சமீபத்திய பதிவுகள்

காதல்..கல்யாணம்....வரதட்சணை!! பேசுகிறார் பிரபாகரன்!!!

>> Wednesday, July 22, 2009


 

                ருநாள்...

நான்அங்கிருந்தபோது ஒரு ஊர் கத்தோலிக்க குருவானவரைப் பற்றி ஏகப்பட்ட புகார்கள். அவரை அழைத்து விசாரிக்க வேண்டுமென அந்தப்பகுதி புலிகளின் பிரதிநிதியிடமிருந்து ஏக அழுத்தம். பிரபாகரன் அவரிடம் கேட்டது: ""அந்த ஃபாதர் விடுதலைக்கு எதிரா வேலை செய்யிற வரோ?''. ""இல்லை.'' ""அவர் நம்ம நாட்டு சட்ட-ஒழுங்குகள் எதையேனும் மீறினவ ரோ?''. ""இல்லெ, ஆனா அந்த கோயில் சனம் நிறைய கம்ப்ளைண்ட் சொல்றவங்கள்.'' ""அதையெல் லாம் விசாரிக்க அவங்கட திருச்சபை உயர் அதிகாரிகள் பிஷப்மாரெல்லாம் இருக்கிறாங்கள். நீர் உம்மட அலுவலெப் பாரும். உமக்குத் தேவையில்லாத விஷயங்களில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்?''

நான் ஒரு குறிப்பிட்ட இந்திய அரசியற் கட்சியை குறிப்பிட்டபோது, ""அவையளைப்பற்றி நமக்கென்ன கதை ஃபாதர். அவையள் குசும்பு பிடிச்சவையள். ஆரும் சந்தோஷமா இருக்கிறது அவையளுக்குப் பிடிக்காது'' என்றார்.

இயல்பான அவரது மனம்தான் யுத்தகளத்தில் அப்படியொரு மகாபாரத உறுதியையும் கொடுத்திருக்கிறது. அப்படிப்பட்ட மனிதர் முதன் முதலில் மனம் கலங்கி உறைந்து போனது ஆகஸ்ட் 14, 2006 அன்று. அவரது தனிக்கோயிலான, யுத்தம் அனாதைகளாக்கிய சின்னஞ்சிறு பிஞ்சுகளை தன் சொந்தப் பிள்ளைகளிலும் மேலாகப் பேணி அவர் அடைகாத்து வளர்த்த "செஞ்சோலை' மீது இலங்கை விமானப்படை குண்டு வீசிய நாள் அது. 61 பிள்ளைகள் கண நேரத்தில் சதைத்துண்டுகளாய் சிதறினார்கள். இந்த செஞ்சோலை பற்றி என்னோடு உரையாடுகையில் அவரிடத்து சாந்தம் படர்ந்தது. ""அங்கு போனால் எனக்கு அமைதி கிடைக்கும். கடுமையான காலங்களில் நான் அங்கு போவேன், அமைதியடைந்து திரும்புவேன்'' என்றார்.

               இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் கடந்த இருவார காலமாய் அதிகமாக விவாதிக்கப்பட்டு வரும் சமாச்சாரம் ஆங்கிலத்தில் LGBT என அறியப்படுகின்ற ஓரினச் சேர்க்கையாளர்கள், இருபாற்கூறுடையவர்கள் மற்றும் அரவாணி கள் தொடர்பான அரசியற்சட்ட எண் 377 பற்றியது. காலனியாதிக்கத்தின் நீட்சியாய் தொடர்கிற இந்தியாவின் அரசியற் சட்டம், கஏஇப LGBT (Lesbian, Gay, Bi Sexual and Transgender) குழுமத்தினரின் பாலியல் ஈர்ப்பினை குற்றச் செயலாகவும் சட்டத்தின் முன் தண்டனைக் குரியதாகவும் இதுநாள் வரை நிறுவி நிற்கிறது. இதனை மாற்ற வேண்டுமென்பதுதான் இப்போது நடக்கிற முயற்சிகளும், விவாதங் களும்.

இதுபற்றி என்னிட மும் கருத்துக் கேட்ட டெக்கன் கிரானிக்கல் DECCAN CHRONICAL ஆக என்ற ஆங்கில நாளிதழுக்கு நான் கூறியிருந்தேன், ""அர சியற் சட்டப்பிரிவு எண் 377-ஐ திருத்தும் யோச னையானது இந்திய சட்ட அமைப்பினை மனிதப்படுத்தும் ஒரு முயற்சியாகப் பார்க் கப்பட வேண்டுமே யொழிய ஓரினச் சேர்க்கைக்கு ஒழுக்க அங்கீகாரம் வழங்குவ தாகக் கருதப்படக்கூடாது. ஓரினச் சேர்க்கை இயற்கையின் இயல்பான விதிகளுக்கும், மானுடம் காலாதி காலமாய் போற்றிவரும் மிகவும் அடிப்படையான ஒழுங்குகளுக்கும் முரணனானது'' என்றேன்.

அதேவேளை அவர்களுக்கு அறிவுரை, ஆற்றுப்படுத்தல், மருத்துவ உதவிகள் தந்து தோழமை நேயத்துடன் வழிநடத்த வேண்டு மேயன்றி அவர்களை குற்றவாளிகளாக சிறையிலடைக்க முடியாது என்றும் வலியுறுத்தினேன்.

பொறாமை தவறு. புறணி பேசுதல் தவறு. குண்டணி, கோள் மூட்டுதல் தவறு, பல் விளக்காது நாறுதல் தவறு, வீட்டை குப்பையாக வைத்திருத்தல் தவறு, பக்கத்து வீட்டு பெண்ணை இரகசியமாக வக்கிரமாய் பார்த்தல் தவறு. ஆனால் இவற்றையெல்லாம் அறிவுரை, கற்பித்தல் மூலம் திருத்த வேண்டுமேயன்றி சிறையிலடைத்து சரி செய்ய முடியாதென்பதே சரியான கருத்து. சட்டங்கள் குறைவாகவும், கண்காணிப்போர் அதிகமின்றி மக்கள் இயல்பிலேயே நல்லவர்களாக வாழும் நாடே சிறந்த நாடு.

எனது இந்தக் கருத்தினை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு, ""கத்தோலிக்க விசுவாசப் பாதுகாப்பு இயக்கம்'' என்ற அமைப்பு கொஞ்சம் விளம்பரம்தேடப் புறப்பட்டிருக்கிறது. இதே அரைவேக்காட்டுப் பரிதாபங்கள்தான் இசைஞானி இளையராஜாவுடன் ""சிம்பொனி யில் திருவாசகம்'' செய்தபோதும் "கத்தோலிக்க பாதிரியார் சிவனைப் போற்றும் திருவாசகத் திற்காய் ஏன் பணம் செலவழித்து உழைக்க வேண்டும்?' என்றெல்லாம் கேள்வி கேட்டு கடிதங்கள் எழுதிப் பொழுது போக்கினார்கள். போப்பாண்டவர் வரையெல்லாம் எழுதிப் போட்டு காமெடி செய்து பார்த்தார்கள். எங்குமே பருப்பு பெரிதாக வேகவில்லை. எனது வாழ்வில் நான் முரட்டுத்தனமான பிடிவாதத்தோடு மூர்க்கம் காட்டும் ஓரிரு விஷயங்களில் ஒன்று -மத அடிப்படைவாதிகளுக்கு அடிபணிவதில்லையென்பது. எனது 23-ம் வயதில் இத்தகையோரைப் பற்றி ஆய்வு செய்து ""போலிகளோடு போர்'' எனத் தலைப்பிட்டு 140 பக்க அறிக்கையை புத்தகமாக வெளியிட்டேன். என்னைப் பொறுத்தவரை நேசமும், இரக்கமும், மன்னிப்பும், தியாகமுமே வேதத்தின் உயிர் பொருட்கள் -உயர் பொருட்கள், சட்டங்களும் சம்பிரதாயங்களு மல்ல.

பைபிளில் "பரிசேயர்கள்' என்றொரு கும்பலைப் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இடைவெளி கிடைக்கிற இடங்களி லெல்லாம் இயேசுநாதர் இவர்களை ஒரு பிடி பிடிப்பார். ""குடிகாரர், விபச்சாரிகள், பாவிகள் இவர்களெல்லாம் பரலோகம் போவார்கள், ஆனால் இந்தப் பரிசேயர் களால் பரலோகம் இருக்கிற திசையெட்டில் கூட போகமுடியாது'' என்று பொருள்படும் தொனியில் பேசுவார். இப்பரிசேயர்கள் "உள்ளே உயிர் இல்லாது வெறும் எலும்புக் கூடுகளாகிப்போன வெள்ளையடிக்கப் பட்ட கல்லறைகள்' என்று சாட்டையடிப்பார். இத் துணைக்கும் "பரிசேயர்கள்' உலகத்தின் பார்வைக்கு மிக நல்லவர்கள். சட்டத்தை பிசிறின்றி கடைபிடிப்பவர்கள். தினம் ஐந்துமுறை பிரார்த்தனை, வருவாயில் ஒரு பகுதி கோவிலுக்கு, நோன்பென்றால் எச்சில்கூட விழுங்க மாட்டார்கள்... இத்தகையோரை மோசமானவர்கள் என்று நாம் சொல்ல முடியுமா? ஆனால் இயேசுநாதருக்கு இவர்களைப் பிடிக்கவில்லை.

ஏனென்றால் இவர்கள் மமதை கொண்டி ருந்தவர்கள், இரக்கமும் அன்பும் காட்டத் தவறிய கடின மனம் கொண்டவர்கள், வேதத்தின் சட்டப் புத்தகத்தில் இருக்கிறபடி சடங்கு களை செய்தால் போதும் -சக மனிதர்களைப் பற்றி அக்கறை கொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கருதியவர்கள் -எனவே "கடவுளுக்கு அருகில் ஒருபோதும் இவர்கள் வர முடியா'தென முழங்கி னார் இயேசு. அன்றைய பரிசேயர் கள்தான் இன்றைய விசுவாசப் பாதுகாப்பு அடிப்படைவாதப் படையினர்.

           வேலுப்பிள்ளை பிரபாகர னும் அவரது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் படைத்த போர்க்களச் சாதனைகளை உலகறியும். ஆனால் அவற்றினும் ஆழமாய் அவர்கள் படைத்த சமூக வரலாறு, பலநூறு ஆண்டுகளாய் தமிழ்ச்சமூகம் விடுபட முடியாதபடி விலங்கிடப் பட்டிருக்கும் சில கொடுமைகள், மூடமைகளின் கண்ணிகளை உடைத் தெறிவதாய் அமைந்தது. பரிசேயத் தனங்கள் பலவற்றைத் தகர்த்தது.

விடுதலைப்புலிகள் இயக் கத்திற்குள் பொதுவில் எவரும் ஜாதி பேதம் பார்க்கவில்லை. பலருக்கு யார் என்ன சாதி என்பதே தெரியாது. இயக்கத்தில் சேர்ந்ததும் பெயரை வேறு மாற்றிவிடுவார்கள். ""உங்கள் இயக்கம் கலப்புத் திருமணங்களை ஊக்கு விக்கிறதா?'' என்று பிரபாகரன் அவர்களைக் கேட்டேன்.

பாசாங்கற்ற பாங்குடன் இக்கேள்விக்கு அவர் தந்த எளிமையான, நெகிழ்வோட்டம் கொண்ட, ஆனால் மிகவும் ஆழமான பதிலையும் அப்பதிலை அவர் வெளிப்படுத்திய விதத் தையும் இப்போது நினைத் தாலும் வியப்பாக இருக்கிறது.

இதுதான் அவர் சொன் னது;

""எங்கள் இயக்கத்தில் சாதி பார்த்துத் திருமணமெல்லாம் இல்லை. கலப்புத் திருமணத்தையே ஏதோ பெரிய சாதனையாக சொல்லும் தன்மை கூட எங்களிடையே இல்லை. ஏனென்றால், எங்களைப் பொறுத்தவரை திருமணம் என்பது ஓர் ஆணும் பெண்ணும் ஒன்று சேரும் ஏற்பாடு, அவ்வ ளவுதான்!'' உள்ளபடியே இப் பதிலில் வெளிப்பட்ட எளிமை யையும் பாசாங்கற்ற தன்மை யையும் முதிர்ச்சியடைந்த பண்பாட்டுக் குறியீடாகவே பார்த்தேன்.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றை சிரத்தையுடன் பேணிய அந்த அமைப்பு மனித உணர்வுகளின் பெருவெளியில் மென்மையோடு நடந்து கொண்ட முகம் உலகிற் குத் தெரியாது. ""ஆக, காதலிக்கும் உரிமை இயக்க உறுப்பினர் களுக்கு உண்டு?'' என்று அவரை நான் கேட்டேன். ""ஆம், தவ றிழைக்கும் உரிமைதான் இல்லை. உண்மையாக ஒருவருக்கொருவர் விரும்புவதை, காதலிப்பதை இயக் கம் தடை செய்வ தில்லை'' என்றார்.

வரதட்சணை வழக்கையும் விவாதித்தோம்.

""விடுதலைப்புலிகள் இயக் கம் வரதட்சணை வழக்கினை உறுதியாக நிராகரிக்கிறது. வரதட்சணை வாங்கி திருமணம் செய்கிற போ ராளிகளை இயக்கத்தை விட்டே நீக்கிவிடுகிறோம்'' என்றார்.

""மக்களைப் பொறுத்த வரை எங்கள் ஆளுகைப் பகுதிகளில் சீதன தடைச் சட்டம் இருந்தாலும் சட் டத்தால் மட்டுமே இதனை சரிசெய்ய முடியுமென நான் நினைக்கவில்லை. கற்றுக் கொடுத்தல், விழிப்புணர்வு முகாம்கள், உறுதியான சாதி ஒழிப்பு நடவடிக்கை கள் மூலமாகத்தான் வர தட்சணை பிரச்சனையை பேரளவுக்கு ஒழிக்க முடியும்'' என்றார்.

போராட்ட அமைப்பு என்று வருகிறபோதுதான் அவர் இறுக்கம் காட்டி னாரேயன்றி தனிமனிதனாய் அவர் மிக மிக நெகிழ் வானராயிருந்தார். யாவரும் இன்புற்றிருத்தலே வையத் தின் பயனாகவும், நெறி யாகவும் இருக்க வேண்டு மென்ற கொள்கையுடையவ ராகவும் இருந்தார் என்றே நான் கருதுகிறேன்.

இதுபற்றி அவருக்கு நெருக்கமான பலரிடமும் நான் விவாதித்தேன். அவர்களில் பலர் கூறிய ஒன்றை உங்களிடம் நான் பகிர வேண்டும்.

(நினைவுகள் சுழலும்)

 

StumbleUpon.com Read more...

பல ஆயிரம் பேரின் இரத்தப் பழி சுமக்கும் இந்தியா

இரத்தப் பழி சுமக்கும் இந்தியா தமிழர்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்: அருட்தந்தை ஜெகத் கஸ்பார்
இந்தியாவின் கை இரத்தப் பழியைச் சுமப்பதாகத் குற்றம் சாட்டியுள்ள அருட்தந்தை ஜெகத் கஸ்பார், ஈழத் தமிழ் இனத்திற்கு இந்தியா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்

'நக்கீரன்' குழுமத்தின் 'இனிய உதயம்' காலாண்டு இதழுக்காக அருட்தந்தை ஜெகத் கஸ்பர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள் வருமாறு: 
 
'நக்கீரன்' இதழில் தற்போது நீங்கள் எழுதிவரும் 'மறக்க முடியுமா?' கட்டுரைத் தொடரானது, ஈழ விடுதலைப் போர் குறித்த பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வருவதாக இருக்கிறது. பிரபாகரன் ஒரு போர் விரும்பி, ஈழ மக்கள் மீது போரைத் திணித்தவர் என்றெல்லாம் இந்திய ஊடகங்கள் சித்தரித்துக் காட்டிய பிம்பத்துக்கும், 'இதயத்தில் உண்மையுள்ளவன், எல்லை இல்லா நன்றி உள்ளவன்' என்று நீங்கள் தரும் சித்திரத்துக்குமான வேறுபாடு ஆச்சரியமூட்டக்கூடியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட பிரபாகரனை நீங்கள் முதன்முதலாகச் சந்தித்த தருணம் பற்றிக் கூறுங்கள். உண்மையில் புலிகளின் இத்தனை பெரிய வீழ்ச்சிக்குக் காரணம் என்ன? 
 
என்னைப் பொறுத்தவரை ஒட்டுமொத்த தமிழ் வரலாற்றில் மகத்தான ஒரு விடுதலைப் போராட்டம் என்றால் அது தமிழீழ விடுதலைப் போராட்டம் தான்.
 
தமிழீழ விடுதலைப் போராட்டத்தை இந்த அளவுக்குக் கட்டி எழுப்ப முடிந்தது என்றால், அதற்கு பிரபாகரன் என்ற மாபெரும் ஆளுமைதான் காரணம்.

தண்ணீரால் சூழப்பட்ட ஒரு நிலப்பரப்பில், மிக மிகச் சிறிய ஒரு இனத்தில் இருந்து, அண்டை நாடான இந்தியா எப்படியும் இவர்களை அழித்துவிட வேண்டும் என்ற வைராக்கியத்தை எப்போதும் காட்டிக் கொண்டிருக்க-

உலகத்தில் எந்தவொரு நாட்டின் உதவியும் இல்லாமல், மரபுவழி இராணுவம் என்று நாம் சொல்கிற தரைப்படை, பீரங்கிப்படை, கடற்படை செறிந்த ஒரு புலனாய்வுப் பிரிவு, அனைத்துலக அளவிலான ஒரு கொள்வனவுப் பிரிவு, தேர்ந்த உளவுப்பிரிவு, இவற்றை எல்லாம் தாங்கி நடத்துவதற்காக ஒரு நிதிவள ஏற்பாடு, இன்னும் தன் ஆளுகைக்கு உட்பட்ட மக்களுக்கு ஒரு நிர்வாகத்தைக் கொடுக்கிற மேலாண்மைப் பிரிவு என இத்தனையையும் கட்டி எழுப்பிய மனிதன் ஒரு சாதாரண மனிதனாக இருக்க முடியாது. அபூர்வ ஆற்றல்கள் அமையப்பெற்ற ஒரு மனிதனால் மட்டுமே இது சாத்தியமாகும்.
 
எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழர்களுக்கு போர்க்குணம் இருந்தது என்று புறநானூற்றுக் காலத்தை நாம் சொன்னாலும், கடந்த ஐந்நூறு ஆண்டுகளில் நாம் போர்க்குணம் மிக்க மக்களாக இருந்தோம் என்பதற்கு எம்மால் எந்தவித ஆதாரங்களையும் சொல்ல முடியவில்லை. பெரிய அளவில் தொழில் முனைதல் இல்லாத, தாழ்வு மனப்பான்மை கொண்ட, எதையும் விதியே விதியே என்று ஏற்றுக் கொள்கிற ஒரு மக்கள் இனத்தின் மனவெளிகளுக்குள் புகுந்து புரட்சி செய்து, தன்னுடைய இனத்தின் விடுதலைக்காக உயிரையும் தரத் தயாராக இருக்கின்ற தலைமுறையையே உருவாக்கிக் காட்டிய மனிதன் சாதாரண மனிதனாக இருக்க முடியாது.
 
பிரபாகரன் ஒரு அதீதப் பிறவியாக இருந்ததால் மட்டுமே இது சாத்தியமானது.

தமிழ் இனம் பிரபாகரனால் தாழ்ந்ததா, உயர்ந்ததா என்று கேட்டால், உயர்ந்தது என்று உறுதியாகச் சொல்லுவேன். பிரபாகரனின் ஆளுமைக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பல்வேறு வரலாற்றுச் சூழமைவுகளும் தாக்கத்தை ஏற்படுத்தின.
 
முதலில் வல்லரசு நாடுகளுக்கு இடையிலான பனிப்போர் காலம் அப்படியே நீடித்திருக்குமானால் எப்போதோ ஈழம் கிடைத்திருக்கும். ரஷ்ய வல்லரசு உடைந்து போனதால் பனிப்போர் முடிவுக்கு வந்து விட்டது. இந்த காலகட்டத்தில் தான் ஈழப் போராட்டம் வளர்ச்சி கண்டிருந்தது. பனிப்போர் முடிந்தபிறகு உலகம் ஒற்றைத்திசையில் பயணப்பட தொடங்கியது. நமக்கான ஆதரவு சக்திகள் இல்லாமல் போனார்கள்.
 
ஈழத்துக்குச் சென்ற இந்திய அமைதிப் படை, 15 ஆயிரம் அப்பாவித் தமிழர்களின் மரணத்துக்குக் காரணமாக இருந்தது. அதன் பின்னணியில் ராஜீவ் காந்தி படுகொலை எனும் துயர நிகழ்வு. ஆனால் 15 ஆயிரம் மக்களைச் சாகடித்த பழியும் குற்றமும் யாராலும் பேசப்படவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை மட்டும்தான் பேசப்பட்டது. அதற்காக நான் ராஜீவ் படுகொலையை நியாயப்படுத்தவில்லை. அது நடந்திருக்கக்கூடாது. ராஜீவ் மரணத்திற்காக அழுதவர்களில் நானும் ஒருவன்.
 
ஆனால் அந்தவொரு நிகழ்வை வைத்துக்கொண்டு பழிவாங்கித் தீர்க்க வேண்டும் என்ற பழி உணர்ச்சியை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறது, வருகிறது.
 
இதையும் சந்தித்தபடி புலிகள் ஓர் கட்டுப்பாடு மிக்க இயக்கமாக முன்னேறி வெற்றிகளைக் குவித்து வந்த நேரத்தில்தான், ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் மீது தாக்குதல் நடத்த, பயங்கரவாதம் என்பது ஓர் எதிர் அரசியலாக மாறுகிறது. இதன் எதிர்விளைவுகளை எல்லாம் புலிகள் இயக்கமும் சந்திக்க வேண்டிய கட்டாயம்.
 
உலக அளவில் புலிகளின் கட்டமைப்புக்கள், நிதிவளங்கள் எல்லாம் மிகுந்த நெருக்கடிக்கு உள்ளாகி, பல்வேறு நாடுகளில் தடைசெய்யப்பட்ட இயக்கமாக முடங்கிப்போய் பெரும் இன்னல்களைச் சந்தித்தார்கள்.
 
களத்தில் அவர்கள் பெரும் வெற்றியைக் குவித்தாலும்கூட, விடுதலையை முன்நகர்த்திச் செல்வதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனையிறவு வரைக்கும் வென்று ஏறக்குறைய தமிழ் ஈழத்தை சாதித்துவிட்ட நிலையில்தான்- 
 
ஒருவகையில் அவர்கள் ஏமாற்றப்பட்டு அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இழுத்து வரப்படுகிறார்கள். அதன் தொடர்ச்சியாக அவர்களது இயக்கத்துக்குள் பிளவை உண்டாக்கி, உளவு அமைப்புக்கள் ஊடுருவி புலிகளைப் பலவீனப்படுத்தினார்கள்.
 
இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால் புலிகள் சமாதானம் பேசிய காலகட்டத்தில்தான் அவர்களைப் பயங்கரவாதிகளாக உலக நாடுகள் மத்தியில் சித்தரித்துக் காட்டிய ஈன இராஜதந்திரத்தை சிங்கள அரசு கையாண்டது.
 
பிராந்திய அளவில், உலக அளவில் பகைவர்களாக இருக்கிற நாடுகள் எல்லாம் இந்த விடயத்தில் சேர்ந்து நின்றார்கள். இந்தியாவும் பாகிஸ்தானும் சேர்ந்து நின்று சிறிலங்காவுக்கு கைகொடுத்தார்கள் என்பதைவிட, அள்ளிக் கொடுத்தார்கள் என்பது சரியாக இருக்கும்.

அதேபோல இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உதவினார்கள். அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உதவினார்கள். ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து உதவின. அவ்வளவு ஏன்- உலகமே ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து உதவி, தமிழ் இனத்தின் விடுதலை உணர்ச்சியைத் தகர்த்து எறிந்திருக்கிறார்கள்.

இத்தனை சக்திகளை மீறியும் புலிகள் தாக்குப்பிடித்து நின்றிருக்கிறார்கள் என்பது ஒரு மகத்தான வரலாறு. அதனை நீங்கள் மறுக்கவே முடியாது.

புலிகள் விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள்தான். ஆனால் அவற்றை எல்லாம் மீறி அவர்கள் தார்மீகப் போராட்ட நேர்மை கொண்டவர்களாக நடந்து கொண்டார்கள்.
 
கடைசிக்கட்டப் போரில் அவர்கள் நினைத்திருந்தால் கொழும்பு நகரில் 50 ஆயிரம் பேரையாவது கொன்று குவித்திருக்க முடியும். அந்த அளவுக்கு இரசாயன ஆயுதங்களை அவர்கள் நிச்சயமாக வைத்திருந்தார்கள். ஆனால் செய்யவில்லை.

கடந்த பத்து ஆண்டுகளில் பார்த்தோமேயானால் சிங்களப் பேரினவாதம் எத்தனை அப்பாவித் தமிழர்களைக் கொலை செய்தார்கள், புலிகள் எத்தனை சிங்களவர்களைக் கொலை செய்தார்கள் என்று கணக்கெடுத்தால், புலிகள் உயிரின் மதிப்பை உணர்ந்தவர்களாகப் போராடியிருக்கிறார்கள். கடந்த பத்து மாதத்தில் மட்டும் சிங்களப் பேரினவாதம் 60 ஆயிரம் பேரைக் கொன்று அழித்திருக்கிறது.

புலிகள் 600 பேரைக்கூட கொலை செய்யவில்லை. குறிப்பாக அப்பாவி மக்களைக் கொலை செய்யவே இல்லை. கட்டுநாயக்க வானூர்தி தளத்தில் அவர்கள் தாக்குதல் நடத்தியபோது பயணிகளில் ஒரு உயிர் கூட போய்விடக்கூடாது என்று கவனத்தோடு தாக்குதல் நடத்தினார்கள். தாக்குதல் நடத்திய நாளன்று பிரிட்டிஷ் ஏர்வேஸ் வானூர்தி தரை இறங்கியிருக்கிறது. பயணிகள் அனைவரும் வெளியே வந்தபிறகே தாக்குதலை தொடங்கினார்கள்.
 
புலிகள் இது குறித்து எல்லாம் கவலை கொள்ளாமல் 1:30 நிமிடத்துக்கே தாக்குதல் தொடங்கி இருப்பார்கள் என்றால், சிறிலங்கா வான்படையை அன்றே நிர்மூலம் ஆக்கியிருப்பார்கள்.
 
ஆனால் என்ன செய்வது? ஊடக பலம் இல்லை. உலகத்தில் எல்லோரும் அவர்களை அழித்துவிடவேண்டும் என்று துடிக்கிறார்கள்.
 
சந்திரிகா அம்மையார் 1995 ஆம் ஆண்டு தொடக்கம் 2000 ஆம் ஆண்டு வரை மிகப்பெரிய பொருளாதாரத் தடையை அங்கு விதித்திருந்தார். கடுகைக்கூட தமிழ் ஈழத்துக்குள் நுழைய விடாமல் பார்த்துக்கொண்டார். அப்படி இருந்தும் புலிகள் தம் மக்களைப் பட்டினிச்சாவில் விட்டுவிடவில்லை. விவசாயத்தைத் திட்டமிட்டு அவர்கள் நடத்தினார்கள். ஏழு லட்சம் மக்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு அரிசி வேண்டும், எவ்வளவு தேங்காய் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு விவசாயத்தை ஒழுங்குபடுத்தினார்கள்.

இவை எல்லாம் உலகத்துக்கு எடுத்துச் சொல்லப்படவில்லை. ஊடகங்கள் திட்டமிட்டு மறைத்தன. எல்லா இயக்கங்களையும் போல இவர்களும் பல தவறுகள் செய்திருக்கிறார்கள். ஆனாலும் எல்லா தவறுகளையும் மீறி ஒரு மகத்தான மக்கள் இயக்கமாக இருந்திருக்கிறார்கள்.
 
2002 ஆம் ஆண்டில் நான் பிரபாகரனைச் சந்தித்தேன். நான் சந்திக்கும் இடத்திற்குள் அவர் உள்ளே நுழைந்தபோது, அவருக்கு யாரும் சல்யூட் அடிக்கவில்லை. தனக்கான இருக்கையைத் தானே எடுத்துப் போட்டுக்கொண்டார். சின்ன போராளிகள் கூட அவருக்கு வணக்கம் சொல்லவில்லை. பணிவுடன் கடந்து சென்றார்கள், அவ்வளவுதான்.
 
தனக்கு தாகம் எடுத்தபோதுகூட தானே போய் தண்ணீர் எடுத்து அருந்தினார். ஒரு தன்முனைப்பு இல்லாத மனிதர். எல்லாப் பொறுப்புகளையும் பகிர்ந்து கொடுத்துவிட்டு, இலட்சியத்தை நிர்வகித்துச் செல்லக்கூடியவராக இருந்தார். எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தெளிவாக, பிசிறில்லாமல் அவரால் பதில் சொல்ல முடிந்தது. மிக முக்கியமாக தான் ஒரு மாபெரும் தலைவர் என்ற பெருமையே இல்லாத மனிதர்.
 
கிட்டத்தட்ட ஒரு லட்சம் தமிழர்களின் மரணம் குறித்து இந்தியா கிஞ்சித்தும் அலட்டிக் கொள்ளாததும் ஈழத்தமிழர்களை அழிக்க ஆயுதம், பயிற்சி கொடுத்த துரோகமும் இந்திய தேசியம் என்ற ஒருமை, ஒரு மாயை என்று இங்குள்ள பெரும்பான்மை தமிழர்களை எண்ண வைத்திருக்கிறது. இந்தப் பழியில் இருந்து இந்தியா விடுபட முடியுமா? 
 
இந்தியாவின் கை இரத்தப் பழியை சுமக்கிறது. இதை ஒரு போதும் அது கழுவிக்கொள்ள முடியாது. என்றேனும் ஒருநாள், தமிழ் இனத்துக்கு அது பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்.

கடைசிக்கட்டத்தில், மூன்று லட்சம் மக்கள் ஒரு சிறிய நிலப்பரப்பில் முற்றுகையிடப்பட்டு தொடர்ச்சியான எறிகணை வீச்சு, பொஸ்பரஸ் குண்டுகள், கிளஸ்டர் குண்டுகள் என்று உயிர்கள் பொசுக்கப்பட்டபோது கூட, அப்போதைய வெளியுறவு அமைச்சர் முற்றுகையிடப்பட்ட இடத்தில் 80 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள் என்றார்.
 
ஆனால் போர் முடிந்தபிறகு மூன்று லட்சம் மக்கள் வந்து சேர்ந்தார்கள் இல்லையா?

அப்படியானால் மூன்று லட்சம் பேரில் இரண்டேகால் லட்சம் பேர் படுகொலை செய்யப்பட்டால்கூட பறவாயில்லை என்ற நிலையைத்தான் இந்தியா எடுத்திருக்கிறது. இவை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியாத துரோகம்.
 
அதேபோல கடைசி மூன்று நாட்களில் படுகாயம் அடைந்த 10 ஆயிரம் மக்களை புல்டோசர் ஏற்றிக் கொன்றிருக்கிறார்கள். மே 18 ஆம் நாள் சண்டையில் மட்டும் 20 ஆயிரம் மக்களை உயிரோடு புதைத்திருக்கிறார்கள். இவை எல்லாம் தெரியாதவை அல்ல.
 
லண்டனில் இருந்து வெளிவருகின்ற 'ரைம்ஸ்', 'கார்டியன்' பத்திரிகைகள், பாரிசில் இருந்து வெளிவருகிற 'லெமோண்ட்' போன்ற உலக அளவில் மதிக்கப்படும் பத்திரிகைகள் இவற்றை எல்லாம் பதிவு செய்திருக்கின்றன.
 
இருந்தும்கூட மனித உரிமை ஆணையத்தில் சிறிலங்காவை ஆதரித்து இந்தியா வாக்களித்திருக்கிறது. இந்த இனப்பழியில் இருந்து சிறிலங்காவின் பின்நின்ற பாவத்தில் இருந்து இந்தியா தப்பித்துக்கொள்ள முடியாது. வரலாற்றின்- மனச்சாட்சியின் முன்னால் என்றேனும் ஒருநாள் பதில் சொல்லியே தீரவேண்டும்.
 
பிரபாகரன் மரணம் குறித்து இருவேறு கருத்துகள் இருந்துவரும் நிலையில், நாடு கடந்த தமிழீழம் அமைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஈழத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் தற்போது என்ன செய்வது என்று குழம்பிக் கிடக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 
 
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழைய சலித்துப் போன உண்மையைத்தான் நானும் இப்போது சொல்ல விரும்புகிறேன். உலகம் முழுவதும் தமிழர்கள் ஒரு கருத்தில் பிளவுபடாமல் இணைந்து நின்றார்கள் என்றால், உலகம் நமது கோரிக்கையைக் கேட்டுத்தான் ஆகவேண்டும்- இது ஒன்று.
 
நாம் இனி இரண்டு திசைகளில் பயணப்படவேண்டும் என்று நினைக்கிறேன். இதுவரை ஆயுதப் போராட்டம் நடந்தது. ஆயுதப் போராட்டத்துக்குத் துணையாக அரசியல் பின்னால் நின்றது. இப்போது அரசியல் போராட்டம் முதன்மை பெறும். ஆயுதப் போராட்டம் முடியவில்லை. அது கட்டாயம் தொடர்ந்து நடக்கும். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு கெரில்லாப் போர் மையம் கொள்ளும்.
 
இந்தப் போரினால் பாதிக்கப்படாத உங்களுக்கும் எனக்குமே இவ்வளவு வேகம் இருக்கும் என்றால், நேரடியான பாதிப்பைச் சந்தித்த அந்த மக்களுக்கு எத்தனை கோபம் இருக்கும். எனவே கெரில்லாப் போர் நிச்சயம் நடக்கும். ஆனால் அதனைவிட மேலாக உலக அளவில் ஒரு அரசியலைக் கட்டி எழுப்ப வேண்டும். தமிழகத்தில் ஈழ ஆதரவு அரசியல் என்பது, அனைத்து இந்திய மக்களுக்கும் உண்மைகளை எடுத்துச் சொல்வது, ஒவ்வொரு அரசியல் கட்சியிடமும் ஈழம் பற்றி கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
 
முல்லைத்தீவில் நடந்த அந்த உச்சபட்சக் கொடுமைதான் தமிழீழத்துக்கான தார்மீக நியாயப்பாடாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து. தொடர்ந்து நாம் பணியாற்றினால் 2020 ஆம் ஆண்டுக்குள் தமிழ் ஈழம் வரும் என்பது எனது நம்பிக்கை.

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியைஅளித்துள்ளார். -இராணுவத் தரப்பு

விடுதலைப் புலிகளின் முக்கிய ஆவணத் தொகுதி ஒன்றினை படையினர் மீட்டுள்ளனர்

தமிழீழ விடுதலைப் புலிகளினால் மிகவும் சூட்சுமமான முறையில்பாதுகாக்கப்பட்டு வந்த மிக முக்கியமான ஆவணங்களைஇராணுவத்தினர் மீட்டுள்ளனர். கடந்த சில தினங்களாக வன்னியில்மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதலின் போது மூன்று பிளாஸ்டிக்கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்புதெரிவித்துள்ளது. பல அரியவகை ஆங்கில நூல்கள்மொழிபெயர்க்கப்பட்டு, அவையும் விடுதலைப் புலிகளுக்குப்பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறைத் திணைக்களத்தின்உயரதிகாரியான அநுரா சேனநாயக்க குறிப்பிட்டுள்ளார். 

பல அரியவகை ஆங்கில நூல்கள் மற்றும் இராணுவ ஆராய்ச்சிப்புத்தகங்கள் உள்ளிட்ட சுமார் 270 ஆங்கில நூல்கள், கட்டுரைகள்மற்றும் புலனாய்வுத் தகவல்கள் என்பன சீராகத் தமிழில்மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களும் இவற்றில் காணப்படுவதாகஅவர் மேலும் கூறியுள்ளார்
. 

இதனைத் தவிர, இலங்கை ராணுவத்தின் முப்படைப் பிரிவுகளும் அமைத்துள்ள தளங்கள், அவர்களுடைய படைபலம், அதிகாரிகள் வரிசை, அவர்களிடம் இருந்த ஆயுதங்கள், வாகனங்கள், இதர படை பலங்கள், அவர்கள்தாக்குதல் நடத்த பயன்படுத்தக்கூடிய நில, நீர், வான் பாதைகள், அவர்களுடைய தகவல் தொடர்பு கட்டமைப்பு,அவர்களுடைய ராணுவத் தலைமையகங்கள், பாசறைகளின் எண்ணிக்கை, பாசறைகளின் அமைப்பு, பாசறைகளைஅணுகுவதற்கான சாலைகள், பாசறைகளில் தாக்குவதற்கு ஏதுவான வலுக்குறைந்த தற்காப்பு அரண்கள், ராணுவஉத்திகளுக்குப் பயன்படக்கூடிய வரைபடங்கள், ஆயுதங்களைக் கையாள்வதற்கான வழிமுறைகள், தாக்குதலுக்குத்தேவைப்படும் ஆயுதங்கள், சாதனங்கள், கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்று எல்லாவற்றையும் எளிமையானதமிழிலில் அச்சிடப்பட்ட ஆவணங்களும் இவற்றில் இருப்பதாக அறியப்படுகின்றது
. 

இவை மட்டுமன்றி வெடிகுண்டுகள், கண்ணி வெடிகள் தயாரிக்கும் முறை, மின்கலன்களைப் பயன்படுத்திமின்சாரம் தயாரிப்பது, மின்கலன்களையே தயாரிக்கும் முறை, வெளிநாடுகளில் கிடைக்கும் ஆயுத உதிரிபாகங்களைத் தருவித்து இணைக்கும் முறை, போர் உத்திகள், கண்ணி வெடிகளைப் புதைக்கும் முறை, நாட்டுவெடிகுண்டுகளையும் குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும் வெடிகுண்டுகளையும், வெடி குண்டு என்ற சந்தேகம்வராதபடிக்கு சிற்றுண்டிப் பெட்டியில் டிரான்சிஸ்டர் போன்றவற்றின் வடிவிலான குண்டுகளையும் தயாரிக்கும்முறைகளும் இந்த ஆவணங்களில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன
. 

இந்த கொள்கலன்களிலிருந்து கடந்த 30 வருடப் போராட்டத்தின் பல முக்கியமான ஆவணங்கள் இருப்பதாகக்கூறப்படுகின்றது
. 

இலங்கை இராணுவத்துக்கு எதிராக 30 ஆண்டுகளுக்கும் மேலாக தாக்குதல் தொடுத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் தன்னுடைய இயக்கத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு மிகச் சிறந்த ராணுவக் கல்வியைஅளித்துள்ளதாக இதன்மூலம் தெரியவருவதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP