சமீபத்திய பதிவுகள்

கடவுளின் துகள் தேடி பரிசோதனை ஆரம்பம்.

>> Friday, September 26, 2008

lankasri.comகடந்த பல வருடங்களாக திட்டமிடப்பட்டு தற்போது செயற்படுத்தப்படக் கூடிய நிலையை எட்டியுள்ள கடவுளின் துகளைத் தேடும் பரிசோதனைக்கான ஆயத்தப்பணிகள் அதன் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்த நிலையில் குறிப்பிட்ட பரிசோதனை 10-09-2008ம் திகதி காலை (ஐரோப்பிய நேரப்படி) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Cern என்ற அமைப்பின் ஆதரவில் ஐரோப்பாவில் அமைக்கப்பட்டுள்ள, சுமார் 5 பில்லியன் பிரித்தானிய பவுண்கள் செலவில் உருவான, சுவிஸ்- பிரான்ஸ் எல்லைகளை ஒட்டிச் செல்லும் நிலக்கீழ் பரிசோதனைக் கூடத்தில் நடைபெறவுள்ள, உலகின் மிகப் பெரிய பெளதீகவியல் பரிசோதனையாக அமையவுள்ள இப்பரிசோதனையின் போது நேர் ஏற்றம் கொண்ட புரோத்தன் துணிக்கைகளாலான இரண்டு கற்றைகள் எதிர் எதிர் திசைகளில் உச்ச வேகத்தில் சுமார் 27 கிலோமீற்றர்கள் உள்ள நிலக்கீழ் வட்டப்பாதையில் மோதவிடப்பட உள்ளன.

இந்த வட்டப் பாதை நெடுகினும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 1000 க்கும் அதிகமான வளைய வடிவ மின் காந்தங்கள் மேற்குறிப்பிட்ட புரோத்தன் கற்றைகளை வட்டப் பாதையில் இயக்கவுள்ளன.

இந்தப் பரிசோதனையின் போது ஒரு செக்கனுக்கு 11,000 தடவைகள் என்ற விகிதத்தில் புரோத்தன் கற்றைகள் மேற்குறிப்பிட்ட 27 கிலோமீற்றர்கள் வட்டப்பாதையில் கிட்டத்தட்ட ஒளியின் வேகத்துக்கு ஒத்த உச்ச வேகத்தில் எதிர் எதிர் முனைகளில் பயணித்து மோதவுள்ளன.

இந்த மொத்துகை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியில் இருக்கும் வெப்பநிலைக்கு (கிட்டத்தட்ட -271 பாகை செல்சியஸ்)நிகர்ந்த வெப்பநிலையில் நடத்தப்படுவதோடு.. இந்த மொத்துகையினால் தோன்றும் சூழல் என்பது பிரபஞ்சம் தோன்றக் காரணமான பெரு வெடிப்புக்கு (Big Bang) பின்னான உடனடிச் சூழலை ஒத்ததாக இருக்கும் என்றும் விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்தப் பரிசோதனையில் இருந்து திணிவு என்றால் என்ன.. அந்தத் திணிவை ஆக்கும் அடிப்படை அலகு என்ன என்பதை அறியக் கூடியதாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

நாம் காணும் பிரபஞ்சத்தில் நட்சத்திரங்கள்,வாயுக்கள், கோள்கள், அகிலத் தொகுதிகள் போன்ற கூறுகள் மொத்தப் பிரபஞ்சத்தில் வெறும் 4% ஆகும். பிரபஞ்சத்தில் 23% கரும்பொருளாகவும் 73% கருஞ்சக்தியாகவும் இருப்பதாக நவீன விண்ணியல் அவதானிப்புக்கள் கூறுகின்றன.

இந்த நிலையில் செப்டம்பர் திங்கள் புதன்கிழமை(10-09-2008)காலையில் இருந்து நடைபெற ஆரம்பித்துள்ள இப்பரிசோதனையானது விண்ணியல் சார்ந்து மட்டுமன்றி அடிப்படை பெளதீகம், இப்பிரபஞ்சத்தினை ஆக்கியுள்ள அடிப்படை கூறுகள், இயற்கை பற்றிய அற்புதங்கள் சிலவற்றுக்கு விடை பகரலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221061449&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

அசைவ உணவை தவிர்ப்பது ஆபத்து

lankasri.com"சைவ உணவே சிறந்தது, அசைவ உணவை தவிர்ப்பது நல்லது'' என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால் ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் தங்கள் ஆய்வு முடிவில் மாறுபட்ட கருத்தை தெரிவித்து இருக்கிறார்கள்.

வெறும் சைவ உணவை மட்டும் சாப்பிடுபவர்களுக்கு சில வைட்டமின் குறைபாடு ஏற்படுகிறது. மூளை சுருங்கும் பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று அவர்கள் கூறியுள்ளனர். "பி12" வைட்டமின் சத்து பால், இறைச்சி, மீன், ஈரல் போன்றவற்றில் அதிகமாக உள்ளது.

இவற்றை சாப்பிடாத வர்களுக்கு "பி12" குறைபாடு ஏற்பட்டு மூளை திறன், உடல் திறன், ஞாபக சக்தி குறைபாடு போன்றவை ஏற்படும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ளவர் களும், இந்த பாதிப்புகள் வரும் வாய்ப்பு அதிகம். அசைவ உணவும் அவசியம் என்பதற்காக கொழுப்பு சத்துஉணவை அதிகம் சாப்பிட வேண்டும் என்பதில்லை.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1221377574&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

காய்கறி மட்டுமே சாப்பிட்டால் மூளை என்னாகும்?

 
lankasri.com"முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு விட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனால், அவர்கள் மூளை சுருங்குவதற்கான வாய்ப்பு உள்ளது"என, ஆக்ஸ்போர்டு பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலை விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதாவது:

"பி12" விட்டமின் சத்து உடலுக்கு மிகவும் முக்கியம். இறைச்சி, மீன், பால் போன்றவற்றில் இந்த விட்டமின் அதிகமாக உள்ளது. அதே நேரத்தில் அனைத்து காய்கறிகளிலும் போதிய அளவில் விட்டமின் இருப்பதாக கூற முடியாது. ஒரு சில சைவ உணவுகளில் மட்டுமே போதிய விட்டமின் சத்துக்கள் உள்ளன. "பி12" விட்டமின் பற்றாக்குறையால் ரத்த சோகை, அழற்சி ஆகியவை ஏற்படுகின்றன. இதனால், முழு நேரமும் சைவ உணவுகளை சாப்பிடுவோருக்கு மூளை சுருக்கம் ஏற்படுகிறது. 61 முதல் 87 வயதுக்கு உட்பட்ட 107 பேரிடம் நினைவு, உளவியல் பரிசோதனை செய்யப்பட்டதன் மூலம், அவர்களது மூளையை "ஸ்கேன்" செய்ததன் மூலமும் இந்த விவரம் தெரியவந்தது.

இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

பூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்

பூமியை ஒத்த இரு கோள்கள் மோதியதற்கு சான்றாக விளங்கும் நட்சத்திர தூசுகள் - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்
அண்டவெளியில் பொது ஈர்ப்பு மையத்தைக் கொண்ட இரட்டை நட்சத்திர முறைமையொன்றை சுற்றி பாரிய தூசுப் படலங்கள் வலம் வருவது அவதானிக்கப்பட்டதாகவும். அவை பூமியையொத்த இரு கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஏற்பட்ட மிக மோசமான சிதைவால் உருவாகியவையாக இருக்கலாம் என தாம் கருதுவதாகவும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூமியும் வெள்ளிக் கிரகமும் ஒன்றுடன் ஒன்று மோதி அழிவடையும் பட்சத்தில் உருவாகும் பாரிய தூசுப் படலத்தை ஒத்ததாக இது உள்ளதென மேற்படி ஆய்வில் பங்கேற்ற கலிபோர்னியா பல்கலைக்கழக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பென்ஜமின் சுக்கெர்மன் தெரிவித்தார்.

மேற்படி நட்சத்திர தூசுக்களானது, பூமியிலிருந்து 20,307,300 ஒளியாண்டுகளுக்கு அதிகமான தூரத்தில் மேஷ நட்சத்திரத் தொகுதியிலுள்ள நட்சத்திரத்தை சுற்றியே இந்த தூசு காணப்படுவது கண்டறியப்பட்டதாக மேற்படி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு ஒளியாண்டானது ஒரு வருடத்தில் ஒளி பயணிக்கும் தூரமான 6 திரில்லியன் மைல்களுக்கு சமமாகும்.

 

 

StumbleUpon.com Read more...

பூமிக்கு ஆபத்தா? வானத்தில் தோன்றிய 40 `அதிசய' ஒளி- விஞ்ஞானிகள் அதிர்ச்சி

 
வானில் அவ்வப்போது இயற்கைக்கு மாறாக பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இதை கண்காணித்து வருகின்றனர்.

கடந்த 11 நாட்களுக்கு முன்பு வானில் 40 வகையான புதிய வெளிச்சம் தோன்றியுள்ளது. இதை பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்தனர்.

இந்த வெளிச்சம் (ஒளி) மிகப்பெரிய சக்தி உடையதாக விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் ஆண்டுக்கு முன்பு இத்தகைய ஒளி தோன்றியிருக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.

ஜெர்மனி முனிஞ்ச்-ல் உள்ள இ.எஸ்.ஓ. என்ற வான ஆராய்ச்சி அமைப்பு இதுபற்றி ஆய்வு செய்து வருகிறது.

இந்த 40 வகையான ஒளியும் பூமியில் விழுந்தால் ஒரே நாளில் ஒட்டு மொத்த உலகமும் அழிய வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அந்த விஞ்ஞானிகள்.

11 நாட்களாக இந்த ஒளி அவ்வப்போது தோன்றி மறைகிறதாம். இதன்மூலம் பூமியில் பெரிய விளைவுகள் ஏற்படுமோ என்ற புதிய அச்சம் உருவாகி உள்ளது.

 

 

StumbleUpon.com Read more...

போலீஸ் ஸ்டேஷனில் பெண் வரவேற்பாளர்கள் திட்டம் "சக்சஸ்"

lankasri.comசென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்களில்,அறிமுகப்படுத்தப்பட்ட பெண் வரவேற்பாளர் திட்டம் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.பொதுமக்கள் குறிப்பாக பெண்கள், தற்போது போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் கொடுக்க துவங்கியுள்ளனர்.

பிரச்னைகளை தீர்ப்பதற்காக, பொதுமக்கள் போலீஸ் ஸ்டேஷன் களை நாடி சென்றால்,அங்கு போலீசார் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களை வெறுப் படைய செய்கிறது.
இதனால்,பொதுமக்கள் புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் செல்ல பயப்பட்டனர்.போலீஸ் ஸ்டேஷன்களில் ஒரு சில போலீசார் செய்யும் தவறு காரணமாக,ஒட்டு மொத்த காவல்துறைக்கே களங்கம் ஏற்பட்டு விடுகிறது.

இதைத் துடைக்கும் வகையிலும், போலீசார் பொதுமக்களின் நண்பன் என்பதை விளக்கும் வகையிலும் சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் "போலீஸ் ஸ்டேஷன் களில் பெண் வரவேற்பாளர்"என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

காவல் நிலையங்களில்,புகார் கொடுக்க வரும் பொதுமக்களை இன்முகத்துடன் வரவேற்று,கருணையுடன் அவர்கள் புகார்களை பெற்றுக் கொள்ளும் வகையில்,இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. பொதுமக்களிடம் புகார் பெறும் பெண் வரவேற்பாளர் அதற்கு உரிய உதவிகளை மேற்கொள்வார்.

இவர்கள் கமிஷனரகத்தின் தனிக்கட்டுப்பாட்டில் செயல் படுவர். இத்திட்டத்திற்காக 39 பெண் போலீசாருக்கு சிறப்பு பயற்சிகள் அளிக்கப்பட்டது.

டி.ஜி.பி.,ஜெயின் சமீபத்தில் பெண் வரவேற்பாளர் திட்டத்தை துவக்கி வைத்தார்.இந்தத் திட்டத்தை விரைவில்,தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும் என்றும் தெரிவித்தார்.இந்தப் பெண் வரவேற்பாளர் திட்டம் தற்போது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து புகார் கொடுக்க வந்த பொதுமக்கள் கூறுகையில்,"போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்க சென்றால்,போலீசார் எரிந்து விழுவார்கள்.

உண்மை எதுவென்று தெரியாமல் புகார் கொடுக்க வந்தவர்கள் மீதே ஆத்திரத்தை காட்டுவார்கள்.பெண்கள்,சில நேரங்களில் அவமானப்பட்டு உள்ளனர். ஆனால், இந்த பெண் வரவேற்பாளர்கள் கனிவுடன் எங்களை வரவேற்று புகார்களை பெற்று கொள்கின்றனர். யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கமாக கூறுகின்றனர். படிப்பறிவற்றவர்களுக்கு பெரும் உதவி செய்கின்றனர். இந்த திட்டத்தால், காவல்துறையினர் மீது பொதுமக்களிடம் நன் மதிப்பு ஏற்படும். எக்காரணம் கொண்டும் பெண் வரவேற்பாளர்களை திட்டத்தை கைவிடக் கூடாது,"என்றனர்.
 
 
 

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் வாகனம் ஓட்டுபவர்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப தடை; கலிபோர்னியா கவர்னர் அர்னால்டு புதிய உத்தரவு

 
 
lankasri.comசாலைகளில் வாகனம் ஓட்டுபவர்கள் செல் போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, எஸ்.எம்.எஸ். படிக்கக் கூடாது என்று அர்னால்டு உத்தரவிட்டு இருக்கிறார்.

ஆலிவுட் திரை உலகில் அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக இருந்து இப்போது அமெரிக் காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருப் பவர் அர்னால்டு சுவாஸ் நேகர். கார், மோட்டார் சைக்கிள்களை அதிவேகத்தில் ஒட்டியும், சாகசங்கள் செய் தும் ரசிகர்களை பிரமிக்க வைக்கும் இந்த முன்னாள் நடிகர் இப்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார்.

கலிபோர்னியா மாகாணத்தில் கார் ஒட்டும் டிரைவர்கள் செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பக்கூடாது, செல்போனில் வரும் எஸ்.எம்.எஸ். செய்திகளை படிக்கவும் கூடாது என்று அந்த உத்தர வில் கூறியிருக்கிறார்.

முதல் தடவையாக இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு ரூ.1000 அபராதமும் 2-வது தடவை இந்த குற்றத்தை செய்கிறவர்களுக்கு ரூ.2500-ம் அபராதமாக விதிக்கப் படும். கார் ஓட்டும்போது செல்போனில் பேசவும் கூடாது. கவனம் முழுவதும் ரோட்டின் மீது தான் இருக்க வேண்டும்.

டிரைவர்கள் கவனத்தை சிதற விடுவதால் தான் சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கின்றன என்கிறார் அர்னால்டு.

அமெரிக்காவில் சமீபத் தில் நடந்த ஒரு ரெயில் விபத்தில் 25 பேர் பலியா னார்கள். என்ஜின் டிரைவர் எஸ்.எம்.எஸ். அனுப்புவதி லேயே கவனமாக இருந்தால் தான் 2 ரெயில்கள் மோதி விபத்துக்குள்ளானது என்று விசாரணை அறிக்கை கூறு கிறது.

 

 

StumbleUpon.com Read more...

தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.

டொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.

Imageஇலங்கை அதிபர் உரை நிகழ்த்துவதை எதிர்த்து

நியூயார்க் நகரில் தமிழர்கள் கண்டனப் பேரணி

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, ஐ.நா. பொதுச் சபையில் உரை நிகழ்த்துவதை எதிர்த்து நியூயார்க் நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்ட கண்டனப் பேரணி நடந்தது.

இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் அமைப்பு இந்த பேரணியை நடத்தியது. இதில், அமெரிக்கா, கனடா வாழ் தமிழர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

டொரன்டா, மான்ட்ரீல் உள்ளிட்ட நகரங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் தமிழர்கள் ஐ.நா. பொதுச் சபை முன்பு கூடி கண்டனப் பேரணியில் கலந்து கொண்டனர்.

வாகன ஏற்பாடுகளை கனடாவில் உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து கிழக்கு மாகாண தமிழ்மக்களை விடுவித்தது போன்று வடக்கில் வாழும் தமிழ் மக்களையும் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து விடுவித்து மக்களாட்சியை நிலைநிறுத்தவே படையெடுப்பை மேற்கொண்டு வருவதாக பேசியும், விமான குண்டு வீச்சு மூலம் 2,25,000க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கியும், இனப்படுகொலையை நடத்தி வரும் ராஜபக்சேசவின் கோர முகத்தை ஐ.நா. சபையின் முன்பு தோலுரித் காட்ட இந்தப் பேரணியை நடத்தியதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

இனப்படுகொலையைக் கண்டிக்கும் முழக்க அட்டைகளையும் பதாகைகளையும் தமிழ் உணர்வாளர்கள் பேரணியில் தாங்கியிருந்தனர்.

இந்த நிகழ்ச்சியை கனடாவில் உள்ள அனைத்து தமிழ் வானொலிகள், டிவிகள் நேரடி ஒலி, ஒளிபரப்பு செய்தன.

கண்டனப் பேரணியின் முடிவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் வழக்கறிஞர்கள் உருத்திரகுமாரன், நாதன் ஸ்ரீதரன், உஷா ஸ்ரீகந்தராஜா, வனிதா இராசேந்திரம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) மு.தியாகலிங்கம் (தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்) ஆகியோர் உரையாற்றினர்.

போராட்டத்திற்கு நியூயார்க் காவல்துறை முழு ஒத்துழைப்பும் அளித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தமிழர்கள் நடத்திய இந்த பிரமாண்டப் பேரணியை படம் பிடிக்க பெரும் திரளான டிவி கேமராமேன்கள், பத்திரிக்கை புகைப்படக்கார்ரகள் குவிந்தனர். பன்னாட்டு செய்தியாளர்களும் செய்தி சேகரித்தனர்.

ஆதரவு
தமிழர்கள் போராட்டம் நடத்திய அதே பகுதியில், சீன அரசைக் கண்டித்து திபெத்தியர்களும் பெரும் திரளாக கூடி போராட்டம் நடத்தினர். தமிழர்களின் பேரணிக்கும் இவர்கள் ஆதரவு தெரிவித்தனர். அதேபோல ஈரான் அரசுக்கு எதிராக திரண்ட யூதர்களும் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
 

StumbleUpon.com Read more...

புது கட்சி - வடிவேலு

  அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
 
Imageநான் ஒரு காமெடி நடிகன். பஃபூன் மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன்.
விஜயகாந்த்- வடிவேலு மோதல் : விஜயகாந்த்தை எதிர்த்து புது கட்சி
வடிவேலு அறிவிப்பு
- சென்னை செப் 25 : விஜயகாந்த்தை எதிர்த்து கண்டிப்பாக போட்டியிடுவேன். இது சத்தியம். இதற்காக கட்சி தொடங்கவும் நான் தயார். பஃபூனான என்னுடன் விஜயகாந்த் மோதுவது வியப்பாக இருக்கிறது என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். வடிவேலு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளதாவது :
திமுக என்னை பகடைக் காயாக பயன்படுத்துகிறது என்றும், ஆளும் கட்சியினர் தூண்டுதலில் நான் செயல்படுவதாகவும் விஜயகாந்த் சொல்லி இருப்பது குழந்தைதனமான குற்றச்சாட்டு. இந்த அரசு மக்களுக்கு நல்லது செய்ய நினைக்குமே தவிர இவரை ஒழிக்க யோசனை பண்ணாது.
விஜயகாந்த் ஆட்கள் என் வீட்டை தாக்கியபோது, "முதல்வர் ஆகும் எங்கள் தலைவரை எதிர்க்க கூடாது. மீறினால் வீட்டை தீ வைத்து கொளுத்துவோம். குண்டு வைத்து தகர்ப்போம்" என்றதை இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் எல்லோரும் கேட்டார்கள்.
விஜயகாந்துக்கு வீரம் இருந்தால் அதை அரசியல் கட்சிகளிடம் காட்டட்டும். என்னைப் போன்ற சாதாரணமானவர்களிடம் ஏன் காட்ட வேண்டும்? எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் விரோதம் கிடையாது. ஏற்கனவே விஜயகாந்த் தூண்டுதலால் என் ஆபீசை தாக்கியவர்கள் கடந்த ஒரு வருடமாக அடிக்கடி எனக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தார்கள். மொட்டைக் கடிதங்களும் வந்தன. இப்போது மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
காமெடி நடிகன்
நான் ஒரு காமெடி நடிகன். பஃபூன், மக்களை சிரிக்க வைத்து பிழைப்பு நடத்துகிறேன். என்னை ஏன் சீண்டுகிறார் என்பது எனக்குப் புரியவில்லை. ஆனால், நான் இனிமேல் சும்மா இருக்க மாட்டேன். அவரை எதிர்த்து எல்லா கட்சிகளின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுவேன். கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன்.
விஜயகாந்த்தை எதிர்க்கத் தேவைப்பட்டால் புது கட்சி துவங்கவும் கூட நான் தயார். எல்லா கட்சிகளிடமும் எனக்கு ஆதரவு கேட்பேன். நான் எல்லா கட்சி தலைவர்களுக்கும் பொதுவானாவன். நான் ஒவ்வொரு கட்சி தலைவர்களுக்கும் அறிமுகமானவன்.
இன்னும் சொன்னால் தமிழகத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் வேண்டப்பட்டவன். நான் எந்தக் கட்சிக்கும் ஆதரவாளர் கிடையாது. என்னை யாரும் பயன்படுத்தவும் இல்லை பயன்படுத்தவும் முடியாது" என்றார் வடிவேலு. வடிவேலுவின் இந்தப் பேட்டி, விஜயகாந்த்- வடிவேலு மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளதாகவே தோன்றுகிறது.

 

 

StumbleUpon.com Read more...

கிளிநொச்சி சுற்றி வளைப்பு

கிளிநொச்சி சுற்றி வளைப்பு
 
 
 
கொழும்பு
இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தங்கி இருக்கும் கிளிநொச்சி நகரைச் சுற்றி வளைத்துவிட்டது என்று இலங்கை ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடபகுதியில் கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவம் புலிகளின் பகுதியில் முன்னேறி வருவதுடன், அவர்கள் கைவசம் இருந்த பல பகுதிகளை மீட்டு வருகிறது.
இந்நிலையில், பிரபாகரன் தங்கியிருக்கும் கிளிநொச்சி பகுதியை ராணுவம் சுற்றி வளைத்து விட்டதாக, லெப்டினன் ஜெனரல் சரத்பொன் சேகா கூறியிருக்கிறார்.
கொழும்பில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், இலங்கை ராணுவம் கிளிநொச்சி நகருக்கு ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் தற்போது முகாமிட்டுள்ளது என்றும், சுற்றி வளைக்கப்பட்ட கிளிநொச்சி மீது அடுத்த வாரம் தாக்குதல் துவங்கும் என்றும் கூறினார்.
அடுத்த சில நாட்களில் மிகக் கடுமையான சண்டையை எதிர்பார்க்கலாம் என அவர் தெரிவித்தார். இதனிடையே வடக்கு பகுதியில் ராணுவத்துக்கும், புலிகளுக்கும் இடையே நடந்த புதிய மோதலில் 37 புலிகள் உயிரிழந்தனர். ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
நேற்று நடந்த விமானப் படை தாக்குதலில் கிளிநொச்சிக்கு வடக்குப் பகுதியில் உள்ள அக்கராயன் குளம் என்னுமிடத்தில் உள்ள புலிகளின் முகாம் சேதமடைந்ததாகவும், ஏராளமான புலிகள் காயம் அடைந்திருக்கக்கூடும் என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவம் தங்கியுள்ள பகுதியில் இருந்து பார்க்கும் போது, நகரில் உள்ள சில கட்டடங்களைக் காண முடிகிறது என்று அவர் தெரிவித்தார். ராணுவம் சுற்றி வளைத்துள்ளதை அடுத்து, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தற்போது கூண்டில் அடைபட்ட விலங்கு போல இருக்கிறார் என்றும், விரைவில் புலிகளின் பிடியிலிருந்து கிளிநொச்சியை விடுவிப்போம் என்றும் அந்த ராணுவ அதிகாரி தெரிவித்தார்.
 

 

 

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் பிரதமராக லிவ்னி தேர்வு

இஸ்ரேலின் புதிய பிரதமராக வெளியுறவு அமைச்சர் ஜிப்பி லிவ்னி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இஸ்ரேலின் பிரதமராக பதவியேற்கும் முதல் பெண்மணி ஆவார்.இஸ்ரேல் பிரதமராக இருந்த இஹூத் ஓல்மார்ட் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து புதிய பிரதமரை நியமிப்பதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சித் தலைவர்களுடன் அதிபர் ஷிமோன் பெரிஸ் தீவிர ஆலோசனை நடத்தினார்.அதன் பின்னர் அதிக ஆதரவை கொண்ட ஜிப்பி லிவ்னியை ஆட்சி அமைக்க வருமாறு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிபரின் அழைப்பை ஏற்று தாம் பிரதமராக பதவியேற்க போவதாகவும், அனைத்து கட்சிகளும் தமக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் லிவ்னி கேட்டு கொண்டுள்ளார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1222184980&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அமெரிக்க அதிபர் தேர்தல் கருத்து கணிப்பு:ஒபாமாவுக்கு அதிக ஆதரவு

 
lankasri.comஅமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் கறுப்பு இனத்தைச் சேர்ந்த பராக் ஒபாமாவும், குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கேனும் போட்டியிடுகிறார்கள். இரு வரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒபாமாவுக்கு முன்னாள் அதிபர் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோரும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அங்குள்ள ஒரு நிறுவனம் தேர்தலில் வெற்றி வாய்ப்பு பற்றி ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. தில் ஒபாமாவுக்கே அதிக செல்வாக்கும் வெற்றி வாய்ப்பும் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது.

ஒபமாவுக்கு 51 சதவீத ஓட்டுக்களும் ஜான் மெக்கேனுக்கு 46 சதவீத ஓட்டுக்களும் கிடைத்தன.

அமெரிக்காவில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி, வர்த்தக சரிவு ஆகியவற்றுக்கு குடியரசு கட்சியினரின் அணுகு முறை மற்றும் திட்டங்களே காரணம் என்றும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

பொருளாதார வீழ்ச்சியை சரி கட்டும் முயற்சியில் ஜான்மெக்கேனை விட ஒபாமாதான் அதிக ஆர்வம் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளன.

ஜான்மெக்கேன் அதிபராக வந்தால் இப்போது ஜார்ஜ்புஷ் கடை பிடிக்கும் அதே வழிகளைத்தான் அவரும் கடை பிடிப்பார் என்றும் பெரும்பான்மையான மக்கள் கருதுகிறார்கள்.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1222185972&archive=&start_from=&ucat=1&

 

StumbleUpon.com Read more...

பயங்கரவாதிகளுக்கு துபாய் தொடர்பு

 
 
lankasri.comடெல்லியில் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் கைது செய்யப்பட்டுள்ள முகமது சயீப் மற்றும் இதர பயங்கரவாதிகளுக்கு துபாயுடன் தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது.இவர்கள் ஹவாலா மோசடியிலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக உளவு அமைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பயங்கரவாதிகளுக்கு தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் இணைந்து ஹவாலா மோசடியில் ஈடுபட்டதன் மூலமாகவே அவர்கள் தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை திரட்டி வந்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

 

 

StumbleUpon.com Read more...

பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம்

 
 
அமெரிக்காவில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தகவல் வெளியிட்டுள்ளார்.அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்நாட்டின் மிகப்பெரிய நிதி நிறுவனமான லேமென் பிரதர்ஸ் வங்கி திவாலா அறிவிப்பை வெளியிட்டது.

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த இச்சம்பவம் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. லேமென் பிரதர்ஸ் வங்கியை போல மேலும் சில அமெரிக்க வங்கிகளும் நிதி நெருக்கடிக்கு உள்ளாயின. இதை சரிக்கட்ட அமெரிக்க அரசு ரூ. 3லட்சத்து 40ஆயிரம் கோடியை அவரமாக ஒதுக்கியது. என்றாலும் கூட அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடி தீரவில்லை.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் புஷ் தலைமையில் அவசரக்கூட்டம் ஒன்று நடந்ததது. இக்கூட்டத்தில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக்கட்சி வேட்பாளர் ஜான் மெக்கைன், ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா ஆகியோரும் இதர முக்கிய அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய ஜார்ஜ் புஷ் அமெரிக்க பொருளாதார நெருக்கடியால் பல லட்சம் அமெரிக்கர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமெரிக்க வங்கிகள் கடன் கொடுக்க மறுப்பதும் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பொருளாதார சீர்குலைவை தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

 

 

StumbleUpon.com Read more...

மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்

 
 அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.  2 தீமோத்தேயு 2:22(bible)
 
 
செம்பியத்தில் மயக்க மருந்து கொடுத்து கால் சென்டர் பெண் கடத்தி கற்பழிப்பு:2 வாலிபர்கள் கைது-திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்
செம்பியம் பந்தர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் புனிதா (24) (பெயர் மாற்றபட்டுள்ளது) இவர் வேளச்சேரியில் உள்ள கால் சென்டர் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று வீட்டில் புனிதா மட்டும் தனியாக இருந்தார்.அவரதுபெற்றோர் கோவிலுக்கு சென்று இருந்தனர்.

திரும்பி வந்து பார்த்த போது கதவு பூட்டப்படாமல் சாத்தப்பட்டிருந்தது. வீட்டில் இருந்த புனிதாவை காணவில்லை.அவர் அங்கு சென்றார்.என்ன ஆனார் என்பது தெரியவில்லை.

ஒரு வேளை நேரத்தோடு கால் சென்டர் பணிக்கு புறப்பட்டு சென்றிருப்பார் என்று பெற்றோர் நினைத்தனர். புனிதாவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மறுநாள் புனிதா உடலில் பல இடங்களில் காயங்களோடு,வீட்டுக்கு திரும்பி வந்தார்.அரைமயக்கத்தில் காணப்பட்ட புனிதாவை அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மயக்கம் தெளிந்த புனிதா தன்னை 2 பேர் மயக்க மருந்து கொடுத்து மடிப்பாக்கத்துக்கு கடத்தி சென்று கற்பழித்து விட்டதாக தெரிவித்தார். இதை கேட்ட அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் செம்பியம் போலீசில் புகார் செய்தனர்.

ஆனால் போலீசார் சம்பவம் நடந்தது மடிப்பாக்கம் எல்லை அதனால் அங்கு புகார் செய்யுங்கள் என்றனர். மடிப்பாக்கம் போலீசாரோ பெண்ணை கடத்தியது செம்பியம் எல்லை எனவே அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பி அனுப்பினர். போலீசாரின் அலை கழிப்பால் புனிதாவின் பெற்றோர் வெறுத்து போனார்கள்.

நடந்த சம்பவம் குறித்து அவர்கள் போலீஸ் கமிஷனர் சேகரிடம் நேற்று புகார் மனு அளித்தனர்.அந்த புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.துணை போலீஸ் கமிஷனர் பன்னீர்செல்வம், மேற்பார்வையில் பொறுப்பு இன்ஸ்பெக்டர் சாண்டியாகோ அதிரடியாக விசாரித்தார்.

சம்பவத்தன்று புனிதா வீட்டில் தனியாக இருந்த போது அவருடன் கால் சென்டரில் வேலை பார்த்து தற்போது வேலையை விட்டு நின்று விட்ட நண்பர்கள் இந்தியாஸ்(25),சுரேஷ்(25),ஆகிய 2பேரும் அங்கு வந்துள் ளனர்.

புனிதாவிடம் பேசி கொண்டிருந்தனர். அப்போது புனிதா தனக்கு பிறந்தநாள் என கூறினார்.பார்ட்டி தருவதாக 2பேரும் புனிதாவை பிரபல ஓட்டலுக்கு அழைத்து சென்றனர்.அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தனர்.இதில் புனிதா மயங்கினார்.

புனிதாவை கைதாங்கலாக அழைத்து வந்து காரில் ஏற்றி மடிப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டிற்கு இந்தியாஸ், கூட்டி சென்றான். இதற்கு சுரேஷ்உடந்தையாக இருந்துள்ளான். அங்கு வைத்து மயக்கம் தெளியும் நிலைக்கு வந்த புனிதாவுக்கு மீண்டும் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டான். இந்தியாஸ் மதுபோதையில் இருந்தார். சைக்கோபோல் புனிதாவிடம் மிக கொடூரமாக நடந்துள்ளான். இதனால் புனிதாவின் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.

மயக்கம் தெளிந்த புனிதா என்ன நடந்தது என்று கேட்டதற்கு ஒன்றுமே தெரியாதவன்போல் காரில் ஏற்றி புனிதாவை வீட்டில் விட்டு தப்பி சென்று விட்டான் என்பது தெரிய வந்தது.

புனிதாவை கற்பழித்ததாக நேற்று நள்ளிரவு இந்தியாசையும் உடந்தையாக இருந்ததாக சுரேசையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3 வருட காதலை நட்பு என ஏமாற்றினார்:திருமணம் செய்ய மதம் மாற சொன்னதால் கற்பழித்தேன்;கைதான வாலிபர் பரபரப்பு வாக்கு மூலம்

கால் சென்டர் பெண் புனிதாவை கற்பழித்ததாக கைது செய்யப்பட்ட வாலிபர் இந்தியாஸ் போலீசில் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

புனிதாவும்,நானும்,வேளச்சேரியில் உள்ள சுதர் லேண்ட் கால் சென்டரில் ஒன்றாக வேலை பார்த்தோம்.அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.எங்கு சென்றாலும் ஒன்றாக செல்லும் அளவுக்கு நெருங்கி பழகினோம்.கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளுக்கு புனிதா என்னுடன் டேட்டிங் வந்துள்ளார். அப்போதெல்லாம் பலமுறை நாங்கள் உல்லாசமாக இருந்திருக்கிறோம்.

பிரபல ஓட்டல்களில் டிஸ்கோத்தே பார்ட்டி என புனிதாவை கூட்டி சென்று சுகவாசியாக வாழ்ந்தேன்.அவ்வப்போது எனக்காக புனிதா நிறைய பரிசுகளும் வாங்கித் தந்தாள்.அவளை உயிருக்கு உயிராக காதலித்தேன். 3 வருடம் ஜாலியாக போன எங்களது உல்லாச வாழ்க்கையை நிரந்தரமாக்க எண்ணினேன்.

புனிதாவை திருமணம் செய்து கொள்ளலாம் என எண்ணினேன். எனது விருப்பத்தை அவரிடம் தெரிவித்தேன். அதற்கு அவர் நான் உன்னிடம் நட்பாகத்தான் பழகினேன். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. அதற்கு வேறு ஆளைபார் என முகத்தில் அடித்தால் போல் கூறி விட்டார்.

நானும் விடாமல் எனது நண்பர்கள் மூலம் எப்படியாவது சமாதானம் செய்து புனிதாவை திருமணம் செய்து விடலாம் என தூது விட்டேன்.

திருமணத்திற்கு புனிதா ஒரு நிபந்தனை விதித்தாள். நான் ஆங்கிலோ இந்தியன்,கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவள் உனக்கும் எனக்கும் திருமணம் நடக்க வேண்டும் என்றாள் எனது பெற்றோர் உன்னை எங்களது மதத்திற்கு மாற சொல்கிறார்கள். சம்மதம் என்றாள் தாலி கட்டி கொள்ள ரெடி,இல்லை என்றால் முடியாது என்றாள்.

நானோ முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன் உண்மையான காதலுக்கு ஜாதி, மதம், கிடையாது என நினைப்பவன் ஆனால் மதத்தை காரணம் காட்டி திருமணம் செய்ய மறுக்கிறாளே என வேதனை அடைந்தேன்.

இதற்கிடையே புனிதா என்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டாள். வேறு நபர்களுடன் சுற்றினார். இதுபற்றி நண்பர்களுடன் ஆலோசித்தேன். புனிதாவை கற்பமாக்கினால் அவள் உன்னை திருமணம் செய்து கொள்வார் என்றனர். அதன்படி அவளது பிறந்த நாளான 12-ந்தேதி அவளது வீட்டிற்கு நண்பர் சுரேசுடன் சென்றேன்.

பிறந்த நாள் பார்ட்டி தருவதாக கூறி புனிதாவை வேளச்சேரிக்கு கூட்டிச் சென்றோம். அங்கு நானும் புனிதாவும் மது அருந்தி உற்சாகமாயிருந்தோம்.

இறுதியில் புனிதா தள்ளாடிய நிலைக்கு வந்தார். அப்போது நண்பர்கள் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. அதன்படி மடிப்பாக்கத்தில் உள்ள எனது வீட்டிற்கு புனிதாவை சுரேஷ் உதவியோடு தூக்கி சென்றேன். அங்கு புனிதாவுடன் உல்லாசமாக இருந்தேன்.

மற்றபடி அவரை மயக்க மருந்து கொடுத்து கடத்தி சென்றெல்லாம் கற்பழிக்கவில்லை. இப்போதும் புனிதாவை திருமணம் செய்து கொள்ள நான் தயாராகவே இருக்கிறேன். என அப்பாவியாக போலீசில் கூறி உள்ளார்.

போலீசார் இந்த வழக்கில் சமாதானம் செய்து வைக்கலாம் என முடிவு செய்தனர். ஆனால் புனிதாவின் பெற்றோர் சம்மதிக்காததால் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

 

 

StumbleUpon.com Read more...

ஒரிசாவுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை

தேவாலயங்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் இதுபோன்று எச்சரிக்கை விடுவது இது இரண்டாவது முறையாகும்.

"ஒரிசாவில் தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் தொடர்கின்றன. இத்தகைய சம்பவங்களில் ஈடுபடும் சமூகவிரோதிகளை அடையாளம் கண்டு கடுமையான நடவடிக்கையை மாநில அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்' என்று மத்திய உள்துறை செயலர் மதுகர் குப்தா, ஒரிசா தலைமைச் செயலர் ஏ.கே.திரிபாதிக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கலவரங்கள் தொடர்ந்து நடைபெறுவது கவலையளிக்கிறது. சமூகவிரோத சக்திகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். கலவரத்துக்குக் காரணமானவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மாநிலத்தில் விரைவில் சகஜநிலை ஏற்படுத்துவதற்கான சூழலை உருவாக்க வேண்டும் என்றும் மாநில அரசுக்கு அனுப்பியுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தமால் மாவட்டத்தில் வியாழக்கிழமை சுமார் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர் வீடுகளும், தேவாலயங்களும், வழிபாட்டுத் தலங்களும் தீவைத்து கொளுத்தப்பட்டன. இதைத்தொடர்ந்து மத்திய அரசு இரண்டாவது முறையாக ஒரிசா அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. முன்னதாக கடந்த 19-ம் தேதி கலவரத்தைக் கட்டுப்படுத்த ஒரிசா அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1222411689&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP