சமீபத்திய பதிவுகள்

சமுத்திரமும் அலைகளும்

>> Tuesday, December 22, 2009

 

லூக்கா 21-ம் அதிகாரம் 25-ம் வசனம்இவ்வாறாக சொல்கிறது "சூரியனிலும் சந்திரனிலும் நட்சத்திரங்களிலும் அடையாளங்கள் தோன்றும்; பூமியின்மேலுள்ள ஜனங்களுக்குத் தத்தளிப்பும் இடுக்கணும் உண்டாகும்;சமுத்திரமும் அலைகளும் முழக்கமாயிருக்கும்." அதற்கேற்ப இன்றைய செய்திதாள்களும் இதையே சொல்கின்றன.

அதிகரிக்கும் சுற்றுச்சூழல் சீர்கேட்டால் கடல்களில் இரைச்சல் அதிகரிப்பு
பாரீஸ்: அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக கடல்களில் இரைச்சல் அதிகரித்திருப்பதாக அமெரிக்க நாட்டு ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

இவ்வாறு கடல்களில் ஒலியின் அளவு அதிகரித்திருப்பது திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக அமையும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.

மழை, அலைகள், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவற்றால் ஏற்படும் ஒலியின் அளவு மிக மிக குறைவான வீச்சைக் கொண்டதாகும். அதேபோல சோனார் கருவிகளிலிருந்து வெளியாகும் ஒலி, கப்பல் போக்குவரத்து, கடலில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் ஆகியவற்றின் காரணமாகவும் கடலில் ஒலி அலைகள் பரவுகின்றன.

ஆனால் இந்த ஒலியை, நீரில் இயற்கையாக காணப்படும் வேதிப் பொருள் உள்ளிழுத்துக் கொண்டு விடுகிறதாம். இந்த வேதிப் பொருட்கள் தற்போது கடல்களில் குறைந்து வருகிறது என்பதுதான் இந்த ஆய்வின் முக்கியக் கண்டுபிடிப்பு.

அமிலமயமாக்கல் காரணமாக கடல் நீரில் இந்த வேதிப் பொருளின் அடர்த்தி குறைந்து வருகிது. இதற்கு முக்கியக் காரணம் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரித்திருப்பதே.

அதிகரித்து வரும் கப்பல் போக்குவரத்தே கார்பன் டை ஆக்சைடு கடல் நீரில் அதிகரிக்க முக்கிய காரணம். கடந்த 40 ஆண்டுளில் கடலில் கப்பல் போக்குவரத்து இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாம்.

இப்படி கடல் நீர் மாசுபட்டு வருவதால், அதில் உள்ள வேதிப் பொருள் குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடல்களில் தற்போது ஒலியின் அளவு அதிகரித்துள்ளது.

இந்த நிலை நீடித்தால் திமிங்கலங்கள், டால்பின்கள் உள்ளிட்ட கடல் வாழ் விலங்குகளுக்கு பேராபத்து ஏற்படும் என்று முடிக்கிறது அந்த ஆய்வு.
http://thatstamil.oneindia.in/news/2009/12/22/us-eco-slow-down-10-needs-more.html

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்திய விஞ்ஞானிகள் சொந்த நாட்டுக்கு திரும்ப என்ன செய்ய வேண்டும்-Back to India for scientists

StumbleUpon.com Read more...

வித்தியாசமான காட்சிகள்(Images)StumbleUpon.com Read more...

விமானத்துக்குள் செக்ஸ் சில்மிஷம்

 

செக்ஸ் சில்மிஷம் செய்ததால் ஆவேசம்: விமானத்துக்குள் வாலிபரை அடித்து துவைத்த பெண்கள்
ஜெய்ப்பூர், டிச. 22-
மும்பையில் இருந்து ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது.
 
விமானத்தின் சாதாரண வகுப்புப் பிரிவில் சில பெண்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தனர். அவர்கள் அருகில் வாலிபர் ஒருவர் அமர்ந்திருந்தார்.
 
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது அந்த வாலிபர் ஒரு பெண்ணிடம் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அந்த பெண் 2 தடவை கண்டித்த பிறகும் அந்த வாலிபர் சில்மிஷம் செய்வதை நிறுத்தவில்லை.
 
இதையடுத்து அந்த பெண்கள் விமானப்பணி பெண்ணிடமும், அதிகாரியிடமும் புகார் செய்தனர். அவர்கள் இரு தரப்பினரும் அமைதியாக இருங்கள் என்று சமரசம் செய்தனர். அந்த வாலிபரை கண்டிக்காமல் சென்றுவிட்டனர்.
 
சக பயணிகளும் யாரும் அந்த பெண்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. இதனால் தைரியமான அந்த வாலிபர் மீண்டும் சில் மிஷத்தில் ஈடுபட்டார்.
 
அதோடு அந்த பெண்களை பார்த்து தகாத வார்த்தைகளால் ஏக வசனத்தில் திட்டவும் செய்தார். பதிலுக்கு அந்த பெண்களும் திட்டினார்கள். அந்த வாலிபரிடம் நீ பேசியது தப்பு என்று மன்னிப்புக் கேள் என்றனர்.
 
திமிராக நடந்து கொண்ட அந்த வாலிபர் மன்னிப்பு கேட்க முடியாது என்று சொன்னதோடு அந்த பெண்களை மேலும் இழிவாகப் பேசினார். இது அந்த பெண்களை கொதித்தெழ வைத்தது. அந்த வாலிபரை அடித்து உதைத்தனர்.
 
வாலிபரை அவர்கள் சூழ்ந்து கொண்டு துவைத்து எடுத்தனர். கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் அடித்து அந்த வாலிபரை தாக்கினார்கள்.
 
"ஜெய்ப்பூரில் விமானம் இறங்கியதும் உங்களை என்ன செய்கிறேன் பாருங்கள்" என்று அந்த வாலிபர் மீசையை முறுக்கினார். அதற்கும் அந்த பெண்கள் பயப்படாமல் அடித்து உதைத்தனர்.
 
ஜெய்ப்பூரில் விமானம் தரை இறங்கிய பிறகும் அந்த பெண்களுக்கும் வாலிபருக்கும் இடையே தகராறு நீடித்தது. அந்த வாலிபர் மீது பெண்கள் போலீசில் புகார் செய்தனர்.
 
போலீசார் இருதரப்பினரிடமும் விசாரணை நடத்தினார்கள். நீண்ட நேரத்துக்குப் பிறகு அந்த பெண்கள் புகாரை வாபஸ் பெற்றதால் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்பட்டது.

source:maalaimalar--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பிரபாகரன் தப்ப தயார் நிலையில் இருந்த கப்பல் : இலங்கை புதுக்கதை

 

 

Front page news and headlines today 

 கொழும்பு : விடுதலைப் புலிகள் ஆயுத கடத்தலுக்காக பயன்படுத்தி வந்த கப்பல், இறுதிக் கட்ட போர் நடந்தபோது, பிரபாகரன் தப்பிச் செல்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர் செல்வராஜா பத்மநாதன், இலங்கை பாதுகாப்பு படையினரால் சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், புலிகளுக்கு சொந்தமாக ஐந்து கப்பல்கள் இருப்பது தெரிந்தது. அதில் ஒரு கப்பலை இலங்கை கடற்படை சமீபத்தில் பறிமுதல் செய்தது. அந்த கப்பல், நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது. "பிரின்சஸ் கிறிஸ்டினா' என்ற அந்த பிரம்மாண்ட கப்பல், புலிகளுக்காக ஆயுதம் கடத்த பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கப்பல் தொடர்பான மேலும் பல புதிய தகவல்களை இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மே மாதம், புலிகளுக்கு எதிரான இறுதிக் கட்ட போர் நடந்து கொண்டிருந்தது. அப்போது, பிரபாகரன் உள்ளிட்ட புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள், இலங்கையில் இருந்து பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர். கடல் வழியாக தப்பிப்பதே பாதுகாப்பானது என, முடிவு செய்த அவர்கள், தற்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ள பிரின்சஸ் கிறிஸ்டினா கப்பலை இதற்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டிருந்தனர். பிரபாகரன் உள்ளிட்டோர் தப்பிச் செல்வதற்காக இந்த கப்பல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு முன்னதாகவே பிரபாகரன் உள்ளிட் டோர் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்டு விட்டனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராஜரத்னம் வழக்கு: விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவி செய்ததாகவும், அமெரிக்க பங்குச் சந்தையில், "இன்சைடர் டிரேடிங்' முறை மூலம் 100 கோடி ரூபாய்க்கு அதிகமாக மோசடி செய்ததாகவும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ராஜரத்னம் என்பவர், கடந்த அக்டோபரில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரின் நிதி மோசடி, அமெரிக்க பங்குச் சந்தையில் இதுவரை நடந்த மோசடிகளில் மிகப் பெரியது என, கூறப்பட்டுள்ளது. இவரது பங்குச் சந்தை மோசடி வழக்கு நியூயார்க் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில், ராஜரத்னம் சார்பில் ஆஜரான அவரது வக்கீல் ஜான் டோவ்ட், கோர்ட்டில் கூறுகையில்,"ராஜரத்னம் ஒரு அப்பாவி. அவர் ஒரு போதும் பங்குச் சந்தை தொடர்பான மோசடியில் ஈடுபடவில்லை. கோர்ட்டில் அவரிடம் விசாரணை நடக்கும் போது, இதை அவர் தெளிவுபடுத்துவார்' என்றார். ராஜரத்னம் மீதான பங்குச் சந்தை மோசடி வழக்குகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் என, கூறப்படுகிறது.


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

'உள்நோக்கம்' சரியில்லை!

 

நாடு சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை இப்படி ஓர் அதிசயம் நடந்தது இல்லை.​ தனக்கு முன் ரயில்வே அமைச்சராக இருந்த லாலு பிரசாத் ஆட்சிக்காலம் ​(2004-2009) ரயில்வே துறையின் பொற்காலம் அல்ல என்று நிரூபிக்க வெள்ளை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் இப்போதைய ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி.

லாலு பிரசாதின் ஆட்சிக்காலத்தில் ரயில்வே நிர்வாகம்,​​ அதிலும் குறிப்பாக நிதி நிர்வாகம் எப்படி இருந்தது என்று அறிய "ஆலோசகர்' ஒருவரை நியமித்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.​ அறிக்கை தெரிவிக்கும் சில முக்கிய அம்சங்கள் என்ன தெரியுமா?

லாலு ஆட்சிக் காலத்தில் வருவாய்க்கணக்கில் மொத்தமாக 96,000 கோடி ரூபாய் உபரி கிடைத்ததாகக் கூறப்பட்டது தவறான தகவல்.​ உண்மையில் அந்தத் தொகை 39,500 கோடி ரூபாய்தானாம்.

புதிய வகை கணக்கீட்டு முறையால்தான் இந்த உபரி கிடைத்திருக்கிறது என்றும் அத்துடன் ஆறாவது நிதிக்குழுவின் பரிந்துரைக்கு ஏற்ப ரயில்வே ஊழியர்களுக்குத் தர வேண்டிய ஊதியம்,​​ நிலுவை போன்றவை கழித்துக் காட்டப்படாததாலும்தான் உபரி அதிகமாகவே கணக்கில் வந்தது என்கிறது அறிக்கை.

லாலு பிரசாத் காலத்தில் போக்குவரத்து வளர்ச்சி வீதம் சராசரிக்கும் குறைவுதான்.​ அத்துடன் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருள் உற்பத்திக்கு ​(ஜி.டி.பி.)​ ரயில்வே துறையின் பங்களிப்பு வெறும் 1.15 சதவீதமாகத்தான் இருந்தது.

சரக்குப் போக்குவரத்து இனத்தில் வருவாய் அதிகரித்தது;​ சரக்கு ரயில் பெட்டிகளின் கொள்திறன் கூட்டப்பட்டதால் வருவாயும் உயர்ந்தது.​ சரக்கு ரயில் போய் நிற்கும் கடைசி நிலையத்தில் அதிக நாள்கள் அதைத் தங்கவிடாமல் பெட்டிகளைக் காலி செய்து உடனே பயன்பாட்டுக்குக் கொண்டு வந்ததாலும் வருவாய் உயர்ந்தது.​ பராமரிப்புப் பணிகளை அதிகப்படுத்தியதும் அதற்கு ஒரு காரணம்.

பயணிகள் ரயில் பயன்பாடும் அதிகரித்தது,​​ ஆனால் சர்வதேச செயல்திறனுக்கு இணையாக இந்தியாவில் இது உயரவில்லை.​ பயணிகள் போக்குவரத்துக்கு நாட்டில் இருந்த தேவைக்கு ஏற்பவும் இது இல்லை.​ இதனால் பல்வேறு நீண்டதூர ரயில்களில் எல்லா பருவங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தபடியே இருக்கிறது.

சரக்கு,​​ பயணிகள் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றே தொடர்ந்து பட்ஜெட்டின்போது கூறப்பட்டாலும் சரக்குக் கட்டணம் சராசரியாக 37% உயர்ந்திருக்கிறது.​ உணவுப் பண்டங்களைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் 44%-ம்,​​ உரங்களை ஏற்றிச் செல்வதற்கான கட்டணம் 35%-ம் இதே காலத்தில் ஏறியிருக்கிறது.

அத்துடன் பயணிகள் ரயில் கட்டணத்தில் முதல் வகுப்பு பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டது.​ தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ வெறும் எக்ஸ்பிரஸ்,​​ மெயில் ரயில்கள் சூப்பர்-ஃபாஸ்ட் ரயில்களாக அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டது.​ இதனால் ரயில்வே துறைக்கு வருவாய் உயர்ந்தது.

அதாவது கட்டணங்களை உயர்த்தவில்லை என்பது உண்மையல்ல,​​ மறைமுகமாக கட்டணங்கள் உயர்த்தப்பட்டன,​​ அந்தச் சுமை பயணிகள் மீது விழுந்தது.

லாலு பிரசாத் ஆட்சிக் காலத்தில் விபத்துகளின் எண்ணிக்கையும் ரயில்களில் நடைபெறும் குற்றச் செயல்கள் எண்ணிக்கையும் குறைந்தன என்பது உண்மை.​ அதேபோல ரயில்வே பணியாளர்களின் உற்பத்தித் திறனும் கணிசமாக அதிகரித்தது.

குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம் திட்டமிட்ட செலவு கணிசமாக அதிகரித்து 135% என்ற உயர் அளவை எட்டியது.​ இது ஆரோக்கியமான ஒரு குறியீடாகும்.

இவ்வாறு முந்தைய ஆட்சியில் ரயில்வே துறையின் நன்மை தீமைகளைப் பட்டியலிட்டிருக்கிறது வெள்ளை அறிக்கை.

லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராகப் பதவி வகித்ததும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில்தான்.​ எனவே முந்தைய ஆட்சியில் மிகப்பெரிய மோசடி நடந்திருக்கிறது,​​ மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்,​​ முந்தைய ரயில்வே அமைச்சர் தவறான தகவலை அளித்திருக்கிறார் என்று மறைமுகமாகத் தெரிவித்திருக்கிறார் மம்தா பானர்ஜி.​ நாடாளுமன்றத்துக்கே தவறான தகவலைத் தந்தார் லாலு பிரசாத் என்றுகூட உரிமைப் பிரச்னை கொண்டுவரப்படலாம்.

நம் கேள்வி அதுவல்ல;​ சிறந்த நிர்வாக நிபுணர் என்று உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பாராட்டுப் பெற்று,​​ வெளிநாட்டு நிர்வாகவியல் மாணவர்களுக்கெல்லாம் பாடம் நடத்திய அளவுக்கு உயர்ந்த லாலு பிரசாதை நிர்வாகம் தெரியாதவர் என்று வெள்ளை அறிக்கை மூலம் தோல் உரிக்க வேண்டிய அவசியம்தான் என்ன?​ இந்தத் தவறுகளுக்கு எல்லாம் பிரதமரும் பொறுப்பேற்க வேண்டாமா?​ ​

பிரதமர் மன்மோகன் சிங்கும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும் நாட்டுக்கும் மக்களுக்கும் இதற்கு ​ விளக்கம் அளிக்கக் கடமைப்பட்டவர்கள்.​ கூட்டணிக் கட்சிகள் மாறினாலும் ஆட்சியில் தொடர்வது என்னவோ ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதானே?​ அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்பு என்பது அதுதானே?

இதேபோல பிற துறைகளுக்கும் வெள்ளை அறிக்கை வெளியிடுவார்களா?​ சேற்றை வாரி இறைப்பதற்கு வெள்ளை அறிக்கை என்று பெயர் போலிருக்கிறது..

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP