ஒருநாள் அணியில் விராட்: இஷாந்துக்கு ஓய்வு! | | | | | | | | | | | | இலங்கைக்கு எதிராக வரும் 18ஆம் தேதி துவங்க உள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி இடம் பிடித்துள்ளார். இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அந்நாட்டுடனான டெஸ்ட் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. இந்நிலையில், இலங்கை தொடருக்கான ஒருநாள் அணி மற்றும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி வீரர்கள் தேர்வு இன்று நடைபெற்றது. இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணி: மகேந்திர சிங் தோனி (தலைவர்), சச்சின், கம்பீர், சேவாக், யுவராஜ், ரோஹித் சர்மா, ரெய்னா, விராட் கோஹ்லி, பார்தீவ் படேல், இர்ஃபான் பதான், பிரவீன்குமார், ஹர்பஜன், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், முனாஃப் படேல், பிரஜ்ஞான் ஓஜா. சாம்பியன்ஸ் கோப்பைக்கான அணி: மகேந்திர சிங் தோனி (தலைவர்), சச்சின், கம்பீர், சேவாக், யுவராஜ், ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, விராட் கோஹ்லி, இர்ஃபான் பதான், பிரவீன்குமார், ஹர்பஜன், ஜாகீர்கான், ஆர்.பி.சிங், இஷாந்த் சர்மா, ஓஜா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். | | |