சமீபத்திய பதிவுகள்

லேட்டஸ்ட் செய்தி:இலங்கையில் சன் டிவி ஊழியர்கள் கைது

>> Wednesday, February 18, 2009

வட இலங்கை வவுனியாவில் சன் டிவி ஊழியர்கள் கைது

 கடும் மோதல் நடந்துவரும் வட இலங்கையில் இருக்கும் வவுனியா நகரில் தமிழ்நாட்டின் சன்டிவி தொலைக்காட்சி நிறுவனத்தின் நான்கு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வவுனியாவில் இருக்கும் சன் டிவி மறுஒளிபரப்பு நிலையம் சோதனையிடப்பட்டது என்றும் பிறகு நான்கு பேர் கைதான தாகவும் இலங்கையின் டெய்லி மிர்ரர் இணையப் பக்கச் செய்தி தெரிவித்தது. பல சாதனங்களும் கைப்பற்றப் பட்டதாகச் சொல்லி படங்களையும் டெய்லி மிர்ரர் வெளியிட்டுள்ளது. கைதானவர்களை, கைப்பற்றப்பட்ட சாதனங்களுடன் போலிஸ் காவலில் கொண்டு சென்றது. இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக பொய்யான செய்திகளை ஒளிபரப்பியதாகக் கூறப்பட்டதன் பேரில் சன்டிவியினர் கைதானதாகப் போலிஸ் தெரிவித்துள்ளது. "அந்த நால்வரையும் ராணுவம் கைது செய்தது. பிறகு அவர்களை மேல் விசாரணைக்காக போலிசிடம் ராணுவம் ஒப்படைத்தது," என்று போலிஸ் பேச்சாளர் எஸ்எஸ்பி ரஞ்ஜித் குணசேகரா சொன்னதாக டெய்லி மிர்ரர் மேலும் கூறியது. சன்டிவி நிறுவனம், தமிழ் நாட்டைச் சேர்ந்தது. அதன் மறு ஒளிபரப்பு நிலையம் வவுனியாவில் அமைந்துள்ளது என்று தெரிகிறது. இலங்கையில், அரசுக்கு எதிராகத் தகவல்களை வெளியிடும் தரப்புகள் பாதிப்புக்கு ஆளாகி வருவதாக பல புகார்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. பல இடையூறுகள் இருந்ததால் இலங்கைக்கான தனது தமிழ், சிங்கள வானொலி ஒலிபரப்பை நிறுத்துவதாக பிபிசி அண்மையில் அறிவித்தது. இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஒளிபரப்பாகும் மக்கள் தொலைக்காட்சிக்கு யாழ்ப்பாணம், அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மறு ஒலிபரப்புச் செய்வதற்கு இலங்கை அரசு தடைவிதித்துள்ளது. இலங்கைப் படையினரால் நேரடியாக இந்தத் தடை விதிக்கப் பட்டுள்ளது என்று யாழ்குடா நாட்டின் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களும் தெரிவித்து உள்ளதாக தமிழக இணையத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
 

StumbleUpon.com Read more...

உலக தமிழ் கிறிஸ்தவர்களே ஈழத்தமிழர்களுக்காய் ஒரு சொட்டுக் கண்ணீர் தேவை! சிந்துவீர்களா?

பெரிதாக பார்க்க படத்தை கிளிக் செய்யவும்


http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=28402#28402

StumbleUpon.com Read more...

இந்தியா இராணுவம் பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, கற்பழித்து வெறியாட்டம் ஆடினார்கள்

மகிந்த, இந்திய இராணுவ தளபதிகளின் பேச்சை நம்பி புலியின் வாலைப் பிடித்த சோனியா 

sonija2kommpuஇந்தியா உதவி செய்தால் புலிகளை எப்படியும் ஒழித்து விடுவோம் என்ற மகிந்தவின் பேச்சையும் இந்தியா இராணுவ தளபதிகளின் பேச்சையும் நம்பி புலியின் வாலை பிடித்திருக்கிறார் சோனியா. பிரபாகரனை நெருங்கி விட்டோம், இன்னும் ஒரிரு நாட்களில் பிடித்து விடுவோம் என்றெல்லாம் சொல்லி பல மாதங்கள் ஒடி விட்டன.

ஆட்சி முடிவதற்குள் எப்படியாவது போரை முடிவுக்கு கொண்டு வந்து புலிகளை அழித்து விட வேண்டுமென்று சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பதோடு வேண்டிய உதவிகளையும் செய்கிறார். போர் முடிவுக்கு வராமல் எப்படி தேர்தல் பிரச்சாரத்திற்கு போவது? அடுத்து ஆட்சிக்கு வருபவர்கள் தனக்கும், பிள்ளைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு கொடுப்பார்களா? இனிமேல் தமிழகத்திற்கு செல்ல முடியுமா? ராகுல், பிரியங்காவை எப்படி பாதுகாப்பது? என்று ஆயிரமாயிரம் கேள்விகள் அவரை துளைத்தெடுக்கின்றன.

ராஜிவ் காந்தி செய்த தவறு அவருக்கு தெரியாமலா இருக்கும்? இரு தரப்பினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமரசம் செய்து வைத்தால் அது நியாயம். அதை விடுத்து ஒரு பக்கம் சாய்ந்து இன்னொருவரை அடித்தால் அடிபட்டவன் சும்மா விடுவானா? சமாதானம் செய்து வைக்காமல் ராஜிவ் காந்தி இலங்கைக்கு ஒரு இலட்சம் பேர் கொண்ட படையை அனுப்பினார்.

அவர்கள் அங்கு 10,000 தமிழ்ர்களை கொன்று குவித்தார்கள். பெண்களின் மார்புகளை அறுத்தெறிந்து, கற்பழித்து வெறியாட்டம் ஆடினார்கள். புலிகளிடம் அடைந்த தோல்வியை ஏற்றுக் கொள்ள முடியாமல் குழந்தைகள் என்று கூட பார்க்காமல் கொன்று குவித்தார்கள். பெண்களும் குழ்ந்தைகளும் கற்பழித்து கொலை செய்யப்பட்ட போது ராஜிவ் காந்தி தடுக்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்? அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று தனது படைகளுக்கு உத்தரவிட வேண்டியதுதானே? படை வீரர்களை கட்டுப்படுத்த முடியாவிட்டால் எதற்கு படை நடவடிக்கையை எடுக்க வேண்டும்?

உண்ணாவிரதம் இருந்த‌ திலீபன் 5 சாதாரண கோரிக்கைகளைத்தான் முன் வைத்து அறப்போராட்டம் நடத்தினார். தனி ஈழ கோரிக்கை கூட அவர் அப்போது வலியுறுத்தவில்லை. சிங்களவர்களை தமிழர் பகுதியில் குடியேற்ற வேண்டாம், தமிழர்களை சிங்கள காவலர்கள் துன்புறுத்தக் கூடாது என்பனவற்றைதான் கேட்டார். இந்திய அரசு நினைத்திருந்தால் ஒரு நொடிப்பொழுதில் அவற்றை நிறைவேற்றி திலீபனை காப்பாற்றி இருக்க‌லாம். கண்டு கொள்ளாமல் இருந்து அவரை சாகடித்தார்கள். சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த புலித் தளபதிகளை இலங்கை அரசு பிடித்து வைத்த போது காப்பாற்றச் சொல்லி இந்திய அரசை கெஞ்சிய போதும் காப்பாற்ற முன்வரவில்லை. 12 தளபதிகள் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்தார்கள்.

சீனாவும், அமெரிக்காவும் இலங்கையில் கால் பதிக்க கூடாது என்பதற்காக தமிழர்களை இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும், சோனியாவும் பலியிடுகிறார்கள். அறப்போராட்டம் செய்து கொண்டிருந்த இளைஞர்களுக்கு இந்திரா ஒரு பக்கம் ஆயுத உதவி செய்தார். மறுபக்கம் கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தார். இரட்டை நிலையை கடைப்பிடித்தார். பிறகு ராஜிவ் காந்தி எற்கனவே கொடுத்த ஆயுதத்தை புலிகளிடமிருந்து திரும்ப பிடுங்கினார். நோர்வே அரசு சமாதானம் செய்வது போல நடுநிலைமை வகிக்காமல் அமைதிப்படை என்ற பேரில் அட்டகாசப் படையை அனுப்பி வெறியாட்டம் ஆடினால் பாதிக்கப்பட்டவன் சும்மா விடுவானா? திரும்ப அடித்து விட்டான்?

சிங்களர்கள் மேற்கு வங்காளத்திலிருந்து இலங்கைக்கு சென்று குடியேறியவர்கள். அதனால்தான் என்னவோ வட இந்தியர்கள் சிங்களர்களுக்கே சாதகமாக இருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழ் மீனவர்க‌ளை இலங்கை கடற்படை சுட்டுக் கொல்லும்போது கூட தட்டிக் கேட்பதில்லை. பாகிஸ்தான் சிறையில் இருக்கும் ஒரே ஒரு சரப்ஜித் சிங்கிற்காக மத்திய அரசு எத்தனை தடவை பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தியது? அப்பாவி ஈழ தமிழர்கள் கொல்லப்படுவதை மத்திய அரசு நியாயப்படுத்தி பேசுகிறது.

நேரு குடும்பத்திற்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட இனத்தை பகைத்துக்கொள்வதே வேலையாகப் போய் விட்டது. இந்திரா காந்தி சீக்கிய இனத்தை பகைத்தார். மீண்டும் சோனியா ஒரு இனத்தை பகைக்க தொடங்கி விட்டார்? இதன் விளைவு என்னாகுமோ?. ராஜிவ் காந்தி செய்த தவறுக்கு சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் பிராயசித்தம் தேடியிருக்க வேண்டும். அதை விடுத்து மீண்டும் மீண்டும் அதே தவறை செய்து பழி வாங்க நினைக்கிறார்கள்.

ஒரு வேளை கடைசி ஈழப் போரில் புலித்தலைவர் கொல்லப்பட்டாலும், அவரது ஆபத்துதவிகள் மனித வெடிகுண்டுகளாக மாறி பாய்வார்கள். அடிபட்ட புலி சும்மா இருக்குமா? எதிரியை குறைவாக மதிப்பிட்டு பழி வாங்கும் உணர்ச்சியால் புலி வாலைப்பிடித்த சோனியா இனிவரும் காலங்களில் புலியின் வாய்க்குள் போகாமல் இருந்தால் சரி…

StumbleUpon.com Read more...

பிரபாகரன்:நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதா? தொடர்ந்தும் இங்கு தங்கியிருப்பதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா?

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இன்னமும் வன்னியிலேயே தங்கியுள்ளார் - கோத்தபாய    
[ வா.கி.குமார் ]   
செவ்வாய், 17 பெப்பரவரி 2009 21:36

வடக்கில் மனிதாபிமானப் போர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் படையினர் பொதுமக்களுக்கு எவ்விதச் சேதங்களும் ஏற்படாத வகையிலேயே தமது இராணுவ முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

 

புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முகமாக அப்பகுதிகளை நோக்கி படையினர் மறைமுகமாகக்கூட தாக்குதல்களை நடத்துவதிலிருந்து விலகியுள்ளனர்.

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் சுமார் 142 கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டள்ள புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் 50ஆயிரத்துக்கும் 70ஆயிரத்துக்கும் இடைப்பட்ட தொகையிலான பொதுமக்களே தற்போதுள்ளனர்.

 

அங்கு பொதுமக்களுக்கு ஏற்படும் இழப்புக்கள் தொடர்பாக மிகைப்படுத்தப்பட்டு கூறப்படுகின்றது. உயர்ந்தபட்ச பிரசாரத்தை மேற்கொள்ளும் நோக்கிலேயே விடுதலைப் புலிகளும் அவர்களது அனுதாபிகளும் மிகைப்படுத்தப்பட்ட தரவுகளை வெளியிட்டு வருகின்றனர். பொதுமக்களுக்கு இழப்புக்கள் இருந்தபோதிலும் அவை பெருமளவில் இல்லை.

 

அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்னமும் வன்னியிலேயே தங்கியுள்ளார்.

 

அவர் இதுவரையில் நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை. வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டுள்ள தமிழ் மக்களின் இந்த தலைவிதிக்கு பிரபாகரனே முழுப் பொறுப்பும் கூறவேண்டும்.

 

பிரபாகரன் அவ்வியக்கத்தின் ஏனைய தலைவர்களுடன் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதா? தொடர்ந்தும் இங்கு தங்கியிருப்பதா? அல்லது தற்கொலை செய்துகொள்வதா? என்பது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை.

 

இந்த தீர்மானங்களில் ஒன்றை எடுப்பதற்கான கால அவகாசம் தேவை என்பதாலேயே பொதுமக்கள் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.
 

http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12227-2009-02-17-20-36-48.html

StumbleUpon.com Read more...

இந்திய ஊடகங்களின் ஓர வஞ்சனை...ஒரு தமிழ் நாளேடு கூட படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை.

 
 
இலங்கை வன்னியில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான பிஞ்சுக்குழந்தைகளும், தாய்மார்களூம் வித விதமான இரசாயன குண்டுகள் வீசப்பட்டு கொல்லப்படுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு தமிழ் நாளேடு கூட இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கையை வெளியிடுவதேயில்லை.
காஸாவில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கொல்லப்பட்ட போது பலி எண்ணிக்கை 1000ஐ தொட்டு விட்டது, 1100 ஆகி விட்டது, 1300ஐ தொட்டு விட்டது என்று தினமும் முதல் பக்கத்தில் வெளியிட்டார்கள்.
கடந்த இரு மாதங்களில் வன்னியில் மட்டும் 2000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு இந்த விபரங்கள் தெரியவருவதில்லை.
இலங்கை இராணுவம் வெளியிடும் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு வெளியிடுகிறார்கள். தற்கொலை குண்டு தாக்குதல் என்றால் முதல் பக்கத்தில் வெளியிட்டு பெரிய தர்க்கமே நடக்கிறது. ஏன் பொதுமக்கள் பலி எண்ணிக்கையையும் வெளியிட வேண்டியதுதானே?
ஜூனியர் விகடன், நக்கீரன் போன்ற‌ வார இதழ்கள் பெரும் பங்களிப்பை செய்தாலும் அவற்றை குறைந்தளவு பேர்தான் படிக்கின்றனர்.
நாளேடுகளின் நிலை இப்படி என்றால் தொலைக்காட்சிகளிலோ அதுவும் இல்லை. மக்கள் தொலைக்காட்சி தவிர மற்றவற்றில் எதுவுமே சொல்வதில்லை.
தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த 8 பேரின் கானொளியை மட்டும் திரும்ப திரும்ப போட்டுக் காண்பித்தார்கள். CNN-IBN, TIMES NOW போன்ற தொலைக்காட்சிகலோ இன்னமும் மும்பை தாக்குதலை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.
மங்களூர் பாரில் இளம்பெண்கள் ராம் சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டதில் பெண்ணுரிமை பறிபோய் விட்டதாக கூப்பாடு போடுபவர்களுக்கு கைக்கெட்டும் தூரத்தில் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு வீடியோ எடுப்பது தெரியாமல் போய்விட்டதா? அல்லது தமிழன் என்பதால் இளக்காரமாய் போய் விட்டதா?
தமிழ் இணையதளங்களில் வெளிவருகிற செய்திகளை பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறவர்களுக்குத்தான் உண்மை நிலவரம் தெரிகின்றது. அவர்களில் ஒரு சிலர் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். மற்ற தமிழ்நாட்டு பொதுமக்களுக்கோ உண்மையில் இலங்கையில் என்னதான் நடக்கிறது என்பதே தெரியாமல் உள்ளது.
தமிழக தொலைக்காட்சிகளும், நாளேடுகளும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமாக இருப்பதால் உண்மைச் செய்திகளை வேண்டுமென்றே இருட்டடிப்பு செய்கிறார்கள்.
கிடைக்கின்ற‌ ஒரு சில செய்திகளை மட்டும் வைத்தே தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. உண்மை நெருப்பை வெகு காலம் மறைக்க முடியாது. உண்மை ஒரு நாள் வெளி வந்தே தீரும்.
ஒட்டு மொத்த உலகமே தமிழினத்திற்கு எதிராக துரோகம் செய்யும் போது ஊடகங்களின் இந்த துரோகத்தையும் தாங்குவதற்குறிய மன வலிமையை நமக்கு இறைவன் தான் தர வேண்டும்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dPj060ecGG7h3b4P9EO4d2g2h2cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

'வீசுங்கள் ஒரே குண்டு!' முகத்தில் அறையும் முல்லைத்தீவு தமிழ்மகனின் உள்ளக்குமுறல்: ஜுனியர் விகடன்

 
 
தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்!  நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்திரவதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். 
ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து இலட்சம் தாய்த் தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பொஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் காட்டுகிறது.
எண்பதுகளில் இந்திரா காந்தி அம்மையார் இலங்கை அரசிடம் நடந்துகொண்ட விதமும் இன்றைய மன்மோகன் அரசு இலங்கை அரசிடம் நடந்துகொள்ளும் வித்தியாசத்திலும்தான் ஆயிரமாயிரம் ஈழத் தமிழ் மக்களை கொன்று குவிக்கிறது சிங்களப் பேரினவாதம். இந்தியாவின் அணுகுமுறையைப் பார்த்த சர்வதேச சமூகமோ தட்டுத் தடுமாறி இலங்கையிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. தட்டிக் கேட்கவேண்டிய இந்தியாவோ... தொழில்நுட்ப உதவிகளை மட்டும்தான் இலங்கைக்கு வழங்குகிறோம் என்று சொல்லி, போரை முட்டுக்கொடுத்து ஊக்கு விக்கிறது.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசியல்வாதிகளுக்கு ஈழ மக்களாகிய நாங்கள் ஓட்டு வங்கியாக மாறிப் போனோம். ஒரு பக்கம் கருணாநிதி எங்களை கைகழுவிவிட்டார். இன்னொரு பக்கம் ராமதாஸ், வைகோ, திருமாவளவன் போன்றவர்கள் தேர்தல் அரசியலில் சிக்கி தங்களின் எதிர்கால அரசியல் வாழ்வு குறித்து உணர்வுகளை முழுமையாக வெளிப்படுத்த முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
எப்போதும் எங்கள்பால் இரக்கம் கொண்ட தாய்த் தமிழர்களாகிய நீங்களோ எங்களுக்காகக் கண்ணீர் விடுகிறீர்கள். ஒரு துளிக் கண்ணீர், எங்கள் போரை நிறுத்திவிடாது. உங்கள் இரக்கமும் கண்ணீரும் எங்கள் கல்லறைகளின் மீதுதான் விழுந்து கொண்டிருக்கிறது. அது இடம் மாறி, எங்களில் உயிரோடிருப்பவர்களை ஈரப்படுத்தினால் மட்டுமே நாங்கள் இனி ஜீவித்திருக்க முடியும். இங்கு என்ன நடக்கிறது என உங்களுக்குத் தெரியுமா?
நாங்கள் வன்னிப் பிரதேசத்து மக்கள். முதலில் எங்களுக்கும் தமிழீழத்தின் ஏனைய பகுதி மக்களுக்குமான வித்தியாசங்கள் உங்களுக்குத் தெரிந்தால் மட்டுமே, இங்கே நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலையின் கோரத்தை நீங்கள் அப்பட்டமாகப் புரிந்துகொள்ள முடியும். தமிழீழ விடுதலைப் போரின் ஆரம்ப காலம் தொட்டே வன்னிப் பகுதிதான் இதயப் பகுதி. வடக்கு, கிழக்கின் எல்லாத் தமிழ்க் குடும்பங்களும் ஈழ விடுதலைப் போரில் தங்களை இணைத்துக் கொண்டிருந்தாலும், அங்குள்ள மக்கள் எல்லாக் காலத்திலும் அரசப் படைகளின் கண்காணிப்புக்குள்ளேயே வாழ நேர்ந்து வந்திருக்கிறது.
ஆனால், வன்னி மக்களை மட்டும் புலிகளிடமிருந்து வேறுபடுத்திப் பார்த்துவிட முடியாது. ஒவ்வொரு வன்னிக் குடும்பமும் ஒரு புலிக் குடும்பமே. நாங்கள் யாரும் புலியாகப் பிறந்ததில்லை. புலியாகவேண்டும் என வளர்ந்ததும் இல்லை. சிங்களவன் எழுதி வைத்த தலைவிதியே தவிர்க்க முடியாமல் எங்கள் கைகளில் துப்பாக்கியைத் திணித்தது. தங்கை, தம்பி என கனவுகளோடு உங்களைப் போல வாழவேண்டிய வயதில் எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகிக் கொண்டிருக்கிறோம்.
கிளிநொச்சியை சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது நாங்கள் முல்லைத்தீவுக்குப் போனோம். எங்கள் உடைமைகளையும், கால்நடைகளையும், குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு போனோம். புலிகள், எங்களை முல்லைத்தீவுக்குக் கடத்திச் சென்றுவிட்டதாக சிங்கள இராணுவம் சொன்னது. ஒருவேளை... புலிகளோடு நாங்கள் செல்லாமல் கிளிநொச்சியில் இராணுவத்தை வரவேற்றிருந்தால், இன்றைக்கு வவுனியாவிலும் மன்னாரிலும் என்ன நடக்கிறதோ, அது எங்களின் தாய்வீடான கிளிநொச்சியிலேயே நடந்திருக்கும்!
நாங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயரத் தொடங்கியது ஒரு மழைக்காலத்தில். சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் சேறும் சகதியுமான சதுப்பு நிலத்துக்குள் சிக்கி, கிட்டத்தட்ட பத்து நாட்கள் தடைப்பட்டபோது நாங்கள் பரந்தன் முல்லைத்தீவு ஏ-35 நெடுஞ்சாலையோரமாக குடும்பம் குடும்பாக இடம்பெயர்ந்தோம். தருமபுரம், விசுவமடு, உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு என ஒவ்வொரு கிராமமாகப் பட்டினியாகப் பயணமானோம். ஒவ்வொரு கிராமத்தையும் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்தது.
எந்த இடத்தை பிடிக்கப் போகிறார்களோ, அந்த இடத்தைப் பாதுகாப்பு வலயமாக (safty zone) அறிவிக்கிறது சிங்கள இராணுவம். உண்மையில் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இலங்கை அரசு உருவாக்குகிற இடங்களுக்குள் செல்கிற மக்களின் கதி என்ன தெரியுமா? நரிவளைக்குள் போய் சிக்கிக் கொண்ட முயல்களுக்கு என்ன கதி நேருமோ... அதே கதிதான் எங்களுக்கும் நேர்ந்திருக்கிறது. ஒவ்வொரு இடமாக ஓடினோம். ஒதுங்க ஒரு இடம் கிடைத்தால் ஒதுங்கினோம். கிடைத்ததை உண்டோம்.
வள்ளிபுனம், தேவிபுரத்துக்குப் போனோம், (இவை இரண்டும் மக்கள் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப் பட்ட இடங்கள்) அங்கிருந்தும் கடைசியில் ஓட வேண்டியதாயிற்று. ஓடிஓடி இப்போது நாங்கள் வந்து நிற்பது முல்லைத்தீவின் கடைசிக் கடலோர சிறு நகரமான முள்ளியவாய்க்காலில்! இலட்சக்கணக்கான மக்கள் இரணைப்பாலையில், புதுக்குடியிருப்பில், தேவிபுரத்தில், உடையார்க்கட்டில் என போக்கிடம் தெரியாமல் பைத்தியங்களைப் போல அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது, கிளிநொச்சியிலிருந்து நாங்கள் எடுத்து வந்த எந்தப் பொருளும் எங்களுடன் இல்லை. அது மட்டுமல்ல... ஒரு குடும்பத்தில் இன்னும் எஞ்சி யிருப்பது ஒரு சில உயிர்கள் மட்டுமே. கண்ணெதிரில் குழந்தையைத் துளைத்துச் சாய்க்கிறது குண்டு. கண்ணெதிரில் தங்கை அடிபட்டு சாய்வதைப் பார்த்த ஏனைய இரண்டு பிள்ளைகளும் தங்கையைப் பிடிக்கக் கதறியபடி பாய்கிறார்கள். பெற்றவளோ பாய்கிற இரண்டு பிள்ளைகளையும் தடுத்து நிறுத்தி... இழுத்துக் கொண்டு ஓடுகிறாள். தன் இளைய குழந்தை வீதியில் செத்துக் கிடக்கிறாள். சாய்கிற குழந்தையை எடுக்கப் போனால், இருக்கிற குழந்தைகளையும் இழந்து விடுகிற கோரம்!
முல்லைத்தீவு முழுக்க வீதியோரம் புதைக்க ஆளில்லாமல் சிதறிக்கிடக்கின்றன, ஆயிரக்கணக்கான உடல்கள். அத்தனையும் பாதுகாப்பு வலயத்துக்குள் வீசப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளால் எரிக்கப்பட்ட குழந்தைகள், பெண்கள், ஆண்கள், தமிழர்கள் என்பதால் எரிந்து சாம்பலாகிக் கிடக்கிறார்கள். இப்போது எல்லாவற்றையும் இழந்து விட்டோம். உறவென்று சொல்லிக் கொள்ளவோ, தஞ்சமடையவோ எங்களுக்கென்று ஒரு இடமில்லை. இனி கடலில் குதித்துச் சாக வேண்டியதுதான் மீதி. ஒருவேளை, அப்படிக் குதித்தால் எங்கள் பிணங்கள் தாய்த் தமிழக உறவுகளே உங்களின் முதுகுப்புறத்தில்தான் வந்து ஒதுங்கும்.
கடைசியில், எதிரியிடமே சரணடைந்தால்என்ன என்று விசுவமடுவில் நாங்கள் கைகளைத் தூக்கினோம். யாழ்ப்பாணத்தையும், மட்டக்களப்பையும் சிங்கள இராணுவம் கைப்பற்றியபோது, அங்குள்ள மக்களை எப்படி அவரவர் இல்லத்தில் குடியமர்த்தி மொத்தமாக அந்தப் பிரதேசங்களை திறந்தவெளி சிறைச்சாலை யாக்கினார்களோ... அப்படி எங்களையும் எங்கள் பூர்வீக நகரமான கிளிநொச்சிக்கு அனுப்புவார்கள் என நம்பினோம்.
ஆனால், நாங்கள் எங்கு சரணடைந்தோமோ... அந்த இடத்திலேயே எங்கள் பிள்ளைகள் இரு வேறாகப் பிரிக்கப்பட்டார்கள். குழந்தைகள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என வகை பிரித்தார்கள். குழந்தைகளையும், முதியவர்களையும் எங்கோ கொண்டு சென்றார்கள். இளைஞர்களையும் இளம் பெண்களையும் சிறப்பு முகாம் என அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவுக்குக் கொண்டு சென்றார்கள். எத்தனை பேர் சரணடைந்தார்கள் என்றோ, அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றோ எந்த விவரமும் யாருக்கும் தெரியாது.
கிளிநொச்சியில் ஒரு குடும்பம்கூட குடியமர்த்தப்படவில்லை. ஆனால், வவுனியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களில் பெரும்பாலான இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். ஆண்களைச் சுடலாம். பெண்கள்... அவர்கள் சிங்களச் சிப்பாய்களின் காமவேட்டைக்குக் கிடைத்த இரைகளல்லவா? அதனால் சிறப்பு முகாம்கள் என்னும் பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் வதை முகாம்களில் சிங்களக் காடையர்களுக்கு தினம்தோறும் இரையாகிறார்கள். தற்கொலை செய்துகொள்ளும் உரிமைகூட அவர்களுக்கு மறுக்கப்பட்டிருக்கிறது.
அதுமட்டுமா... கர்ப்பிணித் தமிழ் பெண்களை மிரட்டி கருக்கலைப்பு பயங்கரங்களை நிகழ்த்தி வருகிறது இலங்கை இராணுவம். என் சமூகத்து மக்களுக்கு நிகழ்த்தப்படும் இத்தனை கொடூரங்களையும் கண்ணெதிரே கண்டும் இந்த உயிர் இருக்கவும்தான் வேண்டுமோ?
தாய்த் தமிழக உறவுகளே! அய்யா கலைஞரே... என்ன செய்யப் போகிறீர்கள்?
வடக்கு கிழக்குக்கு அதிகாரப்பரவல் பற்றிப் பேசும் நேரம் இதுவல்ல... தமிழீழம் பற்றிப் பேசும் நேரம் இதுவல்ல. சகோதரப் படுகொலைகள் பற்றி பேசும் நேரம் இதுவல்ல.
உங்களால் மூன்று விஷயங்கள் செய்ய முடிந்தால் செய்யுங்கள்!
ஒன்று, தமிழகத்திலிருந்து ஒரு குழுவை அனுப்பி வீதிகளெல்லாம் கொத்துக் கொத்தாகச் செத்துக் கிடக்கும் ஈழத் தமிழனின் பிணங்களைப் புதையுங்கள்.
இரண்டு, வன்னிப்பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை அகதிகளாகத் தமிழகத்துக்கு அழைத்து மிச்சமிருக்கும் உயிர்களைக் காப்பாற்றுங்கள். அது முடியவில்லையென்றால்...
மூன்றாவதாக, ஹிரோஷிமாவில் அமெரிக்கா வீசிய குண்டைப்போல ஒரு குண்டை எங்கள் மீது வீசச் செய்யுங்கள். நாங்கள் மொத்தமாக அழிந்து போகிறோம்.
தமிழக மக்களே! மாபெரும் மக்கள் போராட்டங்களின் மூலம் இந்திய சரித்திரத்தை மாற்றி எழுதிய மாமனிதர்களே! ஈழத்தின் வரலாற்றை மாற்றி எழுத வீதிக்கு வந்து போராடுங்கள். போராட்டங்களைச் சடங்குகளாக மாற்றாதீர்கள். நீங்கள் நடத்தப் போகும் போராட்டங்களில்தான் எங்களின் எஞ்சிய உயிர்கள் மிஞ்சியிருக்கின்றன. நான் புலிகளுக்காக போராடச் சொல்லவில்லை. போரை நிறுத்தவும் சிங்களப் பேரினவாதிகளின் வதை முகாம்களுக்குள் சிக்கியிருக்கும் பல்லாயிரம் தமிழ் உயிர்களையும் காப்பாற்றுவதற்காகவும் கெஞ்சுகிறேன்.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0dPj060ecGG773b4P9EW4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

கடற்புலிகளின் கட்டமைப்புகள் - மிரண்டு போயுள்ள கடற்படை!

 

ltte_sea_tigersமுல்லைத்தீவுக் கடற்பரப்பில் கடற்புலிகள் மற்றொரு அதிவேகத் தாக்குதல் படகை கடந்த வாரம் மூழ்கடித்திருக்கிறார்கள்.கடந்த 8 ஆம் திகதி முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவில் -ஆழ்கடற் பரப்பில் இந்தத் தாக்குதல நடைபெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக கடந்த மாதம் 30 ஆம் திகதி முல்லைத்தீவுக் கடலில் மற்றொரு தாக்குதலில் கடற்படையினரின் 'அரோ' ரகத்தைச் சேர்ந்த இரண்டு கரையோர ரோந்துப் படகுகள் கடற்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டன.

அதற்கு முன்பாக கடந்த 19 ஆம் திகதிஇ கடற்படையின்  P-434 இலக்க அதிவேகத் தாக்குதல் படகு கடற் கரும்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல்கள் குறுகிய காலத்துக்குள் நடந்திருப்பவை.

கடற்புலிகளின் பலத்தை முறியடிப்பதற்கு கடல் நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றுஇ தரைவழி நடவடிக்கைகளை இராணுவம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தான் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்கின்றன.

மூன்று வாரங்களுக்குள் கடற்படையின் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளும்இ இரண்டு அரோ ரக கரையோர ரோந்துப் படகுகளும் மூழ்கடிக்கப் பட்டிருக்கின்றன.
கடற்புலிகளின் பலம் பற்றிய கேள்விகளை இந்தத் தாக்குதல்கள் எழுப்ப
வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை.

இப்போது இந்தத் தாக்குதல்கள் பற்றியும் இவற்றின் ஒட்டு மொத்த விளைவுகள் பற்றியும் பார்க்கலாம்.

முதலாவது தாக்குதல் கடற் கரும்புலிகள் இருவரால் நடத்தப்பட்டது.கரையோரத்தில் இருந்து சுமார் 9 கடல் மைல் தொலைவில் - கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகு ரோந்து சென்று கொண்டிருந்த போது தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.

இரவு 11.28 மணியளவில் கரும்புலிகளின் தாக்குதல் படகுஇ கடற்படைப் படகுக்கு அருகே சென்று வெடிக்கும் வரை - கடற்புலிகளின் நகர்வு பற்றி அவர்கள் அறிந்திருக்கவேயில்லை.இந்தத் தாக்குதலில் கடற்படையின் 4 ஆவது இலக்க அதிவேகத் தாக்குதல் படகு முற்றாகச் சேதமடைந்ததுடன்இ படையணியின் கட்டளை அதிகாரியான லெப். கொமாண்டர் அபேசிங்கவும் பலியானார்.

அத்துடன் லெப். பெரேரா மற்றும்  P-434 கடற்படைப் படகின் கட்டளை அதிகாரியான லெப். சம்பத் உள்ளிட்ட மொத்தம் 19 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.கடற்புலிகளின் இந்தத் தாக்குதலை அடுத்து கடற்படை முழு நேரமும் உசார் நிலையில் இருக்குமாறு பணிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த 30 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில்இ சுண்டிக்குளம் கடற்பரப்பில் கடற் கரும்புலிகளின் படகு ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.
அது கடற்படையினரின் கண்ணில் பட்டுவிட அதைத் தாக்கியழித்தனர். இதில் இரண்டு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைய நேரிட்டது.ஆனால்இ அதேதினம் முல்லைத்தீவுக் கடலில் ரோந்து சென்ற கடற்படையின் சிறப்புக் கொமாண்டோ அணியினரின் 'அரோ' கரையோர ரோந்துப் படகுகளை கடற்புலிகள் வழிமடக்கித் தாக்குதல் நடத்தினர்.

15 வரையான கடற்படைப் படகுகள் கொண்ட அணியை வழிமறித்த இந்தத் தாக்குதல் காலை 10 மணியளவில் இடமபெற்றிருந்தது.இதில் இரண்டு 'அரோ' வகை கரையோர ரோந்துப் படகுகள் மூழ்கடிக்கப் பட்டதாகப் புலிகள் கூறியிருந்தனர்.ஆனால்இ கடற்படையோ இது பற்றி மூச்சுக் கூட விடவில்லை.இதன்பின்னர் தான் கடந்த 8 ஆம்; திகதி முலலைத்தீவுக் கடலில் மற்றொரு அதிகவேகத் தாக்குதல் படகைக் கடற் கரும்புலிகள் மூழ்கடித்திருக்கிறார்கள்.

இந்தச் சண்டை 8 ஆம் திகதி அதிகாலை 5.30 மணி முதல் 6 மணி வரை நடந்திருகிறது. கடற் கரும்புலிகளோடு கடற்புலிகளின் அணியும் சண்டையில் பங்கேற்றிருக்கிறது.இதில் கடற்படையின் ஒரு 'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப் பட்டதாகவும்இ மற்றொன்று பலத்த சேதத்தக்கு உள்ளானதாகவும் புலிகள் கூறியுள்ளனர்.

இந்தப் படகில் இருந்த 15 கடற்படையினர் கொல்லப் பட்டதாகவும்இ 4 கடற் கரும்புலிகள் வீரச்சாவடைந்ததாகவும் புலிகளின் தகவல்கள் கூறுகின்றன.இதை ஒரு வலிந்த தாக்குதல் என்று புலிகள் கூறியுள்ளனர்.ஆனால்இ முல்லைத்தீவுக் கரையில் இருந்து 52 கடல்மைல் தொலைவுக்குச் சென்று அவர்கள் வலிந்த தாக்குதலை நடத்தியிருப்பதாக கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களையும் எழுப்பியிருக்கிறது.

ஏனெனில்இ கடற்படை முல்லைத்தீவைச் சுற்றி இப்போது நான்கு கட்டங்களாகப் பாதுகாப்பு வலயங்கள் அமைத்து தமது வௌ;வேறு விதமான 50 இற்கும் அதிகமான போர்க்கலங்களை நிறுத்தியிருக்கிறது.

அதுவும்இ புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கரையோரப் பகுதியானது - சாலைக்குத் தெற்கேயும் வட்டுவாகலுக்கு வடக்கேயுமாக 15 கி.மீ பகுதிக்குள் மட்டுப்படுத்தப் பட்டிருக்கிறது.இந்தநிலையில் கடற்படையால் கடற்புலிகளின் நகர்வுகளைத் தடுப்பது இலகுவான காரியமாகவே இருக்கிறது.ஆனாலும்இ கடற்புலிகள் முல்லைத்தீவுக் கடலில் அடுத்தடுத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடற்படையின் 4 கட்டப் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் முதலாவதாக கரையோர ரோந்துப் படகுகள் மூலமும்இ அடுத்ததாக அதிவேகத் தாக்குதல் படகுகள் மூலமும்இ அதையடுத்து பீரங்கிப் படகுகள் மூலமும் கண்காணிப்பு மேற்கொள்ளப் படுகிறது.

கடைசியும் நான்காவதுமான கண்காணிப்பு வலயத்துக்கு ஆழ்கடல் ரோந்துப் படகுகள் பயன்படுத்தப் படுகின்றன.கடற்புலிகள் வலிந்த தாக்குதலை நடத்துவதற்கு கரையோர ரோந்துப் படகுகள் அதிகளவில் கரைக்கு நெருக்கமாகவே நடமாடுகின்றன.

அதற்கடுத்து கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவு வரையில் அதிவேகத் தாக்குதல் படகுகளின் நடமாட்டம் இருக்கிறது.அதற்கு அப்பால் பீரங்கிப் படகுகள்இ ஆழ்கடல் ரோந்துப் படகுகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கடந்து சென்று கடற்புலிகள் வலிந்த தாக்குதல் நடத்த முற்படுவார்களா? என்ற கேள்வி எழுகிறது.

கடற்புலிகளின் நோக்கம் நிச்சயமாக ஒரு வலிந்த தாக்குதலுக்கான பயணமாக இருக்கவில்லை என்பதே உண்மை.அவர்கள் கடல்வழி விநியோகப் பயணங்களை மேற்கொண்டிருக்கலாம் என்றே கருதப்படுகிறது. தமது விநியோக நடவடிக்கைக்குக் குறுக்கே கடற்படையினர் வந்தபோது அந்தப் படகுகளைத் தாக்கி அழித்திருக்கின்றனர்.

கடற்புலிகளை 15 கி.மீ நீளமான கரையோரத்துக்குள் முடக்கியிருக்கின்ற போதும் - அவர்களின் கடல்வழி நடவடிக்கைகைகள் –விநியோகங்கள் - தாக்குதல்களை முடக்க முடியாத நிலை காணப்படுகிறது என்பதே உண்மை.கடற்புலிகளின் சிறப்புத் தளபதியான கேணல் சூசை சில மாதங்களுக்கு முன்னர் ஒரு நிகழ்வில் பேசிய போது - தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் இறுதி;ச் சண்டைகள் கடலிலேயே நடைபெறும் என்று கூறியிருந்தார்.

அவர் கூறியபோது கிளிநொச்சி புலிகளிடம் இருந்தது. வடமராட்சி கிழக்குஇ முல்லைத்தீவு என்பன புலிகளிடம் இருந்தன.அந்த உரையை இப்போதைய நிலையுடன் ஒப்பிட முடியா விட்டாலும் - இப்போதைய சண்டைகளை இறுதிப் போராக அரசதரப்புச் சொல்லிக் கொண்டிருக்கின்ற நிலையில் கடலில் சண்டைகள் தீவிரமடையத் தொடங்கியிருக்கின்றன.

ஒரு காலத்தில் கடற்புலிகளின் கரும்புலித் தாக்குதல்களைத் தடுத்து விடுவோம். இனிமேல் அவர்கள் நெருங்கவே முடியாது என்று மார்தட்டிக் கொண்டிருந்த கடற்படை அண்மைக் காலத்தில் இரண்டு அதிவேகத் தாக்குதல் படகுகளை கரும்புலித் தாக்குதல்களில் பறிகொடுத்திருக்கிறது.

முல்லைத்தீவுக் கடலில் கடைசியாக நடந்திருக்கின்ற சண்டையின் போது கடற்படையினர் கரும்புலிகளின் ஒரு படகை மூழ்கடித்திருப்பது உண்மை. ஆனால்இ மற்றைய படகு கடற்படைப்படகு மீது மோதி வெடித்து அதை நாசப்படுத்தியிருக்கிறது.
ஆனால்இ கரும்புலிகளின் ஒரு படகு வெடித்துச் சிதறும் காணொளிக் காட்சியைத் தான் கடற்படை  வெளியிட்டிருக்கிறது.

இப்போது கடற்படைக்கு ஒரு பெரிய நெருக்கடி உருவாகியிருக்கிறது.கடற்புலிகளின் துணைத் தளபதி விநாயகம்இ தாக்குதல் தளபதி சின்னக்கண்ணன் மற்றும் சிலர் சாலையில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டு விட்டனர்.கடற்புலிகளின் கடைசித் தளமான சாலையும் கைப்பற்றப்பட்டு விட்டது. உடையார்கட்டில் இருந்த புலிகளின் நீர்மூழ்கிப் படகு தயாரிப்பு தொழிற்சாலை கைப்பற்றப்பட்டு விட்டது. அங்கிருந்த நீர்மூழ்கிப் படகு ஒன்று கைப்பற்றப்பட்டு விட்டது.

ஆனாலும்இ கடற்புலிகள் தாக்குகிறார்கள் என்று எப்படி தகவல்களை வெளியே விடுவதென்ற சிக்கல் படைதரப்புக்கு இருந்து கொண்டிருக்கிறது.இதனால் தான் முல்லைத்தீவுக் கடலில் நடக்கின்ற சண்டைகள் பற்றிய தகவல்கள் முடிந்த வரைக்கு மறைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

அதிலும்இ புலிகள் தரப்பு ஏதாவது செய்தியை வெளியே கசிய விட்டால் மாத்திரமே பாதுகாப்புத் தரப்பும் அந்தச்; சண்டை பற்றிய தகவலை வெளியிடும் போக்கு அவதானிக்கப் பட்டிருக்கிறது.

கடற்புலிகள் முடக்கப்பட்டே விட்டார்கள் என்ற கதை கட்டப்பட்டுக் கொண்டிருந்த போது தான் கடைசியாக 'சுப்பர் டோறா' மூழ்கடிக்கப் பட்டிருக்கிறது.கடற்புலிகள் இன்னமும் பலமிழந்து விடவில்லை என்பதைஇ அவர்களின் விநியோக - தாக்குதல் செயற்பாடுகளை படைத்தரப்பினால் முடக்க முடியாதிருப்பதைக்;; கொண்டே உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது.

இந்தநிலையில் தான் இரணைப்பாலையில் நடத்தப்பட்ட விமானக்குண்டு வீச்சில் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கொல்லப்பட்டு விட்டதாக படைதரப்பு அறிவித்தது.

பின்னர் ஒரு கட்டத்தில் அவர் காயமடைந்திருக்கலாம் என்று கூறியது. கடைசியாகக் காணாமற் போய்விட்டதாகவும் சொல்லியது.ஆக எதைச் சொல்வது? எப்படிச் சொல்வது? ஏதைச் சொல்லாமல் மறைப்பது என்ற குழப்பம் படைத்தரப்புக்கு உருவாகத் தொடங்கி விட்டது.

கடற்புலிகளின் சில தளபதிகள் சண்டைகளில் மரணித்திருக்கின்ற போதும் அவர்களின் செயற்பாடுகளில் தொய்வோ - தடங்கலோ ஏற்படவில்லை என்பது உறுதியாகவே தெரிகிறது.

அவர்களின் இந்தப் பலம் தான் கடற்படையை - அரசாங்கத்தை அதிர்ச்சியோடு பார்க்க வைத்திருக்கிறது.

அதுமட்டுமன்றி அவர்கள் கடல் மட்டத்தோடு பயணிக்கும் கரும்புலித் தாக்குதல் படகுகளை வடிவமைத்திருக்கின்ற முறையும்இ நீர்மூழ்கிப் படகை வடிவமைத்திருக்கின்ற தொழில்நுட்பமும்; படைத் தரப்பை ஆச்சரியத்தின் விளிம்புக்கே கொண்டு சென்றிருக்கிறது.

சொந்தமான தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கடற்புலிகள் தம்மை எந்தளவுக்கு வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது தான்; பலருக்கும் தெரியவந்திருக்கிறது.

உலகில் கடற்படை ஒன்றை வைத்திருக்கின்ற போராளி அமைப்பாக கருதப்பட்ட புலிகள் - நீர்மூழ்கி தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்இ உற்பத்தி செய்யும் அமைப்பாக இருப்பது உறுதியாகியிருப்பதானது சர்வதேசத்தையே ஆச்சரியத்தில்; உறைய வைத்திருக்கிறது.

சர்வதேச நாடுகளின் நிதியுதவியிலும்இ அவர்களின் ஆயுதங்களையும் நம்பி சண்டையை நடத்திக் கொண்டிருக்கும் அரசபடைகளோடு ஒப்பிடும் போது - கடற்புலிகளின் வளர்ச்சியும் அவர்களின் செயற்பாடுகளும் அரசதரப்பை மிரள வைப்பதில் ஆச்சரியமில்லை.

இதனால் தான் கடற்புலிகளுக்கென்று ஒரு சிறு கடற்பகுதியையேனும் விட்டு வைக்கக் கூடாதென்ற நோக்கில் தரைப்படையினர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இப்போது கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு உகந்த பகுதியாக இருப்பது 15 கி.மீ கடலோரப் பகுதியே என்ற போதும் இதையும் கைப்பற்றும் முயற்சிகளில் படைத்தரப்பு இறங்கியிருக்கிறது.

ஒரு புறத்தில் 55 ஆவது டிவிசன். மறுபுறத்தில் 59 ஆவது டிவிசன். இந்த இரண்டின் நடுவே கடற்புலிகளின் படகுப் பயணங்கள் தொடர்கின்றன.

கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை கூறியது போன்று - கடலில் சண்டைகள் நடக்கும் வரைக்கும் - கடற்புலிகளின் பயணங்கள் தொடரும் வரைக்கும் தரையில் புலிகளின் நடவடிக்கைகளை தடுக்கவோ - நிறுத்தவோ - அழிக்கவோ முடியாது.

நன்றி: நிலவரம்

 

http://www.nerudal.com/nerudal.647.html

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP