மொபைல் போன் எடுத்துச் செல்ல அரசு பஸ் டிரைவர்களுக்கு தடை
>> Monday, January 4, 2010
பஸ்கள் ஓட்டும் போது டிரைவர்கள், மொபைல் போனில் பேசுவதால், பணியில் கவனச் சிதறலுக்கு காரணமான மொபைல் போன்கள் குறித்து போக்குவரத்துத் துறை தற்போது கட்டுப்பாடு கொண்டு வந்திருக்கிறது. இதுகுறித்து, அரசு போக்குவரத்துத் துறை செயலர் அதுல்ய மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:அரசு பஸ் டிரைவர்கள், பஸ்சை இயக்கிக் கொண்டே மொபைல் போனில் பேசுவதாகவும், பஸ் விபத்திற்குள்ளாவதற்கு இது காரணமாக அமைகிறது என பல புகார்கள், அரசின் கவனத்திற்கு வந்தன. இதையடுத்து, அரசு பஸ் டிரைவர்கள், பணியிலிருக்கும் போது மொபைல் போனை எடுத்துச் செல்லக் கூடாது எனவும், பஸ் பரிசோதகர்கள் அதை கண்காணிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை, அனைத்து போக்குவரத்துக் கழக இயக்குனர்களும், முழுமையாக அமல்படுத்த வேண்டும். பஸ் டிரைவர்கள் பஸ்சை இயக்கும் முன், அவர்கள் மொபைல் போனை உடன் எடுத்துச் செல்லாதவாறு, போக்குவரத்து மேற்பார்வையாளர்கள் மூலம் கண்காணிக்கப்படும். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அனைவருடைய பாதுகாப்பை கருத்தில் கொண்டு டிரைவர்கள், நிர்வாகத்துடன் ஒத்துழைக்க வேண்டும். பஸ் டிரைவர்கள், பணியின் போது மொபைல் போனை தங்கள்வசம் எடுத்துச் சென்றால் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதுல்ய மிஸ்ரா தெரிவித்துள்ளார். source:dinamalar
--
www.thamilislam.co.cc
0 கருத்துரைகள்:
Post a Comment