சமீபத்திய பதிவுகள்

பெண்கள்மீது தகாத சேட்டைகள் செய்யும் தமிழ் இளைஞர்கள்

>> Wednesday, April 15, 2009

கலாச்சாரசீரழிவில் தமிழ் இளைஞரை இட்டுச்செல்லும் மட்டக்கிளப்பு அதிரடிப்படையினர்
 

மட்டக்களப்பு அம்பிளாந்துறை விசேட அதிரடிப்படையினர் அப்பிரதேசத்திலுள்ள தமிழ் இளைஞர்களை பிடித்து அச்சுறுத்தி புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தி வருவதுடன் மக்கள் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் அப்பிரதேசங்களிலுள்ள மக்களை தமக்கு பாதுகாப்பு கேடயமாக வைத்து எடுபிடி வேலைகளை செய்வித்தும் வருகின்றனர். அத்துடன் அம்பிளாந்துறையடி மற்றும் அதிரடிப்படை முகாமின் சுற்றுப்புறங்களில் எடுபிடிவேலைகளிலும் ஈடுபடுத்தி வருகின்றனர்.

அம்பிளாந்துறை, குருக்கள் மடம் மற்றும் புதுக்குடியிருப்பு விசேட அதிரடிப்படையினரின் அற்ப சலுகைகளுக்காக இவர்களுடன் இணைந்து செயற்படும் இப்பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 15 இளைஞர்கள் கலாச்சார சீரழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகவும், அப்பிரதேச பெண்கள் சிலரை அதிரடிப்படையினரின் இச்சைக்காக ஈடுபடுத்தியும் வருவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அத்துடன் அப்பாவி இளைஞர்களைக் காட்டிக்கொடுத்தும், வீதியால் போய்வருகின்ற பெண்கள்மீது இவர்கள் தகாத சேட்டைகள் புரிந்தும், படையினரின் ஆதரவுடன் இரவு வேளைகளில் களவு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாலும் இப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழவேண்டியிருப்பதாகவும், மீறி யாராவது இவர்களை எதிர்த்தால் மறுநள் அவர் காணாமல் போவதாகவும் அப்பிரதேச மக்கள் எமது செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளனர்.

StumbleUpon.com Read more...

புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் கடும் சமர்: புலிகளின் மண் அரணைக் கைப்பற்ற படையினர் தீவிரம்

 

மேலும் வாசிக்க அழுத்தவும்

StumbleUpon.com Read more...

இன்டர்நெட் சிம்பொனி இசையை கேட்டு மகிழுங்கள்

"The Internet Symphony" Global Mash Up

StumbleUpon.com Read more...

மின்னிதழில் வந்த கவியிதழ்

 
கருணாநிதிக்கு ஓர் கவிதை
 
கன்னித்தமிழ்ப் பெண்ணை கயவர்கள் கற்பழிக்க
கைகட்டி வாய்ப்பொத்தி கைக்கூலியாய் நின்று,
கண்ணகிக்கு சிலையெடுத்து கவிபாடும் கறுப்பாடு!

தம்பி, தம்பியென்று தமிழனை நம்பவைத்து தக்க
சமயத்தில் தலையறுக்கும் கருங்காலி கருணாநிதியே...!

சொல்லிச்சொல்லி உனை வரலாறு ஏசும்!
உன் பெயர் சொன்னாலே தமிழுக்கு கூசும்.

சொத்துக்குவிப்பதையே தொழிலாக செய்து செய்து
செத்துப்போன உன் செவிகளுக்கு கேட்கலையோ
கத்திக் கதறிய என் முத்துக்குமரன் ஒலி!

பௌத்த நெறிபடித்து, சிங்கள வெறிபிடித்து, தமிழன் உயிர்குடித்து,
தோள்கள் திணவெடுத்து, பெண்கள் முலையறுத்து, தமிழன் இனமழிக்க துடிக்கின்றான் சிங்களவன் அங்கே!

தெய்வக்குறள் படித்து, பதவி வெறிபிடித்து, சூது மிக வளர்த்து,
ஊதி உடல் பெருத்து, பாதித் தமிழகத்தை, பரம்பரைக்கு எழுதிவிட
தவிக்கின்றான் எங்களவன் இங்கே!

இத்தாலி எருமைக்கு தப்பாது தாளமிடும்
சப்பாணிக் கழுதையே - இனி
எப்போதும் மறவாது தமிழினம் - உனை
எப்போதும் மறவாது தமிழினம்!

தமிழினம் அழிகிறது! தமிழகம் அழுகிறது!
தலைவன் நீ என்ன செய்தாய்!

தனி அறையில் ஓய்வெடுத்து, திறம்பட நீ நடித்து,
முதுமையிலும் இளமைகண்டாய்! - எங்கள்
முதுகெலும்பை ஏன் உடைத்தாய்!

பொட்டென்று விழுந்தவன் பொசுக்கென்று போய்விடுவான்
சட்டென்று தமிழகம் விழித்தெழும் என்றிருக்க!
எட்டிப்பிடித்த சனி விட்டுத்தொலையாதெனும்
வெட்டிப் பழமொழிக்கு சான்றாக வந்துவிட்டாய்

குலத்தைக் கெடுக்க வந்த கோடாரிக் காம்பே! - உன்
சிரத்தை அரிந்துவரச் சொன்னான் ஒரு வடவன்
சினந்து எழுந்தோம் தமிழ்த்தலைவன் நீ என்று - இன்று
உணர்ந்து கொண்டோம் அது மிகப்பெரிய தவறென்று!

தமிழைக்கொண்டே தமிழனை அழித்து விட்டாய்! - இனி உன்
மந்திரத் தமிழ் நடை மயக்காது எங்களை
உன் உதட்டோர புன்னகையை உண்மையென நம்பினோம்
ஒட்டுமொத்த தமிழரின் புதைக்குழி என்றறியாமல்!

இசைபாடும் புலவன் இன்று வசை பாட வந்ததேன்
அசையாத கல் மனது அசைந்திடும் என்பதாலா? இல்லை
கடுப்பேறி குமைந்திருக்கும் என் போன்ற இதயங்கள்
இளைப்பாற ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திடவே!

தமிழனை குறைவாக எடைபோட்டாய்!
தமிழனுக்கு எதிராக தடை போட்டாய்!
முடிந்தது உன் ஆட்சி!
மடிந்தது உன் சூழ்ச்சி!

அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றெனும் நீதியும் நிலைக்கட்டும்!
அடிவயிறு எரிகின்ற அன்னையரின் வெப்பம் உனை
அப்படியே பொசுக்கட்டும்!
ஆதித்தமிழினம் அகிலத்தை ஆளும்!
அடிமை விலங்குகள் துகள்களாய் உடையும்!
அன்னியன் ஆதிக்கம் அடியோடு ஒழியும்!
அன்பெனும் ஒரு குடையுள் அகிலமே திரளும்!

சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும்
சுதந்திரக்காற்று பரவட்டும் எங்கனும் - இது
சத்தியம்! சத்தியம்! சத்தியம்!
- UNMAITH THAMIZHAN

StumbleUpon.com Read more...

இலங்கையில் பல பகுதிகளில் நில நடுக்கம்

இலங்கையில் பல பகுதிகளில் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது
 
சற்று நேரத்துக்கு முன்னர் இலங்கையின் பலப் பகுதிகளிலும் நில அதிர்வு ஒன்று உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வினை சற்று முன்னர் நன்கு உணரக் கூடியதாக இருந்ததாக, நில அதிர்வு ஏற்பட்ட பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்த நில அதிர்வு பண்டாரவளை, அட்டாம்பிட்டிய, நுவரெலியா, பொத்துவில், கல்முனை உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலதிக பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக, இலங்கை நிலவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மூலம்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP