சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகள் வெளிவராத உண்மைகள் வீடியோ

>> Friday, May 1, 2009

StumbleUpon.com Read more...

இலங்கை செய்திகள் வீடியோவில்

StumbleUpon.com Read more...

இலங்கை அரசால் தகர்க்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவு இணைய தளங்கள்

 

சங்கதி வாசகர்களுக்கு வணக்கம்!

தமிழ்த் தேசிய ஊடகங்களை குறிவைத்து மேற்கொள்ளப்படும் கூட்டுச் சதி நடவடிக்கையில் எமது சங்கதி இணையத்தளமும், சக ஊடகமான தமிழ்க்கதிர் இணையத்தள ஊடகங்கள் சிதைக்கப்பட்டுள்ளன.

தமிழர் தாயகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இன அழிப்பு நடவடிக்கையை பல்வேறு ஆதாரங்களுடன் உடனுக்குடன் வெளியிட்டுவந்த இந்த ஊடகங்கள் சிறீலங்கா - இந்தியாவின் கூட்டுச் சதியில் சிதைக்கப்பட்டுள்ளதை நாங்கள் வாசகர்களுக்கு அறியத் தருகின்றோம்.

தமிழர் தாயகத்தின் இனப்படுகொலையை மறைப்பதற்கு இந்த சக்திகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடித்து, மக்கள் அவலத்தையும், இனப்படுகொலைகளின் ஆதாரங்களையும் மீண்டும் சங்கதி, தமிழ்க்கதிர் ஊடகங்கள் வாசகர்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.

அத்துடன், எமது இணையத்தள தரவுகளின் அடிப்படையில் உலகில் சங்கதியும், தமிழ்க்கதிரும் பார்வையிடுவோர் எண்ணிக்கையில் இலங்கை முதலிடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் இருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எமது பழைய பதிவுகள் காலக்கிரமத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும் என்பதையும் தெரிவிக்கின்றோம்.

StumbleUpon.com Read more...

தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் சிறிலங்கா இராணுவ இணையத்தளம் முடக்கம்

இராணுவ இணையத்தளம் முடக்கம்: பிற்பகல் பயன்பாட்டிற்கு வந்தபோதிலும், சற்று நேரத்தில் மீண்டும் செயலிழந்தது
சிறிலங்கா இராணுவத்தினரின் உத்தியோக பூர்வ இணையத்தளம் இன்று காலை முதல் முடக்கப்பட்டுள்ளது.

இந்த இணையத்தளத்தினை திறக்கும் போது, அரசாங்கம் செய்து வந்த இனப்படுகொலைகள் குறித்து விபரிக்கும் புகைப்படங்கள் மாத்திரமே காட்டப்படுகின்றன.

தமிழீழ ஆதரவாளர்கள் சிலரால் இந்த இணையத்தளம் முடக்கப்பட்டு, அரசாங்கம் மேற்கொண்டுள்ள இனப்படுகொலை சம்பவங்களை அதில் பிரசுரித்துள்ளனர்.

அரசாங்கத்தினால் கடந்த 15 மணித்தியாலங்களில் 5600 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அதில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் இலங்கை இராணுவத்தின் உத்தியோகபூர்வ இணைத்தளம் இன்று முடக்கப்பட்டுள்ளமை, தமிழீழ விடுதலைப் புலிகள் இணையத்தள பயங்கரவாதத்தை மேற்கொண்டுள்ளமையை எடுத்துக் காட்டுவதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அது இராணுவத்தினரின் மனிதாபிமான நடவடிக்கைகளை வெளியுலகுக்கு மறைக்கும் பொருட்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொண்ட நடவடிக்கை என அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போரில் விடுதலைப்புலிகளின் பின்னடைவு தகவல்களை இராணுவ இணையதளம் உரிய முறையில் உண்மையாக வெளியிட்டு வந்துள்ளது. இந்நிலையில், விடுதலைப் புலிகளின் மென்பொருள் நிபுணர்கள் இராணுவ இணையதளத்தை திட்டமிட்டு சேதப்படுத்தியுள்ளனர்.

எனவே, புலிகளுக்காக பிரசாரத்தில் ஈடுபடுவோர் இனியேனும் அவர்களைப் பற்றி புரிந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, அந்த இணையத்தளம் சீர்செய்யப்பட்டு இன்று பிற்பகல் முதல் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது. எனினும், சற்று நேரத்தில் மீண்டும் அந்த இணையத்தளம் செயலிழந்தது.

இலங்கை இராணுவத்தின் இந்த புகார் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் கருத்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களினால் முடக்கப்பட்டுள்ள இராணுவ இணையத்தளம் மீண்டும் விரைவில் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

StumbleUpon.com Read more...

இராணுவச் சிப்பாய் எடுத்த புகைப்படம் திடுக்கிடும் தகவல்

 
 

படத்தை பெரிதாக்கி பார்வையிட இங்கு அழுத்தவும்

இலங்கை இராணுவத்தினரால் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது. இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிள்ளைகளுடன் சென்ற மக்களின் அவல நிலையை பாருங்கள்.

பெற்றோர்கள் ஒரு மரத்தைச் சுற்றி முட்கம்பிகளால் அடைக்கப்பட்டும் அவர்களின் பிள்ளைகளை அவர்களிடம் இருந்து பிரித்து வேறு ஒரு முகாமிற்கு கொண்டுசெல்ல இராணுவம் தயாராகி வரும் நிலையை நன்கு விளக்கும் இந்த புகைப்படம்.

இனி தங்கள் பெற்றோரை தாம் பார்ப்போமா ? என்ற அச்சத்துடன் பிள்ளைகள், பிறிதொரு முகாமுக்கு செல்ல தயாராகின்றனர். கடைசியாக தங்கள் பெற்றோருக்கு கையசைத்து விடைபெறுகின்றனர். இவர்களின் உள நிலை எப்படி இருக்கும் என கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.

இவர்களது பெற்றோருக்கு என்ன நிகழப்போகிறது என எவராலும் கூறமுடியுமா ? அல்லது உத்தரவாதம் தான் தர முடியுமா ? . இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இன அழிப்பு என்பதற்கு இதற்கு மேலும் ஒரு சாட்சியம் வேண்டுமா ? இராணுவத்தின் கையடக்க தொலைபேசியில் எடுக்கப்பட்ட இப் புகைப்படம் தற்செயலாக அவரின் நன்பர் ஒருவர் பார்த்ததால் அதனை அவர் இரகசியமாக பிரதி எடுத்து வெளியிட்டுள்ளார். இல்லையேல் இங்கு நடக்கும் அக்கிரமங்களுக்கு சாட்சி இல்லை.

புலம் பெயர் தமிழர்களே இப்படத்தை பிரதி எடுத்து உங்கள் கண்டனங்களையும் இணைத்து உங்களது தொகுதி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்புங்கள், அல்லது நேரில் சென்று முறையிடுங்கள், மனித நாகரீகமே கண்டறியாத துயரங்களை அனுபவித்துவரும் எமது தமிழினத்திற்கு ஒரு விடிவை தேடித்தாருங்கள். யார் மண்ணில் யாரை முற்கம்பிகளால் அடைப்பது.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP