சமீபத்திய பதிவுகள்

ஜூனியர் விகடன் எழுதியது பொய்:ருத்திரகுமார் பேட்டி

>> Friday, April 23, 2010
source:athirvu

StumbleUpon.com Read more...

ஜிமெயில் - உங்களின் எக்ஸ்ட்ரா டிரைவ்

  

நம் கம்ப்யூட்டரில் மட்டுமின்றி வேறு ஒரு இடத்தில் நம் பைல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவே நாம் விரும்புவோம். சிடிக்களிலும், மேக்னடிக் டேப்களிலும் பைல்களைப் பதிந்து பாதுகாக்கலாம். ஆனால் இவற்றை நாம் செல்லும் இடத்திற்கு எடுத்துச் செல்வது கடினம். மேலும் இவையும் நிலையாகப் பல ஆண்டுகளுக்கு இவற்றைக் கொண்டிருக்குமா என்பதுவும் ஐயமே. 
ஆன்லைனில் பல தளங்கள், மாதக்கட்டணம் பெற்றுக் கொண்டு நம் பைல்களை ஸ்டோர் செய்து வைக்கின்றன. இதற்கென பல நிலைகளில் கட்டணங்கள் அடங்கிய திட்டங்களை வழங்குகின்றன. ஆனால் இவற்றின் நம்பகத்தன்மையும் முழுமையானதாக இல்லை. 
இந்த வகையில் இலவசமாக சேவை செய்திடும் சிலதளங்கள், பாதுகாப்பிற்கு அனுப்பப்படும் பைல்களின் அளவு, தன்மை, தளங்களுக்கான இணைப்பு ஆகியவை குறித்து பல வரையறைகளைக் கொண்டுள்ளன. எனவே இவற்றை எந்த அளவிற்கு நம்பிக்கையுடன் நம் பைல்களை அப்லோட் செய்து வைக்க முடியும் என்பது கேள்விக் குறியே. ஆனால் நம் அருகிலேயே ஓர் அருமையான ஆன்லைன் சேவிங் தளம் உள்ளது என்பதனை நாம் எண்ணிப் பார்ப்பதில்லை. அதுதான் ஜிமெயில். உலகில் இயங்கும் இமெயில் சேவைகளில் தலையானதும் மிகச் சிறந்ததுவும் ஜிமெயில் என அனைவரும் ஒப்புக்கொண்டுள்ளனர். 
ஜிமெயில் ஸ்பாம் மெயில்களைத் தடுப்பதில் சிறப்பாகச் செயல்படுகிறது. நம் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது. 7 ஜிபிக்கும் மேலாக நம் மெயில்கள் மற்றும் இணைப்புகளுக்கு இடம் தருகிறது. இந்த அளவும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுள்ளது. நமக்கு ஜிமெயில் தரும் இட வசதியில், மிகக் குறைந்த அளவே நாம் பயன்படுத்துகிறோம். ஜிமெயில் தளம் சென்றவுடன் இந்த செய்தி நமக்குக் காட்டப்படும். எனவே இந்த பயன்படுத்தாத ஜிமெயில் டிரைவ் இடத்தை ஏன் நாம் நம் பைல்களைப் பாதுகாத்து வைக்கும் இடமாகப் பயன்படுத்தக் கூடாது. 
இந்த வகையில் ஜிமெயில் டிரைவ் என்ற ஒரு வசதியை கூகுள் தருகிறது. ஜிமெயில் டிரைவ் நம் கம்ப்யூட்டரில் உள்ள மை கம்ப்யூட்டரில் ஒரு சிஸ்டம் பார்ட்டிஷனை ஏற்படுத்துகிறது. இதனை நம் விண்டோஸ் எக்ஸ்புளோரருடன் இணைக்கிறது. ஆன்லைனில் கூகுள் தரும் டிரைவ் இடத்தை, நம் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவ் போலப் பயன்படுத்தும் வசதியினைத் தருகிறது. நம் கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்ட ஒரு டிரைவ் போல இந்த ஆன்லைன் ஜிமெயில் டிரைவ் இயங்குகிறது. எனவே பைல்களை உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டிரைவிலிருந்து ட்ராக் அண்ட் ட்ராப் வசதி மூலம் இந்த ஆன்லைன் டிரைவில் இழுத்துவிட்டு காப்பி செய்திடலாம். இதிலும் சில வரையறைகள் உள்ளன. பைல் ஒன்று 25 எம்பி என்ற அளவிலே தான் இருக்க வேண்டும். இந்த வரையறையைச் சமாளிக்க ஜிமெயில் டிரைவ், பைலைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொள்கிறது. 
புதிய போல்டர்களை உருவாக்குவது, பைல்களை காப்பி, பேஸ்ட் மற்றும் டெலீட் செயல்பாடுகளுக்கு உள்ளாக்குவது போன்றவற்றை ஜிமெயில் டிரைவில் மேற்கொண்டாலும், இதற்கென தனியாக ஒரு டிரைவ் எழுத்து தரப்படுவதில்லை. 
மேலும் பைல்களின் பெயர்கள் 40 கேரக்டர்களுக்கு மேல் இருக்கக் கூடாது. உங்களிடம் ஜிமெயில் அக்கவுண்ட் இருந்தால், இந்த ஜிமெயில் டிரைவினை எப்படிப் பெறுவது என்று பார்ப்போம்.
முதலில் உங்கள் பிரவுசருக்கு http://www.viksoe.dk/ code/gmail.htm  என்ற முகவரியைக் காட்டவும்.இந்த இணையப் பக்கத்தில் கீழாக ஸ்குரோல் செய்து செல்லவும். இதில் இரண்டு டவுண்லோட் லிங்க் தரப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஒன்றில் கிளிக் செய்து அதனை எளிதாக இயக்கும் வகையில் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொள்ளவும். அடுத்து gmailfs115.zip இந்த பைலை அன்ஸிப் செய்திடவும். அனைத்து பைல்களையும் எக்ஸ்ட்ராக்ட் செய்து பெற்ற பின்னர் gmailfs115 என்ற போல்டருக்குச் செலல்வும். பின் இதில் உள்ள செட் அப் பைல் மீது டபுள் கிளிக் செய்திடவும். இப்போது பைல் திறக்கும் செயலுக்கான எச்சரிகை வந்தால், அதனைக் கண்டு கொள்ளாமல் கீதண கட்டளை கொடுக்கவும். 
இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக இன்ஸ்டால் ஆகும். உங்கள் கம்ப்யூட்டரில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். பின் உங்கள் கம்ப்யூட்டரில் மை கம்ப்யூட்டரைத் திறந்து பார்த்தால், அங்கேOther  என்ற வகையில் புதியதாக டிரைவ் ஒன்று இருப்பதனைப் பார்க்கலாம். பின் GMail Driveஎன்பதில் டபுள் கிளிக் செய்திடவும். இங்கே லாக் இன் விண்டோ திறக்கப்படும். இங்கு கிடைக்கும் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களுக்கான பீல்டுகளில் உங்கள் ஜிமெயில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டினைத் தரவும்.இதில் உள்ள ஆட்டோ லாக் இன் டிக் செய்து வைத்தால், அடுத்த முறை இன்டர்நெட் இணைப்பு கிடைத்தவுடன், நீங்கள் தானாகவே லாக் இன் செய்துவிடுவீர்கள். 
லாக் இன் தகவல்களைத் தந்த பின் ஓகே கிளிக் செய்திடும் முன் சில ஆப்ஷன்களை நீங்கள் படித்தறியலாம். More  பட்டனை அழுத்தினால் இவை கிடைக்கும். இதில் 'Preserve Filenames' என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். 
அடுத்து மிக முக்கியமானதான Use Secure HTTP என்ற ஆப்ஷனைக் கட்டாயம் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் கம்ப்யூட்டருக்கும் ஜிமெயிலுக்கும் உள்ள இணைப்பிற்குப் பாதுகாப்பளிக்கும். 
இறுதியாக Use Draft Folder என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பைல்களை ட்ராப்ட் போல்டருக்கு அனுப்பும். உங்கள் ஜிமெயில் இன்பாக்ஸுக்குத் தொல்லை கொடுக்காது. 
முக்கியமான அனைத்து செட்டிங்ஸ் மேற்கொண்ட பின், ஜிமெயிலுக்கு இணைப்பை ஏற்படுத்த ஓகே கிளிக் செய்திடவும். அடுத்து ஜிமெயில் டிரைவ் காட்டப்படும். இதில் பைல்களை இழுத்துச் சென்று விடலாம். பைல்கள் அனைத்தும் ஜிமெயில் ட்ராப்ட் போல்டரில் விழும். பைல் மாற்ற வேகம் உங்கள் இன்டர்நெட் இணைப்பைப் பொறுத்து இருக்கும்


source:dinamalar


--
www.thamilislam.tk

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றி

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றி: வி.உருத்திரகுமாரன்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றியுற தமிழக மக்களின் ஆதரவும் அரவணைப்பும் அவசியம்!: வி.உருத்திரகுமாரன்.

அன்பான தமிழக உறவுகளே!
ஈழத் தமிழ் மக்களின் அரசியற் பெருவிருப்பான தமிழீழத் தனியரசினை தாயகம், தேசியம், சுயநிர்ணயம், இறைமை போன்ற உரிமை நிலைக் கோட்பாடுகளின் வழி நின்று – தமிழக மற்றும் இந்திய மக்களினதும் அனைத்துலகசமூகத்தினதும் அதரவுடன்

வென்றெடுக்கும் நோக்குடன் ஜனநாயக விழுமியங்களுக்குட்பட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் நாம் ஈடுபட்டு வருவதனைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்குத் தங்கள் ஆதரவினை வேண்டியே இம் மடலினை வரைகிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ விடுதலையை வென்றெடுப்பதற்கான ஒரு அரசியற் கட்டமைப்பு. இது சுதந்திரமும் இறைமையும் உடைய தமிழீழத் தனியரசை அமைப்பதற்காகப் பாடுபடும். இவ் அரசாங்கம் ஒரு வலுமையமாக உருவாகுவதற்கு உலகளாவிய தமிழ்மக்களின் ஆதரவும் குறிப்பாகத் தமிழக மக்களது ஆதரவும் அரவணைப்பும் அவசியமானவை

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பதனை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதற்காக திட்டமுன்மொழிவு செய்யப்பட்ட 2009 ஆம் ஆண்டு யூன் மாதம் 16 ஆம் நாளன்று மதியுரைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தது.

இம் மதியுரைக்குழுவில் தமிழீழ விடுதலை இலட்சியத்தோடு தம்மை இறுகப் பிணைத்துக் கொண்ட பின்வரும் உறுப்பினர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் (அமெரிக்கா)
பேராசிரியர் ஜோசப் சந்திரகாந்தன் (கனடா)
வைத்தியக் கலாநிதி நாகலிங்கம் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் ஜெயப்பிரகாஸ் ஜெயலிங்கம் (அமெரிக்கா)
சட்ட அறிஞர் கரன் பார்க்கர் (அமெரிக்கா)
பேராசிரியர் பழனியப்பன் இராமசாமி (மலேசியா)
சட்ட அறிஞர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் (அமெரிக்கா)
பேராசிரியர் பீற்றர் சால்க் (சுவீடன்)
வைத்தியக் கலாநிதி சிவனேந்திரன் சீவநாயகம் (அவுஸ்திரேலியா)
பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா (சுவீடன்)
பேராசிரியர் முத்துக்குமாரசாமி சொர்ணராஜா (பிரித்தானியா)
கலாநிதி அமுது லூயிஸ் வசந்தகுமார் (பிரித்தானியா)

இம் மதியுரைக்குழுவினர் தமது ஆய்வின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பாக மக்கள் கருத்துப்பரிமாற்றத்தின் பின் விடுத்த இறுதி அறிக்கையின் அடிப்படையிலேயே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுகிறது. இவ் அறிக்கையினை எமது இணையத்தளமாகிய www.govtamileelam.org இல் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கமானது மக்கள் மத்தியில் இருந்து இதற்கென நடாத்தப்படும் நேரடித் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதற்கான தேர்தல்கள் மே மாதம் 2 ஆம் நாள் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையினை மே மாதம் 17-19 நாட்களுக்கிடைப்பட்ட காலப்பகுதியில் கூட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவை இக் காலப்பகுதிக்குள் கூடுவது முள்ளிவாய்க்காலுடன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விட்டதாகக் கூறி மார் தட்டும் சிறிலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் கொடுக்கும் குறியீட்டு வடிவிலான பதிலடியாக அமையும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாவது அரசவையில் 135 பிரதிநிதிகள் அங்கம் வகிப்பார்கள். முதலாவது அரசவையின் ஆயுட்காலம் ஆகக் கூடிய அளவு மூன்று ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலாவது அரசவை விரும்பும் பட்சத்தில் அதற்கு முன்னரே அடுத்த தேர்தலை நடத்தலாம்.

விடுதலைப்புலிகளுக்குப் பிந்திய காலகட்டத்து அமைப்பு (post LTTE organisation) என்ற அடிப்படையில் இவ் அமைப்பு உருவாக்கப்படவில்லை. நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்படுவது தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தொடர்ச்சியாகவே அமைகிறது. தாயகத்தில் தேசியத்தலைவரின் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த நடைமுறை அரசு சிறிலங்கா ஆக்கிரமிப்புப் படையினரால் சிதைக்கப்பட்டமைக்கு உலக அரசுகள் சிறிலங்கா அரசுக்கு வழங்கிய ஆதரவு முக்கியமானதொரு காரணம். நம் கண்முன்னால் நடந்து முடிந்த ஒரு மிகப்பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக நாம் தவித்து நின்றோம். இதனால் உலக நாடுகளின் ஆதரவினை எமது பக்கம் வென்றெடுப்பதற்கென வலுவானதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதுமான பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு ஒன்று அவசியம் என்றும் அதுவும் தற்போதுள்ள சூழ்நிலையில் தாயகத்திற்கு அப்பாலே நிறுவப்பட வேண்டிய யதார்த்தம் உணரப்பட்டமையால் இவ் அமைப்பு உருவாக்கப்படுகிறது.

அனைத்துலகத் தளத்தில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவினை வென்றெடுப்பதற்காக உருவாக்கப்படும் இவ் அமைப்பு தமிழீழ விடுதலைக்காத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் மக்களையும் மனதில் இருத்தி அவர்களின் கனவுகளை நனவாக்க அயராது உழைக்கும். அனைத்துலகரீதியான ஏற்புடமையினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இவ் அமைப்பு ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு அமைக்கப்பட்டு அரசியல், இராஜதத்திர வழிமுறைகளுக்கூடாகத் தனது பணிகளை முன்னெடுக்கும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தும் இத் திட்டத்துடன் தொண்டர்களாக தம்மை இணைத்துக் கொள்ளவும் பலநூற்றுக்கணக்கான தமிழக உறவுகள் தமது பெயர்களை எமது இணையத்தளத்தினூடாகப் பதிவு செய்திருந்தனர். இவர்களின் கரங்களை நாம் தோழமை உணர்வுடன் இறுகப் பற்றிக் கொள்கிறோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பான செயற்பாடுகளைத் தமிழகத்தில் விரிவாக்கம் செய்யும் தருணத்தில் தங்களுடன் நாம் தொடர்பு கொள்கிறோம்.

இவ்விடத்தில் இன்னுமொரு விடயத்தினையும் நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறித்து தமிழகத்தின் சஞ்சிகையொன்றில் இவ் வாரம் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையில் நான் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ள ஆயுதப்போராட்டம் குறித்த கருத்துக்கள் எவையும் என்னால் தெரிவிக்கப்படாதவை. ஆயுதப்போரட்டம் பற்றி எதுவுமே என்னுடன் பேசப்படவில்லை. இவை தவிர அதில் உள்ள ஏனைய சில விடயங்களும் எனது கருத்துக்கள் அல்லாதவை. உண்மையில் நான் அச் சஞ்சிகைக்கு பேட்டி எதனையும் வழங்கியிருக்கவுமில்லை. அச் சஞ்சிகையின் கட்டுரையாளருடன் நான் மேற்கொண்டிருந்தது தேர்தல் நடைமுறை தொடர்பான ஒரு சிறு உரையாடல் மட்டுமே. நான் குறிப்பிடாத, எனது கருத்துக்கள் அல்லாத விடயங்கள் எனது பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தமையால் இம் மறுப்பை இவ்வித்தில் பதிவு செய்கிறேன்.

தமிழக மக்களும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலையை தமது நெஞ்சிருத்திச் செயற்படும் தலைவர்களும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மீதும் ஈழத் தமிழர் தேசத்தின் விடுதலை மீதும் தாங்கள் கொண்டிருக்கும் பற்றுறுதியினையும் அதற்காக வழங்கி வரும் பேருழைப்பையும் நாம் என்றும் பெரும் மதிப்புடன் நினைவிற் கொள்கிறோம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அமையும் இந் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வெற்றிகரமாக அமைத்திட தங்கள் ஆதரவையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து நிற்கிறோம்.

நன்றியுடன்
விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்
20.04.2010
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org


source:tamilspy--
http://thamilislam.tk/

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் கேள்வி - பதில்

 

கேள்வி: ஏறத்தாழ பதினைந்து பாஸ்வேர்ட்களை நான் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வளவோ மாற்றங்களைக் கொண்டு வரும் நாம், இதற்கு ஒரு தீர்வு கொண்டு வர முடியாதா?
–சா. வளவன், திண்டிவனம்
பதில்:
 ஏன் இல்லை? இனிமேல் இந்த பாஸ்வேர்ட்களை நினைவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டியதில்லை. இவை திருடப்படுமோ, காணாமல் (நம் நினைவைவிட்டு) போய்விடுமோ என்ற கவலையே கொள்ள வேண்டியதில்லை. உங்கள் கை விரல் ரேகையினை பாஸ்வேர்ட் ஆகக் கொண்டு, டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் அல்லது லேப் டாப் கம்ப்யூட்டரில் உள்ள விரல் ரேகை ஸ்கேனர் மூலம் உருவாகும் விரல் ரேகைகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்தலாம். அடுத்ததாக, கீ போட்டு பின் பாஸ்வேர்ட் போட்டு பயன்படுத்தும் வசதி உருவாகி உள்ளது. நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் பிளாஷ் டிரைவ் போன்ற ஒரு சாதனம், அதற்கான தனி குறியீடுடன் கிடைக்கும். ஏதேனும் புரோகிராம் அதற்கான பாஸ்வேர்டைக் கேட்கையில், இந்த பிளாஷ் டிரைவினைச் செருகிப் பின் பாஸ்வேர்டை என்டர் செய்து பயன்படுத்த வேண்டும்.
இன்னொரு புதுவகை பாஸ்வேர்ட் பழக்கம் வர இருக்கிறது. தற்போது சில மொபைல் போன்களில் உள்ளதாக என் நண்பர்கள் கூறி உள்ளனர். ஒரு திரை உங்களுக்குக் காட்டப்படும். இதில் நீங்கள் பேட்டர்ன் அல்லது இமேஜ் ஒன்றை விரல்களால் வரைய வேண்டும். இது ஏற்கனவே சேவ் செய்யப்பட்ட இமேஜ் உடன் இணைந்து போனால், மொபைல் போனைப் பயன்படுத்தலாம். இல்லையேல் சிரமம் தான். மேலே சொன்ன அனைத்து வகை பாஸ்வேர்ட்களையும் வருங்காலக் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகம் இல்லை.


கேள்வி: கம்ப்யூட்டரில் உள்ள சில டாகுமெண்ட் பைல்களைத் திறந்து பார்க்க டிரைவிற்குச் சென்றால், டாகுமெண்ட் பெயருக்கு முன் டில்டே யுடன் ஒரு டாலர் (நு$) அடையாளம் உள்ளது. பைல் பெயரின் முதல் இரண்டு எழுத்துக்கள் இடத்தில் இவை உள்ளன. இந்த பைல்கள் எதனைக் குறிக்கின்றன?
–இரா. செந்தில் குமார், விருதுநகர்
பதில்:
 இது ஒரு தற்காலிக பைல்; நீங்கள் அந்த டாகுமெண்ட்டைப் பார்க்கையில் இது மறைத்து வைக்கப்பட்டிருக்கும். நீங்கள் ஒரு டாகுமெண்ட்டைத் தயாரித்துக் கொண்டிருக்கையில், நீங்கள் டைப் செய்தவை எல்லாம் சேவ் செய்யப்படுவதற்கு முன், இந்த பைலில் தான் வைக்கப்படும். சில வேளைகளில் இந்த பைல் சிஸ்டத்திலேயே சில காலம் தங்கி இருக்கும். அல்லது நீங்கள் டாகுமெண்ட்டில் எடிட் செய்து கொண்டிருக்கையில் சிஸ்டம் கிராஷ் ஆனால், இந்த பைல் அப்படியே இருக்கும். ஒரிஜினல் பைலும் இருக்கும். இந்த தற்காலிக பைலை, அதற்கான ஒரிஜினல் பைலை சேவ் செய்து மூடிய நிலையில் அழித்துவிடலாம்.


கேள்வி: பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் காட்சி காட்டிக் கொண்டிருக்கையில், ரைட் மவுஸ் பட்டனில் தவறுதலாக அழுத்திவிட்டால், தேவையில்லாமல் மெனு காட்டப்படுகிறது. இதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வழி உள்ளதா?
–பேரா. சக்தி முருகன், சென்னை
பதில்:  இது போன்று பல வேளைகளில் நானும் சிந்தித்துள்ளேன். நன்றாகப் போய்க் கொண்டிருக்கும் காட்சி விளக்கத்தில் இது போல மெனுக்கள் தோன்றி நம் உற்சாகத்தைக் கெடுக்கும். ஆனால் இதற்கு ஒரு தீர்வு உள்ளது. இந்த மெனு தோன்றுவதை நிறுத்தி வைக்கலாம். Tools  மெனு செல்லவும். அதில்Options என்ற சாய்ஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் விண்டோவில் View என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். பின்னர் காட்டப்படும் விண்டோவில் Slide show பிரிவிற்குச் செல்லவும். இங்கு'Popup menu on right mouse click'  என்ற ஆப்ஷன் கிடைக்கும். இங்கு உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி ரைட் கிளிக் செய்தாலும் மெனு கிடைக்காது. மீண்டும் தேவைப்படும்போது டிக் அடையாளத்தை அமைக்கவும்.
உங்களிடம் பவர்பாய்ண்ட் 2007 இருந்தால், ஆபீஸ் பட்டனில் கிளிக் செய்து, பவர்பாய்ண்ட் ஆப்ஷன்ஸ்(Powerpoint Options) என்னும் பட்டன் மீது தட்டவும். இங்கு கிடைக்கும் பிரிவுகளில் அட்வான்ஸ்டு(Advanced)  என்ற கேடகிரியைப் பெறவும். இதில் ஸ்லைட் ÷ஷா என்னும் பிரிவு கிடைக்கும். இங்கு'Show menu on right mouse click'  என்ற ஆப்ஷன் இருக்கும். இதில் மேலே சொன்னபடி டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இனி உங்களை எரிச்சலடையச் செய்திடும் மெனு வராது.


\கேள்வி: என் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அதிக தகவல்கள் உள்ளன. இதனால் பிரிண்ட் எடுக்கையில் தகவல்கள் பிரித்து கிடைக்கின்றன. எனக்கு அத்தகவல்கள் மேற்புறம், பின் அதன் கீழ் உள்ளது என்ற வரிசையில் வேண்டும். வலது பக்கம் உள்ளது இறுதியில்தான் வேண்டும். இதனை செட் செய்திட முடியுமா?
–சி. பிரியங்கா, திருப்பூர்
பதில்: பல பக்கங்களை உடைய எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றைத் தயாரித்துவிட்டீர்கள். இப்போது அவற்றை பிரிண்ட் எடுக்க வேண்டும். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட ஒரு வரிசையில் மட்டுமே எடுக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். அவ்வாறு உங்கள் விருப்பப்படி அச்சடிக்க முடியுமா? 
எக்ஸெல் தொகுப்பு இடமிருந்து வலமாகவும், மேலிருந்து கீழாகவும் அச்சடிக்க வழி தருகிறது. நீங்கள் ஒர்க்ஷீட்டில் தந்துள்ள தகவல்கள் ஒரு பக்கத்தில் அச்சடிக்கும் வகையில் இல்லாமல் இருந்தால் எக்ஸெல் அதில் உள்ள தகவல்களை, நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசை எல்லைகளில் பிரித்து வைத்து, அடுத்த பக்கங்களாக அச்சிடுகிறது. இந்த வரிசையினை நீங்கள் கட்டுப்படுத்தலாம். 
எடுத்துக்காட்டாக, உங்கள் ஒர்க்ஷீட்டில் உள்ள தகவல்கள் அதிக அகலத்திலும், அதிக உயரத்திலும் அமைந்திருப் பதாக வைத்துக் கொள்வோம். பிரிண்ட் ஆகும்போது இது நான்கு பக்கங்களில் அமையலாம். முதல் பக்கத்தில் அச்சிடப் படுவது எப்போதும் இடது பக்கத்தில் மேல் மூலையில் உள்ள செல்லாக இருக்கும். இப்போது நம் பிரச்னை, இரண்டாவது பக்கத்தில், கீழாக உள்ள தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? அல்லது வலது பக்கம் உள்ள கூடுதல் தகவல்கள் பிரிண்ட் ஆகுமா? என்பதுதான். இதனை நீங்கள் முடிவு செய்திடலாம்.
1. Page Setup பிரிவினை File மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும்.இப்போது எக்ஸெல் Page Setup டயலாக் பாக்ஸைத் தரும். 
2. இதில் Sheet டேப் தேர்ந்தெடுங்கள். 
3. இதில் Page Orderஎன்னும் பிரிவில், எக்ஸெல் எந்த வரிசையில் தகவல்களை அச்சடிக்க வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம். நீங்கள் இதில் உங்கள் விருப்பத்தினை அமைக்கையிலேயே, எக்ஸெல் உங்கள் பிரிண்டிங் எந்த வகையில் அமைந்திடும் எனக் காட்டும். 
4. விருப்பங்களை அமைத்த பின்னர் OK  கிளிக் செய்து வெளியேறவும். 
இனி நீங்கள் செட் செய்தபடி பிரிண்ட் கிடைக்கும்.


கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட் தயாரிக்கையில், ஒர்க் ஷீட்டின் செல் அகலம் அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. என்னுடைய வேலைக்கு இவை சிறியதாக உள்ளன. எப்போது ஒரு ஒர்க் ஷீட்டைத் திறந்தாலும், இந்த அகலம் நான் விரும்பும் வகையில் அமைய வேண்டும். எப்படி இதனை செட் செய்வது?
–சி. நா. கதிரேசன், காரைக்குடி
பதில்: புதிய ஒர்க் ஷீட் ஒன்றைத் திறக்கையில் செல் அகலம் ஒரே மாதிரியான அளவிலேயே இருக்கும். இதனை உங்கள் விருப்பப்படி மாற்ற Format மெனு சென்று இணிடூதட்ண என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு துணை மெனுவினைக் காட்டும். இதில் Standard  என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Standard Width என்ற டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் எந்த அகலத்தில் செல்கள் அமைய வேண்டுமோ அதனை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இவ்வாறு செய்தவுடன் உங்கள் ஒர்க் ஷீட்டின் செல்கள் அனைத்தும் நீங்கள் குறிப்பிட்ட அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்படும். ஆனால் இதற்கு முன் நீங்கள் ஏதேனும் ஒரு செல்லின் அகலத்தினை நீங்களாக மாற்றி வைத்திருந்தால், அது அப்படியே அதே அகலத்தில் இருக்கும்


source:dinamalar


--
www.thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP