சமீபத்திய பதிவுகள்

மரியா – தூதரின் காமவெறிக்கு இரையான பணிப்பெண்.

>> Monday, April 9, 2012

 

 

இந்த கட்டுரை தூதரின் மனைவிகள் ஒருவரின் பணிப்பெண்ணாக இருந்த காப்ட் (Copt) இனப் பெண்ணான மரியாவுடனான தூதரின் கள்ளத் தொடர்பைப் பற்றியது. முகமது எதைப் பற்றியும் கவலைப் படாமல் அந்தப் பெண்ணுடன் 'படுத்தது', அவனின் மனைவிகளிடையே கலவரத்தை உண்டு பண்ணியது. இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர 'அல்லாவின் தலையீடு' தேவைப்பட்டது. இந்த கதை உமரினால் அறிவிக்கப்பட்ட நம்பிக்கையான ஹதிதில் பதியப்பட்டிருக்கிறது.

 

இந்த ஹதித் குரானின் வாசகம் 66: 4. ஐ வெளிப்படுத்துவதற்கான காரணத்தை விளக்குகிறது.

 

நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் அந்த அளவுக்கு சாய்ந்து விட்டன. தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லா அவருடைய பாதுகாவலர், மற்றும், ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நேர்மையானவர்களும், மேலும் தேவதைகளும் (அவருக்கு) உறுதுணையாக இருப்பார்கள்.

 

அந்த இரு பெண்களும் ஹஃப்சாவும் [உமரின் மகள்] ஆயிஷாவும் தான் என்றும் அவர்கள் தூதனிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு அவனுக்கு மிகுந்த மனவருத்தத்தை உண்டாக்கி அவன் தனது எல்லா மனைவிகளையும் மணவிலக்கு செய்ய தீர்மானிக்கும் அளவுக்கு சென்று விட்டான் என்றும் ஓமர் விளக்குகிறான்.

 

Bukhari Volume 3, Book 43, Number 648:

இப்னு அப்பாஸ் அறிவித்தார்.

நான் தூதரின் மனைவிகளில் இருவரைப் பற்றி உமர் அவர்களிடம் கேட்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். ஏனெனில், அவ்விருவரைப் பற்றித்தான் அல்லா (குரானில்), 'நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால், ஏனெனில், உங்கள் உள்ளங்கள் பிறழ்ந்து விட்டிருக்கின்றன" (குரான் 66:04) என்று கூறியிருந்தார்.

உமர் அவர்களுடன் நான் ஹஜ் செய்தேன். அவர்கள் (மலம் கழிப்பதற்காக) ஒதுங்கினார்கள். நானும் அவர்களுடன் குவளையை எடுத்துக் கொண்டு ஒதுங்கினேன். அவர்கள் மலம் கழித்துவிட்டுத் திரும்பி வந்தார்கள். நான் அவர்களின் கைகளில் தண்ணீரை ஊற்றினேன். அவர்கள் கழுவிக் கொண்டார்கள். அப்போது நான், 'விசுவாசிகளின் தலைவரே! தூதரின் மனைவிகளில் இருவரைக் குறித்து, 'நீங்கள் இருவரும் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கோரி மீண்டால்' என்று அல்லா கூறியுள்ளாரே, அந்த இருவர் யார்?' என்று கேட்டேன். அதற்கு உமர் , 'இப்னு அப்பாஸே! உங்களைக் கண்டு நான் வியப்படைகிறேன். ஆயிஷாவும் ஹஃப்சாவும் தான் அந்த இருவர்" என்று கூறினார்கள். பிறகு உமர் நடந்த நிகழ்ச்சி முழுவதையும் கூறலானார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள். நான் அன்சாரியான என் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருடன் பனூ உமய்யா இப்னு ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்து வந்தேன். அது மதீனாவை ஒட்டிய ஒரு குடியிருப்புப் பகுதி. நாங்கள் இருவரும் முறை வைத்துக் கொண்டு தூதரிடம் தங்குவோம். அவர் ஒரு நாள் தூதரிடம் இருப்பார். நான் ஒரு நாள் அவரிடம் இருப்பேன். நான் தூதரிடம் இருக்கும்போது தூதரின் அன்றைய நாளின் கட்டளைகள், போதனைகளையும் பிறவற்றையும் அவரிடம் தெரிவிப்பேன். அவர் தூதரின் இருக்கும்போது இதே போன்று அவரும் எனக்குத் தெரிவிப்பார். குறைஷிக் குலத்தினராகிய நாங்கள் பெண்களை அடக்கி வைப்பவர்களாக இருந்து வந்தோம். நாங்கள் அன்சாரிகளிடம் வந்தபோது பெண்கள் ஆண்களை மிஞ்சிவிடக் கூடியவர்களாக இருக்கக்கண்டோம். எங்களுடைய பெண்களும் அன்சாரிப் பெண்களின் வழக்கத்தைப் பின்பற்றத் தொடங்கினார்கள். ஒரு நாள் நான் என் மனைவியிடம் இரைந்து பேசினேன். அவள் என்னை எதிர்த்துப் பேசினாள், அவள் என்னை எதிர்த்துப் பேசியதை நான் வெறுத்தேன். நான் உம்மை எதிர்த்துப் பேசியதை நீர் ஏன் வெறுக்கிறீர்? அல்லாவின் மீதாணையாக! தூதரின் மனைவிகள் கூட அவரிடம் எதிர்த்துப் பேசுகிறார்கள். அவர்களில் சிலர் தூதரிடம் நாள் முழுக்கவும் இரவுவரை பேசுவதில்லை" என்று கூறினாள். இதைக் கேட்டு நான் அச்சமுற்று, 'அவர்களில் இப்படிச் செய்தவர் பெரும் இழப்புக்கு ஆளாகிவிட்டார்" என்று கூறினேன். பிறகு உடையணிந்து ஹஃப்சாவிடம் சென்றேன். 'ஹஃப்சா! உங்களில் சிலர் அல்லாவின் தூதரிடம் நாள் முழுக்க, இரவு வரை கோபமாக இருக்கிறார்களாமே!?" என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஆம்" என்று பதிலளித்தார். நான், 'அப்படி இருப்பவர் நஷ்டப்பட்டுவிட்டார்; இழப்புக்குள்ளாகிவிட்டார். இறைத் தூதருக்குக் கோபம் ஏற்பட்டால் அதனால் அல்லாவும் நம் மீது கோபமடைந்து நாம் அழிந்து போய்விடுவோம் என்னும் அச்சம் அவருக்கில்லையா? அல்லாவின் தூதரிடம் நீ அதிகமாக கேட்காதே. எந்த விஷயத்திலும் அவரை எதிர்த்துப் பேசாதே. அவரிடம் பேசாமல் இருக்காதே. உனக்கு தேவையென்று தோன்றியதை என்னிடம் கேள். உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்" என்று கூறினேன். அந்தக் காலகட்டத்தில் நாங்கள், கஸ்ஸானியர்கள் (ஷாம் நாட்டில் வாழும் ஒரு குலத்தினர்) எங்களின் மீது படையெடுப்பதற்காக, தங்கள் குதிரைகளுக்கு லாடம் அடித்துத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர் என்று ஒரு செய்தியைப் பேசிக் கொண்டிருந்தோம். என் அன்சாரித் தோழர் தம் முறை வந்தபோது, தூதரிடம் சென்று தங்கி, இஷா நேரத்தில் திரும்பி வந்தார். என் வீட்டுக் கதவை பலமாகத் தட்டி, 'உமர் அங்கே இருக்கிறாரா?' என்று கேட்டார். நான் அச்சமுற்று அவரைப் பார்க்க வெளியே வந்தேன். அவர், 'மிகப் பெரிய ஒரு சம்பவம் நிகழ்ந்துவிட்டது" என்று கூறினார். நான், 'என்ன அது? கஸ்ஸானியர்கள் வந்துவிட்டனரா?' என்று கேட்டேன். 'இல்லை. அதை விடப் பெரிய, அதை விட கவலைக்குரிய சம்பவம் நடந்துவிட்டது. தூதர் தம் மனைவிகளை விவாகரத்து (தலாக்) செய்துவிட்டார்கள்" என்று கூறினார். 'ஹஃப்சா நஷ்டமடைந்து பெரும் இழப்புக்குள்ளாகிவிட்டாள். இது நடக்கத்தான் போகிறது என்று எண்ணியிருந்தேன்' என்று கூறிவிட்டு உடையணிந்து கொண்டு புறப்பட்டேன். தூதருடன் ஃபஜ்ருத் தொழுகை தொழுதேன். தூதர் தொழுகை முடிந்தவுடன் தம் மாடியறைக்குள் சென்று அங்கே தனியே இருந்தார்கள். நான் ஹஃப்சாவிடம் சென்றேன். அப்போது அவள் அழுது கொண்டிருந்தாள். நான், 'ஏன் அழுகிறாய்? நான் உன்னை எச்சரித்திருக்கவில்லையா? தூதர் உங்களை தலாக் செய்துவிட்டாரா?' என்று கேட்டேன். அதற்கு அவள், 'எனக்கொன்றும் தெரியாது. அவர் அந்த அறையில்தான் இருக்கிறார்" என்று கூறினாள். நான் மிம்பருக்கருகில் சென்றேன். அதைச்சுற்றி ஒரு கூட்டத்தினர் அமர்ந்திருந்தனர். அவர்களில் சிலர் அழுது கொண்டிருந்தனர். அவர்களுடன் நான் சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். பிறகு நான் அந்த சூழ்நிலையைத் தாங்க முடியாமல் தூதர் இருந்த அறைக்கு அருகே சென்றேன். அங்கிருந்த, தூதரின் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின பணியாளிடம் , 'உமருக்காக தூதரிடம் அனுமதி கேள்" என்று சொன்னேன். அந்த பணியாள் உள்ளே சென்று தூதரிடம் பேசிவிட்டுப் பிறகு வெளியே வந்து, 'உங்களைப் பற்றி தூதரிடம் கூறினேன். அவர்கள் மெளனமாக இருந்துவிட்டார்கள்" என்று கூறினார். எனவே, நான் திரும்பி வந்து மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தினருடன் அமர்ந்து கொண்டேன். பின்னர், அங்கு நிலவிய சூழ்நிலையைத் தாங்க முடியாமல் மீண்டும் அந்த பணியாளிடம் சென்று, 'உமருக்காக அனுமதி கேள்" என்று கூறினேன். அவர் முன்பு சொன்னதைப் போன்றே இப்போதும் கூறினார். நான் மிம்பருக்கருகில் இருந்த கூட்டத்தாருடன் அமர்ந்து கொண்டேன். மறுபடி அங்கு நான் கண்ட சூழ்நிலையைத் தாங்க முடியாமல் அந்த பணியாளிடம் சென்று, 'உமருக்காக அனுமதி கேள்" என்று கூறினேன். அப்போதும் அந்த பணியாளிடம் முன் போன்றே கூறினார். நான் திரும்பிச் செல்ல இருந்தபோது அந்த பணியாள் என்னை அழைத்து, 'உங்களுக்கு தூதர் அனுமதியளித்துவிட்டார்" என்று கூறினார். உடனே, நான் தூதரின் அறைக்குள் நுழைந்தேன். அப்போது அவர் ஓர் ஈச்சம்பாயில் படுத்துக் கொண்டிருந்தார். பாயில் மெத்தை எதுவும் இருக்கவில்லை. எனவே, அவரின் விலாவில் ஈச்சம் பாய் அடையாளம் பதித்திருந்தது. அவர் ஈச்ச நார்கள் அடைத்த தோல் தலையணை ஒன்றின் மீது சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்தார். அவருக்கு நான் சலாம் கூறினேன். பிறகு நான் நின்று கொண்டே, 'தங்கள் மனைவிகளை தலாக் செய்து விட்டீர்களா?' என்று கேட்டேன். அவர் பார்வையை என் பக்கம் உயர்த்தி, 'இல்லை' என்று கூறினார்கள். பிறகு, நான் நின்று கொண்டே அவரை சகஜ நிலைக்குக் கொண்டுவர விரும்பி, பின்வருமாறு சொல்லத் தொடங்கினேன்: தூதரே! நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்கள். குறைஷிகளான நாங்கள் பெண்களை எங்கள் அதிகாரத்திற்குள் வைத்திருந்தோம். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கூட்டத்தாரிடம் நாங்கள் வந்தபோது… என்று தொடங்கி, (முன்பு இப்னு அப்பாஸ் அவர்களிடம் என் மனைவி பற்றிச் சொன்னவை) எல்லாவற்றையும் கூறினேன். தூதர் அவர்கள் புன்னகைத்தார். பிறகு நான் தூதரிடம், 'நான் ஹஃப்சாவிடம் சென்று, உன் அண்டை வீட்டுக்காரியைப் (ஆயிஷா) பார்த்து ஏமாந்துவிடாதே. ஏனென்றால் அவள் உன்னை விட அழகு மிக்கவளாகவும் அல்லாவின் தூதருக்குப் அதிக பிரியமானவளாகவும் இருக்கிறாள்' என்று கூறியதைச் சொன்னேன். தூதர் இன்னொரு முறை புன்னகைத்தார். தூதர் புன்னகைத்ததைக் கண்ட நான் அமர்ந்து கொண்டேன். பிறகு, நான் அவர்களின் அறையை என் பார்வையை உயர்த்தி நோட்டமிட்டேன். அல்லாவின் மீதாணையாக! கண்ணைக் கவருகிற பொருள் எதையும் நான் அதில் காணவில்லை; மூன்றே மூன்று தோல்களைத் தவிர. அப்போது நான், 'தங்கள் பின்பற்றிகளுக்கு உலகச்செல்வங்களை தாராளமாக வழங்கும்படி அல்லாவிடம் பிரார்த்தியுங்கள். ஏனெனில், பாரசீகர்களுக்கும் பைசாண்டினர்களுக்கும், அவர்கள் அல்லாவை வணங்காதவர்களாக இருந்தும், தாரளமாக வழங்கப்பட்டிருக்கின்றனவே" என்று கூறினேன். தூதர் சாய்ந்து உட்கார்ந்து, 'கத்தாபின் மகனே! நீங்கள் சந்தேகத்தில் இருக்கிறீர்களா? அவர்கள் தம் நற்செயல்களுக்கான பிரதிபலன்கள் எல்லாம் இந்த உலக வாழ்விலேயே மறுமை வாழ்வுக்கு முன்னதாகக் கொடுக்கப்பட்டுவிட்டார்கள்" என்று கூறினார்கள். உடனே நான், 'தூதரே! எனக்காகப் பாவமன்னிப்புக் கோரிப் பிரார்த்தியுங்கள்" என்று கூறினேன். தூதரின் அந்த இரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவிடம் கூறி பகிரங்கப்படுத்திவிட்டபோது, அதன் காரணத்தால்தான் தூதர் தம் மனைவிகளிடமிருந்து விலகித் தனிமையில் இருக்கத் தொடங்கினார். மேலும், 'அவர்களிடம் ஒரு மாத காலத்திற்கு செல்லமாட்டேன்' என்றும் கூறியிருந்தார். அல்லா அவரை கண்டித்தபோது தம் மனைவிகளின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட கடும் வருத்தமே இவ்வாறு அவர் சொல்லக் காரணமாகும். இருபத்தொன்பது நாட்கள் கழிந்துவிட்ட பொழுது, தூதர் ஆயிஷாவிடம் சென்றார். அவள், தூதரிடம், 'எங்களிடம் ஒரு மாத காலத்திற்கு வரப் போவதில்லை என்று நீங்கள் சத்தியம் செய்திருந்தீர்களே, நாங்கள் இருபத்தொன்பது இரவுகளல்லவா கழித்திருக்கிறோம்? அதை நான் ஒவ்வொரு நாளாக எண்ணிக் கொண்டே வருகிறேனே" என்று கூறினார்கள். அதற்கு தூதர், 'மாதம் என்பது இருபத்தொன்பது நாள்களும் தான்" என்று பதில் கூறினார்கள். அந்த மாதமும் இருபத்தொன்பது நாள்களாகவே இருந்தது.

ஆயிஷா கூறினார்:அப்போதுதான் (தூதர் அவர்களுடன் வாழ்ந்து, அல்லது அவர்களின் மணபந்தத்திலிருந்து விலகி விடுவது ஆகிய இரண்டு விஷயங்களில்) நாங்கள் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி கட்டளையிடும் இறைவசனம் அருளப்பட்டது. எனவே, தூதர் தங்களின் மனைவிகளில் முதலாவதாக என்னிடம் தொடங்கி, 'உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்; நீ உன் தாய் தந்தையரிடம் அனுமதி வாங்கும் வரை அவசரப்படத் தேவையில்லை" என்று கூறினார்கள். அதற்கு நான், 'என் தாய் தந்தையர் தங்களைவிட்டுப் பிரிந்து வாழும்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும்" என்று கூறினேன். பிறகு தூதர் அல்லா கூறியதாக கூறினார்:- 'தூதரே! நீங்கள் உங்கள் மனைவிகளிடம் கூறிவிடுங்கள்;'நீங்கள் உலக வாழ்வையும் அதன் அழகையும் விரும்புகிறீர்களென்றால் வாருங்கள். நான் உங்களுக்கு ஏதேனும் ஏற்பாடு செய்து அழகிய முறையில் உங்களை அனுப்பி விடுகிறேன். ஆனால், நீங்கள் அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுவுலகத்தையும் விரும்புகிறீர்கள் என்றால் உங்களில் நற்செயல் புரிபவர்களுக்கு அல்லா மகத்தான பிரதிபலனைத் தயார் செய்து வைத்துள்ளார்' என்று கூறினார். (33.28) நான், 'இந்த விஷயத்திலா என் தாய் தந்தையரிடம் அனுமதி கேட்பேன். நானோ அல்லாவையும் அவருடைய தூதரையும் மறுமையையும் தான் விரும்புகிறேன்" என்றேன். பிறகு, தூதர் தம் மனைவியர் அனைவருக்கும் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை வழங்கினார். அனைவருமே நான் சொன்னது போன்றே சொன்னார்கள்.

 

இந்த ஹதித் Muslim 9.3511 லும் மற்றும் Bukhari 3.43.648,7.62.119 லும் பதியப் பட்டுள்ளது.

 

இது ஒரு முக்கியமான ஹதித். ஏனென்றால் இது இரண்டு வரலாற்று உண்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒன்று, உமரே ஒத்துக் கொண்டுள்ள படி, "அன்சாரிப் பெண்கள் தங்கள் ஆண்களைக் தங்கள் கைக்குள் வைத்திருந்தனர்". இந்த கூற்று மிகைப்படுத்தியதாக இருந்தாலும் கூட, மதீனாவின் பெண்கள் குறைஷிப் பெண்களை விட அதிக உரிமைகளைக் கொண்டு இருந்தனர் என்பது தெளிவு. குரைஷி மக்களின் மற்றும் ஓமர் மற்றும் முகமதின் ஊரான, மெக்கா ஒரு முக்கியமான வழிபாட்டுத் தளத்தை மையமாகக் கொண்ட ஊர். முக்கியமான வழிபாட்டுத் தளங்களில் வாழும் மக்கள் மற்ற ஊர்களில் வாழும் மக்களை விட வேஷக்காரர்களாக இருப்பார்கள். பெண்களை அடக்கி வைப்பதிலும் அவர்களின் உரிமைகளைப் பறிப்பதிலும் என்றுமே மதங்கள் முக்கியமான பங்கு வகிக்திருக்கிறது. அரேபியாவில் மற்ற இடங்களில் வாழும் பெண்களை விட குறிப்பாக, பலவகைப்பட்ட மக்களைக் கொண்ட, அதிக நாகரீகம் அடைந்த மக்களான யூதர்களையும் கிருத்துவர்களையும் கொண்ட நகரமான மதினாவில் வாழும் பெண்களை விட மெக்காப் பெண்கள் அதிகமாக அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள் என்பது இயல்பே. ஓமர் மற்றும் முகமதின் மனைவிகள் இந்த சுதந்திரமான சூழ்நிலையால் விடுதலையடைந்து தங்கள் உரிமைகளையும் அனுபவிக்க விரும்பினார்கள். மெக்காவின் பெண்வெறுப்பைக் (misogyny) கொண்ட இரண்டு ஆண்களான ஓமர் மற்றும் முகமதிற்கு இது பிடிக்க வில்லை. அவர்கள் தங்கள் மனைவிகளின் புதிய சுதந்திரத்தைக் கண்டு மிரண்டிருந்தார்கள் என்று இந்த ஹதித் காட்டுகிறது.

 

இந்த ஹதிதின் முக்கியத்துவம் என்னவென்றால், இது இஸ்லாமுக்கு முன்னர் பெண்கள் அதிக சுதந்திரத்தைக் கொண்டு இருந்தனர் என்றும் பெண்ணின வேறுப்பிகளான முகமதினாலும் அவனின் பின்பற்றிகளாலும் அந்த சுதந்திரங்கள் பறிக்கப்பட்டது என்றும் நிரூபிக்கிறது. இஸ்லாமில் பெண்களின் பரிதாபகரமான நிலைக்கு காரணம் கடவுளின் முடிவல்ல என்பதும் அது 1400 ஆண்டுகளுக்கு முன் மெக்காவில் பெண்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்பதின் பிரதிபலிப்பு தான் என்பதும் இந்த ஹதிதின் மூலம் தெளிவாகிறது.

 

பெண்கள் தங்கள் கணவர்களுக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டைப் பற்றி குரானிலும் ஹதிதிலும் இந்த அளவுக்கு அதிகமாக பேசப்பட்டிருப்பதற்கு காரணம் முகமது தனது சிறு வயதையும் கிளர்ந்தெழும் துடிப்பையும் கொண்ட மனைவிகளைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளத் தவித்தான் என்பதுதான்.

 

இந்த ஹதித் தூதரின் மற்றொரு காமக் கொடூரத்தையும் அம்பலப் படுத்துகிறது.

 

ஒரு நாள் முகமது தனது மனைவியான உமரின் மகள் ஹஃப்சாவின் வீட்டிற்கு செல்கிறான். ஹஃப்சாவின் பணிப்பெண் மரியாவைக் கண்டு மயங்கி விடுகிறான். மரியாவுடன் தனியாக இருக்க ஹஃப்சாவை அங்கிருந்து அகற்ற முடிவெடுத்தான். ஹஃப்சாவிடம் அவளின் தந்தை உமர் அவளைப் பார்க்க அழைத்ததாக பொய் கூறினான். ஹஃப்சா அங்கிருந்து சென்றவுடன், மரியாவை படுக்கைக்கு தள்ளிச் சென்று உடலுறவு கொள்கிறான். மரியா மறுப்பு தெரிவிப்பதைப் பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாது. அவள் தன் குடும்பத்தை விட்டுப் பிரிக்கப்பட்ட ஒரு அடிமைப்படுத்தப்பட்ட பெண். இந்த ஊரின் சட்டமே முகமது தான். ஆகையால் நியாயப்படி முகமது மரியாவை வல்லுறவு கொண்டான்.

 

இதற்கிடையில் தனது தந்தை தன்னை அழைக்கவில்லை என்று அறிந்து கொண்ட ஹஃப்சா எதிர்பார்த்ததற்கும் விரைவிலேயே வீடு திரும்புகிறாள். தனது பிரபலக் கணவன் தன் பணிப்பெண்ணுடன் படுத்திருப்பதைக் காண்கிறாள்.

 

அவளுடைய கோபம் தலைக்கேறுகிறது. தனது கணவன் ஒரு தூதன் என்பதையும் மறந்து அவனை கன்னாபின்னாவென்று ஏசி பிரச்னையை உண்டு பண்ணுகிறாள். தூதன் அவளைக் அமைதியாக இருக்கும் படி கெஞ்சுகிறான். மறுபடியும் மரியாவை அனுகமாட்டேன் என்று உறுதி கூறுகிறான். இந்த அசிங்கத்தைப் பற்றியும் யாருடனும் பேசவேண்டாம் என்று கெஞ்சுகிறான்.

 

இருந்தாலும், தன்னை அடக்கிக் கொள்ளமுடியாத ஹஃப்சா தன் தோழி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டாள். இந்த இரு இளம்பெண்களும் தங்கள் மற்ற சக்களத்திகளுடன் சேர்ந்து 'உலகின்மீதான அல்லாவின் கருணைக்கு' பெறுத்த தலைவலியை கொடுக்கிறார்கள். 'அல்லாவின் கருணை' தனது எல்லா மனைவிகளையும் தண்டிக்க முடிவு செய்து அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்கப் போவதில்லை என்று அறிவிக்கிறார். குரானில் பரிந்துரைக்கப்பட்ட இரண்டாம் நிலை தண்டனை தான் அது. அவர்களைக் கடிந்து கொள்வது முதல் நிலை தண்டனையும் அடிப்பது மூன்றாம் நிலை தண்டனையும் ஆகும். Q. 4: 34.

 

ஒரு ஆண் கலவியின்பத்தை மறுப்பதன் மூலம் தனது மனைவியை தண்டிக்க முடிவெடுக்கும் போது அவன் தனது சொந்த இச்சையை மற்ற மனைவிகளிடம் இருந்து தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் முகமது ஒரு மாதத்திற்கு எந்த மனைவியிடமும் படுக்கப்போவதில்லை என்று சத்தியம் செய்யும் அளவுக்கு கடுப்பேற்றப்பட்டிருந்தான். அல்லாவின் அன்புத்தூதனுக்கு இது மிகவும் கடினமாக இருந்திருக்க வேண்டும். கருணையே வடிவான அல்லா தனது தூதரை சிக்கலில் இருந்து காப்பாற்ற சுரா தஹ்ரிம்மை (தடைசெய்தல்) வெளிக்காட்டினார். இந்த சுராவில், அவனுக்கு அல்லாவால் 'அனுமதிக்கப்பட்ட' ஒன்றை மறுத்து, தனது மனைவிகளைத் திருப்திபடுத்துவதற்காக அவனுக்குப் பிடித்த ஒன்றைக் கைவிடுவதன் மூலம் தன்மீதே இவ்வளவு கடினமாக இருப்பதற்காக தனது தூதரை அல்லா கடிந்து கொள்கிறார்.

 

1. தூதரே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லா மிகவும் மன்னிப்பவர், மிக்க கிருபையுடையவர்.

2. அல்லா உங்களுடைய சத்தியங்களை முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறார்; மேலும் அல்லா உங்கள் எஜமானர். மேலும், அவர் நன்கறிந்தவர்; ஞானம் மிக்கவர்.

3.மேலும், தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது அவர் அதை மற்றொருவருக்கு அறிவித்ததும், அதை அல்லா அவருக்கு வெளியாக்கி வைத்தார்; அவர் அதில் சிலதை தெரிவித்தும், சிலதை புறக்கணித்தும் இருந்தார். அவர் (ஹஃப்சாவிடம்) அதைப் பற்றி தெரிவித்த போது "உங்களுக்கு இதைத் தெரிவித்தவர் யார்?" என்று அப்பெண் கேட்டார். அதற்கு அவர்: "நன்கறிந்தோரும் உணர்ந்தோரும் எனக்குத் தெரிவித்தார்" என்று கூறினார்.

4. நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும், நிச்சயமாக உங்களிருவரின் இதயங்களும் அந்த அளவுக்கு சாய்ந்து விட்டன. தவிர, நீங்கள் இருவரும் அவருக்கெதிராய் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டால், நிச்சயமாக அல்லா அவருடைய பாதுகாவலர், மற்றும், ஜிப்ரீலும், நம்பிக்கையாளர்களில் நேர்மையானவர்களும், மேலும் தேவதைகளும் (அவருக்கு) உறுதுணையாக இருப்பார்கள்.

 

5. அவர் உங்களை "தலாக்" சொல்லி விட்டால், உங்களை விடச் சிறந்த – முஸ்லிம்களான, நம்பிக்கையாளர்களான, அல்லாவுக்கு பணிந்து நடப்பவர்களான, தங்கள் தவறுகளுக்காக அல்லாவுடன் வருந்தி மன்றாடுபவர்களான, அல்லாவை உண்மையாக வணங்குபவர்களான, நோன்பு நோற்பவர்களான, (அல்லாவுக்காக) இடம்பெயர்ந்தவர்களான, உங்களை விட உயர்ந்த, முன்னர் மணந்த பெண்களையோ அல்லது கன்னிப் பெண்களையோ இறைவன் உங்களுக்குப் பதிலாக அவருக்கு மனைவியராய் கொடுப்பார். (Q. 66:1-5)

 

முகமது மரியாவை அனுகமாட்டேன் என்று ஹஃப்சாவிடம் வாக்கு கொடுத்திருந்தாலும் அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. முகமது மரியாவின் 'தேனை' ருசி பார்த்து விட்டான். அதைத் திகட்டும் வரைக் குடித்து தான் ஆக வேண்டும். அவன் ஒரு மாதத்திற்கு மற்ற மனைவிகளிடம் படுக்கப்போவதில்லை என்று வேறு சத்தியம் செய்து விட்டான். விஷயம் விபரீதமாகிக் கொண்டு இருந்தது. 'உன்னதப் படைப்பு' எவ்வாறு ஒரு மாதத்திற்கு 'தேன்' குடிக்காமல் இருப்பது?

 

இந்த இக்கட்டில் இருந்து அவனுக்கு உதவ அல்லாவால் மட்டுமே முடியும். ஆனால் அல்லாவை தன் கோமனத்திலேயே வைத்திருந்தால் இது ஒன்றும் பெரிய சிக்கலில்லை. 'எல்லாம்வல்ல' நண்பரின் பொறுப்பில் விட்டுவிட்டால் போதும். அவர் பார்த்துக் கொள்வார்.

 

முகமதின் எஜமானர் அவன் குறியா இல்லை அல்லாவா?

நடந்தது இதுதான். இந்த விஷயத்தில் அல்லாவே தலையிட்டு அவனின் நெஞ்சின் விருப்பத்தின் படி நடந்து கொள்ளும்படி தனது தூதருக்கு பச்சை விளக்கு ஏந்துகிறார். தஹ்ரிம் சுராவில் அல்லா தன் அன்புத்தூதனுக்கு அவனின் மனைவிகளைப் பொருட்படுத்த வேண்டாம் என்றும் மரியாவின் 'தேனை' எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு பருகிக் கொள் என்றும் லைசன்ஸ் கொடுத்தார். ஒரு தூதனுக்கு இதற்கு மேல் என்ன வேண்டும்? முகமதின் சிற்றின்பங்களின் மீது அல்லா எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்றால் எல்லா ஆண்களுக்கும் தங்கள் சத்தியங்களை மீறும் அனுமதியை 'ஒரு வரமாகக்' கொடுத்தார். அல்ஹம்துலில்லா! சுபஹானல்லா. அல்லா அருமையானவர் இல்லையா?

 

நாம் இதையும் தவற விட்டு விடக் கூடாது. ரகசியத்தை ஹஃப்சா ஆயிஷாவுக்கு கூறிவிட்டாள் என்று முகமது அறிந்த போது மறுபடியும் பொய் சொல்கிறான். இந்த செய்தி ஆயிஷாவுக்குத் தெரியவந்து விட்டது என்பது ஆயிஷாவிடம் இருந்து தான் தெரிந்து கொண்டான். ஆனால் அல்லாதான் தனக்கு கூறியதாக (மூன்றாம் வாசகம்) சொல்கிறான். ஆனால் குரானின் ஆசிரியர் முகமது இல்லை என்றால் அவனுக்காக பொய் பேசுவது அல்லாவே தான்.

 

இந்த சுராவில் முகமது அல்லாவை கூட்டிக் கொடுப்பவராகவும் (pimp), புறம் பேசுபவராகவும் (gossiper) பொய்யராகவும் (liar) ஆக்குகிறான். எல்லாம் தனது வக்கிரத்தையும் கள்ளத் தொடர்பையும் மறைக்கத்தான்.

மேற்கண்ட வாசகங்களுக்கு பதிலாக, இளமையும் அழகும் மட்டுமில்லாமல் புத்தி சாதுர்யமும் கொண்ட, ஆயிஷா முகமதிடம் "உங்கள் அல்லா உங்கள் சிக்கலைத் தீர்க்க ஓடோடி வருகிறாரே" என்று கூறியதாக சொல்லப்படுகிறது.

 

முகமது சொன்னதையெல்லாம் அப்படியே ஏற்றுக் கொண்ட அவனின் பின்பற்றிகளுக்குக் கூட மேற்கண்ட கதை தர்மசங்கடமாக இருந்திருக்க வேண்டும். அவனின் நடத்தை கேட்ட நடத்தையை மறைப்பதற்காக ஓமரினால் முன்னரே விளக்கப்பட்ட குரானின் அந்த வாசகங்களுக்கு புது விளக்கம் அளிக்கும் வகையில் சில கதைகளை இட்டுக் கட்டினர்.

 

Muslim 9: 3496

அறிவித்தவர்: ஆயிஷா

தூதர் ஜஹ்ஷின் மகளான ஜைனாபின் வீட்டிற்கு போய் தேனைப் பருகுவது வழக்கம். நானும் ஹஃப்சாவும் எங்களில் யாரை முதலில் தூதர் பார்க்க வருகிறாரோ அவர் தூதரிடம் உங்கள் மேல் வேலம்பிசினின் நாற்றம் அடிக்கிறது என்று சொல்லவேண்டும் என்று பேசி வைத்துக் கொண்டோம். அவர் எங்களில் ஒருவரின் வீட்டிற்கு [யாருடைய வீடு என்று சொல்பவற்கே தெரியவில்லை] முதலில் வந்தார். பேசி வைத்ததைப் போல சொல்லப்பட்டது. அதற்கு அவர் 'நான் ஜைனாபின் வீட்டில் தேன் குடித்தேன். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன்'. இதற்காகத் தான் பின்வரும் வாசகங்கள் வெளிப்படுத்தப்பட்டன. 'அல்லா உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்…'. 'நீங்கள் இருவரும் இதற்காக அல்லாவிடம் வருந்தவேண்டும்'. 'தூதர் தம் மனைவியர் ஒருவரிடம் ஒரு செய்தியை இரகசியமாக்கி வைத்த போது'. 'நான் தேனைக் குடித்தேன்' என்று அவர் கூறியதைத் தான் இது குறிக்கிறது.

 

மேற்கண்ட ஹதிதின் இருப்பும், ஓமர் அறிவித்த ஹதிதுடன் அதன் மாறுபாடும் முகமதின் சகாக்கள் அவனின் பெயரைக் காப்பாற்றுவதற்காக பொய் பேசத் தயங்கவில்லை என்று காட்டுகிறது. தஹ்ரிம் சுராவை நியாயப்படுத்துவதற்காக தேன் குடித்த கதையை ஏற்றுக்கொள்வது முட்டாள்தனம். தேன் நாற்றமடிப்பதில்லை. எல்லாவற்றிகும் மேலாக ஒரு சாதாரண நிகழ்வான தேன் குடித்தலால் முகமது தன் எல்லா மனைவிகளையும் தலாக் செய்யவோ அல்லது அவர்களுடன் ஒரு மாதத்திற்கு படுக்காமல் இருக்கப் போவதாக சத்தியம் செய்யவோ முடிவு செய்யும் அளவுக்கு முகமதின் குடும்பங்களில் குழப்பம் விளைவிக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. தேனைக் குடித்தல் என்ற ஒரு அற்ப காரியத்திற்காக அல்லாவே தலையிட்டு முகமதின் மனைவிகளை தலாக் செய்யப்படுவீர்கள் என்றும் முகமதுக்கு புதிய கன்னிப் பெண்கள் கொடுக்கப்படுவார்கள் என்றும் எச்சரிக்கும் அளவுக்கு கலவரம் ஏற்படுமா? மரியாவின் கால்களுக்கிடையில் உள்ள அடையில் இருந்து முகமது எதைக் குடித்தானோ அதன் சந்தேகக் குறியீடு தான் தேன் என்றால் ஒழிய இந்த புது விளக்கம் மிகவும் அசட்டுத்தனமானது.

 

அப்பாசினால் அறிவிக்கப்பட்ட இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட ஹதித் தவறானது என்றும் மேலே உள்ள தேனைப் பற்றிய ஹதித் தான் சரியானது என்றும் பல முஸ்லிம்கள் கூறிக் கொள்கிறார்கள். சுத்தப் பேத்தல். இந்த ஹதித் புகாரி மற்றும் முஸ்லிம் ஆகிய இருவராலும் தொகுக்கப்பட்டிருக்கிறது. மேலும் தஹ்ரிம் சுராவுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற sha'ne nozool க்கு அதாவது பின்புலத்திற்கு (context) ஒரே ஒரு அர்த்தமுள்ள விளக்கம் இது தான். இஸ்லாமிய அறிஞர் Asif Iftikhar அவர்களின் கூற்றின் படி " ஒரு ஹதிதின் அடிப்படையானது குரானிலோ, சுன்னாவிலோ நிறுவப்பட்ட நெறிகளிலோ இருந்தால் மட்டுமே அந்த ஹதீதை நம் வாழ்க்கை வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளமுடியும்". வலக்கை சொத்துக்களிடம் அதாவது 'அடிமைப்படுத்தப்பட்ட பெண்களிடம்' காமவுறவு கொள்ளலாம் என்கிறது குரான். அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை படுக்கைக்கு இழுப்பதும் முகமதின் வழக்கம் (சுன்னா) தான். சுராவின் வார்த்தைகள் கூட அது கலவியைப் பற்றியது தானே ஒழிய தேனைப் குடிப்பதைப் பற்றியதல்ல என்பதை தெளிவு படுத்துகின்றன. Asif Iftikhar "இமாம் Ibni Ali Jauzee 'அடிப்படை அறிவுக்கோ (common sense) பொது விதிமுறைக்கோ (universal rule) எதிராக ஒரு ஹதிதைக் கண்டால் அதைப் போலி என்று எடுத்துக் கொள்ளலாம்.' என்று கூறியதாக சொல்லப்படுகிறது"என்று எழுதுகிறார்.

 

தேனைப் பற்றிய கதை பின்வாயால் சிரிக்கத் தக்கது. தேனுக்காக இவ்வளவு பிரச்சனையா? எந்த தேன் நாற்றம் அடிக்கும்? சொல்லப் போனால் தேன் சிறிது நறுமணமானது. இந்த ஹதித் ஒரு போலி. ஏனென்றால், அந்த ஆரம்ப நாட்களில் கூட, முஸ்லிம்கள் தூதரின் பல செயல்களைக் கேள்விப்பட்டு நெளிந்தார்கள். அதேசமயத்தில் முகமது ஹஃப்சாவிடம் பொய் கூறி அவளை வீட்டில் இருந்து வெளியேறச் செய்து மரியாவுடன் படுத்தது பற்றிய ஹதிதில் அர்த்தம் இருக்கிறது. அது குரானின் வழிகாட்டலின் படியும் முகமதின் நடத்தைக் கெட்ட நடத்தையின் படியும் அமைகிறது. முகமது அவனுக்கு அழகாகப்பட்ட பெண்களை படுக்கைக்கு அழைப்பது ஒன்றும் புதிதல்ல.

 

இந்த கதை Tabaqat ல் Ibn Sa'd வாலும் பதியப் பட்டிருக்கிறது.

 

ஹஃப்சாவின் வீட்டில் மரியாவுடன் அல்லாவின் தூதர் உடலுறவு கொண்டார் என்று அபு பக்கர் அறிவித்தார் என்று வக்கிதி (Waqidi) எங்களுக்கு சொன்னார். தூதர் வீட்டைவிட்டு வெளியே வந்தபோது, ஹஃப்சா வாசலில் (பூட்டிய கதவின் பின்னால்) அமர்ந்திருந்தார். அவர் தூதரிடம், 'ஓ தூதரே! என்னுடைய விட்டிலா இப்படிச் செய்வீர்கள்? அதுவும் என்னுடைய முறை நாளில்' என்று கேட்டார். கொஞ்சம் நிதானமாக இரு, என்னைப் போக விடு, அவளை எனக்கு ஹராமாக [அனுமதிக்கப்படாததாக] ஆக்கிக் கொள்கிறேன் என்று தூதர் சொன்னார். நீங்கள் சத்தியம் செய்தால் ஒழிய நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று ஹஃப்சா சொன்னார். அல்லாவின் மீது சத்தியமாக சொல்கிறேன், அவளை இனிமேல் அணுக மாட்டேன் என்று தூதர் சொன்னார். மரியாவை தூதருக்கு ஹராமாக்கிக் கொள்ளும் இந்த உறுதிமொழியானது செல்லாதது எனவே அது ஒரு அத்துமீறலாக (hormat) ஆகாது என்று Qasim ibn Muhammad கூறினார். [Tabaqat v. 8 p. 223 Publisher Entesharat-e Farhang va Andisheh Tehran1382 solar h ( 2003) Translator Dr. Mohammad Mahdavi Damghani]

 

முகமதின் தன சொந்த உறுதி மொழியை மீறியதை Qasim ibn Muhammad நியாயப்படுத்த முயல்கிறார். அவனின் உறுதி மொழி செல்லுபடியாகாது என்றால் அவன் ஏன் வாக்குக் கொடுக்க வேண்டும், செல்லுபடியாகும் என்றால் அதை ஏன் மீறினான்?

 

என்னுடைய குரான் புத்தகத்தில் பின்வரும் தப்சீர் [tafseer = விளக்கவுரை] தஹ்ரிம் சுராவின் பக்கத்தில் இருக்கிறது.

 

தூதர் தன் நாட்களை தன் மனைவிகளிடையே பிரித்து கொண்டிருந்தார் என்றும் அறிவிக்கப் படுகிறது. ஹஃப்சாவின் முறை நாளின் பொது, அவர் அவளை அவளின் தந்தை ஓமர் கட்டாபின் வீட்டிற்கு ஒரு வேலைக்காக அனுப்பினார். அந்த கட்டளையை ஏற்று அவள் வெளியேறிய போது, தூதர், நஜஷி மன்னனிடமிருந்து வந்த அன்பளிப்பான, தனக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றுக் கொடுத்த அடிமைப்படுத்தப்பட்ட பணிப்பெண்ணான,  மரியா என்ற காப்ட் பெண்ணை அழைத்து உடலுறவு கொண்டார். ஹஃப்சா திரும்பி வந்த போது வீடு உள்ளிருந்து தாழிடப் பட்டிருக்கக் கண்டார். ஆகையால் தூதர் தன் வேலையை முடித்துக் கொண்டு வெளியே வரும்வரை அவர் வாசலிலேயே காத்துக் கொண்டிருந்தார். தூதர் தன் முகத்தில் 'சுகம்' வழிந்து கொண்டு வெளியே வந்தார். அவரை இந்த நிலையில் கண்ட ஹஃப்சா, தன்னிடம் ஒரு பொய்யைச் சொல்லி வீட்டை விட்டுப் போகச் செய்து தன் வீட்டிலேயே தன் பணிப்பெண்னிடம் உறவு கொண்டதன் மூலம் தன்னை அவமதித்து விட்டதாகவும், தன்னுடன் படுக்க வேண்டிய முறை நாளில் வேறொருவருடன் படுத்து விட்டதாகவும் அவரை கண்ட படி பேச ஆரம்பித்து விட்டார். அதற்கு தூதர், கொஞ்சம் அமைதியாக இரு, அவள் என்னுடைய அடிமைப்படுத்தப்பட்ட பெண் என்பதால் எனக்கு 'ஹலால்' என்ற போதிலும் உன்னுடைய திருப்திக்காக அவளை நான் எனக்கு இந்த நிமிடத்தில் இருந்து 'ஹராம்' ஆக்குகிறேன். இது ஹஃப்சாவை அமைதிப்படுத்தவில்லை. தூதர் அவரின் வீட்டில் இருந்து கிளம்பியவுடன் அவர் தன் அறையை ஆயிஷாவின் அறையில் இருந்து பிரித்த சுவற்றை தட்டி ஆயிஷாவிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். முகமது மரியாவை தனக்கு ஹராமாக்கியதாக உறுதி மொழி கொடுத்ததைப் பற்றியும் விளக்கமாக சொல்லிவிட்டார். [Published by Entesharat-e Elmiyyeh Eslami Tehran 1377 lunar H. Tafseer and translation into Farsi by Mohammad Kazem Mo'refi]

 

மரியா என்பவள் வெள்ளை காப்ட் இனத்தைச் சேர்ந்த மிகவும் அழகான மற்றும் இளமையான பெண். அவள் முகமதுக்கு இப்ராகிம் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். இப்ராகிம் முகமதின் மகனாக இருக்க முடியுமா என்று எனக்கு சந்தேகம் இருந்தது. எனது ஆய்வின் படி, முகமது, தனது வாழ்நாளின் இறுதி ஆண்டுகளில் அக்ரோமேகாளி (acromegaly) என்ற நோயினால் பாதிக்கப் பட்டிருந்தான். இந்த சிதைவு நோயின் ஒரு பக்கவிளைவு ஆண்மையின்மையாகும். அவனுக்கு விறைப்புக் கோளாறு இருந்தது. மணக்கும்போதே நாற்பது வயதைக் கொண்டிருந்த கதிஜாவுடன் முகமது ஆறு குழந்தைகளைப் பெற்றான் என்பதையும், ஆனால், தனது கடைசி பத்து வருடத்தில் தான் உறவு கொண்ட இருபதுக்கும் மேற்பட்ட பெண்களுடன் அவனுக்கு எந்த குழந்தையும் பிறக்கவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள். அவன் தன் மனைவிகளுடன் உண்மையிலேயே உறவு கொள்ளவில்லை என்றும், 'தடவத்தான்' செய்தான் என்றும், அவன் பல நாட்களில் ஒரே இரவில் ஒவ்வொரு மனைவியிடமும் சென்று அவர்களைத் தடவி விளையாடி, 'அவர்களின் தேனைக் குடிப்பான்' என்றும் ஆனால் உறவு கொள்ள மாட்டான் என்றும் அறிவிக்கின்ற பல ஹதிதுகள் இருக்கின்றன. முகமதின் காம வாழ்க்கையைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள Understanding Muhammad என்ற எனது நூலைப் படியுங்கள்.

 

முகமது தான் உண்மையில் கலவியில் ஈடுபடாத போதே, 'கலவி கொள்வதாக கற்பனை செய்வது' வழக்கம் என்று மற்றுமொரு ஹதித் அறிவிக்கிறது.

 

Bukhari Vol. 7: 71:660:

ஆயிஷா அறிவித்தார்: "மாயத்தின் லீலையினால் அல்லாவின் தூதர் தனது மனைவிகளுடன் உடலுறவு கொள்ளாத போதே அவ்வாறு கொண்டதாக கற்பனை செய்வது வழக்கம்."

 

"உங்களில் யாருக்கும் தூதருக்கு உள்ள சுயகட்டுப்பாடு இல்லை. ஏனென்றால் அவர் தனது மனைவிகளை உறவு கொள்ளாமலேயே தடவிக் கொடுக்க முடியும்" என்றும் ஆயிஷா அறிவித்திருக்கிறார். இந்த அப்பாவி இளம்பெண்ணுக்கு தனது புகழ்பெற்ற கணவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை என்றும் அவனுக்கு விறைக்காது என்றும் தெரியாது. அப்போது சியாலிசோ வியாக்ராவோ கண்டுபிடிக்கப்படவில்லை.

 

எப்படியோ, எனது கோட்பாட்டில் ஒரு ஓட்டை இருந்தது. முகமது ஆண்மையின்மையினால் பாதிக்கப்பட்டிருந்தால் இப்ராஹிமை எப்படி பெற்றிருப்பான்? அந்த குழந்தை வேறு யாருடையதோ என்று நான் சந்தேகித்தேன். ஆனால் என்னிடம் ஆதாரம் இருக்கவில்லை. கடைசியில் எனக்கு ஆதாரம் கிடைத்தது. அதே தபகத், மரியாவைப் பற்றி பேசும்போது, மதீனாவில் ஒரு காப்ட் ஆண் (எகிப்திலிருந்து மதீனாவுக்கு அவளுடன் துணையாக வந்த மனிதன்) இருந்தான் என்றும் அவன் மரியாவை காண வருவது வழக்கம் என்றும் அவன் மரியாவின் காதலன் என்ற ஒரு புரளி இருந்தது என்றும் சொல்லி இருக்கிறது.

 

முகமது தனது மனைவிகளிடமான கலவரத்திற்குப் பிறகு மரியாவை மதீனாவின் வடக்கில் உள்ள ஒரு தோட்டத்தில் குடி அமர்த்தினான். அங்கே அவன் மற்ற மனைவிகளின் கண்களில் படாமல் மரியாவை பார்க்க முடியும். இந்த சூழல் மரியாவின் காதலனுக்கும் தன்னை வேறு யாரும் பார்த்து விடாமல் மரியாவைப் பார்ப்பதற்கு நிறைய வாய்ப்பைக் கொடுத்தது. ஆனால் அவர் மரியாவின் வீட்டினுள் நுழைவதை யாரோ பார்த்திருக்க வேண்டும். இந்த செய்தி முகமதின் காதை அடைந்திருக்க வேண்டும். அவன் அந்த காப்டைக் கொல்ல அலியை அனுப்பினான். அந்த மனிதன் தன் குறியைத் திறந்து காட்டியதாகவும் அவன் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்பதைப் பார்த்த இந்த அலி அவரை உயிருடன் விட்டு விட்டான் என்றும் கதை செல்கிறது.

 

இது மக்களின் வாயை மூட பயன்படுத்தப்பட்ட ஒரு வசதியான சாக்கு (alibi) என்பது தெளிவு. ஆயிஷா கூட சப்வான் என்று மதீனாவில் வாழ்ந்த ஒரு இளைஞனுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற வதந்தி இருந்தது. அவர் கூட சப்வான் ஒரு கொட்டை நசுக்கப்பட்ட அலி என்றே கூறிக்கொண்டார். இந்த கள்ளக்காதல் விவகாரம் பரவலாகப் பரவி முகமதிற்கு ஒரு மாதமாக தலைவலியைக் கொடுத்துக் கொண்டு இருந்தது. கடைசியில் அல்லாவே தலையிட்டு ஆயிஷாவின் சார்பாக சாட்சி சொல்ல வேண்டி இருந்தது. அப்படியென்றால் எப்படி சப்வான் ஒரு அலி என்பதை யாரும் அறியாமல் இருந்தார்கள்?

 

இந்த கதை அப்பட்டமான பித்தலாட்டம். அலியைப் பார்த்த உடனே தன்னுடைய குறியை (அல்லது அதன் இல்லாமையை) திறந்து காட்டினான் என்றால் அலி தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்று எப்படி இந்த காப்ட் இன மனிதனுக்கு தெரிந்தது? அவன் அலியை கையில் வாளுடன் பார்த்து பயத்தினால் பேரீச்ச மரத்தின் மீது ஏறி அங்கிருந்து அவனுடைய அந்தரங்க உறுப்பைக் (awrat) காட்டினான் என்று தபகத்தின் ஆசிரியரான இப்னு சாத் சொல்கிறார். எந்த வார்த்தைகளும் பரிமாறிக் கொள்ளப்படவில்லை. அந்த மனிதனுக்கு அலி ஏன் அவனை நோக்கி வருகிறான் என்றும் அவன் தன்னைக் கொல்லத்தான் வருகிறான் என்றும் தெரிந்திருந்தது. இது ஒரு உண்மைக் கதையாகப் படவில்லை. அல்லாவின் தூதர் ஒரு அப்பாவியை ஏன் கொல்ல விரும்ப வேண்டும்? அந்த மனிதனுக்கு அலி தன்னை கொல்ல விரும்புகிறான் என்று எப்படி தெரியும்? இந்த காப்ட் மனிதனுக்கு அல்லாவின் தூதரை விட நன்றாக எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் இருந்தது போல இருக்கிறது.

 

Bukhari 2.018.153 சொல்கிறது "அல்லாவின் தூதரின் வாழ்க்கையில் சூரிய கிரகணம் இப்ராகிம் இறந்த போது நடந்தது. இப்ராகிம் இறந்ததால் தான் சூரிய கிரகணம் ஏற்பட்டது என்று மக்கள் கூறினார்கள். யாருடைய இறப்பிற்காகவும் பிறப்பிற்காகவும் சூரியனும் சந்திரனும் கிரகணம் அடைவதில்லை என்றும் நீங்கள் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை துதியுங்கள் என்றும் அல்லாவின் தூதர் சொன்னார்".

Bukhari 2.018.154 மேலும் சொல்கிறது, சூர்யா கிரகணம் ஏற்பட்டபோது அவர் [முகமது] மக்களை தொழுகைக்கு அழைத்துச் சென்றார்…. அப்போது கிரகணம் விட்டிருந்தது. அவர் குத்பாவை (Khutba = பிரசங்கம் ) வெளியிட்டார், அல்லாவை புகழ்ந்து துதித்ததன் பிறகு அவர் கூறினார், "சூரியனும் சந்திரனும் அல்லாவின் குறியீடுகளுக்கு எதிரான குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறி, தக்பீர் (Takbir) சொல்லுங்கள், தொழுங்கள், சதகா (Sadaqa) கொடுங்கள்". தூதர் மேலும் கூறினார், "ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! அல்லாவைவிட 'கைரா' (ghaira = சுயமரியாதை) கொண்ட ஒருவரும் இல்லை. அவர் தனது அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு, ஆண்களோ பெண்களோ, கள்ளத்தொடர்பை தடை செய்திருக்கிறார். ஓ முகமதின் பின்பற்றிகளே! அல்லாவின் மீது சத்தியமாக! நான் அறிந்ததில் சிறிதேனும் நீங்கள் அறிவீர்கள் என்றால் குறைவாக சிரிப்பீர்கள் அதிகமாக அழுவீர்கள்.

 

இந்த கைராவிற்காகத் தான் முஸ்லிம்கள் கௌரவக் கொலைகளைச் செய்கிறார்கள். நீங்கள் ஒரு முஸ்லிமின் மனைவியையோ மகளையோ பார்த்தால், அவனின் கைரா (தோராயமாக கௌரவம் என்று மொழி பெயர்க்கலாம்) காயமடைகிறது. அவன் அதனால் பாதிக்கப்படவில்லை என்றால் அவனுக்கு கைரா இல்லை என்று பொருள். அவனுடைய கைரா எவ்வளவு அதிகமோ அந்த அளவுக்கு அவன் பதில்வினையும் கொடூரமானதாக இருக்கும்.

 

இந்த சூழ்நிலையில் கள்ளத் தொடர்பைப் பற்றிய பிரசங்கம் காட்டிக் கொடுக்கும் விதமாக அமைகிறது. மகனின் சாவின் போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு, கள்ளத் தொடர்பைப் பற்றி பேசுவானேன்? அனேகமாக அவனுக்கு இப்ராகிம் தனது மகன் இல்லை என்று அறிவான் என்றும் அப்போது அவன் அதைப் பற்றித் தான் யோசித்துக் கொண்டிருந்தான் என்றும் நமது எண்ணத்தில் உதிப்பது இயல்பே. அந்த பிரசங்கத்தில் அல்லாவுக்கு அதிக கைரா இருக்கிறது என்றும் கள்ளத்தொடர்பை தடை செய்வதைப் பற்றியும் பேசுகிறான். மற்றவர்களுக்குத் தெரியாத சோகங்கள் எல்லாம் அவனுக்குத் தெரியும் என்று முடிக்கிறான். ஆமாம், நமக்கு 1400 வருடங்கள் பிடித்தன. கடைசியில் அந்த சோகங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டோம்.

 

நாம் நினைவில் கொள்ளவேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், முகமதுக்கு குழந்தையைக் கொடுத்த ஒரே ஒரு பெண் மரியா தான் என்பதற்கும் மாறாக, அவன் அவரை நிக்கா செய்து கொள்ளவில்லை. தனது ஒரே மகனின் தாயை நிக்கா செய்யாமல் விடுவானேன்?

 

இந்த ஹதிதின் மற்றொரு வடிவமான Bukhari 2.018.161 இவ்வாறு சொல்கிறது.

தூதர் மேலும் சொன்னார், "சூரியனும் சந்திரனும் அல்லாவின் இரண்டு குறியீடுகள். அவைகள் யாருடைய இறப்பினாலோ பிறப்பினாலோ மறைக்கப்படுவதில்லை. ஆகையால் கிரகணத்தைப் பார்க்கும் போது அல்லாவை நினைவு கூறுங்கள்". மக்கள் சொன்னார்கள், "ஓ அல்லாவின் தூதரே! நீங்கள் உங்கள் வீட்டில் இருந்து எதையோ எடுத்துச் செல்வதைப் பார்த்தோம் பிறகு பின்வாங்குவதைப்பார்த்தோம்". தூதர் பதில் கூறினார், நான் பரலோகத்தைப் பார்த்தேன், ஒரு பழக்கொத்தை நோக்கி என் கையை நீட்டு அதைப் பறித்தேன், அதை உலகத்தின் கடைசி வரை நீங்கள் உண்டிருப்பீர்கள். நான் நரக நெருப்பையும் பார்த்தேன். நான் அதைப்போன்ற கொடூரமான காட்சியை பார்த்ததே இல்லை. அங்கே வசித்த பெரும்பாலானவர்கள் பெண்கள் என்பதைக் கண்டேன்." மக்கள் "அல்லாவின் தூதரே அது ஏன் அப்படி?" என்று வினவினார்கள். "அவர்களின் நன்றியற்றதன்மையால் தான்" என்று தூதர் பதிலளித்தார். அவர்கள் அல்லாவுக்கு நன்றியற்றவர்களா என்று கேட்கப்பட்டது. அவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணைகளுக்கும் (கணவர்களுக்கு), நல்ல காரியங்களுக்கும் நன்றியற்றவர்கள். நீங்கள் அவர்களுக்கு வாழ்நாள் முழுக்க நன்மை பயப்பவர்களாக இருந்தும் அவள் உங்களிடத்தில் ஏதோ ஒன்றைக் (விரும்பத்தகாததை) கண்டால் கூட, அவள் "உங்களிடம் நான் எந்த சுகத்தையும் காணவில்லை" என்று சொல்வாள்."

 

தனது ஒரே மகனின் சாவின் போது முகமது தன் மகனைப் பற்றிப் பேசவில்லை. மனிதர்கள் ஆண் மகன்களைக் கொண்டுள்ளதாக பீற்றிக் கொள்ள முடியும் போது கடவுளுக்கு மகள்கள் மட்டும் தான் உள்ளார்கள் என்று கூறுவது அநியாயம் என்று நினைத்த மனிதன் தனது ஒரே மகனை இழந்து இருக்கிறான். ஆனால் அவன் சாவின் நாளில் இவன் பேச முடிந்ததெல்லாம் கள்ளத் தொடர்பைப் பற்றியும் கணவர்களுக்கு நன்றியற்றவர்களாக இருக்கும் பெண்களுக்கு காத்திருக்கும் தண்டனையைப் பற்றியும் தான். இதிலிருந்தே தெரியவில்லையா?


source:http://tamil.alisina.org--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP