் இன்னும் தொடர்கின்றன.

பள்ளிகள், கல்லூரிகள் அடையாள வேலை நிறுத்தம் செய்து தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின் றன. ஆந்திராவில் ஒரிசா சம்பவத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஆறுதல் தெரிவித்து முஸ்லிம் கல்வி நிறுவனங் களும் கதவடைத்தன.

முஸ்லிம் கல்வி சமூக மற்றும் கலாச் சார அமைப்பு, சிறுபான்மை மேம்பாட்டு அமைப்பு, தமீரெ மில்லத், அமாரத் மில்லத் இஸ்லாமியா உள்ளிட்ட கல்வி நிறுவனங்களும் ஒருநாள் வேலை நிறுத்தத்தினை அறிவித்தன.

இன்னமும் ஒரிசாவில் புதுப்புது சாம்பல் மேடுகள் முளைத்து வருவதாக வேதனை தகவல்கள் வேலைக்கொன் றாய் வந்து கொண்டிருக்கின்றன.

ஒரிசாவில் கிளம்பும் தீ ஜுவலை இந்தியாவின் மதசார்பின்மை(!) பெருமைப் பற்றி உரக்க ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
 
 
source=tmmk.info
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP