சமீபத்திய பதிவுகள்

மீண்டும் க‌ள்ள‌ச்சாராய‌‌ம்

>> Friday, May 23, 2008

கர்நாடகா : மீண்டும் க‌ள்ள‌ச்சாராய‌‌ம் குடித்த 4 பேர் சாவு
பெங்களூரு (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 23 மே 2008   ( 12:42 IST )
கர்நாடமாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று மீண்டும் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் பலியானார்கள் ; 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த வாரம் கள்ளச்சாராயம் அருந்திய 100 க்கும் அதிகமானோர் பலியான நிலையில், கர்நாடகத்தை ஒட்டியுள்ள ஓசூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 45 பேர் பலியாகினர்.

த‌மிழகம் மற்றும் கர்நாடகாவில் கள்ளச்சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 184 ஆக உய‌ர்‌ந்து‌ள்ளதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மீள்வதற்குள்ளாகவே , கர்நாடாகாவில் இன்று மீண்டும் கள்ளச்சாராயம் அருந்திய 4 பேர் மரணமடைந்துள்ளதாகவும், 15 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இன்று இந்த கள்ளச்சாராய சாவு நிகழ்ந்திருப்பதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது.

இது தொடர்பான மேலும் விவரம் எதிர்பார்க்கப்படுகிறது.
http://in.tamil.yahoo.com/News/National/0805/23/1080523015_1.htm

StumbleUpon.com Read more...

பாகிஸ்தான் - Pakistan - புள்ளி விபரங்கள்

 pakistanflag (1K) பாகிஸ்தான் - புள்ளி விபரங்கள்:
அதிகாரபூர்வ பெயர் இஸ்லாமிய பாகிஸ்தான் குடியரசு
Islamic Republic of Pakistan
இருக்குமிடம் தெற்கு ஆசியா, அரபிக்கடலின் எல்லை, ஆனால் இந்தியாவின் கிழக்கில் மற்றும் ஈரான் & ஆப்கானிஸ்தான் மேற்கில், சீனாவின் வடக்கில்
பூகோள குறியீடு 30 00 வடக்கு, 70 00 கிழக்கு
மொத்தப் பரப்பு 803,940 சதுர கி.மீ.
மொத்த நிலம் 778,720 சதுர கி.மீ.
கடற்கரை 25,220 சதுர கி.மீ.
பணம் (கரன்சி) பாகிஸ்தான் ருபி (PKR)
அண்டை நாடுகள் (எல்லை) ஆப்கானிஸ்தான் 2,430 கி.மீ., சீனா 523 கி.மீ., இந்தியா 2,912 கி.மீ., ஈரான் 909 கி.மீ.
தலைநகர் லண்டன்

சில துளிகள்:
1947ல் இந்தியாவை விட்டு பிரிட்டிஷார் வெளியேறும் சமயம் இந்தியாவிலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பிரித்து உருவாக்கிய நாடு. இதனால் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இன்னும் சுமூக தீர்வு கிடைக்கவில்லை. இந்தியாவிற்கு கிழக்கில் இருந்த பாகிஸ்தானில், மேற்கு பாகிஸ்தானின் ஆளுமையை எதிர்த்து கலகம் ஏற்பட்ட போது, இந்தியாவின் தலையீட்டால் பிரிந்து பங்களாதேஷ் என தனி நாடானது.

இந்தியாவிற்கும் இந்து மதத்திற்கும் பெயர் காரணமான இந்து நதியின் பெரும் பகுதி தற்போது பாகிஸ்தானில் ஓடுகிறது. பழங்காலத்தில் இந்தியாவின் மீது மத்திய ஆசியர்கள் படையெடுக்க உதவிய கைபர் கணவாய் மற்றும் போலன் கணவாய் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

அதிகம் பேர் பேசும் மொழி பஞ்சாபி. இரண்டாவது இடத்தில் சிந்தி மொழி.

அரசில் ராணுவத்தின் தலையீடு அதிகம். பலமுறை ராணுவம் அதிகாரத்தை தன் கையிலெடுத்துக் கொண்டு ஆட்சியைக் கலைத்திருக்கிறது. அரசியலமைப்புச் சட்டம் 1973ல் உருவாக்கப்பட்டது. அது ராணுவத்தால் 1977ல் கலைக்கப்பட்டது, மீண்டும் 1985ன் இறுதியில் சில மாற்றங்களுடன் உயிர்பிக்கப்பட்டது, மீண்டும் 1999ல் கலைக்கப்பட்டது.

தொழில் முன்னேற்றம் மிகக் குறைவு. இந்தியாவிற்கு சமமாக ராணுவபலத்தை பெருக்க முயற்சிப்பதால் ராணுவச் செலவு அதிகம்.

மிகுந்த வெளிநாட்டுக் கடன்களில் தத்தளிக்கும் நாடு. ஆப்கனிஸ்தானிலிருந்த தாலிபான்களின் மீதான அமெரிக்க படையெடுப்பில் உதவிகரமாக நடந்து கொண்டதால் தற்காலிகமாக இப்பிரச்னை தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.

மேற்கத்திய நாடுகளுக்கு போதை மருந்துகள் செல்லும் வழிகளில் பாகிஸ்தானும் ஒன்று என்பதால் வெளியுறவுச் சிக்கல்கள் உண்டு.

ஜனத்தொகை 144,616,639 (ஜூலை 2001 மதிப்பீடு)
வயது விகிதம் 0 - 14: 40.47% (ஆண் 30,131,400; பெண் 28,391,891)
15 - 64: 55.42% (ஆண் 40,977,543; பெண் 39,164,663)
65க்கு மேல்: 4.11% (ஆண் 2,918,872; பெண் 3,032,270) (2001 மதிப்பீடு)
மக்கள் பெருக்கம் 2.11% (2001 மதிப்பீடு)
பிறப்பு விகிதம் 31.21 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
இறப்பு விகிதம் 9.26 / 1,000த்திற்கு (2001 மதிப்பீடு)
குழந்தை இறப்பு 80.5 / 1,000த்திற்கு
சராசரி வாழ்வு 61.45 வருடங்கள்

 

http://www.kalanjiam.com/countries/index.php?titlenum=109

StumbleUpon.com Read more...

ப்ளோரைடு பற்பசை நல்லதா? கெட்டதா?- Fluoride Toothpaste

 ப்ளோரைடு கலந்த பற்பசைகளை பயன்படுத்துமாறு பல்மருத்துவக் கழகங்களும், பல் மருத்துவர்களும் பொதுவாக அறிவுறுத்துகிறார் கள். நாம் வசிக்கும் இடத் தைப் பொறுத்தும், நாம் அருந்தும் நீரில் கலந்துள்ள ப்ளோரைடின் அளவைப் பொறுத்தும் இந்த அறிவுரை மாறுபடுகிறது.

ப்ளோரைடு இயற்கையாகவே கிடைக்கின்ற ஒன்று. அது நமது பற்களும் எலும்புகளும் வலிமையாக இருக்க உதவுகிறது. பல சோதனைகளில், ப்ளோரைடு கலந்த பற்பசை உபயோகிப்பவர்களுக்கு பற்குழி விழுவது குறைகிறது அல்லது தவிர்க்கப் படுகிறது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் அளவுக்கு அதிகமான ப்ளோரைடு உபயோகம் பற்களுக்கு ஊறு விளைவிக்கும். அது மட்டுமல்லாமல் உயிருக்கே ஆபத்தாகவும் முடியலாம்.

1997ம் ஆண்டின் மத்தியிலிருந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) ப்ளோரைடு கலந்த பற்பசைகளில் கீழ்க்கண்ட எச்சரிக்கையை அச்சிட வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளது.

"WARNINGS: Keep out of reach of children under 6 years of age. If you accidentally swallow more than used for brushing, seek PROFESSIONAL HELP or contact a POISON CONTROL center immediately."

ஒரு முறை பல்துலக்குவதற்கு வேண்டிய அளவை விட அதிகமான பற்பசையை உட்கொண்டாலே உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் அல்லது, விஷமுறிவு மையத்தை நாடவும் என்ற எச்சரிக்கை கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று.

ப்ளோரைடு பற்பசை வரலாறு
ப்ளோரைடு இயற்கையாகவே பூமியில் கிடைக்கக்கூடிய ஒன்று. ஆனால் பூமியில் கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற வகை. இது பூமியில் அதிகமாக இருக்கும் இடங்களில் நீரிலும் அதிக அளவு கலந்திருக்கும். இந்த இடங்களில் இருப்பவர்களின் பற்களில் பற்குழிகள் விழுவது மிகக் குறைவு. ஆனால் பெரும்பாலும் பற்களில் கறைகள் படிந்து அழகில்லாமல் காட்சியளிக்கும். இது நீரில் உள்ள அதிக அளவு ப்ளோரைடினால் தான் ஏற்படுகிறது என்று கண்டறிந்த பின் பற்குழிகளை தடுக்க பல் மருத்துவர்கள் ப்ளோரைடை அளவோடு பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.

ப்ளோரைடு பற்குழிகள் விழாமல் தடுக்கிறது என்று அறிந்த பின், பல் மருத்துவர்கள் பற்குழி விழுந்த சிறுவர் சிறுமியர்க்கு ப்ளோரைடு பெயிண்டிங் என்ற முறையில் பற்களில் ப்ளோரைடினை பூசினார்கள். 1973-ம் ஆண்டு வாக்கில் பற்பசையில் ப்ளோரைடு கலந்து அறிமுகப்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இந்த பற்பசைகள் உபயோகத்திற்கு வந்த பத்து வருடங்களில் குழந்தைகள் பற்குழிக்காக பல்மருத் துவரிடம் வருவது வெகுவாக குறைந்தது. பல இடங்களில் வருமானம் போதாமல் பல் க்ளினிக்குகள் மூடப்பட்டன. அதன் பின்பு ப்ளோரைடு பற்பசைகள் உலகெங்கும் உபயோகிக்க ஆரம்பித்தார்கள்.

பக்க விளைவுகள், ஆபத்துக்கள்
அதிக அளவு ப்ளோரைடு உபயோகம் ப்ளூரோசிஸ் என்ற பல்சிதைவு ஏற்பட காரணமாகிறது. மேலும் குழந்தைகளுக்கு பற்கள் விழுந்து முளைக்கும் சமயத்தில் அதிக அளவு ப்ளோரைடு உபயோகித்தால் பற்களில் வெள்ளைத் திட்டுக்கள் விழக் கூடும்.

பெரியவர்கள் உபயோகிக்கும் பற்பசையில் 1000ppm அளவிற்கு மிகாமலும், சிறுவர்களுக்குக்கான பற்பசையில் 500ppm அளவிற்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ப்ளோரைடு பற்பசையினை உபயோகிக்கும் பொழுது ஒரு பட்டானி அளவிற்கு மட்டுமே எடுத்துக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்று பல்மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை உபயோகிக்கும் பொழுது அது தொண்டைக்குள் செல்லாமல் துப்பி விடுவது நல்லது. சிறுவர்களுக்கு பிடித்தமான சுவைகளில் பற்பசைகள் தயாரிக்கப்படுவதால் சிறுவர்கள் இதனை விழுங்காமல் பார்த்துக் கொள்வது கடினம்.

ப்ளோரைடு விஷமா?
ப்ளோரைடு கலவையை நேரடியாக உட்கொண்டால் விஷம் தான். ஆனால் பற்களிலும், எலும்புகளிலும் ப்ளோரைடு கலந்திருக்கிறது. இது பற்களை வலுவானதாக ஆக்குகிறது.

பூமியில் இயற்கையாக கிடைப்பது கால்சியம் ப்ளோரைடு என்ற தாது உப்பு வடிவில் உள்ளது. ஆனால் பற்பசையில் கலக்கப்படும் ப்ளோரைடு இந்த வகையில் இல்லை. சோடியம் ப்ளோரைடு அல்லது ப்ளூரோசாலிசிக் அமிலம் பற்பசையில் உபயோகிக்கப்படுகிறது. இவை அலுமினியத் தொழிற்சாலைகளில் விஷக்கழிவுகளாக வெளியேறுபவை. இவை எலி பாஷாணத்திலும், பூச்சி மருந்திலும் உபயோகப் படுத்தப்படுகிறது. இவைகளையே ப்ளோரைடு தேவைக்காக பற்பசையில் சேர்க்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

இது குறித்து வல்லுநர்களிடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன. ப்ளோரைடு நல்லதா கெட்டதா என்று காரசாரமாக விவாதிக்க இரண்டு புறமும் வல்லுநர் அணிகள் இருக்கிறார்கள்.

ப்ளோரைடு பற்பசை நல்லதே என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.doctorspiller.com/fluoride.htm
http://www.dentalgentlecare.com/toothpaste.htm

ப்ளோரைடு பற்பசை மிக ஆபத்தானது என்று கூறும் வெப் தளங்கள்:
http://www.aroma-essence.com/research-reports/fluoride.html
http://www.mercola.com/2001/may/30/toothpaste.htm
http://www.sonic.net/kryptox/dentistr/dentistr.htm


ப்ளோரைடு பற்றிய பக்க விளைவுகளை மக்களிடம் எடுத்துச் சொல்வதற்காக 'ப்ளோரைடு செயல் கூட்டணி' (Fluoride Action Network) என்ற அமைப்பு செயல்படுகிறது. http://www.fluoridealert.org

நாம் செய்யக்கூடியது.
குழந்தைகளுக்கு ஆறு வயது வரை ப்ளோரைடு பற்பசையை தவிர்ப்பது நல்லது. அதற்கு முன்பு உபயோகிப்பதானால் மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யலாம்.

நமக்கு பற்பசை மட்டுமல்லாமல், நீர், உணவு, குளிர்பானங்கள் மூலமாகவும் ப்ளோரைடு உடலில் சேரும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே முடிந் தவரை ப்ளோரைடு கலவாத பற்பசைகளை உபயோகிக்கலாம். ப்ளோரைடு பற்பசைகளை உபயோகிப்பதானால் அவற்றை பட்டானி அளவிற்கு மிகாமல் எடுத்து உபயோகிக்க வேண்டும்.

தற்போது ப்ளோரைடு கலவாத பற்பசைகளே இல்லை என்ற நிலை உள்ளது. சில ஆயுர்வேத பற்பசைகளும், இயற்கை மூலிகை பற்பசைகளுமே ப்ளோரைடு கலவாத பற்பசைகளாக உள்ளது.

பற்பசைகளில் ப்ளோரைடு உள்ளதா என எப்படி அறிவது?
பற்பசை பெட்டியிலும் ட்யூபிலும், சிறிய எழுத்துக்களில் 'FOAMING FLUORIDATED TOOTHPASTE' என்று எழுதப்பட்டிருக்கும். மேலும், ' contains 1000PPM of available fluoride' என்றும் எழுதப்பட்டிருக்கும்.
 

StumbleUpon.com Read more...

சென்னை - Chennai-Madras -ஒரு பயோ கிராபிகல்ஸ்

 நகர வரலாறு:
Parrys Corner in 1890 AD முன்னூறு வருட சரித்திரம். கடலோர கிராமங்களுக்கிடையில் கிழக்கிந்தியக் கம்பெனியினர் இறங்கி கி.பி. 1639ல் விஜயநகரின் கடைசி அரசர் சந்திரகிரி அளித்த நிலத்தில் மதராஸ்பட்டினத்தை ஸ்தாபித்தனர். 1644ல் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை நிறுவிய பின்னர் அதைச் சுற்றிலும் திட்டமில்லாமலே மெட்ராஸ் வளர ஆரம்பித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ்காரர்களின் பிடியில் முழுமையாக தென்னிந்தியா வந்த பின் மெட்ராஸ் அவர்களது நிர்வாக மற்றும் வியாபார தலைநகரானது.

தொடர்ந்து மிக வேகமாக வளர்ந்து இந்தியாவின் நான்கு பெரிய நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. மெட்ராஸ் என்று உலகம் முழுவதும் பரிச்சயமான பெயர் 1996ல் சென்னை என்று அதிகார பூர்வ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. நகர் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்த சென்னப்ப நாயக்கரின் நினைவாக இப்பெயர் அமைந்தது.

நகர வழக்கங்கள்:
குளிர்காலத்தில் கூட 20 டிகிரி செல்சியஸுக்கு குறைவதில்லை. கடல் காற்றின் ஈரப்பதத்தால் கசகசப்பு இருந்தாலும் மா‍லை 4 மணிக்கு ‍மேல் கடலில் இருந்து நிலத்திற்கு வரும் காற்று இரவின் வெம்மையை வெகுவாக குறைக்கிறது. வருடம் முழுவதற்கும் வேனிர்கால உடைகளே போதுமானவை.

நாட்டின் பெரிய மெட்ரோக்களில் ஒன்று, ஆனாலும் கட்டுப்பெட்டித்தனமான நகரம் என்றிருந்த பெயர் தற்போது மாறி வருகிறது. இங்கு பேசப்படும் தமிழ் மற்ற இடங்களில் வாழும் தமிழர்களுக்கே புரியாத அளவு மொழி மாற்றம் அடைந்துள்ளது. ஆனால் இந்த பேச்சு வழக்கு சமூகத்தின் அடிமட்ட மக்களிடம் மட்டுமே பரவலாக உள்ளது.

நகரின் அமைப்பு:
நகரம் வடக்கு தெற்காக முதலில் விரிவடைந்தது, தற்போது மேற்கில் விரிவடைந்து வருகிறது. தமிழ்நாட்டிலேயே அகலமான சாலைகளைக் கொண்ட நகரமாக இருந்தாலும் நகரின் வளர்ச்சியினால் மிகுந்த நெரிசலும் புகை மாசும் நிறைந்த நகரமாக இருக்கிறது.

50களில் முக்கிய சாலையான அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு) கட்டப்பட்ட 14மாடி கட்டிடமே இன்றும் சென்னையின் அடையாளம். தற்போது தான் அதை விட அதிக மாடிகள் கொண்ட கட்டிடங்கள் கட்டபட்டு வருகின்றன.


முக்கிய இடங்கள்:
மெரினா கடற்கரை:
உலகின் இரண்டாவது அழகிய கடற்கரை, தற்போது அளவுக்கதிகமான கூட்டத்தாலும், பிளாஸ்டிக் குப்பைகளாலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருப்பினும் 5 கி.மீ. நீளத்திற்கு மிக லேசான வளைவுடன் இருக்கும் கடற்கரையின் அழகு அவற்றையும் மீறி வசீகரிக்கிறது. இதன் வடகோடியில் அறிஞர் அண்ணாவின் சமாதி உள்ளது.

மாமல்லபுரம் (மகாபலிபுரம்):
சென்னையிலிருந்து தெற்கு கடற்கரையோர சாலையில் சுமார் 60கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பல்லவ காலத்தில் செய்யப்பட்ட அற்புதமான பழங்காலச் சிலைகள் இந்த சிற்றூர் முழுதும் காணலாம். ஊர் முழுதும் பல்வேறு சிலை செய்யும் ஸ்தாபனங்கள் முளைத்துள்ளன. சிறப்பான சிற்பக் கலைஞர்கள் நிறைந்த ஊர். மாமல்லபுரம் செல்லும் சாலையில் பல்வேறு பொழுதுபோக்கு பூங்காக்கள் (Theme Parks) திறக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் மிருகக்காட்சி சா‍லை:
நகரின் மையத்தில் முன்பு அமைந்திருந்த மிருகக்காட்சி சாலை தற்போது நகரின் வெளியே பரந்த இடத்தில் மிருகங்கள் இயற்கையாக உலவும் வன்னம் அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் கண்டு களிக்க ஏற்ற இடம்.

வள்ளுவர் கோட்டம்:
திருவள்ளுவரின் பெயரால் தமிழக அரசு அமைந்த கூடம். தேர் போன்ற வெளிப்புற அமைப்பு காணத்தக்கவை, உள்ளே திருக்குறளின் அனைத்து அதிகாரங்களும் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம்- Computer Parts


 மதர்போர்டு:
CPUவில் எல்லா பாகங்களும் இணைக்கப்படும் அடிப்படையான சர்க்யூட் போர்டு. எல்லாவற்றிற்கும் தாய். தாயைப் போலவே ஊமையாக உழைக்க வேண்டும். கம்ப்யூட்டர் தலைமைச் செயலகமான ப்ராஸஸர், பல்வேறு ப்ரோக்ராம்களை ஒரே சமயத்தில் திறக்க உதவும் மெமரி ஆகியவை இதன் மடியில் தான் தாலாட்டப்படுகிறது. உங்கள் கம்ப்யூட்டரைக் குறிப்பிடும் போது ப்ராஸஸர், ராம், ஹார்ட் டிஸ்க் பற்றியெல்லாம் பெருமையாக குறிப்பிடுவீர்கள். ஆனால் மதர் போர்டு?

மைக்ரோ ப்ராஸஸர்:
சுருக்கமாகச் சொன்னால் அரசன். முக்கியமான கணக்குகளைத் தானே போட்டு, எல்லாப் பாகங்களுக்கும் ஆணைகள் இட்டு செய்து முடிப்பவன்.

மெமரி (RAM):
ஓடிக்கொண்டிருக்கும் எல்லா ப்ரோக்ராம்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். அரசன் ஆணையிடும் போது தகவல்கள் அனுப்பும் மந்திரி.

ஹார்ட் டிஸ்க்:
கருவூலம் அல்லது நூலகம் என்று சொல்லலாம். இன்றைய விண்டோஸ் யுகத்தில் ஹார்ட் டிஸ்க் இல்லாத கம்ப்யூட்டர் வைத்திருப்பவரை காதலி கூட சீண்ட மாட்டாள்! இதன் ஞாபகக் கொள்ளளவு ஒவ்வொரு இரண்டு வருடங்களில் இரட்டிப்பாவதாக கூறப்பட்டாலும். தற்போது அதைவிட வேகமாக கூடுவதாகத் தோன்றுகிறது.

கம்ப்யூட்டரில் உள்ள எல்லாப் ப்ரொக்ராம்களும் இந்த நூலகத்தில் தான் வைக்கப்படுகின்றது.

ப்ளாப்பி ட்ரைவ்:
ரொம்ப நாளாக (வருடங்களாக) கம்ப்யூட்டரில் மாறாமல் இருக்கும் ஒரே பாகம். உங்கள் கணக்குகளை கம்ப்யூட்டரிலிருந்து ப்ளாப்பியில் நகலெடுத்து பையில் வைத்துக் கொண்டு போகலாம். எல்லாக் கம்ப்யூட்டரிலும் போடும்படியாக இருக்க வேண்டும் என்பதால் இது மாறவே இல்லை. ஆனால் தற்போதைய அளவில் இதன் ஞாபகச் சக்தி மிகவும் குறைவு.

இதற்கு மாற்றாக 100MB கொள்ளளவு கொண்ட ஜிப் ட்ரைவ், MO டிஸ்க் ட்ரைவ் போன்றவை சந்தையில் இருந்தாலும் விலை அதிகமென்பதால் வீட்டு உபயோகத்திற்கு அதிகமாக வரவில்லை.

சிடி ட்ரைவ்:
ப்ளாப்பிக்கு கிட்டத்தட்ட சீப்பான மாற்றாக சிடி வந்துள்ளது. சாதாரண சிடி 675MB வரை கொள்ளும், விலையும் மிகக் குறைவு. வீட்டில் உபயோகிக்கும் சிடி ட்ரைவ்கள் சிடி-ரோம் ட்ரைவ்கள், அதாவது சிடியைப் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. சிடியும் கூட ஒரு முறை எழுதினால் அழித்து எழுத முடியாது. ஆகவே ப்ரோக்ராம்களை விற்க வசதியான சாதனமாக உள்ளது. சினிமாக்களால் சிடியை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

சிடி-ரோம் மட்டுமல்ல CD-W, CD-RW போன்ற வகைகளும் உள்ளன. CD-W(rite) ட்ரைவ் சிடியை எழுத உபயோகிக்கலாம். CD-RW (Rewrite) ட்ரைவில் சிடியை அழித்து மீண்டும் எழுதலாம். இதில் உபயோகிக்கும் சிடி சற்று வித்தியாசமானது, ஆனால் சாதாரண சிடி-ரோம் ட்ரைவில் உபயோகிக்க முடியும்.

மோடம்:
கம்ப்யூட்டரை டெலிபோனுடன் இணைக்கும் சாதனம். இதில் மற்ற பேக்ஸ் சாதனங்களுக்கு கம்ப்யூட்டரிலுள்ள பக்கங்களை பேக்ஸாக அனுப்பவும், பேக்ஸ் சாதனங்கள் அனுப்பும் பக்கத்தை பெறவும் முடியும். இண்டர்நெட் வீட்டிற்கு வரும் வழி.

 

http://www.kalanjiam.com/computer/index.php?titlenum=102

StumbleUpon.com Read more...

பூகம்பம்- Earthquake எப்படி உருவாகிறது

பூமியின் மேற்பரப்பு (Lithosphere) பெரும் பாளங் களாக அமைந்துள்ளது. இவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது. நிலப்பரப்பிலும், நீரின் அடியிலுமாக உள்ள இவற்றில் ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும், குறைந்தது ஒரு டஜன் சிறிய பிளேட்டுகளும் உள்ளன. இந்த ஏழு பெரும் பிளேட்டுகளில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடக்கம்.

இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. வரை தடிமன் கொண்டதாக இருக்கிறது. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.

இந்தப் பிளேட்டுகள் ஒரு வருடத்திற்கு ஒரு செ.மீ. முதல் சுமார் 13 செ.மீ. வரை நகர்கிறது. இது நமது உலக வேகத்திற்கு மிக நுண்ணியதாக இருந்தாலும் இந்த பிளேட்களின் லேசான உராய்வும் கூட பெரும் பூகம்பம் ஏற்படுத்தக் கூடியவை.

கண்டங்கள், துணைக் கண்டங்கள்:
ஐரோப்பாவும் ஆசியாவும் இனைந்த நிலப்பரப்பாக காணப்பட்டாலுன் இரண்டும் தனித்தனி பிளேட்டுகளில் அமைந்துள்ளது. இந்தியா உள்ளிட்ட தெற்காசியப் பகுதி ஆசிய பிளேட்டில் இல்லாமல் தனி பிளேட்டாக அமைந்துள்ளது. இதனாலேயே இது இந்தியத் துணைக் கண்டம் என்றழைக்கப்படுகிறது.

மேலும் இந்திய பிளேட், ஆசிய பிளேட் ஆகிய இரண்டும் வடக்கு நோக்கி நகர்கின்றன. இதில் ஆசிய பிளேட்டை விட இந்திய பிளேட் வேகமாக நகர்வதால், இந்திய பிளேட் ஆசிய பிளேட்டை மோதி அந்த அழுத்தத்தில் உருவானதே இமய மலைப் பிரதேசம். இமய மலை இன்னும் வளர்ந்து கொண்டிருப்பதன் காரணமும் இது தான். இரு பிளேட்களின் அழுத்தத்தால் இமய மலைப் பகுதி வளரும் பொழுது உராயும் பாறைகள் அசைந்து கொடுப்பதால் இப்பகுதி நில நடுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ள பகுதியாக கருதப்படுகிறது
 

StumbleUpon.com Read more...

லக்ஷ்மி மிட்டல் வசமான உலகிலேயே விலையுயர்ந்த மாளிகை

மிட்டல் வசமான உலகிலேயே விலையுயர்ந்த மாளிகை
  
    

Mittals Mansion
லண்டன்: லண்டனில் உள்ள மிகப் பெரிய மாளிகையை 117 மில்லியன் பவுன்டுகளுக்கு இந்திய கோடீஸ்வரர் லக்ஷ்மி நிவாஸ் மிட்டலின் மகன் ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ளார்.

உலகிலேயே அதிக விலை கொடுத்து வாங்கப்படும் கட்டடம் என்ற பெருமை இதன் மூலம் இந்த மாளிகைக்குக் கிடைத்துள்ளது.

பாலஸ்கிரீன் பகுதியில் இந்தி பிரமாண்டமான மாளிகை உள்ளது. இதற்கு அருகில் உள்ள கென்சிங்டன் பாலஸ் கார்டன்ஸ் பகுதியில்தான் ஆதித்யா மிட்டலின் தந்தை லக்ஷ்மி மிட்டலின் பிரமாண்ட வீடு உள்ளது.

32 வயதாகும் ஆதித்யா மிட்டல், தனது தந்தையின் வீட்டுக்கு அருகிலேயே மிகப் பெரிய வீடாக பாரத்து வந்தபோதுதான் இந்த பாலஸ் க்ரீன்ஸ் வீடு கிடைத்தது. கென்சிங்டன் பகுதியில் தற்போது லக்ஷ்மி மிட்டல் வசித்து வரும் வீட்டை 2004ம் ஆண்டு பார்முலா ஒன் அமைப்பின் தலைவர் பெர்னி எக்லஸ்டோனிடமிருந்து 57 மில்லியன் பவுன்டுகளுக்கு வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கென்சிங்டன் பாலஸ் கிரவுண்ட்ஸ் பகுதியில் மிக மிகப் பெரிய பில்லியனர்கள் பலர் வசித்து வருகின்றனர். உலகின் மிக அதிக விலை கொண்ட வீடுகள் நிறைந்த பகுதியாகும் இது.

இப்பகுதியில் ஒரு சதுர அடி 8000 பவுன்டுகளுக்கு விலை போகிறது. இதற்கு முன்பு 80 மில்லியன் பவுன்டுகளுக்கு லண்டனில் ஒரு வீடு விலை போனது. அதை தற்போது ஆதித்யா மிட்டல் வாங்கியுள்ள வீடு முறியடித்துள்ளது.

ஆதித்யா மிட்டல் விலை பேசியுள்ள வீடு கோட்ஸ்மேன் என்பவருக்குச் சொந்தமானதாகும். இந்த வீட்டுக்கு அருகில்தான் இஸ்ரேல் தூதரகம் அமைந்திருக்கிறது.

வீட்டை விற்கும் கோட்ஸ்மேனும் சாதாரண ஆள் இல்லை. அவருக்கு 460 மில்லியன் பவுன்ட் சொத்து உள்ளது.
 
 

StumbleUpon.com Read more...

ஹாலிவுட் போகும் அம்பானி!

ஹாலிவுட் போகும் அம்பானி!   
thatsTamil RSS feedthatsTamil  iGoogle gadgetsFree SMS Alerts in Tamil
    

Anil Ambani
ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்தின் மீடியா மற்றும் பொழுது போக்குப் பிரிவான, ரிலையன்ஸ் பிக் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் ஹாலிவுட் படத் தயாரிப்பில் குதிக்கிறது. இதற்காக மிகப் பெரிய நிறுவனங்களுடன் அது ஒப்பந்தம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் பிக், ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்களில் டாம் ஹாங்க்ஸ், பிராட் பிட், ஜிம் கேரி ஆகியோரின் நிறுவனங்களும் அடக்கம்.

கேன்ஸ் நகரில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் இதுதொடர்பாக ரிலையன்ஸ் பிக் நிறுவனத்தின் தலைவர் அமித் கண்ணா கூறுகையில், அடுத்த 2 ஆண்டுகளில் 30 கதைகள் தேர்வு செய்யப்படும். அதில் 10 கதைகளைப் படமாக்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்திற்கு லாஸ் ஏஞ்சலஸைச் சேர்ந்த கிரியேட்டிவ் ஆர்ட்டிஸ்ட்ஸ் ஏஜென்சி உதவியுள்ளது. ரிலையன்ஸ் பிக் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள்: நிக்கோலஸ் கேஜ்-ன் சாட்டர்ன் புரடக்ஷன்ஸ், ஜிம் கேரியின் ஜேசி 23 என்டர்டெய்ன்மென்ட், க்ளூனியின் ஸ்மோக் ஹவுஸ், கொலம்பஸின் 1492 பிக்சர்ஸ், டாம் ஹாங்க்ஸின் பிளேடோன் புரடக்ஷன்ஸ், பிராட் பிட்டின் பி என்டர்டெய்ன்மென்ட், ரோச்சின் எவரிமேன் பிக்சர்ஸ் ஆகியவை ஆகும்.

திரைக்கதைகளின் தன்மையைப் பொறுத்து அவற்றை படமாக்குவோம். இதற்காக கணிசமான தொகை ஒதுக்கப்படும்.

ஹாலிவுட் ஜாம்பவான்களுடன் போட்டி போடும் எண்ணத்தில் நாங்கள் அங்கு நுழையவில்லை. யாருடனும் எங்களுக்குப் போட்டி இல்லை. அனைவருடனும் ஒருங்கிணைந்து செயல்படுவதே எங்களது எண்ணம்.

உலகளாவிய திரைப்பட சந்தை மாறிக் கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தில் முன்னோடியாக திகழ நாங்கள் விரும்புகிறோம் என்றார்.

உடன் இருந்த பிக் நிறுவனத்தின் கிரியேட்டிவ் ஆலோசகர் பிரசூன் ஜோஷி கூறுகையில், எங்களது ஹாலிவுட் பங்குதாரர்களுக்கு படத் தயாரிப்பு தொடர்பாக நாங்கள் எந்த நிபந்தனையும் விதிக்க மாட்டோம். இருப்பினும் சர்வதேச அளவில் இந்தியா தொடர்பான திரைக்கதைகள் அதிக அளவில் இடம் பெற நாங்கள் முயல்வோம் என்றார்.
 
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP