சமீபத்திய பதிவுகள்

இலவச ஆன்லைன் ஸ்பேஸ்

>> Sunday, December 20, 2009


 
 

டேட்டாவினை நம் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கிறோம். எவ்வளவு பெரிய ஹார்ட் டிஸ்க்காக இருந்தாலும் ஒரு நாளில் அது பைல்களை சேவ் செய்திட பற்றாக் குறையாக உள்ளது. நீங்கள் உடனே இன்னுமொரு ஹார்ட் டிரைவை வாங்கலாம்; அல்லது புளு ரே டிஸ்க் அல்லது டிவிடிக்களில் பைல்களை சேவ் செய்திடலாம். இந்த வகையில் இப்போது வந்திருக்கும் இன்னொரு வழி ஆன்லைன் சேவிங் ஆகும். நம் டேட்டா பைல்களை பேக் அப் செய்து கொள்வதற்கு இப்போதெல்லாம் பல தளங்கள் வசதியைச் செய்து தருகின்றன. ஆன்லைனில் அண்மையில் தளம் ஒன்றைக் காண நேர்ந்தது. 50 ஜிபி ஸ்பேஸ் இலவசமாகத் தருவதாக அறிவித்திருந்தது. அதன் விபரங்களைப் பார்க்கையில் அவசரத்திற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தோன்றியது. இதோ அந்த தளம் குறித்த தகவல்கள்.
இந்த தளத்தின் முகவரி www.ADrive.com



இதில் நுழைந்தவுடன் இந்த தளம் தரும் இலவச மற்றும் கட்டண சேவை விரிவாகக் காட்டப்படுகிறது. இந்த சேவையைப் பயன்படுத்திக் கொள்ள நாம் முதலில் இதில் உறுப்பினராகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். நம் மின்னஞ்சல் முகவரி கொடுத்தால், அதனையே யூசர் பெயராகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனையும் பயன்படுத்த இருக்கும் பாஸ்வேர்டையும் கொடுத்தால், நாம் தரும் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மெயில் அனுப்பப்படுகிறது. பின் அதனைக் கிளிக் செய்து உறுதி செய்த பின், மீண்டும் ஏ–டிரைவ் தளம் சென்று, அதன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தளத்தில் சென்று பைல்களை அப்லோட் செய்வதும் மிக எளிதாக மேற்கொள்ளலாம். அதே போல சேவ் செய்த பைலையும், மீள எடுத்துப் பயன்படுத்தி வைக்கலாம். பேசிக், சிக்னேச்சர் மற்றும் பிரிமியம் என மூன்று வகை பைல் சேவ் வசதிகளை இந்த தளம் தருகிறது. 
இங்கு சேவ் செய்திடும் பைல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆன்லைனில் பைல்களை வைத்தபடியே அவற்றை எடிட் செய்திடலாம். 
சிக்னேச்சர் என்ற கட்டணம் செலுத்திப் பெறும் வசதியிலும் 50 ஜிபி ஸ்பேஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாகப் பல தொழில் நுட்ப வசதிகள் தரப்படுகின்றன. எப்.டி.பி. பைல் ட்ரான்ஸ்பர், எஸ்.எஸ்.எல். என்கிரிப்ஷன்,பைல் ரெகவரி, மற்றும் விண்டோஸ், மேக், லினக்ஸ் ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கான டெஸ்க் டாப் வசதிகள் தரப்பட்டுள்ளன.
பிரிமியம் ஸ்டோரேஜ் வசதி பெரும்பாலும் நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.100, 250, 500 ஜிபி மற்றும் 1 டெரா பைட் என்ற அளவில் ஸ்டோரேஜ் ஸ்பேஸ் கிடைக்கிறது. ஒவ்வொன்றுக்கும் அளவிற்கேற்றபடி கட்டணம் செலுத்த வேண்டும். 
இந்த தளம் தரும் வசதிகளில் ஆன்லைன் எடிட்டிங் வசதியைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இலவச ஸ்டோரேஜ் வசதி பெறுபவர்கள் கூட, ஆன்லைனிலேயே தங்கள் பைல்களை எடிட் செய்து கொள்ளலாம். டவுண்லோட் செய்து பின் திருத்த வேண்டியதில்லை.
பாதுகாப்பு, ரகசியம் என்ற அடிப்படையிலான பைல்களை இந்த ஆன்லைன் தள ஸ்டோரேஜ் வசதியில் வைத்திட விரும்பினால் கட்டணம் செலுத்தி அந்த வசதியைப் பெறுங்கள். ஏனென்றால் இலவச ஸ்டோரேஜ் வசதியில் என்கிரிப்ஷன் வசதி தரப்படவில்லை.
அடுத்ததாக இந்த தளத்தைப் பயன்படுத்துவதற்கான யூசர் இன்டர்பேஸ் வசதி மிக எளிமையாக இருப்பதனையும் குறிப்பிட வேண்டும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க் இடம் போதவில்லை என அங்கலாய்ப் பவர்களுக்கு இது ஒரு நல்ல போக்கிடமாகும்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மலேசியாவில் இந்து கோவில் பூசாரியை நிர்வாணப்படுத்தி தாக்குதல்

 
கோலாலம்பூர், டிச. 20-
 
மலேசியாவில் உள்ள கீலனா ஜெயா என்ற இடத்தில் உள்ள ஒரு இந்து கோவிலில் பூசாரியாக பணி புரிபவர் கனகராஜன் (27). கடந்த 2 வருடங்களாக இங்கு பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். தனக்கு கூடுதலாக சம்பளம் வழங்கும்படி கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்து வந்தார். இது கோவில் அறங்காவலர் குழு தலைவரின் மகனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
 
இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இவர் கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். கோவில் முழுவதும் பக்தர்கள் அதிக அளவில் திரண்டிருந்தனர்.
 
அப்போது அங்கு வந்த அறங்காவலர் குழு தலைவரின் மகன் பூசாரி கனகராஜனை கடுமையாக தாக்கினார். எனவே அவரிடம் இருந்து தப்பிக்க கனகராஜன் ஓட்டம் பிடித்தார்.
 
ஆனால் அவர் விட வில்லை. பூசாரி கனகராஜனின் வேட்டியை அவிழ்த்து நிர்வாணப்படுத்தினார். அதன் பிறகும் அவரை தொடர்ந்து தாக்கினார். இதில் அவரது தலை உடைந்து ரத்தம் கொட்டியது.
 
இதைப்பார்த்த கோவில் அறங்காவலர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
இச்சம்பவம் குறித்து கனகராஜன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத கனடா மக்கள் தீர்ப்பு

 

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19௧2௨009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 'ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக 'இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.

இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 'ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் 'ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்திய நுளுரூளு என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத் தக்கது.

தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
கன்டாவில் தீர்ப்பு

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, 19௧2௨009 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாக 'ஆம்' என்று 48,481 வாக்குகளும், எதிராக 'இல்லை' என்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.

இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம் 'ஆம்' என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில் 'ஆம்' வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்திய நுளுரூளு என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத் தக்கது.

நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத் தக்கது.

தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கட்டாய மதமாற்ற தடை சட்டம்: கேரள அரசுக்கு ஐகோர்ட் அறிவுரை

 

Court news detail
கொச்சி : ""கேரள போலீசாரும், உள்துறையும் தந்துள்ள தகவல்களுக்கு மாறாக, மாநிலத்தில் "லவ் ஜிகாத்' என்ற பெயரில் கட்டாய மதமாற்றம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. கட்டாய மதமாற்றத்தைத் தடை செய்யும் வகையில், அரசு புதிய சட்டம் இயற்றுவது குறித்துப் பரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கேரள ஐகோர்ட் கூறியுள்ளது.



கேரளாவில், பிற மதங்களைச் சேர்ந்த இளம்பெண்களை, பயங்கரவாத இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் "லவ் ஜிகாத்' என்ற காதல் வலையில் வீழ்த்தி அவர்களைப் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுத்தி வருகின்றனர். பத்தனம்திட்டாவில் ஒரு கல்லூரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஷெகன்ஷா என்ற முஸ்லிம் வாலிபர் காதல் என்ற பெயரில் மதமாறக் கட்டாயப்படுத்தினார், என்ற வழக்கு கேரள ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதை விசாரித்த நீதிபதி சங்கரன், "லவ் ஜிகாத்' என்ற பெயரில் பிற மதத்துப் பெண்கள் மதம் மாற்றப்படுவது குறித்து போலீசார் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டார்.



மாநில டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ், இதுபற்றி சமர்ப்பித்த அறிக்கையில்,"லவ் ஜிகாத் என்ற பெயரில் வெளிப்படையான செயல் கள் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது' என்று குறிப்பிட்டிருந்தார். மாநில உள்ளாட்சித் துறை அமைச்சகமும் "லவ் ஜிகாத்' நடக்கவில்லை என்று அறிக்கை விட்டது. அதே அறிக்கையில் எஸ்.பி.,க்கள் அளித்திருந்த மற்றொரு குறிப்பில், "18 வழக்குகளில் 14, "லவ் ஜிகாத்'தைச் சேர்ந்தவை; 1996லிருந்து "லவ் ஜிகாத்' நடக்கிறது; கடந்த நான்கு ஆண்டுகளில் நாலாயிரம் மதமாற்றங்கள் நடந்துள்ளன; அதன் மூலம் இரண்டாயிரத்து 800 பெண் கள் மதம் மாற்றப்பட்டுள்ளனர்; இதில், ஆயிரத்து 600 மதமாற்றங்கள் கேரளாவின் வடபகுதியில் குறிப்பாக முஸ்லிம் கள் பெரும் பான்மையாக வாழ்கின்ற மலப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளன; இந்த மதமாற்றத்தில் "இஸ்லாமிஸ்ட் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா' என்ற அமைப்பின் மாணவர் அமைப் பான "கேம்பஸ் பிரன்ட்' திட்டமிட்டுத் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது' என்று குறிப்பிடப் பட்டிருந் தது.



இதைச் சுட்டிக்காட்டிய நீதிபதி சங்கரன் கூறியதாவது: போலீஸ் அறிக்கையில் குறிப்பிட்டதற்கு மாறாக போலீசும், உள்துறையும் "லவ் ஜிகாத்' நடக்கவேயில்லை என்று கூறுவது முன்னுக்குப் பின் முரணானது. அரசியல் சாசனப்படி, அனைத்து மதங்களுக்கும் சம உரிமை உண்டு. எனினும், மதம் மாறக் கட்டாயப்படுத்துவதை அரசியல் சாசனம் அனுமதிக்கவில்லை.  கலப்புத் திருமணத்தை ஊக்குவிக்கலாம் என்றாலும், அதையே பயன்படுத்தி மதம் மாறக் கட்டாயப்படுத்தக் கூடாது. பல மாநிலங்கள் கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க சட்டம் இயற்றியுள்ளன. கேரள அரசும் அதுபோல சட்டம் இயற்றுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி சங்கரன் கூறியுள்ளார். "லவ் ஜிகாத்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று கோரிய மனுவையும் தள்ளுபடி செய்துவிட்டார்.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP