என்ன நடந்தது….? தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு
>> Monday, February 21, 2011
ஈழத் தமிழர் வாழ்விலும் வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் தந்தையும் தாயும் நோய்வாய்பட்டு இறந்தமையானது முக்கியத்துவம் பெறுகிறது. மக்களோடு மக்களாக இருவரும் வெட்டுவாகல் ஊடாகச் செட்டிகுளம் முட்கம்பி முகாம் கொண்டு செல்லப்பட்ட காட்சி கல்நெஞ்சரையும் உருகவைக்கும் சோக நிகழ்ச்சியாகும். பக்க வாதத்தால் பீடிக்கப்பட்ட பிரபாகரன் அவர்களின் தாயார் சக்கர நாற்காலியில் வைத்து அந்த ஐனசமுத்திரத்தின் ஊடாகத் தள்ளிச் செல்லப்பட்டார். இரத்த அழுத்தம் உட்பட வயிற்றோட்டம், தலைச்சுற்று போன்ற ஒரு தொகுதி நோய்களால் துன்புற்ற பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளை தூக்கிச் செல்ல முன்வந்த அன்பர் உதவியை ஏற்க மறுத்தார். அவர் பலமுறை தரையில் வீழ்ந்தார் மீண்டும் எழுந்து நடை பயணத்தை தொடர்ந்தார்.தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் பெற்றோருக்கு என்ன நடந்தது….? - தமிழ்க்கதிர்
--
http://thamilislam.tk