சமீபத்திய பதிவுகள்

எல்லா பிரவுசர்களுக்குமான சில குறுக்கு சாவிகள்

>> Monday, January 4, 2010

அனைத்து பிரவுசர்களுக்குமான சில ஷார்ட் கட் கீகள்

 
 

பெரும்பாலும் அனைத்து பிரவுசர்களிலும் பல ஷார்ட் கட் கீகள் ஒரே செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. பயர்பாக்ஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், ஆப்பரா, குரோம் என எதனை எடுத்துக் கொண்டாலும் சில ஷார்ட் கட் கீகள் பொதுவாகவே தான் செயல்படுகின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.


பல வேளைகளில் நாம் பிரவுசர்களில் அதற்கு முன் பார்த்த தளத்தைப் பார்க்க பின் நோக்கிச் செல்லும் பேக் பட்டனை அழுத்துவோம். இதன் அருகே கீழ் நோக்கியவாறு ஓர் அம்புக் குறியினைப் பார்க்கலாம். இதனை அழுத்தினால் நீங்கள் முன்பு பார்த்த தளங்கள் 5 முதல் 10 வரை கிடைக்கும். இந்த பட்டியலில் இருந்து நீங்கள் மீண்டும் பார்க்க விரும்பும் தளத்தைப் பார்க்கலாம். சில தளங்கள் அடுத்தடுத்து கிளிக் செய்து உங்களை முன் நோக்கிப் போகச் சொல்லும். அது போன்ற தளங்களில் நீங்கள் பிரவுஸ் செய்கையில், முதன் முதலில் பார்த்த தளத்திற்குச் செல்ல வீணாகப் பலமுறை பேக் பட்டனை அழுத்த வேண்டியதில்லை. இந்த அம்புக் குறியை அழுத்தி, தளமுகவரிகளைக் கண்டு கிளிக் செய்து பெறலாம். 


நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்தினைத் தவறுதலாக மூடிவிட்டீர்களா? அதன் முகவரி தெரியவில்லையா? கவலை வேண்டாம். கண்ட்ரோல்+ஷிப்ட்+ட்டி (Ctrl+Shft+T)  அழுத்துங் கள். இதனை மீண்டும் மீண்டும் அழுத்தினால் அதற்கு முன் மூடிய தளங்கள் வரிசையாகத் திறக்கப்படும். பேக் ஸ்பேஸ் மற்றும் ஆல்ட் + இடது அம்புக் குறி ஒரு தளத்தைப் பின்னோக்கிக் காட்டும். ஆல்ட் + வலது அம்புக் குறி அழுத்தினால் ஒரு தளம் முன்னோக்கிக் காட்டும். 
எப்11 அழுத்தினால் அப்போதைய இணைய தளம் முழுப் பக்கத்திலும் காட்டப்படும். மீண்டும் அழுத்தினால் முந்தைய நிலைக்குத் திரும்பும். 
எஸ்கேப் கீ அழுத்தினால் இணைய தளம் டவுண்லோட் ஆவது நிற்கும். 
Ctrl+ '+'  அல்லது '' அழுத்தினால், இணைய தளத்தில் உள்ள டெக்ஸ்ட் எழுத்தின் அளவு கூடும், குறையும். 
.Com  என்று முடியும் தளத்தின் முகவரியை முழுமையாக்க தளத்தின் பெயரை மட்டும் டைப் செய்துCtrl +Enter அழுத்தினால் போதும். 
.net  என முடியும் தளத்திற்கு Shift + Enterஅழுத்த வேண்டும். 
.org  என்பதில் முடியும் தளப் பெயராக இருந்தால், பெயரை மட்டும் டைப் செய்து Ctrl + Shift + Enter அழுத்தவும்.
ஏதேனும் விண்டோவில் உங்களுடைய தகவல்களை நிரப்பி இருக்கிறீர்கள். இவை அனைத்தையும் நீக்கிட Ctrl + Shift + Del அழுத்தவும். 
Ctrl + D  அழுத்தினால் அப்போதைய தளத்திற்கு புக்மார்க் ஏற்படுத்தப்படும். 
Ctrl + I  அழுத்தினால் அப்போதைய புக்மார்க்குகள் காட்டப்படும். 
Ctrl + J அழுத்தினால் டவுண்லோட் விண்டோ காட்டப்படும். 
Ctrl + N  கீகளுக்கு புதிய பிரவுசர் விண்டோ திறக்கப்படும். 
Ctrl + P அப்போதைய பக்கத்தினை அச்சடிக்கும்.
Ctrl + T  புதிய டேப் ஒன்றைத் திறக்கும். 
Ctrl + F4  அல்லது Ctrl + W அப்போது தேர்ந்தெடுத்த டேப்பினை மூடும்.
திறக்கப்பட்ட டேப்கள் வழியே செல்ல Ctrl + Tab பயன்படுத்த லாம். 
ஸ்பேஸ் பார் (Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் கீழாகச் செல்லலாம். ஷிப்ட் + ஸ்பேஸ் பார் (Shift + Space bar) அழுத்தினால் ஒரு பக்கம் மேலாகச் செல்லலாம். 
இணைய தளம் ஒன்றில் ஏதேனும் லிங்க் இருந்தால் அதனை புதிய விண்டோவில் திறக்க ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு அந்த லிங்க் மீது கிளிக் செய்திடவும். அல்லது அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், புதிய டேப், புதிய விண்டோவில் அதனைத் திறக்கும்படி செய்திடலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மொபைல் போன் எடுத்துச் செல்ல அரசு பஸ் டிரைவர்களுக்கு தடை

 
 

Front page news and headlines today சென்னை : அரசு பஸ் டிரைவர்கள், பணியின் போது மொபைல் போன் வைத்திருந்தால், கடும் நடவடிக்கை எடுக்க அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பஸ்கள் ஓட்டும் போது டிரைவர்கள், மொபைல் போனில் பேசுவதால், பணியில் கவனச் சிதறலுக்கு காரணமான மொபைல் போன்கள் குறித்து போக்குவரத்துத் துறை தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது.இதுகுறித்து, அரசு போக்குவரத்துத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு பஸ் டிரைவர்கள், பஸ்சை இயக்கிக் கொண்டே மொபைல் போனில் பேசுவதாகவும், பஸ் விபத்திற்குள்ளாவதற்கு இது காரணமாக அமைகிறது என பல புகார்கள், அரசின் கவனத்திற்கு வந்தன. இதையடுத்து, அரசு பஸ் டிரைவர்கள், பணியிலிருக்கும் போது மொபைல் போனை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், பஸ் பரிசோதகர்கள் அதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை, அனைத்து போக்குவரத்துக் கழக இயக்குனர்களும், முழுமையாக அமல்படுத்த வேண்டும். பஸ் டிரைவர்கள் பஸ்சை இயக்கும் முன், அவர்கள் மொபைல் போனை உடன் எடுத்துச் செல்லாதவாறு, போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும்.பயணிகள் பாதுகாப்பு மற்றும் அனைவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிரைவர்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். பஸ் டிரைவர்கள், பணியின் போது மொபைல் போனை தங்கள்வசம் எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்


 
 

மாஸ்கோ : தஜிகிஸ்தான் நாட்டில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 20 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். முன்னாள் சோவியத் குடியரசில் இருந்து பிரிந்த நாடான தஜிகிஸ்தானின் வான்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5.1 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானை யொட்டி உள்ள இந்த நாடு மலைகள் நிறைந்த நாடு. எனவே, நிலநடுக்கத்தால் பாறைகள் உருண்டன. வான்ச் மாவட்டத்துக்கு செல்லும் வழியில் நிலசரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் இந்த மாவட்டத்தில் உள்ள ரோக், ஜிஷ்கோ கிராமங்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. இந்த கிராமங்களில்  20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. எனினும் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்


 
 

பீஜிங் : சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு  அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன. அதாவது, சென்னையிலிருந்து திருச்சிக்கு இந்த ரயில் இயக்கப்பட்டால், ஒரு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது.  சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்கர்களை துரத்தும் பயங்கரவாத பகீர் :

 விமானநிலையத்தில் நுழைந்த மர்ம மனிதன் !
 

Top world news stories and headlines detailநியூயார்க்: அமெரிக்காவில் சர்வதேச விமானநிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்துள்ளதால் அவனை தேடும் பணியில் போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் ஆங்காங்கே நிறுத்தி வைத்து கடும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர். இங்கிருந்து புறப்பட வேண்டிய விமானங்கள் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட நாள் முதல் அங்கு பாதுகாப்பு பலமுனை கட்டங்களாக விரிவுப்படுத்தப்பட்டுள்ளது. முக்கிய நகரங்களில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக விமான நிலையங்கள் கடும் கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டுள்ளது.வீடியோவில் பதிவு : இந்நிலையில் நியூயார்க் நகரில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் உள்ள நியூஜெர்ஸி விமான நிலையம் உள்ளது. இது சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு ஆண்டுக்கு 35 மில்லியன் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள செக்போஸ்ட்டில் இருந்து பாதுகாப்பையும் மீறி ஒரு பிரமுகர் விமான நிலையத்தில் நுழைந்துள்ளார். இது பாதுகாப்பு துறை வீடியோ மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கு போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். உடனடியாக பயணிகள் ஆங்காங்கோ நிறுத்தப்பட்டனர். விமான நிலையம் மூடப்பட்டது. தொடர்ந்து அந்த மர்ம மனிதனை தேடும் பணி நடந்து வருகிறது. செக்பாய்ன்ட் வழியாக இந்த மர்ம மனிதன் பாதுகாப்பு படைவீரர்களின் கண்ணை மூடி பயணிகளோடு, பயணியாக நுழைந்து சென்றிருப்பதாக அமெரிக்காவில் உள்ள சி.என்.என்., தெரிவித்துள்ளது. மர்ம மனிதனை தேடும்பணி காரணமாக அங்கிருந்து விமானங்கள் எதுவும் கிளம்பவில்லை. பயணிகள் பலர் தங்களது ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.விமானத்தில் வந்த நைஜீரிய இளைஞன் : கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த நைஜீரிய இளைஞர் ஒருவர் வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்டார். அவர் அல்குவைதாவுடன் தொடர்பு உடையவன் என்றும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி அங்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சமீபத்தில் அமெரிக்காவில் பாதுகாப்பு படை வீரர்கள் முகாமில் இருந்த வீரர் சக வீரர்களை சுட்டு கொன்றார். ஈராக்கிற்கு பாதுகாப்பு பணிக்கு செல்ல மனம் இல்லாமல் இருந்த காரணத்தினால் அவர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியதாக கூறப்பட்டது. ஆப்கனில் பணி செய்வதற்கு அமெரிக்க அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் ஆப்கனில் சி.ஐ.ஏ., அதிகாரிகள் சிலர் கொல்லப்ப்பட்டனர்.தூதரகம் மூடல் :  பாதுகாப்பு காரணமாக ஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் மூட முடிவு செய்துள்ளதுஏமனில் உள்ள அமெரிக்க தூதரகம் அல்குவைதாவினர் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் இதனை கருத்தில் கொண்டு இங்கு காலி செய்வதாகவும் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் ஒத்துக்கொண்டுள்ளனர். குறிப்பாக அமெரிக்காவில் கடந்த 2001 ம் ஆண்டில் செப்டம்பர் 11 தாக்குதலில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். இதில் இருந்து அமெரிக்காவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விமான நிலையம் உயர்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்து.14 நாட்டு விமானத்தில் பயங்கரவாதிகள்: ? அமெரிக்கா வந்து செல்லும் 14 நாட்டு விமானங்கள் முக்கிய கவனத்தில் எடுத்துக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி ஆப்கன், அல்ஜீரியா, ஈராக், லெபனான், லிபியா, நைஜீரியா, பாகிஸ்தான், சவுதிஅரேபியா, சோமாலியா, ஏமன், ஆகிய 10 நாட்டு விமானங்கள் உன்னிப்பாக கவனிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி இந்த விமானம் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படும். மேலும், கியூபா, ஈரான், சடான், சிரியா ஆகிய 4 நாடுகளும் இந்தப்பட்டியலில் சேர்க்கப்படும் வாய்ப்புள்ளது.சமீபத்தில் விமான நிலையங்களில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர். இதனால் பல நாட்டு பயணிகளும் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர். தற்போதைய நியூயார்க் விமான நிலையத்தில் மர்ம மனிதன் நுழைந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP