கழிப்பறையில் குழந்தை பெற்றெடுத்த 10 ம் வகுப்பு மாணவி
>> Tuesday, June 15, 2010
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளி கழிப்பறையிலே பெண் குழந்தையை பெற்றெடுத்து அப்படியே போட்டுசென்றுள்ளார். மாணவியின் இச்செயலை கண்டித்து அவருக்கு டி.சி.,யை கொடுத்துள்ளது பள்ளி நிர்வாகம். ராமநாதபுரத்திலுள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி சுரிதா(மாணவி நலன் கருதி பெயர் மாற்றப்பட்டுள்ளது) . திருமணம் ஆகாமலே கர்ப்பிணியாக இருந்துள்ளார். மாணவி சற்று குண்டாக இருந்ததால் , கர்ப்பமாக இருந்தது வீட்டிற்கோ, பள்ளியிலோ யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனிடையே கோடை விடுமுறை முடிந்த நிலையில், வழக்கம் போல் கர்ப்பிணி மாணவி பள்ளிக்கு வந்துள்ளார். பள்ளியில் படித்த கொண்டிருந்த போது மாணவி , திடீரென கழிப்பறை செல்ல அனுமதி கேட்டு சென்றுள்ளார். அங்கு யாருடைய உதவியுமின்றி தானாக குழந்தையை பெற்று, அந்த பச்சிளம் குழந்தையை கழிப்பறையில் போட்டுவிட்டு வகுப்பறை வந்துள்ளார். கழிப்பறையில் மற்ற மாணவிகள் சென்ற போது, பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது . இதை பார்த்த அவர்கள் ஆசிரியர்களிடம் கூறினர். ஆசிரியர்கள் கழிப்பறையில் பெண் குழந்தை இருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டு, உடனடியாக குழந்தையை மீட்டு உரிய சிகிச்சை அளித்துள்ளனர். பின் சந்தேகமான மாணவியிடம் விசாரித்ததில் குழந்தை பெற்றதை ஒப்புகொண்டார். ஆசிரியர்கள் குழந்தை பெற்ற மாணவியின் உடையை மாற்றி உடனடியாக அவரை ஆட்டோவில் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். பள்ளியில் மாணவி குழந்தை பெற்றது பெரும் சர்ச்சையை எழுப்பியதால் பள்ளி நிர்வாகம், மாணவியின் டி.சி.,யை அவரது பெற் றோரிடம் வழங்கினர். ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது: பள்ளியில் நடந்த சம்பவம் உண்மைதான். எனக்கு தாமதமாகத் தான் தெரியவந்தது. மாணவியின் விருப்பமின்றி டி.சி.,யை கொடுக்க கூடாது. மாணவியின் நலன் கருதி அவருக்கு என்ன உதவி செய்ய வேண்டுமோ அதை செய்வதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.
--
http://thamilislam.tk