சமீபத்திய பதிவுகள்

நித்தியானந்தா செய்த தவறின் ஆணிவேர் எது?

>> Friday, March 5, 2010

 


அன்பானவர்களே இன்று நாம் ஊடகங்கள் வாயிலாக இளம் சந்நியாசி நித்தியான்ந்தா என்ற வாலிபரைப்பற்றி சில விருமபத்தகாத செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. இது போன்ற செய்திகள் வருவது ஒன்றும் புதிதல்ல, இன்று இப்படிப்பட்ட சம்பவங்களின் ஆணி வேரைப் பற்றி வேத வெளிச்சத்தில் ஆராயப்போகிறோம்

மனிதர்கள் இன்று சம்பாதிப்பதற்காகவோ, அல்லது ஆர்வக்கோளாறினாலோ, மிக இளம் வயதிலேயே சந்நியாசி ஆகிவிடுகிறார்கள், ஆனால் இப்படி சந்நியாசி ஆவதாலேயே அவர்கள் புது மனிதர்கள் ஆகிவிடுவதில்லை, காலம் செல்லச் செல்ல அவர்களுக்கு பசி, கோபம், மகிழ்ச்சி, போன்ற கடவுள் மனிதனுக்குக் கொடுத்த உணர்வுகளில் ஒன்றான பாலுணர்வும் இயற்கையாக தலை தூக்க ஆரம்பிக்கிறது. இதைத்தான் வேதம் மிகத்தெளிவாக நமக்கு சொல்லுகிறது. அது மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல (ஆதி2;18).
ஒருவேளை மனிதன் இந்த வேத வார்த்தைக்கு புறம்பாக நடக்க ஆரம்பிக்கும் போது, அங்கே கடவுளை மறுத்து சாத்தானை தன் வாழ்வில் அனுமதிக்கிறான். இது எப்படி எனில், வெளிச்சம் உள்ள இடத்தில் வெளிச்சத்தைத் தடுத்தால் தானாகவே இருள் வந்துவிடும் அப்படியே சாத்தான் கடவுள் இல்லாத இட்த்தில் நுழைகிறான்.

இங்கு சாத்தானின் குண்நலன்கள் குறித்து வேதம் தெளிவாக ஒரு காரியத்தை சொல்லுகிறது அவன் திருடன் (யோவான் 10;10) என்று, இப்படிப்பட்ட திருடன் வரும்போது இயற்கைக்கு மாறான காரியங்களில் மனிதை ஈடுபடுத்துகிறான், இதுவே மேலே நாம் பார்த்த விரும்பத்தகாத செய்திகள் ஆகும்.
அப்படியானால் இயற்கையான முறையில் பாலியல் உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துவது என்பதையும், பைபிள் மிக மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது நீதிமொழிகள் 5;18-19, ஆகிய வசனங்களில் மனைவியோடு மட்டுமே இந்த காரியங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்லுகிறது, இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவு படுத்திக்கொள்ள வேண்டும் அது என்னவெனில் ஆதியாகமம், 2;19 மற்றும் நீதிமொழிகள் 5;18-ன் படி, துணை என்பது ஒருமையே தவிர பன்மை கிடையாது, ஆகவே ஒன்றுக்கு மேற்பட்ட துனைகளும் சாத்தானின் திட்டமே ஆகும்,

அப்படியானால் துனையை இழந்தவர்கள் என்ன செய்ய வேண்டும்?
இதற்கும் வேதம் மிகத்தெளிவாக நமக்கு பதில் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7; 36 மற்றும் 7;39 ஆகிய வசன்ங்களின் படி துணையை இழந்தவர்கள் அதாவது துணை மரித்துப் போனவர்கள், தங்கள் பாலுணர்வின் நிமித்தம் தங்களைப் பரிசுத்தக் குறைவு அடையாமல் பாதுகாத்துக்கொள்ள விதவை மறுமணத்தை ஆதரிக்கிறது, மேலும் முக்கியமான ஒரு செய்தி என்னவெனில் துணை உயிரோடு இருக்கும் போது அவர்களை விட்டுவிடுதல் விபச்சாரக்குற்றம் (மத்தேயு 5;32) (ரோமர் 7.3), என்று பைபிள் சொல்லுகிறது.

கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா?
இப்போது உங்களுக்கு ஒரு தெளிவான ஒரு கேள்வி வந்திருக்கும் அதாவது கிறிஸ்தவம் சந்நியாசத்தை ஆதரிக்கிறதா? என்று, இதற்கு பதில் மேலேயே சொல்லப்பட்டு விட்டது மேலும் இது பற்றி பைபிள் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லுகிறது 1தீமோதேயு 4;2-ன் படி கடைசி காலங்களில் இயற்கைக்கு மாறாக சந்நியாசம் ஆதரிக்கப்படும், ஆகவே அதை யாரும் செய்யவேண்டாம் என்று, இன்னும் கூட கிறிஸ்தவத்திலும் இது போன்ற சந்நியாசங்கள் உண்டு. இதற்கும் மேற்சொன்ன வசனமே சாட்சி இது குறித்து பைபிள் சொல்லும்போது மீண்டும் நமக்கு ஒரு சாத்தானின் குண நலன் நமக்கு தெரியவருகிறது அது என்னவெனில் 2 கொரிந்தியர் 11;14- நமக்கு சொல்லப்பட்ட படி சாத்தான் நம்மை வஞ்சிக்க கடவுளின் தூதன் வேடத்தைக் கூட தரித்துக்கொண்டு வந்து நம்மை ஏமாற்றிவிடுவான் என்று ஆகவே எச்சரிக்கையாய் இருப்பது நல்லது

எனக்கன்பான சகோதரனே சகோதரியே நீங்கள் ஒருவேளை சந்நியாசம் போன்ற போதனையில் சிக்குண்டு இருக்கலாம், கடவுள் கொடுத்த பரிசுத்தமான பாலுணர்வை உன் வாழ்க்கைத் துணையிடத்தில் கூட வெளிப்படுத்தாமல் இருந்தால் கடவுள் மிகவும் மகிழ்வார் என்று உனக்குச் சொல்லப் படலாம், அதேபோல துணையிடம் மட்டுமே பகிர்ந்து கொள்ளக் கூடிய பாலுணர்வை மற்றமனிதர்களோடும் பகிர்ந்து கொள்ளவும் நீ போதிக்கப் பட்டிருக்கலாம் இவைகள் இரண்டுமே இயற்கைக்கு விரோதமானது தான். இவைகள் இரண்டுமே சாத்தானால் கொண்டுவரப்பட்டிருக்கும் தந்திரங்கள் தான். ஆகவே இவைகளை விட்டு விலகு. கடவுள் உன்னை மேன்மைப் படுத்துவார். ஆமென்.


பின்குறிப்பு (நன்றி சகோதரி எலிசபெத்)
எனக்கன்பானவர்களே இந்த கட்டுரையில் ஒரு காரியம் விடுபட்டுள்ளது, என்னவெனில் வேதம் தெளிவாக மற்றொரு காரியத்தையும் சொல்லுகிறது 1 கொரிந்தியர் 7;32-40 வரையுள்ள வசனங்களில் ஒருவேளை நீங்கள் திருமணமில்லாமல் பரிசுத்தமாய் வாழமுடியும் என்று எண்ணுவீர்களானால், அல்லது திருமணமில்லாமல் வாழ அழைக்கப்பட்டிருப்பீர்களானால், தேவனுடைய பார்வையில் பரிசுத்தமாய் வாழுங்கள், ஒரு வேளை பரிசுத்த வாழ்விலிருந்து விலகி பாவத்தில் வாழ்ந்து விடுவோம் என்று நீங்கள் அஞ்சினால் பாவம் செய்யாமலிருக்க திருமணம் செய்து கொள்ளுங்கள் என்பதே அந்த விடுபட்ட கருத்து ஆகும்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வலி இல்லாமல் போடும் மருந்து ஊசி கண்டுபிடிப்பு:

வலி இல்லாமல் போடும் மருந்து ஊசி கண்டுபிடிப்பு: ஜப்பான் விஞ்ஞானி சாதனை
வலி இல்லாமல் போடும்    மருந்து ஊசி கண்டுபிடிப்பு:     ஜப்பான் விஞ்ஞானி சாதனை
லண்டன், மார்ச். 5-
 
மனிதர்களின் நோய் குணம் அடைய உடலில் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. இதனால் வலி ஏற்படும் என்பதால் ஊசி போட்டுக் கொள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் அச்சப்படுகின்றனர்.
 
இந்த அச்சத்தை போக்கி வலி இல்லாத வகையில் போடும் மருந்து ஊசியை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
 
இந்த ஊசிகள் கரையக்கூடிய பாலிமர் இழைகளால் தயாரிக்கப்பட்டது. இதை உடலில் குத்துவதன் மூலம் தோலின் அடிப்பகுதி சேதமடையாது. வலி ஏற்படாது.
 
இந்த மைக்ரோ ஊசிகள் 0.5 மி.மீட்டர் நீளமும், 0.3 மி.மீட்டர் அகலமும் கொண்டது. இந்த ஊசி சோதனை செய்து பார்க்கப்பட்டது.

source:maalaimalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்


 
 பாகற்காய் சாப்பிட்டால் மார்பக புற்றுநோயை தடுக்கலாம்சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம், கொழுப்பு மற்றும் அல்சர் ஆகிய நோய்களை பாகற்காய் கட்டுப்படுத்தும் என்பது ஏற்கனவே ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், செயின்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்தின் நோய்இயல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ரத்னாராய், மார்பக புற்றுநோயை குணப்படுத்துவதில் பாகற்காயின் பங்கு குறித்து ஆய்வு செய்தார். இதன் முடிவுகள் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கேன்சர் ரிசர்ச் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
 
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகற்காய் சாறு வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர்களை பரிசோதித்ததில் புற்றுநோய்க்கு காரணமான செல்களை கொல்வதில் பாகற்காய் முக்கிய பங்கு வகிப்பது தெரியவந்தது. மேலும் இந்த செல்கள் வளர்ச்சி அடைவதை தடுக்க உதவுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
பெண்கள் பாகற்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ளலாம். அதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி மார்பக புற்றுநோய் செல்களை அழிக்கவும், அதன் வேகமான வளர்ச்சியைத் தடுக்கவும் உதவும் என ரத்னாராய் தெரிவித்துள்ளார்.

பெண்களை பலி வாங்கும் மார்பக புற்றுநோய் செல்களை அழிப்பதற்கான இந்த ஆராய்ச்சி மிகவும் வரவேற்கத்தக்கது. எனினும் தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என கொலராடோ பல்கலைக்கழகத்தின் மருத்துவ அறிவியில் துறை தெரிவித்துள்ளது


source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விபசார விடுதி நடத்திய போலி சாமியார்; மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்

டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி நடத்திய போலி சாமியார்; மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்
 டெல்லியில் 5 இடங்களில் விபசார விடுதி    நடத்திய போலி சாமியார்;    மாணவிகள், விமான பணிப் பெண்கள் ஏமாந்தனர்புதுடெல்லி, மார்ச். 2-
 
டெல்லி கான்பூர் பகுதியில் வசித்து வருபவர் சிவ்முரத் திவேதி (39). சத்ய சாய்பாபாவின் சீடர் என்று தன்னை பிரபலப்படுத்திக் கொண்ட இவர் கான்பூரில் சாய்பாபா பெயரில் பெரிய கோவில் கட்டி உள்ளார். டெல்லியில் இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர்.
 
கோவிலில் தினமும் பஜனைப் பாடல்களை பாடி இவர் சொற்பொழிவு நிகழ்த்துவது வழக்கம். மிக குறுகிய காலத்தில் இவருக்கு டெல்லியில் உள்ள அரசியல் வாதிகளிடமும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர் டெல்லியில் புகழ் பெற்ற சாமியாராக வலம் வந்தார்.
 
இந்த நிலையில் சாமியார் சிவ்முரத் திவேதி உண்மையான சாமியார் அல்ல போலி சாமியாரான அவர் மதத்தை கேடயமாக வைத்துக் கொண்டு விபசாரம் செய்து வருவதாக புகார்கள் வந்தன. இதனால் சந்தேகம் அடைந்த டெல்லி போலீசார் சிவ்முரத் திவேதி யையும் அவரது கோவில், வீடுகளையும் கண்காணித்தனர்.
 
போலீஸ் விசாரணையில் கான்பூர் சாய்பாபா கோவிலில் சுரங்க அறைகள் இருப்பதும் அங்கு விபசாரம் நடப்பதும் உறுதியாக தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் சிவ்முரத் திவேதியின் கோவிலில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது விபசாரம் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
 
உடனடியாக போலி சாமியார் சிவ்முரத் திவேதி கைது செய்யப்பட்டார். அவருடன் விபசாரத்தில் ஈடுபட்டிருந்த 2 விமானப்பணிப் பெண்கள், கல்லூரி மாணவிகள் 2 பேர் பிடிபட்டனர்.
 
இந்தி படங்களில் நடித்து வரும் துணை நடிகை ஒரு வரும் இந்த வேட்டையில் சிக்கினார். மேலும் டெல்லியில் உள்ள பணக்காரர்களின் வீடுகளுக்கு செல்ல தயாராக இருந்த இளம் பெண்களும் போலீசாரிடம் பிடிபட்டனர்.
 
போலி சாமியாரின் பாபா கோவில் முழுக்க போலீசார் சோதனை நடத்தி னார்கள். அப்போது 5 டைரிகள் கிடைத்தன. அந்த டைரிகளில் இந்தியா முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண்களின் முகவரிகள், போன் நம்பர்கள் இருந்தன.
 
அவர்கள் அனைவரையும் போலி சாமியார் சிவ்முரத் திவேதி விபசாரத்தில் ஈடு படுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் மூலம் அவர் ரூ.2 ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாக டெல்லி போலீசார் கண்டு பிடித்துள்ளனர்.
 
போலி சாமியார் சிவ் முரத்திவேதி இந்த பெண்களை மிக நூதனமாக ஏமாற்றி விபசார தொழிலில் ஈடுபடுத்தி இருப்பது தெரிய வந்துள்ளது. குடும்பத்தை பிரிந்து தனிமையில் இருக்கும் பெண்களை இணையத்தளம் மூலம் தேடி கண்டு பிடித்து, அவர்களிடம் பண ஆசை காட்டி விபசார வலையில் தள்ளி உள்ளார்.
 
லட்சக் கணக்கில் பணம் கிடைத்ததால் மாணவிகள், விமானப்பணிப் பெண்கள் அவர் விரித்த வலையில் விழுந்து விட்டனர்.
 
சிவ்முரத் திவேதியிடம் டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் ஒவ்வொரு நாளும் புது புது தகவல்களாக வெளியானபடி உள்ளது.
 
நேற்று நடந்த விசாரணையில் டெல்லியில் 5 இடங்களில் விபசார மையம் வைத்திருந்த தகவலை போலீசாரிடம் சிவ்முரத் திவேதி வெளியிட்டார். டெல்லியில் பணக்காரர்கள் வசிக்கும் சி.ஆர்.பார்க், செக்டார் 3 ஆ.கே.புரம், பிகாஜி காமா பிளேஸ் (முகம்மத்பூர்), சப்தர்ஜங் என்கிளேவ் (ஹியூமான்பூர்), மற்றும் தேவ்லி (ஜவகர் பார்க்) ஆகிய 5 இடங்களில் சிவ்முரத் திவேதி விபசார விடுதி வைத்திருந்தார். இந்த 5 இடங்களுக்கும் போலீசார் சீல் வைத்துள்ளனர்.
 
டெல்லி தவிர தன்னிடம் சிக்கும் பெண்களை உத்தர பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்கள், சிம்லாவுக்கு அனுப்பி சிவ்முரத் திவேதி பணம் சம்பாதித்துள்ளார். இது பற்றிய தகவல்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
 
விபசார தொழில் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை கொண்டு புனே, வாரணாசி, லக்னோ, பெங்களூர் நகரங்களில் போலி சாமியார் ஏராளமான சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார். அவற்றையும் போலீசார் முடக்கி வருகிறார்கள்.
 
போலி சாமியாரிடம் விசாரணை நடத்த தனிப்படை உருவாக்கப்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சிவ்முரத் திவேதி பிழைப்பு தேடி 1988ல் டெல்லி சென்றார். ஒரு நட்சத்திர ஓட்டலில் காவலாளியாக வேலை பார்த்தார். கூலித் தொழிலாளியாகவும் இருந்தார்.
 
குறுகிய காலத்தில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு பாபாவின் சீடர் என்று எல்லோரையும் ஏமாற்றினார். எல்லாரும் நம்பி விட்டதால் அதை வைத்தே விபசார தொழிலில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து நாடெங்கும் சொத்து வாங்கி குவித்து விட்டார்.
 
1997-ல் விபசார தடுப்பு போலீசாரிடம் இவர் சிக்கி தப்பினார். 1998-ல் சொத்து அபகரிப்பு வழக்கிலும் இவர் சிக்கி தப்பினார். தற்போது தான் கையும் களவுமாக சிக்கியுள்ளார்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP