சமீபத்திய பதிவுகள்

பீதி கிளப்பாதீர்கள் : ஆஸி., கெஞ்சல்

>> Wednesday, January 6, 2010


 மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் இந்தியர் படுகொலை செய்யப்பட்ட விஷயத்தில் பீதியை கிளப்ப வேண்டாம், என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் மீது கடந்த ஓராண்டாக தாக்குதல் அதிகரித்துள்ளது. இதன் உச்சகட்டமாக, கடந்த வாரம் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நிதின் கார்க்(21) மெல்போர்ன் நகரில் உள்ள ஓட்டலில் பகுதி நேர வேலைக்கு சென்ற போது வழியில் அடையாளம் தெரியாத நபர்களால் குத்திக் கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்துக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்திய இளைஞர்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதலால் அங்கு படிக்க செல்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டது.
ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் சைமன் க்ரையேன் குறிப்பிடுகையில், "ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடு என்பதை அமெரிக்காவும் பிரிட்டனும் ஒப்பு கொண்டுள்ளன. வழக்கமாக கிறிஸ்துமஸ் போன்ற விழாக் காலங்களில் ஏற்படும் தகராறில் சிலர் தாக்கப்படுவது வழக்கம். அந்த விதத்தில் தான் நிதின் கொலையும் நடந்துள்ளது. கொலை நடக்காத நகரம் எங்கும் இல்லை. மும்பை, டில்லியில் கூட கொலைகள் நடக்கின்றன. எனவே, நிதின் கார்க் கொலையை பற்றி பேசி, இந்திய தலைவர்கள் பீதி கிளப்ப வேண்டாம். இதனால், பொருளாதாரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்' என தெரிவித்துள்ளார்.


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பழைய கம்ப்யூட்டரை விற்கிறீங்களா?

 
 

பல ஆண்டுகள் ஒரு கம்ப்யூட்டரைப் பயன்படுத்தியபின் அதனை விற்பனை செய்யலாம் என்று பலர் செல்கின்றனர். ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டால் அதனை வாங்கிப் பயன்படுத்துவது மிகக் கடினம். எனவே இப்போதெல்லாம் அத்தகைய கம்ப்யூட்டர்கள் பழைய பேப்பர், இரும்பு சாமான்களோடுதான் விலையிடப்பட்டு விற்பனை ஆகிறது. சரி, பரவாயில்லை; ஏதோ காசு வந்தால் சரி என்று அப்படியே கொடுத்துவிடாதீர்கள். ஹார்ட் டிஸ்க்கைக் கழட்டிக் கொண்டு கொடுங்கள். ஏனென்றால் என்னதான் பழைய பைல்களை அழித்திருந்தாலும் அவற்றை எப்படியாவது கண்டுபிடிக்கும் ஆட்கள் இருக்கின்றனர். உங்கள் ரகசிய மற்றும் பெர்சனல் பைல்கள் ஏன் இவர்களிடம் சிக்க வேண்டும். எனவே அவற்றைக் கழற்றி நீங்களே உடைத்துவிடுங்கள்.அடுத்த ஜூலையில் விண்டோஸ் 8
விண்டோஸ் 7 வெளிவந்து சில மாதங்களே ஆன நிலையில், அதற்குள் விண்டோஸ் 8 B? என்ற கேள்விக் குறி எழலாம். ஆம், அடுத்த திட்டத்திற்குத் தயாராவது தானே அமெரிக்க நிறுவனங்களின் வாடிக்கை. அந்த வகையில் விண்டோஸ் 8 பதிப்பு தொடங்க மைக்ரோசாப்ட் அடுத்த ஜூலையைக் குறித்துள்ளது. இந்த திட்டத்தில் ஈடுபடுத்த மைக்ரோசாப்ட் ஏழு முறை புதிய வல்லுநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுத்த சில நாட்களில், அது எடுக்கப்பட்டுவிட்டாலும் பலர் இதனைக் கவனித்து மைக்ரோசாப்ட் திட்டம் குறித்து அறிந்துள்ளனர். அநேகமாக 2012ல், விண்டோஸ் பதிப்பு 8 வெளி வரலாம். இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் 128 பிட் என்ற அடிப்படை அளவில் செயல்படும் சிஸ்டமாக இருக்கலாம் என்பது பலரின் கணிப்பு. 
ஸ்பேஸ் மெயில்கள்
நம் இமெயில் இன்பாக்ஸில் நாளொன்றுக்குத் தேவையற்ற குப்பை மெயில்கள் குறைந்தது 20 ஆவது வந்து சேரும். நாம் அவற்றைப் படிக்காமலேயே குப்பைக்கு வீசுகிறோம். அண்மையில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு இது குறித்த ஆச்சரியமான தகவல் ஒன்றைத் தெரிவிக்கிறது. இது போன்ற மொத்த ஸ்பேம் மெயில்களை அனுப்புபவர்கள் தாங்கள் வைத்துள்ள இமெயில் முகவரிகளை அகர வரிசைப்படுத்தி வைத்திருக்கின்றனர். தேவையற்ற மெயில்களை அனுப்புகையில் மேலாக உள்ள மெயில்களில் தாங்கள் விரும்பும் எண்ணிக்கயில் அனுப்பிவிடுகின்றனர். இதனால் ஆங்கில அகர வரிசைப்படி உள்ளதில் முதல் 12 (AL) எழுத்துக்களில் யூசர் நேம் வைத்திருப்பவர்களே அதிக ஸ்பேம் மெயில்களைப் பெறுவதாக அறியப் பட்டுள்ளது. எனவே உங்களுக்கு ஸ்பேம் மெயிலே வேண்டாம் என்றால் Z என்ற எழுத்துடன் உங்கள் யூசர் நேம் தொடங்கட்டும். 
கிளிப் போர்டு பெறுவது எப்படி?
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் எந்த டெக்ஸ்ட், படம், கிராபிக்ஸ் என எதனை காப்பி அல்லது கட் செய்தாலும் அது கிளிப் போர்டு வியூவரில் தான் சென்று அமரும். எனவே எந்த ஒரு நிலையிலும் நீங்கள் இறுதியாகக் காப்பி செய்தது என்ன என்று தெரிந்து கொள்ள கிளிப் போர்டு வியூவரைக் காணலாம். இதனை எங்கிருந்து பெறுவது? எந்த தொகுப்பிலும் டெக்ஸ்ட் ஒன்றை தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் + சி (CtrlC) ழுத்துகிறீர்கள் அல்லவா? அப்போது இருமுறை C அழுத்துங்கள். உடனே கிளிப் போர்டு விரிவடையும். அதில் என்ன டெக்ஸ்ட் உள்ளது என்று தெரியவரும். 
அதிகம் தேடப்பட்டது எது?
2009 ஆம் ஆண்டு முடியப் போகிறது. இந்த ஆண்டில் கூகுள் தளம் மூலம் அதிகம் தேடப்பட்டது என்ன விஷயம்? அல்லது யாரை? என்று அந்த தளத்தில் தகவல்கள் கிடைத்துள்ளன. நூறு கோடிக்கு மேல் தேடல்கள் இருந்தாலும், அவற்றில் மீண்டும் மீண்டும் தேடப்பட்டவற்றை வடிகட்டியும், தேவையற்ற முறையிலும், நோக்கமின்றியும் தேடப்பட்டவற்றை நீக்கியும் தேடல்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதே போல் தனி நபர் குறித்த தேடல்களும் ஆய்விலிருந்து நீக்கப்பட்டன. பின் கிடைத்தவற்றை ஆய்வு செய்ததில் சில ஆர்வமூட்டும் தகவல்கள் கிடைத்தன. 
உலக அளவில் அதிகம் தேடப்பட்டவர் இந்த ஆண்டில் மறைந்த மைக்கேல் ஜாக்சன் தான். அடுத்த இடத்தைப் பிடித்தது பேஸ்புக். இதற்குப் பின்னால் அணிவகுப்பவை – Twitter, sanalika, new moon, lady gaga, windows 7, dantri.com.vn and torpedo gratis  ஆகும். பொழுது போக்கு என்ற பிரிவிலும் முதல் இடத்தை மைக்கேல் ஜாக்சன் பிடித்துள்ளார். சாப்பாடு பிரிவில் acai berry முதல் இடத்தைப் பெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மூக்கடைப்பைச் சரி செய்ய

 
ஜலதோஷம் பிடிப்பவர்களுக்கு ஏற்படும் மூக்கடைப்பு, மூச்சுத் திணறலை ஏற்படுத்துவதோடு சிலருக்கு அடிக்கடி பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது. எரிச்சலை ஏற்படுத்தி செய்கிற வேலைகளுக்கு இடையூறாகவும் இருக்கிறது. முறையான சிகிச்சை அளிக்காவிடில் தொடரும் பிரச்னையாகவும் ஆகக்கூடும். ஜலதோஷம் பிடிக்கும்போது நிறைய இரசாயனங்களை உடல் வெளிப்படுத்துகிறது. அதனால் தும்மல், மூக்கடப்பு, மூக்கொழுகுதல், கண்ணில் நீர் வடிதல் போன்றவை ஏற்படுகின்றன. இந்த இரசாயனங்கள் மூக்கில் உள்ள இரத்த நாளங்களோடு செயல்பட்டு சீரான சுவாசத்தில் இடையூறுகளை ஏற்படுத்துகின்றன.

மூக்கடைப்பு இருக்கும்பொழுது காற்றை வடிகட்டும் திறன் குறைகிறது. இதனால் கிருமிகள் எளிதில் தொற்றி ஜலதோஷம் மோசமடைகிறது. மூக்கில் ஏற்பட்ட தொற்று காது மற்றும் தொண்டைக்கும் பரவுகிறது. இப்படி ஏற்படும்பொழுது பெரும்பாலான மருத்துவர்கள் என்டிபையோட்டிக்கை பரிந்துரை செய்கிறார்கள். குழந்தைகளுக்கு ஏற்படும் மூக்கடைப்பை அலட்சியப்படுத்தக் கூடாது. மூக்கடைப்பு இருக்கும் பட்சத்தில் மூக்கால் மூச்சு விட ஆரம்பித்துவிடுவார்கள். தூங்கும்பொழுது வாயைத் திறந்து வைத்துக்கொண்டு தூங்குவார்கள். வயின் மூலம் சுவாசிக்கும்பொழுது கிருமிகள் வடிகட்டப்படுவதில்லை. இதனால் குழந்தைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி பாதிக்கப்பட்டு தொற்றுநோய் பாதிப்புக்களுக்கு உள்ளாகிறது. தொடர்ச்சியாக வாயனாலேயே சுவாசிக்கும்பொழுது தொண்டை அழற்சி பிரச்னை  ஏற்படுகிறது. ஆகையால் மூக்கடைப்பை ஆரம்ப நிலையிலேயே சரி செய்ய வேண்டும். ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால் சர்க்கரை சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும். ஒரு மேஜைக்கரண்டி ஓமத்தை இடித்துத் தூளாக்கி துணியில் கட்டி முகர்ந்து வந்தாலும் மூக்கடைப்பு சரியாகும். 

 

source:dinakaran

StumbleUpon.com Read more...

தலைவரின் பிரத்தியேக துப்பாக்கி முல்லைத்தீவில் கண்டுபிடிப்பாம்


 

தேசியத் தலைவர் பிரபாகரன் பயன்படுத்திய பிரத்தியேக துப்பாக்கி புதைக்கப்பட்டிருந்ததைத் தாம் கண்டுபிடித்துள்ளதாக வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் நிமல் லெவ்கே கூறியுள்ளார். மேற்படி M௧6ஆ2 ரக துப்பாக்கியானது ஒரு கிரனைட் லோஞ்சருடன் முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்டிருந்ததாம். இதனுடன் தலலவரின் உடற்கவசமும், மேலும் பெருந்தொகை வெடிமருந்துகளும் நேற்று முன்தினம் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆயுதங்கள் அனைத்தும் 15 அடி ஆழமான பதுங்குகுழிக்குள் இருந்து மீட்டெடுக்கப்பட்டதாகக் கூறும் போலீஸ் தாம் அவற்றை வவுனியா பிரதிப் போலீஸ் மாஅதிபர் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்வதாகவும் கூறியுள்ளது. 125 தற்கொலைதாரி வெடிமருந்துத் தொகுதிகள், 50 மோட்டார் குண்டுகள், 25 விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் மற்றும் பல ஆயுதங்கள் அடங்குவதாகவும் போலீஸ் அறிக்கை தெரிவிக்கிறது.

இச் செய்தி இலங்கை பாதுகாப்பு நிலையம் வெளியிட்ட தகவல்களே. இதனை சுயாதீனமாக உறுதிசெய்யமுடியவில்லை.


--

source:athirvu
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கற்பழிப்பு வழக்கு-தலைமறைவு சாமியார் பெங்களூரில் கைது

 

பெண் கற்பழிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் பெங்களூரில் கைது செய்யப்பட்டார். தமிழக தனிப்படை போலீசார் அவரை கைது செய்தனர். 

நுங்கம்பாக்கத்தில் சக்தி விலாஸ் மிஷன் என்ற அமைப்பை நடத்தி வந்த ஈஸ்வர ஸ்ரீகுமார் (60) மீது தேனாம்பேட்டையை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.


வேலை கேட்டு சென்ற தன்னை காபியில் மயக்க மருந்து கலந்து தந்து அவர் கற்பழித்ததாகவும், அதை ஆபாசப் படம் எடுத்து வைத்து மிரட்டி மீண்டும் மீண்டும் கற்பழி்த்ததாகவும் ஹேமலதா கூறியிருந்தார்.


இது குறித்து முதலில் சென்னையில் பல காவல் நிலையங்களில் புகார் தந்தும், அதை பதிவு செய்ய போலீசார் மறுத்ததால் போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடமே நேரில் புகார் தந்தார் ஹேமலதா.


இதையடுத்து விசாரணை தொடங்கியது. சாமியாரை விசாரணைக்கு ஆஜராகுமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் வரவில்லை. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்ய முயன்றபோது அவர் தலைமறைவாகிவிட்டார்.


இந் நிலையில் ஹேமலதா உள்பட 30க்கும் மேற்பட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்தனர். ஹேமலதாவுக்கு மருத்துவப் பரிசோதனையும் நடந்தது.


இதற்கிடையே தலைமறைவான சாமியாரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொரு மாநிலமாக தப்பி ஓடியதால் அவரைக் கைது செய்தவது தாமதமானது.


இதையடுத்து சாமியாரின் செல்போன்களை ரகசியமாக கண்காணித்து வந்த போலீசார் அவர் மகாராஷ்டிரா மாநிலம் சீரடியில் இருப்பதை அறிந்தனர். அவரை அங்கு சென்று பிடிக்க முயன்ற நிலையில் அவர் அங்கிருந்து மும்பை சென்று இன்று காலை பெங்களூர் வருவது தெரியவந்தது.


இதையடுத்து தனிப்படையினர் பெங்களூர் விரைந்தனர். இன்று காலை விமானம் மூலம் பெங்களூர் வந்த ஈஸ்வர ஸ்ரீகுமாரை சென்னை போலீஸ் படை கைது செய்தது.


தான் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக இருப்பதால் தன்னை கைது செய்ய முடியாது என்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் அவர் கைது செய்யப்பட்டார்.


சென்னை கொண்டு வரப்படும் அவரிடம் முறையாக விசாரணை நடத்திய பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். அவருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

source:swissmurasam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP