சமீபத்திய பதிவுகள்

திருமணமாகாத பெண்கள் மொபைல் போனில் பேச தடை!

>> Wednesday, November 24, 2010

தகவல் தொழிநுட்ப யுகத்தில் இப்படியும் ஒரு உத்தரவா என்று? தலைப்பைப் பார்த்தவுடன் பயந்து விடாதீர்கள். உண்மைதான் இந்தியாவில் உத்தர பிரதேசத்தில் காதல் திருமணத்தை தடுக்கும் வகையில், திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு கிராம பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.

 

வட மாநிலங்களில் உள்ள கிராமங்களில் காதல் திருமணம், ஒரே கோத்திரத்தில் திருமணம் ஆகியவைக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. காதல் திருமணம் மற்றும் ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யும் தம்பதி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு பஞ்சாயத்துகளில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகிறது.

 

இந்நிலையில், முசாபர் நகர் மாவட்டம், லங்க் கிராமத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்த பஞ்சாயத்தார் கூடி, கிராமத்திலுள்ள திருமணமாகாத பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதித்தனர்.

 

இதுகுறித்து பஞ்சாயத்து செய்தி தொடர்பாளர் கூறுகையில்,

 

"மொபைல் போன் இளைஞர்களிடத்தில், குறிப்பாக பெண்களிடத்தில் விரும்பத்தகாத தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே, திருமணமாகாத பெண்கள் காதல் திருமணம் செய்வதை தடுக்கும் வகையில், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது' என்றார்.

 

கடந்த சில நாட்களுக்கு முன், இதே மாவட்டத்தில் உள்ள சோரம் கிராமத்தின் அனைத்து காப் பஞ்சாயத்தில், ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்வதை தடுக்க, 1955ம் ஆண்டு இந்து திருமண சட்டத்தில் மாறுதல் கொண்டு வர வேண்டும் என்று, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


source:tamilcnn



--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

உயிரோடு இருப்பவருக்கு சிலை வைக்கும் அறியாமை

உயிரோடு இருக்கும் இயேசுவுக்கு ஒரு சிலை வைத்து அதில் தங்க கிரீடம் வைக்கும் அறியாமையை நினைத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.





உலகின் மிக உயரமான புதிய யேசு கிறிஸ்த்துவின் சிலை போலந்தில் திறக்கப்பட்டுள்ளது.
இச்சிலையின் அறிமுக விழாவுக்காக சுமார் 15,000 யாத்திரிகள் போலந்தின் ஸ்வெய்பாட்ஷின் நகரின் பாலிஸ் டவுன் எனும் இடத்தில் குவிந்தனர்.

இது தொடர்பில் போலந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், யேசு கிறித்தவை பெருமைப்படுத்தும் விதத்தில் மாபெரும் விழாவாக இந்நிகழ்வு கொண்டாடப்படுவதாகவும், 'இப்பிரபஞ்சத்தின் மாமன்னர் கிறிஸ்த்து' என பொறிக்கப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை யாத்திரிகர்கள் ஏந்தியவண்ணம் இவ்விழாவில் கலந்துகொண்டதாகவும் கூறியுள்ளன.
33 வருடங்கள் யேசு கிறிஸ்த்து பூமியில் வாழ்ந்ததன் அடையாளமாக 33 மீற்றர் உயரத்தில் இச்சிலை கட்டப்பட்டுள்லது.

இதுவரை உலகில் மிக உயரமான யேசு கிறிஸ்த்துவின் சிலையாக இருந்து வந்த பிரேஸிலின் ரியோ டி ஜனேரியோ, ரெடிமீர் கிரிஸ்த்து சிலையிலும் பார்க்க, போலந்திலுள்ள இச் சிலை மூன்று மீற்றர் உயரம் கூடியதாகும்.

இச்சிலை 33 மீற்றர் உயரம் என்ற போதும், 3 மீற்றர் உயரத்தில் தங்கக்கிரீடம் பொருத்தப்பட்டிருப்பதால் இச்சிலையின் மொத்த உயரம் 36 மீற்றர் ஆகும். இதன் மொத்த எடை 440 டொன் ஆகும்.

போலந்துக்கு வரும் கத்தோலிக்க யாத்திரிகள் மத்தியில் இச்சிலை மாபெரும் வரவேற்பை பெறும் என தெரிவிக்கப்படுகிறது.






source:uyir

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP